Posted tagged ‘பெற்றோர் புகார் கொடுப்பது’

முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் திராவிட நாட்டில் தொடரும் மர்மம்!

ஜூலை 25, 2010

முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் திராவிட நாட்டில் தொடரும் மர்மம்!

சமிபத்தில் கூர்ந்து கவனித்தால் தமிழகத்தில் நரபலி அதிகமாகி வருவதைக் காணலாம். இதில் காணப்படும் முறை, குழந்தைகள் காணாமல் போவது, பெற்றோர் புகார் கொடுப்பது, ஆளில்லாத இடத்தில் குழந்தைகள் உடல், உடற்பாகங்கள் காணப்படுவது, சில ஆட்கள் / மந்திரவாதிகள் கைது செய்யப்படுவது, அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என்பது…………..பிறகு என்னவாயிற்று என்று தெரியாமல் வழக்குகள் முடிக்கப்படுவது…………..என்ற போக்குத்தான் தெரிய வருகிறது. இப்பொழுது செய்திகள் இப்படி வருகின்றன:

மதுரையில் காணாமல் போன குழந்தை ஏர்வாடியில் கொலை[1]: மதுரை தர்ஹாவில் காணாமல் போன குழந்தையின் உடல் ஏர்வாடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை அருகே உள்ள எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் கவுஸ் பாஷா, அவர் மனைவி ஷிரின் பாத்திமா. அவர்களுக்கு ஒன்றரை வயது மகன் காதர் யூசுப். திடீரென்று கவுஸ் பாஷா விபத்தில் இறந்தததால், ஷிரின் பாத்திமா துக்கத்தினால் மனநிலை பாதிக்கப்பட்டது. இதனால் ஆழ்ந்த கவலையில் இருந்த ஷிரின் பாத்திமா, தனது ஒன்றரை வயது குழந்தை காதருடன், கடந்த இரண்டாம் தேதி மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தர்காவுக்கு சென்றுள்ளார். அங்கு பிராத்தனையில் ஈடுபட்ட பாத்திமா அன்று இரவு தனது குழந்தையுடன் அந்த தர்காவில் உறங்கியுள்ளார்.

தர்காவில் குழந்தை காணவில்லை: காலையில் எழுந்ததும் அருகில் குழந்தை இல்லாததைக் கண்டு பாத்திமா அதிர்ச்சி அடைந்தார். தல்லாகுளம் போலீசில் செரீன் பாத்திமா புகார் செய்தார்[2]. இன்ஸ் பெக்டர் சிதம்பரம் முருகேசன், கோரிப் பாளையம் பகுதியில் சந்தேகப் படும்படி நடமாடிய திருச்செந்தூர் காயல் பட்டினத்தை சேர்ந்த அப்துல் கபூர் (30) என்பவரை பிடித்து விசாரித்தார்.

மதுரை குழந்தையை நரபலி கொடுத்த கொடூரன் : தூத்துக்குடியில் தலை, ஏர்வாடியில் உடல் புதைப்பு[3]: அப்துல் கபூர் என்பவனை போலீஸார் விசாரித்தலில், அவன் சொல்லிய விவரங்கள் பயங்கரமாக இருந்தான. மேலும் தமிழ் ஊடகங்கள் – பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் சில முரண்பாடான விஷயங்களை கொடுக்கின்றன. அதாவது, அவன் மந்திரவாதி, அவனை நரபலி கொடுக்கத்தூண்டியது அசரீரி, இல்லை காளி, அவன் ரத்தத்தைக் குடித்தான், மனைவியும் சேந்து குடித்தான், பூஜை செய்தான், பரிகாரம் செய்தான்…………முதலியவை எதையோ மறைக்க முயல்கின்றன என்று தெரிகின்றது. டிவி-செய்தியின்படி, அந்த கிராம மக்கள், இவனின் நடவடிக்கைகளை சந்தேகித்துள்ளனர் என்று தெரிகிறது. ஆனால், ஏன் புகார் கொடுக்கவில்லை என்பது மர்மமாக உள்ளது.

