கிருத்துவம்அல்லதுஇஸ்லாம்மதமாற்றம்ஏன்நடக்கிறது?: தமிழகத்தில் இந்துக்கள் மதம் மாறுவது நடந்து கொண்டே இருக்கிறது. தீண்டாமை மற்றும் ஜாதி, ஜாதிக் கொடுமைகள் காரணமாக எடுத்துக் காட்டப் பட்டு, கிருத்துவம் அல்லது இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டால், அத்தகைய வேறுபாடுகள், வித்தியாசங்கள், பாகுபாடுகள் முதலியன மட்டுமல்லாது, சமுத்தவம், சகோதரத்துவம், சம-அந்தஸ்து எல்லாம் கொடுக்கப் படும் அல்லது கிடைக்கும் என்று அறிவிக்கப் பட்டு அல்லது பிரச்சாரம் செய்யப் பட்டு, அத்தகைய மதமாற்றங்கள் நடந்தன, நடந்து வருகின்றன. இவையெல்லாம், ஆன்மீகம், தத்துவம், மெய்யியல் போன்றவற்றைக் கடந்து திட்டமிட்டு நடந்து வருகின்றன என்பது அரசாங்க, நிறுவனங்கள் ஆராய்ச்சிகள், தரவுகள் முதலியவை மூலம் அறியப் பட்டுள்ளன. மீனாக்ஷிபுரம் மதமாற்றம் அதனால் தான் பெரும் சர்ச்சையை உண்டாக்கி அடங்கி விட்டது. அதனால், எத்தனை மதம் மாறிய இந்துக்கள் பணக்காரர்கள் ஆனார்கள், உயர்ந்த சமுக்கத்தின் பெண்களை கல்யாணம் செய்து கொண்டார்கள், சிறந்த நிலையை அடைந்தார்கள் என்றெல்லாம் தெரியவில்லை.
மதமாற்றத்தால்உயர்ந்தநிலைகிடைத்ததாஇல்லையா?: மண்டல் கமிஷன் தீர்ப்பு இஸ்லாமியர் மற்றும் கிருத்துவர் இடையேயும் ஜாதிகள் உண்டு என்றவுடன், சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முதலியவற்றின் பரிந்துரைகளின் ஆதாரமாக, அவர்கள் இடவொதிக்கீடு கேட்க ஆரம்பித்து விட்டனர். ஆனால், Caste [காஸ்ட்] மற்றும் class [கிளாஸ்] என்றவற்றிற்குள் இருக்கும் உண்மையினை அறிந்து கொள்ளாமல், உணர்ச்சி, அரசியல், சித்தாந்தம் போன்றவற்றால் உந்தப்பட்டு, மற்றவர்களையும் உசுப்பி விட்டு, பிரச்சினைகளை வளர்த்து வருவதும் தெரிகிறது. ஒரு பக்கம் எல்லோரும் சமம், எல்லோருக்கும் சம-உரிமைகள், எல்லோருக்கும் எல்லாம் என்றெல்லாம் பேசிக் கொண்டே, “எல்லாமே எனக்குத்தான்” என்று பல கூட்டங்கள் பெருகி வருவதைக் காணலாம். இங்கு தான், அப்பிரச்சினைகள், பெரிதாகி நீதிமன்றங்கலுக்குச் செல்கின்றன. அங்கு உண்மைகள் ஆராயும், அலசும் மற்றும் முடிவில் தீர்ப்புகளாக வரும் பொழுது, பிடித்தும்-பிடிக்காமலும் போகும் நிலை உண்டாகிறது. இப்பொழுது, இந்த தீர்ப்பும் அவ்வாறே இருக்கிறதா . இல்லையா என்று கவனிப்போம்.
இஸ்லாம்மதம்மாறியஇந்துவைபிசிமுஸ்லிம்ஆககருதமுடியாது: உயர்நீதிமன்றம்உத்தரவு: மதுரைக்கிளை உயர் நீதிமன்றம் ‘இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மாதத்துக்கு மாறியவரை பிசி முஸ்லிம் ஆக கருத வேண்டும்’ என்ற கோரிக்கையை நிராகரித்துள்ளது[1]. இது ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தாலும், வழக்கம் போல, “பி.டி.ஐ” பாணியில், “தமிழ்.இந்துவில்” வந்ததை மற்ற ஊடகங்கள் அப்படியே / வேறு தலைப்புகள் இட்டு / சிறிது மாற்றி வெளியிட்டுள்ளன. ஊடக வித்தகர்களும், நிருபர்களும், அப்படியே செய்தியை போட்டு, அமைதியாகி விட்டனர். இவ்வழக்கில் பாதிக்கப் பட்டவரிடம் சென்று பேட்டி காணவில்லை, முஸ்லிம் அரசியல் கட்சிகள், இயக்கத்தினர்களிடம், துறை அமைச்சர்களிடம் கமென்ட் / விளக்கம் கேட்கவில்லை, அன்று மாலையிலேயே, டிவிசெனல்களில் வாத-விவாதங்கள் நடத்தவில்லை. சமூகநீதி வித்தகர்கள், சமத்துவ சித்தாந்திகள், சமவுரிமை போராளிகள், சமன்பாட்டு வித்தகர்கள் முதலியோரும் காணப்படவில்லை.
காஜிகொடுத்தமுஸ்லிம்சான்றிதழ், கேட்கும்பிசிஅந்தஸ்து, மறுத்த TNPSC: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த யு.அக்பர் அலி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு[2]. நானும், என் குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து 2008-ல் இஸ்லாம் மதத்துக்கு மாறினோம்[3]. நான் லெப்பை சமூகத்தைச் சேர்ந்தவர் (a group within Muslim community which has been notified as a backward class) என ராமநாதபுரம் மண்டல துணை வட்டாட்சியர் 2015-ல் சாதி சான்றிதழ் வழங்கியுள்ளார்[4]. 2018-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு பிசி முஸ்லிம் பிரிவில் விண்ணப்பித்தேன்[5]. எழுத்துத் தேர்வு மற்றும் மெயின் தேர்வு எழுதினேன்[6]. இறுதி தேர்வுப் பட்டியலில் என் பெயர் இடம்பெறவில்லை[7]. தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது என் பெயரை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலிக்காமல், பொதுப்பிரிவில் பரிசீலித்துள்ளனர்[8]. என்னை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலிக்கக்கோரி அளித்த மனுவை டிஎன்பிஎஸ்சி செயலாளர் 28.7.2021ல் நிராகரித்து உத்தரவிட்டார். [இந்த TNPSC அதிகாரி வருவாய் அதிகாரியை விட பெரியவர்களா அல்லது அவர்கள் கொடுக்கும் சான்றிதழை மறுக்க அதிகாரம் உள்ளதா?]
லெப்பைமுஸ்லிமா, பிற்படுத்தப்பட்டமுஸ்லிமா, ஜாதியா?: என்னை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலித்து வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது[9]. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு[10]. “தமிழகத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுவதில்லை.மனுதாரர் ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜியார் அளித்த சான்றிதழை தாக்கல் செய்துள்ளார்[11]. அதில் சத்திய மூர்த்தி என்பவர் அவராகவே விரும்பி இஸ்லாம் மதத்தில் சேர்ந்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது[12]. அதை தவிர – அவர் ஒரு இஸ்லாமியர் என்பதை தவிர – சான்றிதழில் வேறு ஏதும் இல்லை. மதம் மாறியவர் லெப்பை வகுப்பை சேர்ந்தவர் என அரசு காஜியார் அறிவிக்க முடியாது. அப்படியிருக்கும்போது மதச்சார்பற்ற அரசின் வருவாய் அலுவலர் மதம் மாறிய தனி நபர் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர் என எப்படி சான்றிதழ் வழங்கினார் என்பது தெரியவில்லை. ஏற்கெனவே இடஒதுக்கீட்டு சலுகையை அனுபவித்து வந்த ஒருவருக்கு மதம் மாறிய பிறகும் இடஒதுக்கீட்டு சலுகை வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது[13]. அது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது இந்த நீதிமன்றத்தால் எந்த முடிவுக்கும் வர முடியாது[14]. [காஜி தனது மத இறையியலின் படி தீர்மானிக்கிறரா அல்லது வேறு ஏதோரு அதிகாரம் அல்லது அதிகார ஆணை மூலம் தீர்மானிக்கிறாரா என்றும் கவனிக்க வேண்டும். எப்படியிருந்தாலும்,ஐஸ்லாமிய இறையியலின் படி முஸ்லிமுக்கு இரண்டு வித சமூக நிலை, அந்தஸ்து. இடவொதிக்கீடு எல்லாம் இருக்கிறதா என்று தெரியவில்லை.]
[1] தமிழ்.இந்து, இஸ்லாம்மதம்மாறியஇந்துவைபிசிமுஸ்லிம்ஆககருதமுடியாது: உயர்நீதிமன்றம்உத்தரவு, கி.மகாராஜன், Published : 02 Dec 2022 08:22 PM; Last Updated : 02 Dec 2022 08:22 PM
[5] ஜி.7.தமிழ், இஸ்லாம்மதம்மாறியஇந்துவைபிசிமுஸ்லிம்ஆககருதமுடியாது: உயர்நீதிமன்றம்உத்தரவு | hindu convert to islam cannot be considered a bc muslim high court orders || G7TAMIL, By g7tamil -December 2, 2022.
[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், முஸ்லிம்மதம்மாறியஇந்துபிற்படுத்தப்பட்டவர்அல்ல.. மதுரைஉயர்நீதிமன்றம், Written by WebDesk, Madurai, December 3, 2022 2:22:42 pm
கேரள முஸ்லிம் அனாதை இல்லத்து இளம்பெண்கள் மூன்று மாதங்களாக கற்பழிக்கப்பட்டு வருவதால் ஏழு இளைஞர்கள் கைது – யதீம் கானா அதிகாரிகளின் தொடர்பு!
அனைத்துலகபெண்கள்தினத்திற்கு முன்னர் கற்பழிப்பு விவகாரம் வெளிவருவது: மார்ச்.8 அனைத்துலக பெண்கள் தினம் என்ற நிலையில் 07-03-2017 அன்று வயநாடு, யதீம் கானாவில் உள்ள முஸ்லிம் அனாதை இல்லத்து டீன் – ஏஜ் பெண்கள் கற்பழிக்கப் பட்ட செய்தி வந்துள்ளது. பெரிய இடத்து புள்ளிகள், அதிலும் முஸ்லிம்கள் சமந்தப்பட்டிருப்பதால், உடனடியாக பெண்கள் மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைத்து, முடிவுகள் பெறப்பட்டுள்ளன[1]. வெளியாட்கள் எப்படி அந்த அனாதை இல்லத்து 15-17 வயது பெண்களை சாக்லெட், மிட்டாய் கொடுத்து கற்பழிக்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது[2]. பாலியல் வன்முறையில் இருந்து பெண்கள், சிறுமிகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை மத்திய, மாநில அரசுக்கள் தரப்பில் எடுக்கப்பட்டாலும் தொடர்ந்து வன்முறை தாக்குதல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கேரள மாநிலத்தில் ஆதரவற்றோர் விடுதியில் 2 மாதங்களாக 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறி உள்ளது.
