Posted tagged ‘மனநோய்’

2001 தீவிபத்து, 2019  கற்ப்பழிப்பு,  ஏர்வாடியில் நடப்பதுஎன்ன? போதிய பாதுகாப்பு இல்லையா?

நவம்பர் 9, 2019

2001 தீவிபத்து, 2019  கற்ப்பழிப்பு,  ஏர்வாடியில் நடப்பது என்ன? போதிய பாதுகாப்பு இல்லையா?

Erwadi 2001 fire accident

தீ விபத்திற்குப் பிறகு, கூட்டு கற்பழிப்பு: உலகம் முழுவதும் நடைபெறும் குற்றச்சம்பவங்களுக்குப் பின் போதை முக்கியகாரணமாக இருக்கிறது[1]. சிறுவயதிலேயே போதைக்கு அடிமையானதன் விளைவாக ஏர்வாடியில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது[2]. 2001ம் ஆண்டில் தர்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்ட 28 பேர் உயிரிழந்து நாட்டையே உலுக்கியது. அது தான் ஏர்வாடியைப் பொறுத்தமட்டில் பெரிய விஷயமாக இருந்தது. அதன் பிறகு இந்த விவகாரம். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியிலுள்ளது சுல்தான் சையது இப்ராஹிம் சையது ஒலியுல்லா தர்கா. இந்த தர்காவிற்கு வந்தால் மனநோய் குணமாகும் என்ற நம்பிக்கையால், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மனநோயாளிகள் இங்கு வருவதுண்டு. அதிலும், இங்கு வந்து தங்கினாலேயே நோய் குணமாகும் என்ற நம்பிக்கையால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் புகலிடமாகமே மாறிவிட்டது ஏர்வாடி தர்கா. இந்த தர்ஹாவிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது காட்டுப் பள்ளிவாசல்.

Erwadi mental asylum - chained patients.4

2001ல் நடந்த தீ விபத்தில் பலர் மாண்டது: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் ஏராளமான மன நலக் காப்பகங்கள் உள்ளன. இங்கு மன நலம்பாதிக்கப்பட்ட நோயாளிகள் கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2001-ம் ஆண்டு இந்தக் காப்பகத்தில், பெரும் தீவிபத்து ஏற்பட்டது. 06-08-2001 அன்று, தீ குபுகுபுவென காப்பகம் முழுவதும் பரவியது. சிறிய இல்லமாக அந்தக் காப்பகம் இருந்ததால் தப்பி வரவும் வழியில்லை. மேலும், மன நோயாளிகளுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை என்பதால் 25-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் கருகி இறந்தனர். தீ விபத்து குறித்து அறிந்த தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்தனர். நீண்ட நேரப்போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. உள்ளே சிக்கி இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. சில பிணங்கள் அடையாளமே காண முடியாத அளவுக்கு கருகின. இறந்தவர்களில் 11 பேர் பெண்கள். மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

Erwadi mental asylum-786

2001ல் நடந்த தீ விபத்திற்கு, 2007ல் தண்டனை அளிக்கப் பட்டது: இங்கு செயல்பட்டுவந்த மனநலக் காப்பகங்களை அனைத்தும் 2001 ஆகத்து 13 அன்று மூடப்பட்டு, அங்கு இருந்த 500 மன நோயாளிகள் அரசாங்க பராமரிப்பில் கொண்டுவரப்பட்டனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி, என். ராமதாஸ் தலைமையிலான ஒரு ஆணையம் இந்த மரணங்களை விசாரிக்க அமைக்கப்பட்டது. ஆணையமானது மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் கவனிப்பானது மேம்படுத்தப்பட வேண்டும், மனநலக் காப்பகத்தை அமைக்க விரும்புபவர்கள் அனைத்து கைதிகளும் கொண்டதாக காப்பகத்தை அமைக்க வேண்டும், அதற்கு உரிய உரிமத்தைக் கட்டாயம் பெறவேண்டும் என்று பரிந்துரைத்தது. 2007 ஆம் ஆண்டு, தீவிபத்து நேர்ந்த மொகைதீன் பாதுசா மனநலக் காப்பக உரிமையாளர், அவரது மனைவி மற்றும் இரண்டு உறவினர்களுக்கு குற்றவியல் நீதிமன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

