Posted tagged ‘மதம் மாறுதல்’

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு (1)

திசெம்பர் 4, 2022

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு (!)

கிருத்துவம் அல்லது இஸ்லாம் மதமாற்றம் ஏன் நடக்கிறது?: தமிழகத்தில் இந்துக்கள் மதம் மாறுவது நடந்து கொண்டே இருக்கிறது. தீண்டாமை மற்றும் ஜாதி, ஜாதிக் கொடுமைகள் காரணமாக எடுத்துக் காட்டப் பட்டு, கிருத்துவம் அல்லது இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டால், அத்தகைய வேறுபாடுகள், வித்தியாசங்கள், பாகுபாடுகள் முதலியன மட்டுமல்லாது, சமுத்தவம், சகோதரத்துவம், சம-அந்தஸ்து எல்லாம் கொடுக்கப் படும் அல்லது கிடைக்கும் என்று அறிவிக்கப் பட்டு அல்லது பிரச்சாரம் செய்யப் பட்டு, அத்தகைய மதமாற்றங்கள் நடந்தன, நடந்து வருகின்றன. இவையெல்லாம், ஆன்மீகம், தத்துவம், மெய்யியல் போன்றவற்றைக் கடந்து திட்டமிட்டு நடந்து வருகின்றன என்பது அரசாங்க, நிறுவனங்கள் ஆராய்ச்சிகள், தரவுகள் முதலியவை மூலம் அறியப் பட்டுள்ளன. மீனாக்ஷிபுரம் மதமாற்றம் அதனால் தான் பெரும் சர்ச்சையை உண்டாக்கி அடங்கி விட்டது. அதனால், எத்தனை மதம் மாறிய இந்துக்கள் பணக்காரர்கள் ஆனார்கள், உயர்ந்த சமுக்கத்தின் பெண்களை கல்யாணம் செய்து கொண்டார்கள், சிறந்த நிலையை அடைந்தார்கள் என்றெல்லாம் தெரியவில்லை.

மதமாற்றத்தால் உயர்ந்த நிலை கிடைத்ததா இல்லையா?: மண்டல் கமிஷன் தீர்ப்பு இஸ்லாமியர் மற்றும் கிருத்துவர் இடையேயும் ஜாதிகள் உண்டு என்றவுடன், சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முதலியவற்றின் பரிந்துரைகளின் ஆதாரமாக, அவர்கள் இடவொதிக்கீடு கேட்க ஆரம்பித்து விட்டனர். ஆனால், Caste [காஸ்ட்] மற்றும் class [கிளாஸ்] என்றவற்றிற்குள் இருக்கும் உண்மையினை அறிந்து கொள்ளாமல், உணர்ச்சி, அரசியல், சித்தாந்தம் போன்றவற்றால் உந்தப்பட்டு, மற்றவர்களையும் உசுப்பி விட்டு, பிரச்சினைகளை வளர்த்து வருவதும் தெரிகிறது. ஒரு பக்கம் எல்லோரும் சமம், எல்லோருக்கும் சம-உரிமைகள், எல்லோருக்கும் எல்லாம் என்றெல்லாம் பேசிக் கொண்டே, “எல்லாமே எனக்குத்தான்” என்று பல கூட்டங்கள் பெருகி வருவதைக் காணலாம். இங்கு தான், அப்பிரச்சினைகள், பெரிதாகி நீதிமன்றங்கலுக்குச் செல்கின்றன. அங்கு உண்மைகள் ஆராயும், அலசும் மற்றும் முடிவில் தீர்ப்புகளாக வரும் பொழுது, பிடித்தும்-பிடிக்காமலும் போகும் நிலை உண்டாகிறது. இப்பொழுது, இந்த தீர்ப்பும் அவ்வாறே இருக்கிறதா . இல்லையா என்று கவனிப்போம்.

