இஸ்லாம் பெயரில் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமைத் தாக்குகிறார்கள் என்பதனை இஸ்லாமியர்கள் விளக்கவேண்டும்
பாகிஸ்தான் மசூதிகளில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்: 80 பேர் பலி

அஹமதியா முஸ்லீம்களை தாக்கும் இந்த ஜிஹாதிகள் யார்? அஹமதியா முஸ்லீம்களை தாக்கும் இந்த ஜிஹாதிகள் யார் என்று அடையாளங்காண முஸ்லீம்களே முயன்று வருகின்றனராம். அஹமத்தியாக்கள் மசூதிகளில் தொழுகையில் இருக்கும் அந்நாளில், யுயைம்-இ-தக்பீர் – பாகிஸ்தானின் தன்னிரைவு நாள் (Youm-i-Takbeer or Pakistan’s Self Reliance Day) கொண்டாடப்பட்டதாம். மே.28,1998ல் பாகிஸ்தான் அணுசோதனை நடத்திய தினமாக அது கொண்டாடப் படுகிறது. ஆனால், அது “இச்லாமியத் தன்னிரைவு” நாள் இல்லை என்று “காஃபிர்கள்” மீது ஜிஹாத் தொடுக்கப் பட்டுள்ளது அறிந்து, “முஸ்லீம்கள்” நடுங்கி சாகிறார்களாம். வெள்ளிக் கிழமை என்றாலே குண்டு வெடிக்குமோ, தொழுகையில் சுடுவார்களோ, மசூதிகளில் பிணங்கள் விழுமோ என்று அஞ்சுகிறார்களாம்.
கராச்சி திட்டத்தின் தொடர்ச்சியா? தெரிக்-இ-தாலிபான் (Tehrek-e-Taliban) மற்றும் அல்-குவைதா அல்-ஜிஹாத் (Al-Qaeda Al-Jihad) என்ற இரண்டு தீவிரவாதக் குழுக்களின் மீது சந்தேகம் இருந்தாலும், தெரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பின் பங்கு தெரியவருகின்றது. தாக்குதல் நடத்திவர்கள் எல்லாமே 15 முதல் 18 வரை வயதுடையவர்களாக இருப்பதாகவும், பிடிபட்ட ஒருவன் தான் கராச்சியில் ஒரு மதரஸாவில் பயிற்சி பெற்றதாகவும் கூறியுள்ளான். ஆகவே, மறுபடியும் பாகிஸ்தானிய ஆதரவு வெளிப்படுகிறது, அதாவது கராச்சியிலேயே, அவ்வாறு ஒரு மதரஸா நடத்தி, தீவிரவாத பயிற்சி பாகிஸ்தானிய உளவாளி, ராணுவம் மற்ற பிரிவுகளுக்குத் தெரியாமல், அளிக்கமுடியாது. ஏனெனில், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை வைத்துக் கொண்டு ஐ.எஸ்.ஐ ஏற்கெனெவே அந்த வேலையை செய்து வருகிறது. ஆகவே, இது “கராச்சி திட்டத்தின்” ஒரு பகுதியாகவும் இருக்கலாம். சமீபத்தில், “காஃபிர்களைத் தாக்கும் திட்டம்” ஒன்று வடிவமைத்து, செயல்படுத்தப் படுவதாகத் தெரிகிறது.
