திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (6)
ஶ்ரீரங்கப்பட்டிடனும், திப்பு சுல்தானும்: லூயிஸ் ரைஸ் என்ற சரித்திராசிரியர் குறிப்பிடுவதாது, “திப்பு இறந்த போது, ஶ்ரீரங்கப்பட்டன கோட்டை வளாகத்தில் தினமும் பூஜை செய்யப் படும் வகையில் இரண்டே கோவில்கள் தாம் இருந்தன. அவைகூட, அவனது ஜாதகத்தைப் பார்த்து அவனுக்கு வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பவற்றை சொல்லும் ஜோதிடர்களுக்காக விட்டு வைக்கப்பட்டன. மதுவிலக்கு விசயமாக வருவாய் குறைந்ததால், அதனை சரிகட்ட ஒவ்வொரு இந்து கோவிலும் கொள்ளையடிக்கப்பட்டு அவற்றின் செல்வம் அபகரிக்கப்பட்டது”[1]. இதுதான் திப்பு சுல்தான் கோவில்களுக்கு மானியம் அளித்த லட்சணம். எம். எச். கோபால், “முசல்மான்களுக்கு வீட்டுவரி, தானியங்களின் மீதான வரி, மற்றும் விற்பனைக்கு என்றெல்லாத பொருட்கள் என்று அனைவற்றிற்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. கிறிஸ்தவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் தலைநகருக்கு அனுப்பப்பட்டனர். முகமதிய மதத்திற்கு மாறியவர்களுக்கு மட்டும் வரிவிலக்கு போன்ற சலுகைகள் கொடுக்கப்பட்டன. திவான் பூர்ணைய்யாவைத்தவிர மற்ற எல்லா இந்துக்களின் பதவிகளும் பறிக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக முசல்மான்கள் பதவிக்கு அமர்த்தப்பட்டனர். வருவாய்துறையில் பாரசீக மொழியில் கணக்குகள் எழுதப்படும் முறை நுழைக்கப்பட்டது. அதுவரை கன்னடத்தில் தான் எழுதப்பட்டு வந்தது, பிறகு வேண்டியவர்களுக்கு மராத்தியில் மொழிபெயர்க்கப்பட்டது”, என்று எடுத்துக் காட்டுகிறார்[2]. பிரமிளா நெசர்கி (Pramila Nesargi) என்ற பெண்ணிய மகளிர் அமைப்பு தலைவியும், இத்தகைய சரித்திர உண்மைகளை, டிவி-விவாதங்களில் எடுத்துக் காட்டினார். கன்னடத்தை மதிக்காதவனுக்கு எப்படி மதிப்பு கொடுக்கலாம் என்று கன்னடர்கள் பொதுவாக கேட்கிறார்கள்.
திப்பு ராக்கெட்டைக் கண்டுபிடித்தான் போன்ற வாதம்: இந்தியாவில் கோவில் திருவிழாக்களில் ராக்கெட்டுகளை விட்டார்கள், மேலே சென்று பலவித வண்ணங்கள் பொழிந்தன, என்று ஒரு இத்தாலிய அறுவைசிகிச்சை வல்லுனர் தமிழகத்திற்கு வந்தபோது, பார்த்ததை, தனது குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். வெடியுப்பு, கந்தகம் மற்றும் கரித்துகள்கள் கலந்த பொடியை வாண-வெடிகளுக்கு பயன்படுத்தினர். வெடிமருந்து பாறைகளை உடைக்க ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே உபயோகப்படுத்தப் பட்டது. சிற்பக்கலை, கோவில் கட்டுமான முறை, முதலியவற்றைக் கவனித்தால், 20-30 அடிகள் நீளம் கொண்ட பாறைகள் எவ்வாறு பிளக்கப்பட்டு, அறுக்கப்பட்டு அல்லது நீளத்தில் உடைக்கப்பட்டு தூண்களாக வடிக்கப்பட்டன என்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். கிணறுகள், ஆழ்கிணறுகள், படிகட்டுகள் கொண்ட ஆழ்கிணறுகள், முதலியவற்றைக் காணும் போதும், வெடிமருந்து உபயோகம் இந்தியாவில் இருந்தது அறியலாம்[3]. மேலும் “வெடியுப்பு” [Potassium Nitrate] என்பதும் அறியப்பட்டிருந்தது. ராஜபுத்திரர்களிடமிருந்து, முகல்களுக்கும், முகல்களிடமிருந்து மற்றவர்களுக்கும் இந்த நுட்பம் பரவியது[4]. அரேபியர்கள் மூலம் ஐரோப்பவிற்கு பரவியது. இடைக்காலத்தில் “வெடியுப்பு” (Saltpetre) இந்தியாவிலிருந்து பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஐரோப்பிய கம்பனிகள் இதில் ஈடுபட்டிருந்தன. இந்த “வெடியுப்பு” பீரங்களில் வைத்து வெடிக்கப்பட்டு, போரில் உபயோகப்படுத்தப் பட்டன. இந்தியா வெடிமருந்தை, ராக்கெட் போன்றவற்றை அடுத்தவறைக் கொல்வதற்குப் பயன்படுத்தவில்லை. ஏனெனில், பாறைகளை உடைத்து, சாலைகள் போடுவது, கிணறுகள் தோண்டுவது, கோவில்களுக்கான பாறைகளை விநியோகம் செய்தல் என்ற முறைகளில் ஈடுபட்டதனால், அத்தகைய வன்முறை காணப்படவில்லை.
