Posted tagged ‘பெங்களுரு’

தீவிரவாதிகளின் உரிமைகளும், தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர் மற்றும் பாதிக்கப்படுபவர்களின் உரிமைகளும் – குடியரசு தினத்திற்கு முன்பாக மற்றும் பின்பாக “தி இந்து” வக்காலத்து வாங்கியது!

பிப்ரவரி 6, 2016

தீவிரவாதிகளின் உரிமைகளும், தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர் மற்றும் பாதிக்கப்படுபவர்களின் உரிமைகளும் – குடியரசு தினத்திற்கு முன்பாக மற்றும் பின்பாக “தி இந்து” வக்காலத்து வாங்கியது!

Indian Muslim youth become ISIS supporters, warriors

ஜனவரி 26 குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு பிரெஞ்சு ஜனாதிபதி பிங்கோயிஸ் ஹோலேன்டே [French President Francois Hollande] வந்த முன்பு, பெங்களூரு பிரஞ்சு தூதரகத்திற்கு, அவர் இந்தியாவுக்கு வரவேண்டாம் என்ற எச்சரிக்கைக் கடிதம் வந்தது[1]. இதனால், இந்திய அரசு பலத்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டன. தீவிரவாதிகளால் பாரிஸ் தாக்கப்பட்டது தெரிந்த விசயமே, எனவே, நிச்சயமாக இத்தகைய நடவடிக்கைகளைக் குறை சொல்ல முடியாது. ஆனால், “தி இந்து” போன்றவை 25-01-2016 அன்றே, சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகளின் உரிமைகளைப் பற்றி வக்காலத்து வாங்கி, தலையங்கத்தை வெளியிட்டது[2].  27-01-2016 அன்று தமிழிலும் தலையங்கமாக வெளிட்டது. பிரெஞ்சு ஜனாபதி வருகிறார் எனும்போது, நிச்சயமாக அந்நாட்டு தீவிரவாத-எதிர்ப்புத் துறை, எச்சரிக்கையாக, இந்திய அரசுக்கு, சில விவரங்களைக் கொடுத்திருக்கும். என்.ஐ.ஏவும் விசாரிக்காமல், முகாந்திரம் இல்லாமல் வெறும் சதேகத்தின் பேரிலேயே அனைவரையும் கைது செய்து விட்டதாக ஆகாது. உத்தரக்காண்டத்தில், ரூர்கி நகரில் கைது செய்யப்பட்ட அக்லக் உர்-ரஹ்மான் (20), மொஹம்மது அஜிம்முஸன் (20), மொஹம்மது மீரஜ் என்கின்ற மோனு (20), ஒசாமா மொஹம்மது என்கின்ற ஆதில் (18) மூலம் தான் விவரங்கள் தெரியவந்தன. இவர்கள் எல்லோருமே சிரியாவைச் சேர்ந்த அன்ஸார்-உத் தௌஹீத் பி பிலால் அல்-ஹிந்த் [Ansar-ut Tawhid fi Bilal al-Hind] என்ற அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்தனர். அதன் பிறகுதான் மற்ற கைதுகள் பெங்களூரு, ஹைதரபாத், மும்பை முதலிய இடங்களில் நடந்தன.

Gazwa e Hind green map

தி இந்துவின் வக்காலத்து வாங்கும் போக்கு (தி இந்து, 27-06-2016)[3]: தி இந்து, தீவிரவாதத்திற்கு வக்காலத்து வாங்கியுள்ள தன்மை, அதன் தலையங்கத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது: “உலகை அச்சுறுத்தும் ஐ.எஸ். பயங்கரவாதம் இந்தியாவில் கால் பதிக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் சமீபத்தில் தெரிய வந்திருக்கின்றன. அந்த அமைப்புக்கு ஆதரவானவர்கள் என்று கருதப் படும் 18 பேர், நாச வேலைகளின் ஈடுபடத் திட்டமிட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் உத்தராகண்ட் மாநிலத்திலிருந்து டெல்லி காவல் துறையாலும், மற்றவர்கள் ‘தேசியப் புல னாய்வு முகமை’ (என்.ஐ.ஏ.) அமைப்பாலும் கைதுசெய்யப்பட்டனர்.

பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த பயிற்சி முகாம்களுக்கான ஏற்பாடுகளில் 14 பேரும் ஈடுபட்டிருந்ததாக என்.ஐ.ஏ. தெரிவிக்கிறது. ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் உள்ள ‘அன்சருல்-தவ்ஹீத்’ என்ற பெயருள்ள பயங்கரவாதக் குழுவின் தலைவர் ஷஃபி அர்மார் என்கிற யூசுஃப் என்பவருடன் இந்த 18 பேரும் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்திய முஜாஹிதீன் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களில் சிலர் ‘அன்சருல்-தவ்ஹீத்’ அமைப்பிலும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

தெரிவிக்கிறது, கூறப்படுகிறது, தெரியவந்துள்ளது, தெரிய வந்திருக்கின்றன என்று சொல்வதிலிருந்து, உலகத்தில், இந்தியாவில் நடப்பது, ஒன்றுமே தெரியாது என்ற பாணியில் எழுதியுள்ளது. இந்தியாவில் என்ன இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்கவில்லையா, அதனால், அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் சாகவில்லையா? அவையெல்லாமே பொய்யாகி விட்டனவா? அவர்களது உரிமைகளைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை?

அண்டை நாடான வங்கதேசத்தில் சில ஐ.எஸ். அனுதாபிகள் தாக்குதல்களை நடத்தியிருக்கும் சூழலில், இவ்விஷயத்தில் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்”, என்கிறது[4].

khilafat-e-rashida-is-the-only-solution

கெடுபிடிகளைக் காட்டாமல் அடையாளம் காண வேண்டும் (தி இந்து, 27-06-2016): அதேசமயம், அளவுக்கு மீறி அரசு பலத்தைப் பிரயோகிக்காமல், சந்தேகத்துக்குரியவர்களிடம் கெடுபிடிகளைக் காட்டாமல் இந்த பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களையும், அவர்கள் செயல்படும் குழுக்களையும், எந்த அமைப்பிலும் சேராமல் தனித்து இயங்கக்கூடியவர்களையும் அடையாளம் காண வேண்டும்.

இத்தகைய விசாரணைகளின்போது அப்பாவிகளை அலைக்கழிக்காமலும் சட்டபூர்வ உரிமைகளை மீறாமலும் வெகு கவனமுடன் செயல்பட வேண்டும். தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் வெளிப்படையாகவும், தொழில்முறையிலும் விசாரணைகள் நடைபெறுவதை மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும். அப்படிச் செய்வது பொது அமைதியைக் காப்பதுடன், சந்தேகத்தின்பேரில் விசாரணைக்கு உள்ளாவோரின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும் ஊறு நேராமல் காப்பாற்றும்.

குண்டுகளை தயாரிப்பதில், குண்டுகளை வெடிக்க வைத்ததில், அப்பாவி மக்களைக் குரூரமாகக் கொன்றதில், பலத்தை பிரயோகிக்கவில்லையா? அவர்கள் அவ்வாறு செய்வதை சட்டங்களை மீறியதாகாதா? வெளிப்படையாகவும், தொழில்முறையிலும் அவர்கள் அறிவித்தா குண்டுகளை வெடித்து கொன்றார்கள்? ஜிஹாதிகள் அப்படித்தான் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும் ஊறு நேராமல் காப்பாற்றினார்களா? ஜிஹாதிகளின் கொலைவெறி வன்முறைக்கு முன்னால் அஹிம்சை போராட்டமா நடத்த முடியும்?

பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுவோரை அரசு அமைப்புகள் நடத்தும் விதத்தில்தான் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் வெற்றி அல்லது தோல்வி கிடைக்கும் என்பது உலக அனுபவம்.

