Posted tagged ‘மனம்’

கோவையில் திடீரென்று  ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? (1)

நவம்பர் 7, 2022

கோவையில் திடீரென்று  ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? (1)

கோவை கார் குண்டு வெடிப்பிற்குப் பிறகு தொடரும் விசாரணை, சோதனை முதலியன: கோவையில் ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட 100 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிபுணர்கள் மூலம் உளவியல் ஆலோசனை வழங்க உள்ளதாக மாநகர போலீசார் தெரிவித்தனர், என்று செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. கோவை உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த 23ம் தேதி கார் வெடிப்பில் ஜமேஷா முபின் (23) பலியானார். கோவை மாநகர தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி சதித்திட்டம் தீட்டியதாக ஜமேஷா முபினின் உறவினர்கள் முகமது அசாருதீன், அப்சர்கான் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தற்போது என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சிறையில் உள்ள 6 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். கோவை மாநகர தனிப்படை போலீசார் கோவையில் சந்தேக நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். உக்கடம், ஜி.எம்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல பேரின் வீடுகளில் சோதனை நடத்தி விசாரணை நடத்தினர்[1]. மேலும் போலீசார் நடத்திய விசாரணையின் படி, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் பால் ஈடுபாடு கொண்ட நபர்கள் குறித்த பட்டியலை போலீசார் திரட்டினர்[2].

யார் இந்த 53 அல்லது 100 பேர் இளைஞர்கள்?: 53, 100 பேர் என்றெல்லாம் குறிப்பிடப் படும் இந்த இளைஞர்கள் யார் என்று குறிப்பிடப் படவில்லை. அவர்களது பெயர்களும் தெரிவிக்கப் படவில்லை. நல்லது, ஏனெனில், விசாரணை நடந்து வரும் பொழுது, எல்லா விவ்ரங்களையும் வெளிப்படையாக சொல்லி விடமுடியாது. ஆனால், உலாமாக்களை வைத்து கவுன்சிலிங், ஆலோசனை என்றெல்லாம் குறிப்பிடும் பொழுது, அவர்கள் முஸ்லிம்கள் என்றாகிறது. ஏனெனில், உலாமாக்கள் அவ்வாறு மற்றவர்களுக்கு கவுன்சிலிங், ஆலோசனை சொல்ல மாட்டார்கள். ஆகவே, செக்யூலரிசத் தனமாக, இவ்விவரங்கள் ஊடகங்களில் எளியிடப் படுகின்றன என்பது தெரிகிறது. ஒன்று பாதுகாப்பு, ரகசியம் காக்கப் படவேண்டும் என்றால், அதற்கான முறைகளை அரசாங்கம் தொடந்து செய்து கொண்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட பகுதியில், முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர், அங்கு, சந்தேகிக்கப் படும் வகையில் ஏதோ நடக்கிறது எனும் போது, அதை கவனிக்கப் பட வேண்டும். தொடர்ந்து வெடிகுண்டு சம்பந்தப் பட்ட ரசாயனங்கள் விற்கப் படுகின்றன, வாங்கப் படுகின்றன என்றாலும், கவனிக்கப் படவேண்டும். குவாரி போன்றவற்றிக்கு என்று வாங்கி, மற்ற காரியங்களுக்கு உபயோகிக்கப் படுகின்றன எனும்பொழுதும், அவை கவனிக்கப் படவேண்டும். இவையெல்லாம் தாண்டித் தான், இத்தகைய வெடிப்புகள் நிகழ்கின்றன.

உளவுத்துறை போலீசார் நடத்திய விசாரணை: என்.ஐ.ஏ இவ்வழக்கை எற்றுக் கொண்டதாக ஏற்கெனவே செய்தி வந்து விட்டது. ஆனால், உளவுத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் கோவை மாநகரில் 70 பேர் முதல் 100 பேர் வரை ஐ.எஸ். இயக்க செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு உள்ளது தெரியவந்தது[3]. தற்போது போலீசார் அவர்களை அடையாளம் கண்டுள்ளனர்[4]. அவர்களது பட்டியல், விவரங்களும் தயாரிக்கப் பட்டு வருகின்றன[5]. இதையடுத்து அவர்களுக்கு உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் உளவியல் ஆலோசனை வழங்க திட்டமிட்டு உள்ளனர்[6], போன்ற செய்திகளும் தொட்ர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சாதாரணமாக, செய்திகள் வாசிக்கும் வாசகர்களுக்கு, மத்திய அல்லது மாநில உளவுத்துறை போலீசார், அல்லது என்.ஐ.ஏ அல்லது யார் விசாரணை நடத்துகிறார்கள் என்ற குழப்பம் ஏற்படலாம். ஒருவேளை விசாரணை நடக்கும் பொழுது, அவர்களால், முழுவிவரம் கொடுக்கப் படாதல் நிலை இருக்கலாம். அப்பொழுது, ஊடகங்கள் முரண்பட்ட செய்திகளை வெளியிடக் கூடாது.

