விமான விபத்திற்கு கருப்பு ஆடு பலிகொடுத்த பாகிஸ்தானிய விமானத்துறையும், ஒரு பைத்தியம் செய்த 20 நிர்வாணக் கொலையும் (2)
ஆண், பெண்களின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி அவர்களை தடிகளால் அடித்து, பேய் விரட்டப்படுகிறது: பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதா மாவட்டத்தில் லாஹூர் நலரில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்தில் முஹம்மது அலி குஜ்ஜார் தர்கா உள்ளது. அந்த தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத் என்பவர் அந்நாட்டு அரசு பணியாளர், தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் வேலைசெய்தார், என்பது தெரியவந்து உள்ளது. மனநிலை பாதிப்புடன் இங்கு வரும் பக்தர்களுக்கு பேய் ஓட்டுவதாகவும், பாவ மன்னிப்பு அளிப்பதாகவும் மிக கொடூரமான முறையில் சிகிச்சை அளிப்பது வழக்கம். ஆண், பெண்களின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி அவர்களை தடிகளால் அடித்து, பேய் விரட்டப்படுகிறது. இதற்காக வருபவர்கள் தங்குவதற்கு தர்கா வளாகத்தில் காப்பகம் ஒன்றும் உள்ளது. இங்கு சிலநாட்கள் தங்கி ‘சிகிச்சை’ பெற்றால் தங்களது பிரச்சனை நீங்கிவிடும் என்பது இங்கு வருபவர்களின் (மூட) நம்பிக்கையாக உள்ளது.
தர்காவின் நிர்வாகத்திற்காக போட்டி, சண்டை: இந்நிலையில், இந்த தர்காவின் நிர்வாகத்தை யார் கவனிப்பது? என்பது தொடர்பாக பரம்பரை வாரிசுகளுக்கு இடையில் சமீபகாலமாக போட்டியும் மோதலும் இருந்து வந்துள்ளது[1]. தலைமை பேயோட்டுகிறவன் தான் திறமையான பேயோட்டுகிறவன் என்றால், அவனை வைத்து தான் அந்த தொழில் நடத்தியாக வேண்டும். ஆகவே அவனைக் கொலைசெய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவனையே தீர்த்துக் கட்ட வேண்டும் என்றால், அவனை விட பெரிய எத்தனாக, அவனது மகன் அல்லது வேறொருவன் இருந்திருக்க வேண்டும். இந்த போட்டியின் விளைவாக ஞாயிற்றுக்கிழமை அன்று பின்னிரவு [02-04-2017] நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் மூன்று பெண்கள் உள்பட 20 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்[2]. அந்த தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத் என்பவர் சமீபகாலமாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார்[3]. என்று தமிழ் ஊடகங்கள் வர்ணிக்கின்றன.
தொலைபேசியில் வரச்சொல்லி, மயக்க மருந்து கொடுத்து கொலை செய்த மனநோயாளி: தர்காவிற்கு வருபவர்கள் ஒவ்வொருவருக்காக இரவு தொலை பேசியில் அழைப்பு விடுத்து உள்ளார். முக்கியமான பணி இருப்பதாக கூறி தன்னுடைய அறைக்கு அளைத்து அவர்களுக்கு மயக்க மருந்தை கொடுத்து உள்ளார்[4]. அதாவது,, ஒரு மனநோயாளி / பைத்தியம் இந்த அளவுக்கு வேலை செய்யுமா என்று தெரியவில்லை. இல்லை, அந்த பைத்தியம் அந்த அலவுக்கு விசயம் தெரிந்து வைத்துள்ளது. அவரது ஆலோசனையின் பேரில் உதவியாளர்கள் சிலர் அங்கு வசித்துவந்த எதிர் தரப்பினருக்கு மயக்க மருந்து கலந்த உணவு வகைகளை கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்டவர்கள் மயங்கி சாய்ந்தபோது அவர்களின் ஆடைகளை களைந்து கத்தி மற்றும் வீச்சரிவாள்களால் வெட்டியும், கனத்த தடிகம்புகளால் தாக்கியும் அப்துல் வஹீதின் ஆதரவாளர்கள் துடிதுடிக்க கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சிகிச்சைக்காக அந்த தர்காவுக்கு வந்திருந்த மூன்று / நான்கு பெண்கள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்[5]. இந்த கோரச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்யுள்ள போலீசார் மேலும் பலரை தேடி வருகின்றனர்[6]. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படுகொலையை தொடர்ந்து, சம்பவம் நடந்த தர்கா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஷியாக்களுக்கு எதிரான பிரச்சாரமா?: பாகிஸ்தானில், சுன்னிகளைத் தவிர மற்ற முஸ்லிம்கள், முஸ்லிம்களாகக் கருதப் படுவதில்லை. கடந்த 50 ஆண்டுகளில் காதியான் – அஹமதியா முஸ்லிம்கள் வேடையாடப் பட்டு, விரட்டியடிக்கப் பட்டனர். பஹாய் முஸ்லிம்களின் கதியும் அவ்வாறே முடிந்தது. ஷியாக்கள் அதிகமாக இருப்பதால். தலிபான் இயக்கம் வளர்ந்த பிறகு, அவர்களைத் தாக்கி வேட்டையாடி வருகின்றனர். ஐசிஸ் வந்த பிறகு கேட்கவே வேண்டாம், ஜிஹாதி தீவிரவாதம் எல்லைகளக் கடந்தது. தொடர்ந்து ஷியாக்கள் பலவிதங்களில் தாக்கப் பட்டு வருகின்றனர். தர்காக்களை ஒழிக்கிறோம் என்ற போர்வையில், குண்டுவெடிப்புகளுடன் வேலைசெய்து வருகிறார்கள். சுன்னிகள் தவிரவீதர முஸ்லிம்களின் மசூதிகள், மடாலயங்கள், சூபிகானா போன்ற இடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. குண்டுவெடிப்புகளும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. பாகிஸ்தானை விட்டு, ஓடி வந்த பஹாய் முஸ்லிம்கள், தில்லியில், தாமரை கோவிலைக் கட்டிக் கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. கர்நாடகத்தில், அஹமதியா முஸ்லிம்கள் கனிசமாக உள்ளனர். ஆனால், இவர்கள் எல்லோருமே அடங்கிக் கிடக்கின்றனர். எதைப் பற்றியும் எந்த கருத்தையும் சொல்வதில்லை.
