திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (7)
மிலேச்சன் திப்புவுக்கு சிருங்கேரி ஆச்சாரியார் “சண்டீஹவனம்” செய்து, ஜாதகம் கணித்துக் கொடுத்தாரா?: எதிரிகளை வெல்ல மற்றும் தனது அரசின் மேன்மைக்கு, சங்கராச்சாரியாரை தினமும் மூன்றுமுறை ஈஸ்வரனை வணங்கி, “சண்டீஹவனம்” செய்யுமாறு வேண்டிக் கொள்கிறான்[1]. இங்கு எதிரிகள் என்றால் “இந்துக்கள்”, அதிலும் “ஹிந்து சாம்ராஜ்யம்” உருவாக்க பாடுபடும் மராத்தியர். அப்படியென்றால், சங்கராச்சாரியார் இந்துக்களுக்கு எதிராக மூன்றுமுறை ஈஸ்வரனை வணங்கி, “சண்டீஹவனம்” செய்தாரா? இன்னொரு கடிதத்தில் தனது ஜாதகத்தைக் கணித்துத் தருமாறு சொல்கிறான். உண்மையிலேயே சங்கராச்சாரியார் அவ்வாறு செய்தாரா, இல்லையா என்று எடுத்துக் காட்டப்படவில்லை. ஆனால், இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், எல்லாம் சாஸ்திரங்களும் தெரிந்தவர், எப்படி “மிலேச்சனுக்கு” அவ்வாறு அருளினார் என்பதுதான் கேள்வி. மேலும் மிலேச்சனுக்காக அவ்வாறு செய்தார் என்று எந்த மடமும் ஒப்புக்கொள்ளாது. மேலும், ஜோதிடம் பார்க்க சில பிராமணர்களை அரசவையிலேயே வைத்திருந்தான் எனும் போது, இது அதிகமாகவேக் காணப்படுகிறது. ஏனெனில், எந்த சங்கரச்சாரியாரும், ஒரு முகமதியனுக்கு ஜாதகம் கணித்து கொடுத்தார் என்பதெல்லாம் பிதற்றலானது என்பதை அறிந்து கொள்ளலாம்.
திப்பு எழுதியதாக சொல்லப்படும் கடிதங்களுக்கு ஆதாரம் இருக்கிறதா?: ஏ. கே. சாஸ்திரி என்பவர் 1753-1799 ஆண்டுகளில் திப்பு சங்கராச்சாரியாருக்கு ஶ்ரீ சச்சிதானந்த பாரதி – III அனுப்பியதாக சொல்லப்படும் 47 கடிதங்களை பதிப்பித்தார்[2]. அதாவது, திப்பு அனுப்பியதாகத்தான் உள்ளது, பதிலுக்கு, இவர் அனுப்பியதாக எந்த கடிதமும் இல்லை. ஆகவே, இருவழி போக்குவரத்துக்கான ஆதாரம் இல்லை. கடிதங்களில் திப்புத் தரப்பில் உள்ளவற்றை, சிருங்கேரி ஆதரித்து சரித்திரம் போல அதன் தளத்தில் போட்டிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது[3]. ஆகவே, இக்கடிதங்களுக்கு சரித்திர ரீதியில் எந்த ஆதாரம் இருக்கிறது என்று தெரியவில்லை. இடைக்காலத்தில் முகலாயர்கள் இந்துக்களை ஏமாற்ற அல்லாபுநிஷத், பாவிஷ்ய புராணம் முதலியவற்றை புழக்கத்தில் விட்டது போல, 18வது நூற்றாண்டிலும், முஸ்லிம்கள் அத்தகைய யுக்தியை பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிகிறது. இக்கடிதங்கள், “திப்புவின் கடிதங்கள்” என்று முன்னர் வெளியிடப்பட்ட எந்த புத்தங்களிலும் காணப்படவில்லை. எந்த விதத்திலும் ஒவ்வாத இத்தகைய போலித்தனமாக ஆதாரங்களை தவிர்ப்பதே நல்லது.
