Posted tagged ‘பெய்ரூட்’

சவுதி இளவரசர் போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் கைது!

ஒக்ரோபர் 27, 2015

சவுதி இளவரசர் போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் கைது!

Saudi prince arrested for drug smuggling

Saudi prince arrested for drug smuggling

பெய்ரூட்டில் போதை மருந்து பிடிபட்டது: லெபனான் தலைநகர் பெய்ரூட் எப்பொழுதுமே பரபரப்பாக இருக்கும். பலமுறை சண்டை, போர் என்றெல்லாம் இருந்து, மக்கள் அவதிகளுக்குள்ளாகி, இப்பொழுது சாதாரணமாக இருக்கின்ற நிலையில் மற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. விமான நிலையத்தில் 26-10-2015 அன்று சவுதி அரேபியா தலைநகர் ரியாத் செல்லும் தனியார் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. அதில் 40 சூட்கேஸ்கள் ஏற்றப்பட்டன[1]. இவற்றில் போதைப் பொருட்கள் மற்றும் மாத்திரைகள் அடைத்து கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அவற்றை சோதனை செய்தனர். அவற்றில் கோகைகன் போதை பொருளும், ‘கேப்டகான்’ என்ற தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் கோகைனும் இருந்தன[2]. அவற்றை லெபனானில் இருந்து சவுதி அரேபியாவுக்கு கடத்தி செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது[3]. அதை தொடர்ந்து அந்த விமானத்தை சுற்றி வளைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

another Saudi prince involved in crime

another Saudi prince involved in crime

காப்டகான் ன்பது என்ன, அதன் உபயோகம் போதை மருந்தானது எப்படி?: ரசாயன முறையில் தயாரிக்கப்படும் அம்பிடெமைன் பெனிதல்லின் [amphetamine phenethylline] என்ற ஊக்குவிக்கும் போதை மருந்தின் வியாபாரப் பெயர் காப்டகான் [Captagon] ஆகும்[4]. இது சிரியாவில் சண்டையில் / போரில் ஈடுபட்டுள்ளவர்களால் உபயோகப்படுத்தப் படுகிறது. 1960களில் முதலில் மேற்கத்தைய நாடுகளில் மனநோயாளிகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டது. ஆனால் அதன் விபரீத விளைவுகளினாலும், மருந்தாக உபயோகிக்கக் கூடியதல்ல, சட்டத்தின் படியும் ஒவ்வாதது என்றெல்லாம் தெரிந்தபோது, 1980களில் பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டது. ஆனால், வளைகுடா நாடுகளில் அதன் உப்யோகம் போதைப் பொருளாக தொடர்ந்தது[5]. தீவிரவாத குழுக்கள் ஜிஹாதில் / புனிதபோரில் ஈடுபட, தொடர்ந்து கடுமையாக சண்டையிட ஊக்குவிக்கும் மருந்தாக உபயோகப்படுத்துகிறார்கள். இதனால், இத்தகைய போதை மருந்துகளை தயாரிப்பது, விநியோகிப்பது, கடத்துவது, எங்கெல்லாம் போர் நடக்கின்றதோ, அவ்விடங்களுக்குக் கொண்டு சேர்ப்பது, என்று பலர் ஈடுப்பட்டுள்ளார்கள். மில்லியன் – கோடிக்கணக்கில் இவ்வியாபாரம் நடந்து வருகிறது.

போதைப் பொருள் தயாரிப்பு, விநியோகம்

போதைப் பொருள் தயாரிப்பு, விநியோகம்

அப்தெல்மொசின் பின் வாலித் பின் அப்துல்லாசிஸ் என்ற சவுதி அரேபியா இளவரசர் சம்பந்தப்பட்டுள்ளது: விசாரணையில் போதை மருந்து, மாத்திரைகளை 5 பேர் கடந்த முயன்றது தெரிய வந்தது. அவர்களில் மிக முக்கியமான நபர் சவுதி அரேபியா இளவரசர் அப்தெல்மொசின் பின் வாலித் பின் அப்துல்லாசிஸ் [Abdel Mohsen Bin Walid Bin Abdulaziz] ஆவார். எந்த இளவரசர் அல்லது அரசர் என்று அடையாளம் காணப்படவில்லை என்று இன்னொரு செய்தி கூறுகிறது[6]. எனவே அவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்[7]. விமானநிலையத்தில் உள்ள இன்னும் ஐந்து சவுதி குடிமகன்களை விசாரிக்க வேண்டியுள்ளது என்று போலீஸார் கூறுகின்றனர்.  சவுதி அரேபியா மன்னராட்சி கொண்ட நாடு, ஆனால், ஷரியத் சட்டதிட்டங்கள் நடைமுறையில் கொண்ட நாடாகும். 75–90% மக்கள் சுன்னி மற்றும் 10–25% ஷியா முஸ்லிம்கள் கொண்ட நாடாகும். குற்றங்களுக்கு இஸ்லாமிய சட்டத்தின்படி, கொடுமையான தண்டனைகள் கொடுக்கப்படும்.