வயநாடுமுஸ்லிம்ஹார்பனேஜ் – யதீம் கானா: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கால்பேட்டாவின் முட்டில் பகுதியில் உள்ள முஸ்லிம் அமைப்பு நடத்தும்ஆதரவற்றோர் விடுதியில் 14-15 வயதுகள் கொண்ட 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வயநாடு முஸ்லிம் ஹார்பனேஜ் [Wayanad Muslim Orphanage Muttil, WMO[3]] 1967ல் தொடங்கப்பட்டது. முன்னரே பல்வேறு நிதிமோசடிகளில் சம்பந்தப் பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து நிதி பெறும் இது, பலவிதமான வியாபாரங்களில் ஈடுபட்டுள்ளது. கடவுளின் சொந்தமான தேசம் என்று பீழ்த்திக் கொள்ளும், இந்த கேரள மாநிலம், இவ்வாறு அடிக்கடி பாலியல், செக்ஸ் குற்றங்கள், கற்பழிப்புகள் முதலியன தொடர்ந்து நடந்து வருவது திகிலடையச் செய்வதாக இருக்கிறது[4]. இங்கு 100க்கும் மேற்பட்ட சிறுமிகள் உள்ளனர்.
கேரள முஸ்லிம் அனாதை இல்லத்து இளம்பெண்கள் மூன்று மாதங்களாக கற்பழிக்கப்பட்டு வருவதால் ஏழு இளைஞர்கள் கைது: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிகளில் ஒருவர் விடுதிக்கு அருகே உள்ள கடையில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் வெளியே வந்து உள்ளார். அப்போது விடுதியை சேர்ந்த பாதுகாவலர் அவரிடம் விசாரித்து உள்ளார். விசாரணையில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறுமிகள் ஆசைவார்த்தை கூறப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர் என தெரியவந்து உள்ளது[5]. இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 6, 7 இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். பாலியல் பலாத்காரங்கள் தொடர்பாக சிலரை பிடித்து விசாரித்து வரும் போலீசார் இதுவரையில் யாரையும் கைது செய்யவில்லை[6]. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாலியல் பலாத்காரங்கள் தொடர்பாக எந்த ஒரு முழு தகவல்களும் இதுவரையில் வெளியாகவில்லை. இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமி பாதிரியாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி மற்றும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
சாக்லேட், மிட்டாய் கொடுத்து கற்பழிக்க முடியுமா?: விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் சிறுமிகள் பள்ளிக்கு சென்றபோது அவர்களை வழிமறித்து இனிப்புகளை வழங்கி உள்ளனர் மற்றும் அவர்களுக்கு செல்போனில் ஆபாச பாடங்களை பார்க்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இதனை வெளியே கூறினால் கடும் விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும் என மிரட்டிஉள்ளனர் என புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் அந்த பகுதி போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அந்த பெட்டிக் கடைக்காரரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது, மொத்தம் 7 சிறுமிகளுக்கு மயக்க மருந்து கலக்கப்பட்டிருக்கும் சாக்லேட் கொடுத்து, மயக்கமடைந்த பின்பு அவர் காம லீலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதோடு, அந்த 7 சிறுமிகளையும் தனது நண்பர்கள் சிலருக்கும் அவர் விருந்தாக்கியது தெரிய வந்ததும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்[7].
வழக்கு பதிவு செய்யப் பட்டது: இதெல்லாம் ஜனவரி 2017லிருந்து நடந்து வருகின்றது. இதையடுத்து அவரின் நண்பர்கள் சிலரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். சில சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியும், சில சிறுமிகளை ஆபாசமாக செல்போனில் புகைப்படம் எடுத்து மிரட்டியும் பல மாதங்களாக அவர் அந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது[8]. சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தை கொண்டு குற்றத்தில் ஈடுப்பட்ட 6 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்[9]. குழந்தைகளுக்கான பாலியல் குற்றம் தடுப்பு சட்டம் [the Protection of Children from Sexual Offences Act (POCSO) act] உட்பட 11 பிரிவுகளின் கீழ் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[10]. இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சிறுமிகளுக்கு கவுன்சலிங் கொடுக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களின் விவரத்தை போலீசார் வெளியிடவில்லை[11]. இந்த சம்பவம் தொடர்பாக வயநாடு எஸ்.பி. ராஜ்பால் மீனா தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்[12].
மெத்தப்படித்தமாநிலத்தில், இவ்வாறுநடப்பதுஎப்படி?: யதீம் கானா கற்பழிப்பில், அந்த அனாதை இல்லத்து நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களே சம்பந்தப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது[13]. அனாதை இல்லங்கள், பள்ளிகள்-கல்லூரிகள், வியாபார நிறுவனங்கள் என்பதோடு, அரசியல் தொடர்புகளும் இருப்பதால், முதலில் போலீசார் தயங்கினர். பெயர்களைக் கூட வெளியிடவில்லை. ஹாஸ்டலில் இருப்பவர்கள் இதில் சம்பந்தப் பட்டிருப்பதும் தெரிகிறது. இப்பொழுது கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் உள்ளதால், பத்து நாட்கள் இடைவெளியில் இவ்வாறு கிருத்துவ மற்றும் முஸ்லிம் மதத்து மடாலயங்கள், சாமியார்கள் என்று பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது, எல்லோரையும் கலங்க வைத்துள்ளது. முழுக்க அரசியல்வாதிகள் இப்பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ளது, வெளிவந்துள்ள விவகாரங்களை விட மறைக்கப் பட்டவை அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. ஒரு பக்கம் கொலைகள், இன்னொரு பக்கம் இப்படி கற்பழிப்புகள் என்று அசிங்கப்படுகிறது. கேரளாவில் ஆறு மணி நேரத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள் என்று புள்ளி விவரங்கள் கொடுக்கப் படுவது, அதைவிட கேவலமாக இருக்கிறது. மேலும் கேரளா எழுத-படிக்கும் கல்வியறிவில் இந்தியாவில் முதன்மையாக இருக்கிறது. பிறகு, அத்தகைய மெத்தப் படித்தவர்கள், எவ்வாறு இத்தகைய ஆபாசமான, பாலியல், கொக்கோகங்களில் ஈடுபட முடியும்? உலக நாடுகளுக்கு நர்சுகளையும், கன்னியாஸ்திரிக்களையும் ஏற்றுமதி செய்கிறது என்ற பெருமையும் கொண்டுள்ளது கேரளா.
[4] Though, the media mentions it as “Yatheem Khana at Muttil in Kalpetta”, it has been pointed out specifically as the one that has been there started in 1967 and involved in financial irregularities earlier. As the WMO has many orphanages, educational institutions, commercial ventures, and other interests with political patronage and gulf-connerction, probably, the identity has been suppressed. Kerala has been ‘the God own country” and any God can do anything and ordinary men, particularly, secular Indians cannot ask anything. Now, ironically, the Communists have been ruling such “God owned country” and none knows what would happen there in coming days.
மக்கள் தாக்கப்படுவது: உணர்ச்சி, சுரணை மற்றும் சகிப்புத்தன்மை பற்றிய பாரபட்சம், அலட்சியம் மற்றும் சுணக்கம் – துலாகர்கலவரம் (3)
“மத–கலவரம்” அல்லஎன்றும், சிறிய “உள்ளூர்பிரச்சினை” என்றும். மறுப்பது: துலாகரில் மத கலவரம் கொதித்து அடங்கியுள்ளது[1]. இது பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள்-கடைகள் எரிந்து, சாம்பலாகி அடங்கியது போலுள்ளது[2]. பிஜேபி தலைவர் சித்தார்த் நாத் சிங், திரிணமூல் காங்கிரஸின், சிறுபான்மை குழுவினர் தாம், இந்த கலவரங்களை திட்டமிட்டு நடத்தியுள்ளனர் என்று குற்றஞ்சாட்டினார்[3]. தேசிய மனித உரிமைகள் வாரியத்திடம், இப்பிரச்சியை எடுத்துச் செல்வோம் என்றும் பிஜேபியினர் கூறியுள்ளார்கள்[4]. ஆனால், மம்தா பானர்ஜியோ, இது, “மத-கலவரம்” அல்ல என்றும், சிறிய “உள்ளூர் பிரச்சினை” என்றும். மறுத்துள்ளார். சமூக வலைதளங்களில் வேண்டுமென்றே தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார். அதே போல, திரிணமூல் கட்சியினர் பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் இந்த நிகழ்ச்சிகளைப் பற்றி தவறான விவரங்களை பரப்புகிறார்கள் என்றும், அவற்றிற்கு மதசாயம் பூசப் பார்க்கிறார்கள் என்றும் குறைகூறினார்கள். அதாவது, ஒன்றுமே நடக்கவில்லை போன்று சாதிக்கும் மம்தாவின் போக்கு திகைப்படைவதாக உள்ளது. துலாகர் கலவர விவரங்கள் முழுவதும் வெளிவருமா-வராதா என்ற சந்தேகம் வலுவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
கலவரங்களில்கூடசெக்யூலரிஸம்பார்த்துபாரபட்சத்துடன்செயல்படுவது: இந்துக்களின் பாதிப்பு கிள்ளுக்கீறையாக உள்ளது. இந்தியாவில், காஷ்மீரத்து இந்துக்கள் தாம், சொந்த நாட்டிலேயே “அகதிகள்” என்று சொல்லப்பட்டு, வாழ்கின்றனர் என்றால், அந்நிலை, வேற்கு வங்காளத்திலும் வந்து விட்டது. முசபர்நகரில், டிவி-குழுக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு, பேட்டி கண்டு, ஏதோ, முஸ்லிம்கள் மட்டும் தான் பாதிக்கப்பட்டனர் என்பது போல சித்தரித்துக் காட்டினர். ஆனால், துலாகரில், ஒட்டுமொத்தமாக இந்துக்கள் அகதிகளாகிய போது, அதே ஊடகக்கள் மௌனம் காக்கின்றன. 2016 டிசம்பர் 28 முதல் 31 வரை இந்திய சரித்திர காங்கிரஸ் மாநாட்டில் கூட செக்யூலரிஸம் பற்றி கருத்தரங்கம் நடத்தி பேசியபோது, இந்துக்கள் சார்புடைய இயக்கங்கள் குற்றஞ்சாட்டப்பட்டன. அதே தேதிகளில் தான் துலாகர் கலவரங்கள் பற்றிய செய்திகள் கொஞ்சம் வெளிவர ஆரம்பித்தன. “தி இந்து” முன்னதை விளாவரியாக, பிரபலப்படுத்தி செய்திகள் வெளியிட்டது, ஆனால், பின்னதைப் பற்றி ஒன்றையும் காணவில்லை. இதுதான் அவர்களது உணர்ச்சி, சுரணை மற்ற்றும் சகிப்புத்தன்மைகளின் நிலைபோலும்.