முகலாயர் மற்றும் திப்பு போன்ற தீயசக்திகள் மக்களைக் கொல்ல அவற்றை உபயோகப்படுத்தினர்: முகலாயர் மற்றும் திப்பு போன்றவர்கள் தீயசக்திகள் போன்று அறியப்பட்டிருந்ததால், மக்களைக் கொல்ல, அவற்றை – வெடியுப்பு, வெடிமருந்து போன்றவற்றை – உபயோகப்படுத்தினர் என்று பறைச்சாற்றிக் கொண்டால், அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆகவே, திப்பு ராக்கெட்டைக் கண்டுபிடித்தான் என்பதெல்லாம், உள்ள சரித்திரத்தை மறைத்து, அளவுக்கு அதிகமான வர்ணனை எனலாம். மேலும் சரித்திராசிரியர்கள், விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பங்களின் தோற்றம், வளர்ச்சி, விருத்தி (Origin, progress and development of Science and Technology) போன்றாவற்றை அறிந்து கொள்ளாமல், சரித்திரத்தை விதவிதமாக எழுதிக் கொண்டிருப்பது, எல்லோரையும் ஏமாற்றுவது போலாகும். இன்றைக்கு, விவரங்கள் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் இருப்பதால், உலக நாகரிகங்களைப் பற்றி ஒப்புமைப்படுத்தி அறியமுடியும் நிலை உருவாகி இருப்பதால், எதை, யார் முதலில் கண்டுபிடித்தார் என்பது, அங்கங்கு இருக்கும் பொருட்களான ஆதாரங்கள் (material evidences) மூலம் தெரியவருகிறது.
ஹஜரத் திப்பு சுல்தான் உர்ஸ் கொண்டாட்டம்: திப்புவை ஹஜரத் ஆகி, ஹஜரத் திப்புவுக்கு உர்ஸ் கொண்டாடத்தையும், முஸ்லிம்கள் நடத்தி வருகிறார்கள்[4]. ஜூன் 1999ல் திப்பு சமாதியில் அமர்க்களமாக கொண்டாடப்பட்டது[5]. 220 உர்ஸ் விழா மற்றும் படங்களை விவரங்களுடன் இங்கே காணலாம்[6]. இங்கு காந்திக்கு இணையாக திப்புவை வைத்திருப்பதால், இருவரும் ஒரே நிலையில் உள்ளனர் என்று எடுத்துக் கொள்ளாலாமா? முன்பு காந்தி விசயத்தில், அலி சகோதரர்களில் ஒருவரான, மொஹம்மது அலி, ஒரு கேடுகெட்ட முஸ்லிமை நான் மதிப்பேனே தவிர காந்தியை மதிக்க மாட்டேன், ஏனென்றால், அவர் ஒரு காபிர் என்றனர் [“In my eye, Gandhi is worse than a fallen Mussalman.”]. ஆக, இங்கு காந்தியை திப்புவுக்கு இணையாக வைத்து, உயர்த்துகின்றனரா அல்லது தாழ்த்துகின்றனரா என்று தெரியவில்லை. 223 உர்ஸுக்கு அழைப்பிதழ் “உர்ஸ்-ஏ-ஷரீப் முபாரக்” எல்லாம் அமர்க்களமாக அச்சடித்து விநியோகிக்கப்பட்டது. காந்தி மற்றும் திப்பு படங்களை ஒன்றாக வைத்து, மாலைப் போட்டு, தேங்காய் உடைத்து, ஊதுவத்திகள் ஏற்றி, வெற்றிலை-பாக்கு-பழங்கள் வைத்து, ஜோராக பூஜை செய்யப்பட்டது. இவற்றை புகைப்படங்களிலிருந்தே கண்டு கொள்ளாலாம். மைசூர் வக்ப் எஸ்டேட் இதற்கு ஆதரவு அளிக்கிறது. இவையெல்லாம் இஸ்லாத்தில் ஏற்கப்பட்டவையா என்று தெரியவில்லை. சமாதிகளை சின்னங்களாக வைக்கக்கூடாது; வணங்கக் கூடாது; விழா நடத்தக் கூடாது; என்றெல்லாம் ஆர்பாட்டமாக பிரச்சாரம் செய்யும் போது, இவற்றையெல்லாம் எப்படி முஸ்லிம்கள் பொறுத்துக் கொள்கிறார்கள்?