ஏற்கனவே கைதான ஆம்பூர் மாணவன் வீட்டில் சோதனை[7]: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நீலிக்கொல்லையை சேர்ந்தவர் மீர் அனாஸ் அலி (22). இவர் தனியார் பொறியியல் கல்லூரில் 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஜூலை 30ம் தேதி இவரது வீட்டில் மத்திய உளவு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது மீர் அனாஸ் அலி தனது லேப்டாப்பை உடைத்ததாக தெரிகிறது[8]. உளவுதுறையினர் அந்த லேப்டாப் மற்றும் அவரது இரு செல்போன்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக மீர் அனாஸ் அலி செயல்பட்டு வந்ததும், வெளிநாட்டு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தததும் தெரியவந்தது. இதைதொடர்ந்து அவரை ஆம்பூர் டவுன் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று ஆம்பூரில் உள்ள அனாஸ் அலி வீட்டிற்கு திருப்பத்தூர் மாவட்ட ஏடிஎஸ்பி புஷ்பராஜ் தலைமையிலான போலீசார் வந்து சோதனை செய்தனர். வீட்டில் இருந்த பென் டிரைவ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆய்வுக்காக போலீசார் பறிமுதல் செய்தனர்.

அனாஸ் அலி வீட்டில் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டதா, இல்லையா?: ஆனால், தமிழ்.இந்து, இது போல செய்தி வெளியிட்டுள்ளது[9], “கோவையில் கார் சிலிண்டர் வெடித்த விபத்தை தொடர்ந்து இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் பரவியது. அவரது வீட்டுக்கு அருகில் ஏராளமானவர்கள் திரண்டதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மிர் அனாஸ் அலி 90 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளார். அவருக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது.அவரது வீட்டில் வழக்கு தொடர்பாக வருவாய்த் துறையினர் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. இது குறித்த விவரங்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். எங்கள் சோதனையில் எந்தவித தடை செய்யப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை[10] என்றனர்.” அதாவது, தினகரன், “வீட்டில் இருந்த பென் டிரைவ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆய்வுக்காக போலீசார் பறிமுதல் செய்தனர்” என்றும், தமிழ்.இந்து, “எங்கள் சோதனையில் எந்தவித தடை செய்யப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை,” என்று போலீஸார் சொன்னதாகவும் செய்திகள் வந்துள்ளன. கோவை கும்பலுக்கும், இவனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற நிலைதான் தெரிகிறது.

தென்னகத்தில் உள்ள தீவிரவாத இணைப்புகள், சம்பந்தங்கள், உரையாடல்கள் முதலியவை கண்காணிக்கப்பட வேண்டும்: தீவிரவாதம் தமிழகம், கேரளா, கர்நாடகா என்றெல்லாம் இணைந்துள்ளது என்பது கடந்த குண்டுவெடிப்புகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். விசாரணையின் போது, இந்த மூன்று மாநில போலீசார், என்ஐஏ போன்றோர் வந்து செல்வது அறிந்த விசயமே. இதே போல தெலிங்கானா-ஆந்திரா தொடர்புகலும் உள்ளன. இந்த மூன்று மாநில எல்லைகள் அருகிலுள்ள இடங்களில் காடுகள், மறைவான இடங்கள், ரிசார்ட்டுகள் என்றெல்லாம் இருப்பது தெரிந்த விசயமே. கனிமங்கள், மரங்கள் தொடர்ந்து கடத்தப் பட்டு, கேரளாவுக்குச் சென்று கொண்டிருக்கின்றன. ஐஎஸ் தீவிரவாத சார்பு கொண்டவர்கள், விருப்பம் மிக்கவர்கள், மனதளவில், சித்தாந்த ரீதியில் ஆதரிப்பவர்கள், …………………………..போன்றவர்கள் சமூக ஊடகங்களில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்குள் இணைப்புகள், சம்பந்தங்கள், உரையாடல்கள் முதலியவற்றை கண்காணிக்க முடியுமா-முடியாதா என்பதை சாதாரண மக்கள் ஆராய்ச்சி செய்ய முடியாது.

வேதபிரகாஷ்

07-11-2022


[1] தமிழ்.இந்து, கோவையில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள 53 இளைஞர்களை கண்டறிந்து போலீஸ் கண்காணிப்பு, செய்திப்பிரிவு, Published : 06 Nov 2022 06:48 AM, Last Updated : 06 Nov 2022 06:48 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/893049-police-surveillance-of-53-youths-in-coimbatore-for-pro-isis-stance-3.html

[3] தீக்கதிர், கோவையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவான 50 இளைஞர்கள் கண்டுபிடிப்பு, வாவட்ட செய்திகள், நவம்பர் 5, 2022.

[4]https://theekkathir.in/News/districts/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/turmeric-price-hike-makes-farmers-happy

[5] தமிழ்.முரசு, 60 இளையர்களுக்கு நல்வழிப் பயிற்சி, 7 Nov 2022 05:30

[6] https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20221107-99204.html

[7] தினகரன், கோவையில் ஐஎஸ் தீவிரவாத ஆதரவு வாலிபர்கள் சிக்கினர்: உளவியல் ஆலோசனை வழங்க திட்டம், 2022-11-06@ 00:37:1.

[8] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=811864

[9] தமிழ்.இந்து, ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம்பூர் இளைஞர் வீட்டில் சோதனை, செய்திப்பிரிவு, Published : 06 Nov 2022 07:00 AM; Last Updated : 06 Nov 2022 07:00 AM

[10] https://www.hindutamil.in/news/tamilnadu/893045-ambur-youth-house-raided-with-links-to-isis-2.html

இந்தியா போதை மருந்து ஜிஹாதிற்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது – பாகிஸ்தானிலிருந்து வந்த ரூ.10 கோடி கோக்கைன் காஷ்மீரில் பிடிபட்டது!

ஓகஸ்ட் 4, 2013

இந்தியா போதை மருந்து ஜிஹாதிற்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது – பாகிஸ்தானிலிருந்து வந்த ரூ.10 கோடி கோக்கைன் காஷ்மீரில் பிடிபட்டது!