1993 Mumbai blast- who pay for the victims.1

1993 Mumbai blast- who pay for the victims.1

வன்முறைச் சிந்தனைகளுக்கு ஆளானோருக்குக் கூட பேசியே தீர்த்துக்கொள்ள வழியிருப்பதும் புலனாகும் (தி இந்து, 27-06-2016): குற்றம்சாட்டப்படுவோருக்கு எதிரான விசாரணைகளும், குற்றப்பத்திரிகைத் தாக்கல்களும் காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டு முடிக்கப்பட வேண்டும்.

வழக்கு விசாரணையும் விரைவாக நடந்து தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவுக்கு உள்ள அக்கறையுடன், மக்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசுக்குள்ள பொறுப்பும் சேர்ந்து வெளிப்பட வேண்டும். அதே சமயம் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குக்கூட அரசியல் சட்டம் அளிக்கும் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம்.

காலவரம்பு நிர்ணயித்தா குண்டுகள் வைத்டுக் கொன்றார்கள்? அந்த பயங்கரவாதிகளின் பெற்றோர், மற்றோர் எந்த பொறுப்புடன் அவ்வாறு ஈடுபட வைத்தார்கள்? “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக்கூட அரசியல் சட்டம் அளிக்கும் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம்” என்று வெட்கமில்லாமல் வக்காலத்து வாங்கும் போது, ஜிஹாதி குரூரத்தால் கொலையுண்டவர்களின் சட்டப் பாதுகாப்பு என்னவாயிற்று?

இதனால் வன்முறைச் சிந்தனைகளுக்கு ஆளானோருக்குக் கூட இந்திய ஜனநாயகத்தின் மாண்பும், எந்தக் குறை இருந்தாலும் அதை பேசியே தீர்த்துக்கொள்ள வழியிருப்பதும் புலனாகும்.

1993 Mumbai blast- who pay for the victims.3

1993 Mumbai blast- who pay for the victims.3

அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு இழைத்த அநீதிக்குப் பதிலடியாகத்தான் நாசவேலைகளில் ஈடுபட நேர்கிறது (தி இந்து, 27-06-2016): தங்கள் கோரிக்கைகளும் மனவருத்தங்களும் நியாயமானவை தான் என்றும், பாராமுகமாக இருக்கும் அரசுக்கு எதிராக நேரடி நடவடிக்கைகளில் இறங்க நேர்கிறது என்றும் கருதும் இளைஞர் குழுக்களும் தனிநபர்களும் இப்படி நாச வேலைகளில் இறங்குவதை வரலாறு நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.

அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு இழைத்த அநீதிக்குப் பதிலடியாகத்தான் நாசவேலைகளில் ஈடுபட நேர்கிறது என்று அவர்கள் கருதுகிறார்கள். 1990-களிலிருந்து மத அடிப்படையிலான பயங்கரவாதத் தாக்குதல்கள் நாட்டில் 3 முறை நடந்துள்ளன. பயங்கரவாதச் செயல்களில் நாட்டமுள்ள இளைஞர்களுக்கு எதிரான வழக்குகளை நியாயமான, வெளிப்படையான, விரைவான நடைமுறைகள் மூலம் நடத்தி முடிப்பது மிக முக்கியம்.

ஜிஹாதி குரூர கொலையாளின் கோரிக்கைகளும் மனவருத்தங்களும் நியாயமானவை என்று யார் தீர்மானித்தது? “பாராமுகமாக இருக்கும் அரசுக்கு எதிராக நேரடி நடவடிக்கைகளில் இறங்க நேர்கிறது” என்றால், இந்தியர்கள் எல்லோருமே இறங்கலாமே? உதாரணத்திற்கு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் அவ்வாறே செயல்படலாமே? அவர்களின் கோரிக்கைக்கள், பாதிப்புகள் என்ன என்பதன இத்தனை ஆண்டுகள் யாரும் கவலைப்படவில்லையே?