திப்புவின் “ராம்” பொறித்த மோதிரம்: ஜூலை.27, 2012 அன்று ஆர்தர் சோமர்செட் காலமானபோது, “ரக்லான் சேமிப்பை” காப்பாற்ற வேண்டும் என்ற பிரச்சாரம் இங்கிலாந்தில் நடந்தது[5]. அதில் இருந்தது தான், திப்பு அணிந்ததாக சொல்லப்படும் மோதிரம் என்று தெரிய வந்தது[6]. நவம்பர்.15, 1793 தேதியிட்ட கடிதத்தில், திப்பு, சங்கராச்சாரியாரிடமிருந்து பெற்ற நகைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றான். ஆகவே, அவரிடத்திலிருந்து பெற்ற நகைகளில் மோதிரமும் இருந்திருக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கப்பட்ட, மோதிரத்தை பாதுகாப்பிற்காக, தனது விரலில் அணிந்திருக்கலாம்[7]. அம்மோதிரத்தை தலைகீழாக வைத்துப் பார்த்தால், அதே எழுத்துகள் “அரேபிக்” போன்றே காணப்படுகிறது. அதாவது, அது “ரஹீம்” அல்லது “அல்லா” போன்றே தெரிவதால், ஒருவேளை, அத்தகைய மோதிரத்தை அணிந்திருந்தான் எனலாம். மேலும், 2012லிருந்து தான் இதை வைத்துக் கொண்டு ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. இன்றும், ஆஸம் கான், திப்புவைப் பற்றிய சர்ச்சைகளையெல்லாம் பற்றி ஒன்றும் தெரியாதது போல, மோடியை லண்டனிலிருந்து, அந்த மோதிரத்தைக் கொண்டு வாருங்கள், என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது[8]. தினம்-தினம் எத்தனையோ பேர் லண்டனுக்குச் சென்றுவருகிறார்கள். ஏன் இவரே சென்றிருக்கலாம், ஆனால், மோடியை வாங்கி வரச்சொல்வது, நக்கல்தான் என்று தெரிகிறது. மேலும் கத்தியை வாங்கிவந்த, மல்லையாவை வாங்கி வரச்சொன்னால், சரியாக இருக்கும். ஆகவே, இனி கம்யூனர் அரசியல்வாதிகள், தொடர்ந்து செக்யூலரிஸ விளையாட்டுகள் ஆடிக்கொண்டிருப்பார்கள் எனலாம்.