தர்காவில் வந்தது அசரீரியா, காளி தேவியா – அப்துல் கபூர் கூறியதாவது: இதில்தான் நாளிதழ்கள் வேறுபடுகின்றன. தினத்தந்தியில் உள்ளது[4]: “கோரிபாளையம் தர்காவில் நான் தங்கி இருந்தபோது கனவில் தலைப்பிள்ளையாக பிறக்கும் ஆண்குழந்தையை நரபலி கொடுத்து அதன் ரத்தத்தைக் குடித்தால் மாந்திரிக சக்தி அதிகரிக்கும் என்று அசரீரி கூறியது”. ஆனல் தினமலரில், “கனவில் வந்த காளிதேவி, தலைப் பிள்ளையை நரபலியிட்டு அதன் ரத்தத்தை குடித்து, உடலையும் தலையையும் தனிதனியாக கடற்கரை பகுதியில் புதைத்தால், யோகம் வரும் என கூறியதால், குழந்தையை கடத்தினேன்”, என்றுள்ளது!  தர்காவில் புதைக்கப்பட்ட முஸ்லீம் மதத்தலைவர்கள், குருக்கள், சூஃபிக்கள்…………..முதலியோர் பேசுவார்கள், குறைத்தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. முன்பு 15 வருடங்களுக்கு முன்பு “அமீர் குஸ்ரூ” என்ற டிவி-தொடர் ஒலிபரப்பப்பட்டது. அதில் எப்படி ஒரு சூஃபி, அமீர் குஸ்ரூவிடம் பேசுகிறார் என்று காண்பிக்கப்பட்டுள்ளது[5].

குழந்தையை எப்படி பலி கொடுக்கப்பட்டது என்று விளக்கப்படுகிறது: அப்துல் கபூர் தொடர்கிறான், “இதனால் நானும், என் மனைவியும் குழந்தை காதர் யூசுப்பை கடத்திக்கொண்டு காயல்பட்டினம் அருகே உள்ள ஏரல் கிராமத்திற்கு சென்றோம். அங்கு கத்தியால் குழந்தை கழுத்தை அறுத்து கொலைசெய்து, ஒரு வாளியில் ரத்தத்தை பிடித்து, இன்னொரு வாளியில் தலை மற்ற பாகங்களை வைத்தோம். தலையை குலசேகரன்பட்டினம் செல்லும் வழியிலுள்ள கல்லாமொழி கடற்கரைக்கு கொண்டு சென்றோம். அங்கு ரத்தத்தை குடித்து பரிககரம் செய்தபின் தலையை அங்கேயே புதைத்துவிட்டு, உடம்பை தூக்குச்சட்டியில் வைத்து, ராமநாதபுரம் ஏர்வாடி தர்காவை அடுத்த கடற்கரை பகுதியிலுள்ள காட்டுப்பள்ளி பகுதிக்கு வந்து தன்கினோம். அங்கு குழந்தையின் உடல் பாகங்களை புதைத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டோம்”, என்று தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, நேற்று அப்துல்கபூரை மதுரை தல்லாகுளம் போலீசார் ஏர்வாடி அழைத்து வந்தனர்.

உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டப்படுவது: கீழக்கரை டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன், தாசில்தார் ரவிச்சந்திரன் முன்னிலையில், குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். பின் திருச்செந்தூர் அருகே தலையை புதைத்த இடத்தை அடையாளம் காண்பிக்க போலீசார் அங்கு அழைத்து சென்றனர். “ஏர்வாடி காட்டுப்பள்ளி வாசல் சேர்மன் தெருவில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடல், இன்று தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்படும்,’ என, போலீசார் தெரிவித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தையை கொலை செய்து தலையை தூத்துக்குடியிலும், உடலை ஏர்வாடி தர்ஹா அருகிலும் புதைத்திருப்பதாக தெரிவித்தார்[6]. அப்துல் கபுருக்கு மனநிலை சரியில்லாததால், தலைக்குழந்தையை நரபலி கொடுத்தால் மனநோய் சரியாகும் என்பதால் குழந்தையை கடத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது. குழந்தையில் உடலை மீட்க குற்றவாளி அப்துல் கபுருடன் தாசில்தார், உயர் அதிகாரிகள், போலீசார் ஆகியோர் தூத்துக்குடி விரைந்துள்ளனர்.

