Posted tagged ‘போர்’

அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (3)

மே 31, 2015

அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (3)

Burmese army arrested three Rohingya with Bangladeshi mobiles

Burmese army arrested three Rohingya with Bangladeshi mobiles

கள்ளக் குடியேறிகளின் மீது மலேசியா எடுக்கும் நடவடிக்கை: மலேசியாவில் சட்ட அமலாக்க அதிகாரிகள் நாடு முழுவதும் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கள்ளக் குடியேறி கள் 2,170 பேர் கைது செய்யப்பட்டதுடன் முதலாளிகள் 25 பேர் கைது செய்யப்பட்டதாக மலேசிய உள்துறை துணை அமைச்சர் கூறினார். இந்த ஆண்டு மே மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக உள்துறை துணை அமைச்சர் வான் ஜூனைடி கூறினார். மலேசியாவுக்குள் நுழையும் “கள்ளக் குடியேறிகளின்” எண்ணிக்கையை கணிசமாக குறைப்பதற்காக மலேசிய அதிகாரிகள் அந்த சோதனையை மேற்கொண்டனர். குடியேறிகள் 7032 பேரை சோதனை செய்ததில் “கள்ளக் குடியேறிகள்” என்று தெரியவந்த 2,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாக வான் ஜூனைடி கூறினார். கள்ளக் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க அமைச்சு நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது என்றும் சம்பந்தப்ட்ட நிறுவனங்களும் சமூகத்தினரும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்[1].

rohingya-muslim-myanmar-begs-bangladesh-coast-guard-official-stay

rohingya-muslim-myanmar-begs-bangladesh-coast-guard-official-stay

தீவிரவாதிகள் / போராளிகள் இயக்கத்தில் சேர மாறு வேடம் தரித்த ஆட்கள்என்று குற்றஞ்சாட்டும் மலேசியா: தீவிரவாதிகள் / போராளிகள் இயக்கத்தில் சேர விரும்பும் மலேசியர்களில் சிலர், அரசாங்கம் சாரா அமைப்புகளைச் சேர்ந்த உதவிப் பணியாளர்கள் போல் மாறு வேடம் தரித்து போராளிகள் குழுக்களில் சேர்கின்றனர் என்று மலேசிய உள்துறை துணை அமைச்சர் வான் ஜூனைடி துங்கு ஜஃபார் கூறியுள்ளார். அரசாங்கம் சாரா மனிதாபிமான அமைப்புகளைச் சேர்ந்த உதவிப் பணியாளர்கள் போல் அவர்கள் மாறு வேடம் தரித்திருப்பதால் யார், யார் அத்தகைய போராளிகள் குழுக்களில் சேரவுள்ளனர் என்பதை அடையாளம் காண்பது மிகவும் சிரமமாக உள்ளது என்று வான் ஜூனைடி கூறினார்[2]. ஐசிஸ் ஆள்சேர்ப்பு நடவடிக்கையால், உலகம் முழுவதும் மூளைசலவை செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் சிரியாவுக்குச் சென்று போராட தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனால், எந்த நாடும் அத்தகைய போராளிகள் / தீவிரவாதிகள் தங்களது நாட்டிலிருந்து சென்றார்கள் என்று ஊடகங்கள் குறிப்பிடவோ, அதனால், அந்நாட்டவர் மற்றவர்களால் சந்தேகிக்கப் படவோ, எந்த நாடும் விரும்பவில்லை. இதனால் தான், முஸ்லிம்கள் என்றாலும், முஸ்லிம் நாடுகள் தயங்க்கின்றன.

Rohingya Muslims found on boat rescued by Myanmar navy

Rohingya Muslims found on boat rescued by Myanmar navy

ரோஹிங்கா முஸ்லிம்கள் மேற்கு வங்காளத்தில் ஊடுருவலும், இந்தியாவிற்கு எதிராக அவர்களது நடவடிக்கைகளும் (2014)[3]: இவர்களின் பிரச்சினை இந்தியாவிலும் உள்ளது. இத்தகைய தீவிரவாதத் தொடர்புகள் மேற்கு வங்காளத்திற்கு நல்லதல்ல, இருப்பினும் ஆளும் கட்சியின் தொடர்புகள், ஆதரவு, போலீஸ் மெத்தனமாக நடந்து கொள்வது முதலியன மற்ற தீவிரவாத ஆராய்வு குழுக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 2013ம் ஆண்டில் மட்டும் 127 ரோஹிங்கா முஸ்லிம்களை மாநில அரசு கைது செய்துள்ளது. தீவிரவாத தொடர்புகள் இல்லையென்றாலும், ஐ.பி, ஒவ்வொருவனின் பின்னணியையும் ஆராய்ந்து வருகிறது. சுமார் 10,000 பேர் எல்லைகளைக் கடந்து இந்தியாவில் நுழைந்துள்ளனர் என்று தெரிய வருகிறது. ஸ்வரூப்நகர், பரிர்ஹத் மற்றும் கைகதா என்ற பகுதிகள் வழியாக அவர்கள் ஊடுருவியுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் ஊடகங்கள் இவர்களை “ரோஹிங்கர்”, “முஸ்லிம்கள்”, “இடம் பெயர்ந்தவர்கள்”, “அகதிகள்” என்று பலவாறாகக் குறிப்பிடுவதும் வியப்பாக உள்ளது. ஏனெனில், இவர்கள் எல்லோருமே மியன்மார் / பர்மா குடிமகன்கள். முசபர்நகர் கலவரங்களின் போது, ரோஹிங்க முஸ்லிம்கள் மயன்மாரில் எவ்வாறு கொடுமைப்படுத்தப் பட்டனர் என்பது பற்றிய புகைப்படங்கள், வீடியோக்கள் புழக்கத்தில் விட்டதால் தான் கலவரங்கள் ஏற்பட்டதற்கான காரணங்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், உள்ளூர் அரசியல்வாதிகள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டனர். ஆக, ரோஹிங்க முஸ்லிம்களின் பிரச்சினை இந்தியாவையும் பாதித்துள்ளது.