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு: மதுரைக்கிளை உயர் நீதிமன்றம் ‘இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மாதத்துக்கு மாறியவரை பிசி முஸ்லிம் ஆக கருத வேண்டும்’ என்ற கோரிக்கையை நிராகரித்துள்ளது[1]. இது ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தாலும், வழக்கம் போல, “பி.டி.ஐ” பாணியில், “தமிழ்.இந்துவில்” வந்ததை மற்ற ஊடகங்கள் அப்படியே / வேறு தலைப்புகள் இட்டு / சிறிது மாற்றி வெளியிட்டுள்ளன. ஊடக வித்தகர்களும், நிருபர்களும், அப்படியே செய்தியை போட்டு, அமைதியாகி விட்டனர். இவ்வழக்கில் பாதிக்கப் பட்டவரிடம் சென்று பேட்டி காணவில்லை, முஸ்லிம் அரசியல் கட்சிகள், இயக்கத்தினர்களிடம், துறை அமைச்சர்களிடம் கமென்ட் / விளக்கம் கேட்கவில்லை, அன்று மாலையிலேயே, டிவிசெனல்களில் வாத-விவாதங்கள் நடத்தவில்லை. சமூகநீதி வித்தகர்கள், சமத்துவ சித்தாந்திகள், சமவுரிமை போராளிகள், சமன்பாட்டு வித்தகர்கள் முதலியோரும் காணப்படவில்லை.

காஜி கொடுத்த முஸ்லிம் சான்றிதழ், கேட்கும் பிசி அந்தஸ்து, மறுத்த TNPSC:  ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த யு.அக்பர் அலி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு[2]. நானும், என் குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து 2008-ல் இஸ்லாம் மதத்துக்கு மாறினோம்[3]. நான் லெப்பை சமூகத்தைச் சேர்ந்தவர் (a group within Muslim community which has been notified as a backward class) என ராமநாதபுரம் மண்டல துணை வட்டாட்சியர் 2015-ல் சாதி சான்றிதழ் வழங்கியுள்ளார்[4]. 2018-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு பிசி முஸ்லிம் பிரிவில் விண்ணப்பித்தேன்[5]. எழுத்துத் தேர்வு மற்றும் மெயின் தேர்வு எழுதினேன்[6]. இறுதி தேர்வுப் பட்டியலில் என் பெயர் இடம்பெறவில்லை[7]. தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது என் பெயரை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலிக்காமல், பொதுப்பிரிவில் பரிசீலித்துள்ளனர்[8]. என்னை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலிக்கக்கோரி அளித்த மனுவை டிஎன்பிஎஸ்சி செயலாளர் 28.7.2021ல் நிராகரித்து உத்தரவிட்டார். [இந்த TNPSC அதிகாரி வருவாய் அதிகாரியை விட பெரியவர்களா அல்லது அவர்கள் கொடுக்கும் சான்றிதழை மறுக்க அதிகாரம் உள்ளதா?]

லெப்பை முஸ்லிமா, பிற்படுத்தப் பட்ட முஸ்லிமா, ஜாதியா?: என்னை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலித்து வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது[9]. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு[10]. “தமிழகத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுவதில்லை.மனுதாரர் ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜியார் அளித்த சான்றிதழை தாக்கல் செய்துள்ளார்[11]. அதில் சத்திய மூர்த்தி என்பவர் அவராகவே விரும்பி இஸ்லாம் மதத்தில் சேர்ந்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது[12]. அதை தவிர – அவர் ஒரு இஸ்லாமியர் என்பதை தவிர – சான்றிதழில் வேறு ஏதும் இல்லை. மதம் மாறியவர் லெப்பை வகுப்பை சேர்ந்தவர் என அரசு காஜியார் அறிவிக்க முடியாது. அப்படியிருக்கும்போது மதச்சார்பற்ற அரசின் வருவாய் அலுவலர் மதம் மாறிய தனி நபர் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர் என எப்படி சான்றிதழ் வழங்கினார் என்பது தெரியவில்லை. ஏற்கெனவே இடஒதுக்கீட்டு சலுகையை அனுபவித்து வந்த ஒருவருக்கு மதம் மாறிய பிறகும் இடஒதுக்கீட்டு சலுகை வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது[13]. அது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது இந்த நீதிமன்றத்தால் எந்த முடிவுக்கும் வர முடியாது[14].  [காஜி தனது மத இறையியலின் படி தீர்மானிக்கிறரா அல்லது வேறு ஏதோரு அதிகாரம் அல்லது அதிகார ஆணை மூலம் தீர்மானிக்கிறாரா என்றும் கவனிக்க வேண்டும். எப்படியிருந்தாலும்,ஐஸ்லாமிய இறையியலின் படி முஸ்லிமுக்கு இரண்டு வித சமூக நிலை, அந்தஸ்து. இடவொதிக்கீடு எல்லாம் இருக்கிறதா என்று தெரியவில்லை.]