இந்த ஆபத்தை எதிர்கொள்வதற்கு இதைவிட சிறந்த வழி இப்போதைக்கு இல்லை. “தி இந்து” இப்படி வக்காலத்து வாங்கிய ஐந்தே நாட்களில் அதன் தோழமை என்.டி.டிவி, இவ்வாறு பயங்கரவாத ஆதரிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

huji Bangaladesh

huji Bangaladesh

தீவிரவாதிகளின் உரிமைகளும், தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர் மற்றும் பாதிக்கப்படுபவர்களின் உரிமைகளும்: பொதுவாக மனித உரிமைகள் போர்வையில், “தி ஹிந்து” போன்ற ஊடகங்கள் எப்பொழுதும் சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் உரிமைகளைப் பற்றி அதிகமாகவே கவலைப்படுவது, செய்திகளை வெளியிடுவது என்ற போக்கில் இருந்து வருகிறது. ஆனால், தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர் மற்றும் பாதிக்கப்படுபவர்களின் உரிமைகளைப் பற்றி பேசுவதே இல்லை. எய்ட்ஸ் வரும் அதனால், கான்டம் போட்டுக் கொள் என்று, அதனை எப்படி ஆண்கள் மாட்டிக் கொள்ளவேண்டும் என்று செய்து காட்டி விளக்கம் அளிக்கும் போது, அதனை பாராட்டுகிறார்கள். என்ன இப்படி பொது இடத்தில் பலருக்கு முன்னிலையில், அதிலும் பெண்கள் இருக்கும் போது, இப்படியெல்லாம் செய்து காட்டுகிறார்களே என்று யாரும் எதிர்க்கவில்லை. விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று அனுமதிக்கப்பட்டது, படுகிறது. ஆனால், தீவிரவாதிகள் இப்படி இருப்பார்கள், அவர்கள் குண்ட் தயாரிப்பார்கள், குண்டுவெடித்தால் சாவு ஏற்படும், அதனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், தீவிரவாதிகளை கண்டுகொள்ள வேண்டும் என்று யார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்? பிறகு முன்னெச்சரிக்கை கைதுகளை எதிர்ப்பதேன்?

வேதபிரகாஷ்

06-02-12016

[1] http://www.firstpost.com/world/letter-cautions-french-president-on-india-visit-says-bengaluru-police-2593784.html

[2] http://www.thehindu.com/opinion/editorial/nias-crackdown-on-is-terror-suspects-alert-fair-transparent/article8148224.ece?ref=relatedNews

[3] தி இந்து, வெளிப்படையான விசாரணை தேவை, தலையங்கம், Published: January 27, 2016 09:34 ISTUpdated: January 27, 2016 09:35 IST.

[4]http://tamil.thehindu.com/opinion/editorial/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/article8157012.ece

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் டுவிட்டர் கணக்கை கையாண்டு வந்தவந்ததை ஒப்புக் கொண்ட மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ்!

நவம்பர் 23, 2015

.எஸ் பயங்கரவாத அமைப்பின் டுவிட்டர் கணக்கை கையாண்டு வந்தவந்ததை ஒப்புக் கொண்ட மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ்!