Rohingya migrants bring back food supplies dropped by a Thai army helicopter after jumping to collect them at sea from a boat

Rohingya migrants bring back food supplies dropped by a Thai army helicopter after jumping to collect them at sea from a boat

பங்களாதேசத்தின் பங்குமுஸ்லீம்களைப் பெருக்கி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பது: பர்மாவின் மத்தியில் இருக்கும் மெய்க்திலா (central city of Meikhtila) என்ற நகரத்தில் தான் பிரச்சினை ஆரம்பித்துள்ளது. பங்களாதேசத்தில் அதிகமாக உள்ள முஸ்லீம்களை அடுத்த நாடுகளில் நுழைய வைப்பது, அவர்களது வேலையாக உள்ளது. ஒரு இடத்தில் முஸ்லீம்கள் இடத்திற்கு அதிகமாக பெருகிவிட்டால், அவர்கள் அப்படியே இடம் கொள்ளாமல் பொங்கி பக்கத்தில் விழுந்து விடுவார்களாம். அப்படி ஒரு சித்தாந்தமே பேசப்பட்டு வருகிறது. இதனால், இந்த ரோஹின்யா முஸ்லீம்கள் பங்களாதேசத்திலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ளனர்[4]. இவர்களுக்கு இடம் கொடுப்பது, சலுகைகள் வழங்குவது முதலியவற்றை பௌத்தர்கள் விரும்பவில்லை. இது முஸ்லீம்களுக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன[5] என்று மனித உரிமைக் குழுக்கள் எடுத்துக் காட்டுகின்றன. முஸ்லீம்கள் வழக்கம் போல எண்ணிக்கையில் குறைவாக இருந்தால் ஒருமாதிரி இருப்பார்கள், எண்ணிக்கை அதிகமானால் வேலையை காட்ட ஆரம்பித்து விடுவார்கள். இவ்வாறே புதன்கிழமை, ஒரு புத்த பிட்சு, ஒரு முஸ்லீம் கடையில் பொருள் வாங்கும்போது, வாதம் ஏற்பட்டது. அது விவகாரமாகி கலவரத்தில் முடிந்தது. ஆனால், முதலில் கொல்லப்பட்டது அந்த புத்த பிட்சு தான். இதுதான் கலவரத்திற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது[6]. பர்மாவில் ஏற்பட்டுள்ள கலவரங்களுக்கு உலக அளவில் கவலை ஏற்பட்டுள்ளது[7].

Rohingya Muslims condition

Rohingya Muslims condition

ரோங்கிய பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி?: ஆசியான் அமைப்பைச் சேர்ந்த பணக்கார இஸ்லாமிய நாடுகளான இந்தோனேசியா, மலேசியா மற்றும் புருனேய் போன்றவை இம்முஸ்லிம்களை காக்கலாம் என்று சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்[8]. கடார் $ 5,00,00,000 கொடுப்பதாக அறிவித்துள்ளது[9]. உண்மையிலேயே 10 லட்சம் முஸ்லிம்களை பணக்கார முஸ்லிம் நாடுகள் தத்தெடித்துக் கொள்வது, அகதிகளாக ஏற்றுக் கொள்வது, போன்ற செயல்களை செய்வது மிகவும் சுலபமாகும். இருப்பினும், கருத்துகளைத் தெரிவிப்பதோடு நின்றுள்ளன. மியன்மாரும் தன்னுடைய எல்லைகளுக்குள் அவர்களுக்கு இடம் கொடுத்து பிரச்சினையை முடிக்கலாம்[10]. அதற்கு ரோஹிங்கிய முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும். தங்களுடைய எல்லைக் கடந்த போக்குவரத்துகள், உறவுகள், சம்பந்தங்கள் முதலியவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும்[11]. பௌத்தர்களிடையே நம்பிக்கையை வளர்க்க வேண்டும். தேசிய நீரோட்டத்தில் கலந்து தாங்களும் பர்மிய ச்நாட்டவர் என்ற உணர்வைக் கொள்ள வேண்டும். பௌத்தர்களும் அதேபோல, அவர்களை நடத்த வேண்டும், அதற்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இருப்பினும், என்ன நடக்கும் என்பது தெளிவாக இல்லாத நிலையுள்ளது. ஏனெனில், இப்பிரச்சினை அந்த அளவிற்கு அரசியலாக்கப் பட்டுள்ளது.

PARIS, FRANCE - OCTOBER 27:  The Heir Apparent of Qatar HH Sheikh Tamim bin Hamad Al Thani  attends the Memorial Service For Christophe De Margerie, Total CEO, at Eglise Saint-Sulpice on October 27, 2014 in Paris, France.  (Photo by Pierre Suu/Getty Images)

PARIS, FRANCE – OCTOBER 27: The Heir Apparent of Qatar HH Sheikh Tamim bin Hamad Al Thani attends the Memorial Service For Christophe De Margerie, Total CEO, at Eglise Saint-Sulpice on October 27, 2014 in Paris, France. (Photo by Pierre Suu/Getty Images)

ஊடகங்களும் பாரபட்சத்துடன் செய்திகளை கொடுத்து வருகின்றன. மற்ற நாட்டில் உள்ள முஸ்லிம்கள் இதனை முஸ்லிம் பிரச்சினையாக மாற்றி ஆர்பாட்டங்கள் முதலியவற்றைச் செய்து வருவதும் வினோதமாக உள்ளது. ரோஹிங்க முஸ்லிம்களை ஏன் ஆயுத போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்கவில்லை என்று தெரியவில்லை. கலவரங்களுக்கு காரணமான முஸ்லிம்களையும் கண்டிக்கவில்லை. அப்படியென்றால், முஸ்லிம்கள் அத்தகைய கலவரங்கள் தொடர வேண்டும் என்று நினைக்கிறார்களா?

