அமெரிக்க ஓரினச்சேர்க்கை விடுதியில் துப்பாக்கி சூடு, 53 பேர் கொலை, சுமார் 60ற்கும் மேலானவர் காயம்: சுட்ட உமர் மீர் சித்திக் மாடீன் கொலையுண்டான்!
ஆர்லான்டோ நகர் துப்பாக்கிசூடு: அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஆர்லண்டோ நகரில் ‘பல்ஸ்’ என்ற பெயரில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி செயல்பட்டு வந்தது[1]. விடுதியில் 12-06-2016 இரவு அன்று விடிய, விடிய கேளிக்கை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் 100–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இவ்விடுதியில், துப்பாக்கியுடன் புகுந்த நபர், கண்மூடித்தனமாக சுட்டதில், 50 பேர் பலியாயினர்; 53க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்; தகவலறிந்து மூன்று மணி நேரத்திற்கு பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த மர்ம நபரை சுட்டுக்கொன்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரின் பெயர் ஆப்கானிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஓமர் எஸ் மடீன் [Omar Mir Seddique Mateen] எனவும் அவன் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவனாக இருப்பான் என சந்தேகிப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது, பயங்கரவாத தாக்குதலா என, போலீசார் விசாரிக்கின்றனர்[2].
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் – ஓரினச்சேர்க்கையாளர்களின் மீது நடந்துள்ள பெரிய தாக்குதல்:: அமெரிக்காவில், பொது இடங்களில், எந்த காரணமும் இன்றி, துப்பாக்கியால் சுடும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. பொது இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என்று எல்லா இடங்களிலும் நடப்பதால், இது ஏதோ சாதாரண விசயம் போலாகி விட்டது. அமெரிக்க வரலாற்றில் துப்பாக்கிச்சூட்டின் மூலம் அதிக நபர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும், ஓரினச்சேர்க்கையாளர்களின் மீது நடந்துள்ள பெரிய தாக்குதலாகும். இதற்கு முன்னர் 2007-ஆம் ஆண்டு விர்ஜினியா பல்கலைகழகத்தில் 32 பேர் படுகொலை செய்யப்பட்டதே இது வரை அதிகபட்சமாக இருந்தது. அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கி தாக்குதல்கள் பெருகி வருவது மக்களை பதற்றத்தில் ஆழ்த்தி உள்ளது[3].
பாப் பாடகி, கிறிஸ்டினா கிரிம்மி சுடப்பட்டு கொலை (12-06-2016): ஒரலாண்டோ பகுதியில், வெள்ளிக்கிழமை 12-06-2016 அன்று இரவு, இசை நிகழ்ச்சி ஒன்றில், பிரபல பாப் பாடகி, கிறிஸ்டினா கிரிம்மி, 22, சுட்டுக் கொல்லப்பட்டார்[4]. கடந்த 2014-ம் ஆண்டில் நடந்த ‘தி வாய்ஸ்’ இசைப் போட்டி நிகழ்ச்சியில் கிறிஸ்டினா ஜிரிமி 3-ம் இடம் பிடித்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் இளம் பாப் பாடகிகளில் ஒருவராக உருவெடுத்த அவர் 1106-2016 அன்று இரவு புளோரிடா நகரில் இசைக் கச்சேரி நடத்தினார். அதன்பிறகு ரசிகர்களுக்கு ஆட்டோ கிராப் போட்டுக் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த மர்மநபர் கிறிஸ்டினாவை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். 5 குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் மயங்கி சரிந்தார். அவரை உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார்[5].
அக்கொலை யை அடுத்து 24 மணி நேரத்தில் இந்த சம்பவம்: இந்த சம்பவம் நடந்து, 24 மணி நேரத்திற்குள், அதே பகுதியில், மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. ஒரலாண்டோவில், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி செயல்படுகிறது. அங்கு, நேற்று அதிகாலை, வழக்கமான கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அப்போது, இரவு விடுதிக்குள் புகுந்த மர்ம நபர், 2.02 அதிகாலையில் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால், அங்கிருந்தவர்களை நோக்கி, சரமாரியாக சுட்டான். அப்போது, அந்த விடுதியில், 300க்கும் மேற்பட்டோர் இருந்தனர். அவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைக்க, அவன் முயற்சித்தான்[6]. துப்பாக்கி சத்தம் கேட்டதும் உள்ளே இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். ஆரஞ்சு கௌன்டியின் செரிப் உடனே வந்து சமாதானம் பேச ஆரம்பித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அவனுக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அவன், துப்பாக்கியை கீழே போடாமல், மீண்டும் மீண்டும் சுட்டான். இதையடுத்து, அந்த இடம், போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டது.