Cocaine truck-loc- seized 2013

பாகிஸ்தானிலிருந்து வந்த ரூ.10 கோடி கோக்கைன் காஷ்மீரில் பிடிபட்டது: ஹிஜ்புல் முஜாஹித்தீன் என்ற தீவிரவாத அமைப்பிற்கு சொந்தமான ரூ.10 கோடிகள் மதிப்பிலான கோக்கைன் பாகிஸ்தான் வழியாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் JK02F-0127 என்று பதிவு செய்யப் பட்ட சரக்குலாரி வழியாக நுழைந்தபோது, பிடிபட்டது[1]. சரக்கு லாரிகளை சோதனை போட பாகிஸ்தான் சகோடி என்ற இடத்திலும், இந்தியா சலமாபாதில், அமன் சேது என்ற இடத்திலும் சோதனைச் சாவடிகளை வைத்துள்ளன. லாரி ஓட்டுனர் அப்துல் அஹத் கனி [Abdul Ahad Ganie] என்பவன் பிடிபட்டான். வழக்கம் போல அவன் ஒரு குருவி போன்ற ஏஜென்ட் தான். இருப்பினும் தீவிரவாத கும்பல்களுடன் தொடர்பு கொண்டவன் என்பதால், விசாரித்தபோது, தானும் அவர்களைச் சேர்ந்தவன், சரக்கு ஹிஜ்புல் முஜாஹித்தீனுக்குச் சொந்தமானது என்பதை ஒப்புக் கொண்டான்[2].

Pakistan Terrorist Warchests

ஜிஹாதிகளின் புதிய தீவிரவாத தாக்குதல் – போதை மருந்து: ஶ்ரீநகர் மண்டியிலிருந்து வாழைப்பழங்களை பைஸன் டிரேடர்ஸ் பாக் [Faizan Traders PaK] என்ற கடையில் இறக்கி வைத்து திரும்ப வந்ததாகச் சொல்லப் பட்டது[3]. ஆனால், வண்டியை சோதனை செய்தபோது, ஒன்பது பார்சல்களில் நன்றாக பேக் செய்யப்பட்ட வெண்மை நிறம் கொண்ட போதைப் பொருள் கண்டு பிடிக்கப் பட்டது. அப்பொருளை சோதனை செய்தபோது கோக்கைன் என்றும் தெரிய வந்தது[4]. பிறகு போலீஸார் ஒரு வழக்கைப் பதிவு [FIR No. 47/2013 ] செய்தனர். டிரைவர் மற்றும் கன்டக்டெர் கைது செய்யப்பட்டனர். இப்பொருள் காஷ்மீரில் ஒருவரிடம் டெலிவரி செய்யப் படவேண்டும் என்றும், அங்கிருந்து அவை பிரிக்கப் பட்டு விற்பனை செய்யப் பட்டு, அதிலிருந்து வரும் பணம் தீவிரவாத-பயங்கரவாத-பிரிவினைவாத செயல்களுக்கு உபயோகப் படுத்தப் படும் என்று தெரிய வந்துள்ளது[5]. ஆப்கானிஸ்தானில் இத்தகைய போதை மருந்துப் பொருட்கள் தயாரிக்கப் பட்டு, தீவிரவாதிகளுக்கு விநியோகிக்கப் படுகிறது. அதனை விற்று அவர்கள் பணம் பெருகிறார்கள்.

opium-poppies-afghanistan

இந்திய விரோத ஜிஹாதிகள் ஏன்?: தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தானின் ஊடுருவல்காரர்களின் தீவிரவாதம், பயங்கரவாதம் முதலிய குரூரங்களைத் தடுப்பதற்காகத்தான் 1978ல் எல்லைகள் மூடப்பட்டன. எல்லைகள் வழியாக நடந்து வந்த சரக்குப் போக்கு வரத்தும் நிறுத்தப் பட்டது. வாஜ்பேயி ஆட்சியில் இருதரப்பு உறவுகள் ஓரளவிற்கு சரியாக ஆரம்பித்தன. பிறகு, முஸ்லிம்கள் விருப்பத்திற்கு இணங்க, 57 வருடங்களுக்குப் பிறகு சரக்குலாரிகள் மட்டும் குறிப்பிட்ட 10-15 பொருட்கள் எடுத்துக் கொண்டு வரலாம் என்று ஏப்ரல் 2005ல் அனுமதிக்கப்பட்டது. ஆனால், தளர்த்தப் நிலையை தீவிரவாதத்திற்குத்தான் முஸ்லிம்கள் பயன்படுத்துகிறார்கள். இப்படடீந்திய முஸ்லிம்கள் நம்பிக்கை துரோகிகளாகத் தான் இருந்து வந்துள்ளார்கள் ஏன்று தெரியவில்லை. அவ்வப்போது, தடை செய்யப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள், பாகிஸ்தானிய சிம் கார்ட்டுகள் என்று எடுத்து வந்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றையும், செக்போஸ்டில் இந்திய வீரர்கள் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இம்முறை இப்படி ரூ.10 கோடிகள் மதிப்பிலான கோக்கைன் போதைப் பொருள் பிடிப்பட்டுள்ளது[6].