© வேதபிரகாஷ்

30-05-2015

[1] http://www.tamilmurasu.com.sg/story/26037

[2] http://www.tamilmurasu.com.sg/story/43388

[3] https://buddhismstudies.wordpress.com/2013/03/23/why-buddhist-burma-could-not-get-peace-and-harmony/

[4] http://www.thehindu.com/news/international/south-asia/clashes-rock-myanmar-again/article4537607.ece

[5] Mark Farmaner of human rights group Burma Campaign UK said, “We’ve seen examples of anti-Muslim propaganda in Mon state, Shan state, Kachin state and Karen state, where people are distributing anti-Muslim leaflets,” he told the Guardian. “It may not be directly linked to violence in Rakhine state in an obvious way but … aan incident like this [an argument in a gold shop] wouldn’t normally lead to deaths and thousands of people trying to flee, if there weren’t already incredibly high tensions in the first place. That means it’s been organised and that no action has been taken to put a lid on it.” President Tun Khin of the UK-based Burmese Rohingya Organisation described the violence in Meikhtila as a state-sponsored attack, and said: “These are not communal clashes; this is not equal sides fighting. These are organised attacks to cleanse [Burma] of Muslims where the vast majority of those killed and displaced are Muslims … There should be laws on racism if the government wants to see durable peace in Burma.”

http://www.guardian.co.uk/world/2013/mar/22/burma-ethnic-violence-dead-meikhtila

[6] Troubles began on Wednesday after an argument broke out between a Muslim gold shop owner and his Buddhist customers. A Buddhist monk was among the first killed, inflaming tensions that led a Buddhist mob to rampage through a Muslim neighbourhood.

[7] http://online.wsj.com/article/SB10001424127887324103504578376403112277548.html

[8] Muslim countries within ASEAN – Indonesia, Malaysia and Brunei – have more than enough wealth to care for their Islamic neighbors

http://thediplomat.com/2015/05/aseans-refugee-embarassment/

[9] http://www.ibtimes.co.uk/qatar-pledges-33mn-indonesia-rescuing-muslim-rohingya-migrants-1503410

[10] http://thediplomat.com/2015/05/solving-the-rohingya-crisis/

[11] http://burmatimes.net/burmese-army-arrested-three-rohingya-with-bangladeshi-mobiles/

ஐசிஸ், அல்-குவைதா, இந்திய முஜாஹித்தீன் – இந்தியாவின் மீதான ஜிஹாதி தாக்குதல் அச்சுறுத்தல் – 712லிருந்து நடந்து வரும் ஜிஹாதிதான் – இந்துக்கள் எதிர்க்கொண்டே ஆகவேண்டிய நிலையாகிறது!

செப்ரெம்பர் 9, 2014

ஐசிஸ், அல்-குவைதா, இந்திய முஜாஹித்தீன் – இந்தியாவின் மீதான ஜிஹாதி தாக்குதல் அச்சுறுத்தல் – 712லிருந்து நடந்து வரும் ஜிஹாதிதான் – இந்துக்கள் எதிர்க்கொண்டே ஆகவேண்டிய நிலையாகிறது!

Propaganda for Jihad in India works differently

Propaganda for Jihad in India works differently

இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த வீடியோ ஆதாரம் வெளியானது: அய்மன் அல்- ஜவாஹரி [Ayman Al-Zawahari] என்ற அல்-குவைதாவின் படைத்தலைவனின் வீடியோ வெளியானப் பிறகு, இந்தியாவைத் தாக்க ஜிஹாதிகள் ஈடுபட்டுள்ள திட்டங்களைப் பற்றிய விவரங்கள் கிடைத்துள்ளன. ஊடகங்கள் இவற்றை ஏதோ புதியது போல வெளியிட்டு வந்தாலும், இவ்விவரங்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கு தெரிந்த விசயமே. இந்தியாவை முஸ்லிம் நாடுகளுடன் இணைக்க வேண்டும் என்ற நப்பாசை முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் உருவானதிலிருந்தே இருந்து வருகிறது. கஜ்வா-இ-ஹிந்த் [Ghazwa-e-Hind] என்ற பெயரில் இந்தியாவின் மீதான கடைசியான போர் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளனர். இந்த தீவிரவாத ஜிஹாதி சித்தாந்தம் மூலம் பல முஸ்லிம்களை மதரீதியில் கவர வைத்து, இந்தியாவின் மீதான தாக்குதலை மேற்கொண்டு, அதை காபிர்களின் பிடியிலிருந்து விடுபட வைத்து மறுபடியும், இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டும் என்று சொல்லிக் கொண்டு செயல் பட்டு வருகிறது. இந்திய துணைக்கண்டத்தில் ஜிஹாதி அஸ்திவாரம் அமைத்து அதன் மூலம் புனித போரைத் தொடர வேண்டும் [Jamaat Qaidat al-jihad fi’shibhi al-qarrat al-Hindiya or the Organisation of The Base of Jihad in the Indian Sub-Continent] என்று இவ்வியக்கம் தோற்றுவிக்கப் பட்டதாக ஜிஹாதிகள் கூறியிருக்கிறார்கள்[1]. இடைக்காலத்திலிருந்தே முகமதியர் இம்முறையைக் கையாண்டு வந்ததை நினைவுகூர வேண்டும்.

HT news cutting about Jihadi expansion in India

HT news cutting about Jihadi expansion in India

சுன்னிஷியா போராட்டமா, உலகத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலா?: அல்–கொய்தா தலைவன் பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் 2011ம் ஆண்டு மே 2–ந் தேதி அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டான், ஆனால், அவ்வியக்கம் தொடர்ந்து தீவிரவாதத்தை வளர்த்துக் கொண்டுதான் வந்துள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்பட பல்வேறு மத்திய கிழக்கு பகுதியில் செயல்பட்டு வரும் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பால்தான் ஐ.எஸ்.ஐ.எஸ். / ஐசிஸ் என்ற தீவிரவாத-பயங்கரவாத இயக்கம் தொடங்கப்பட்டது. அந்த தீவிரவாத இயக்கம் உலக நாடுகளுக்கே பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். (இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக் அண்டு சிரியா) என்ற தீவிரவாத இயக்கம் ஈராக் மற்றும் சிரியாவில் நுழைந்து அரசு படைகளை துவம்சம் செய்துவருகிறது. சுன்னி-சன்னி முஸ்லிம்களாக இருக்கும் இவர்கள், ஷியா முஸ்லிம்களைக் கொன்று வருகின்றனர். பாகிஸ்தானிலும் ஷியாக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவதை கவனிக்கலாம். இதற்கு பாகிஸ்தானின் ஆதரவும் இருந்து வருகின்றது. முன்பு இராக்-இரான் சணையிட்ட போது, அது உலக யுத்தமாக மாறுமா என்ற யேஷ்யம் இருந்தது. இப்பொழுது, மறுபடியும் இஸ்லாம் தீவிரவாதம் ஐசிஸ் போர்வையில் எல்லைகளைக் கடந்து செயல்பட்டு வருவதாலும், ஷியாக்களைக் கொன்று வருவதாலும், இரான் பதிலுக்கு தாக்குதலை ஆரம்பிக்குமோ என்ற பயம் இருந்து வருகிறது.

