யார் இந்த சூபியா மதானி?
சூபியா மதானி / சூஃபியா மௌதனி, அப்துல் நாசர் மதானியின் மனைவி. சலாவுத்தீன் மற்றும் உமர் என்ற இரண்டு பையன்களின் தாய். அழகான முகத்தில் தீவிரவாதத்தின் நிறம் தெரிவதில்லை, ஆனால், காஷ்மீரத்தில் அத்தகைய அழகிய ரோஜாக்களே வெடிகுண்டுகளாக செயல்பட்டது, ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் எப்படி இஸ்லாத்தில் தீவிரவாதிகளாக மாற்றப்படுகின்றனர் என்று தெரியவருகிறது. மூளைச்சலவை செய்ய-செய்ய யாராக இருந்தாலும், திவிரவாதியாக மாற்றலாம், என்று இஸ்லாத்தில் கண்டுபிடித்துள்ளனர். “குரான்” என்று சொல்லி, ஜிஹாத் போர் ஒரு முஸ்லீமின் கடமை, சொர்க்க வாசல் தயாராகத் திறந்திருக்கிறது…………….என்றெல்லாம் சொன்னால், ஜிஹாத்கிகள் கிளம்பி விடுகிறார்கள்.
![]()
|
கணவனது தாக்கம்: ஆரம்பகாலத்தில், சூபியா தனது வாழ்க்கையை சந்தோஷமாகத்தான் கழித்திருப்பாள். ஆனால், பிறகு, அவனது கொள்கையை அறிந்திருப்பாள். நிச்சயமாக, தனது கணவினின் தாக்கம் இவளிடத்தில் இருந்திருக்க / ஏற்பட்டிருக்க வேண்டும். ஆரம்பத்தில் மறுத்தாலும், பிறகு, கணவனுடன் ஒத்துப்போனாள் என்பது நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன. குழந்தைகள் பிறந்தபிறகு, மனம் மாறியிருக்கலாம், ஆனால், மறுபடியும் தாக்கம் ஏற்பட்டுள்ளது, அவளுடைய வார்த்தைகள், நடத்தைகள் காட்டுகின்றன எனலாம்.
பஸ் எரிப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பது: கலமசேர் பஸ் வழக்கில் கைது செய்யப்பட்டபோது, அந்த நிலையில் சூபியா மதானி போலீசில் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- “கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அப்துல் நசர் மதானியை போலீசார் கடுமமையாக சித்ரவதை செய்தனர். அங்கு அவர் பட்ட கஷ்டமே என்னை குற்றவாளி ஆக்கியது”. அதாவது, உண்மையில் கஷ்டப்படுத்தப்பட்டானா அல்லது சர்க்கரை முதலிய வியாதிகளினால், சிகிச்சைப் பெற்றுவந்ததால், ஒன்பது ஆண்டுகளில் உடல் இளைத்தான என்றுதான் பார்க்கவேண்டும். ஆனால், சிறைவாசம், போலீஸ் கைது, என தனக்கும் வரும்போது, தன்னைகத் தற்காத்துக் கொள்ளவே வேண்டியுள்ளது.
மதானியைப் பற்றிய சிடியில் சூபியா சொன்னது: மதானியின் மனைவி சூபியா அளித்துள்ள பேட்டியில், “ஒன்பது ஆண்டுகளுக்கு முன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கணவர், கோவை சிறையில் உள்ளார். அவரை சந்திக்கும் போதெல்லாம், எனக்கு தைரியமூட்டுவார்; அவரது உடல் நிலை மோசமாக உள்ளது. சிறைக்கு சென்றபோது அவரது எடை 116 கிலோ; தற்போது 46 கிலோவாக குறைந்துவிட்டது. முறையான சிகிச்சை இல்லாததே இதற்கு காரணம்,” என, குற்றம் சாட்டியுள்ளார். இறுதியில், “சட்டம், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், மதானியின் சிறைவாசத்தை நிச்சயம் கண்டிப்பார்கள்‘” என்ற வர்ணனையுடன் படம் முடிகிறது.
