திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (1)
தீபாவளி 10-11-2015 அன்று இந்தியா முழுவதும் பண்டிகை கொண்டாடும் வேளையில், கர்நாடகாவில் 18-வது நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த மன்னரான திப்பு சுல்தானின் 266வது பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு முடிவு செய்து[1], நடத்தியதில் கலவரத்தில் முடிந்தது. இந்து மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் தமது எதிப்பைத் தெரிவித்திருந்தும் பிடிவாதமாகக் கொண்டாடுவேன் என்று விழாவை ஏற்பாடு செய்து சித்தராமைய்யா நடத்தினார். பசுமாமிசம் சாப்பிடுவேன் என்றேல்லாம் பேசிய இவர் கர்நாடகாவின் முதலமைச்சர். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எனும் போது, எல்லா மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்ற பண்புக்கு எதிராக செயல் பட்டுவரும், அவர் இதற்கும் சளைக்கவில்லை. நிச்சயமாக சோனியா அம்மையாரின் சம்மதி இல்லாமல், இவர் இவ்வளவு ஆட்டம் போடமாட்டார். ஆக காங்கிரசின் உள்நோக்கம், கலவரத்தை உண்டாக்குவது என்பது தான் போலும். இருக்கவே இருக்கிறது, பிறகு இதெல்லாம் அந்த இந்துத்துவ சக்திகளின் வேலைதான் என்று பழி போட்டு திசைத்திருப்பி விடலாம்.
பலவித எதிர்ர்புகளை மீறி சித்தராமையா திப்பு ஜெயந்தி கொண்டாடியது: ஆங்கிலேயர்களுடன் நடந்த போரில் மே 1799ல், ஹைதர் அலியின் மகனான திப்பு கொல்லப்பட்டான்[2]. அதன்படி, 10-11-2015 (செவ்வாய்க்கிழமை) அன்று திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது[3]. ஹைதர் மற்றும் திப்பு இருவரின் கொடுமைகளை தென்னிந்தியாவில், குறிப்பாக மைசூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் (கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா) மக்கள் அறிவர். இந்த விழாவை கொண்டாடுவதற்கு பா.ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். உள்பட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன[4]. இந்நிலையில், இன்று நடைபெறும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவை புறக்கணிப்பதாக பா.ஜனதா அறிவித்தது. மாநில பிஜேபி தலைவர் பிரஹலாத் ஜோஷி, “எங்களுடைய 44 எம்.எல்.ஏக்கள், மற்ற அரசு பதவி வகிக்கும் எவரும் இந்த விழாவில் பங்கு கொள்ள மாட்டார்கள்”, என்று அறிவித்தார்[5]. கர்நாடக கௌரவ சம்ரக்ஷண சமிதி [Karnataka Gaurava Samrakshana Samiti] போன்ற இயக்கங்களும் எதிப்புத் தெரிவித்தன. குர்பூர் வஜ்ரதேஹி மடத்தின் ஸ்வாமிஜி ஶ்ரீ ராஜசேகரானந்தா அரசு அந்நிகழ்ச்சியை நடத்தினால், அதே நாளில், “அரசின் தற்கொலை தினம்” என்று எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தப் படும் என்றார்[6]. இதனிடையே, கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று சில மதஅமைப்புகள் அறிவித்தன. மத அமைப்புகளின் இந்த அறிவிப்புக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தெரிவித்தது. ஆனால், பாரதிய ஜனதா ஆதரவு வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோடகு மாவட்டத்தில் முழு அடைப்புக்கு அங்குள்ள சில அமைப்புகள் அழைப்பு விடுத்தன.