Al-Quida plan in India for Jihad

Al-Quida plan in India for Jihad

ஐசிஸ் உலக யுத்தத்திற்கு வழி வகுக்கிறதா?: தற்போது அல்–கொய்தாவை விட மிகவும் கொடிய தீவிரவாத இயக்கமாக கருதப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தால் ஈராக் தேசமே நிலைகுலைந்து உச்சக்கட்ட குழப்ப நிலையில் தவிக்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ்.சின் அபரிமிதமான வளர்ச்சி சவூதி அரேபியா, ஈராக், துருக்கி போன்ற அண்டை நாடுகளின் ஆட்சியாளர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், அந்நாடுகளிலிருந்து தான் அதற்கு பணவுதவி கிடைத்து வருகிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். ஹக்கானி என்ற குழுமம் அதிக அளவில் பணவுதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடட்ய்ஹ் தக்கது[2]. ஒருவேளை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கை கைப்பற்றி விட்டால் தங்கள் நாட்டின் மீதும் கை வைக்கலாம் என்று கருதி அங்குள்ள ஆட்சியாளர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை ஒடுக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார்கள். அதற்கு எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும். அமெரிக்கா உள்பட உலக நாடுகளும் இந்த புதிய திவீரவாத-ஜிஹாதி தாக்குதல்களை எதிர்க்க களத்தில் இறங்கியுள்ளது.  ஐ.எஸ்.ஐ.எஸ்.சின் வளர்ச்சி மத்திய கிழக்கு பகுதிக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று உணரப்பட்டு விட்டது. முஸ்லிம்களும் அதனை உணர்ந்து விட்டார்கள். இந்நிலையில் இந்தியாவில் அல்-கொய்தாவின் கிளை தொடங்கப்படும் என்று அந்த அமைப்பின் தலைவன் அய்மான்-அல்-ஜவாஹிரி மிரட்டல் விடுத்துள்ளான்[3].

IM Al-Quida nexus India

IM Al-Quida nexus India

காலிபைட்டும், இந்தியாவை அதில் சேர்க்க கையாளும் மானசீக முறைகளும்: மியன்மார், அசாம், குஜராத், காஷ்மீரம் முதலிய இடங்களில் முஸ்லிம்களுக்கு இழைக்கப் படும் துன்பங்களுக்கு எதிராக இது செயல்படும் என்று அறிவித்துள்ளார்கள். இது முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டி விடும் வேலையாக இருக்கிறது. பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பொய்யான புகைப்படங்களை வெளியிட்டு இந்தியாவில் கலவரம் மற்றும் தீவிரவாதத்தையும் வளர்த்து வருகின்றது. அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அய்மான் அல் ஜவாஹிரி பேச்சு அடங்கிய 55 நிமிடம் ஓடுகிற வீடியோ யு-டியுப் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியாகி உள்ளது[4]. அல் கொய்தா இயக்கத்தின் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது. இது இந்திய துணைக்கண்டத்தில் காயிதத் அல் – ஜிஹாத் என்று அழைக்கப்படும். இது அங்கு புனித போர்க்கொடியை தூக்கிப் பிடிக்கும். இஸ்லாமிய ஆட்சியை திரும்ப கொண்டு வரும். ஷரியத் சட்டத்துக்கு அதிகாரம் வழங்கும். இந்திய துணைக் கண்டத்திற்கு இஸ்லாம் திரும்ப வேண்டும்.

India Today cutting on ISIS-Jihad plot

India Today cutting on ISIS-Jihad plot

ஆசியாவை இஸ்லாம் மயமாக்கும் முயற்சி: ஆக்கிரமிப்புக்கு முன்பு இந்தியா, இஸ்லாமிய உலகின் ஒரு அங்கமாகத்தான் இருந்தது. இந்திய துணைக்கண்டத்தில், பர்மாவில், வங்காளதேசத்தில், அசாமில், குஜராத்தில், ஆமதாபாத்தில், காஷ்மீரில் தீங்குகளிலிருந்து (இஸ்லாமியர்களை) காக்கும். காயிதத் அல் – ஜிஹாத்தில் உள்ள உங்கள் சகோதரர்கள் உங்களை மறக்கவில்லை. அவர்கள் உங்களை அநீதி, ஆக்கிரமிப்பு, துன்புறுத்தல், பாடுகளில் இருந்து விடுவிப்பார்கள். இந்த இயக்கம் இன்றைக்கு தோன்றி விடவில்லை. இது 2 ஆண்டுகளுக்கு மேலாக புனிதப் போராளிகளை திரட்டுவதற்கு எடுத்த முயற்சியின் பலனாக விளைந்திருக்கிறது. இது வெற்றி பெறும். முல்லா உமர் நம்பிக்கையாளர்களின் உத்தரவு இது. ஒசாமா பின்லேடனின் அழைப்பை புதுப்பித்து பிரகடனப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு இது. எதிரிகளுக்கு எதிராக புனிதப்போர் தொடுக்க வேண்டும். தனது சொந்த பூமியை மீட்டெடுக்க வேண்டும். தனது இறையாண்மையை மீட்க வேண்டும். என்று வீடியோவில் கூறப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அல் கொய்தா இயக்கம் புதிய கிளையை தொடங்கியுள்ளது. என்று அமெரிக்க மீடியா மற்றும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