Cocaine Jihad India has to face

ஜிஹாதி தீவிரவாதமும், போதை மருந்து வியாபாரமும் பின்னிப் பிணைந்துள்ளது: தலிபான் – பாகிஸ்தான் – காஷ்மீர் போதை மருந்து வியாபார இணைப்பு, ஜிஹாதி தொடர்பு, தீவிரவாத சம்பந்தம் முதலியவை வெளிப்படையாகிறது[7]. உலகம் முழுவதும் இப்போதை பொருட்கள் ஊடுருவிச் செல்கின்றன. தலிபான் ஆதிக்கத்தில் ஆப்கானிஸ்தானில் போதை மருந்து பொருட்களின் உற்பத்தி அதிகமாகி உள்ளது.Afgan opium crossing bordersஆப்கானிஸ்தானில் விளைவிக்கப்படும் போதை பொருட்கள் பாகிஸ்தான் வழியாக மற்ற நாடுகளுக்குக் கடத்தப் படுகிறது. afghanistan-opium-production sales, consumption across globeமயன்மார் / பர்மாவிற்கும் செல்கிறது. பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்கின்றது. மத்திய ஆசிய நாடுகளும் இதில் சம்பந்தப் பட்டுள்ளன. Taliban rule increased opium tradeகசாப் போன்றவர்கள் ஒரு முறையில் பயங்கரவாதத்தால் தாக்கினர் என்றால், முஜாஜித்தீன் பெயரில் பட்டகல் கும்பல் வெடிகுண்டுகள் வைத்து குரூரமாகக் கொல்கின்றனர் என்றால், இந்த போதை மருந்து ஜிஹாதி கும்பல் இவ்வாறு வேலை செய்கிறது[8]. ஆகவே, இந்திய பெற்றோர்கள், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆனானப் பட்ட டேவிட் கோல்மேன் ஹெட்லி அல்லது சையது தாவூத் ஜிலானிவே போதை மருந்து கடத்தலில் தான் முதலில் பிடிபட்டான்[9]. பிறகு அவனது பின்னணி தெரிய வந்தது. ஆகவே ஜிஹாதி தீவிரவாதமும், போதை மருந்து வியாபாரமும் பின்னிப் பிணைந்துள்ளது என்பது உறுதியாகிறது.

How drug trade operates through Golden crescent

முஸ்லிம்களின் இரட்டை வேடங்கள்: பொதுவாக முஸ்லிம்கள் தாங்கள் மது, போதை மருந்து முதலியவற்றை கையால் கூடத் தொடமாட்டோம். அல்லா அவற்றை ஒதுக்கியுள்ளார், என்றெல்லாம் பெருமையாக பேசுவார்கள், தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். ஆனால், இப்பொழுது, முஸ்லிம்கள் எப்படி சட்டங்களை மீறி, தார்மீக விதிகளை மீறி, மனித நேயங்களைத் தாண்டி, சமூகத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், திட்டத்தில், இப்படி போதை மருந்தைக் கடத்திக் கொண்டு வந்துள்ளார்கள் என்று தெரியவில்லை. வழக்கம் போல, தமிழ் ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன. முஸ்லிம் இணைத்தளங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், ஒன்றுமே தெரியாதது போல நடிக்கின்றன. இஸ்லாத்தின் எதிரிகள் என்று அவர்களை சாடவில்லை. நரகத்திற்கு போவார்கள் என்று சாபமிடவில்லை.

Pakistan women drug addicts

பாகிஸ்தான் பெண்கள் போல இந்திய பெண்களும் சீரழிய வேண்டுமா?: பாகிஸ்தான் பெண்களே போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகி உழல்வதாக பாகிஸ்தான் பத்திரிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன[10]. பள்ளி-கல்லூரி மாணவிகள் அப்பழக்கத்தில் உள்ளதாக கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்[11]. பாகிஸ்தான் அரசின் போதை மருந்து தடுப்புப் பிரிவு சோதனை மேற்கொண்டதில் 70% பள்ளி-கல்லூரி மாணவிகள் போதை மருந்தை யாதாவது ஒரு முறையில் – புகைத்தல், உக்கா, பீடா, இஞ்செக்சன் – உட்கொள்வதாகத் தெரிகிறது[12]. அதில் 47% கல்லூரி மற்றும் 21% பள்ளி மாணவிகள் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவிலும் இதே நிலை வரவேண்டுமா? பிறகு இஸ்லாம் பெயரில் ஏன் தாலிபான், முஜாஹித்தீன்,. லஸ்கர் போன்ற தீவிரவாத இயக்கங்கள் இவ்வாறு செய்து வருகின்றன? ஏன் காஷ்மீர் முஸ்லிம்கள் அதை ஆதரிக்க வேண்டும்? மற்ற இந்திய முஸ்லிம்களும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும்? பாகிஸ்தானிலிருந்து வரும் போதை பொருள் தமிழகத்திற்கு வராதா என்ன?

Pakistan first day cover reveals devilish drugish plan

வேதபிரகாஷ்

© 04-08-2013


[1] While claiming that the Rs. 10 crore worth cocaine consignment, seized from a truck across the LoC in Baramulla district, had been smuggled in for Hizbul Mujahideen, the Jammu and Kashmir Police have arrested an alleged operative of the militant outfit from the capital city on Friday – 02-08-2013.

http://www.thehindu.com/news/national/jk-police-claim-seized-drug-was-meant-for-hizbul-militant/article4984854.ece

[4] The vehicle had gone to Pakistan Administered Kashmir on Thursday with a load of Bananas from fruit Mandi Srinagar which were delivered to one Faizan Traders PaK, he said. “On through search of the vehicle on its return near Sheeri, nine Packets (approx.10Kgs) of contraband consisting of white colored substance (Cocaine) were seized from the vehicle which were concealed in a tyre in the overhead toolbox,” the spokesman said, adding, “The driver and conductor of the vehicle were questioned on spot who admitted that they had brought the illegal drugs from (PaK) which was to be delivered to some conduit in Srinagar.”