கிறிஸ்தவர்களின் எதிர்ப்பு: மங்களூரின் அனைத்து கிறிஸ்தவ சங்கமும், “கடற்கரை பகுதிகளில் இருந்த பல சர்ர்சுகளை திப்பு தனது ஆட்சியில் இடித்தான் மற்றும் கிறிஸ்துவர்களை துன்புறுத்தினான்”, என்று இந்த ஜெயந்தியை எதிர்த்துள்ளது[7]. நவம்பர் 6ம் தேதி எதிர்ப்பு தெர்வித்து கமிஷனரிடம் மனுவையும் கொடுத்தனர்[8]. திப்புவினால் கிறிஸ்தவர்கள் நடத்தப் பட்ட விதம் குறித்து, அவர்களே ஆவணப்படுத்தியுள்ளவற்றிலிருந்து அறியலாம், ஒருவேளை அதனால் தான், கிறிஸ்தவர்களாக இருந்த ஆங்கிலேயர், அவன் மீது படையெடுத்து, அப்பகுதியை, தமதாட்சியின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று போரை நடத்தியிருக்கலாம். எப்படியாகிலும், கிறிஸ்தவர்களால் கூட, திப்புவின் கொடுமைகளை, இன்றளவும் மறக்க முடியாத அளவுக்கு, அவர்களது மனங்களில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
மடிக்கேரியில் இரு குழுக்கள் மோதிக் கொண்டது எப்படி?: அரசு விழாவை ஆதரித்து முஸ்லிம் அமைப்பு ஒன்று ஊர்வலம் மடிக்கரையில் நடத்தியது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தியது[9]. இதனால், ஒரு இடத்தில் இரு அமைப்பு தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது[10]. இந்த பேரணியின் போது, திடீரென வெடித்த மோதல் விபரீதத்தில் முடிந்தது. விஷ்வ இந்து பரிஷத் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு அமைப்புக்கும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருக்கும் இடையே வன்முறை வெடித்தது[11] என்கிறது தினத்தந்தி. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருடன் மோதினார்கள் என்றால், அது முஸ்லிமஸமைப்புதான் என்று பதிவு செய்யாமல் இருந்தது செக்யூலரிஸ பத்திரிகா தர்மத்தைக் காட்டுகிறது போலும். இந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர். குட்டப்பா இறந்த பிறகு, கலவரமாக மாறியது. இதையடுத்து, அங்கு நிலவிவரும் பதற்றத்தை தணிக்க கூடுதலாக பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். கோடகு மாவட்டம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏராளமான இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

An injured is taken away for medical aid after two groups clashed over -Tipu Sultan Jayanti celebrations, in Kodgu.
குட்டப்பா இறந்தது அல்லது கொல்லப்பட்டது எப்படி?: கல்வீச்சில் முன்னாள் அரசு ஊழியரும் உள்ளூர் விஷ்வ இந்து பரிஷத் தலைவருமான குட்டப்பா (50) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்[12] என்று சில ஊடகங்கள் கூறுகின்றன. புட்டப்பா தடியடியில் உயிரிழந்ததாக செய்திகள் பரவின என்கின்றன மற்ற ஊடகங்கள்.. ஆனால் தடியடியிளிருந்து தப்பிக்க உயரமான சுவரை தாண்டி குதித்த போது தவறி விழுந்து அவர் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது[13] என்றும் கூறப்படுகின்றன. ஆகவே, குட்டப்பா இறப்பில், எதையோ மறைக்கிறார்கள் என்று தெரிகிறது. கல்லடி கலாட்டாவில் இறந்தார் அல்லது கொல்லப்பட்டார் என்றால், வீசியவர்கள் காரணமாகிறார்கள். ஆனால், கல்லடி கலாட்டாவில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்கள் தான் என்று குறிப்பிட செக்யூலரிஸ ஊடகங்கள் தயங்குகின்றன போலும். மேலும் தீபாவளியன்று, இப்படி இந்து-விரோத போக்கில் நடத்தப் பட்ட ஜெயந்தியில், ஒரு இந்து அமைப்பின் தலைவர் இறந்தது ஒரு பிரச்சினை ஆகக்கூடாது என்று அமுக்கி வாசித்திருக்கலாம்.