Erwadi mental asylum - NAKKEERAN

19 வயது பெண் ஏழு பேரால் கற்பழிக்கப் பட்டது: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் தர்காவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவையெல்லாம் முகமதிய மதத்தின் படி, நம்பிக்கையின் ஆதாரமாக நடைப் பெற்று வருகிறது. இருப்பினும், இங்கு வருகிறவர்களுக்கு மனநலம் சரியாகுவதால், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் சிகிச்சைக்கு வருகின்றனர். அவ்வாறு வருகின்றவர்கள் தர்காவின் அருகிலேயே வீடு எடுத்து தங்குவது வழக்கம். இருப்பினும் போதிய வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 7 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்[3]. கேரளாவைச் சேர்ந்த 19 வயது மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண், ஏர்வாடி தர்காவையொட்டியுள்ள காட்டுப்பள்ளி என்ற இடத்தில் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்[4].  இங்கு பல மனகாப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன என்று மேலே எடுத்துக் காட்டப் பட்டது. கடந்த சிலநாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர்கள், தர்காவின் அருகிலேயே வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

Erwadi mental asylum - chained patients.dinakaran

வழக்கம் போல ஊடகங்கள் மாறுபட்ட செய்திகளை வெளியிடுவது: இதனிடையே சம்பவத்தன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக நள்ளிரவில் வீட்டின் வெளியே பானு வந்திருக்கிறார்[5].  அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் ஏழுபேர், பானுவை அருகே இருக்கும் காட்டுப்பகுதிக்கு தூக்கிச்சென்றுள்ளனர்[6]. அங்கு வைத்து 7 பேரும் பானுவை மாறிமாறி பாலியல் வன்கொடுமை செய்தனர்[7]. இதில் வலியால் துடித்து பானு அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு திரண்டு வந்தனர்[8]. ஆட்கள் வரும் சத்தம் கேட்டதும், சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். நக்கீரன்[9], “அதிகாலை வேளையில் மகளின் இயற்கை உபாதைக்காக அங்கிருக்கும் கழிவறைக்கு அழைத்து சென்றபோது, பின் தொடர்ந்து வந்த 16 வயதிற்குட்பட்ட 7 சிறுவர்கள் ஒன்று சேர்ந்து தந்தை பேகத்தை தாக்கி தள்ளிவிட்டு, அவரின் கண் எதிரிலேயே வாயை பொத்தி தூக்கிச் சென்று அருகில் இருந்த கருவேலங்காட்டுக்குள் வைத்து ஒன்றுமறியாத ஷானிதாவினை கூட்டு பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்,” என்கிறது[10].

Erwadi mental asylum - chained patients

இதைப் பற்றி இன்னொரு செய்தி: இந்த நிலையில் அங்கிருந்து கடந்த 4 ஆம் தேதி இரவு மாயமான இளம்பெண், தர்காவுக்கு அருகில் மயங்கிய நிலையில் அதிகாலை அவ்வழியே சென்றவர்களால் மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது[11]. இதையடுத்து அந்த பெண்ணின் தந்தை போலிஸில் அளித்த புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை நடத்தினர்[12]. இதை தொடர்ந்து இளம்பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகியுள்ளதாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் விசாரணை நடத்தினர்[13]. விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த 14 முதல் 18 வயதிற்குட்பட்ட 7 சிறுவர்கள், கஞ்சா போதையில் இளம்பெண்ணை காப்பகத்தில் இருந்து இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது[14]. இந்த நிலையில் அந்த சிறுவர்களை பிடித்து, கீழக்கரை டி.எஸ்.பி. முருகேசன் தலைமையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ML plea about the issue

தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் அறிக்கை: ‘ஏர்வாடியில், மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிடம், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட, ஏழு பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணை, மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும்’ என, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா கூறியுள்ளார்[15]. அவரது அறிக்கை: “ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்காவில் தங்கி, மனநல பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்த பெண்ணை, 17 வயதிற்கு உட்பட்ட, ஏழு சிறுவர்கள், பாலியல் பலாத்காரம் செய்ததாக, அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பெண்ணிற்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யாமல், மீண்டும் இரும்பு சங்கிலியால், மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.தர்காவில், 2001ல் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, யாரையும் இரும்பு சங்கிலி போட்டு கட்டக்கூடாது என, அரசு அறிவித்தது. அரசு உத்தரவு, காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.ஏர்வாடி தர்காவில், மீண்டும் தலைதுாக்கியுள்ள இந்த செயலை, உடனடியாக, அரசு தடுத்து நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அந்த பெண்ணை மன நல காப்பகத்தில் சேர்க்க வேண்டும்,”  இவ்வாறு, அவர் கூறியுள்ளார்[16].

Erwadi டdargah-mental asylum-786

உண்மை நிலை என்ன?: விகடன் எடுத்துக் காட்டுவது, “மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கைது செய்யப்பட்டவர்கள், தொடர்ந்து இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் போலீஸார் இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் கூறுகின்றனர்[17]. மேலும், ஏர்வாடி தர்ஹாவில் உள்ள மனநல மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது, கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன[18]. இதைத் தடுப்பதிலும் போலீஸார் கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது”. தமிழ் திரைப்படங்கள், டெலி சீரியல்கள், இத்தகைய தர்கா / மசூதி பேயோட்டுக் காட்சிகளை “பாசிடிவாகக்” காட்டி வருகின்றனர். வெறும் நீர், மயில்தோகை வைத்து, பேயோட்டுவது போன்ற காட்சிகளைக் காட்டுகிறார்கள். அடக்க முடியாத, மனநோயாளிகள் கட்டிப் போட்டு வைப்பது தெரிகிறது. அனுமதி பெறாத மனகாப்பகங்கள் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது[19].

© வேதபிரகாஷ்

08-11-2019

Erwadi டdargah-mental asylum-666

[1] தமிழ்.சமயம், ஏர்வாடி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்த சிறுவர்கள்!, Samayam Tamil | Updated:Nov 6, 2019, 04:03PM IST

[2] https://tamil.samayam.com/latest-news/crime/mentally-challenged-girl-raped-by-7-boys-in-ervadi-ramanathapuram-district/articleshow/71938227.cms

[3] பாலிமர் செய்தி, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ததாக 7 சிறுவர்களிடம் விசாரணை, Nov 06, 2019.

[4] https://www.polimernews.com/amp/news-article.php?id=87682&cid=10

[5] நியூஸ்.7.டிவி, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: ஏர்வாடியில் 7 சிறுவர்கள் கைது…!, November 08, 20191 viewPosted By : Nandhakumar

[6] https://ns7.tv/ta/bst3fy

[7] தமிழ்.ஏசியா.நியூஸ், காட்டுப்பகுதியில் நடந்த பயங்கர சம்பவம்..! மனநலம் பாதித்த பெண்ணை கூட்டாக கற்பழித்த காமவெறி சிறுவர்கள்…, By Manikandan S R SRamanathapuram, First Published 8, Nov 2019, 12:09 PM IST…

[8] https://tamil.asianetnews.com/crime/women-was-raped-by-7-boys-q0n15b

[9] நக்கீரன், அவளுக்கு ஒன்னும் தெரியாதுடா… விட்டுடுடா..! அப்பாவின் கண்முன்னே சிதைக்கப்பட்ட மன நோயாளி பெண்..!!!, Published on 06/11/2019 (17:08) | Edited on 06/11/2019 (17:39)

[10] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/she-knows-nothing-deformed-mentally-ill-woman

[11] தமிழ்.வெப்.துனியா, ஏர்வாடி மனநலக் காப்பகத்தில் இருந்து மாயமான பெண் – பலாத்கார வழக்கில் 7 பேர் கைது !, Last Modified வியாழன், 7 நவம்பர் 2019 (10:14 IST)

[12] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/mentally-disabled-woman-raped-by-7-youths-119110700017_1.html

[13] News18 Tamil,  மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 7 சிறுவர்கள் கைது!, November 7, 2019, 12:55 PM IST