http://www.kashmirreader.com/08032013-ND-cocaine-worth-rs-10-crore-seized-from-cross-loc-truck-18976.aspx

[6] Even as some prohibited items, including rounds of ammunition and Pakistani SIM cards have been recovered from some vehicles and passengers in Jammu, it is for the first time in the last five years of the cross-LoC trade that a sizable quantity of cocaine has been allegedly smuggled in and seized.

http://www.thehindu.com/news/national/jk-police-claim-seized-drug-was-meant-for-hizbul-militant/article4984854.ece

[8] In the late 1980s,Pakistan and Afghanistan exported nearly half the world’s heroin, and, although their relative share declined somewhat thereafter, they remain among the world’s major producers. Pakistanis one of the primary transit countries for drugs from Afghanistan and hence knowledge of new routes and evolving methods of drug trafficking is essential for successful interdiction. Pakistan’s population is currently 16 million.

http://www.citijournal.com/pakistan-drug-addidct/

[12] A new survey conducted by the Pakistan Ministry of Narcotics Control shows that nearly 70% of female drug addicts in the country are either high-school or college educated. The study, which interviewed 500 women in Islamabad, Lahore and other cities throughout Pakistan, finds that 47% of the women are college graduates, while 21% have had at least primary or matriculation education.

http://www.thefix.com/content/pakistan-female-addicts-education9482

மதரஸாக்களில் என்ன நடக்கின்றன – அவை மன-நோய், மனச்சிதைவு, முதலியவற்றை தீர்க்கின்றனவா அல்லது அதை துர்பிரயோகத்திற்கு உபயோகப்படுத்துகின்றனவா?

திசெம்பர் 15, 2011

மதரஸாக்களில் என்ன நடக்கின்றன – அவை மன-நோய், மனச்சிதைவு, முதலியவற்றை தீர்க்கின்றனவா அல்லது அதை துர்பிரயோகத்திற்கு உபயோகப்படுத்துகின்றனவா?

மதரஸாவில் நடந்த ரெயிட்/அதிரடி சோதனை: பாகிஸ்தான் தலைநகரமான கராச்சியில், சோரம் கோத் என்ற இடத்தில் மசூதிக்குப்பக்கத்தில் இயங்கி வரும் ஒரு மதரஸாவிலிருந்து 50ற்கும் மேற்பட்ட 10-14 வயது சிறுவர்கள், 15-30 வயது இளைஞர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்[1]. ஜக்கரியா மதரஸா என்ற இஸ்லாமிய மத போதனை செமினரி / பள்ளிக்கூடம் / குருகுலம் இயங்கி வரும் இடத்தைச் சுற்றியுள்ளவர்களுக்கு அங்கிருந்து வினோதமான சப்தங்கள் வருவதினால் சில சந்தேகங்கள் ஏற்பட்டதால், அவர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்[2]. அதன்படி, 12-12-2011 (திங்கட்கிழமை இரவு) அன்று அந்த ஜக்காரியா மதரஸாவின் அடித்தளத்தை போலீஸார் அதிரடியாக சோதனையிட்ட போது, சிறு-சிறு புறாக்கூண்டுகள் போன்ற அறைகளில் சங்கிலிகளால் கட்டுண்ட, அடிபட்ட, மனநிலை சமமாக/சரியாக இல்லாத, போதை மருந்துக்குட்பட்ட, சித்திரவதை செய்யப்பட்ட என்ற பலர் காணப்பட்டனர்[3]. உடனடியாக அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்டவர்களின் மனோநிலை: இலவசமாக இஸ்லாம் மதக்கோட்பாடுகள் சொல்லித்தரப்படும் என்று அவர்கள் அங்கு சேர்க்கப்பட்டிருக்கிறார்களாம். ஆனால், அவர்களை சங்கிலியிலால் பிணைக்கப்பட்ட நிலையிலும், அடித்துத் துன்புறுத்தப்பட்ட நிலையிலும், செக்ஸ் தொல்லைக்குட்பட்டவர்களாகவும் இருந்தனர் என்று தெரிய வந்துள்ளது. அதாவது பிடோபைல் போன்ற தொந்தரவு / வழக்கம் பின்பற்றப்பட்டதா அல்லது, அந்த சிறுவர்கள்-இளைஞர்கள் அவ்வாறு துர்பிரயோகத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டனரா என்று ஆராய வேண்டியுள்ளது. அவர்கள் விடுவிக்கப்பட்டதும் பாடி-ஆட ஆரம்பித்து விட்டனர். அவர்கள் எல்லோருமே மன-அளவில் பாதிக்கபட்டவர்கள் என்று தெரிந்தது[4]. இதே மாதிரியான அடைத்து வைக்கப்பட்ட சிறுவர்கள்-இளைஞர்களின் நிலை முன்பு மூல்தான், சிந்த், கைபர் பக்துன்ங்வா முதலிய இடங்களிலிலும் கண்டறியப்பட்டன.

