Posted tagged ‘பெண் கடமை’

நள்ளிரவில் நோயாளி சிகிச்சைக்குச் சென்றபோது, ஹிஜாப் பற்றிய விவாதம் ஏன், நோயாளி இறந்தது எப்படி? (2)

மே 30, 2023

நள்ளிரவில் நோயாளி சிகிச்சைக்குச் சென்ற போது, ஹிஜாப் பற்றிய விவாதம் ஏன், நோயாளி இறந்தது எப்படி? (2)

மருத்துவர் மீது ஏதாவது நடவடிக்கை உண்டா?: அப்போதுபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புவனேஸ்வர்ராமை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாரோ அவரை இதுவரை கைது செய்யவில்லை என்றும் மருத்துவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு மருத்துவகுழுமூலம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டக்காரர்கள் சடலத்தை எடுத்து சென்று அடக்கம் செய்தனர். ஆனால், இன்னொரு பக்கம் தலைமறைவாக இருந்தவரை, தேடி பிடித்து கைது செய்தனர் என்றுள்ளது. அதே நேரத்தில் அந்த மருத்துவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று தெரியவில்லை.  இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அதிகாரிக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார் என்றும் உள்ளது.

முஸ்லிம் தலைவர், முஸ்லிம் போன்றே அறிக்கை விட்டுள்ளது: “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்[1]. இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்[2], ”நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று இரவு பணியிலிருந்த முஸ்லிம் பெண் மருத்துவர் ஹிஜாப் அணிந்திருந்தார் என்ற காரணத்தால் பாஜகவைச் சேர்ந்த புவனேஸ்வர ராம் என்பவர் முஸ்லிம் பெண் மருத்துவரிடம் தகராற்றில் ஈடுபட்டார் எனச் செய்திகள் மூலம் தெரியவருகிறது. இரவு நேரத்தில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட நோயாளி ஒருவரைப் பரிசோதித்த முஸ்லிம் பெண் மருத்துவர், நோயின் தீவிரத்தை அறிந்து உடனே நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவை சேர்ந்த புவனேஸ்வர ராம் இரவு நேரப் பணியிலிருந்த ஒரு பெண் மருத்துவரிடம் வாக்குவாதம் செய்வது போன்ற காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஜவாஹிருல்லா கூறியது:ஒரு பெண் மருத்துவரிடம் இதுபோன்ற வெறுப்பு பேச்சைப் பேசுவதும், அவர் ஹிஜாப் அணிந்திருந்த காரணத்தால் அவரை மிரட்டுவதும் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் செயலாகும். மேலும், மருத்துவர்கள், மருத்துவ சேவைப் பணியாளர்கள் மத்தியில் அமைதியின்மையை உருவாக்கி, அப்பகுதியில் நிலவிவரும் சமூக நல்லிணக்கதை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. எனவே, பெண் மருத்துவரை மிரட்டிய நபரை தமிழ்நாடு மருத்துவ சேவைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் (வன்முறை மற்றும் சேதம் அல்லது சொத்து இழப்பு) சட்டம் 48/2008ன் கீழ் மற்றும் மத ரீதியான வெறுப்பு பேச்சுகளைப் பேசி பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்த முயன்ற காரணத்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்[3]. சீமானும் இதே போன்ற கருத்தை வெளியிட்டுள்ளார்[4].