Osama and Ayman Al-Zawahari

Osama and Ayman Al-Zawahari

இந்தியாவில் தற்கொலைப் படை உருவாக்கும் முயற்சிகள்: அல்-குவைதா, இந்தியாவில் உள்ள இந்திய முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி இவற்றின் உதவி கொண்டு ஃபிதாயீன் என்ற தற்கொலைப் படை அமைத்து இந்திய முக்கிய நகரங்களைத் தாக்கும் திட்டம் தெரிய வந்துள்ளது[5]. செயிக் என்ற இந்திய முஜாஹித்தீனின் தொழிற்நுட்ப ஆள் சஹரன்பூர் ரெயில் நிலைத்தில் வெள்ளிக்கிழமை (05-09-2014) அன்று பிடிபட்டான். தில்லி அதில் முக்கிய இடமாக உள்ளது, என்று அவனிடம் விசாரித்ததில் தெரிய வந்துள்ளது[6]. யாசின் பட்கல் பிடிபட்டபோது, இவன் நேபாளத்திற்கு ஓடிச் சென்று விட்டான். 2010ல் ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்திய வெடிப்பொருட்களை தான் பெற்றுக்கொண்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளான். ஜம்மு-காஷ்மீர், கேரளா, அசாம், குஜராத், தமிழ்நாடு முதலிய மாநிலங்களில் அவர்களுக்கு உதவி கிடைத்து வர் உவதாகவும் தெரிகிறது. இதனால் அம்மாநிலங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரளா-காஷ்மீர் ஜிஹாதி இணைப்பு ஏற்கெனவே பல உண்மைகளை வெளிக்காட்டியுள்ளது. அதில் தமிழகத்தின் பங்கும் இருப்பது கவனிக்கத் தக்கது.

Isis targets India

Isis targets India

தேடப்பட்டு வரும் உலக குற்றவாளிகளை தெய்வீக மயமாக்கும் இஸ்லாமிய இறையியல்: அமெரிக்காவால் தேடப்படும் தீவிரவாதிகளின் பட்டியலில் இருக்கும் முதல் நபர் அல்–கொய்தா இயக்கத்தின் தலைவன் அய்மான் அல்–ஜவாஹிரி. இரண்டாவது இடத்தில் இருப்பவன் வேறு யாரும் அல்ல, ஈராக், சிரியா அரசுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் அபுபக்கர் அல்–பாக்தாதி தான். சன்னி பிரிவைச் சேர்ந்த இவன், அடுத்த ஒசாமா பின்லேடன் என்று அழைக்கப்படுகிறான். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு தலைமை தாங்கும் 43 வயதான அல்–பாக்தாதி, பெரும்பாலும் தனது முகத்தை வெளிக்காட்டுவது இல்லை. தனது இயக்க தளபதிகள் மத்தியில் பேசும் போது கூட முகத்தை மூடிக் கொண்டிருப்பான். இதனால் இவரை மாயாவி ஷேக் (‘இன்விசிபிள் ஷேக்’) என்றும் கூறுகிறார்கள்[7]. இவ்வாறுதான் தீவிரவாத இறையியலை பயங்கரவாதிகள் வளர்த்து வருகிறார்கள். இது இஸ்லாமை சித்தாந்தமாகக் கொண்டு வளர்ந்து வரும் இளைஞர்களை எளிதில் ஜிஹாதில் ஈடுபட்டு, ஷஹீதுகளாக மாற வைக்கிறது.

Pan-Islamic jihadi and state assumed

Pan-Islamic jihadi and state assumed

இந்துக்களைக் கொல்ல தயாக இருக்கும் குரூர ஜிஹாதிகள்: ஜிஹாதிகள் இவ்வாறு வெளிப்படையாக இந்தியாவைத் தாக்க வேண்டும், இந்துக்களைக் கொல்ல வேண்டும் என்றெல்லாம் வெளிப்படையாக மிரட்டிக் கொண்டிருந்தாலும், முஸ்லிம் அமைப்புகள் ஏதோ தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது போல ஒரு புறம் ஜிஹாதிகளைக் கண்டிப்பது, மற்றும் இன்னொருப் பக்கம், ஆஹா இதெல்லாம் பிஜேபிக்குத்தான் சாதகமாக அமையும் என்றும் பேசுவதும்[8] படுவேடிக்கையாக இருப்பதுடன், அவர்களது போலியான மனப்பாங்கையும், இரட்டை வேடங்களையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது. இந்தியாவைப் பொறுத்த வரையில், பெரும்பாலான முஸ்லிம்களின் எண்ணங்களில் ஒரு பக்கம் சந்தோஷமும், அதே நேரத்தில் சுன்னி-ஷியா போராட்டங்கள், அதிகமான ஷியாக்கள் கொல்லப் படுவது, இரானை உசுப்பிடுமோ என்றும் பயந்து கொண்டிருக்கிறார்கள். ஷியாக்கள் பெரும்பான்மையாகக் கொண்ட இரான், இது வரையிலும் அமைதியாக இருப்பது கவனிக்கத் தக்கது.

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

குரூர ஜிஹாதித்துவத்தை மறைக்க இந்துத்வத்தின் போடும் பழிகள்: இந்துத்வவாதி மோடியின் கீழுள்ள பிஜேபி ஆட்சி இருப்பதினால், “இந்து ராஷ்ட்ரா” என்ற அவர்களது திட்டத்திற்குத்தான் இது உதவும் என்றும் திரித்து முஸ்லிம் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன[9]. சையீத் நக்வி என்றவரும் “ஏற்கெனவே மதரீதியில் பிளவு பட்டுள்ள இந்து-முச்லிம்களிடையே இது மேலும் தீயை வளர்க்கும்”, என்று இதே தோரணையில் எழுதியுள்ளார்[10]. ஆனால், இந்தியாவின் மீது எப்படி முகமதியர்கள் 712லிருந்து தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள் என்ற சரித்திரத்தைப் படித்துப் பார்த்தால், முஸ்லிம்களின் குரூரக்கொலை திட்டம், இந்துக்களை தாக்கியது, கொடுமைப்படுத்தியது, கோவில்களை இடித்தது என்ற பல உண்மைகள் வெளி வரும். ஆகவே, முகமதியர்கள் / முஸ்லிம்கள் ஏதோ சாத்துவிக சித்தர்கள், அஹிம்சை புத்தர்கள் என்ற ரீதியில் இவர்கள் வக்காலத்து வாங்கிக் கொண்டு வருவது மிகக்கேவலமான பிரச்சாரம் ஆகும். முதலில் இத்தகைய ஜிஹாதிகளை ஒழிக்க வேண்டும் என்று அவர்கள் குரல் கொடுக்க வேண்டுமே தவிர மறைமுகமாக அவர்களது குரூரச் செயல்களை நியாயப்படுத்துவது அவர்களுடன் சேர்ந்து செயல்படுவது போலத்தான் ஆகும்.

