2016 ஜூலையில் கைது செய்யப்பட்ட காதர் பாட்சா மறுபடியும் ஆகஸ்டில் எப்படி கைது செய்யப்பட்டான்? போலித் திருமணங்கள் கூட மோசடி குற்றத்தில் வருமா?
எட்டு திருமணங்கள் – போலி நிக்காநாமா: சலாமியா பானு தொடர்கிறார், “இந்த நிலையில் காதர் பாட்சாவை பற்றி விசாரித்தபோது[1], எனது கணவருக்கு ஏற்கனவே சென்னையை சேர்ந்த –
- நிர்மலாவுடன் திருமணமாகி 3 குழந்தைகள்,
- திண்டுக்கல்லை சேர்ந்த ஜமுனாராணியை திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர்.
- மேலும் வத்தலக்குண்டு மகாலட்சுமி
- பாத்திமா, சென்னை[2].
- .
- .
- .
- சலாமியா பானு (26-06-2016)
உட்பட 8 பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். கீழமாத்தூர் ஜமாத்தை சேர்ந்த இமாம் ஜாகிர்உசேன் என்பவர் எனது திருமணத்தை பதிவு செய்த நிக்காஹ் என்ற புத்தகத்தை ஆய்வு செய்தபோது அது போலியாக தயாரிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது. எனது கணவர் காதர்பாட்சா, தஸ்லிமா, அவரது கணவர் அப்துல்கயூம் மற்றும் இமாம் ஜாகிர்உசேன் ஆகியோர் திட்டமிட்டு என்னை கூட்டாக சேர்ந்து ஏமாற்றி உள்ளனர். என்னிடம் நகை, பணம் மற்றும் சொத்தை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சதி செய்து மோசடி செய்து விட்டார்கள். இதையறிந்து அதிர்ச்சியடைந்தேன். என்னை ஏமாற்றி மோசடி செய்த காதர் பாட்சா மற்றும் திருமணம் செய்து வைத்த தஸ்லிமா, அவரது கணவர் கயூம், அவரது நண்பர் ஜாகீர் உசேன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என கூறியிருந்தார்[3]. அதன்படி, காதர் பாட்சா மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் பதுங்கியிருந்த காதர்பாட்சா 25-07-2016 அன்று கைது: இந்நிலையில் தூத்துக்குடியில் பதுங்கியிருந்த காதர்பாட்சாவை போலீசார் 25-07-2016 அன்று கைது செய்து மதுரை 5வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்[4]. தலைமறைவாக உள்ள தஸ்லிமா, அப்துல் கயூம், ஜாகீர் உசேன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்[5]. ஜூலையில் கைதாக சிறையிடைக்கப் பட்ட பாட்சாவை போலீஸார் தேடி வருகின்றனர் என்று ஆகஸ்ட். 23,24,25.2016 தேதிகளில் தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. அப்படியென்றால், நடுவில், அவன் ஜாமீனில் வெளிவந்தானா என்று தெரியவில்லை.
போலீஸார் காதர் பாட்சா மீது மோசடி வழக்கு பதிவு: திண்டுக்கல் எம்.எஸ்.பி., பள்ளி அருகே வசிப்பவர் கார்த்திகாயினி (27). இவரது கணவர் மோகன்ராஜ் (30). இவர்கள் வீட்டருகே குடியிருப்பவர் மூலம் காதர்பாட்சா பழக்கமானார். அவர், கார்த்திகாயினிக்கு சிங்கப்பூரில் ஆசிரியை வேலை வாங்கி தருவதாக கூறி 3 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால், பேசியபடி ஆசிரியை வேலை வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. தற்போது தலைமறைவாகி விட்டார். இது குறித்து கார்த்திகாயினி புகாரின் பேரில் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் காவேரி வழக்குப்பதிவு செய்தார். தனிப்படை அமைத்து, காதர்பாட்சாவை தேடி வருகின்றனர் என்று மாலைமலர் செய்தி வெளியிட்டது[6].
ஜூலையில் கைதான காதர் பாட்சா மறுபடியும் ஆகஸ்டில் கைதானது எப்படி?: காதர் பாட்சா கைது குறித்தான செய்திகளை தமிழ் ஊடகங்கள் முன்னுக்கு முரணாக வெளியிட்டுள்ளன. “7 பெண்களை ஏமாற்றித் திருமணம்: வங்கி ஊழியர் கைது,” என்று தினமணி ஜூலை.26. 2016ல் செய்தி வெளியிட்டது[7]. அதன் படி 25-007-2016 அன்று கைது செய்யப்பட்டான்[8]. எனவே, ஒன்று பாட்சா 8-திருமணம் அல்லது கார்த்திகாயினியை ஏமாற்றிய வழக்கிற்கும் தனியாக கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஜாமீனில் வெளிவந்தவன் மறுபடியும் கைது செய்யப் பட்டிருக்க வேண்டும். தினமலர், 25-08-2016 அன்று செய்தியை இவ்வாறு மாற்றிக் கொண்டது[9], “இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருக்கும் காதர்பாட்சாவை இந்த வழக்கில் கைது செய்து, நாளை (ஆக.26ல்) திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்”. அதாவது, பாட்சா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப் பட்டுள்ளான் என்பதை கூறுகிறது[10]. துாத்துக்குடியில் பதுங்கியிருந்த காதர் பாட்சாவை, போலீசார் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்[11], என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது[12]. நிருபர்கள் விவரங்களை சரி பார்த்து செய்திகளை வெளியிட வேண்டும்.