[14] https://tamil.news18.com/photogallery/tamil-nadu/police-arrested-7-boys-for-sexually-abused-mentally-ill-woman-vin-223575.html

[15] தினமலர், ஏர்வாடி விவகாரம் முஸ்லிம் லீக் கோரிக்கை, Added : நவ 07, 2019 23:19

[16] https://www.dinamalar.com/news_detail.asp?id=2406395

[17] விகடன், `மகளை குணமாக்க வந்தவருக்கு இப்படியொரு துயரம்!’-அத்துமீறியவர்களை விரட்டிப்பிடித்த ஏர்வாடி மக்கள், இரா.மோகன், உ.பாண்டி, Published:06 Nov 2019 5 PM; Updated:06 Nov 2019 5 PM

[18] https://www.vikatan.com/news/crime/7-booked-for-sexual-harassment-complaint-in-ervadi

[19] Ranganathan, Shubha. Does Community Mental Health Really Engage the Community?.” Power to Label: The Social Construction of Madness (2015): 17.

மதரஸாக்களில் என்ன நடக்கின்றன – அவை மன-நோய், மனச்சிதைவு, முதலியவற்றை தீர்க்கின்றனவா அல்லது அதை துர்பிரயோகத்திற்கு உபயோகப்படுத்துகின்றனவா?

திசெம்பர் 15, 2011

மதரஸாக்களில் என்ன நடக்கின்றன – அவை மன-நோய், மனச்சிதைவு, முதலியவற்றை தீர்க்கின்றனவா அல்லது அதை துர்பிரயோகத்திற்கு உபயோகப்படுத்துகின்றனவா?

மதரஸாவில் நடந்த ரெயிட்/அதிரடி சோதனை: பாகிஸ்தான் தலைநகரமான கராச்சியில், சோரம் கோத் என்ற இடத்தில் மசூதிக்குப்பக்கத்தில் இயங்கி வரும் ஒரு மதரஸாவிலிருந்து 50ற்கும் மேற்பட்ட 10-14 வயது சிறுவர்கள், 15-30 வயது இளைஞர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்[1]. ஜக்கரியா மதரஸா என்ற இஸ்லாமிய மத போதனை செமினரி / பள்ளிக்கூடம் / குருகுலம் இயங்கி வரும் இடத்தைச் சுற்றியுள்ளவர்களுக்கு அங்கிருந்து வினோதமான சப்தங்கள் வருவதினால் சில சந்தேகங்கள் ஏற்பட்டதால், அவர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்[2]. அதன்படி, 12-12-2011 (திங்கட்கிழமை இரவு) அன்று அந்த ஜக்காரியா மதரஸாவின் அடித்தளத்தை போலீஸார் அதிரடியாக சோதனையிட்ட போது, சிறு-சிறு புறாக்கூண்டுகள் போன்ற அறைகளில் சங்கிலிகளால் கட்டுண்ட, அடிபட்ட, மனநிலை சமமாக/சரியாக இல்லாத, போதை மருந்துக்குட்பட்ட, சித்திரவதை செய்யப்பட்ட என்ற பலர் காணப்பட்டனர்[3]. உடனடியாக அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்டவர்களின் மனோநிலை: இலவசமாக இஸ்லாம் மதக்கோட்பாடுகள் சொல்லித்தரப்படும் என்று அவர்கள் அங்கு சேர்க்கப்பட்டிருக்கிறார்களாம். ஆனால், அவர்களை சங்கிலியிலால் பிணைக்கப்பட்ட நிலையிலும், அடித்துத் துன்புறுத்தப்பட்ட நிலையிலும், செக்ஸ் தொல்லைக்குட்பட்டவர்களாகவும் இருந்தனர் என்று தெரிய வந்துள்ளது. அதாவது பிடோபைல் போன்ற தொந்தரவு / வழக்கம் பின்பற்றப்பட்டதா அல்லது, அந்த சிறுவர்கள்-இளைஞர்கள் அவ்வாறு துர்பிரயோகத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டனரா என்று ஆராய வேண்டியுள்ளது. அவர்கள் விடுவிக்கப்பட்டதும் பாடி-ஆட ஆரம்பித்து விட்டனர். அவர்கள் எல்லோருமே மன-அளவில் பாதிக்கபட்டவர்கள் என்று தெரிந்தது[4]. இதே மாதிரியான அடைத்து வைக்கப்பட்ட சிறுவர்கள்-இளைஞர்களின் நிலை முன்பு மூல்தான், சிந்த், கைபர் பக்துன்ங்வா முதலிய இடங்களிலிலும் கண்டறியப்பட்டன.