உணர்ச்சி, சகிப்புத்தன்மைமற்றும்சொரணைபற்றிஆர்பாட்டம்செய்தகூட்டங்கள்அமைதியாகஇருப்பது[5]: ஒரு ஆண்டிற்கு முன்னர், செக்யூலரிஸவாதிகள், பிரபலங்கள் என்று பல்வேறு அறிவுஜீவி கூட்டங்கள் பெரிய அளவில் கலாட்டா செய்து, ஆர்பாட்டம் செய்தனர். அதாவடு சிறுபாப்மையினர் மீது தாக்குதல் நடக்கின்றது. யாருக்கும் சுரணை இல்லை, மரத்து விட்டது, ஆனால், அவர்களுக்கு மட்டும் தான் ஐபுலன்களும் உணர்ச்சியோடு இருப்பதனால், தாங்க முடியாமல், துடிதுடித்து, தாங்கள் வாங்கிய விருதுகளைத் திரும்ப கொடுத்து கலாட்டா செய்தனர். சகிப்புத் தன்மை இல்லை என்றெல்லாம் வியாக்யானம் செய்து அட்டகாசம் செய்தனர். ஆனால், இப்பொழுதே அவர்களில் ஒருவர் கூட இதைப் பற்றி பேசுவதாக இல்லை. ஏனெனில், இதில் பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள் என்பதனால், சுரணை வரவில்லை போலும். அங்குதான் அப்பாவி இந்துக்கள், உயிருக்குப் பயந்து ஓடி ஒளிந்தனர் என்றால், இந்த வீர-தீர-சூர உணர்ச்சிப்புலிகள் எங்கு ஓடி ஒளிந்தன என்று தெரியவில்லை. காங்கிரஸைப் பற்றி கவலையே இல்லை. கிருஸ்துமஸ்-புது வருடம் என்று ராகுல் காந்தி இந்தியாவை விட்டு ஜாலியாகக் கிளம்பி விட்டார். குஜராத்தில் 2002-இல் நடைபெற்ற கலவரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியவர்கள், இப்போது மேற்கு வங்கத்தில் நடைபெறும் வன்முறைகள் குறித்து கேள்வி எழுப்பாமல் இருப்பது ஏன்? என்று ரவிசங்கர் பிரசாத் கேட்டுள்ளார்[6].
துலாகரின்மதகலவரமும், சென்னையின்வர்தாபுயலும்: டிசம்பர் 12-15 தேதிகள் துலாகர் மற்றும் சென்னை இரண்டும், மதகலவரம் மற்றும் வர்தா புயலால் பாதிக்கப்பட்டதால், மக்கள் பெருத்த சேதத்தைக் கண்டுள்ளனர். இயற்கை உண்மையிலேயே, செக்யூலரிஸ ரீதியில் சென்னையைத் தாக்கியுள்ள போது, இந்திய செக்யூலரிஸம், இஸ்லாமிய மதவெறியோடு சேர்ந்து கொண்டு, இந்துக்களை மட்டும் தாக்கியுள்ளது. ஆகையால், செக்யூலரிஸ உணர்ச்சியாளர்கள் சொரிந்து விட்டுக் கொண்டு, அடங்கி கிடக்கின்றனர் போலும். ஆனால், டிசம்பர் 28-31 2016 தேதிகளில், திருவனந்தபுரத்தில், இந்திய சரித்திர காங்கிரஸ் மாநாட்டில் செக்யூகரிஸம் பற்றி அதிகமாகவே பேசப்பட்டது, ஆனால், துலாகர் கலவரங்கள் பற்றிப் பேசப்படாதது, அவர்களது மறைக்கும் போக்கையே காட்டுகிறது. மெத்தப் படித்த ரோமில தாபர் போன்றோருக்கு, அதெல்லாம் தெரியாதா என்ன? சரி, கம்யூனிஸ முதலமைச்சர், இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு, தங்களது எதிரியான, மம்தா பானெர்ஜியை சாடியிருக்கலாமே? ஆனால், செய்யவில்லை. அங்கிருப்பவர்களின் தாக்குதல்களுக்கு உட்பட்டது “சங்கப் பரிவார்” தான்! மால்டாவில் தீர்மானங்கள் நிறைவேற்றியது போல, மிக்க செக்யூலரிஸத்துடன், துலாகர் கலவரங்களைக் கண்டித்து எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை. அதாவது, இந்துக்கள் எனும்போது, கம்யூனிஸ்ட்டுகளும், காங்கிரஸ்காரர்களும் ஒன்றாக சேர்ந்து கொள்கின்றனர். அதுதான் திருவனந்தபுரத்தில் வெளிப்பட்டது.
மால்டாவில்இந்தியசரித்திரகாங்கிரஸ்மாநாடுநடந்தபிறகுகலவரம்ஏற்பட்டது, அதேபோலகேரளாவில்நடக்குமா?: சென்ற மால்டா இந்திய சரித்திர காங்கிரஸ் மாநாட்டிற்கும், மால்டா கலவரங்களுக்கும் இருக்கக் கூடிய சம்பந்தங்களை எனது கட்டுரைகளில் எடுத்துக் காட்டியுள்ளேன்[7]. ஆனால், இப்பொழுது, மாநாட்டிற்கு முன்னமே, இக்கலவரங்கள் நடந்துள்ளன. அப்பொழுது வேண்டுமென்றே, “ராமஜன்ம பூமி” பிரச்சினையை வைத்து, உள்ள சரித்திய கட்டிடங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றெல்லாம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன[8]. நீதிமன்றத்தில் சாட்சியாக ஆஜராகி பொய் சொல்லி மாட்டிக் கொண்ட விசயங்களை மறைத்து[9], அவ்வாறு செய்தனர். முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கிய, ஏன், நீதிமன்றத்தில் சாட்சிகளாககைருந்தவர்கள் தாம் செக்யூலரிஸம் பேசுகின்றனர்[10]. இம்முறை மாநாடு கேரளாவில் நடந்து முடிந்துள்ளதால், இனி கேரளாவில் ஏதாவது நடக்கும் என்று பார்க்க வேண்டும்.
“தலாக், தலாக், தலாக்” விசயத்தில்வழக்கு: கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என்று எந்த ஒரு வழிபாட்டு தலமாக இருந்தாலும், அவை வழிபாட்டை தவிர வேறு ஏதாவது செயல்களில் ஈடுபட்டால், குறிப்பாக நீதிமன்றம் போல் செயல்பட்டால், அதுகுறித்து நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமையாகும் என்று சென்னை ஐகோர்ட்டு 20-12-2016 திஙட்கிழமை அன்று உத்தரவிட்டுள்ளது, என்று தமிழ் ஊடகங்கள் செய்தியை வெளியிட்டாலும், சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் ஷரீயத் கோர்ட்டுகளை [ illegal ‘sharia courts’ functioning from various mosques across Tamil Nadu], சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து, தீர்ப்பு வழங்கியது என்று ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன[1]. தினகரன் மட்டும் தான் “ஷரியத்கவுன்சில்கட்டப்பஞ்சாயத்துசெய்தால்போலீஸ்தடுக்கவேண்டும் : நீதிமன்றம்உத்தரவு” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[2]. மேலும் நான்கு வாரங்களில் செயபடுத்திய விவரங்களை தாக்கல் செய்யுமாறு ஆணையிட்டது[3]. ஷரீயத் போல, மத சட்டங்களின் அடிப்படையில், நீதிமன்றம் போன்று கோவில்களில் யாரும் கட்டப்பஞ்சாயத்து செய்வதில்லை. இருப்பினும் செக்யூலரிஸ முறையில் நீதிபதிகள் அவ்வாறு சொல்லியிருப்பது தெரிகிறது.
முகமதியபெண்களும்மாறிவருவதுதெரிகிறது: சமீப காலத்தில் முஸ்லிம் பெண்கள் “தலாக், தலாக், தலாக்” என்று மூன்று முறை வாயால் கூறி, விவாகரத்து செய்யும் முறையை எதிர்த்து வருகின்றனர். ஏனெனில், பெரும்பாலும், முகமதிய ஆண்கள் இந்த நவீன காலத்தில், போன், செல்போன், ஈ-மெயில் போன்ற முறைகளிலும் அத்தகைய “தலாக்” செய்து வருகின்றனர். காரணம் இல்லாமல், பல பெண்களுடன் வாழ வேண்டும் போன்ற நோக்கில் செயல்படும் ஆண்களும் இருக்கிறார்கள். அதற்காக இந்துக்களில் சிலர் மதம் மாறியுள்ளார்கள். ராஜிவ் காந்தி ஆட்சியில், “ஷாபானு” வழக்கில் மெத்தனமாக இருந்ததால், இப்பிரச்சினை பெரிதாகியுள்ளது. இஸ்லாமிய நாடுகளிலேயே இல்லாத வழக்கத்தை, செக்யூலரிஸப் போர்வையில் இந்தியாவில் இத்தகைய இடைக்கால, ஒவ்வாத பழக்க-வழக்கங்களை இந்தியாவில் ஏற்றுக் கொண்டுள்ளதை, முகமதிய பெண்களே சமீபகாலத்தில் எடுத்துக் காட்டி, எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். பலதார முறை இருந்தாலும், பெரும்பாலான முகமதிய பெண்கள், ஒரு ஆண் – ஒரு பெண் என்ற நியதியை விரும்புகிறார்கள். படித்தவர்கள் அவ்வாறே கடைப்பிடிக்கிறார்கள். இருப்பினும் அடிப்படைவாதிகள் மதவாத அச்சுருத்தல்களுடன், சமூகத்தை மிரட்டி வருகிறார்கள்.
சென்னைஅண்ணாசாலையில்உள்ளமக்காமஸ்ஜித்ஷரியத்அத்கவுன்சிலைஎதிர்த்துவழக்கு: சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் அப்துர் ரஹ்மான். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது[4]: “நான்வெளிநாட்டில்என்ஜினீயராகபணியாற்றினேன். என்னுடையமனைவிஎன்னைவிட்டுப்பிரிந்துவாழ்ந்தார். அவரைசேர்த்துவைக்கும்படிசென்னைஅண்ணாசாலையில்உள்ளமக்காமஸ்ஜித்ஷரியத்அத்கவுன்சிலில் [Makka Masjid Shariat Council] முறையிட்டேன். ஆனால், அவர்கள்என்னைமிரட்டிஎனதுமனைவியைவிவகாரத்துசெய்துவிட்டதாகஎன்னிடம்கையெழுத்துவாங்கிகொண்டு, என்னைஅனுப்பிவிட்டனர். என்னைப்போலபலர்இதுபோலபாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்தமிழகத்தில்பலஇடங்களில்சட்டத்திற்குவிரோதமாகஷரியத்நீதிமன்றம்என்றபெயரில்முஸ்லிம்ஜமாஅத்களில்குடும்பபிரச்சினைகளைவிசாரிக்கின்றனர். இவ்வாறுஜமாஅத்களில்நீதிமன்றம்நடத்துவதற்குசட்டப்படியானஅங்கீகாரம்உள்ளதுஎன்றும், முஸ்லிம்மக்கள்தங்களதுபிரச்சினைகளைதங்களதுஷரியத்நீதிமன்றத்தில்தாக்கல்செய்துநிவாரணம்பெறலாம்எனவும்ஜமாத்தார்கள்கூறிவருகின்றனர்.” சென்னை அண்ணா சாலையில் அத்தகைய ஷரீயத் கோர்ட் இருப்பதே யாருக்கும் தெரியாது எனலாம். ஹெரிந்திருந்தாலும், முகமதியர் விவகாரங்கள் என்று கண்டு கொள்ளாமலும் இருந்திருக்கலாம்.