காங்கிரஸ் எம்.எல்,ஏ குட்டப்பாவின் சாவுக்குக் காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்கிறார்: குட்டப்பாவின் சாவுக்குக் காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.ஜி. போபைய்யா [Congress MLA K.G. Bopaiah] கேட்டுள்ளார். ஆமாம், பாவம் அவருக்கு இந்துக்களின் ஓட்டுகள் தேவைப்படுகிறது. மைசூரின் எம்.பியான, பிரதாப் சிம்ஹா, “மாவட்ட நிர்வாகம் நிலைமையை கையாளத் தவறிவிட்டது. மற்ற மாவட்டங்களிலிருந்து, நிறையபேர் இங்கு வந்து, திப்பு ஜெயந்தியை ஆதரிக்க வந்துள்ளனர். அதே மாதிரி விழாவை எதிர்ப்பவர்களையும், அவர்களையும் போலீஸார் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது”, என்றார். மூர்நாடு, ஹக்கதரு, விராஜ்பேட், கொட்டமுடி போன்ற ஊர்களிலிருந்து சுமார் 4,000 பேர் மடிகேரியுள் நுழையப் பார்த்தார்கள், ஆனால், போலீஸார் தடுத்ததால், அவர்கள் மடிகேரி எல்லைகளிலேயே தங்க நேர்ந்தது. சுமார் காலை பத்து மணிக்கு மோதல்கள் ஆரம்பித்தன, மதியம் குட்டப்பா இறந்தவுடன், கலவரமாக மாறிவிட்டது[14]. மேலும், “அரசு ஏ.பி.ஜே.அப்துல் கலாம் போன்றோருக்கு விழா எடுக்கலாம், ஆனால், திப்புவைப் போன்றவர்களுக்கு அல்ல”, என்றும் கூறினார்[15].
© வேதபிரகாஷ்
11-11-2015
[1] மாலைமலர், திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாட எதிர்ப்பு: வன்முறையில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஒருவர் பலி, பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, நவம்பர் 10.2015, 3:05 PM IST.
[2] http://www.greaterkashmir.com/news/national/story/201214.html
[3] http://www.maalaimalar.com/2015/11/10150553/Tipu-birth-anniv-celebrations.html
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=177868
[4] தினகரன், பாஜக., வி.எச்.பி தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி கலவரத்தில் வி.எச்.பி பிரமுகர் உயிரிழந்ததால் பதட்டம், நவம்பர். 10.2015,16.00.21 PM IST.
[5] On Monday (09-11-2015), BJP announced its plans to boycott the celebrations across the state. State BJP president Prahlad Joshi told media persons on Monday that none of its 44 legislators and office-bearers will attend the Tipu Jayanti celebrations being organized by the state government.
[6] http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=367470
[7] Mangaluru United Christian Association has protested against the celebrations, alleging that Tipu was responsible for the destruction of many churches in the coastal region and harassing Christians.
http://atimes.com/2015/11/hindu-leader-dies-in-violence-during-protest-over-tipu-anniversary/
[8] The members of the United Christian Association staged a protest against the state government’s decision to celebrate “Tipu Jayanti”, in front of the DC’s Office here, on November 6.2015.
[9] தினத்தந்தி, திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போரட்டத்தில் வன்முறை வி.எச்.பி தலைவர் ஒருவர் பலி, மாற்றம் செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 10,2015, 2:16 PM IST; பதிவு செய்த நாள்:செவ்வாய், நவம்பர் 10,2015, 2:16 PM IST.
[10] The clashes erupted after a Muslim group that was taking out a procession to mark the Karnataka government’s Tipu Sultan Jayanti celebration through Madikeri town came face to face with Hindutva activists protesting against the celebration of the birth anniversary in the middle of the town.
[11] http://www.dailythanthi.com/News/India/2015/11/10141620/Tipu-birth-anniv-celebrations-VHP-leader-dies-in-violence.vpf
[12] New Indian express, Tipu Sultan jayanti protest: VHP activist killed in violence in Karnataka, Written by Express News Service | Updated: November 10, 2015 4:09 pm.
[13]http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=177868
[14] Some 4,000 people, who had come from nearby towns such as Moornadu, Hakkaturu, Virajpet and Kottamudi, were stranded on the outskirts of Madikeri after police barricaded the town. According to police, clashes erupted in different parts of Madikeri by 10am. By noon, when Kuttappa died, police had a full blown riot on their hands.
[15] Congress MLA K.G. Bopaiah called for immediate arrest of those responsible for Kuttappa’s death. Mysuru MP Pratap Simha, who spoke to The Hindu, flayed the district administration and the police for their failure to handle the situation. He alleged that people from other districts had arrived in large numbers ostensibly in support of the Jayanti celebrations and the police failed to crack down armed protesters. “Such events should be held to commemorate icons, who have rendered yeoman service to society. Let the government hold a jayanti celebration in honour of late President A.P.J. Abdul Kalam but not Tipu Sultan,” said Mr. Simha. Inspector-General of Police (South) B.K. Singh and other officers are camping in the district and monitoring the situation.
அண்மைய பின்னூட்டங்கள்