“லவ்-ஜிஹாத்” – ரிவெர்ஸ்
லவ்-ஜிஹாத் பற்றி ஏகப்பட்ட விவாதம்!
மறுத்தாலும், மறைத்தாலும், நாளுக்கு நாள் அதிகமாகவே விவரங்கள் வருகின்றன.
பிரச்சினை என்னவென்றால், இந்திய ஊடகங்களின் பாரபட்ச வேலை தான். அதை துரோகம், வஞ்சகம்.என்று எப்படி சொன்னாலும் தகும் போல இருக்கிறது!
காஷ்மீத்தில் லவ்-ஜிஹாத், ஒரு முறை ரிவர்ஸில் நடந்தது போலும், அதாவது, ஒரு ஹிந்து பையன், ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்து மணந்துவிட்டானாம்!
பாவம், சில காலம்தான், அந்த ஜோடி சந்தோஷமாக இருந்தது!
கிளம்பிவிட்டனர், பெண்ணின் தந்தை, சகோதரன்…..
உடனே, அவனைக் கொன்று விட்டனர்!
உச்சநீதி மன்றம் தலையிட்டு சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட்டது!
உச்சநீதி மன்றம் நமம்பர் 13, 2009 அன்று ரஜ்னீஸ் சர்மா என்ற ஜம்மு இந்து இளைஞன் கொலைசெய்யப்பட்டது விஷயமாக விசாரிக்க மத்திய புலன்-விசாரணைக் கழகத்திற்கு ஆணையிட்டது. ரஜ்னீஸ் அமினா என்ற ஒரு முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். திருமணத்திற்குப் பிறகு அவள் ஆஞ்சல் சர்மா ஆனாள். ஆனால் கடந்த அக்டோபர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் அவளின் தந்தை இவனைப் பிடித்துக் கொண்டுபோய் காவலில் வௌத்துக் கொடுமைப் படுத்திக் கொன்றுவிட்டதாகத் தெரிகிறது. விதவையாக இருக்கும் ஆஞ்சல் சர்மா தொடுத்த வழக்கில் அல்ட்மஸ் கபீர் மற்றும் சிரியக் ஜோசப் அடங்கிய நீதிபதிகளின் பெஞ்சிற்கு வந்தபோது, அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றிக் கேட்டனர். ஆஞ்சல் சர்மா, ரஜ்னீஸுடைய தாயார், சகோதரர்கள் முதலியோர், உயிருக்குப் பயந்து, ஜம்முவிலிருந்து தில்லிக்கு ஓடிப்போய் அங்கிருந்து வழக்குத்தொடர்ந்தனராம்! கோர்ட் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க ஆணையிட்டு நவம்பர் 27, 2009க்குள் முடிவைச் சொல்லப் பணித்தது. ஆஞ்சல் சர்மா, தன்னுடைய கணவனை ஸ்ரீநகரிலுள்ள, முஸ்ன்ஸி பக் மற்றும் பக்ஸி நகர் போலீஸார் பிடித்துக் கொண்டுபோய், அவனது முஸ்லீம் மாமனார் சொன்னதனால், காவலிலேயே சித்தரவதைச் செய்யப்பட்டு கொல்லப்பட்டான் என்று சமர்ப்பித்தாள். ,
இதனால், சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். தந்தையின் விருப்பத்திற்கு எதிராக தாங்கள் ஜூலை 21ம் தேதி திருமணம் செய்துகொண்டதாகவும், ஒரு தன் கணவுனுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தியதாகவும் கூறினாள். இருப்பினும், ஸ்ரீநகர் போலீஸ் தனது கடையில் சோதனை நடத்தி, தன்னை கடத்திக் கொண்டு போய்விட்டான் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், ஆனால் அவன் திரும்ப வராதலால் அங்கேயே கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று அவள் வழக்குத் தொடர்ந்தாள். உண்மையறிய உச்சநீதி மன்றம்
வாழ்க காதல்!
அண்மைய பின்னூட்டங்கள்