மதரஸாக்கள் என்ன செய்கின்றன?: அரசு புள்ளி விவரங்களின் படி, 15,000ற்கும் மேற்பட்ட மதரஸாக்கள் பாகிஸ்தானில் இயங்கி வருகின்றன. அவை சுமார் 2 மில்லியன்கள் – 20,00,000 அதாவது 20 கோடி மாணவர்களுக்கு இத்தகைய இஸ்லாம் மதகோட்பாட்டு கல்வி கொடுத்து வருகின்றன. மக்கள் மற்ற பள்ளிகளுக்கு தங்களது சிறுவர்களை அனுப்பினால் செலவாகும் என்பதினாலும், தீவிரவாத கொள்கைகளில் பிடிப்புள்ளதனாலும், கல்வி, உணவு இலவசம் என்பதினாலும் பெற்றோர்கள் அனுப்பிவைப்பதாக தஎரிகிறது. இத்தகைய மதரசாக்கள் அரசின் கட்டுப்பாடுகள், விதிகள் முதலியவற்றில் இல்லாமல் சுதந்திரமாக இயங்கி வருகின்றன என்று மனித உரிமை மற்றும் சமூக சேவகர்கள் கூறுகிறார்கள். நாஸிஸ் புரோஹி என்ற சமூகவியல் ஆர்வலர், அடிப்பது, தண்டிப்பது முதலியன சட்டப்படி குற்றம் என்றாலும், இத்தகைய பள்ளிகள், மதரஸாக்களில் சாதாரண விஷயங்களாக இருக்கின்றன என்கிறார்[5].

மூளைச்சலவை ஏன் செய்யப்படுகிறது?: மதரஸா ஜக்கரையாவின் இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் தப்பித்து ஓடிவிட்டனர்[6]. உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அமைசர் ரஹ்மான் மாலிக், “அவர்கள் மூளசலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சமூகத்திலுள்ள மற்ற மக்களின் மீதான எதிர்ப்புத்தன்மை முதலியவற்றை அறிந்து கொள்வது கடினம். அவர்களை மிருகங்களைப் போலக் கட்டிவைத்துள்ளார்கள்”, என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்[7]. மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு, போதை மருந்துக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது என்றால், அவர்கள் ஏன் “மூளைச்சலவை” செய்யப்படவேண்டும்? இன்றைய நிலையில் “சிக்ஸோபிடனியா” என்ற சாதாரண நிலைகளுக்கே மருத்துவர்கள், ஆஸ்பத்திரிக்களில், விஞ்ஞான ரீதியில் சிகிச்சை அளிக்கிறார்கள். பிறகு, மதரஸாக்களில் கட்டிப் போட்டு அடித்தால், அவர்கள் குணமாவார்களா? அல்லது இதன் பின்னணி என்ன?

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அறியப்பட்ட விஷயங்கள்: தீவிரவாத, பயங்கரவாத இயகங்களுக்கும், இந்த மதரஸாவிற்கும் தொடர்பு இருக்குமா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். அடைப்பட்டுள்ளவர்களை கேட்டபோது, அவர்கள் பலவிதமான விவரங்களைக் கூறியுள்ளது திகைப்படையச் செய்துள்ளன[8]:

  1. எங்களுக்கு ஜிஹாத் போதிக்கப் படுகிறது. புனித போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
  2. வடமேற்கிலிருந்து தாலிபான்கள் எங்களை தயார்படுத்து அழைத்துச் செல்கிறார்கள் என்று சிலர் கூறியுள்ளனர். எங்களை ‘முஜாஹித்தீன்’களாக மாற்றுகிறார்கள் என்று பாகிஸ்தானின் ஜியோ டிவிக்கு பேட்டி கொடுத்துள்ளனர்[9].
  3. எங்களுக்கு சாப்பாடே சரிவர கொடுப்பதில்லை, அடைத்து வைத்து அடிக்கிறார்கள். எங்கள் பொற்றோர்களைப் பார்க்கக் கூட அனுமதிப்பதில்லை.
  4. முப்பது நாட்களுக்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வெயிலையே பார்க்காமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
  5. மாறாக, பெற்றோர்கள் தாம் அவர்களை அங்கு சேர்த்துள்ளனர். அவர்கள் சில குற்றங்களில் அகப்பட்டுள்ளதால், தப்பிவிடாமல் இருக்க பிணைத்து வைத்துள்ளோம் என்று மதரஸாவில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.
  6. போதை மருந்துக்குட்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அங்கு சிகிச்சையளிக்க அழைத்துவரப்படுவதாகவும் கூறுகிறார்கள்.
  7. ஹெராயின் போன்ற போதை மருந்துகளுக்கு அடிமையான அவர்கள் தப்பித்து விடக்கூடாது என்றுதான் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டுள்ளார்கள்.
  8. ஆனால் மருத்துவ ரீதியில் சிகிச்சையளிக்கப்படுவதற்கான ஆதாரங்கள் எதுவுமே அங்குக் காணப்படவில்லை.
  9. தனித்தனியாக கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டவிதம், சங்கிலிகளால் பிணைத்து வைக்கப்பட நிலை, கை-கால்களில் அடி-காயம் முதலியவை இருப்பது, சரியான பேச்சில்லாமை அல்லது முன்னுக்கு முரணாக பேசுவது முதலியன சந்தேகங்களை எழுப்புவதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
  10. சமூகத்தில் கீழுள்ளவர்கள்[10] இவ்வாறு நடத்தப் படுகிறார்கள் என்று “டான்” பத்திக்கைக்கூறுகிறது. அப்படியென்றால், இவர்கள் யார் என்ற கேள்வியும் எழுகிறது[11].

மதரஸாக்கள்: மதரீதியில் இயங்குகின்றனவேயன்றி, பொது காரணங்களுக்கக இயங்குவதில்லை: பாகிஸ்தானின் “டான்” என்ற பத்திரிக்கை, ஏன், எதற்காக, எவ்வாறு இப்படி முஸ்லீம் சிறுவர்கள்-இளைஞர்கள் போதை மருந்து, மன-நோய், மனச்சிதைவு முதலிய தவறுகளுக்கு-குற்றங்களுக்கு அடிமையாகிறார்கள் என்று அலசியுள்ளது. ஆனால், மற்ற சமுகங்களைப் போல பொதுவான காரணங்களையே கூறியுள்ளது[12]. ஒரு இஸ்லாமிய சமூகத்தில், இஸ்லாம் அடிப்படவாதம் போற்றும் நாட்டில், எப்படி அதுவும் இஸ்லாம் போதிக்கும் மதரஸாக்களில் அத்தகைய சீரழிவுகள் ஏற்படமுடியும் என்ற முக்கிய விஷயத்தை தவிர்த்து மற்ற பொதுகாரணங்களின் மீது முடிவாக தீர்வைக் காணுவது வேடிக்கையாக உள்ளது[13].

வேதபிரகாஷ்

15-12-2011


[10] …………….“detoxification/rehabilitation” center for the underprivileged people, located in the outskirts of Karachi.

http://www.dawn.com/2011/12/14/spiritually-healed-or-derailed.html

[11] ‘Privileged addicts’ are however, given the best of facilities which include a diet and exercise regime to assist them in staying sober and straight. There are various not-for-profit organisations operating in Pakistan specialising in the causes to eradicate addictions from our society, however how many of those are actually working to constructively assist  the underprivileged and needy addicts remain ambiguous.

http://www.dawn.com/2011/12/14/spiritually-healed-or-derailed.html

The debate entailing whether these Medressahs are helping the underprivileged or taking advantage of their poverty and ignorance is a moot point. However, the will to change and challenge the current situation by questioning the governance of our religious clerics and many such seminaries should top the government’s agenda.

http://www.dawn.com/2011/12/14/spiritually-healed-or-derailed.html