Bangalore Biswas becomes ISIS agent, techie workerடுவிட்டர் மூலம் .எஸ்.க்கு ஆட்கள் வேலைசேர்ப்பு: கடந்த வருடம் 2014ல் பெங்களூரில் மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்பவரை ஜாலஹள்ளி என்ற இடத்தில் போலீசார் கைது செய்தனர்[1].  இவர் ஷாமி என்ற பெயரில் ஐ.எஸ் இயக்கத்திற்கான “@ShamiWitness” என்ற பிரசார டுவிட்டர் கணக்கை நடத்தி வந்தார்[2]. அவனது இருப்பிடத்தில் சோதனை செய்ததில், அவனது கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன்கள் முதலியவற்றிலிருந்து பல விவரங்கள் தெரிய வந்தன. முன்னர் ஷாமி விட்னஸ் என்கிற பெயரிலான இந்த குறிப்பிட்ட டுவிட்டர் கணக்கை நடத்துபவர் யார் என்கிற அடையாளத்தை பிரிட்டனைச் சேர்ந்த தொலைக்காட்சி சேனலான சேனல் 4 தொலைக்காட்சி தனது புலனாய்வு மூலம் கண்டறிந்ததாக செய்தி வெளியிட்டிருந்தது[3]. அந்த நபரை மெஹ்தி என்கிற பெயரிட்டு அழைத்திருந்த அந்த சேனல்-4 தொலைக்காட்சி, அவரது முழுமையான அடையாளத்தை வெளியிட்டால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் அவரது முழுமையான அடையாளத்தை தாம் வெளியிடவில்லை என்று தெரிவித்திருந்தது. இந்திய பெருவர்த்தக நிறுவனக் குழுமம் ஒன்றில் அவர் நிர்வாகியாக பணிபுரிவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெங்களுர் மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் - ShamiWitness - போட்டோநீண்ட நாள்களாக .எஸ் பயங்கரவாத அமைப்பின் டுவிட்டர் கணக்கை கையாண்டு வந்தவந்ததை ஒப்புக் கொண்ட மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ்: இஸ்லாமிய அரசு அமைப்பு, வெளிநாடுகளிலிருந்து புதிதாக ஆள் சேர்க்கவும், மேலை நாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னார்வப் பணியாளர்களை தாங்கள் சிரச்சேதம் செய்யும் காட்சிகளை வீடியோவாக வெளியிடவும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்திவந்தது என்பது குறிப்பிடத்தக்கது[4]. மெஹ்தியிடம் நடத்திய விசாரணையில், நீண்ட நாள்களாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் டுவிட்டர் கணக்கை கையாண்டு வந்தவந்ததை ஒப்புக் கொண்டார் என்று, கர்நாடக டி.ஜி.பி லால்ரோக்குமா தெரிவித்தார். இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மட்டுமன்றி, சட்டவிரோத சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழும் மெஹ்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, தன் மகனுக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதை நம்ப முடியவில்லை என்று, மெஹ்தியின் தந்தை பிஸ்வாஸ் தெரிவித்தார். மகன் இவ்வளவு வேலைகளை செய்து வந்தபோது, இவர் தெரியாது என்று சொல்வது வியப்பாக இருக்கிறது. பட்கல் விசயத்தில் கூட பேற்றோர்கள் மட்டுமல்ல, அந்த ஊரில் உள்ளோர் அனைவரும், எங்கள் குழந்தைகள் அப்பாவிகள், அவர்களுக்கு ஒன்றும் தெரியாது, என்று தான் சொல்லி வந்தனர்!

மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் - இரு முகங்கள்மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் ஆள்சேர்ப்பில் ஈடுபட்டது: முஸ்லிம் இளைஞர்களை வேலைக்கு எடுப்பது, இந்தியாவிற்கு வெளியே அனுப்பி வைப்பது என்று செய்து வந்தான். பொதுவாக வளைகுடா நாடுகளுக்கு அல்லது அந்நியநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதாக இருந்தால், அவர்கள் ஏஜென்டுக்கு அல்லது ஏஜென்சிக்கு பணம் கொடுக்க வேண்டும், இங்கோ வேலைக்கு விரும்பி வருபவர்களுக்கு அவர்களே பணத்தைக் கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள். இஸ்லாமிய அரசின் பிரசாரத்தை தொடர்ந்து, 150 இந்தியர்கள் (இதில் அதிகமான பேர் நாட்டின்  தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள்) ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்து வந்து உள்ளனர் என உளவுத்துறை அறிந்து எச்சரித்துள்ளது. ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக இந்தியாவில் இருந்து செயல்படுபவர்களை தேசிய தொழில் நுட்ப ஆராய்ச்சி அமைப்பு வழிகாட்டுதலின்படி உளவுத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்[5]. இந்நிலையில் தான், பெங்களுர் வழியாக சிரியாவுக்குச் செல்ல முயன்ற இரு தமிழ்நாட்டு முஸ்லிம் வாலிபர்களின் கதை வருகிறது. பாவம், துருக்கி அவர்களை நாடு கடத்த, பெங்களுருக்கே வந்து சேர்ந்து விட்டனராம்!