 Yasin Bhatkal arrested

712லிருந்து நடந்து வரும் ஜிஹாதிதான்இந்துக்கள் எதிர்க்கொண்டே ஆகவேண்டிய நிலையாகிறது!: இடைக்காலத்தில் இந்தியர்களின் / இந்துக்களின் ஆட்சியாதிக்கம் மத்தியத் தரைக் கடல் பகுதிகளில் இருந்து வந்துள்ளது. இஸ்லாம் வளர்ந்து கிழக்குப் பக்கம் பரவ ஆரம்பித்த போது, அது இந்தியர்களின் ஆதிக்கத்தைக் குறைக்க ஆரம்பித்தது. திடீரென்று தாக்கி கொள்ளை-கொலைகளில் ஈடுபட்டு வந்த முகமதிய படைகள் என்றுமே வஞ்சக முறைகளைத் தான் கையாண்டு வந்துள்ளன. 700 ஆண்டுகள் ஆட்சி, ஐரோப்பியர்கள் / இங்கிலாந்துவாசிகளிடம் சென்று, விடுதலைப் பெற்றப் பிறகு, இந்தியாவை காலிபைட்டில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம்களுக்கு இருந்து வந்துள்ளது. இதற்கு “கிலாபத் இயக்கத்திற்கு” காந்தி ஆதரவு தெரிவித்ததும் தீயில் எண்ணையை வார்த்தது போலாகியது. இப்பொழுதைய காலக் கட்டத்தில் ஐசிஸ் கிலாபத்தை மறுபடியும் நிலைநிறுத்த பாடுபடுவதும், காந்திய ஆதரவையும் கூர்மையாக ஆராய வேண்டியுள்ளது. செக்யூலரிஸவாதிகள் மேற்குறிப்பிட்டபடி, இந்துத்வத்தை குறைகூறி, இந்த குரூர-பயங்கரவாதத்தை ஆதரிக்க இப்பொழுதே ஆரம்பித்து விட்டன. இனி இந்திய ஊடகங்களில் அத்தகைய பிரச்சாரங்கள் அதிகமாகும். வழக்கம் போல கம்யூனிஸ்டுகளும் தங்களது வலையை வீச ஆரம்பிப்பார்கள். இஸ்லாமிய நிதியுதவி, வழ்க்ஷக்கம் போல கிடைக்கும். எனவே இந்துக்கள் தங்களது மீதான தாக்குதலை, புதிய யுத்தமுறையை நன்றாகப் புரிந்து கொண்டு, இத்தகைய விஷமப்பிரச்சாரவாதிகளை வெளிக்காட்ட வேன்டும், தனிமைப் படுத்த வேண்டும்.

வேதபிரகாஷ்

08-09-2014

[1] http://www.firstpost.com/india/al-qaeda-threat-not-just-kashmir-kerala-could-be-a-terror-hot-spot-too-1700487.html

[2] Gretchen Peters, Haqqani Network Financing: The Evolution of an Industry, Harmony Program, Combating Terrorism Centre, USA, 2012.

[3] http://www.dailythanthi.com/News/World/2014/09/04084404/Al-Qaeda-Announces-India-Wing—Ayman-al-Zawahri.vpf

[4] http://www.dailythanthi.com/News/India/2014/09/05144641/We-are-prepared-to-face-al-Qaeda-threat-IAF-chief.vpf

[5] http://www.deccanchronicle.com/140908/nation-crime/article/al-qaeda-plans-raise-suicide-squads-india-help-im-and-banned-simi

[6] http://www.deccanchronicle.com/140908/nation-crime/article/indian-mujahideen-operative-reveals-delhi-was-next-hit

[7] http://www.dailythanthi.com/News/World/2014/09/04084404/Al-Qaeda-Announces-India-Wing—Ayman-al-Zawahri.vpf

[8] http://gulfnews.com/opinions/columnists/al-zawahiri-s-call-will-only-make-things-easier-for-bjp-1.1381940

[9] Saeed Naqvi, Al Zawahiri’s call will only make things easier for BJP, Published: 20:00 September 7, 2014, http://gulfnews.com/opinions/columnists/al-zawahiri-s-call-will-only-make-things-easier-for-bjp-1.1381940

[10] http://www.risingkashmir.com/can-zawahiri-add-to-communal-cauldron-already-full/

சுன்னி-ஷியா குண்டுவெடிப்பு, கொலைகள் – ஜிஹாதா, இஸ்லாமா, அமைதியா?

மே 18, 2013

சுன்னி-ஷியா குண்டுவெடிப்பு, கொலைகள் – ஜிஹாதா, இஸ்லாமா, அமைதியா?

இரான்-இராக் சண்டை, சச்சரவு, போர், யுத்தம், மோதல் – இவற்றை மற்ற நாட்டவர், குறிப்பாக இந்தியர்கள் புரிஎது கொள்ளாமல், ஏதோ பெட்ரோலுக்காக, மெக்கா-மெதினா, ஹஜ் போன்ற விஷயங்களுக்காக அரித்துக் கொள்கின்றனர் என்று நினைக்கலாம்.

ஆனால், முஸ்லீம்களாக இருந்து கொண்டு, எப்படி ஒருவரையொருவர் கொன்றுக் கொண்டிருக்கிறார்கள்?

முஸ்லீம்களாக இருந்து கொண்டு, எப்படி ஒருவர் மற்றவருடைய மசூதியை, மசூதி இல்லை என்கிறார்கள்?

முஸ்லீம்களாக இருந்து கொண்டு, எப்படி ஒருவர் மற்றவருடைய மசூதியைத் தாக்குகிறார்கள்?

இராக்கில் இரண்டு குண்டு வெடிப்புகளில், ஒன்று மசூதி மற்றும் இரண்டு இறுதி / சாவு ஊர்வலம் – என்று குண்டுகள் வெடித்ததில் 49 பேர் கொல்லப்பட்டுள்ளனர்[1].

