காதலிப்பது தவறா-சரியா – இஸ்லாத்தில் காதல் ஹராமா, ஹலாலா?
ரஜபுனிசாபேகம் – அசன் காதல் விவகாரம்: திருச்சி ஏர்போர்ட் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ஜமால் மொய்தீன். இவரது மகள் ரஜபுனிசாபேகம் (20). டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள கல்லூரியில் பிபிஏ 3ம் ஆண்டு படித்து வருகிறார்[1]. ஏர்போர்ட் ஸ்டார் நகரை சேர்ந்த அலாவுதீன் மகன் அசன் (23) என்பவரை காதலித்து வருகிறார். காதல் விவகாரம் ரஜபுனிசாபேகம் பெற்றோருக்கு தெரியவந்ததால், காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி 25-08-2016 அன்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்[2]. ஆக ஒரு முஸ்லிம் பெண், ஒரு முஸ்லிம் பையனை காதலிக்கிறாள். இருவரும் மேஜர், என்று தெரிகிறது. அதாவது, காதலன் – காதலி விரும்பினால், தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம்.
ஆகஸ்ட்.24, 2016 அன்று வீட்டை விட்டு வெளியேறிய ரஜபுனிசா பேகம்: ரஜபுனிசா பேகம் அளித்த மனுவில், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து என்னை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டில் அடைத்து வைத்தனர்[3]. உறவினருக்கு என்னை திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர்[4]. தந்தைக்கு உதவியாக வடிவேல் என்பவர் செயல்படுகிறார். அவர் என்னிடம் ஒழுங்காக அவனை மறந்துவிடு. இல்லை என்றால் உன் காதலனை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். இவர்களிடம் இருந்து தப்பிக்க, நீங்கள் கூறுபவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி மீண்டும் கல்லூரி வந்தேன். அங்கிருந்து கடந்த ஆகஸ்ட். 24ம் தேதி காதலனுடன் வெளியேறினேன்[5].
ஆகஸ்ட்.26, 2016 அன்று போலீஸில் புகார் கொடுத்த ரஜபுனிசா பேகம்:இதையடுத்து காதலரை செல்போனில் தொடர்பு கொண்ட பெற்றோர் மற்றும் வடிவேல் தலைமையிலான ரவுடி கும்பல் எங்கள் 2 பேரின் தலையை வெட்டி ரோட்டில் வீசுவதாக மிரட்டுகின்றனர்[6]. இதுகுறித்து விசாரித்து எனது பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நுண்ணறிவு பிரிவு உதவிகமிஷனர் கபிலன் விசாரணை நடத்தி வருகின்றார். கமிஷனர் அலுவலகம் முன் ரஜபுனிஷாபேகத்தின் பெற்றோர், உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆகஸ்ட்.30, 2016 வரை இருட்டடிப்பு செய்யப்பட்டு வரும் விவகாரம்: “தினகரன்” நாளிதழில் வெளியான இச்செய்தி, மற்ற இரண்டு இணைதளங்களில் அப்படியே வெளியிட்டுள்ளன. மூன்று நாட்களாகத் தேடியும் மற்ற நாளிதழ்களில் இச்செய்தியை காணவில்லை. ஆங்கில ஊடகங்களிலும் தேடிப்பார்த்து அலுத்து விட்டது. அப்படியென்றால், இச்செய்தியை அமுக்கி வாசித்தது, மறைப்பது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.
ரஜபுனிசாபேகம் கூறும் விவரங்களில் பல விசயங்கள் வெளிப்படுகின்றன: இதனை பொதுப்பிரச்சினையாக எடுத்துக் கொண்டால், பெற்றோரை மீறி காதலித்து, ஒரு பையனுடன் வெளியேறும் போது, பெற்றோர் மிக்க வருத்தம் அடைவர், சமூகத்தில் அவமானம் ஏற்படுகிறது, உறவினரிடையே மரியாதை போகிறது என்றெல்லாம் உள்ளது. ஆனால், முஸ்லிம் பையன்-பெண் காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அதில் வேறென்ன பிரச்சினைகள் இருக்க முடியும்?
1. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து என்னை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டில் அடைத்து வைத்தனர்[7]. | நிச்சயமாக, எல்லா பேற்றோர்களும் செய்வது தான். |
2. உறவினருக்கு என்னை திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர்[8]. | இதெல்லாம் கூட சகஜமான விவகாரங்கள் தாம். |
3. தந்தைக்கு உதவியாக வடிவேல் என்பவர் செயல்படுகிறார். | இங்குதான் “வடிவேல்” விசித்திரமாக உள்ளது. அவர் ஒரு “இந்து” என்ற ரீதியில், ஏன் முஸ்லிம்களுக்கு உதவியாக செயல்பட வேண்டும் அல்லது முடியும்? |
4. அவர் என்னிடம் ஒழுங்காக அவனை மறந்துவிடு. இல்லை என்றால் உன் காதலனை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். | வடிவேல் எப்படி, இப்படி மிரட்ட முடியும்? முஸ்லிம்களுக்கு கட்டப்பஞ்சாயத்து செய்யும் அளவுக்கு “வடிவேல்” உள்ளாரா அல்லது அவர் காசுக்காக மிரட்டும் அடியாளா? |
5. இவர்களிடம் இருந்து தப்பிக்க, நீங்கள் கூறுபவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி மீண்டும் கல்லூரி வந்தேன். | பொய் சொல்லி கல்லூரிக்கு சென்றது, அங்கிருந்து காதலனுடன் போலீஸுக்கு ஓடி வந்ததும், தெரிந்த விசயம் தான். |
6. அங்கிருந்து கடந்த 24ம் தேதி காதலனுடன் வெளியேறினேன்[9]. | அதாவது, காதலி தீர்மானமாக காதலனுடன் ஓடி வந்து, போலீஸாரிடம் தஞ்சம் புகுந்துள்ளாள். |
ஆனால், காதலன் அசன் மௌனமாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அவனுடைய பெற்றோரும் இவ்விசயத்தில் தலையிடாதது அல்லது இல்லாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
© வேதபிரகாஷ்
31-08-2016
[1] தினகரன், ‘தலையை வெட்டி வீசுவோம்’ காதல் ஜோடிக்கு மிரட்டல், Date: 2016-08-26@ 18:21:35
[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=241472
[3] தமிழ்.முரசு, ‘தலையை வெட்டி வீசுவோம்’ காதல் ஜோடிக்கு மிரட்டல், 8/26/2016 2:34:38 PM
[4] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=97086
[5] தமிழ்மித்ரன், ‘தலையை வெட்டி வீசுவோம்’ காதல் ஜோடிக்கு மிரட்டல், ஆகஸ்ட்.26, 2016.
[6] http://www.tamilmithran.com/article-source/ODI0MDA5/%E2%80%98%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE – .V8TCQ1t95dg
[7] தமிழ்.முரசு, ‘தலையை வெட்டி வீசுவோம்’ காதல் ஜோடிக்கு மிரட்டல், 8/26/2016 2:34:38 PM
[8] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=97086
[9] தமிழ்மித்ரன், ‘தலையை வெட்டி வீசுவோம்’ காதல் ஜோடிக்கு மிரட்டல், ஆகஸ்ட்.26, 2016.
அண்மைய பின்னூட்டங்கள்