அப்துல் கபுருக்கு மனநிலை சரியில்லாததால், தலைக்குழந்தை நரபலி: இங்கு திடீரென்று, இப்படியொரு வரி காணப்படுகிறது[7], “அப்துல் கபுருக்கு மனநிலை சரியில்லாததால், தலைக்குழந்தையை நரபலி கொடுத்தால் மனநோய் சரியாகும் என்பதால் குழந்தையை கடத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது”! தினகரனும் மற்ற இணைதளங்களும் குறிப்பிட்வது, “தலைச்சன் பிள்ளையை நரபலி கொடுத்தால் தோஷம் நீங்கும் என்று சிலர் சொன்னதால், இந்த குழந்தையை நரபலியை கொடுத்ததாக அப்துல் கபூர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்”, என்றுதான் உள்ளது[8]. நரபலி விஷயத்தில் ஊடகநிபுனர்கள் குழம்பியுள்ளார்களா, குழப்பப்பார்க்கிறார்களா, பயந்து போயிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

நரபலி முஸ்லீம்களுக்கோ, தமிழகத்திற்கோ புதியதல்ல; இங்கு குறிப்பாக முஸ்லீம்கள், முஸ்லீம்கள் அதிகமாக உள்ள பகுதிகள், தர்காக்கள், முஸ்லிம் மாந்திரீகர்கள் முதலியோர் சம்பந்தப் படுவதால், இக்கொணத்தில் பார்க்க வேந்தியுள்ளது. இதை முஸ்லீம் பிரச்சினை என்று பார்க்கவில்லை, ஏனெனில் மற்ற இடங்களில் இந்துக்களும் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள். இங்கு, முஸ்லீம்களிடம் ஏன் இத்தகைய நம்பிக்கைகள் உள்ளன என்று ஆராயும் நோக்கில் அல்சப்படுகிறது. முன்பு 2007ல் இக்பால் மற்றும் ஜாபர் என்ற இரண்டு மந்திரவாதிகள் இதே மாதிரி எண்ணத்துடன் செயல்பட்டுள்ளனர். விவரம் இதோ:

உடுமலை அமராவதி ஆற்றில் வீசி மகனையே நரபலி கொடுத்த தந்தை[9] (ஏப்ரல் 2007): பெற்ற மகனையே நரபலி கொடுப்பதற்காக அமராவதி ஆற்றில் வீசி கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர். உடுமலை அருகே சோழமாதேவியை சேர்ந்த முகம்மது அலி மகன் முகம்மது இக்பால் (32). மாந்திரீகம் மீது அதிக நம்பிக்கை கொண்டவர். இதே பகுதியில் வசிக்கும் மாந்திரீகர் ஜாபருடன் சேர்ந்து மாந்திரீகம் செய்வதில் ஆர்வம் காட்டி வந்தார். இதனால், இக்பால் மனைவி ஜமீலா தனது சொந்த ஊரான கேரளா மாநிலம் சோலக்கரைக்கு சென்றுவிட்டார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்து திண்டுக்கல்லில் அமைதியாக குடும்பம் நடத்தினார். இந்நிலையில், இவரின் மகன் ஆரீப்கான் (3) பிணமாக அமராவதி ஆற்றில் மிதந்தார். இச்சம்பவம் குறித்து மடத்துக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது, குழந்தையின் தந்தை முகம்மது இக்பால் மற்றும் மாந்திரீகவாதி ஜாபர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதில், சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர்.

மந்திரசக்தி பெற குழந்தை நரபலி: கொலை நடந்த அமராவதி ஆற்றுக்கு முகம்மது இக்பாலை போலீசார் அழைத்து சென்று, கொலை நடந்தது எப்படி என்பது குறித்து கேட்டனர். அப்போது, ஜாபர் முதலில் குழந்தையை ஆற்றுக்கு அழைத்து வந்ததை மட்டும் கூறியுள்ளார். பின்னர், குழந்தையை பாறை மீது அமரவைத்து தண்ணீருக்குள் தள்ளியதாகக் கூறியுள்ளார். போலீசார் கூறும் போது, “அதிக மாந்திரீக ஈடுபாடு காரணமாக கொலை நடந்துள்ளது. முகம்மது இக்பால் கொலை செய்தது உறுதியாகியுள்ளது. பிரேத பரிசோதனையிலும், குழந்தை தண்ணீருக்குள் அமுக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறுதிப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. கொலைக்கான காரணம், கொலை நடந்தது எப்படி என்பது குறித்து விரைவில் தெரியவரும்’ என்றனர்.

முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளில் குழந்தைகள் மாயமாகும் மர்மங்கள் (ஆகஸ்ட் 2009): குறிப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை காணோம் என்றுதான், இந்த நரபலி செய்திகளில் தெரிய வருகின்றன. ஆகையால், அத்தகைய நரபலி கூட்டம் அல்லது, அத்தகைய எண்ணம் உள்ளவர்கள் தமகேற்ற முறையில்தான், “பலி ஆடுகளைத்” தேடிப் பிடிக்கின்றனர், என்று தெரிகின்றது.

கீழக்கரையில் குழந்தை மாயம்

First Published : 02 Aug 2009 01:21:23 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Madurai&artid…………… %8D

Last Updated :

கீழக்கரை, ஆக. 1, 2009: கீழக்கரையில் இரண்டு வயதுக் குழந்தை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த அஹமது முர்சலீன் மகன் முஹம்மது நபில் (2). சம்பவத்தன்று, இந்தக் குழந்தை வீட்டுமுன்பு மதியம் 1.30 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்ததாம்.

பின்னர், சிறிது நேரம் கழித்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை. இதையடுத்து, பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல், கீழக்கரை காவல் நிலையத்தில் குழந்தையின் தந்தை புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து கொண்ட போலீஸôர், குழந்தையை தேடி வருகின்றனர்.

நீதிமன்றங்கள் இவ்வழக்ககுகளை அலட்சியமாகவே தீர்ப்பளித்து முடிக்கின்றன[10] (ஜூன் 2010): மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் 14 ஆண்டுகளுக்கு முன் மூன்று மாத குழந்தை மாயமான வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, பைசல் செய்தது. குழந்தையை அடையாளம் தெரிந்து கண்டுபிடிக்க இயலாது எனவும் கருத்து தெரிவித்தது. நாகபட்டினத்தை சேர்ந்த விஜயா தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு: “எனக்கு ஒரு பெண், மூன்று மாத ஆண் குழந்தை இருந்தது. என் தாயாருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் ஒரு மனநல காப்பகத்தில் சிகிச்சை மேற்கொண்டார். அவருக்கு உதவியாக நான், குழந்தைகளுடன் அங்கு தங்கியிருந்தேன். 1996 செப்., 20ம் தேதி அங்கு படுத்திருந்த போது, என் ஆண் குழந்தையை காணவில்லை. அங்கு பணிபுரிந்த ஜஹாங்கீர் உட்பட சிலர் கடத்தியிருக்கலாம். ஏர்வாடி போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. என் குழந்தையை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்”, என தெரிவிக்கப்பட்டது. மனு நீதிபதிகள் எம்.சொக்கலிங்கம், ஏ.ஆறுமுகச்சாமி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் அழகுமணி, அரசு தரப்பில் கூடுதல் வக்கீல் டேனியல் மனோகரன் ஆஜராயினர். நீதிபதிகள், மூன்று மாத குழந்தை காணாமல் போயுள்ளது. அப்போது, அக்குழந்தையின் ஒரு போட்டோவை கூட மனுதாரர் போலீசாரிடம் வழங்கவில்லை. தற்போது 14 ஆண்டுகள் ஆகி விட்டன. குழந்தையை அடையாளம் காண்பது இயலாத காரியம். மனுவை நிலுவையில் வைத்திருக்க வேண்டியதில்லை. மனு பைசல் செய்யப்படுகிறது, என உத்தரவிட்டனர்.