மதரஸாக்கள் என்ன செய்கின்றன?: அரசு புள்ளி விவரங்களின் படி, 15,000ற்கும் மேற்பட்ட மதரஸாக்கள் பாகிஸ்தானில் இயங்கி வருகின்றன. அவை சுமார் 2 மில்லியன்கள் – 20,00,000 அதாவது 20 கோடி மாணவர்களுக்கு இத்தகைய இஸ்லாம் மதகோட்பாட்டு கல்வி கொடுத்து வருகின்றன. மக்கள் மற்ற பள்ளிகளுக்கு தங்களது சிறுவர்களை அனுப்பினால் செலவாகும் என்பதினாலும், தீவிரவாத கொள்கைகளில் பிடிப்புள்ளதனாலும், கல்வி, உணவு இலவசம் என்பதினாலும் பெற்றோர்கள் அனுப்பிவைப்பதாக தஎரிகிறது. இத்தகைய மதரசாக்கள் அரசின் கட்டுப்பாடுகள், விதிகள் முதலியவற்றில் இல்லாமல் சுதந்திரமாக இயங்கி வருகின்றன என்று மனித உரிமை மற்றும் சமூக சேவகர்கள் கூறுகிறார்கள். நாஸிஸ் புரோஹி என்ற சமூகவியல் ஆர்வலர், அடிப்பது, தண்டிப்பது முதலியன சட்டப்படி குற்றம் என்றாலும், இத்தகைய பள்ளிகள், மதரஸாக்களில் சாதாரண விஷயங்களாக இருக்கின்றன என்கிறார்[5].

மூளைச்சலவை ஏன் செய்யப்படுகிறது?: மதரஸா ஜக்கரையாவின் இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் தப்பித்து ஓடிவிட்டனர்[6]. உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அமைசர் ரஹ்மான் மாலிக், “அவர்கள் மூளசலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சமூகத்திலுள்ள மற்ற மக்களின் மீதான எதிர்ப்புத்தன்மை முதலியவற்றை அறிந்து கொள்வது கடினம். அவர்களை மிருகங்களைப் போலக் கட்டிவைத்துள்ளார்கள்”, என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்[7]. மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு, போதை மருந்துக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது என்றால், அவர்கள் ஏன் “மூளைச்சலவை” செய்யப்படவேண்டும்? இன்றைய நிலையில் “சிக்ஸோபிடனியா” என்ற சாதாரண நிலைகளுக்கே மருத்துவர்கள், ஆஸ்பத்திரிக்களில், விஞ்ஞான ரீதியில் சிகிச்சை அளிக்கிறார்கள். பிறகு, மதரஸாக்களில் கட்டிப் போட்டு அடித்தால், அவர்கள் குணமாவார்களா? அல்லது இதன் பின்னணி என்ன?

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அறியப்பட்ட விஷயங்கள்: தீவிரவாத, பயங்கரவாத இயகங்களுக்கும், இந்த மதரஸாவிற்கும் தொடர்பு இருக்குமா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். அடைப்பட்டுள்ளவர்களை கேட்டபோது, அவர்கள் பலவிதமான விவரங்களைக் கூறியுள்ளது திகைப்படையச் செய்துள்ளன[8]:

  1. எங்களுக்கு ஜிஹாத் போதிக்கப் படுகிறது. புனித போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
  2. வடமேற்கிலிருந்து தாலிபான்கள் எங்களை தயார்படுத்து அழைத்துச் செல்கிறார்கள் என்று சிலர் கூறியுள்ளனர். எங்களை ‘முஜாஹித்தீன்’களாக மாற்றுகிறார்கள் என்று பாகிஸ்தானின் ஜியோ டிவிக்கு பேட்டி கொடுத்துள்ளனர்[9].
  3. எங்களுக்கு சாப்பாடே சரிவர கொடுப்பதில்லை, அடைத்து வைத்து அடிக்கிறார்கள். எங்கள் பொற்றோர்களைப் பார்க்கக் கூட அனுமதிப்பதில்லை.
  4. முப்பது நாட்களுக்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வெயிலையே பார்க்காமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
  5. மாறாக, பெற்றோர்கள் தாம் அவர்களை அங்கு சேர்த்துள்ளனர். அவர்கள் சில குற்றங்களில் அகப்பட்டுள்ளதால், தப்பிவிடாமல் இருக்க பிணைத்து வைத்துள்ளோம் என்று மதரஸாவில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.
  6. போதை மருந்துக்குட்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அங்கு சிகிச்சையளிக்க அழைத்துவரப்படுவதாகவும் கூறுகிறார்கள்.
  7. ஹெராயின் போன்ற போதை மருந்துகளுக்கு அடிமையான அவர்கள் தப்பித்து விடக்கூடாது என்றுதான் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டுள்ளார்கள்.
  8. ஆனால் மருத்துவ ரீதியில் சிகிச்சையளிக்கப்படுவதற்கான ஆதாரங்கள் எதுவுமே அங்குக் காணப்படவில்லை.
  9. தனித்தனியாக கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டவிதம், சங்கிலிகளால் பிணைத்து வைக்கப்பட நிலை, கை-கால்களில் அடி-காயம் முதலியவை இருப்பது, சரியான பேச்சில்லாமை அல்லது முன்னுக்கு முரணாக பேசுவது முதலியன சந்தேகங்களை எழுப்புவதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
  10. சமூகத்தில் கீழுள்ளவர்கள்[10] இவ்வாறு நடத்தப் படுகிறார்கள் என்று “டான்” பத்திக்கைக்கூறுகிறது. அப்படியென்றால், இவர்கள் யார் என்ற கேள்வியும் எழுகிறது[11].

