Posted tagged ‘மணிமண்டபம்’

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (2)

நவம்பர் 11, 2015

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின்ஷிர்க்விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (2)

ரஜினி, திப்பு, சுல்தான்

ரஜினி, திப்பு, சுல்தான்

திப்புவை வைத்துக் கொண்டு அரசியல் செய்வது ஏன்?:  தி்ப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாற்றை தான் திரைப்படமாக தயாரிக்க உள்ளதாக கன்னட திரையுலக தயாரிப்பாளர் அசோக் கெனி எம்எல்ஏ கூறினார்[1]. இந்த படத்தில் திப்பு சுல்தானாக, ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், இந்த படத்தில் ரஜினி நடிக்கக்கூடாது என்று பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன[2]. இந்த படத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொள்ள மாட்டார் என்று நம்புவதாக, பா.ஜ. தேசிய பொதுச்செயலாளர் ஹெச்.ராஜா, தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது[3]. “ரஜினி திப்பு சுல்தான் படத்தில் நடிக்கப் போவதில்லை என்பது சின்ன குழந்தைக்கும் தெரியும். அப்படியிருந்தும், ரஜினியை முன்னிறுத்தி மதவெறியை கக்கியிருக்கிறது, இந்து முன்னணி”, என்று தனக்கேயுரிய பாணியில் தமிழ்.வெப்.துனியா கமென்ட் அடித்திருந்தது, அதனுடைய சிந்தாந்த வெளிப்பாடாக இருந்தது[4]. இது குறித்து இந்து அடிப்படைவாதியும், இந்து முன்னணி தலைவருமான ராமகோபாலன் மதவெறி கருத்துக்களை வெளியிட்டுள்ளார், என்றும் தொடர்ந்தது[5].  பொதுவாகவே, முஸ்லிம் ஆதரவான “வினவு” என்ற இணைதளமும், தன்னுடைய சித்தாந்தத்தை வெளிப்படுத்தியது[6]. ஆனால், முஸ்லிம்கள் என்ன பேசினர், அவர்களது கருத்து என்ன என்பது பற்றி இவை குறிப்பிடவில்லை. அவர்களது கருத்தும் உச்சங்களைத் தொட்டுள்ளது. தௌஹீத் அமைப்பின் வீடியோ ஒன்று உதாரணமாகக் காட்டப்படுகிறது[7]. அதாவது ரஜினி விவரம் அவர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாகத் தெரிந்துள்ளது. சிபிஎம்.மும் விடவில்லை, உடனே இராமகோபாலனுக்கு கண்டனத்தைத் தெரிவித்தது[8]. ஆகவே, இப்பிரச்சினை தமிழகத்திலும் அரசியலாக்கப் பட்டுவிட்டது.

ரஜினி, சந்திரமௌளி, திப்பு சுல்தான்

ரஜினி, சந்திரமௌளி, திப்பு சுல்தான்

திப்பு சுல்தான் பற்றி இராம கோபாலன் எடுத்துக் காட்டியது (செப்டம்பர்.2015): சரி, என்ன அப்படி இராம கோபாலன் சொல்லிவிட்டார் என்று பார்ப்போம், “திப்பு சுல்தான் வேடத்தில் தமிழ் நடிகர்கள் நடிப்பது தமிழர்களை அவமானப்படுத்துவதற்கு சமம். திப்பு சுல்தான் தமிழர்களுக்கும் குறிப்பாக இந்துக்களுக்கு எதிராக நடத்திய தாக்குதல்கள் பற்றி பல வரலாற்று புத்தகங்களில் இருந்து அடையாளம் காட்ட முடியும். தமிழர்களை துரத்தியடித்த திப்பு சுல்தானை சிறந்த சுதந்திர போராட்ட தியாகியாக சித்தரிப்பதற்கான முயற்சிதான் இந்த பட தயாரிப்பு. முன்னாள் முதல்அமைச்சர் எம்.ஜி.ஆரின் மூதாதையர்கள் கொங்கு நாட்டில் உள்ள பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள். அந்த பகுதி மைசூர் சமஸ்தானத்தில் ஐதர் அலி ஆளுகையில் இருந்த போது இந்துக்களை மதம் மாறும்படி கட்டாயப்படுத்தினார்கள். மதம் மாற விருப்பம் இல்லாதவர்கள் அங்கிருந்து பாலக்காட்டுக்கு குடி பெயர்ந்தனர். அவ்வாறு குடி பெயர்ந்தவர்களில் எம்.ஜி.ஆரின் மூதாதையர்களும் அடங்குவர். எனவே எனது வேண்டுகோள் தமிழையும், தமிழரையும் நேசிப்பவர்கள் யாரும் திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க கூடாது. அந்த படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம்.” – இவ்வாறு ராமகோபாலன் கூறினார். இதில் என்ன கருத்துக்களை வெளியிடப்பட்டுள்ளன என்று தெரியவில்லை. சரித்திர உண்மைகளை சொன்னால், அது மதவேறி என்றால், இவர்களது ஞானசூன்யத்தை என்னென்பது? இதேபோல தௌஹீத் வீடியோ பேச்சையும் கேட்கலாம். அவர் ஏதோ திப்புதான் ஆங்கிலேயரை எடுத்து பாராடினான், ராக்கெட் விட்டான் என்ற ரீதியில் பேச்சு இருக்கிறது. இதனால், 2013ல் நடந்தவற்றை ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.