சீமானின் இஸ்லாம் அதரவு அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மருத்துவர் ஜன்னத்தை ஹிஜாப் விவகாரத்தில் மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். மேலும் திமுக அரசு, ஆர்.எஸ்.எஸ். ஆதரவு போக்குடன் செயல்படுவதாகவும் சீமான் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பான சீமான் அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் அன்புச்சகோதரி ஜன்னத் அவர்களை கடந்த 24 ஆம் நாள் இரவுநேரப் பணியின்போது அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மருத்துவமனையில் ஹிஜாப் அணியக்கூடாது என்று மிரட்டியுள்ளதோடு, ஹிஜாப்பை கழற்ற வேண்டுமென கூறி பணி செய்யவிடாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நாகை மாவட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறதா? அல்லது உத்தரபிரதேசத்தில் இருக்கிறதா? தமிழ்நாட்டை ஆள்வது திமுகவா? அல்லது பாஜகவா? என்று சந்தேகப்படும் அளவுக்கு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் இந்துத்துவ அமைப்புகளின் மதவெறிச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதவெறியர்களின் மனிதவெறுப்புச் செயல்களை தடுத்து நிறுத்தாமல், அதற்கு துணைபோகும் திமுக அரசின் ஆர்எஸ்எஸ் ஆதரவுப்போக்கு வன்மையான கண்டத்திற்குரியது. உணவு, உடை, வழிபாடு உள்ளிட்டவை அடிப்படை தனிமனித உரிமையாகும். அதில் தலையிடுவதென்வது அருவறுக்கத்தக்க மனித வெறுப்பின் உச்சமாகும். வட இந்தியாவிலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் மட்டுமே நிகழ்ந்த அத்தகைய மதவெறுப்பு கொடுஞ்செயல்கள் தற்போது தமிழ்நாட்டிலும் தொடங்கியிருப்பது வெட்கக்கேடானது.

லிஸ்ட் போட்டு ஆதரவு கொடுக்கும் சீமான்[5]:

  • என்ஐஏ கொடுஞ்சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்தது,
  • நீண்டகால இசுலாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது,
  • ஆர்எஸ்எஸ் சாகா வகுப்புகளை அனுமதித்தது,
  • பாஜகவின் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த துடிப்பது,
  • இசுலாமியர் மீதான வெறுப்பை விதைக்கும் திரைப்படங்களுக்கு பாதுகாப்பளிப்பது,
  • மாட்டுக்கறி உணவிற்கு தடைவிதிப்பது

என்று இசுலாமியர்களுக்கு எதிராக திமுக அரசு மேற்கொண்டுவரும் பச்சைத் துரோகச்செயல்களின் தொடர்ச்சியே, ஹிஜாப் அணியக்கூடாது என்று மிரட்டும் அளவிற்கு மிக மோசமான நிலையை தமிழ்நாடு எட்டுவதற்கு முக்கிய காரணமாகும். இந்துத்துவத்திற்கு ஆதரவான இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் பாஜகவின் பினாமி அரசாகவே திமுக அரசு செயல்படுவதையே வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி அரசு அலுவலகத்திற்குள் புகுந்து அரசு அலுவலரை கொலை செய்தது, அரசு மருத்துமனைக்குள் புகுந்து அரசு மருத்துவரை மிரட்டுவதென தொடரும் சமூக விரோதிகளின் வன்முறை வெறியாட்டங்கள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதையே காட்டுகிறது. ஆகவே, அடிப்படை மனித உரிமைக்கு எதிராக மதவெறியுடன் இழிசெயலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி புவனேஷ்ராமிற்கு கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்[6].

29-05-2023 ‘மருத்துவ சீருடையில் பணிக்கு வராமல், ‘ஹிஜாப்அணிந்து வந்த பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: 29-05-2023 அன்று, ‘மருத்துவ சீருடையில் பணிக்கு வராமல், ‘ஹிஜாப்’ அணிந்து வந்த பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பாரத் இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது[7]. அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், தலைமைச் செயலர் இறையன்புவிடம் அளித்துள்ள மனுவில் இதனை வலியுறுத்தியுள்ளார்[8]. மருத்துவ மனை, நொயாளி, நள்ளிரவில் சிகிச்சைக்கு வந்தது, நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்தது, முதலியவற்றைப் பற்றி எந்த விவரங்களையும் எந்த ஊடகமும் கொடுக்கவில்லை. சிகிச்சை பலனின்றி இறந்தார் என்றுள்ளது. குறிப்பிட்ட மருத்துவர் சண்டை போடுவதிலும், வீடியோ எடுப்பதிலும், அதனை உடனடியாக யாருக்கோ அனுப்புவதிலும் தான் மும்முறமாக இருந்தது தெரிகிறது. பிறகு, ஆவண தோரணையுடன், கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு செல்போனில் பார்த்துக் கொண்டிருக்கிறார். மருத்துவர் போன்றே கணப்படவில்லை.