பிப்ரவரியில் நடந்த குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் சாவு, காயம் முதலியன: பாகிஸ்தானில் உள்ள தர்கா ஒன்றின் மீது நடைபெற்ற தாக்குதலில் குறைந்தது 80 பேர் பலியானதை தொடர்ந்து நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றில் டஜன்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது[7]. சுமார் 18 தீவிரவாதிகள் தெற்கு சிந்து மாகாணத்தில் கொல்லப்பட்டுள்ளனர். அங்குத்தான் அந்த தர்கா அமைந்திருந்தது. மேலும் 13 பேர் வட-மேற்கு பகுதியில் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேவான் நகரில் இருந்த சூஃபி தர்காவில் தற்கொலை குண்டுத்தாரி ஒருவர் வழிப்பட வந்திருந்தோர் மத்தியில் தன்னைத்தானே வெடிக்க வைத்துள்ளார். இஸ்லாமிய அரசு என அழைத்துக்கொள்ளும் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. ஜிஹாதி குழுக்கள் நடத்திவரும் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் இது சமீபத்தியதாகும். தாக்குதலில் பலியானவர்களுக்கு 17-02-2017 அன்று (வெள்ளிக்கிழமை) இறுதிச் சடங்கு நடைபெறுகிறது, என்று பிபிசி வெளியிட்டது[8]. ஆனால், அத்தகைய “குண்டுதாரிகள்” ஏன் ஷியா மசூதிகளில் மட்டும், தங்களை வெடித்துக் கொள்கிறார்கள் என்று சொல்லவில்லை.
ஷியாக்களின் பலியை “சகிப்புத் தன்மையோடு” அனுசரித்து வரும் செக்யூலரிஸ சித்தாந்திகள்: ராணுவம் மற்றும் போலீஸ் சுன்னிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதனால், ஷியாக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். ஆகவே, சுன்னிகளும் பேயோட்டுதல், மந்திரம் வைத்தல், பில்லி-சூன்யம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டிருந்தாலும், இதனை சாக்காக வைத்துக் கொண்டு, அவர்களை ஒழிப்பதை நியாயப் படுத்துவது போன்ற, இந்நிகழ்சிகள் தெரிகின்றன. மனித உரிமைகள் எல்லாம் இதில் யாரும் கவலைப்படவில்லை. இங்குள்ள செக்யூலரிஸ்டுகளும் கண்டுகொள்வதில்லை. இங்குள்ள ஷியா முஸ்லிம்கள், ஆச்சரியப் படும் அளவுக்கு ஊமைகளாக இருக்கின்றனர். இங்கு ஒரு பாரூக் நாத்திகன் என்பதனால் கொலை செய்யப்பட்டான் என்றால், அங்கு சுன்னிகள் தவிர மற்ற எல்லோருமே “காபிர்கள்” என்று முத்திரைக்குத்தப்பட்டு தீர்த்துக் கட்டப் படுகிறார்கள். ஆனால், “சகிப்புத் தன்மையோடு” அமைதி காக்கிறார்கள். இப்பொழுதும், பைத்தியம் கொலை செய்தது என்று கதையை முடித்து விடுவார்கள்.
© வேதபிரகாஷ்
03-04-2017
[1] மாலைமலர், மயக்க மருந்து தந்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி: பாகிஸ்தான் தர்காவில் கொடூரம், பதிவு: ஏப்ரல் 02, 2017 10:57
[2] http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/02105709/1077548/20-people-killed-by-mentally-ill-custodian-of-dargah.vpf
[3] தினத்தந்தி, பாகிஸ்தானில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு தர்கா நிர்வாகியால் 20 பேர் கொடூரக் கொலை, ஏப்ரல் 02, 12:00 PM
[4] http://www.dailythanthi.com/News/World/2017/04/02120016/20-killed-by-shrine-custodian-in-Sargodha-police.vpf
[5] தினமலர், தர்காவுக்கு சென்ற 20 பேர் நிர்வாணமாக்கி படுகொலை, பதிவு செய்த நாள். ஏப்ரல்.3, 2017, 00.05.
[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1743594
[7] பிபிசி, தர்கா மீது நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி: 31 தீவிரவாதிகள் கொலை, பிப்ரவரி 17, 2017.
அண்மைய பின்னூட்டங்கள்