![]()
|
![]()
|
21-06-2002 அன்று கோவை சிறையில் நடந்த நிகழ்ச்சி: சூபீயா தனது உதவியாளன் நௌஸத் மற்றும் இன்னொருவனுடன் தனது கணவனைப் பார்க்க வருகிறாள். பெண்போலீஸார்கள் சோதனையிட்டபோது, சூபியா செல்போன் மற்றும் சிம்கார்டுகளை உள்ளே எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்படுகிறது. உடனே, வாக்குவாதத்தில் ஈடுபட்ட சூபியா, பெண்காவலர்களையும் மற்ற காவலர்களையும் மிரட்டுகிறாள். தான் நினைத்தால், அவர்களையெல்லாம் தொலைத்து விடுவேன் என்று மிரட்டுகிறாள். நௌஸத் பெண்காவலர்களை அவர்களுடைய சட்டைகளைப் பிடித்து இழுக்கிறான். இதனால், ஆண்-போலீஸார் வந்து அவர்களை, வலுக்கட்டாயமாக, சிறை வளாகத்திலிருந்து வெளியேற்றுகின்றனர். ஆனால், வெளியே வந்தபிறகும், போலீஸாரைத் திட்டி, மிரட்டிவிட்டுச் செல்கின்றனர்
ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்தல்: போலீஸார், இவ்வாறு அவமதிக்கப்பட்டதால், அவர்கள், சூபியா மற்றும் நௌஸத் மீது ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்கின்றனர். அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, பெண்-போலீஸாரை பலாத்காரம் செய்தது, போலீஸாரை மிரட்டியது முதலியவற்றிற்காக இபிகோ ரசத்துகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அரசியல் செல்வாக்கினால், அவ்வழக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை.
மதானி மனைவி மீதான வழக்கு : துவங்கியது இருதரப்பு வாதம்
மே 06,2008; http://dhinamalar.info/court_detail.asp?news_id=504&ncat=TN&archive=1&showfrom=5/6/2008 கோவை பணி செய்ய விடாமல் தடுத்து, சிறைவார்டன்களை மிரட்டிய மதானி மனைவி மீதான வழக்கில் இருதரப்பு வாதம் துவங்கியது. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட, கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மதானி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2002ல் மதானியை பார்க்க வந்த அவரது மனைவி சூபியாவுக்கும், சிறைக்காவலர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சிறைக்காவலர்களை மிரட்டி, பணி செய்ய விடாமல் தடுத்ததாக சூபியா மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு ஜே.எம்.எண்: 3 கோர்ட்டில் நடக்கிறது.சாட்சி விசாரணை முடிந்த நிலையில், நேற்று இருதரப்பு வாதம் துவங்கியது. சூபியா சார்பில் வக்கீல் மோகன் ஆஜராகி வாதிட்டார். தொடர்ந்து, அரசு தரப்பு வாதத்துக்காக வழக்கை மே 9ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் புளோரா ஒத்திவைத்தார். |
மதானி தம்பதியரின் அரசியல் செல்வாக்கு, பலம்: குற்றாஞ்சட்டப்பட்ட தீவிரவாதி-பயங்கரவாதி மதானி 1998-ஆம் அண்டு நடந்த கோவைத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக அல்லது சிலர் சொல்லும்படியாக, விசாரணைக் கைதியாகக் கருதப்பட்டு சிறையில் தண்டனையை சகல வசதிகளுடன் அனுபவித்துக் கொண்டிருந்தான். எனவே, சூபியா குற்றஞ்சாட்டியபடி எப்படி எடை 116 கிலோ; தற்போது 46 கிலோவாக குறைந்துவிட்டது. என ஆச்சரியமாக உள்ளது. உடம்பு சரியாகவில்லை என்பதனால், சிகிச்சையளித்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி, உணவைக் குறைத்துக் கொண்டான் என்பதுதான் உண்மை.