© வேதபிரகாஷ்

30-05-2023


[1] தமிழ்.இந்து, ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபர் மீது சட்டப்படி நடவடிக்கை: ஜவாஹிருல்லா வலியுறுத்தல், செய்திப்பிரிவு, Published : 26 May 2023 02:44 PM, Last Updated : 26 May 2023 02:44 PM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/996833-threatening-doctor-wearing-hijab-should-be-punished-according-to-law-jawahirullah.html

[3] தமிழ்.இந்துஸ்தான் டைம்ஸ், Hijab: ஹிஜாப் அணியக்கூடாது என மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல், Pandeeswari Gurusamy, 27 May 2023, 16:55 IST

[4] https://tamil.hindustantimes.com/tamilnadu/seeman-insists-that-the-bjp-executive-who-threatened-the-doctor-not-to-wear-hijab-should-be-severely-punished-131685186096080.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ஹிஜாப் விவகாரம்: ஆர்.எஸ்.எஸ். ஆதரவுப் போக்கில் திமுக அரசு.. 6 பாயிண்டுகளை முன்வைக்கும் சீமான்!, By Mathivanan Maran Updated: Saturday, May 27, 2023, 11:21 [IST]

[6] https://tamil.oneindia.com/news/tamilnadu/hijab-row-seeman-blames-dmk-govt-support-to-rss-513636.html?story=1

[7] தினமலர், பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க மனு, பதிவு செய்த நாள்: மே 30,2023 03:59

[8] https://m.dinamalar.com/detail.php?id=3334072

பாகிஸ்தானில் தேர்தல் – பெண்கள், திருநங்கைகள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா?

மே 11, 2013

பாகிஸ்தானில் தேர்தல் – பெண்கள், திருநங்கைகள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா?

PAK-election women - 42 percentபலத்த பாதுகாப்பில் தேர்தல் நடந்தது[1]: பாகிஸ்தானில் தேர்தல் நடப்பது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. நடந்த நாட்களில் குண்டுவெடிப்பு[2], வேட்பாளர்கள் கொலை, வன்முறை என்ற கொடுமைகளுக்கு மத்தியில் இன்று 11-05-2013 அன்று அங்கு தேர்தல் நடந்தது. தலிபான் அச்சுறுத்தலுக்காக ஆறு லட்சம் பாதுகாப்பு வீரர்கள், தேர்தலின் போது ஓட்டுப்போட நியமிக்கப்பட்டனர்[3]. 73,000 ஓட்டு சாவடிகள் உள்ளன, அதாவது ஒரு சாவடிக்கு 5-10 வீரர்கள் இருந்தனர். ஒருவேளை, சில தொகுதிகளில், ஓட்டுப் போடுபவரைவிட இவர்கள் அதிகமாக இருந்தார்களோ என்னமோ?

PAK-election women canvass2பெண்கள், போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா: இந்நிலையில் பெண்கள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா என்ற பிரச்சினையைக் கிளப்பினார்கள். மலோலா சுடப்பட்ட பிறகு, பெண்கள் வெளியில் வருவதற்கு பயப்பட்டார்கள். வரிஸ்தானில் பெண்கள் ஓட்டுப் போடக் கூடாது என்று வெளிப்படையாகவே எச்சரிக்கப்பட்டனர்[4]. இதனால், ஓட்டுப் போட பெண்கள் வெளியே வருவதற்கு உரிய பாதுகாப்பு செய்யப்பட வேண்டியிருந்தது[5]. அவர்கள் ஓட்டுப் போடுமாறு ஊக்குவிக்கப்பட்டார்கள்[6]. இருப்பினும், மற்ற நாடுகளைப் போல தைரியமாக அல்லது சுதந்திரமாக வெளியே வந்து ஓட்டுப் போட இன்னும் சில காலம் ஆகும்[7]. இந்நிலையில் எழுத படிக்கத் தெரியாத ஒரு பெண் ஓட்டளித்திருப்பது பாராட்டப்படுகிறது[8]. முதன் முறையாக பாதம் ஜரி என்ற பெண்மணி பிராதான கவுன்சில் சீட்டிற்காக தேர்தலில் போட்டியிடுகிறார்[9].