பாகிஸ்தானில் சுன்னிகள், ஷியாக்களை மசூதி இடிப்பு, குண்டு வெடிப்புகள், கொலை என்று  கொடுமைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்[2]. பெண்கள் கல்லூரி என்றலும் விடுவதில்லை[3]. ஆனால், முஸ்லீம்களே முஸ்லீம்களை ஏன் தாக்குகின்றனர் என்பதனை பாகிஸ்தானோ, ஊடகங்களோ விளக்குவதில்லை. இங்குதான் அந்த ஜிஹாதின் மகத்துவம் வருகின்றது. குரானின் மீது ஆணையிட்டு, ஒரு முஸ்லீம் மறு முஸ்லீமை காபிர் என்று அறிவித்து விட்டால், அவன் மீது ஜிஹாதைத் தொடங்கிவிடலாம். அதாவது அந்த மறு முஸ்லீம் என்பவன் ஒரு குறிபிட்டப் பிரிவை / சமூகத்தை / நாட்டை சேராதவனாக இருப்பான். பாகிஸ்தானில் ஷியாக்கள் தாக்கப்படுவது, அவர்கள் மசூதிகள் இடிக்கப்படுவது, அவர்களது மசூதிகளில் குண்டுகளை வெடிக்கச் செய்வது எல்லாமே ஜிஹாத் தான், தீவிரவாதம் தான். அது எப்படி வேலை செய்கிறதோ, அதேபோலத்தான் இந்தியாவிலும் வேலை செய்கிறது.

இராக்கின் தலைநகரான பாக்தாத்தின், வடமேற்கில் உள்ள பகுபா என்ற இடத்தில் உள்ள மசூதி வளகத்தில் இரண்டு குண்டுகள் வெடித்தன. பிறகு, இன்னொரு குண்டு, உதவி செய்து கொண்டிருந்த போது வெடித்தது.

கடந்த இருவாரங்களாக ஷியைத் / ஷியா முஸ்லீம்களின் மீது நடத்தப் பட்ட கார் வெடிகுண்டு மற்றும் இதர தாக்குதல்களில் சுமார் 40 ஷியா முஸ்லீம்கள் கொல்லப்பட்டுள்ளனர்[4]. சதாம் உசைன் போன பின்பும் இங்கு அமைதி திரும்பவதாகத் தெரியவில்லை. சுன்னி-ஷியா முஸ்லீம்கள் இடையில் கடுமையான சண்டை தொடர்ந்து கொண்டிருக்கின்றது[5]. 2006-07 காலங்களில் அமெரிக்கத் துருப்புகள் இருந்தபோதும், இந்நிலைமை இருந்தது[6].

ஷியாமுஸ்லீம்கள்சன்னிமுஸ்லீம்களா; தாக்கப்படுவது: ஷியா முஸ்லீம்கள், சன்னி முஸ்லீம்களால் தாக்கப்படுவது, செக்யூலரிஸ இந்தியர்களுக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் பாகிஸ்தானில் “முஸ்லீம்கள்” என்று கருத/மதிக்கப்படுவதில்லை. அவர்களும், அவர்கள் மசூதிகளும் பலமுறைத் தாக்கப்பட்டுள்ளன[7]. சென்ற 04-09-2010 அன்று அவர்கள் தாக்கப்பட்டனர்[8]. செப்டம்பர் 1, 2010 அன்று, லாஹூரில் ஒரு ஷியா மசூதியில் – கர்பலா கமய் ஷா (Karbala Gamay Shah) ஆயிரக்கணக்கானவர்கள் ஹஜரத் இமாம் அலியின் இறப்பு – உயிர்த்தியாகம் மற்றும் தொழுகைக்காகக் கூடியிருக்கும் போது (Yaum-e-Ali), குண்டுகள் வெடித்ததில் 17 / 28 பேர் கொல்லப்பட்டனர்[9]. பல ஆண்டுகளாக அவர்கள் தாக்கப்படுவது / கொல்லப்படுவது விவரங்களை இங்கு கொடுத்துள்ள[10] அட்டவணையில் பார்க்கலாம்.இஸ்லாம்பெயரில் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமைத் தாக்குகிறார்கள்[11] என்பதனை இஸ்லாமியர்கள் விளக்க வேண்டும்[12].

© வேதபிரகாஷ்

18-05-2013


[6] Iraq saw destructive sectarian conflict during the height of the U.S. engagement in the country in 2006 and 2007, and the so-called Arab Spring political uprisings in Iraq’s neighbors have contributed to a resurgence of sectarian volatility here.

பங்களாதேசத்தில் லட்சக்கணக்கான அடிப்படைவாத முஸ்லீம்களின் ஊர்வலம், ஆர்பாட்டம் எதனைக் காட்டுகிறது?

ஏப்ரல் 7, 2013

பங்களாதேசத்தில் லட்சக்கணக்கான அடிப்படைவாத முஸ்லீம்களின் ஊர்வலம், ஆர்பாட்டம் எதனைக் காட்டுகிறது?

இஸ்லாமியநாடாக்கஅடிப்படைவாதிகளின்போராட்டம்: பங்களாதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவதூறு சட்டத்தைத் திரித்து அமைத்து, இணைதளங்களில் இடுகையிடுகிறவர்களுக்கு தூக்குத் தண்டனை செல்லுபடியாகின்ற மாதிரி செய்ய வேண்டி ஆர்பாட்டம் நடத்தினர்[1]. இது அவர்கள் பட்டியல் போட்ட 13 கோரிக்கைகளில் ஒன்றாகும். “இஸ்லாமை தூஷிப்பவர்களுக்கும் தூக்கு”, “இஸ்லாமை விமர்சிப்பவனுக்கு தண்டனை” என்று ஆர்பரித்தனர். அவர்களது மற்ற கோரிக்கைகள், பின்வருமாறு[2]:

  1. அரசியல் நிர்ணய சட்டத்தில் அல்லாவின் மீதான முழுநம்பிக்கையை உறுதி செய்யப்படவேண்டும்[3].
  2. அஹ்மதியா போன்றவர்களை முஸ்லீம்கள் அல்ல என்று பிரகடனபடுத்த வேண்டும்.
  3. அந்நிய கலாச்சாரத்தை அறவே தடை செய்ய வேண்டும்[4].
  4. ஆண்கள்-பெண்கள் பொது இடங்கள், மற்ற இடங்களில் சேர்ந்து பேசுவதை, கூடுவதைத் தடுக்க வேண்டும்.
  5. எல்லா நிலைகளிலும் இஸ்லாமிய படிப்பைக் கட்டாயமாக்க வேண்டும்.
  6. பொது இடங்களில் சிற்பங்கள், சிலைகள் முதலியவை வைக்கக் கூடாது.
  7. ஊடகங்களில் இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள் இருக்கக் கூடாது.