ஜமாஅத்களில்தம்பதிகளுக்குவிவாகரத்துகள்மனம்போனபோக்கில்ஒருதலைபட்சமாகவழங்கப்படுவதால்பெண்களுக்குபாதிப்பு: அப்துர் ரஹ்மான் மேலும் கூறியிருப்பது[5], “இந்தஜமாஅத்களில்தம்பதிகளுக்குவிவாகரத்துகள்மனம்போனபோக்கில்ஒருதலைபட்சமாகவழங்கப்படுகின்றன. சொத்துப்பிரச்சினைகளிலும்இவர்கள்தான்தீர்ப்புவழங்குகின்றனர். இதனால்தமிழகம்முழுவதும்நூற்றுக்கணக்கானஅப்பாவிமுஸ்லிம்பெண்கள்பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானபெண்கள்தங்களின்வறுமைகாரணமாகஇந்ததீர்ப்புகளைஎதிர்த்துநீதிமன்றங்களைநாடுவதில்லை. ஆகவேஜமாஅத்களில்இதுபோன்றகட்டபஞ்சாயத்துநீதிமன்றங்கள்செயல்படுவதைதடைசெய்யவேண்டும்,” இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது[6]. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது. முதன்முதலாக இப்பிரச்சினை கோர்ட்டுக்குச் சென்று, இவ்வாறு வெளி வந்திருப்பது தெரிகிறது. பொதுவாக முகமதியர், இத்தகைய விவகாரங்களை, வெளியே வராமல் அமுக்கி விடுவார்கள். ஜமாத்தை மீறி செயல்படுவதை ஒதுக்கி வைப்பது, மிரட்டுவது, தீர்த்துக் கட்டுவது போன்ற நிலைகளும் உள்ளன.
விவாகரத்துசெய்ததம்பதியரிடம்கருத்துவேறுபாடு: இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் கமிஷனர் சார்பில் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பி.பெருமாள் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது[7]: “மனுதாரருக்கும், அவரதுமனைவிக்கும்கடந்த 2012–ம்ஆண்டுதிருமணம்நடந்தது. இவர்களுக்கு 2013–ம்ஆண்டுஒருஆண்குழந்தைபிறந்தது. பின்னர்அவர்களுக்குள்கருத்துவேறுபாடுஏற்பட்டுள்ளது. இதையடுத்துமனுதாரர்அண்ணாசாலையில்உள்ளமக்காமஸ்ஜித்ஷரியத்அத்கவுன்சிலில்புகார்செய்துள்ளார். அந்தகவுன்சிலின்பொதுச்செயலாளர், இருவரையும்சேர்ந்துவாழும்படிஅறிவுரைகூறியுள்ளார். இதற்காகஇருவருக்கும்கவுன்சிலிங்கும்நடந்துள்ளது.”
[4] தினத்தந்தி, கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில்வழிபாட்டைதவிரவேறுசெயல்களில்ஈடுபட்டால்நடவடிக்கைஎடுப்பதுஅதிகாரிகளின்கடமை; ஐகோர்ட்டுஉத்தரவு, பதிவு செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 20,2016, 7:28 PM IST; மாற்றம் செய்த நாள்: புதன், டிசம்பர் 21,2016, 1:15 AM IST.
[5] தினமணி, வழிபாட்டுத்தலங்களில்பிரார்த்தனைதவிர்த்துவேறுநடவடிக்கைகளில்ஈடுபடக்கூடாது, Published on : 20th December 2016 03:58 AM
[8] தமிழ்.இந்து, மதவழிபாட்டுத்தலங்களில்சட்டவிரோதநீதிமன்றம்செயல்படுவதைஏற்கமுடியாது: போலீஸார்நடவடிக்கைஎடுக்கநீதிபதிகள்உத்தரவு, Published: December 20, 2016 08:17 ISTUpdated: December 20, 2016 08:18 IST
தேசிய புலனாய்வு துறை படிப்படியாக ஆதாரங்களைக் கொண்டு ஜாகிர் நாயக்கின் நிறுவனங்களை சோதித்தது, ஆவணங்களைக் கைப்பற்றியது மற்றும் மீது வழக்கு தொடுத்தது.
ஒரேநேரத்தில் 12 இடங்களில்நடந்தசோதனைகள்: இதைத்தொடர்ந்து மும்பையில் அவரது தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான பைகுல்லா, டோங்கிரி, பைதோனி உட்பட [Byculla, the IRF’s offices in Dongri and Pydhonie] 10க்கும் மேற்பட்ட இடங்களில் சனிக்கிழமை 19-11-2016 அன்று தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்[1]. தவிர கேரளாவில் உள்ள சில அமைப்புகளிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. உள்ளூர் போலீசாரின் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த சோதனையில் குற்றத்தை நிரூபிக்க உதவும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது[2]. முன்னதாக ஜாகிர் நாயக்கின் ஆதரவாளர்கள் சிலரை தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்து இருந்தனர்[3]. இதனால் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் ஜாகிர் நாயக் நாடு திரும்பாமல் அங்கேயே தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது[4]. ஐ.ஆர்.எப், டாக்யார்ட் ரோடில் நடத்தி வரும் “அனைத்துலக இஸ்லாமிய பள்ள்ளி”யை [Islamic International School (IIS)] அரசே ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது[5]. மஹாராஷ்ட்ர மாநில்ல கல்வி மந்திரி, சட்டப்படி, இதற்கானவை செய்யப்படும் எட்ன்று அறிவித்தார்[6].
19-11-2016 அன்றுவெளியிட்டஎன்.ஐ.ஏ.வின்அறிக்கை: சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் வேலைகளை தடுக்கும் சட்டம் 1967ன் கீழுள்ள 3 (3) பிரிவின் கீழ் இந்திய அரசு ஆணை எண். Order F. No. 11034/17/2016-IS-VI & S.O.3460 (E) dated 17/11/2016 மூலம் ஐ.ஆர்.எப். பவுண்டேஷன், தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. அப்துல் கரீம் நாயக் என்பவரின் மகனான, ஜாகிர் நாயக் மேற்குறிப்பிடப்பட்ட இயக்கத்தின் தலைவராக இருந்து கொண்டு, முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் தீவிரவாதிகளைத் தூண்டி விட்டு, இந்தியாவில் உள்ள பலதரப்பட்ட மத நம்பிக்கையாளர்களிடம் வெறுப்பு, துவேசம் தூண்டும் வகையில், பல இடங்களில், பேசியும், சொற்பொழிவாற்றியும், தீவிரவாத செயல்களில் ஈடுபடும் படி செய்து வருவதாக ஆதாரப் பூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தகைய செயல்கள் இந்திய அரசுக்கு பிடிக்காமல் இருப்பதுடன், பொது அமைதிக்கு ஊறுவிளைவித்து, பலவித நம்பிக்கையாளர்களிடையே வெறுப்பை வளர்க்கும் விதாமக இருப்பதாக கருதுகிறது[7].
குற்றத்தின்தன்மைமற்றும்அதன்உலகளவில்உண்டாக்கும்விளைவுகளைகருதிஇந்தியஅரசுநடவடிக்கைஎடுத்துள்ளது: குற்றத்தின் தன்மை மற்றும் அதன் உலகளவில் உண்டாக்கும் விளைவுகளை கருதி, இந்திய அரசு அதனால் தான், உள்துறி அமைச்சகத்தின் ஆணை எண். Order F. No. 11034/17/2016-IS-VI & S.O.3460 (E) dated 17/11/2016 மூலம் ஐ.ஆர்.எப். பவுண்டேஷனை தடை செய்தது. அதன்படி தேசிய புலானாய்வு ஏஜென்சியை, இவ்வழக்கை எடுத்துக் கொண்டு நடத்துமாறு ஆணையிட்டது. அதன்படியே 18/11/2016 அன்று, FIR No. 05/2016 dated 18/11/2016 பதிவு செய்யப்பட்டு, பிரிவுகள் 153A of IPC மற்றும் பிரிவுகள் 10, 13 and 18 சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் வேலைகளை தடுக்கும் சட்டம் 1967ன் படி மும்பை போலீஸ் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது[8].
சோதனைகளில்தகவல்தொழிற்நுட்பவல்லுனர்களும்இந்தசோதனைகளில்பங்குகொண்டனர்: தேசிய புலானாய்வு ஏஜென்சி அதன்படியே இஸ்லாமிக் ரெசெர்ச் பவுண்டேசனின் 12 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனையிட்டு, சட்டமீறல்களை எடுத்துக் காட்டும் ஆவணங்கள், கோப்புகள், மின்னணு தகவல் சேமிக்கும் கருவிகள், ஜாகிர் நாயக் மற்றும் ஐ.ஆர்.எப்பின் சொத்துகள் முதலியவற்றைப் பற்றிய விவரங்கள் முதலியனவும் கைப்பற்றப்பட்டன. தகவல் தொழிற்நுட்ப வல்லுனர்களும் இந்த சோதனைகளில் பங்கு கொண்டனர். சோதனை நடந்து கொண்டிருக்கின்றன[9].
சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமானால், ஜாகிர் நாயக் இந்தியாவுக்கு வரவேண்டும் அல்லது கொண்டுவரப்பட வேண்டும்: ஜாகிர் நாயக் இந்த நடவடிக்கைகளை அறிந்திருப்பார். இனி, ஒன்று சட்டப்படி அணுக வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்தியாவும், ஜாகிர் நாயக் தங்கியுள்ள நாட்டை அறிந்ததும், முறைப்படி அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த, உரியன செய்யப்படும். அவ்வாறு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டால், கைது செய்யப் பட்டு, நடவடிக்கைகள் தொடரப்படும். இந்திய சட்டங்களை மீறியுள்ள நிலையில், ஜாகிர் நாயக் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டால் தான், சட்டப்படி நடவடிக்கை எடுக்க் முடியும். இல்லையென்றால், தாவூத் இப்ராஹிம், ஹாவிஸ் சையது வழக்குகள் மாதிரி ஆகி விடும். ஏனெனில், அவர்கள் அயல்நாடுகளில் இருக்கும் வரை, இந்தியா ஒன்று செய்ய முடியாது. ஒத்துழைக்கிறேன் என்று சொன்னதால், முறை அவ்வாறு இருக்கும், இல்லையென்றால், இந்திய அரசாங்கம் வேறு வழிகளை ஆராய வேண்டியிருக்கும்.