PAK-election women canvassing

கராச்சி பாகிஸ்தான் இல்லை: கராச்சியில், இம்ரான் கானை ஆதரித்து பல இளம் பெண்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள், ஓட்டு சேகரிக்க கொடிகளை, படங்களை ஏந்தி சென்றார்கள். அவர்களைப் பார்த்தால், இந்திய பெண்களைப் போன்றுதான் இருக்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில் மற்ற நகரங்களில் பெண்கள் வெளியே வரமுடியவில்லை. பெண்களுக்கு எதிராக பிரச்சாரம் நடக்கிறது. முன்பு, பெனாசிர் புட்டோ பிரதம மந்திரியாக இருந்தார் என்பதனை மறந்து அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அவருக்கு ஏற்பட்ட கதி தான், உங்களுக்கும் ஏற்படும் என்று மிரட்டுகிறார்கள்.

PAK-election women voters

பெண்கள்ஓட்டுரிமை, வாக்களிப்பு, முதலியபிரச்சினைகள்: வடமேற்கு பிராந்தியத்தில் பெண்கள் ஓட்டு போடமுடியுமா என்ற சந்தேகம் உள்ளது[10]. தலிபான்களின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருப்பதால், பெண்கள் தைரியமாக வெளிவந்து ஓட்டுப் போடுவர்களா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, பெண்கள் தேர்தலில் பங்கு கொள்வது ஜனநாயக நெறிமுறைக்கு எதிரானது என்ற பிரச்சாரம் நடந்துள்ளது. பிரச்சாரத் துண்டுகளும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன[11]. இந்த தடவை 18-29 வயதுள்ள இளைஞர்கள் ஓட்டுப் போடலாம் என்றுள்ளதால், பாகிஸ்தானில் 46% இளைஞர்கள் ஓட்டாளர்களாக இருக்கிறார்கள்[12].

PPP celebrate 2008 elections danceபாகிஸ்தானில்தேர்தல்திருநங்கைகள்போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா? முஸ்லிம் பெண்களுக்கே கட்டுப்பாடுகள் இருக்கும் போது, அலிகள் / ரதிருநங்கைகளுக்கு என்ன உரிமைகள் கொடுக்கப்படும் என்று பார்க்கும் போது, இம்முறை அதாவது முதல் முறையாக, அலி / திருநங்கை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது[13]. பிந்தியா ரானா என்ற அந்த நபர் போட்டியிடுகிறார். நான் தோற்றாலும், வென்றாலும் உரிமைகளுக்காகப் போராடுவேன் என்கிறார். இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப் படுவார்கள். தேர்தல் நேரங்களில் ஓட்டு வேட்டையின் போது ஆடவைப்பர். சென்ற தேர்தலில் பிபிபி வெற்றிபெற்றபோது, இவர்களை தாம் ஆடுவதிற்குப் பயன் படுத்திக் கொண்டனர்[14].

PPP celebrate 2008 elections

பாகிஸ்தானில் கூட சிலர் கார்ட்டூன்களை போட்டு தமாஷ் செய்கிறார்கள், ஒருவேளை இந்தியாவில் அவற்றை எதிர்ப்பார்களோ என்னமோ?

Ghous Ali Sha - cartoon Pak-ele-2013

© வேதபிரகாஷ்

11-05-2013


[11] In an increasingly fraught and violent runup to the 11 May vote, leaflets are appearing stating that it is “un-Islamic” for women to participate in democracy.

[14] அந்தகாலத்தில் சுல்தான்களின் ஹேரங்களில் / அந்தப்புரங்களில் இவர்களை வேலைக்கு வைப்பர். ஏனெனில் அவர்கள் உள்ளேயிருக்கும் பெண்களை பாதுகாத்துக் கொள்வர். அதே நேரத்தில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.