செயின்ட் தாமஸ் சினிமா, கரு, ரஜினி, குஷ்பு, பிஷப்புகள் 2008

செயின்ட் தாமஸ் சினிமா, கரு, ரஜினி, குஷ்பு, பிஷப்புகள் 2008

தாமஸ்படத்தில் ரஜினி நடிப்பார் என்று கிறிஸ்தவ பாதிரிகள் அறிவித்தது: ரஜினிகாந்த்தின் பெயரை அந்த அளவுக்கு சுலபமாக இழுத்து விட முடியுமா என்று கவனிக்க வேண்டும். முன்னர் கூட, ரஜினிகாந்த், “தாமஸ்” படத்தில் நடிப்பார் என்றெல்லாம் கிறிஸ்தவ பாதிரிகள் அறிவித்தனர். அதற்கும் இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்கத்தான் செய்தனர். ஆனால், “தாமஸ்” பிரச்சினையில் பல்வேறு விவகாரங்கள் அடங்கியிருந்ததால், எங்கே விசயங்கள் வெளிப்பட்டுவிடுமோ என்று விளைவுகளை அறிந்த கிறிஸ்தவர்களே அடங்கி விட்டனர்[9]. அதாவது, இந்து-எதிர்ப்பு என்பதனால் நின்றுவிடவில்லை. அதேபோல, இப்பொழுது ரஜினி “திப்பு”வாக நடிப்பார் என்று ஒரு கன்னட தயாரிப்பாளர் சொல்வதை ஒதுக்கிவிட முடியாது. ரஜினியே கர்நாடகாவில் இருந்து வந்தவர் தாம், இன்றும் அவரது உறவினர்கள் அங்குள்ளனர். மற்றும் பலவிசயங்களில் அவர் சம்பந்தப்பட்டிருக்கிறார். ஆகவே, மற்ற கட்சியினர் கருத்துத் தெர்விக்கும் போது, இந்து சார்புடைய கட்சிகள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவதில் ஒன்றும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. ஜெயலலிதா 2013லேயே, இதனை அரசியலாக்கிவிட்டார்.

ஹைதர் அலி - திப்பு - ஜெயலலிதா

ஹைதர் அலி – திப்பு – ஜெயலலிதா

மேமாதத்தில் 2013 ஜெயலலிதா எடுத்த முடிவு[10]: திப்புப் பிரச்சினையை தமிழகத்தில் ஆரம்பித்து வைத்தது ஜெயலலிதா தான். தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா படித்த அறிக்கையில் மே 2013ல் கூறியிருப்பதாவது: “…………………………. இதே போன்றுஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும்அடிமைத் தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன்னுயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நினைவாக திண்டுக்கல் மாவட்டத்தில்அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்”.[11], என்று அறிவித்ததால், திப்பு ஆதரவு-எதிர்ப்பு தமிழகத்திலும் ஏற்பட்டது. அம்மா செக்யூலரிஸ ரீதியில் எல்லோருக்கும் மணிமண்டபம், இவர்களுக்கும் அப்படியே என்ற ரீதியில் சொல்லிவிட்டார்! ஹைதர் அலி. அவரது புதல்வர் திப்பு சுல்தான். இவர்கள் நினைவாக, திண்டுக்கல்லில் நூலகம் அமைக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ,க்கள் சவுந்திரராஜன், பாலபாரதி, அஸ்லம் பாஷா, தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (ஆம்பூர்) ஆகியோர், கோரிக்கை விடுத்தனர்[12]. இதுவே அரசியல்தான் என்று தெரிகிறது. மேலும் கம்யூனிஸ்ட்டுகள் எப்படி வெட்கம் இல்லாமல் சுதந்திரம், சுதந்திர வீரர் என்றெல்லாம் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. எங்கு ஒரு முஸ்லிம் கேட்டால் முஸ்லிம் கேட்கிறான் என்று ஆகிவிடுமோ என்று கம்யூனிஸ்ட்டுகளைவிட்டு கேட்க வைத்து காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர். ஆனால், சில முஸ்லிம்களே – நாகை மன்சூர்[13] போன்றோர் இதனை எதிர்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது[14]. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவோ திப்பு சுல்தானின் 214 நினைவு ஆண்டு என்று சொல்லி விழா நடத்தி பரிசுகள் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

