Posted tagged ‘புழல் ஜெயில்’

தங்களது மகன்களது உயிர்களைப் பற்றிக் கவலைப்படும் தாய்மார்கள், மற்ற உயிர்களைப் பற்றியும் கவலைப்பட்டிருக்க வேண்டும் – மகன்களை ஜிஹாதிகளாக வளர்த்திருக்கக் கூடாது, தடுத்திருக்க வேண்டும், அப்பொழுதே மாற்றியிருக்கவேண்டும்!

செப்ரெம்பர் 28, 2015

தங்களது மகன்களது உயிர்களைப் பற்றிக் கவலைப்படும் தாய்மார்கள், மற்ற உயிர்களைப் பற்றியும் கவலைப்பட்டிருக்க வேண்டும் – மகன்களை ஜிஹாதிகளாக வளர்த்திருக்கக் கூடாது, தடுத்திருக்க வேண்டும், அப்பொழுதே மாற்றியிருக்கவேண்டும்!

 

Panna Ismail, Bilal Malik, Police Fakruddhin

Panna Ismail, Bilal Malik, Police Fakruddhin – இவர்கள் ஏன் மாறவில்லை?

ஊடகங்களில் இந்நால்வர்களின் புராணங்கள் அதிகமாகவே உள்ளன.தொகுத்து சுருக்கமாகக் கொடுக்கப்படுகிறது.

 

போலீஸ் பக்ருதீன், - அல்-உம்மா,

போலீஸ் பக்ருதீன், – அல்-உம்மா,

  1. போலீஸ் பக்ருதீன் [Fakruddin alias ‘Police’ Fakruddin] –மதுரை நெல்பேட்டையை சேர்ந்தவன் பக்ருதீன். இவனது தந்தை சிக்கந்தர் அலி போலீஸ் ஏட்டாக பணியாற்றினார். இதனால் போலீஸ்காரர் மகன் பக்ருதீன் என அழைக்கப்பட்ட பக்ருதீனுக்கு நாளடைவில் ‘போலீஸ்‘ பக்ருதீன் ஆனான். சகோதரர் தர்வீஸ் மைதீன் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அத்வானியை குண்டுவைத்து கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டான் பக்ருதீன்.  அல் உம்மா இயக்கத்தின் முக்கிய நிர்வாகி இமாம் அலிக்கு நெருக்கமானவன் பக்ருதீன். 1995ல் விளக்குத்தூண் ஸ்டேஷனில் அடிதடியில் ஈடுபட்டதாகவும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே ஆண்டில் திடீர்நகரில் கொலை முயற்சி வழக்கு, 1996ல் அனுப்பானடியில் அழகர் என்பரை கொலை செய்ததாகவும், மீனாட்சி கோயிலில் வெடிகுண்டு வைத்ததாகவும், மதிச்சியத்தில் கொலை வழக்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவன் ஜாலியாக சுற்றிவந்துள்ளான், தொடர்ந்து குரூரக் குற்றங்களை செய்து வந்துள்ளான். டாக்டர் வி. அரவிந்த ரெட்டி கொலை [அக்டோபர் 23, 2012]; எஸ். வெள்ளையப்பன் [ஜூலை 1 2013]; ஆடிட்டர் ரமேஷ் [ஜூலை 19, 2013]; தமிழகத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதிகள் ஆவர்[1].
பன்னா இஸ்மாயில் - அல்-உம்மா, கோவை குண்டு வழக்கு

பன்னா இஸ்மாயில் – அல்-உம்மா, கோவை குண்டு வழக்கு

  1. பன்னா இஸ்மாயில் [Mohammed Ismail alias Panna Ismail], – இவரது வீடு மேலப்பாளையம் ஆமீம்புரத்தில் உள்ளது.  கோவை குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பன்னா இஸ்மாயில் மீது உள்ளது. தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்திலும் இவர் செயல்பட்டு வந்துள்ளார். டாக்டர் வி. அரவிந்த ரெட்டி கொலை  [அக்டோபர் 23, 2012]; எஸ். வெள்ளையப்பன் [ஜூலை 1 2013]; ஆடிட்டர் ரமேஷ் [ஜூலை 19, 2013]; தமிழகத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதிகள் ஆவர்.
பிலால் மாலிக், - அல்-உம்மா,

பிலால் மாலிக், – அல்-உம்மா,

  1. பிலால் மாலிக் [Bilal Malik] – டாக்டர் வி. அரவிந்த ரெட்டி கொலை [அக்டோபர் 23, 2012].; எஸ். வெள்ளையப்பன் [ஜூலை 1 2013]; ஆடிட்டர் ரமேஷ் [ஜூலை 19, 2013]; தமிழகத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதிகள் ஆவர்.
அபுபக்கர் சித்திக் - கொலைகள் பல, சென்ட்ரல் குண்டு வெடிப்பு