இந்தியா பொருளாதார வீழ்ச்சி, நிதிப்பிரச்சினைகள் முதலிய நிலைகளிலிருந்து மீள வேண்டுமானால், தீவிரவாதத்தை, இரும்புக்கரம் கொண்டு அடக்கத்தான் வேண்டியுள்ளது: ஐரோப்பிய யூனியன் நாடுகள், அமெரிக்கா என்று எல்லா நாடுகளும், இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளன. அமெரிக்காவில், தலைமை மாறியுள்ளதால், உலக நாடுகள், எந்த வழியிலும், தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப் படக் கூடாது என்று கண்காணித்து வருகிறது. அந்நிலையில், இந்தியா இன்னும் மென்மையான தாக்குதலுக்கு உட்பட ஏதுவாக இருக்கிறது என்பதை அனைவரும் அறிந்துள்ளனர். அதனால், இந்தியா மூலமாகவும் தீவிரவாதிகள் செயல்படக்கூடாது என்று உறுதியாக இருக்கின்றன. ஆனால், அதே நேரத்தில், இந்தியாவிலிருந்து வரும் முஸ்லிம்கள் தான் தீவிரவாதிகளாக மாறி குறிகளைத் தாக்கி வருகிறார்கள் என்று தொடர்ந்து அறியப்பட்டால், தீவிரவாதம் வளர்க்கும் நாடுகளில் இந்தியாவும் சேர்க்கப் படும். அந்நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் அதிக அளவுக்கு பாதிக்கப் படும். அத்தகைய நிலை உண்டாக்க வேண்டும் என்றுதான், தீவிரவாத அமைப்புகள் கங்கனம் கட்டிக் கொண்டு பலவழிகளில் செயல் பட்டு வருகின்றன. ஆகவே, இந்தியா, இத்தகைய இக்கட்டான நிலைகளிலிருந்து மீள வேண்டுமானால், தீவிரவாதத்தை, இரும்புக்கரம் கொண்டு அடக்கத்தான் வேண்டியுள்ளது.
[7] The Government of India, Ministry of Home Affairs vide its Order F. No. 11034/17/2016-IS-VI & S.O.3460 (E) dated 17/11/2016 has declared the Islamic Research Foundation (IRF) as an unlawful association under sub-section (3) of Section 3 of the Unlawful Activities (Prevention) Act, 1967. Credible information has revealed that Dr. Zakir Abdul Karim Naik, S/o Abdul Karim Naik, the President of IRF and his associates have been promoting enmity and hatred between different religious groups in India through his public speeches and lectures on various platforms, and inciting Muslim youths and terrorists in India and abroad to commit unlawful activities and terrorist acts. These activities of Dr. Zakir Abdul Karim Naik and his associates are causing disaffection against the Govt. and are prejudicial to the maintenance of harmony among various communities and likely to disturb the public tranquillity.
[8] 2. Considering the gravity of the offence and its international ramification, MHA vide its order No. 11011/34/2016-IS-IV dated 18/11/2016 directed the National Investigation Agency, to register a suo motu case and investigate the matter. Accordingly, on 18/11/2016, a case vide FIR No. 05/2016 dated 18/11/2016 under section 153A of IPC and sections 10, 13 and 18 of Unlawful Activities (Prevention) Act, 1967 has been registered at Police Station, NIA, Mumbai Branch.
[9] 3. Subsequently, on 19/11/2016, 09 NIA teams conducted raid and search operation at 12 premises connected to Islamic Research Foundation (IRF) in Mumbai simultaneously and seized incriminating documents / files, electronic storage devices and about Rs.12 lakh in cash. The recovered documents relate to various activities including financial transactions and property details of Zakir Naik and IRF. To assist the search teams, a team of IT experts has been sent from NIA HQ Delhi to Mumbai. The searches are still going-on and are likely to continue till late in the night.
பங்களாதேசதீவிரவாதகொலைகள்மூலம்ஜாகிர்நாயக்கின்ஜிஹாதிதூண்டுதல்பிரச்சாரம்வெளிப்பட்டது: ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் தீவிரவாத தாக்குதலுக்கு வங்காளதேச முஸ்லிம்கள் தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி 2016 பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான ரோஹன் இம்தியாஸ், முகநூலில் வெளியிட்ட பதிவில் ஜாகிர் நாயக்கின் உரை தனக்கு ஊக்கமளித்ததாக தெரிவித்திருந்தார்[1]. இதையடுத்து, நாட்டை விட்டு வெளியேறிய ஜாகிர் நாயக், அதன்பிறகு மீண்டும் திரும்பி வரவில்லை. வெளிநாட்டிலேயே தங்கிவிட்டார்[2]. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டுக் கொண்டது. வங்கதேசத்தில் ஒளிபரப்பாகும் அவருக்குச் சொந்தமான “பீஸ் டிவி’க்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. ஜாகீர் நாயக்கின் மதபோதனைகள் பிரிவினையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் நுழைய அவருக்கு அந்நாட்டு அரசுகள் ஏற்கெனவே தடை விதித்துள்ளன. மலேசிய அரசும் அவரது பிரசாரத்துக்குத் தடை விதித்தது.
உள்நாட்டுஜிஹாதிகளைஊக்குவித்துதீவிரவாதத்தைவளர்க்கிறதுஎன்பதும்தெரியவந்தது: மும்பை, ஹைதராபாத், கேரளா, சென்னை / தமிழகம், போன்ற இடங்களில் கைதான முஸ்லிம் இளைஞர்களின் தீவிரவாத – ஐசிஸ் தொடர்புகளும் ஜாகிர் நாயக்கின் தீவிரவாத ஊக்குதல் எடுத்துக் காட்டியது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஆதரிக்கிறேன் என்ற போர்வையில், தீவிரவாத-பயங்கரவாதத்தையே நாயக் தூண்டி விட்டுள்ளது உறுதியானது. இதனால், ஜாகீர் நாயக் “இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன்” (ஐஆர்எப்) [Islamic Research Foundation (IRF)] கல்வி அறக்கட்டளை, ‘பீஸ் டிவி’ [Peace TV] ஆகியவற்றை நிறுவி, தீவிரவாதத்தை தூண்டும் வகையில் மதப் பிரச்சாரம் செய்து வருவதாகவும், பிற மதங்களை இழிவுப் படுத்தி, முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளாக மாற வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருவதாக ஜாகீர் நாயக் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகள் எழுந்தது[3].
மாநிலமத்தியஅரசுகள்நடவடிக்கைஎடுத்தது: மஹாராஷ்ட்ரா அரசு முஸ்லிம் இளைஞர்களை மதவாதிகளாக்கி, தீவிரவாதத்தில் ஈடுபடுத்துகிறார் என்று வழக்குகள் பதிவு செய்துள்ளது[4]. மும்பை சிறப்புப் பிரிவு [Special Branch (SB) போலீஸார், Mumbai police] மற்றும் பொருளாதார குற்றப் பிரிவு [Economic Offences Wing (EOW)] முதலிய அதிகாரிகள், மேற்குறிப்பிடப்பட்ட அலுவலங்களில் சோதனையிட்டு, குற்றஞ்சாட்டப்படக் கூடிய வகையில் உள்ள ஆவணங்களைக் கைப்பற்றினர்[5]. அயல்நாட்டு பணம் வரவு கட்டுப்பாடு சட்டத்தின் பிரிவுகளை [Foreign Contribution (Regulation) Act (FCRA)] மீறி பணம் பெறப்பட்டதும் தெரிந்தது. அதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது[6]. விசாரணையில் வெளிநாட்டு அன்பளிப்பு கட்டுப்பாடுகள் சட்டத்தை (எப்சிஆர்ஏ) ஐஆர்எப் கல்வி அறக்கட்டளை மீறி செயல்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது[7]. இந்திய ரிசர்வ் வங்கியின் [RBI] முன்னனுமதி இல்லாமல் பணம் பெற்றதும் உறுதி செய்யப்பட்டது[8]. அந்த அமைப்புக்கு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் நிதி வருவது ஆதாரப்பூர்வ தெரியவந்தது. மேலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக, உளவுத் துறை அளித்துள்ள பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் ஜாகீர் நாயக் நடத்தும் என்ஜீஓ நிறுவனம் சட்டத்திற்கு புறம்பான நிறுவனம் என அடையாளப்படுத்தப்படுவதாக உறுதியானது.
எல்லாவற்றையும்ஆராய்ந்துமத்தியஅரசுதடைசெய்யதீர்மானித்தது: இந்நிலையில், சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்புக்கு மத்திய அரசு [Unlawful Activities Prevention Act (UAPA)] கீழ் ஐந்து வருடங்கள் தடை விதித்துள்ளது[9]. மேலே கூறப்பட்டுள்ள விவகாரங்களை முறைப்படி ஆய்ந்து, ஆவணங்கள் முதலியவற்றை சர்பார்த்து சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதை உறுதி செய்து, அதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 15-11-2016 அன்று நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது[10]. இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிராக அவரின் பேச்சுக்கள் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாகிர் நாயக் மேல் முறையீடு செய்யலாம் என்று “தி இந்து” ஆலோசனை செய்தி வெளியிட்டுள்ளது: ஐ.ஆர்.எப்பை தடை செய்ய பாராளுமன்ற அனுமதி தேவைப்படுகிறது, அதற்குப் பிறகு அரசு கெஜட்டில் முறைப்படி “தடை செய்யப்பட்ட இயக்கம்” என்று அறிவிக்கப் படும்[11]. இதை எதிர்த்து டிரிப்யூனல் [Tribunal] மூலம் மேல்முறையீடு செய்யலாம்[12] என்றெல்லாம் “தி இந்து” விவரிக்கிறது. அதாவது, நடந்துள்ள தீவிரவாத, பயங்கரவாத, ஜிஹாதி குண்டுவெடுப்புகள், குரூர கொலைகள் முதலியவற்றைக் கண்டு கொள்ளாமல், உயிரிழந்த அப்பாவி மக்கள், அவர்களின் மனைவி-மக்கள், உறவினர்கள் முதலியோரின் உரிமைகளைப் பற்றிக் கவலைப் படாமல், ஜாகிர் நாயக் சட்டப்படி எப்படி தப்பித்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை சொல்லும் ரீதியில் செய்திகளை வெளியிடுவது திகைப்பாக இருக்கிறது. அரசுக்கு இதெல்லாம் தெரியாமலா நடவடிக்கை எடுத்துள்ளது? இத்தகைய செய்திகளும் தீவிரவாதத்தை மறைமுகமாக ஆதரிப்பதாக உள்ளது.
