மசூதிக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு: திருநெல்வேலி : நெல்லையில் பள்ளிவாசல் நிலத்தை ஆக்கிரமித்துள்ளோரை கண்டித்து முற்றுகையில் ஈடுபட்ட 520 பேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலியை அடுத்துள்ள பேட்டையில் நவாப்வாலாஜா பள்ளிவாசல் உள்ளது. பள்ளிவாசலுக்கு சொந்தமான நிலத்தை முன்னர் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தரை வாடகைக்கு குத்தகைக்கு கொடுத்திருந்தனர்.
வியாபாமாக்கும் முஸ்லீம்கள்: ஆனால், சமீபகாலமாக அதை சிலர் ஆக்கிரமித்து, கல்யாண மண்டபம் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டி லாபம் சம்பாதிக்கின்றனர் எனக் கூறி, எதிர்ப்பு தெரிவித்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பினர் நேற்று பள்ளிவாசல் முன் முற்றுகை போராட்டத்தை நடத்தினர். போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
காஃபிர்-மோமின் கூட்டணியா? ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர், அவருக்கு துணைபோகும் அரசியல்வாதிகளின் உருவபொம்மைகளை அடித்து எதிர்ப்பை தெரிவித்தனர். போராட்டத்திற்கு தலைமை வகித்த முகமது ரபீக் உள்ளிட்ட 520 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர், அவருக்கு துணைபோகும் அரசியல்வாதிகள் என்று பெயர்கள் சொல்லப்படாமல் இருப்பதால், ஒருவேளை காஃபிர்-மோமின் கூட்டணி இத்தகைய ஆக்கிரமிப்பு அல்லது வியாபாரமயமாக்கல் உக்திகளில் ஈடுபட்டிருப்பது போலத் தோன்றுகிறது.
முஸ்லீம்களுக்கும் நாத்திக திராவிட அரசியல்வாதிகளுக்கும் நெருக்கமான உறவு இருப்பதை அவர்களே டிக்கடி பிரபலமாகக் காண்பித்துக் கொள்வர். ஆகையால், அவர்களுக்கிடையே எப்படி, இப்படி வேறுபாடு வந்துள்ளது என்பதனை அவர்களே விளக்கினால்தான் தெரியவரும்!
அண்மைய பின்னூட்டங்கள்