சென்னை கொரியர் கம்பனியிலிருந்து வெடிமருந்து பொருட்களை மதுரைக்கு தீவிரவாதிகள் அனுப்பியது, பிரஸர்-குக்கர் வெடிகுண்டு நான்கு மாநிலங்களில் வெடித்தது (3)
ஞாயிற்றுக் கிழமை (09-04-2017) அன்று மதுரையில் கைது செய்யப்பட்டு, திங்கட்கிழமை (10-04-2017) அன்று மஞ்சேரியில் ஆஜரப்படுத்தப்பட்டனர்: கேரள நீதிமன்ற வளாகத்தில் நடந்த பிரஸர்-குக்கர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, மதுரையில் இரண்டு பேரை, –
- எமன். அபூபக்கர் (40), சிவகாமி தெரு, மதுரை.
- அப்துர் ரஹ்மான் (27), காயதே மில்லத் நகர், மதுரை,
09-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்தனர்[1]. கடந்த ஆண்டு நவம்பர்.1ம் தேதி 2016 கேரள மாநிலம் மலப்புரம் நீதிமன்ற வளாகத்தில் நின்று இருந்த காரில், சக்தி குறைந்த குண்டு வெடித்தது[2]. யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை[3]. “பேஸ் மூவ்மென்ட்” [‘Base Movement’] என்ற வார்த்தைகள் ஒரு அட்டைப்பெட்டி, ஒஸாமா பின் லேடன் போட்டோ, இந்தியா மேப் முதலியன குண்டுவெடித்த இடத்திலிருந்து கண்டெடுக்கப் பட்டன[4]. 2015ல் அபூபக்கர், இந்த “பேஸ் மூவ்மென்ட்” என்ற தீவிரவாத இயக்கத்தை, அல்-கொய்தா தாக்கத்தில் உருவாக்கினான். அல்-முத்தாகீன் என்ற தீவிரவாத இயக்கத்தை 2014ல், அல்-உம்மாவின் தலைவன் இமாம் அலியைக் கொன்றவர்களை பழிவாங்க உருவாக்கினான்[5]. இதனால், பெங்களூரு, மதுரை, கோயம்புத்தூர், கேரளா இணைப்புகள் தெரியவந்தன. இதனால், ஜிஹாதி தீவிரவாதத்தையும் மறைக்க முடியாது. ஞாயிற்றுக் கிழமை (09-04-2017) அன்று மதுரையில் கைது செய்யப்பட்டு, திங்கட்கிழமை (10-04-2017) அன்று மஞ்சேரியில் ஆஜரப்படுத்தப்பட்டனர். “அம்மாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்மந்தம்”, என்று தமாஷாகக் கூட கேட்க முடியாது, ஏனெனில் சம்பந்தம் இப்படியெல்லாம் இருக்கிறது.
மனித உரிமைகள் போர்வையில் தீவிரவாதிகளை ஆதரிப்பது, குண்டுவெடிப்பில் செத்தவர்களை மறந்து விடுவது, கொச்சைப் படுத்துவது: “குண்டுவெடித்தது, ஆனால் காயம் ஏற்படவில்லை” என்ற இத்தகைய செய்திகள் உள்ளநிலையில், குண்டுகள் வெடித்து, நூற்றுக்கணக்கானவர் கொடும் சாவு, ஆயிரக்கணக்கானோர் படுகாயம், கால்-கை துண்டிப்பு போன்ற கொடூரங்களும் இருக்கின்றன. ஆகவே, குண்டுகளை தமாஷுக்கு வெடித்தார்கள் என்றெல்லாம் திரிபுவாதம் கொடுக்க முடியாது[6]. இன்றைக்கு மனித உரிமைகள் போர்வையில், சாதாரண அப்பாவி குடிமகன்கள் குண்டுவெடிப்புகளில் சாகும் போது, அவர்களது உரிமைகள், அவர்களது குடும்பத்தாரின் உரிமைகள் முதலியவற்றை மறந்து, புள்ளியல் விவரங்களை அங்கும்-இங்குமாக எடுத்துக் கொண்டு, தீவிரவாதிகளுக்கு ஆதரவாக வேசுவது, விவாதிப்பது என்று சில அறிவுஜீவிகள் இருக்கிறார்கள். போதாகுறைக்கு மனிதநேயம் என்றெல்லாம் வேறு சொல்லிக் கொண்டு, குரூரங்களை, பயங்கரவாதத்தை, ரத்தக்காட்டேரிகளை ஆதரித்து வருகிறார்கள். இதனால், லாபமடைவது, தீவிரவாத இயக்கங்களே. இப்பொழுதெல்லாம், என்.ஐ.ஏ கைதான விவரங்கள், குற்றப்பத்திரிக்கை, மற்ற விவரங்களை உடனுக்குடன், தனது இணைதளத்தில் வெளியிட்டு விடுக்கிறது. இருப்பினும், தீவிரவாதிகளை ஆதரிக்கும் சித்தாந்திகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்நிலையில், ஒரு வேளை அவர்கள் ஏன் ஆதரிக்கிறார்கள் என்று விசாரணை செய்ய வேண்டியிருக்கும்.