Narcotics seized at Beirut airport

Narcotics seized at Beirut airport

சவுதி இளவரசர் / அரசர்கள் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவது: கடந்த மாதம் சவுதி இளவரசர் ஒருவர் அமெரிக்காவில், பெவர்லி ஹில்ஸ் மான்சனில் ‘செக்ஸ்’வழக்கில் கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது[8].  ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லை என்று அதை தொடர்ந்து விசாரிக்காமல் விட்டுவிட்டனர்[9]. தனது  $37 மில்லியன் மதிப்புள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் மாளிகையில், நீச்சல்குளத்தில் நிர்வாண பெண்கள் கொண்ட பார்ட்டி நடத்த வேண்டும் என்று கேட்டதாக செய்திகள் வந்தன[10]. தனது பெண் வேலைக்காரிகளுல் ஒருத்தியை நிர்வாணமாக நீச்சல்குளாத்தில் இருக்குமாறு பணித்ததாக புகாரில் / நீதிமன்ற வழக்கு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், கைதும் செய்யப்பட்டார்[11]. அதே போல 2013ல் ஒரு கென்யாவைச் சேர்ந்த பெண்ணை அடிமையாக வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது, ஆனால், அதுவும் விடப்பட்டது. கடந்த ஏப்ரல் 2014ல் கூட, 15 மில்லியன் காப்டகான் காப்சூல்கள், சோளங்கள் அடைக்கப்பட்ட கன்டெய்னர்கள் மூலம் கடத்தப்படும் போது, பெய்ரூட் துறைமுகத்தில் பிடிபட்டது[12]. இவ்வாறு சமீபகாலத்தில் இரு சவுதி இளவரசர்கள் போதை மருந்து கடத்தல், செக்ஸ் குற்றங்கள் முதலியவற்றில் ஈடுபட்டுள்ளது திகைப்படைய வைப்பதாக உள்ளது. ஆனால், அதே நேரத்தில் சாதாரண மனிதன் அத்தகைய குற்றங்களை செய்தால், தூக்கில் போடப்படுகிறார்கள் என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டுகின்றன[13].

A picture released by the Saudi Press Agency -SPA- shows Saudi King Salman bin Abdulaziz Al-Saud -AFP Photo

A picture released by the Saudi Press Agency -SPA- shows Saudi King Salman bin Abdulaziz Al-Saud -AFP Photo

அரச குடும்பச் சண்டையும், உருவாகும்பிரச்சினையும்[14]: சவுதி அரேபியா மன்னர் சல்மான் பதவி விலக வேண்டும் என்று அவரது தம்பிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் மன்னராக பதவி வகித்து வந்த அப்துல்லா, கடந்த ஜனவரி மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். அதனைத் தொடர்ந்து புதிய மன்னராக அவரது சகோதரர் சல்மான் (79) பதவியேற்றார். இந்நிலையில், சல்மான் பதவி விலகும் படி அவரது 8 தம்பிகள் வலியுறுத்தியுள்ளனர். சல்மானுக்குப் பதிலாக இளவரசர் அகமது பின் அல்துல் அஜிஸ் (73) என்பவரை மன்னர் ஆக்க அவர்கள் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னாள் உள்துறை அமைச்சரான அஜிஸுக்கு இஸ்லாமிய மத தலைவர்கள் மற்றும் உலமாக்களின் ஆதரவு உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் தனது மகன் முகமது பின் சல்மானை துணை பட்டத்து இளவரசராக மன்னர் சல்மான் நியமித்தார். மேலும், மறதி நோயினால் அவதிப்படும் மன்னர் சல்மான் விரைவில் பதவியை துறந்து விட்டு தனது மகன் முகமது பின் சல்மானை மன்னர் ஆக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Saudi-prince- PHOTO- AFP-FILE-Tribune, Pakistan