காஃபிர்–மோமின், “தூய்மையானவன்” – “தூய்மையில்லாதவன்” என்ற எண்ணம் இருக்கும் வரையில் முஸ்லீம் முஸ்லீமாகத்தான் இருப்பான்: அலி சகோதரர்களை காந்தி தனது சகோதரர்களைப் போல பாவித்தார். ஆனால், முஸ்லீம் அடிப்படைவாத சிந்தனைகளால், அலி சகோதரர்கள் அதனை ஏற்றுக் கொள்ளா முடியவில்லை. “காந்தியின் குணாதியம் (நடத்தை, பண்பு) எந்த அளவிற்கு தூய்மையாக இருந்தாலும், எனது மதத்தின் (இஸ்லாம்) பார்வையில் ஒரு குணாதியமே இல்லாத ஒரு முசல்மானை விட தாழ்ந்தவராகத்தான் தோன்றுகிறார்”. அதாவது இந்து “தூய்மையில்லாதவன்” ஆனால் முஸ்லீம் “தூய்மையானவன்” என்று சொல்வது “காஃபிர்” மற்றும் “மோமின்” என்று பிரித்து பாகுபாடு காட்டிப் பேசுவதுதான். அமினாபாத், லக்னௌவில் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, முஹம்மது அலியை, என்ன காந்தியைப் பற்றி இப்படி சொல்லியிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, அவர் அளித்த பதில் இதோ[7] – “ஆமாம், என்னுடைய மதம் மற்றும் நம்பிக்கையின்படி, ஒரு விபச்சாரத்தனமுடைய மற்றும் வீழ்ந்த (மிக மோசமான / கேடுகெட்ட) முசல்மான்தான் காந்தியைவிட உயர்ந்தவன்”! அதுமட்டமல்ல தாங்கள் உயர்ந்த முஸ்லீம்கள் என்பதனால், காந்தியுடன் செரமாட்டோம், மேடையில் சமமாக உட்காரமாட்டோம் என்றெல்லாம் கூட வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள், நடந்து காட்டியிருக்கிறார்கள். காந்தி தன்னுடைய எழுத்துகளில் அதனை தக்கேயுரிய பாணியில் பதிவு செய்துள்ளார்[8].
“ஷிர்க்” விவகாரங்களில் முஸ்லிம்களும், நாத்திக அறிவுஜீவிகளும் இரட்டை வேடம் போடுவதேன்?: மொஹம்மது சமாதி-கல்லறையே ஷிர்க் என்று அழித்தவர்கள், திப்புவின் சமாதியை வைத்துக் கொண்டு ஏன் ஆர்பாட்டம் செய்கின்றனர் என்பதும் நோக்கத்தது. சைத்தானின் மீது கல்லெறிகிறேன் என்று, நெறிசல் ஏற்பட்டு ஹஜ் யாத்திரையின் போது, ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அடிக்கடி இறக்கிறார்கள். உண்மையில் அல்லாவின் சக்தி பெரியதென்றால், அவர்களை அல்லா காப்பாற்றியிருக்கலாம். ஆனால், சாத்தான் வெற்றிக் கொள்வது போல, அவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். திராவிட-நாத்திக வீரமணி “அல்லா ஏன் காப்பாற்றவில்லை”, என்று கேட்டு, “விடுதலையில்” கட்டுரை எழுதவில்லை. பகுத்தறிவாளிகள்-நாத்திகர்கள்-அறிவுஜீவிகளான தபோல்கர், பன்ஸரே, கல்புர்கி, முதலியோரும் பேசவில்லை, புத்தகங்களில் குறிப்பிடவில்லை. இதிலிருந்தே, நாத்திகம் என்று சொல்லிக் கொள்பவர்கள் மற்ற மாநிலங்களிலும் “செக்யூலரிஸ” ரீதியிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, இஸ்லாம், கிறிஸ்தவம் என்றால், அவர்களது பகுத்தறிவு, நாத்திகம், அறிவுஜீவித்தனம் முதலியவை வேலைசெய்யாது. ஆனால், முஸ்லிம்களே அவ்வாறு இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அதாவது, ஷிர்க் விசயத்தில் இரட்டைவேடம் போடுகிறார்கள் என்று தெரிகிறது.