முஸ்லீம்-அல்லாதவர்களைத் தாக்குவது ஏன்?: இஸ்லாத்தைப் பொறுத்தவரையிலும், மத ரீதியில் மூளைச்சலவைச் செய்யப் பட்ட ஒரு முஸ்லீம், ஒரு காஃபிரைக் கொல் என்றால், அது அல்லாவின் ஆணை என்றே ஏற்றுக் கொண்டு கொன்றுவிடுவான். சொர்க்கத்தின் வாசல்கள் அவனுக்காகத் திறந்து வைக்கப் பட்டிருக்கின்றன என்ற நினைவுகளில்தான் அவன் இருப்பான். அதுபோல, அஹமதியாக்கள் “காஃபிர்கள்” என்று அறிவித்தவுடன், அதாவது, அப்படியொரு ஃபத்வா – மத ரீதியிலான ஆணையிட்டவுடந்தான், இந்த ஜிஹாதிகள்-புனித போராளிகள் புறப்பட்டு காஃபிர்களைக் கொல்கிறார்கள். அவர்களைப் பொறுத்த வரைக்கும் முஸ்லீம்-அல்லாதவர்கள் என்றதில் இப்படி முஸ்லீம்களே வரும்போது, இதர அல்-கிதாபியர்களையோ அது இல்லாத காஃபிர்களின் நிலைப்பற்றி சொல்லவே வேண்டாம். அல்-கிதாபியர்கள் என்பவர்கள் “வெளிப்படுத்தப் பட்ட புடததகங்களை” உடையவர்கள், இதில் யூதர்கள், கிருத்துவர்கள், முஸ்லீம்கள் தாம் அடங்குவர். இந்த மூன்று கோஷ்டிகள்தாம் உலகத்தில் பல மத கலவரங்களுக்கு, சண்டைகளுக்கு, போர்களுக்கு, உலக யுத்தங்களுக்குக் காரணமாக இருந்து வந்துள்ளன.
அஹமதியாக்கள் தொடர்ச்சியாகத் தாக்கப் பட்டு வருகிறர்கள்: மேலும், கைதியான் என்ற இடத்தைச் சேர்ந்த அஹமதியா முஸ்லீம்களை பாகிஸ்தானிய சுன்னி முஸ்லீம்கள், “முஸ்லீம்கள்” என்று கருதுவதில்லை. அவர்கள் 1940களிலிருந்தே தாக்கப் பட்டு வருகிறார்கள். அவர்களது மசூதிகள் இடிக்கப் பட்டு வருகின்றன. ஆனால், இப்பொழுது ஜிஹாதி-தாலிபான் வலைக்குள் இந்த முஸ்லீம்கள் உட்பட்டிருப்பது, ஷியாக்களுக்குக் குறிப்பாக கவலையளித்துள்ளது. ஏனெனில், சுன்னிகள், ஷியாக்ககளைத் தாக்குவது என்பது சகஜமாக இருக்கிறது. அஹமதிய முஸ்லீம்கள் “நபிமார்கள்” என்றமுறையில், ராமன், கிருஷ்ணன், சிவன், புத்தன், என்று அனைவரையும் ஏற்றுக் கொள்வர். இந்த விஷயத்தில் சில முஸ்லீம்கள் ஒப்புக்கொள்வதுண்டு. அதே மாதிரி, நபிக்குப் பின்னும் சிலரை நபிக்களாகக் கருதுவர். இங்குதான் பிரச்சினை வருகிறது. ஏனெனில், இஸ்லாத்திற்கு முன்பு நபிகள் இருந்தால், அவர்களை அல்லாத்தான் அனுப்பி வைத்திருக்க முடியும், ஆனால், இஸ்லாத்திற்கு பிறகு, அல்லாவிற்கு அந்த வேலையில்லை, அதாவது, முஹம்மதுவோடு அந்த “ஸ்தானம்” பூர்த்தியாகிறது. ஆகையால் தான், முஹமத்துவிற்கு பின் நபி என்ற கோட்பாட்டை உருவாக்கும் அத்தகைய முஸ்லீம்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.
அல்லாவைத்தவிர கடவுள் இல்லை, முஹம்மதுதான் நபி: ஒப்புக்கொள்ளவேண்டிய கடவுள் ஒருவனாக / ஒன்றாக இருக்கவேண்டும் என்றாலும், இரண்டு நம்பிக்கைகள் இருக்கவேண்டும். இரண்டும் பின்னிப்பிணைந்துள்ளது அல்லது பிரிக்கமுடியாதது.