© வேதபிரகாஷ்

04-12-2022 


[1] தமிழ்.இந்து, இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு, கி.மகாராஜன், Published : 02 Dec 2022 08:22 PM; Last Updated : 02 Dec 2022 08:22 PM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/909128-hindu-convert-to-islam-cannot-be-considered-a-bc-muslim-high-court-orders.html

[3]காமதேனு, இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பி.சி முஸ்லிமாக கருத முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு, கி.மகாராஜன், Updated on :  2 Dec, 2022, 9:40 pm.

[4]  https://kamadenu.hindutamil.in/national/a-hindu-convert-to-islam-cannot-be-considered-a-bc-muslim-high-court-orders-action

[5] ஜி.7.தமிழ், இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாதுஉயர் நீதிமன்றம் உத்தரவு  | hindu convert to islam cannot be considered a bc muslim high court orders || G7TAMIL, By g7tamil -December 2, 2022.

[6] https://g7tamil.in/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/

[7] தமிழ்.மினட்ஸ், இந்து மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாறியவருக்கு BC வகுப்பா? மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு, by Bala S, December 3, 2022.

[8] https://tamilminutes.com/madurai-high-court-rejected-religion-changed-case/

[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், முஸ்லிம் மதம் மாறிய இந்து பிற்படுத்தப்பட்டவர் அல்ல.. மதுரை உயர்நீதிமன்றம், Written by WebDesk, Madurai, December 3, 2022 2:22:42 pm

[10] https://tamil.indianexpress.com/tamilnadu/the-madurai-high-court-has-ordered-that-a-hindu-convert-to-islam-is-not-a-backward-class-552158/

[11] இ.டிவி.பாரத், மதம் மாறியவரை BC முஸ்லிமாக கருத முடியாதுஉயர் நீதிமன்றம் மதுரைக்கிளை, Published on December 03, 2022; Updaed; December 04, 2022.

[12] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/madurai/a-convert-cannot-be-considered-a-bc-muslim-high-court/tamil-nadu20221203130924644644445

[13] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Madurai HC: ‘டிஎன்பிஎஸ்சி செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு சரியானதுநீதிமன்றம், Karthikeyan S, 03 December 2022, 15:10 IST

[14] https://tamil.hindustantimes.com/tamilnadu/madurai-hc-rejects-backward-quota-claim-of-hindu-man-converted-to-muslim-131670060279181.html

தேவநாதனால் மதம் மாறினேன்!

பிப்ரவரி 8, 2010

தேவநாதனால் மதம் மாறினேன்!

தமிழன் எக்ஸ்பிரஸில் Jan14- jan21, 2010 இப்படியொரு செய்தி வெளிவந்துள்ளது.