அபுபக்கர் சித்திக் – கொலைகள் பல, சென்ட்ரல் குண்டு வெடிப்பு

  1. அபுபக்கர் சித்திக் – அபுபக்கர் சித்திக் என்ற காக்கா (46). நாகூரைச் சேர்ந்தவன். டாக்டர். வி. அரவிந்த ரெட்டி கொலை [அக்டோபர் 23, 2012] கடந்த 1995–ம் ஆண்டு நாகூரில் இந்து முன்னணி பிரமுகர் தங்கமுத்து கிருஷ்ணனை கொலை செய்வதற்காக இவன் புத்தக பார்சலில் குண்டு வைத்து அனுப்பினான். இதனை வாங்கி பிரித்து பார்த்த அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். இதே போல, மயிலாடு துறையில் இந்து அமைப்பை சேர்ந்த ஜெகவீர பாண்டியன் என்பவரை கொலை செய்வதற்கும், அபுபக்கர் சித்திக் புத்தக குண்டுகளை அனுப்பினான். ஆனால், தபால் நிலையத்தில் வைத்தே கண்டுபிடித்து புத்தக குண்டு செயல் இழக்க வைக்கப் பட்டது. இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வீசிய வழக்கும் அபுபக்கர் சித்திக் மீது உள்ளது. இப்படி கடந்த 18 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் தலைமறைவாகவே இருந்து வரும் சித்திக், பா.ஜக. மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன் ஆகியோர் கொலை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான்[2]. சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாய் மற்றும் மலேசியாவில் அபுபக்கர் சித்திக் தலைமறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது[3]. தமிழகத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதிகள் ஆவர்.
அபுபக்கர் சித்திக் - கொலைகள் பல - சென்ட்ரல் குண்டுவெடிப்பு

அபுபக்கர் சித்திக் – கொலைகள் பல – சென்ட்ரல் குண்டுவெடிப்பு

ஜிஹாதிகள் உருவாக்கப்படிவது எவ்வாறு?: இந்நால்வர்களைத் தவிர மற்ற குற்றாவாளிகள், தீவிரவாதிகள் முதலியோரைப் பற்றி பார்க்கும் போது, அவர்கள் எப்படி மனிதத்தன்மை கொஞ்சமும் இல்லாமல், மனித உயிர்களைப் பறிக்கும் அரக்கர்களை விட, மிகக்கொடியக் குரூர ஜிஹாதிகளாக மாறியுள்ளனர் என்று தெரிகிறது. இவர்கள் இவ்வாறு மாறுவதற்கு, மற்ற ஜிஹாதிகள் மட்டும் காரணமாக இருக்க முடியாது. குழந்தையாகப் பிறந்து, வளரும் போது பெற்றோர்களிடம் தான் அக்குழந்தைகள் முதலில் பாடங்களைக் கற்றுக் கொள்கிறார்கள், அப்பொழுதே அடிப்படைவாதம் கற்பிக்கப் பட்டால், அக்குழந்தைகள் அத்தகைய மனப்பாங்குடன் தான் வளரும். பிறகு பள்ளிக்குச் செல்ல வேண்டும்[4]. அங்கும் அத்தகைய மதபோதனைகள், மக்களை “மோமின்-காபிர்” என்று பிரித்துப் பார்ப்பது, “தாருல்-இஸ்லாம் மற்றும் தாருல்-ஹராப்” என்ற போரிடும் இடங்களை உருவாக்குவது, “ஜிஹாத் என்ற புனிதப்போரின்” தத்துவத்தை மனங்களில் ஏற்றி, உலகத்தில் உள்ள காபிர்களை எப்படியாவது ஒழ்த்துக் கட்டுவது என்றெல்லாம் கற்றுக் கொடுத்தால், அவர்கள் அப்படித்தான் வளர்வார்கள், பெரியவர்கள் ஆவார்கள். கல்லூரிகளில் படிக்கும் போது கூட அத்தகைய எண்ணங்களை வைத்துக் கொண்டிருந்தால், தமது படித்த-திறமைகளை எவ்வாறு உபயோகப்படுத்தலாம் என்ற யோசனை தான் வரும். பட்கல் சகோதர்களின் செயல்களே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். படித்தப் படிப்பு, எப்படி குண்டுகளைத் தயாரிக்கலாம் என்றுதான் புத்தி போயிற்று. பெற்றோர், மற்றோர் இவர்களை ஜிஹாதிகள், ஷஹீதுகள் என்றெல்லாம் பாராட்டிப் பேசி, வாழ்த்திக் கொண்டிருந்தால், அவர்கள் மனம் மாறமாட்டார்கள். இஸ்லாமிய இறையியலில் அத்தகைய பேச்சுக்கே இடமில்லை.