பழைய இயக்கங்கள் புதிய பெயர்களோடு உருவாகுவது, மறைவது, மறுபடியும் தோன்றுவது: இவ்வாறு பழைய இயக்கங்களை புதிய பெயர்களோடு, இடங்களை மாற்றி இயக்க ஆரம்பித்தனர். வங்கிகணக்குகள் முடக்கப்பட்டபோது, புதிய பெயர்களில், தனிநபர் பெயர்களில் ஆரம்பிக்கப்பட்டன. அந்நிய-கரன்சி மாற்றம், விசா-பாஸ்போர்ட், வண்டிகள்-தங்க ஓட்டல்கள் ஏற்பாடு செய்தல் என்ற வேலைகளையும் இவர்களே பார்த்துக் கொள்வதால், பலநேரங்களில் பணம் வெவ்வேறு முறையில் மாற்ரப்படுதல், பெறப்படுதல், முதலியவை நடந்து விடுகின்றன. இவர்களது சொகுசு பேரூந்துகளே, இவர்களை வேண்டிய இடங்களுக்கு எடுத்துச் செல்கின்றன. அவற்றில், இவர்களது உண்மையான பெயர்கள் உபயோகப்படுத்துவதில்லை. பல நேரங்களில் ஒரே நேரத்தில் இரண்டு பேரூந்துகளில் பயணித்தது போல, இரண்டு ஊர்களில் இருந்தது போல அலிபியையும் உண்டாக்குகின்றனர். பண்டமாற்று முறை கூட பின்பற்றப்படுவதால், பணபரிமாற்றம் இல்லாமல், விவரங்கள் மறைக்கப் படுகின்றன. சில குறிப்பிட்ட தொழில்கள், தொழிற்சாலைகளில் உள்ளவர், தொழிலதிபர்கள் முதலியோர், அவர்களுக்கு மறைவாக இருக்க இடம் கொடுப்பதுடன், ஆவண மற்ற உதவிகளையும் செய்து வருகின்றனர். கிடைத்த தகவல்கள், ஆவணங்கள் மூலம், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் பரவியிருக்கும் இக்கூட்டத்தின் நடவடிக்கைக்ள் தெரிய வந்தன. கள்ளநோட்டு பரப்புதல், ஹவாலா விநியோகம், வரியேய்ப்பு போன்ற விவகாரங்களில், குடும்பங்களோடு ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.