மதரஸாக்கள்: மதரீதியில் இயங்குகின்றனவேயன்றி, பொது காரணங்களுக்கக இயங்குவதில்லை: பாகிஸ்தானின் “டான்” என்ற பத்திரிக்கை, ஏன், எதற்காக, எவ்வாறு இப்படி முஸ்லீம் சிறுவர்கள்-இளைஞர்கள் போதை மருந்து, மன-நோய், மனச்சிதைவு முதலிய தவறுகளுக்கு-குற்றங்களுக்கு அடிமையாகிறார்கள் என்று அலசியுள்ளது. ஆனால், மற்ற சமுகங்களைப் போல பொதுவான காரணங்களையே கூறியுள்ளது[12]. ஒரு இஸ்லாமிய சமூகத்தில், இஸ்லாம் அடிப்படவாதம் போற்றும் நாட்டில், எப்படி அதுவும் இஸ்லாம் போதிக்கும் மதரஸாக்களில் அத்தகைய சீரழிவுகள் ஏற்படமுடியும் என்ற முக்கிய விஷயத்தை தவிர்த்து மற்ற பொதுகாரணங்களின் மீது முடிவாக தீர்வைக் காணுவது வேடிக்கையாக உள்ளது[13].

வேதபிரகாஷ்

15-12-2011


[10] …………….“detoxification/rehabilitation” center for the underprivileged people, located in the outskirts of Karachi.

http://www.dawn.com/2011/12/14/spiritually-healed-or-derailed.html

[11] ‘Privileged addicts’ are however, given the best of facilities which include a diet and exercise regime to assist them in staying sober and straight. There are various not-for-profit organisations operating in Pakistan specialising in the causes to eradicate addictions from our society, however how many of those are actually working to constructively assist  the underprivileged and needy addicts remain ambiguous.

http://www.dawn.com/2011/12/14/spiritually-healed-or-derailed.html

The debate entailing whether these Medressahs are helping the underprivileged or taking advantage of their poverty and ignorance is a moot point. However, the will to change and challenge the current situation by questioning the governance of our religious clerics and many such seminaries should top the government’s agenda.

http://www.dawn.com/2011/12/14/spiritually-healed-or-derailed.html

பன்றிக்காக வைத்த டிடோனேடரை வெடிக்க வைத்த அப்பாவி சிறுவன் அப்துல் முஜீத்!

நவம்பர் 5, 2011

பன்றிக்காக வைத்த டிடோனேடரை வெடிக்க வைத்த அப்பாவி சிறுவன் அப்துல் முஜீத்!

பள்ளிக்குச் செல்லாத அப்துல் மஜீத் குப்பைத்தொட்டியிலிருந்து டிடோனேரை எடுத்தல்: திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பண்பொழி கிராமத்தில் மு.ந.அ.தெருவைச் சேர்ந்தவர் முகமது அன்சாரி மகன் அப்துல் முஜீத்.  முகமது அன்சாரி. அவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்[1].  அப்துல் முஜீத் (14) அவ்வூர் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று அவன் பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்துள்ளான். மாலையில் அவன் வீட்டில் இருந்த நேரத்தில் குண்டு வெடிக்கும் சத்தம் போல் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், அருகில் இருந்த பள்ளிவாசலில் இருந்தவர்கள் முஜீபின் வீட்டுக்கு ஓடிவந்து பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் பேட்டரி கட்டைகள், வயர் துண்டுகள், டெட்டனேட்டர் உள்ளிட்ட பொருட்கள் சிதறியும், அப்துல் முஜீப் ரத்த காயங்களுடனும் இருந்துள்ளான். உடனடியாக அவனை தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மற்றொரு செய்தி: இன்று மாலை, வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருக்கையில், அங்கு கிடந்த பொருளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். அதில் 2 வயர்கள் இணைக்கப்பட்டிருந்ததால், அதற்கு அவன் மின் இணைப்பு கொடுத்துள்ளான். அப்போது, அது திடீரென்று வெடித்தது[2]. இந்த சம்பவத்தில், முஜீத்தின் கை, கால் என உடலின் பல பாகங்களில் பயங்கர அடிபட்டது. இதனையடுத்து, அவன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பவம் குறித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போலீஸார் விசாரணை: மாணவன் கையில் டெட்டனேட்டர் எப்படி வந்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்தென்காசி டிஎஸ்பி பாண்டியராஜன் சம்பவ இடத்தை பார்வையிட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு, கைரேகை பிரிவு சிறப்பு படையினர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி, டிஐஜி வரதராஜு உள்ளிட்டோர் பண்பொழி வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்[3].  பள்ளி மாணவன் கையில் டெட்டனேட்டர் குச்சி கிடைத்தது எப்படி, சிறுவர்கள் கைக்கு கிடைக்கும் வண்ணம் இதனை யாரும் ரோட்டில் போட்டு சென்றார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பன்றி வெடிக்கும் அத்வானிக்கும் என்ன தொடர்பு[4]? என்ற தலைப்பில் இப்படி ஒரு இணைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது பன்றியைக் கொல்ல வாங்கும் வெடிகூட எப்படி குப்பையில் கிடைக்கிறது, அதை எப்படி சிறுவன் எடுக்கிறான், எடுத்தவன், வயர்களை இணைக்கிறான் என்றெல்லாம் தெரியவில்லை. அவ்வாறு சிறுவர்கள் அறிவில்லாமல் இருக்கும் போது, மற்றவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குப்பைத்தொட்டியில் எளிதாக கிடைக்கும் வகையில் வைத்திருக்கக் கூடாது அல்லது போட்டிருக்கக் கூடாது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை சரக டிஐஜி வரதராஜு, ரூரல் எஸ்பி விஜயேந்திர பிதாரி உட்பட காவல்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு லோக்கல் முதல் நேஷனல் வரை உள்ள அனைத்து பத்திரிக்கையாளர்களும் குவிய ஆரம்பித்தனர். அத்தனை பத்திரிக்கையாளர்களுக்கும் பேட்டி அளித்த டிஐஜி வரதராஜூ கூறும்போது, “முதற்கட்ட விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. இன்னும் சிறிது நேரத்தில் இங்கு எப்படி டெட்டனேட்டர் வந்தது தகவல் தெரிந்து விடும். இச்சம்பவத்திற்கும் மதுரையில் அத்வானி ரத யாத்திரையில் கைப்பற்றப்பட்ட பைப் வெடி குண்டு சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” என்று உறுதியாக கூறினார். சமீபத்தில் டில்லி குண்டுவெடிப்பில் சம்பந்தமாக இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்[5].