Saudi-prince- PHOTO- AFP-FILE-Tribune, Pakistan

ஆட்சிமாற்றம் ஏற்படுமா என்ற நிலையில் சவுதி அரேபியா: அரசின் முக்கிய முடிவுகள் மன்னர் சல்மானின் ரகசிய உத்தரவுகள் அனைத்தும் இவர் மூலமே பிறப்பிக்கப்படுகின்றன. எனவே, முகமது பின் சல்மானை சவுதி மன்னராக்க தற்போதைய மன்னர் சல்மானின் தம்பிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை. மேலும், அதிகாரம் முழுவதும் மன்னர் சல்மானின் குடும்பத்துக்கும், அவரது வாரிசுகளுக்கும் செல்வதாக கருதி தற்போது அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது தொடர்பாக அதிருப்தி இளவரசர் ஒருவர் இது தொடர்பாக எழுதிய கடிதம் ஒன்று ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்பிகளின் எதிர்ப்பால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்ற சூழல் நிலவுகிறது. துணை பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டுள்ள முகமது பின் சல்மான் ராணுவ அமைச்சராகவும் இருக்கிறார். அவரது முடிவின்படிதான் ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபிய படைகள் மறைமுக போரில் ஈடுபட்டுள்ளன. இதனால் சவுதி அரேபியாவில் தேவையற்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது[15]. ஆனால், பிள்ளைகள் இப்படி குற்றங்களில் இடுபட்டுள்ளனரே என்று குடும்பத்தினர் கவலைப்படவில்லை போலும்.

வேதபிரகாஷ்

27-10-2015

[1]  மாலைமலர், லெபனானில் போதை பொருள் கடத்திய சவுதி இளவரசர் கைது, மாற்றம் செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 27, 2:15 PM IST; பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 27, 11:59 AM IST.

[2] http://www.maalaimalar.com/2015/10/27115925/Saudi-Prince-Arrested-in-Leban.html

[3] தினகரன், போதைப் பொருள் கடத்திய சவுதி இளவரசர் லெபனானில் கைது, வியாழக்கிழமை, அக்டோபர் 27, 2015, 13.21.13.

[4] Captagon is the brand name for the amphetamine phenethylline, a synthetic stimulant. The banned drug is consumed mainly in the Middle East and has reportedly been widely used by fighters in Syria.

[5] The drug was first produced in the West in the 1960s to treat hyperactivity, narcolepsy and depression, but by the 1980s was banned in most countries because of its addictive properties and no longer has a legitimate medical use. Its active ingredient, fenethylline, is metabolized by the body into the stimulants amphetamine and theophylline.

http://www.cbsnews.com/news/war-turns-syria-into-major-amphetamine-producer-and-consumer/

[6] http://en.abna24.com/service/middle-east-west-asia/archive/2015/10/26/716992/story.html

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=175258

[8] Late last month, a Saudi prince was arrested in Los Angeles for allegedly trying to force a woman to perform oral sex on him at a Beverly Hills mansion. But authorities decided not to pursue the charge, citing a lack of evidence.

[9] In 2013, a Saudi princess was accused in Los Angeles of enslaving a Kenyan woman as a housemaid, but the charges were also eventually dropped.

[10] New York Post, Saudi prince demanded naked pool parties at LA mansion: suit, By Sophia Rosenbaum, October 26, 2015 | 11:46am.

[11] Prince Majed bin Abdullah bin Abdulaziz Al Saud, a son of the late King Abdullah, allegedly asked one of his female employees to force anyone in his $37 million mansion to come out to the pool and strip, according to the Daily Mail, which cited court papers detailing the civil case against the prince, who was arrested last month in LA after neighbors spotted a woman trying to climb a wall at his compound.

http://nypost.com/2015/10/26/saudi-prince-demanded-naked-pool-parties-at-la-mansion-suit/

[12] http://www.rawstory.com/2015/10/saudi-prince-arrested-in-largest-drug-bust-in-the-history-of-beiruts-airport/

[13] http://www.rawstory.com/2015/10/drug-smuggling-rape-and-torture-these-five-saudi-royals-did-things-that-would-get-them-executed-back-home/

[14] தமிழ்.ஒன்.இந்தியா, சவுதி மன்னருக்கு எதிராக தம்பிகள்போர்க்கொடி’… ஆட்சி மாற்றம் ஏற்படுமா?, Posted by: Jayachitra Published: Sunday, October 25, 2015, 15:20 [IST].

[15] Read more at: http://tamil.oneindia.com/news/international/saudi-arabia-eight-king-salman-s-11-surviving-brothers-want-to-oust-him-238396.html