பிரஸர்–குக்கர் வெடிகுண்டு, ரசாயனப் பொருட்கள் முதலியன காட்டிக் கொடுத்தன: இதேபோல், கேரளாவின் கொல்லம், ஆந்திராவின் சித்தூரில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன[7]. இதில் குறிப்பிட்ட மாதிரி, செயல்முறை, அமைப்பு முதகியவை இருப்பதைக் கண்டுபிடித்து சோதனையிட்டபோது விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன[8]. ஒரே மாதிரியான ரசாயனப் பொருட்கைளின் உபயோகம், அவை குறிப்பிட்ட நபர்களுக்கு மூலம் அனுப்பப்பட்டு-பெறப்பட்ட முறை, பிரஸர்-குக்கரில் வெடிகுண்டு தயாரித்தது, முதலியவை மதுரையைச் சுட்டிக் காட்டியது. மதுரையை சுற்றி பட்டாசு தொழிற்சாலைகள் இருப்பது, சீனப்பட்டாசுகள் கிடைப்பது, கல்குவாரிகளுக்காக வெடிமருந்துகள் வாங்குவது முத்லியவற்றையும் கவனிக்க வேண்டும். மீனாக்ஷி பஜாரில் பாத்திரக்கடையிலிருந்து வந்ததும் தெரியவந்தது. அக்கடை அபூபக்கருக்கு சொந்தமானது. மதுரையில், வெடிகுண்டு ரகசியமாக தயாரிக்கப் படுவது, பலமுறை கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஆனால், இதில் சில ஆட்களை வேலைக்கு வைத்து, திசைத் திருப்பும் வேலைகளையும் செய்துள்ளனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி, கடந்த ஆண்டு நவம்பரிலேயே, மதுரையில் ஐந்து பேரை கைது செய்தனர்[9]. விசாரணையில் மதுரை –
- இஸ்மாயில்புரம் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் அலி (27),
- கரீம் ராஜா (23),
- சாப்ட்வேர் இன்ஜினியரான தாவூத் சுலைமான்சேக் (23),
- சம்சுதீன் (26),
- ஆந்திராவைச் சேர்ந்த முகமது அயூப் (26) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்[10].
மதுரை பேஸ் மூவ்மென்ட் அமைப்பின் தலைவர் அபுபக்கர், அவரது உதவியாளர் அப்துல் ரகுமான் ஆகியோரும் இந்த வழக்கில் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் அல்கொய்தா ஆதரவு அமைப்பான ‘அடிப்படை இயக்கத்தை’ சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் மூலம், மதுரையில், அபுபக்கர், அப்துர் ரக்மான் ஆகியோரை 09-04-2017 அன்று இரவு கைது செய்தனர். இவர்களுக்கும் அல் கொய்தா அமைப்பினருக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடந்து வருகிறது. என்.ஐ.ஏ., அதிகாரிகள் 10-04-2017 திங்கட்கிழமை, மஞ்சேரியில், மாஜிஸ்ட்ரேட்டுன் முன்பு ஆஜராக்கப் பட்டு, எட்டு நாட்கள் கஸ்டெடியில் எடுத்தனர்[11].
© வேதபிரகாஷ்
14-04-2017
[1] The special investigation team probing the case, which occurred on November 1, 2016, nabbed N Abubacker, (40), of Shivakami street, and seventh accused Abdu Rahman, (27), native of Quidemillath Nagar, Madurai.
[2] தினத்தந்தி, மலப்புரம் குண்டுவெடிப்பு வழக்கு: மதுரையில் மேலும் இருவர் கைது, ஏப்ரல் 10, 09:31 PM
[3] http://www.dailythanthi.com/News/India/2017/04/10213107/malappuram-bomb-blast-two-more-arrested.vpf
[4] A small cardboard box with the words ‘Base Movement’ and a map of India with a photo of Osama Bin laden were recovered from the site.
Times of India, Two accused in Malappuram blast case arrested from TN, TNN | Updated: Apr 11, 2017, 07.11 AM IST.
[5] The sixth accused, Abubacker is the founder of the Base Movement, an Al-Qaeda inspired group formed in 2015. Police said Abubacker constituted a terror organization, Al-Muthaqeen Force (AMF), in 2014 to exact revenge for the encounter killing of Tamil Nadu based terror organisation Al Ummah’s leader Imam Ali.
[6] http://ippodhu.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA/
[7] தினமலர், கேரள குண்டுவெடிப்பு: மதுரையில் 2 பேர் கைது, பதிவு செய்த நாள். ஏப்ரல்.10, 2017.14.18.
[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1748842
[9] தினகரன், மலப்புரம் குண்டு வெடிப்பு வழக்கு மதுரையை சேர்ந்த 2 பேர் கைது, 2017-04-11@ 01:07:2
[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=293866
[11] Mathru.bhoomi.com, Malappuram Collectorate Blast: 2 more arrested, Published: Apr 10, 2017, 10:39 AM IST.
அண்மைய பின்னூட்டங்கள்