lash-over-tipu-sultan-jayanti-celebrations

lash-over-tipu-sultan-jayanti-celebrations

திப்பு ஜெயந்தி - முஸ்லிம்கள் இப்படி கொண்டாடலாமாதிப்புவின் நினைவு நாளா, பிறந்த நாளா, ஜெயந்தியா?: பொதுவாக, இஸ்லாம், முஸ்லிம்கள் மற்றும் அவர்களது இறையியலை அறியாத மக்கள், எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். இல்லையென்றால், “நமக்கு எதுக்கு வம்பு, இதெல்லாம் துலுக்கன் பிரச்சினை”, பிரச்சினைதான் வரும் என்று ஒதுங்கி விடுவர். ஆனால், நாகை மன்சூர்[15] போன்றோர் அதனை எதிர்த்ததும்[16], பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவோ திப்பு சுல்தானின் 214 நினைவு ஆண்டு என்று சொல்லி விழா நடத்தியதும் கவனிக்கத்தக்கது. முஸ்லிம்களுக்கு பிறப்பை விட, இறந்த நாள் தான் முக்கியத்துவமானது. அதனால் தான் அவர்கள்  214 நினைவு ஆண்டு என்று இறந்ததை-இறப்பைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், சித்தராமையா போன்ற செக்யூலரிஸ அரைகுறைகள் ஜெயந்தி, அதாவது பிறந்த நாள் என்று கொண்டாடுகின்றனர். இருப்பினும், முஸ்லிம்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது நோக்கத்தக்கது. அதாவது, இதை வைத்து ஓட்டு வங்கி, கலவரம், இந்து-விரோதம், அரசியல் நிலையில் வலதுசாரிகளுக்கு பாதிப்பு போன்றவற்றை உருவாக்கலாம், இருப்பதை அதிகமாக்கலாம், பிறகு அவற்றை உலகரீதியில் செய்திகளாக பரப்பி, பிரச்சாரம் செய்யலாம் என்று அவர்கள் தீர்மானத்துடன் அவ்வாறிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், முட்டாள் இந்து அமைப்புகள் எதிப்பு தெரிவித்து அவர்கள் விரித்த வலையில் விழுந்துள்ளன.

© வேதபிரகாஷ்

11-11-2015

[1] http://tamil.cinecoffee.com/news/rajini-and-rajamouli-join-for-tipu-sultan-movie/

[2]  தினமலர், திப்பு சுல்தானாக ரஜினி : பா.. எதிர்ப்பு, செப்டம்பர்.15, 2015.09.39.

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1342499

[4] தமிழ்.வெப்.துனியா, திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினியா? மதவெறியை தூண்டும் இந்து முன்னணி, Last Modified: சனி, 12 செப்டம்பர் 2015 (14:45 IST).

[5] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/tipu-sultan-rajini-religious-fanaticism-hindu-munnani-ramagopalan-115091200017_1.html

[6] http://www.vinavu.com/2015/09/15/ramagopalan-diktat-to-rajinikanth-inside-story/

[7] http://thowheedvideo.com/5411.html

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/after-hindu-group-warns-rajini-cpm-says-tipu-protected-communal-235624.html

[9] மேலும் விவரங்களுக்கு என்னுடைய www.thomasmyth.wordpress.com என்ற தளத்தைப் பார்க்கவும்.

[10]  http://news.vikatan.com/article.php?module=news&aid=14904

[11]  http://www.dinamalar.com/news_detail.asp?id=714454&Print=1

[12] http://newindianexpress.com/states/tamil_nadu/Memorials-for-Sahajananda-Tipu-Hyder/2013/05/16/article1591819.ece?pageNumber=1&parentId=70530&operation=complaint

[13] https://www.facebook.com/NagaiMansoor

[14] https://www.facebook.com/pages/Islamic-Youngsters-EMAIL/228120720548662

[15] https://www.facebook.com/NagaiMansoor

[16] https://www.facebook.com/pages/Islamic-Youngsters-EMAIL/228120720548662