ஊடகங்கள் தீவிரவாத, பயங்கரவாத, ஜிஹாதிகுண்டுவெடுப்புகள், குரூரகொலைகள்தடுக்கப்படவேண்டும், முஸ்லிம்இளைஞர்கள்நல்லவழியில்செல்லவேண்டும் என்று ஏல் ஆலோசனை சொல்லக் கூடாது?: அதற்கு பதிலாக, சட்டப்படி, நடவடிக்கை எப்படி எடுக்கப்பட வேண்டும், இத்தகைய தீவிரவாத, பயங்கரவாத, ஜிஹாதி குண்டுவெடுப்புகள், குரூர கொலைகள் தடுக்கப்பட வேண்டும், முஸ்லிம் இளைஞர்கள் நல்லவழியில் செல்ல வேண்டும் என்றெல்லாம் ஆல்லோசனை கூறி, செய்திகளை வெளியிடலாமே? அவ்வாறு வெளியிட நிருபர்களுக்கு தெரியவில்லையா அல்லது “தி இந்து” அவ்வாறெல்லாம், நாட்டுக்கு, இளைஞர்களுக்கு நல்லது செய்யும் விசயங்களை வெளியிட வேண்டாம் என்று ஆணையிட்டுள்ளதா? கனடா, இங்கிலாந்து, மலேசியா போன்ற நாடுகளிலும், மேல்முறையீடு செய்யலாம் என்று ஆலோசனை சொல்லலாமே? அந்த நாடுகளில் உள்ள சட்ட நிபுணர்களையெல்லாம் விட, “தி இந்து” நிருபர்கள் பெரிய சட்ட ஆலோசகர்கள் ஆகி விட்டார்கள் போலும். விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பிரச்சாரம் செய்வதை விடுத்து, இவ்வாறு சித்தாந்த ரீதியில் வேலை செய்வது தான். “தி இந்துவின்” முகமூடியை அவ்வப்போது, திறந்து காட்ட வைக்கிறது.
[11] The Hindu, Centre bans Zakir Naik’s NGO, calls it ‘unlawful’, New Delih, November 15, 2016
[12] Banning any organisation under the Unlawful Activities Prevention Act (UAPA) requires an approval by the Cabinet, and a Gazette notification will follow soon. A Tribunal will be set up where Dr. Naik could challenge the ban on his NGO.
ஊடகக்காரர்களின்பொறுப்புமுதலியனவெல்லாம்கூடதீவிரவாதிகளின்உரிமைகளைத்தான்ஆதரிக்கின்றன: இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில போலீஸ் ஐ.ஜி. யோகேஷ் சவுத்ரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சுட்டுக்கொல்லப்பட்ட 8 பயங்கராவதிகளிடமிருந்து துப்பாக்கிகள், மூன்று கூர்மையான கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்றார்[1]. பயங்கரவாதிகள் எந்தஒரு ஆயுதமும் வைத்திருக்கவில்லை என்று வெளியான தகவல்கள் வெளியாகியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஜெயில் காவலர் கொல்லப்பட்டது கூட அவருக்குத் தெரியவில்லை / கவலையில்லை, ஆனால், இதுபோல கேள்வி கேட்க தயாராக உள்ளார். யோகேஷ் சவுதாரி, “இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது,” என்றார். இதற்கிடையே என்கவுண்டர் நடத்தப்பட்ட வீடியோ என ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அப்படியென்றால், இவற்றையெல்லாம் யாரோ கவனித்துக் கொண்டிருக்கின்றனர் என்றாகிறது. அந்த அளவுக்கு யார் கவனிப்பது, வீடியோ எடுத்தது, தங்களது அடையாளங்களை மறைப்பது – இவற்றைச் செய்வது யார்?
என்கவுன்டர்குறித்துமுழுமையானவிசாரணைநடத்தப்படும் – ஐ.ஜி. யோகேஷ்சவுத்ரி: என்கவுட்னர் வீடியோக்கள் குறித்தளவை உண்மையா-இல்லையா என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்[2]. இந்த என்கவுன்டரில் 3 போலீசார் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக அவர்களை உயிருடன் பிடிக்க முயன்ற போலீசாரை பயங்கரவாதிகள் தான் துப்பாக்கியால் சுட்டனர். இதில் நடந்த என்கவுன்டரில் 8 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இல்லை அவர்களே தங்களை சுட்டுக் கொண்டனர் என்று கூட ஊடகக்காரர்கள் வாதிப்பார்கள் போலும். இது திட்டமிட்டு நடத்தப்படவில்லை. அந்த இடத்தில் நடந்த சூழ்நிலையை பொறுத்து எடுக்கப்பட்ட முடிவு. இருப்பினும் என்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். என்றார். இந்த சிமி பயங்கரவாதிகள் தொடர்ச்சியான குற்றங்களில் ஈடுபட்டு உள்ளனர், அவர்கள் 2008, 2011-ல் போலீஸ் கான்ஸ்டபிளை கொலை செய்து உள்ளனர்[3]. பயங்கரவாதிகள் எப்படி சிறையில் இருந்து தப்பினர்கள், தப்பிய பின்னர் அவர்கள் எங்கு சென்றனர் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் குறிப்பிட்டு உள்ளார்[4].
என்கவுன்டர்வீடியோவெளிவ்ந்ததுஎப்படி? யார்எடுத்தது?: என்கவுன்டர் வீடியோ பற்றி தான் இப்பொழுது ஊடக ஆராய்ச்சி அதிகமாகியுள்ளது[5]. திங்கட்கிழமை காலை 10.30 – 11.30 இடையில் இந்த சிமி-தீவிரவாதிகள் மற்றும் போலீஸார் மோதல் நடந்துள்ளது[6]. போலீஸார் எடுத்துள்ள வீடியோ தவிர மற்றவர்களும் வீடியோ எடுத்துள்ளதாக தெரிகிறது.
Ø அப்படியென்றால், யார் எடுத்தது?
Ø தீவிரவாதிகள் அங்குதான் இருக்கின்றனர் அல்லது போலீஸார் அங்கு வருவார்கள், இவ்வாறேல்லாம் நடக்கும், அப்பொழுது வீடியோ எடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு எப்படி தெரியும்?
Ø அப்படியென்றால், “என்கவுன்டர்” பெயரில், இவர்களை சிறையிலிருந்து வெளியேற்றி, போலீஸாரை வைத்தே தீர்த்துக் கட்ட திட்டம் போட்ரது யார்?
Ø அது யார் சார்பாக எடுக்கப்பட்டது?
Ø போலீஸாருக்குத் தெரிந்து அல்லது தெரியாமல் எடுக்கப்பட்டதா?
Ø அது ஊடகங்களுக்கு எப்படி கிடைத்தது?
ஊடகங்கள் எப்படி அவற்றை ஒலி-ஒளிபரப்பி விவதாங்களை உடனடியாக ஆரம்பி வைக்கலாம். உடனே தீவிரவாதிகளின் வழக்கறிஞர் அப்பிரச்சினையை எடுத்துக் கொண்டு அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கலாம்?
ஸ்டில்டம்பளர், தட்டுகத்தியாகமாறியது, தலைமைகான்ஸ்டெபிள்கொல்லப்பட்டதுஎப்படி?: சிறையில் சிமி கைதிகளுக்குக் கொடுக்கப் பட்ட ஸ்டீல் டம்பளர், தட்டு முதலியன கூர்மையாக கத்திகளாக மாறியது எப்படி என்பதை யாரும் விள்ளக்குவதாக இல்லை. சிமிக்காரர்கள் அத்தகைய தொழிற்நுட்பங்களை சிறையிலேயே ஏற்படுத்டிக் கொண்டார்களா அல்லது வெள்ளியியிலிருந்து, அத்தகைய தொழிற்நுட்பங்கள் வரவழைக்கப்பட்டனவா என்றும் விவாதிக்கப்படவில்லை. சிறையிலேயே அவற்றை வளைத்து, வெட்டி, ராவி கூராக மாற்றியுள்ளனர் என்றால், எப்படி சாத்தியமாகும். பிறகு, சிறையிலேயே அவர்களுக்கு உதவ யாரோ இருக்கின்றனர் என்றாகிறது? அவர்கள் யார்? ராம்சங்கர் யாதவ் என்ற தலைமை கான்ஸ்டெபிள் தனது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்திருந்தார்[7]. டிசம்பர் 9, 2016 அன்று திருமணம் நடக்கும் என்றும் மிகவும் சந்தோசமாக இருந்தார், ஆனால், கொலைகாரர்கள் அவரைக் கொண்டு விட்டார்கள்[8]. இவரது உரிமைகள் பற்றி யார் பேசுவார்கள், விவாதம் நடத்துவார்கள்?
பொறுப்புள்ளமுஸ்லிம்கள்கேள்விகளைத்தவிர்ப்பது: குண்டுவெடிப்புகள் நடந்திருப்பது, கொள்ளைகள் நடந்தது, ஜெயிலிருந்து ஆயுதங்களுடன் தப்பியோடியது, போலீஸார் கொல்லப்பட்டது, சாதாரண அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது இவையெல்லாம் பொய்யா? இவர்களது உரிமைகளைப் பற்றி யாரும் பேசமாட்டார்களா? உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரது உரிமைகள் என்னாவது? ஐசிஸில் சேரத்துடிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளார்களே? அதேபோலத் தானே, இந்திய முஜாஹித்தீன் வேலை செய்து கொண்டு வருகிறது. பிறகு ஏன், எப்படி இந்திய முஸ்லிம்கள் அதனை ஆதரித்து வருகிறார்கள்? உள்ளூர் தீவிரவாதம் அதிகமாகி, பெருகிவருவது அவர்களுக்கு மகிழ்ச்சியாகவா இருக்கிறது? இன்னும் எத்தனை ஆண்டுகள் இத்தகைய குண்டுவெடுப்புகளை ஆதரித்துக் கொண்டிருப்பர்? தொடர்ந்து நடந்து வரும் இத்தகைய காரியங்களை ஏன் அவர்களது பெற்றோர்ருறவினர், மற்றோர் தடுப்பதில்லை? இவற்றையெல்லாம் விடுத்து, “சர்வதேச பயங்கரவாத அமைப்புகளால் கவரப்படாமல், இந்திய இளைஞர்கள் தங்களை தற்காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளில் சேரும் அளவுக்கு முஸ்லிம் இளைஞர்களுக்கு அரசின் பாதுகாப்புப் படைகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ” என்று வாதிடுவது, அத்தகையவரை ஊக்குவிப்பதாகத்தான் அமையுமே தவிர, அமைதியை உண்டாக்காது.
[1] தினமலர், என்கவுன்டர்குறித்துமுழுமையானவிசாரணை: ம.பி. ஐ.ஜி.பேட்டி, பதிவு செய்த நாள்: திங்கள், அக்டோபர் 31,2016, 19:43 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 20:36 PM IST.
[3] தினத்தந்தி, சிமிபயங்கரவாதிகள்கொல்லப்பட்டதுபோலிஎன்கவுண்டர்என்றவிமர்சனத்தைநிராகரித்ததுபோலீஸ் , பதிவு செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 9:05 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 9:05 PM IST.