குவாரி கும்பல் அட்டூழியம்மூன்றரை வயது குழந்தை நரபலி[11] (நவம்பர் 2008)?மதுரை நவம்பர் 20, 2008: மதுரையில் குவாரி தொழில் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக மூன்றரை வயது குழந்தை நரபலி கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மதுரையை அடுத்தள்ள புது தமரைப்பட்டியைச் சேர்ந்தவர் டிரைவர் ரவி. இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “எனது மூனறரை வயது மகள் கோபிகா எல்.கே.ஜி. படித்து வந்தாள். அவள் எனது வீட்டு முன்பு கடந்த செப்டம்பர் 6 ம் தேதி அன்று விளையாடிக் கொண்டிருந்தாள். ஆனால் திடீரென காணாமல் போனாள். அவளை பல இடங்களில் தேடியும் காணவில்லை. மறு நாள் நாட்டாமங்கலம் கால்வாயில் இரத்த காயங்களுடன் இறந்து கிடந்தாள். கோபிகா காணாமல் போன நாட்கள் முதல் எனது வீட்டு அருகில் வசிக்கும் ரவி என்பவரது நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தன. தொடர் விசாரணை செய்தபோது, எனது குழந்தையை ரவி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றதும், குவாரி தொழில் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக எனது மகள் கோபிகாவை சிலருடன் இணைந்து நரபலி கொடுத்ததும் தெரியவந்தது. எனது மகள் இறந்த இடத்தில் 30 வது நாளில் சிலர் அந்த இடத்தில் பூஜைகள் நடத்தியுள்ளனர்”, என்று புகார் கொடுத்தார்.

நீதிபதி கே.என். பாட்ஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது (2008): ஆனால், இந்த சம்பவத்தில் கோபிகா மாருதி வேனில் அடிபட்டு இறந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து ரவியை கைது செய்துள்ளனர். இதன்மூலம் உண்மையை மறைக்க போலீசார் முயல்கின்றனர். இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு நீதிபதி கே.என். பாட்ஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி இந்த மனு மீதான விசாரணையை ஒரு வாரம் தள்ளி வைத்தார் (அதற்குப் பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை). மதுரை அருகே கீழவளவு பகுதியில் இருந்த பல குன்றுகளையும் மலைகளையும் குவாரி கும்பல் சுரண்டி சுரண்டி தரைமட்டமாக்கிவிட்டனர். இப்போது மலைகள் இருந்த இடத்தில் பெரிய பள்ளம் தான் உள்ளது. தரைக்கு அடியிலும் இப்போது சுரங்கம் தோண்டி கிரானைட்டையும் மார்பி்ள் கற்களையும் எடுத்து வருகின்றனர். இதனால் எல்லா கட்சி கரை வேட்டிகளுக்கும் கொழுத்த லாபம்.

கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு[12] (அக்டோபர் 2009): சேலம், அக். 7, 2009:   சேலம் அருகே கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. அந்த குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது காரிப்பட்டி. இங்குள்ள ஒரு ஓடையின் அருகில் தலைவெட்டி முனியப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் அருகில் ஒரு குழந்தையின் சடலம் கிடப்பதை அப்பகுதி வழியாகச் சென்ற சிலர் கண்டனர். இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி கணேசமூர்த்திக்கு அவர்கள் உடனடியாகத் தகவல் தெரிவித்தனர். பிணமாகக் கிடந்த குழந்தைக்கு சுமார் 2 வயது இருக்கும். உடலில் இடது கை முழுமையாகவும், வலது கையில் மணிக்கட்டு வரையும் காணவில்லை. இதேபோல் இடுப்புக்கு கீழே கால்கள் எதுவும் இல்லை. குழந்தை இறந்து 3 நாள்கள் ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது ஆணா பெண்ணா என்பதையும் கண்டுபிடிக்க இயலாத நிலையில் இருந்தது.

போலீசாரிடம் புகார்: குழந்தையின் உடல் கிடப்பது குறித்த தகவல் கிடைத்ததும் காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சேலத்தில் இருந்து மோப்ப நாய் அர்ஜூனும் கொண்டு வரப்பட்டது. சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இப்பகுதியில் காலைக்கடன் கழிக்க வந்த பொதுமக்கள் சிலர், துர்நாற்றம் வீசியதை வைத்து குழந்தையின் உடல் கிடப்பதைக் கண்டுள்ளனர். குழந்தை இறந்து அநேகமாக 36 மணி நேரம் ஆகியிருக்கலாம். குழந்தைக்கு 2 வயதுக்குள் இருக்கும். உடல் அழுகத் தொடங்கியதால் கை, கால்கள் சிதிலமடைந்திருக்கலாம். இருப்பினும் நரபலி கொடுப்பதற்காக கை, கால்கள் வெட்டப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். வெட்டப்பட்டதாக கூறப்படும் கை, கால்களையும் தேடி வருகிறோம். இந்த குழந்தையின் உடலை வேறு பகுதியிலிருந்து இங்கு கொண்டு வந்து போட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதுகிறோம்”, என்றார் மயில்வாகனன்.