முந்தைய ஏழு திருமணங்கள் முறையாக நடந்தனவா?: எட்டு திருமணங்கள் காதர் பாட்சா திருமணம் செய்து கொண்டான் என்றால், ஒவ்வொரு முறையும் முறையாக விவாகரத்து செய்து, திருமணம் செய்து கொண்டானா என்ற கேள்வி எழுகின்றது. 26-06-2016 அன்று சலாமியா பானுவுடன் திருமணம் நடந்தது என்றால், 2000லிருந்தே, காதர் பாட்சா இத்தகைய மோசடியில் ஈடுபட்டு வந்திருக்க வேண்டும். அப்படியென்றால், அந்த ஏழு பெண்கள் ஏன் புகார் அளிக்கவில்லை என்று தெரியவில்லை. தன்மானம், குடும்ப மானம் போய் விடும் என்று பயந்து புகார் கொடுக்காமல் இருந்து விட்டார்கள் போலும். இருப்பினும் உரிய விவாகரத்து பெறாமல் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இல்லை, பாட்சா அவர்களிடமும் நகைகள், பணம் முதலியவற்றை அபகரித்துக் கொண்டு, தப்பியோடு வந்து, மறைந்து விட்டான் போலும். பிறகு, அடுத்த பெண்ணை ஏமாற்றப் புறப்பட்டான் போலும். இதில் இந்து பெண்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், அவர்கள் மதம் மாற்றப்பட்டுள்ளனர் என்றாகிறது. அப்படியென்றால், பெற்றோர், உற்றோர், மற்றோர் எப்படி ஒப்புக் கொண்டனர் அல்லது தெரியாமல் திருமணம் செய்தனரா? திருமணங்கள் பதிவு செய்யப்பட்டனவா இல்லையா? இரண்டு குழந்தைகள் உள்ளன எனும்போது, இரண்டு-மூன்று ஆண்டுகள் குடும்பம் நடத்தியுள்ளனர் என்றாகிறது. பிரசவம் பார்க்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, பிறப்பு சான்றிதழ் வாங்குவது போன்றவற்றில், நிச்சயமாக காதர் பாட்சா தான் தந்தை என்ற முறையில் பெயரைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஏனெனில், எந்த பெண்ணும், அவ்விவரங்கள் இல்லாமல், குழந்தை பெற்றுக் கொள்ளமாட்டாள்.
© வேதபிரகாஷ்
26-08-2016
[1] மாலைமலர், 8 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன் மீது போலீசில் புகார், பதிவு: ஜூலை 21, 2016 16:27; மாற்றம்: ஜூலை 21, 2016 16:28.
[2] http://tamil.eenaduindia.com/State/Madurai/2016/07/21194358/husband-robbery-45-lakh–from-his–wife-in-madurai.vpf
[3] http://www.maalaimalar.com/News/State/2016/07/21162753/1027209/8-women-married-the-kalyana-mannan.vpf
[4] தினகரன், 7 பெண்களை மணமுடித்த ‘கல்யாண மன்னன்’ கைது : பெண் உட்பட 3 பேருக்கு வலை, Date: 2016-07-25@ 02:00:17.
[5] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=233498
[6] http://www.maalaimalar.com/News/District/2016/08/23123754/1034185/man-cheating-8-women-married-in-dindigul.vpf
[7] தினமணி, 7 பெண்களை ஏமாற்றித் திருமணம்: வங்கி ஊழியர் கைது, By மதுரை, First Published : 26 July 2016 01:56 AM IST.
[8] போலீஸார், வங்கி ஊழியர் விளாத்திகுளத்தைச் சேர்ந்த காதர்பாட்சா, தஸ்லிமா, அவரது கணவர் அப்துல்கியூம், கீழமாத்தூர் ஜமாத் நிர்வாகி ஜாகிர்உசேன் ஆகிய 4 பேரிடமும் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர். இந்நிலையில் காதர்பாட்சாவை திங்கள்கிழமை (25-07-2016) கைது செய்தனர்.
[9] தினமலர், 8 பெண்களை ஏமாற்றியவர் மோசடி வழக்கிலும் கைது : திண்டுக்கல் போலீஸ் நடவடிக்கை, ஆகஸ்ட்.25, 2016:00.20.
[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=159262
[11] தினமலர், 8 பெண்களை ஏமாற்றி மணம் முடித்தவர் கைது, ஆகஸ்ட்.24, 2016: 23.26.
[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1592429&Print=1
அண்மைய பின்னூட்டங்கள்