New college students become ISIS warriorsபுரசவாக்கம் மசூதியில் ராயப்பேட்டை பாயும், கரூர் பாயும் சந்தித்தது எப்படி?: சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த 23 வயது வாலிபரும், கரூரை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவரும் ராயப்பேட்டை ஐஸ் அவுஸ்சில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தனர்[6]. முன்னவர் பி.காம் பட்டதாரியாவார், தனது தந்தையின் துணிகடையில் வேலை பார்த்து வந்தார். பின்னவர் பள்ளிபடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, சென்னைக்கு ஒரு கடையில் வேலைக்கு வந்திருந்தார்[7]. ஆக, ராயப்பேட்டை பாயும், கரூர் பாயும் எப்படி அறிமுகமானார்கள்? இருவருக்கும் ஜிஹாதில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவானது? இருவரும் புரசவாக்கத்தில் உள்ள ஒரு மசூதியில் சந்தித்துள்ளனர்[8] என்று செய்திகள் கூறுகின்றன. பிறகு, மசூதிகள் தாம் இவர்கள் சந்திந்துக் கொண்டு அறிம்கமாவதற்கு தகுந்த இடமாக இருக்கின்றனவா? இவர்கள் தாமாகவே வந்து அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார்களா அல்லது யாராவது இணைப்பாக செயல்பட்டாரா? ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முடிவு செய்ததால், அவர்கள் இணையதளம் மூலமாக சிரியா நாட்டிற்குச் செல்வது குறித்த தகவல்களை திரட்டியுள்ளனர்[9]. அப்போது பெயர் தெரியாத நபர் ஒருவர் அவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்[10]என்று மேலும் செய்திகள் கூறுகின்றனர். ஒருவேளை, முழுவிவரங்கள் வெளியில் தெரியக்கூடாது என்று அவ்வாறு சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், இணைத்தள உபயோகம் இவர்களுக்குக் கிடைத்துள்ளது. இவ்விசயங்கள் எல்லாம் ரகசியமாகத்தான் பார்க்க முடியும், கண்டவர்கள் எல்லோரும் பார்க்க முடியாது.  அந்த வசதிகளை இவர்களுக்கு அளித்தது யார்? இவ்விருவருல் ஒருவன் நியூ காலேஜில் படித்தான் என்றால், அந்த ஹாஜா பக்ருதீன் மற்றும் குல் மொஹம்மது ஜோடிக்கும், இவனுக்கும் தொடர்பு இருந்ததா?