வேதமா, குரானா, காதலா?: குமரன் என்ற இளைஞன் சொல்வதில் அறியப்படுவதாவது, அவன் பெனாஸிர் என்ற ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்துள்ளான். பெனாஸிரும் குமரனைக் காதலித்து இருக்கலாம். ஆனால், குமரனுக்கு மட்டும் இஸ்லாம் மீது காதல் ஏற்படுவது தான் ஆச்சரியமாக உள்ளது! ஏனெனில், காதல் செய்யும் பெனாஸிருக்கு இந்துமதவேதங்களின் மீது காதல் வரவில்லை!

ஏன் பாசம், நெகிழ்வு, வேறு மதம் இல்லை எனும்போது எங்கிருந்து வந்தது மதம் மாற்றம்?: எங்கள் இருவீட்டார் சம்மதத்துடந்தான் இந்தத் திருமணம் நடந்தது. என்னை  வேறு மதம் என்று பிரித்துப் பார்க்காத, பாச நெகிழ்வான குடும்பத்தில் புகுந்ததை நினைத்துப் பெருமைப்படுகிறேன்“, என்று சொல்வது பெனாஸிர்! அப்படி மாமியார் வித்தியாசமே பார்க்கவில்லையென்றால், பிறகு எதற்கு குமரன் உமராக வேண்டும்? அப்படியே இருக்கலாமே அல்லது அத்தகைய பாசம், நெகிழ்வு…………..முதலியவற்றைக் கண்டு பெனாஸிர் “வள்ளி” ஆகியிருக்கலாமே? இங்குதான் சந்தேகம் வருகிறது! கூட “சுன்னத் ஜமாத்”ம் வருகிறது!

தற்காப்புப் பேச்சு!: நான் இந்து மதத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். சென்னையில் வேலை பார்த்தபோது ஏற்பட்ட முஸ்லீம் நண்பர்கள் நட்பும், குர்-ஆன் மீது ஏற்பட்ட ஈடுபாடும் எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் தேவநாதன், கோயில் கருவறையில் நடத்திய அசிங்கமும் என்னை பெரிதும் பாதித்தது. நான் மதம் மாறி சுன்னத் ஜமாத்தில் இணைத்துக் கொண்டேன். மதம் மாறுவது என் உரிமை. என்னை யாரும் மாற்றவில்லை……” என்று குமரன் கூறுவதும் வேடிக்கையாக இருக்கிறது! இது குற்றம் செய்து, மனசாட்சி உறுத்தும் வேளையில், தவறு செய்ததை நியாயப் படுத்தும் போகுடன், ஒரு தற்காப்புத் தன்மையுடன் பேசப்பட்டது தெரிகிறது.

குமார் / உமரின் தாயார் இந்திரா அ.அ.தி.மு.க மகளிர் அணி தலைவியாக உள்ளார். ஆகவே, அவர் தமது அரசியல் ஏற்றத்திற்கு இத்தகைய உறவுகளைப் பயன்படுத்த நினைத்திருக்கலாம். மேலும் தந்தையைப் பற்றி ஒன்றுமே சொல்லப்படவில்லை.

காஞ்சிபுரம் தேவநாதன்!: “சுன்னத் ஜமாத்”தின் முக்கிய திட்டமே மதம் மாற்றம்தான். அதற்கு குமரன் உட்பட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. முதலில் காதல் ஏற்பட்டதா, ஏற்படுத்தப்பட்டதா என்ற நிலை! லவ்-ஜிஹாத்! “என்ன தைரியம் இருந்திருந்தா, எங்க பெண்ணை லவ் பண்ணியிருப்பே”, “ஐயோ வேணாங்க, நான் இயிருக்கு உயிராக நேசிக்கிறேன்”,……, என்ற நிலையைத் தாண்டி, அதாவது காதலித்தப் பிறகு, நிச்சயமாக முஸ்லீம்கள் கேட்டுருப்பர், “எங்க பெண்ணை கல்யாணம் செய்ய வேண்டுமானால், முஸ்லீமாக வேண்டும்”, ……….”சரி, மாறுகிறேன்”. ஆக, ஒரு புது ஆள் கிடைத்தவுடன், இனி விளம்பரம் கிடைக்கவேண்டும்.