[5] Indian Express, SIMI activists’ jailbreak: Video shows cop shooting at inmate on ground; in another, a talk of talks, Written by Milind Ghatwai | Bhopal | Updated: November 1, 2016 5:49 am
நவீனகாலத்தில் ஜிஹாதிகளின் வெடிகுண்டு தாக்குதல்: ஐதராபாத்தில் இந்துக்களைக் கேவலமாகப் பேசிய ஒவைஸியின் சகோதரர் கைதாகிய விஷயம் ஆறுவதற்குள்[1], இரண்டு குண்டுகள் வெடித்து 16 பேர்களை பலிகொண்டதுடன், 100ற்கும் மேற்பட்டவர்களை காயமடையச் செய்துள்ளது. வழக்கம் போல அதே மாதிரியான, சைக்கிள்-டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள், கோவிலைக் குறிபார்த்தது, தியேட்டர்களில் வெடித்துள்ளன. இந்திய முஜாஹித்தீன் கைவரிசை என்று விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிரிகாரிகள் கூறுகிறார்கள்[2]. இடைக்காலத்தில், ஜிஹாதிகள் குதிரைகளின் மீது கத்திகளோடு வந்து, இந்தியர்களைத் தாக்கிக் கொள்ளையிட்டு, தீவிரவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு வெடி மருந்து உபயோகப்படுத்தி, பீரங்கள் மூலம் கோட்டைகளைத் தாக்கி, கொன்று அட்டூழியம் செய்தனர். அப்பொழுது எந்த யுத்ததர்மத்தையும் கடைபிடிக்கவில்லை. இந்தியர்கள் காலையிலிருந்து மாலை வரைத்தான் சண்டையிடுவார்கள். பிறகு அமைதி காப்பார்கள், ஆனால், முகமதியர்களோ வஞ்சகமாக இரவு நேரங்களிலும் தாக்கினர். நவீன காலத்தில் துப்பாக்கி வந்ததும், அதனைப் பயன்படுத்தி எல்லைகளில் தாக்கி வந்தனர். இப்பொழுது ஏ.கே.47 மற்றும் வெடிகுண்டுகளை வைத்துத் தாக்கி வருகின்றனர்.
உபயோகமற்ற உள்துறை அமைச்சர்: எல்லாம் நடந்த பிறகு, ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு நடந்த இடங்களை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. முன்னமே விஷயம் தெரியுனம் என்று வேறு கூறுகிறார். பிறகு என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. இந்த இடங்களில் வெடித்தது சக்தி வாய்ந்த தாமதித்து வெடிக்கும் டைமர் குண்டுகள் என தெரியவந்துள்ளது[3]. இது குறித்து ஆந்திர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தில்சுக் நகரில் நேற்று அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுகள் வெடித்துச் சிதறின. உவசி மூன்று என்று இப்படித்தான் சொல்லி, பிறகு இரண்டு என்று மாற்றிக் கொண்டார். அங்குள்ள கொனார்க் தியேட்டர் அருகே 7.01 மணிக்கு முதல் குண்டு வெடித்தது. அடுத்த 5 நிமிடத்தில் கொனார்க் தியேட்டர் பின்புறம் உள்ள வெங்கடாத்ரி தியேட்டரில் 2வது குண்டு வெடித்தது. 15 நிமிட இடைவெளியில் அங்குள்ள ஒரு ஓட்டலில் 3வது குண்டு வெடித்தது. இதில் மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பலியானவர்களில் 5 பேர் மாணவர்கள். சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு தயார் செய்வதற்கு புத்தகங்கள் வாங்க வந்துள்ளனர்[4]. அப்போது குண்டு வெடிப்பில் சிக்கி பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான கடைகள் சேதமடைந்தன.
இந்திய முஜாஹித்தீன் கைவரிசை: பயங்கரவாதி கசாப்பிற்குப் பிறகு, நாடாளுமன்ற தாக்குதலில் முக்கிய குற்றவாளியான அப்சல் குரு, சமீபத்தில் தூக்கிலிடப்பட்டாரன். அதனால், இந்திய முஜாஹித்தீன் மும்ஐ, பெஙளூரு, கோயம்புத்தூர், ஐதராபாத் முதலிய இடங்களைத் தாக்குதல் நடத்தலாம் என்று ரகசிய விவரங்கள் வந்துள்ளனவாம். இப்பொழுதோ, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது வேடிக்கைதான்! சைக்கிளில் டிபன்பாக்ஸ் பேக்குகள் மூலம் மிக சக்திவாய்ந்த டைமர் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது முந்தைய வெடுகுண்டுகளைப் போல, உள்ளுக்குள் வெடித்து சிதறும் (Internall Explosive Devices) வகையைச் சேர்ந்தவை. வெடிகுண்டு சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை ஐதராபாத் வந்து, குண்டு வெடிப்பு நடந்த இடங்களை அவர் பார்வையிட்டார். அவருடன் கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி மற்றும் டிஜிபி தினேஷ் ரெட்டி ஆகியோரும் இருந்தனர்.
ஒத்திகைப் பார்த்ததும், கேமரா வயர்களை அறுத்ததும்: கடந்த அக்டோபரில் கைதான சயீத் மக்பூல் மற்றும் இம்ரான் கான், தாங்கள் ஜூலை 2012ல் திசுக் நகருக்கு வந்து இடங்களைப் பார்த்துவிட்டு சென்றதாக ஒப்புக்கொண்டுள்ளனர்[5]. ரியாஸ் பட்கல் என்ற இந்திய முஜாஹித்தீன் தலைவனின் ஆணைப்படி இவ்வாறு ஒத்திகைப் பார்த்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். நான்கு நாட்களுக்கு முன்னர் தான் அங்கிருந்த கேமராவின் வயர்கள் அறுக்கப்பட்டதாக கூறுகிறார்கள்[6]. இவ்விவரம் போலீசாருக்குத் தெரிந்தேயுள்ளது. அமெரிக்க நாளிதழே இதைப் பற்றி வெளியிடும் போது[7], உள்துறை அமைச்சருக்கு தெரியாமலா இடருக்கும்? “காவி தீவிரவாதம்” என்றெல்லாம் பேசும் ஷிண்டே இதைப் பற்றி தெரிந்தும் ஏன் மௌனியாக இருந்தார்? சிதம்பரம் பாதையில் சென்று கழுத்தை அறுக்கிறார் போலும்!
மூன்று நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது: மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியில் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகள் குறித்து ஷிண்டேவிடம் டிஜிபி விளக்கினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயரதிகாரிகளிடம் ஷிண்டே விசாரித்தார். பின்னர், குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை ஷிண்டே நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “ குண்டுவெடிப்புகுறித்துமாநிலஅரசுதுப்புதுலக்கதொடங்கியுள்ளது. ஏற்கனவேமூன்று நாட்களுக்குமுன்புமத்தியஉளவுத்துறைஎச்சரிக்கைகொடுத்ததுஉண்மைதான். ஆனால்எந்தஇடத்தில்இதுபோன்றசம்பவம்நடக்கும்என்றுசரியாககணிக்கமுடியவில்லை. இந்தசம்பவத்தைதொடர்ந்துஆந்திராமட்டுமின்றிநாடுமுழுவதும்முக்கியநகரங்களில்எச்சரிக்கைசெய்யப்பட்டுஉள்ளது. குண்டுவெடிப்பில்ஈடுபட்டதீவிரவாதஅமைப்புகுறித்துமுழுவிசாரணைநடத்திவருகிறோம்.” இவ்வாறு ஷிண்டே கூறினார்.
ஐதராபாத் சாய்பாபா கோயிலை குறிவைத்த குண்டுகள்: இதற்கிடையே, போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயில் அருகே தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்ய திட்டமிட்டு, பின்னர் இடத்தை மாற்றியது தெரியவந்துள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயிலில் குண்டு வைக்கத்தான் சதிகாரர்கள் முதலில் திட்டமிட்டுள்ளனர். நேற்று அங்கு நடந்த சிறப்பு பூஜையில் மாநகர போலீஸ் கமிஷனர் அமர்சிங் கலந்து கொண்டார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்ததால் மர்ம நபர்கள், தங்கள் திட்டத்தை கைவிட்டு, வேறு இடங்களில் குண்டு வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வியாழக்கிழமை என்பதால் சாய்பாபா கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு குண்டு வெடித்திருந்தால் ஏராளமான பக்தர்கள் உயிரிழந்திருக்கக் கூடும்.
இரண்டாவது முறையாக குண்டு வெடிப்பில் சிக்கியவர்: ஐதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி வாசலில் 2007ம் ஆண்டு குண்டு வெடித்தது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். மிர்சா அப்துல்வாசி என்ற கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார். அவரது கழுத்து, கால்கள் மற்றும் வயிறு பகுதியில் காயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்தார். கல்லூரி படிப்பை முடித்த மிர்சா, சரியான வேலை கிடைக்காததால் கடந்த மாதம் ஐதராபாத் தில்சுக் நகரில் கொனார்க் தியேட்டர் அருகே உள்ள கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். தில்சுக் நகரில் நேற்று நடந்த குண்டு வெடிப்பிலும் மிர்சா அப்துல்வாசி சிக்கினார். அவருக்கு முதுகு, இடதுபக்க விலா பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை யசோதா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்துல்வாசியின் தந்தை முகமது அசாமுதீனுக்கு தகவல் தரப்பட்டது. தனது மகன் 2வது முறையாக தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
[1] ஆந்திராவில் கடந்த 2005ம் வருடம் மேடக் மாவட்டத்தின் அப்போதைய கலெக்டரை தவறாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கின் முக்கிய குற்றவாளி ஆசாதுதீன் ஒவைசி இன்று மேடக் கோர்ட்டின் முன் ஆஜரானார். அவரது சகோதரர் அக்பருதீன் ஒவைசி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
[2] Sources claim that Indian Mujahideen founder Riyaz Bhatkal, who is holed up in Pakistan, masterminded the Hyderabad twin blasts and carried it out with the help of IM operative Yasin Bhatkal.
[3] Initial reports speculate use of ‘delayed timer’ for detonating the bombs used in the blasts. The ‘delayed timer’ provides ample time for the bomb-planter to escape after placing the bomb.
[5] Sayed Maqbool and Imran Khan, both of whom hail from Nanded district in Maharashtra, told police during interrogation after their arrest in October that they both did a recee of Dilsukhnagar, Begum Bazar and Abids in the Andhra Pradesh capital on a motorcycle in July 2012. “About a month before Ramzan in 2012, Maqbool helped Imran in doing a recce of Dilsukhnagar, Begum Bazar and Abids in Hyderabad on a motorcycle. This was done on the instruction of Riyaz Bhatkal,” the officials said.
[6] In Dilsukhnagar, police officers say the wires of a security camera near the site of yesterday’s blasts had been cut four days ago. Nobody tried to re-connect the camera, though traffic policemen were aware of the lapse.
பாகிஸ்தானிய நடிகை நிர்வாணமாக போஸ் கொடுத்தது எப்படி?
வீணா மாலிக் பாகிஸ்தானிய கவர்ச்சி நடிகை மற்றும் பல பிரச்சினைகளில் சிக்கியுள்ளவர்: பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு. அங்கு பெண்கள் பர்தாவில் இருக்க வேண்டும். இருப்பினும், மேனாட்டு நாகரிகம் பரவியுள்ளதால், படித்த பெண்கள் நாகரிகமாகவே இருக்கிறார்கள், உடையணிகிறார்கள். இருப்பினும், இஸ்லாமிய மதகுருமார்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறர்கள். வீணா மாலிக் ஒரு நாகரிகமான பாகிஸ்தானிய நடிகை. ராவல்பிண்டியில் 1978ல் ஒரு பாலிஸ்தானிய ராணுவ வீரருக்குப் பிறந்தவர். பள்ளியில் கூடைபந்து விளையாடி, பிறகு பி.ஏ வரைப் படித்துள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தான் சினிமாக்களில் நடித்துள்ள இவர், பிக்-பாஸ்-4 நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனார்[1]. அடிக்கடி நிர்வாண போஸ் கொடுப்பது, கிரிக்கெட் வீரர்களுடன் உல்லாசமாக இருப்பது முதலியவ அவருக்கு பொழுது போக்கு எனலாம்.