இவர்களை “இஸ்லாமிஸ்டுகள்” என்று சொல்லப்படுகின்றனர். பற்பல இஸ்லாமிய மதப்பள்ளிகள், கல்லூரிகள், மதஸாக்கள் முதலியவற்றிலிருந்து சேர்ந்து ஹஃபேஜாத்-இ-இஸ்லாம் [Hefazat-e-Islam] என்ற அமைப்பின் கீழ் சனிக்கிழமை அன்று ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்தினர்[5]. அவர்கள் டாக்காவை நோக்கி வர ஆரம்பித்தனர். இரண்டு லட்சம் மக்கள் கூடியதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்[6].

அடிப்படைவாதிகளை எதிர்க்கும் மிதவாதிகள்: இதை எதிர்த்து தலைநகர் டாக்காவில் 22-மணி நேர முழு அடைப்பு கோரி அழைப்பு விடுத்திருந்த மாணவர்கள் மற்ற மதசார்பற்றவர்கள், இந்த கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்[7].  “அடிப்படைவாதம் ஒழிக”, என்று அவர்கள் முழக்கம் இட்டனர். மதவாதம் ஒழிக” அடிப்படைவாத முஸ்லீம்களுக்கும் மற்ற முஸ்லீம்களுக்கும் இடையே கைகலப்பு, அடி-தடி ஏற்பட்டது. இதற்குள் போலீஸார், இஸ்லாமிஸ்டுகளை துரத்தியடித்தனர். அதற்குள் கடந்த 24-மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரங்களில் ஆளும் அவாமி லீக் கட்சியினர் ஜமாத்-இ-இஸ்லாமி ஆர்பாட்டக் காரர்களுடன் மோதியபோது இருவர் கொல்லப்பட்டனர்.  இதனால், இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆகிறது[8].

அரசு எடுக்கும் நடவடிக்கைகள்: பங்களாதேச அரசு, நிச்சயமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்குண்டுத் தவிக்கிறது என்று தெரிகிறது. 1971 போர் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை அளித்ததிலிருந்து, மதவாதிகள் இந்துக்களைக் கொல்வது என்பதலிருந்து, மற்ற மிதவாத முஸ்லீம்களை மிரட்டுவது, முதலிய வேலைகளில் இறங்கியுள்ளனர். வெளிநாட்டு உதவிகளால் வாழும் அரசு, தான் “செக்யூலார்ரென்றும் காட்டிக் கொள்ள முயல்கிறது. அரசு ஏற்கெனவே தடை உத்தரவை அமூல் படுத்தி, யாரும் உள்ளே நுழைய முடியாத அளவில் டாக்காவை தனிமைப் படுத்தினர். சபாங் சதுக்கத்தில், போர் குற்றவாளிகளுக்கு தண்டனை என்று ஆதரிப்பவர்கள் கூடி, இஸ்லாமிஸ்டுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போலீஸார் அவர்களையும் அப்புறப்படுத்தினர்.

இஸ்லாமிஸ்டுகள்மற்றும்செக்யூலரிஸ்டுகள்: இஸ்லாமிய, அரபு ஊடகங்கள் ஆர்பாட்டக் காரர்களை “இஸ்லாமிஸ்டுகள்” என்றும், ஐரோப்பிய ஊடகங்கள் எதிர்-ஆர்பாட்டக்காரர்களை “செக்யூலரிஸ்டுகள்” என்றும் குறிப்பிட்டனர். ஆனால், பங்களாதேசத்தில் “செக்யூலரிஸ்டுகள்” என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், முன்பு, இந்துக்கள் குரூரமாக, கோரமாக, கொடுமையாகக் கொல்லப்பட்டதற்கு, தாக்கப்பட்டதகு, எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவில்லை. இந்திய ஊடகங்களுக்குக் கவலையே இல்லை. இப்பொழுதும் ஐ.பி.எல் மோகத்தில் மூழ்கியுள்ளது.

இது சம்பந்தமாக கீழ்கண்ட இடுகைகளையும் பார்க்கவும்:

  • 1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன[9] – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!
  • ·         முஸ்லீம்களின் வெறியாட்டம்பங்களாதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டனர், வீடுகள் சூரையாடப்பட்டன, கோவில்கள் எரியூட்டப்பட்டன[10].
  • “இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது” – இந்துக்களுக்கு எதிராக பங்காளதேசத்தில் தொடரும் குரூரக்கொலைகள், குற்றங்கள்[11].

வேதபிரகாஷ்

07-04-2013


[1] Hefajat-e-Islam, an Islamic group which draws support from tens of thousands of seminaries, organised the rally in support of its 13-point demand including enactment of a blasphemy law to prosecute and hang atheist bloggers.

[2] The demands included declaration of the Ahmadiyya Muslim sect as non-Muslim, a ban on free mixing of men and women, making Islamic education mandatory at all levels and no installation of any sculpture in any public place.

http://edition.cnn.com/2013/04/06/world/asia/bangladesh-blasphemy-protest/

[3] The group listed 13 demands, including reinstating “absolute trust and faith in the Almighty Allah” in the nation’s constitution, which is largely secular, and passing a law providing for capital punishment for maligning Allah, Islam and its Prophet Muhammad.

http://abcnews.go.com/International/wireStory/hardline-muslims-rally-bangladesh-amid-shutdown-18895209#.UWEgOqJTCz4

[4] The group’s other demands include declaring the minority Ahmadiya sect living in the country non-Muslims and banning “all foreign culture, including free mixing of men and women.”