தேடப்பட்டு வரும் தீவிரவாதிகள் - கொலை-குண்டுவெடிப்பு முதலியன

தேடப்பட்டு வரும் தீவிரவாதிகள் – கொலை-குண்டுவெடிப்பு முதலியன

  1. காஜா மொய்தீன் [Khaja Moideen],  ஜூன்.2014ல் அம்பத்தூரில் கே.பி.எஸ். சுரேஷ் குமார் கொலைக்காக கைது செய்யப்பட்டான். இப்பொழுதைய ஜெயில் கலவரத்திற்கு வித்திட்டவன் இவன் தான் என்று கருதப்படுகிறது[5].
  1. முன்னா [Munna alias Mohammed Rafiq] – கிச்சன் புகாரிக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்தான்.
  1. கர்நாடகா மாநிலம், மாண்டியாவைச் சேர்ந்த அப்துல்லாவை [Abdulla alias Abdulla Muthalip],
  1. அஷ்ரப் அலி (34). கோவையை சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் கொலை வழக்கில் தேடப்படுபவர்.
  1. அயூப் என்ற அஷ்ரப் அலி (33). இஸ்லாம் டிபென்ஸ் ஃபோர்ஸ் (ஐடிஎப்) என்ற அமைப்பை சேர்ந்தவர். பாண்டியன் எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு குண்டு வைக்க திட்டம் தீட்டியது தொடர்பாக வழக்கு. இவரை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது[6].
  1. இப்ராகிம் (31). என்டிஎப் இயக்கத்தில் இருந்த இவர் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் கொலை வழக்கு தொடர்பாக கோவையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
  1. முகமது அலி என்ற யூனுஸ் என்ற மன்சூர் (32). மேலபாளையத்தை சேர்ந்தவர். சென்னை விக்டோரியா அரங்கில் குண்டு வைத்தது தொடர்பாக தேடப்பட்டு வருபவர்.
  1. முஜிபுர் ரகுமான் என்ற முஜி (38). கோவையை சேர்ந்தவர். 1998ம் ஆண்டு நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய புள்ளியாக செயல்பட்டார். இவரை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
  1. முஸ்டாக் அகமது (53). வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர். அல்-உம்மா அமைப்போடு தொடர்புடையவர். இந்து அமைப்பை சேர்ந்தவர் கொலை வழக்கில் தொடர்புடையவர். தீவிரவாதிகளுக்காக டெட்டனேட்டர் வாங்கி வந்தவர். இவரை பிடித்து கொடுத்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
  1. ஜாகுபர் சாதிக் என்ற சாதிக் என்ற டெய்லர் ராஜா (28). கோவையை சேர்ந்தவர். அல்-உம்மா தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடையவர். கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய புள்ளியாக செயல்பட்டுள்ளார். இவரை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்ற தமிழக அரசு அறிவித்திருந்தது[7].
  1. நூகு என்.பி என்ற ரஷீத் (21). கேரளா கல்குட்டையை சேர்ந்தவர். கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்.
  1. குஞ்சு முகமது என்ற கனி (42). கேரளா மலப்புரத்தை சேர்ந்தவர். கோவை தொடர் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர்.

© வேதபிரகாஷ்

28-09-2015

[1] http://www.maalaimalar.com/2013/07/25113951/hindu-munnani-leaders-murder-p.html

[2] http://www.maalaimalar.com/2013/10/06141843/18-year-wanted-militants-abupa.html

[3] http://www.puthiyathalaimurai.tv/chennai-bomb-blast-incident-enquiry-with-criminals-141123.html

[4]  இங்கும் மதரஸாக்களில் படித்தால், அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று விளக்கவேண்டிய அவசியல் இல்லை. இன்றைக்கு தலிபான்கள், ஐசிஸ், ஐ.எஸ் போன்றவையே உலகத்திற்கு வெட்டவெளிச்சமாக்கிக் கொண்டிருக்கின்றன.

[5]  Prison officials said Khaja Moideen, arrested in connection with Hindu Munnani leader K P S Suresh Kumar murder in Ambattur in June 2014, was the brain behind the clash.

http://www.nyoooz.com/chennai/210598/back-door-diplomacy-by-2-unarmed-officers-helped-avert-crisis-at-puzhal

[6] http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=16943

[7] http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=16943