மக்கள் சொல்வது நரபலி, போலீஸார் சொல்வது வேறு: சம்பவம் நடைபெற்ற காரிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு மிக அருகில் உள்ளது. மேலும் சேலம்-ஆத்தூர் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. ஓடைக்கு சற்று தொலைவில் மயானம் உள்ளது. இங்கு புதைக்கப்பட்ட உடலை நாய்கள் கடித்து வெளியே கொண்டு வந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இந்த மயானத்தில் சமீபத்தில் உடல்கள் எதுவும் அடக்கம் செய்யப்படவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். முனியப்பன் கோயிலின் மிக அருகில் கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் கிடந்ததால் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் உடல் கிடப்பது குறித்து காலை 9.30 மணிக்கே காரிப்பட்டி போலீஸôருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சேலம் மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் 11.45 மணியளவில் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இதையடுத்து மாலை 4 மணி வரையிலும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்படவில்லை. குழந்தையின் உடலுக்கு ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டுமே காவலுக்கு இருந்தார். பின்னர் மாலை 5 மணிக்கு மேல் தான் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.


[1] தினமலர், மதுரையில் காணாமல் போன குழந்தை ஏர்வாடியில் கொலை, ஜூலை 24,2010, மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைத்தளத்தைப் பார்க்கவும்:

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=46417

[2] தினமலர் மற்றொரு பதிப்பில் இவ்வாறு உள்ளது: “இது குறித்து கோரிப்பாளையம் போலீசில் ஜூலை 2ம் தேதியன்று புகார் அளிக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து வந்த கோரிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன், காயல்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல் கபுர் (30) என்பவரை கைது செய்தார்”.

[3] தினமலர், மதுரை குழந்தையை நரபலி கொடுத்த கொடூரன் : தூத்துக்குடியில் தலை, ஏர்வாடியில் உடல் புதைப்பு, ஜூலை 24,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=46480

[4] தினத்தந்தி, திருடிச்சென்று நரபலி கொடுத்தார் ஒன்றரை வயது குழந்தையின் தலையை துண்டித்து குடித்த மந்திரவாதி மனைவியுடன் கைது, http://www.dailythanthi.com/article.asp?NewsID=582561&disdate=7/25/2010

[5] முஸ்லீம் உலகத்தில் இது எல்லொருக்கும் உள்ள நம்பிக்கையாகும். சமாதிகளுக்கு / தர்காக்களுக்கு செல்வதே அதற்காகத்தான்.

[6] தினகரன், தம்பதியர் வெறிச்செயல் மதுரை தர்காவில் இருந்து குழந்தையை கடத்தி நரபலி, http://www.dinakaran.com/crimedetail.aspx?id=11252&id1=11

[7] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=46417

[8] http://www.inneram.com/201007249491/child-murder-at-madurai

http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=5432

[9] தினமலர், உடுமலை அமராவதி ஆற்றில் வீசி மகனையே நரபலி கொடுத்த தந்தை, 24.04.2007

[10] தினமலர், ஏர்வாடியில் 14 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை மாயமான வழக்கு பைசல்; ஐகோர்ட் கிளை உத்தரவு, ஜூன் 12,2010; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=17785

[11] குவாரி கும்பல் அட்டூழியம்-மூன்றரை வயது குழந்தை நரபலி?

http://thatstamil.oneindia.in/news/2008/11/20/tn-child-sacrified-near-madurai-by-quary-miners.html

[12] தினமணி, கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு , First Published : 08 Oct 2009 04:07:07 AM IST; Last Updated : 08 Oct 2009 08:52:52 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Coimbatore&artid………………. %81