kanchipuram-conversion

“காஞ்சிபுரம் தேவநாதனால் மதம் மாறினேன்” – ஓர் இளைஞரின் அதிரடி! இப்படி தலைப்பு! இத்தனை தனிமனித விருப்பங்கள், ஆசைகள், மோகங்கள், ……………அரசியல், மதம் மாற்றம், சுன்னத் ஜமாத்……..முதலியன இருக்கும்போதுதான், காஞ்சிபுரம் தேவநாதன் வருவது அல்லது இழுக்கப்படுவது போலித்தனமாக இருக்கிறது!

ஆரம்பித்ததோ இப்படி, நான் இந்து மதத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன்.“மிக அதிக நம்பிக்கை”, வைத்து இந்துமதத்தை ஏமாற்றியுள்ளார்.

சென்னையில் வேலை பார்த்தபோது ஏற்பட்ட முஸ்லீம் நண்பர்கள் நட்பும், குர்-ஆன் மீது ஏற்பட்ட ஈடுபாடும் எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. அதாவது காதலுக்குப் பின் ஏற்பட்டிருந்தால், அதன் மகத்துவனம் நன்றாகவே புரிகிறது. அல்லது, அதன் விளைவாகவே காதல் ஏற்பட்டிருந்தால், ஜிஹாத் லவ் ஆகிறது. அதாவது குர்-ஆனுடன், பெனாஸிரும் சேர்கிறது.

காஞ்சிபுரம் தேவநாதன், கோயில் கருவறையில் நடத்திய அசிங்கமும் என்னை பெரிதும் பாதித்தது. இது எப்படி இங்கு வருகிறது என்பதுதான் புரியவில்லை! இப்படி, எல்லோருமே பாதிக்கப்பட்டால், முஸ்லீம் ஆகிவ்டுவார்களா? தேவநாதனின் விஷயத்தில் ஒரு முஸ்லீம் பெண் இருக்கிறாள். அப்பொழுது, நாளைக்கு அவனே முஸ்லீம் ஆகிவிட்டால் என்னாவது?

நான் மதம் மாறி சுன்னத் ஜமாத்தில் இணைத்துக் கொண்டேன். நான் மதம் மாறி சுன்னத் ஜமாத்தில் ஈனைத்துக் கொண்டேன், என்பதும், நம்பிக்கயின் மேன்மையைக் காட்டுவதாக இல்லை! தவறு செய்ததின் உறுத்தல் வெளிப்படுவது தெரிகிறது!

மதம் மாறுவது என் உரிமை. மாறவேண்டியதுதான். யாரும் கவலைப்படப் போவதில்லை! இங்கு ஒரு “இந்து” தாயாரே ஒப்புக் கொண்டு தன் மகனை “முஸ்லீம்” ஆக ஏற்பாடு செய்துள்ளார்!ஆனால், இப்படி படிப்படியாக “defense mechanism” வேலைசெய்வது தான் உண்மையைக் காட்டுகிறது!

“என்னை யாரும் மாற்றவில்லை……, கடைசியாக, இப்படி போட்டு உடைக்கிறார், அதாவது ஏதோ பாவம் தானாகவே இந்து மதத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்து, திடீரென்று இஸ்லாம் மதத்தை காதலால் இருகத் தழுவிய பின்னர், “என்னை யாரும் மாற்றவில்லை……என்று சொல்வது பொய்யாகிறது. ஏனெனில், மதம் மாறுவது / மாற்றம் என்றாலே இஸ்லாத்தில் பல சடங்குகளுடன் நடக்கும். அவை எல்லாவற்றையும் முமரன் தானாகவே செய்து கொண்டு “உமர்” ஆகியிருந்தால், உலகத்திலேயே அவர்தான், அத்தகைய முதல் “முஸ்லீமாக” இருப்பார்!