நிர்வாணத்திலும் போட்டா-போட்டி போடும் நடிகை: இந்தியாவில் ராக்கி சாவந்த் எனும் சர்ச்சைக்கு பெயர் பெற்ற நடிகைக்கு தானும் சளைத்தவர் இல்லை என்பது போல், அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வீணா மாலிக்குக்கு வழக்கம்தான்[2]. இந்தியாவில் கலர்ஸ் டிவி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு கலந்து கொண்டு அதன் மூலம் பெரும் பிரபலமானவர் வீணா மாலிக். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல ஆண் போட்டியாளர்களுடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்தி சலசலப்பையும் ஏற்படுத்தியவர் வீணா மாலிக்[3]. ஏற்கெனவே அதே எப்.எச்.எம் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் அதே மாதிரி நிர்வாணப்படம், தோளில் ஐ.எஸ்.ஐ முத்திரையுடன் வெளி வந்துள்ளது. இப்பொழுது இரண்டாவது முறை. வித்தியாசம், இது முழு நிர்வாணம், அவ்வளவு தான்! முன்பு முகமது ஆசிப்புடன் சுற்றி வந்தார்[4]. அட்டைபடத்தில் கிடைப்பது, இணைத்தளத்தில் கிடைப்பது அனைவருக்கும் சொந்தம் தான். ஆகவே,
நிர்வாணமாக போஸ் கொடுக்கிறார்கள் என்றால், பெண்கள் ஆகட்டும், நடிகைகள் ஆகட்டும், துணிந்து விட்டார்கள் என்பதுதான் உண்மை. அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. மனத்துணிவு மற்றும் ஏதாவது ஒரு விதத்தில் பணம், புகழ் கிடைக்கும் என்றால் அவ்வாறு வெய்கிறார்கள், வற்புறுத்தினாலும் செய்வதுண்டு.
இந்த போட்டோ டூவிட்டர் மற்றும் பேஷ்புக் இணைய தளங்களில் வெளியாகியுள்ளது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இதெல்லாம் பிரச்சார யுக்தியேயன்றி வேறெந்த சகசியமோ, வேடிக்கையோ விளையாட்டோ இல்லை. அவர் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை முத்திரையுடன் நிர்வாண போஸ் கொடுத்து இருப்பதால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[5]. இதற்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ஆனால், வழக்கம் போல நமது “தி ஹிந்து” இதற்கும் வக்காலத்து வாங்கிக் கொண்டு விளக்கம் அளித்துள்ளது.
உண்மைகளை மறைக்க, மக்களின் மனங்களைத் திசைத் திருப்ப பிரச்சார யுக்தி: “அவரது தோள்பட்டையில் கருப்பு நிறத்தில் ஐ.எஸ்.ஐ. என்று எழுத வைத்தது என்னுடைய ஐடியா தான். இது வெறும் ஜோக்குக்காக செய்யப்பட்டது. இந்தியாவில் நாங்கள் இவ்வாறு ஜோக் அடிப்பதுண்டு. ஏதாவது தவறாக ஆகிவிட்டால், அதற்கு காரணம் ஐ.எஸ்.ஐ. தான் பின்னணி என்போம்”, என்று FHM பத்திரிக்கை ஆசிரியர்
யுத்தத்தில் அல்லது இக்கால நிலவரப்படி சொல்வதானால், தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள நாடுகள் தங்களது அக்கிரமமான கொடூரங்களை மறைக்க பலவிதமான பிரச்சார யுக்திகளை கையாளுவதுண்டு. அதாவது, பரப்பரப்பான செய்தியை வெளியிட்டு பரப்பி, மக்களின் மனங்களை திசைத் திருப்பி விடுவர். வாயில் வெடிகுண்டு, தோள்பட்டையில் ஐ.எஸ்.ஐ என்பதெல்லாம் அதைத்தான் காட்டுகிறது.
கபீர் சர்மா விளக்கம் அளித்தார்[6]. இதற்கிடையே, அந்த பத்திரிகைக்கு நான் நிர்வாண போஸ் கொடுக்க வில்லை என நடிகை வீணாமாலிக் மறுப்பு தெரிவித்துள்ளார். நான் ஆடையுடன்தான் கவர்ச்சி போஸ் கொடுத்தேன். ஆனால் அது நிர்வாணமாக மார்பிங் செய்து மாற்றி அமைத்து வெளியிடப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் டி.வி.க்கு பேட்டி அளித்துள்ளார்[7]. மேலும், தனது கையில் ஐ.எஸ்.ஐ. என்ற, பாகிஸ்தான் உளவுத்துறையின் முத்திரையை ஒரு நகைச்சுவை கலந்த வேடிக்கைக்காகதான் பச்சை குத்தியிருந்தேன். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் வீணாமாலிக் கூறியிருப்பதை பத்திரிகை நிர்வாகம் மறுத்துள்ளது.
26/11 துயரத்தை, பயங்கரத்தை, குரூரத்தை பிளேஷ் டான்ஸினால் மறைக்க முடியுமா? 26/11 அன்று கொல்லப்பட்டவர்களின் ஆத்மா எப்படி சாந்தி அடையும்? அவர்களது உற்றார்-உறவினர்களது துயரத்தை எப்படி தீர்க்க முடியும்? அந்த பயங்கரத்தை, குரூரத்தை எப்படி தவிக்க அல்லது நீக்க முடியும்? இதெற்கெல்லாம் பதில் சொல்லாமல், தீர்வு காணாமல், வெட்கங்கெட்ட பெண்கள் / ஆண்கள் அதே சி.எஸ்.டி. ஸ்டேஷனில் நடனம் ஆடுகின்றனர். கேட்டால், “பிளேஷ் டான்ஸ்” என்ரு டிவி-ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. பிளேஸ் டான்ஸினால் தீவிரவாதத்தை மறைக்க முடியுமா? பிறகு காஷ்மீரத்தில் சென்ரு ஆடவேண்டியது தானே? ஆகவே, இது இந்தியர்களை ஏமாற்ற செய்யப்படும் ஒரு பிரச்சாரமே ஆகும்.
எப்படி நிர்வாண போட்டோ எடுக்கப்பட்டது: “நவம்பர் 23ம் தேதி வெர்சொவா அரம்நகரிலுள்ள ஸ்டூடியோவில் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. விஸால் சாக்ஸேனா என்ற புகைப்படக்காரர், மேக்கப்காரார், ஸ்டைல்-ஆலோசகர் மற்றும்
இப்படி பல ஆண்களுக்கு முன்னால் தைரியமாக நின்று போஸ் கொடுக்கிறார்கள் என்பதிலிருந்து, எல்லாவற்றையும் துறந்து விட்டனர் என்றே தெரிகிறது. பிறகு வெட்கப்படுவதிலேயோ, மறுப்பதிலேயே என்ன இருக்கிறது? அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு என்றெல்லாம் விவாதிக்கப் போகிறார்களா என்ன?
துணையாளிகள் என்று எட்டு பேர் அப்பொழுது இருந்தனர். அதைத்தவிர வெளியில் இருந்த பத்து பேர்களுக்கும், நாங்கள் அத்தகைய படத்தை எடுக்கப் போகிறோம் என்று நன்றாகத்தெரியும். மதியம் அந்த சூட்டிங் ஆரம்பித்தது, 6.30க்கு முடிந்தது, வீணா சென்று விட்டார். உண்மையில் நாங்கள் இரண்டு விதமான புகைப்படங்கள் எடுத்தோம். ஒன்று பத்திரிக்கையின் அட்டையில் பிரசுரிக்கப்பட்டது, மற்றொன்று ஒரு கையெரி குண்டை தனது பற்களில் கடித்துக் கொண்டு நிற்பது போன்ற போஸ். அது மிகவும் பிரச்சினைக்குள்ளாகும் என்று அதனை தவிர்த்து விட்டோம். இதற்காக வீணாவை நாங்கள் நேரிடையாகவே தொடர்பு கொண்டோம். அவரது ஆட்கள் மூலம் செல்லவில்லை. ஈ-மெயில் தொடர்பிலேயே ஒப்பந்தத்தை செய்து கொண்டோம்.
படத்தை பார்க்க ஆவலாக உள்ள நடிகை: நவம்பர் 29ம் தேதி அவர் அனுப்பியுள்ள ஈ-மெயிலில், “நவம்பர் 23ம் தேதி எடுத்த படங்களுக்காக நான் சந்தோஷமடைந்தேன். பத்திரிக்கையின் அட்டைப்படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன்”, என்று சொல்லியுள்ளார். கபீர் சர்மா அன்று நடந்த புகைப்படம் எடுக்கும் நிகழ்வை வீடியோவும் எடுத்துள்ளதாகவும், அது அத்தாட்சியாகவும் விளங்குகிறது என்கிறார்[8]. இதனால் விளம்பரம் அதிகம் கிடைக்கும் என்று இவ்வாறு வீணா மறுப்பதாக கூறப்படுகிறது. வீணா மாலிக்குடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி தான் அவரது நிர்வாணபடம் எடுத்து பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ. முத்திரை தெரியாத வகையில் மிகவும் மெல்லியதாக தான் வரைந்தோம். ஆனால் வீணாமாலிக்தான் அதை மிகவும் பெரிதாக வரையும்படி கேட்டுக் கொண்டார் என கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் எதிர்ப்பு, நடவடிக்கை: நடிகை வீணாமாலிக் நிர்வாண படம் குறித்து பாகிஸ்தானின் பழமைவாத மதகுரு மவுலானா அப்துல் குவாய் கூறும்போது,
இஸ்லாமில் இவையெல்லாம் அனுமதிப்பதில்லை என்றால், எதற்காக முஸ்லீம்கள் அதிகமாக “புரொனோகிராபி’ இணைதளங்களை அதிகமாகப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. எப்பொழுது சர்வே எடுத்தாலும், அதிகமாக கிளிக் செய்பவர்கள் அவர்கள் தாம் என்று தெரிகிறது.
வீணாமாலிக்கின் செயல் அனைத்து முஸ்லிம்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார். ஆனால் அதற்கு அந்நாட்டு டிவி-ஸோவிலேயே, “இதைவிட/தன்னைவிட நிறைய பிரச்சினைகள் நாட்டில் உள்ளன”, என்று கிண்டலாக பதிலளித்தாராம்! உள்துறை மந்திரி ரகுமான் மாலிக் கருத்து தெரிவிக்கையில், “முதலில் அந்த படம் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிய வேண்டும். நான் அந்த புகைப்படத்தைப் பார்க்கவில்லை. உண்மையானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று தெரிவித்துள்ளார்[9].
அண்மைய பின்னூட்டங்கள்