அதிரடி போலீஸாரின் நடவடிக்கை: காலை 5 மணிக்கு “ஸ்வாட்”, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவை வரவழைப்பப்பட்டு, அவசரகால ஏற்பாடுகள் விரைவாகச் செய்யப்பட்டன. கட்டடத்தை தகர்த்து உள்ளே சென்ற போலீசார், அவன் மீது தாக்குதல் நடத்தினர். சிறிது நேரம், இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில், அந்த நபர், சுட்டுக் கொல்லப்பட்டான். மர்ம நபர் நபர் நடத்திய தாக்குதலில், 50 பேர் வரை உயிரிழந்ததாக, போலீசார் தெரிவித்தனர். 53க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், ‘இரவு விடுதியில் இருந்தவர்கள், அந்த மர்ம நபர் சுட்டதால் இறந்தனரா அல்லது போலீசாருக்கும், அவனுக்கும் நடந்த மோதலில் இறந்தனரா என்ற தகவல், உறுதியாக தெரியவில்லை’ என்றனர்[7].
ஒமர் மாட்டின் பயங்கரவாதியா?: சம்பவம் நடந்தபோது, துப்பாக்கி மட்டுமின்றி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருப்பதாக, அந்த மர்ம நபர் கூறினான். இதனால், அவன் பயங்கரவாதியாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது[8]. இதுகுறித்து, அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது: துப்பாக்கியால் சுட்டவனின் பெயர், ஒமர் மேட்டின், 29, ஒரு அமெரிக்க முஸ்லிம் என தெரிய வந்துள்ளது[9]. புளோரிடா மாகாணத்தில், போர்ட் செயின்ட் லுாயிஸ் பகுதியில் வசித்து வந்துள்ளான். 2009ல் திருமணம் செய்து கொண்டு 2011ல் விவாகரத்து செய்தான். பிறகு மறுபடியும் திருமணம் செய்து கொண்டுள்ளான். அவனுக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. முதல் மனைவி ஒமர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவன், தன்னை அடிக்கடி அடித்துத் துன்புருத்துவான் என்றெல்லாம் கூறியுள்ளாள். ஆப்கானிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அவனுக்கு, ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என, கருதப்படுகிறது. எனினும், இது பயங்கரவாத தாக்குதலா என விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி கேள்விப்பட்ட அதிபர் ஒபாமா, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தயாராகி வரும், ஹிலாரியும், டொனால்டு டிரம்பும் வருத்தம் தெரிவித்துள்ளனர்[10]. 2013 மற்றும் 2014 ஆண்டுகளில், இவனது விசித்திரமான பேசுகளால், எப்.பி.ஐ மூன்று முறை விசாரணை நடத்தியுள்ளது.
துப்பாக்கிக்கு கட்டுப்பாடு- வன்முறை வளர்க்கும் சரித்திரம்-சித்தாந்தம்: அமெரிக்காவில் 2015ம் ஆண்டில் மட்டும் பொது இடங்களில் 372 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 475 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 1,870 பேர் காயமடைந்துள்ளனர். இது போன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தொடர்ந்து, பொதுமக்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள, கட்டுப்பாடு விதிக்க வகை செய்யும் சட்டத்தை, அதிபர் ஒபாமா கொண்டு வர முயன்றார். ஆனால் துப்பாக்கி தயாரிப்பு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்நாட்டு பார்லிமென்ட் இந்த சட்டத்தை முடக்கி வைத்துள்ளது[11]. ஆக வன்முறை வளர்க்க, எதிர்க்க, முடக்க, சித்தாந்தமாகி, கொலைகள் செய்ய என்று பல இயக்கங்கள், நிறுவனங்கள் என்றுள்ளன என்று தெரிகிறது. பிறகு, அப்பாவி மக்களை யார்தான் காப்பது? இப்படியே கொலையாகும் மக்களின் ஆத்மா எப்படி சாந்தியடையும்?
© வேதபிரகாஷ்
13-06-2016
[1] http://www.pulseorlandoclub.com/
[2] தினத்தந்தி, அமெரிக்காவில் இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு, பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூன் 12,2016, 9:29 PM IST; மாற்றம் செய்த நாள்:
ஞாயிறு, ஜூன் 12,2016, 9:29 PM IST.
[3] http://www.dailythanthi.com/News/World/2016/06/12212900/Florida-nightclub-shooting-50-killed-53-injured-in.vpf
[4] தமிழ்.இந்து, அமெரிக்க பாப் பாடகி சுட்டுக் கொலை, Published: June 12, 2016 11:08 ISTUpdated: June 12, 2016 11:09 IST.
[5]http://tamil.thehindu.com/world/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/article8720771.ece
[6] தினகரன், அமெரிக்காவில் இரவு விடுதியில் பயங்கரம் : துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலி, Date: 2016-06-13@ 00:36:37
[7] மாலைமலர், அமெரிக்க இரவு விடுதியில் நடைபெற்ற திடீர் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழப்பு, பதிவு: ஜூன் 12, 2016 18:00.
[8] http://www.maalaimalar.com/News/TopNews/2016/06/12180012/1018351/Pulse-Night-Club-mass-shootings-Approximately-20-dead.vpf
[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=223548
[10] தினமலர், அமெரிக்க விடுதியில் துப்பாக்கிச்சூடு: 50 பேர் பலி, ஜூன்.13, 2016.
[11] http://www.dinamalar.com/news_detail.asp?id=1541113
அண்மைய பின்னூட்டங்கள்