பன்றி வெடியால் அப்பாவி சிறுவன் காயம்: அப்பாவி சிறுவன் தெரியாமல் செய்திருக்கும் பட்சத்தில் முதலில் இப்படி சொல்லியிருக்க வேண்டிய அவசியமேயில்லை. “ஆனால் பரப்பரப்பு செய்திகளைக் கொடுத்து மட்டுமே பழக்கப்பட்ட நமது பத்திரிக்கையாளர்கள் இச்சம்பவத்தையும் மதுரை சம்பவத்தையும் தொடர்பு படுத்தி கதை எழுத ஆரம்பித்தனர்”, என்கிறது அந்த இனைத்தளம்[6]. மேலும், “ஆனால் அங்கு கைப்பற்றப்பட்ட டெட்டனேட்டர் குச்சி பன்றியைக் கொல்ல ஒருவர் பயன்படுத்தியது என்பது தற்போதைய விசாரணையில் தெரிய வந்து உள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது”, என்றும் கூறுகிறது[7]. பன்றியைக் கொன்றுவிட்டு அல்லது அவ்வாறு உபயோகப் படுத்திய பிறகு, ஏன் அப்படி டிடோனேடரை அஜாக்கிரதையாக விட்டுவிட்டுச் சென்றனர் என்றும் தெரியவில்லை.

எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்கள், வன்முறை, மனப்பாங்கு வளரும் விதம்: பன்றியைக் கொல்ல, கிணறு தோண்ட, பாறைகளை உடைக்க, ரோடு போட, குவாரிகளில் உபயோகப்படுத்த என பல காரியங்களுங்கு வெடிப்பொருட்கள் எளிதாகக் கிடைக்கிறது என்று தெரிகிறது. ஆகவே, அவ்வாறு வெடிப்பொருட்களை வாங்குபவர்கள் எதற்கு உபயோகிப்பார்கள் என்று தெரியவில்லை. மற்ற வகை வெடிப்பொருட்கள், ரசாயனப் பொருட்கள் எப்படி கிடைக்கின்றன என்று ஏற்கெனவே விளக்கியுள்ளேன்[8]. தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவியுள்ளதால் தான் சிறுவர்களுக்கு அத்தகைய எண்ணம் வருகிறது. கத்தியைப் பார்த்தவுடன் கழுத்தை வெட்ட வேண்டும் என்று யாருக்கும் எண்ணம் வராது. அப்படி வந்தால், அத்தகைய காட்சிகளைப் பார்த்து, மனத்தில் பதிய வைத்துக் கொண்டதாலும், மனம் அதற்கேற்றப்படி பழகிப்போனதாலும் பயமின்றி அத்தகைய மனம் உருவாகி விடுகிறது. இன்றைய திரைப்படங்களிலேயே, வெடிகுண்டுகளை வீசித் தாக்குவது போல, குண்டுகள் வெடிப்பது போன்ற வன்முறைக் காட்சிகளைக் காட்டுகிறார்கள். சிறுவர்கள் விளையாடும் கணினி விளையாட்டுகளில் பெரும்பாலாக துப்பாக்கியை வைத்து சுடுவது, வெடிகுண்டுகளை வீசித் தாக்குவது, குண்டுகள் வெடிப்பது, மனிதர்களை கண்டபடி சுட்டுக் கொல்வது………….என்றுதான் உள்ளன. அவ்வளவு ஏன் சிறுவர்களுக்கு துப்பாக்கி பொம்மைகள் அல்லது பொம்மைத் துப்பாக்கி வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு பெற்றோர்களே தயாராக உள்ளார்கள். அஹிம்சை பேசும் நாட்டில் தூக்க்குத் தண்டனைத் தேவையா என்று கேட்கும் தமிழ்நாட்டில்[9], முதலில் இத்தகைய எண்ணம் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

வேதபிரகாஷ்

05-11-2011


[2] தினமலர், நெல்லையில்குண்டுவெடிப்பு : மாணவன்காயம், நவம்பர் 03, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=342812

[6] The Hindu, Boy injured in mysterious blast, Tirunelveli, November 5, 2011

A mysterious explosion near Tenkasi on Thursday evening in which a school boy sustained injuries has triggered suspicion among the police that the explosive material might have been meant for use against senior Bharatiya Janata Party leader L.K. Advani during his Jan Chetna Yatra at Tenkasi, but discarded later.

http://www.thehindu.com/news/cities/Madurai/article2600388.ece

[8] வேதபிரகாஷ், தமிழகத்தில்வெடிகுண்டுதயரிப்பு, வெடிப்பொருட்கள்உபயோகம், வெடிகுண்டுகலாச்சாரம் (2), http://dravidianatheism2.wordpress.com/2011/10/29/bomb-blasts-in-tamilnadu-manufacture-logistics/

[9] இன்று டிவியில் “வீரவாண்டி” படம் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.