Bangalore to turkey and back- ISIS agent, techie workerசென்னை, பெங்களுர், இஸ்தான்புல் சென்றது: அப்படியென்றால், அத்தகைய விவரங்களை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்றாகிறது. அதன்படி, சென்னையிலிருந்து பெங்களூர் சென்று, அங்கிருந்து, துபாய்க்கு சென்றுள்ளனர்[11].  அதாவது, இவர்களுக்கு விமான டிக்கெட், பாஸ்போர்ட், விசா எல்லாம் எடுக்கப்பட்டிருக்கின்றன. அப்படியென்றால், தமது அடையாள விவரங்கள், விலாசம் முதலியவற்றைக் கொடுத்தான் அவை பெறப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் சுற்றுலா பயணிகள் போல் பெங்களூருவிலிருந்து துபாய் சென்ற இருவரும் பின்னர் அங்கிருந்து துருக்கி சென்றுள்ளனர்[12]. ஆக, இஸ்தான்புல் நகரத்தில் இறங்கியதும், இவர்களை வரவேற்று, ஓட்டலுக்குச் சென்று தங்க வைத்தது யார் என்று தெரியவில்லை. சிரியா எல்லை பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கி எல்லை தாண்டி செல்வது குறித்து இருவரும் விசாரித்திருக்கின்றனர்[13] என்றுதான் செய்திகள் கூறுகின்றன. ஆனால், அவ்வாறு செல்வதற்கு வேண்டிய அவசியம், தேவை என்னவென்று குறிப்பிடப்படவில்லை.  இவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தங்கும் விடுதி ஊழியர் துருக்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்[14].  இருவரையும் பிடித்து விசாரித்த துருக்கி அதிகாரிகள் அவர்கள் இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக வந்து இருப்பதை கண்டுபிடித்தனர்.  இதையடுத்து இருவரும் துருக்கியிலிருந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்[15]. பெங்களூருவுக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்த அவர்களை பிடித்தனர். இத்தனைக்கும், பணம் தேவையாயிற்றே, யார், எவ்வாறு கொடுத்தனர்? பிறகு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திய உளவு துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து அவர்களது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.

© வேதபிரகாஷ்

23-11-2015

 

[1] http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-190057.html

[2] It may be recalled that in December 2014, Bengaluru police had arrested Mehdi Masroor Biswas from the city for operating a pro-ISIS Twitter handle. Biswas owned @ShamiWitness, which had 17,700 followers.

http://timesofindia.indiatimes.com/india/Engineers-among-9-ISIS-bound-Indians-deported-by-Turkey/articleshow/46079886.cms

[3] http://www.bbc.com/tamil/india/2014/12/141212_isistwitter

[4] http://www.bbc.com/tamil/india/2014/12/141213_indiatwitter

[5] http://www.dailythanthi.com/News/State/2015/11/21125309/ISIS-The-extremist-movement-2-young-men-who-went-to.vpf

[6]  பாரத்.நியூச்.ஆன்லைன், .எஸ்..எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர சென்ற 2 தமிழக வாலிபர்கள், 21 November, 2015.

[7] மாலைமலர், .எஸ். இயக்கத்தில் சேர்ந்த 2 தமிழக வாலிபர்கள்: உளவுத்துறை விசாரணை, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, நவம்பர் 21, 12:07 PM IST.

[8] http://indianexpress.com/article/india/india-news-india/two-chennai-men-deported-from-turkey-for-trying-to-join-is/

[9] http://bharathnewsonline.com/714/

[10] தமிழ்.வெப்துனியா, ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற தமிழக இளைஞர்களை நாடு கடத்திய துருக்கி அரசு: பரபரப்பு தகவல்கள், சனி, 21 நவம்பர் 2015 (13:59 IST).

[11]  தினத்தந்தி, .எஸ்..எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர சென்ற 2 தமிழக வாலிபர்கள் நாடு கடத்தல், மாற்றம் செய்த நாள்: சனி, நவம்பர் 21,2015, 12:53 PM IST; பதிவு செய்த நாள்: சனி, நவம்பர் 21,2015, 12:53 PM IST.

[12] நியூ.இந்தியா நியூஸ், துருக்கிசிரியா எல்லையில் சிக்கிய .எஸ். இயக்கத்தில் சேரச் சென்ற தமிழக இளைஞர்கள், சனிக்கிழமை, 21 நவம்பர் 2015, 06:15.04 AM GMT +05:30.

[13] http://tamil.oneindia.com/news/tamilnadu/turkey-deports-2-tamil-nadu-men-trying-contact-isis-240380.html

[14] http://www.newindianews.com/view.php?23DA2cUMU42M4302lA2dyO322A03e3Ag2bImN3

[15]  http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/turkey-deports-2-tamil-nadu-men-for-trying-to-contact-isis-115112100031_1.html