சூபியாவை பார்க்கும் முதலமைச்சர்: ஜூன் 2, 2005 அன்று அப்போதைய காங்கிரஸ் முதல் மந்திரி உம்மன் சாண்டி மதானியின் வீட்டிற்கே சென்று அவரது மனைவியையும் தந்தையையும் சந்தித்த போது, சூபியா சிறையில் நடந்த பிரச்சினைகளைப் பற்றி சொல்லி, ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டாள். அதன்படியே, “மனிதாபிமான” அடிப்படையில் அவள் கணவனுக்கு விடுதலை கிடைக்க ஆவன செய்வதாக உறுதியளித்தார். அதுமட்டுமல்லாது, மார்ச்சு 14, 2006 அன்று, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ கட்சியினரைக் கொண்ட கேரள சட்டசபை, மனிதாபிமான அடிப்படையில் மதானியை விடுதலை செய்ய வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானத்தையும் நிறைவேற்றியது வினோதமாக இருந்தது.
சிறைக்கு ஆட்களை அனுப்பி விசாரித்தது, கருணாநிதியிடம் பரிந்துரைத்தது: அதன் பிறகு கேரள முதல்வர் அச்சுதானந்தன் தன்னுடைய அமைச்சர்கள் சிலரை கோவை சிறையில் மதானியை சந்தித்து வேண்டியது செய்யப்படும் என்று சொல்லி அனுப்பினார். பிறகு, ஜூன் 10, 2006 அன்று கேரள முதல்வர் அச்சுதானந்தனே நேரிடையாகச் சென்னைக்கு வந்து, தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து, மதானியை “உடல்நல” காரணங்களுக்காக விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தமிழக முதல்வர் விடுதலை செய்ய மறுத்தாலும், சிறைச்சாலையிலேயே மதானியின் ஆயுர்வேத மருத்துவத்திற்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்தார்.
தச்சாங்கரி மனைவி –சூபியா மதானி -நஸீர் தொடர்பு – வென்னலா வீடு[1]: புலானாய்வு குழுவினர் டோமின் ஜெ. தச்சங்கரி மற்றும் அப்துல் நாசர் மதானி இவர்களுக்குள்ள தொடர்பை கண்டறிந்துள்ளனர். வென்னலா என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டைப் பற்றி விசாரித்ததில் அந்த தொடர்பு வெளிப்படுகிறது. தச்சாங்கரியின் மனைவி மற்றும் மதானியின் மனைவி 2006 மற்றும் 2007 முறையே அந்த வீட்டை “ரியான் ஸ்டூடியோ” என்ற பெயரில் வாடகைக்கு எடுத்துள்ளனர் கருகபிள்ளி என்ற கொச்சியிலுள்ள வீட்டிற்கு இடம்பெயரும் முன்னர், இருவருமே இந்த விட்டில் நான்கு மாதங்கள் தங்கியுள்ளதாகத் தெரிகிறது. இன்னொரு சோதனையில் இதே வீடுதான் திருட்டு விசிடி தொழிற்சாலையாக பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிந்தது. அது மட்டுமல்லாது இந்த வோட்டில்தான், மதானி நஸீரை சந்தித்துள்ளதாகத் தெரிகிறது. அக்டோபர் 15, 2007ல் மதனி இந்த வீட்டிற்கு குடிபெயந்தார். இந்தவீடு ஒரு NRI. பெண்மணிக்குச் சொந்தமானது என்றும் அவருடைய சகோதரர் வீட்டை நிர்வாகித்து வருகிறார் என்றும் தெரிகிறது.
மனைவிகள் பங்குதாரர்களாக இருக்கும் போது, ஒரு கணவன் அடுததவர் மனைவி மீது நடவடிக்கை எடுப்பாரா? தச்சாங்கரியின் மனைவி மற்றும் மதானியின் மனைவி 2006 மற்றும் 2007 முறையே அந்த வீட்டை “ரியான் ஸ்டூடியோ” என்ற பெயரில் வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த நிறுவனத்திற்கு பங்குதாரர்களாகவும் இருந்துள்ளனர். இத்தகைய உறவு இருக்கும்போது, எப்படி ஒரு கணவன் அடுததவர் மனைவி மீது நடவடிக்கை எடுப்பார்? கலமசேரி பஸ் வழக்கை விசாரிப்பதில், இந்த டோமின் ஜெ. தச்சங்கரி உள்ளார்[2], பிறகு, எப்படி அவரால் பாரபட்சமின்றி, அவ்வழக்கை விசாரிக்கமுடியும்? பி. எம். வர்கீஸை தனது ஆதிக்கத்தால் / தாக்கத்தால் பணியவைக்கமாட்டார் என்று என்ன நம்பிக்கையுள்ளது?