ஒப்பீடு எப்படி செய்வது?: கஜினி மொஹம்மது, கோரி மொஹம்மது, மாலிக்காபூர், ஔரங்கசீப், போன்றோர்களின் ஜெயந்தியை கொண்டாடாமல் ஏன் இருக்கிறார்கள் என்ரும், செக்யூலரிஸ இந்தியர்கள் கேட்கலாம். அவர்கள் எல்லோரும் ஆங்கிலேயர்களை எதிர்த்து பாராடவில்லை எனலாம், ஆனால், இந்தியர்களுக்கு அவர்கள் வீரர்களா, தேச பக்தர்களா, தேசபிமானிகளா? எந்த வகையில் அவர்கள் வைக்கப்படுவர்? நாதிர்ஷா, 1739 படையெடுத்து வந்து, தில்லியைக் கொள்ளையெடித்தான். ஆக, நாதிர்ஷா ஜெயந்தியையும் கொண்டாடுவார்களா? வெளியிலிருந்து வந்தவர்கள், இங்கேயே தங்கி விட்டவர்கள், என்றுதான் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்கள். ஆனால், இந்திய தேசத்துவத்தை யார் ஆதரிக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்பது மூலம் அடையாளம் காணப்படுகின்றனரே? அரவிந்தர், வ,உ.சி.ஐயர், சவர்க்கர், சுபாஷ் சந்திர போஸ் போன்றோரை, இந்தியர்கள் இன்றும் சில சித்தாந்த குழுக்கள் ராஜதுரோகிகள் என்று தான் பேசி-எழுதி வருகின்றனர். ஆனால், பெரும்பான்மையினர், அவர்களை மாபெரும் தலைவர்களாக, போராளிகளாக, தேச பக்தர்களாகத்தான் கருதப்பட்டு வருகிறார்கள். பிறகு எப்படி திப்பு எல்லா தியசக்திகளையும் விடுத்து, புண்ணியவானாக, தேவனாக, தூய்மையானவனாக கருதப்பட முடியும்?
© வேதபிரகாஷ்
13-11-2015
[1] For over 10 years Tipu remained in constant touch with the Shankaracharya and even the last recorded letter written in 1798 request the Swami to offer worship , three times a day to Lord Isvara and perform the Chandihavana, a special oblation, for the destruction of enemies and the prosperity of the government.
https://toshkhana.wordpress.com/2012/03/25/tipu-sultan-and-the-ring-of-rama/
[2] Dr. A.K. Shastry has published the contents of 47 letters from Tipu sent to the Sringeri Shankaracharya Sri Sacchidananda Bharati III who presided over the affairs of the mutt from 1753-1799 A.D. These letters range from Tipu Sultan enquiring after the Shankaracharya’s welfare to requesting him to pray for Mysore’s prosperity and even requesting his Holiness to cast a horoscope for Tipu. Tipu’s letters breathe an honest spirit of veneration for the Sringeri Guru.
https://toshkhana.wordpress.com/2012/03/25/tipu-sultan-and-the-ring-of-rama/
[3] http://www.sringeri.net/jagadgurus/sri-sacchidananda-bharati-iii-1770-1814
[4] https://toshkhana.wordpress.com/2012/06/04/the-light-of-islam-tipu-sultan-as-a-practising-muslim/
[5] http://www.islamicvoice.com/june.99/tippu.htm
[6] https://toshkhana.wordpress.com/2012/10/19/remembering-a-martyr-220th-urs-e-shareef-of-hazrath-tipu-sultan-shaheed/
[7] Mahathama Gandhi, Collected works, Volume.XXIII, Appendix, 13, p.569.
[8] Mahathama Gandhi, Collected works, Volume XXVI, p.214.
அண்மைய பின்னூட்டங்கள்