இதன் ஒரே அர்த்தம் –
- “அல்லாதான் கடவுள்”,
- “அல்லாதான் கடவுள் வேறு கடவுள் இல்லை”
- “அல்லாதான் கடவுள் வேறு கடவுள் இல்லை”, இல்லவே இல்லை”
- “அல்லாதான் கடவுள் வேறு கடவுள் இல்லை”, இல்லவே இல்லை, இருக்கவும் கூடாது”,
- “அல்லாதான் கடவுள் வேறு கடவுள் இல்லை”, இல்லவே இல்லை, இருக்கவும் கூடாது, இருக்கவும் முடியாது”,
இப்படி விரியும், விளகங்கள், அதற்கேற்ற செயல்கள், செயாபாடுகள், திட்டங்கள் வளறும். அதே மாதிரி, இரண்டாவது சரத்திற்கு / விதிக்கு வரும் போது –
- “முஹம்மது தான் நபி”,
- “முஹம்மது தான் நபி, அவர்க்குப் பிறகு வேறு நபி இல்லை”,
- “முஹம்மது தான் நபி, அவர்க்குப் பிறகு வேறு நபி இல்லை, இல்லவே இல்லை”,
- “முஹம்மது தான் நபி, அவர்க்குப் பிறகு வேறு நபி இல்லை, இல்லவே இல்லை, இருக்கவும் கூடாது”,
இப்படி விரியும், விளகங்கள், அதற்கேற்ற செயல்கள், செயாபாடுகள், திட்டங்கள் வளறும்.
இதற்குத் துளிகூட வேறுவிதமாக விளக்கம் அளித்தாலோ, சித்தாந்தத்தை மனத்தில் கொண்டாலோ, மற்ற மதங்களுடன் சமரசம் போன்று “எல்லா மதங்களும் ஒன்று”, “எல்லா கடவுளர்களும் ஒன்று” என்ற ரீதியில் பேசினாலோ அவ்வளவேத்தான். ஆக, இப்படித்தான் பல “இஸ்லாம்கள்” உருவாகி வருகின்றன. “தாலிபான் இஸ்லாம்”, “ஜிஹாதி இஸ்லாம்”, முஜாஹித்தீன் இஸ்லாம்”, “அல்-உம்மா இஸ்லாம்”, “அல்-குவைதா இஸ்லாம்” என பல இஸ்லாம்கள் உருவாகி விட்டன. எல்லாமே அல்லாவைத்தான் நம்புகின்றன; குரானைப் படிக்கின்றன; அல்லது ஏற்றுக்கொள்கின்றன; ஸரீயத்தை பின்பற்றுகின்றோம் என்கின்றன; ஆனால், ஒரு இஸ்லாம் மற்ற இஸ்லாம் நம்பிக்கையாளர்களை, “நம்பிக்கையில்லாதவர்கள்” என்று அறிவித்துவிட்டால், அவ்வளவுதான், ஜிஹாத் தான், இனி அந்த “நம்பிக்கையில்லாத்தனம்” ஒழிக்கப்படும் வரை, அழிக்கப்படும்வரை, துடைத்து மறைக்கப்படும் வரை, முழுவதுமாக துடைத்தொழிக்குப்படும் வரை, ஜிஹாத் தொடரும், தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
இஸ்லாத்திற்குள் உள்ள ஜிஹாத்: இந்த இஸ்லாத்தில் உள்ள ஜிஹாத் அல்லது, இஸ்லாத்தை பல இச்லாம்களக மற்றும்ம் ஜிஹாதை, ஒவ்வொரு முஸ்லீமும் புரிந்து, அறிந்ர்து, தெரிந்து நடந்து கொள்ளவில்லையென்றால், இஸ்லாம் இஸ்லாத்தை மட்டுமல்ல, முளிமை மட்டுமல்ல, அல்லாவை நம்புகின்றவனை மட்டுமல்ல, முஹம்மதுவை நபியாக ஏற்றுக்கொண்டவனை மட்டுமல்ல, “காஃபிர்” என்று அறிவிக்கப்பட்டால், ஜிஹாத் அவர்கள் மீது பாயும். வீரர்கள் அல்லாவின் ஆணையை செய்து முடிப்பார்கள்.
வேதபிரகாஷ்
29-05-2010
அண்மைய பின்னூட்டங்கள்