கோவை பிரஸ் கிளப்பில் குண்டு வைத்தாரா?: மதானி மனைவியிடம் தீவிர விசாரணை[3]
கேரளாவில் தமிழக பஸ் எரிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் மதானியின் மனைவி சூபியா மதானியிடம், கோவை பிரஸ் கிளப்பில் குண்டு வைத்தது தொடர்பாக, தமிழக போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த 2005ம் ஆண்டில் தமிழக பஸ் ஒன்று, கேரளாவில் உள்ள கலமசேரியில் எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் மதானியின் மனைவி, சூபியா மதானிக்கு தொடர்பு இருப்பது, சமீபத்தில் கைதான லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதி நசீரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இதை தொடர்ந்து, பஸ் எரிப்பு வழக்கில் 10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சூபியா மதானி, கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் அலுவாலியா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக, இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான இரண்டு நபர் குழு, திரிக்கராவில் உள்ள போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில், சூபியா மதானியிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், “பஸ் எரிப்பு வழக்கை தவிர, கோவை பிரஸ் கிளப்பில் குண்டு வைத்த வழக்கில், நசீர் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுகிறார். எனவே, இது தொடர்பாக ஏதேனும் முக்கிய தகவல்கள் கிடைக்குமா என்பதற்காகவே போலீசார், சூபியா மதானியிடம் விசாரணை நடத்தினர்’ என்றனர். |
மதானிக்கு ஆதரவாக “கைதியின் கதை‘ ஆவணப்படம் “சிடி‘யாக வெளியீடு: கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் மதானி, முஸ்லிம் சிறைவாசிகளுக்கு ஆதரவாக, “கைதியின் கதை’ என்ற ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு நெருங்கும் வேளையில், “சிடி’ வெளியிடப்பட்ட பின்னணி என்ன என்பது குறித்து உளவுப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், கேரள மக்கள் ஜனநாயக கட்சியினர் நிறுவனர் அப்துல்நாசர் மதானி (41) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடன் 167 குற்றவாளிகள் மீதான விசாரணை தனி நீதிமன்றத்தில் முடிந்தது; தீர்ப்புக்காக வழக்கு காத்திருக்கிறது. இந்நிலையில், “கைதியின் கதை’ (மதானி மற்றும் முஸ்லிம் சிறைவாசிகள் குறித்த ஆவணப்படம்) என்ற தலைப்புடன், 45 நிமிட படம் “சிடி’யாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், ஆங்கில மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை, “மீடியா ஸ்டெப்ஸ்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது; “ஆலூர் ஷானவாஸ்’ என்பவர் இதை தயாரித்துள்ளார். இப்படத்தில், மதானியின் பள்ளி பருவம், ஆவேசமான அரசியல் மேடைப்பேச்சு, மத ரீதியான போதனைகள் இடம்பெற்றுள்ளன. “சங்க் பரிவார்’ அமைப்புக்கு எதிராக 1991ல், “இஸ்லாமிக் சேவா சங்’ அமைப்பை துவக்கியது; வெடிகுண்டு தாக்குதலில் மதானியின் கால் ஊனமடைந்தது தொடர்பான, விளக்கங்கள், காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
[1] Ajay Kanth, Kerala: Nexus between Thachankary, Madani?, First Published : 07 Jul 2010 01:58:28 AM IST; Last Updated : 07 Jul 2010 09:17:01 AM IST
http://expressbuzz.com/states/kerala/kerala-nexus-between-thachankary-madani/187654.html
[2] It is said that the Karnataka Police had already handed over such information to the police team hat had visited Bangalore earlier, which included Inspector General Tomin J Thachankery and Assistant Commissioner of Police PM Varghese, who was heading the probe the Kalamssery bus-burning case. http://www.dailypioneer.com/222931/Nazeer-planned-communal-riots.html
[3] தினமலர், கோவை பிரஸ் கிளப்பில் குண்டு வைத்தாரா?: மதானி மனைவியிடம் தீவிர விசாரணை, டிசம்பர் 20,2009; http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14828
அண்மைய பின்னூட்டங்கள்