செக்யூலரிஸ மாயையில் சிக்கி உழலும் இந்துகள்: திப்பு சுல்தான் மற்றும் சிருங்கேரி சங்கராச்சாரியார் நட்பு, உறவு மற்றும் குரு-சிஷ்ய விவகாரங்கள் வேடிக்கையாகத்தான் இருக்கின்றன. அப்பவித்தனமான, எதையும் நம்புகின்ற, ஏமாளித்தனமான இந்துக்கள் வேண்டுமானால் நம்பலாம், ஆனால், மற்ற எவரும் நம்பத்தகும் விதத்தில் இல்லை. செக்யூலரிஸ முறையில் இதனை விளக்க வேண்டுமானால், இக்காலத்தில் தேர்தலில் எப்படி “இந்துக்களாக” இருந்தாலும் கூட்டணிகள் அமைத்துக் கொண்டு போரிடுகிறார்களோ, முன்னரும், இதேபோல மராத்தியர் மற்ற தென்னிந்திய அரசர்கள் சண்டையிட்டு வந்தார்கள். ஐரோப்பிய சக்திகளை ஒழித்து, இந்திய அரசை நிறுவவேண்டும் என்று மராத்தியர் பாடுபட்டனர். அவ்விதத்தில், அவர்கள் மைசூரின் மீது படையெடுத்தனர். இக்காலத்தில் எப்படி சங்கராச்சாரியார்கள் காங்கிரஸ், பிஜேபி, என்று பல கட்சிகள் / கூட்டணிகளை ஆதரித்து வருகிறார்களோ, அதுபோல 1790 காலத்திலும், சிருங்கேரி சங்கராச்சாரி திப்புவை அதரித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை எனலாம். இன்று கூட மதுரை ஆதீனம், கருணாநிதி, வீரமணி போன்றோருடன் நெருக்கமாக இருக்கிறார். ஆனால், முஸ்லிம்களிடம் பயந்து சாகிறார். ஆகவே, இந்துக்களை வைத்தே, இந்துக்களுக்கு எதிராக, இப்படியொரு யுக்தி மேற்கொள்ளப்பட்டது குறித்து ஆராய வேண்டும்.
© வேதபிரகாஷ்
13-11-2015
[1] The British historian Lewis Rice who wrote the History of Mysore and Coorg says how in the “…vast empire of Tipu Sultan on the eve of his death, there were only two Hindu temples having daily pujas within the Srirangapattanam fortress. It is only for the satisfaction of the Brahmin astrologers who used to study his horoscope that Tipu Sultan had spared those two temples. The entire wealth of every Hindu temple was confiscated before 1790 itself mainly to make up for the revenue loss due to total prohibition in the country.”
[2] Equally, MH Gopal in his Tipu Sultan’s Mysore: An Economic History says that, “Mussulmans were exempted from paying the house tax and taxes on grain and other goods meant for their personal use and not for trade. Christians were seized and deported to the capital, and their property confiscated. Converts to Islam were given concessions such as exemption from taxes…[Tipu] removed Hindus from all administrative posts and replaced them with Mussulmans with the exception of Diwan Purnaiah…Another change was the introduction of Persian as the medium of accounts in the revenue department. It was so far the practice in Mysore…to make out the revenue accounts in Kannada, fair copies of which were communicated to the amildars who had them translated into Marathi.”
[3] RusellM.S, Chemistry of Fireworks, Springer, 2009, Chapt.1, p.4, 7.
[4] Jermy Black, War in the Early Modern World 1450-1815, Routledge, Taylor & Francis Group, 1999, see.chapter – 5. Warehouse and gunpowder in India c.1000-1850, pp.105-128.
[5] http://www.raglanrescue.co.uk/
[6] http://www.christies.com/lotfinder/jewelry/an-indian-antique-gold-ring-5797668-details.aspx?from=searchresults&intObjectID=5797668&sid=7670f99f-f845-4665-92ca-046be3886694
[7] Of particular interest to the subject of the ring is a letter from Tipu to the Shankaracharya dated November 15, 1793 where he offers his salutation to the Guru and acknowledges receipt of jewellery from the Guru, a Sirapecha, Kalgi (both turban ornaments) and a pair of shawl. So we now know that exchange of gifts was not just from Tipu Sultan to the Guru but also the other way round. Such a gift as this inscribed ring from the Guru would be treasured by the Sultan and kept as an auspicious token among his dearest possessions. Lord Rama is also called as ‘Maryada Purushottam Rama’; Maryada meaning ‘epitome of ethical behaviour’ and Purushottam meaning ‘first among men’. Rama was a God and the Sultan but a man. If the Sringeri Shankaracharya did send this ring to Tipu, perhaps he was only pointing to Tipu an ideal that an earthly monarch should aspire for.
https://toshkhana.wordpress.com/2012/03/25/tipu-sultan-and-the-ring-of-rama/
[8] http://www.hindustantimes.com/india/bring-back-tipu-sultan-ring-bearing-lord-ram-s-name-azam-to-modi/story-hCpxN8Zq04NR03BtxGwXCK.html
அண்மைய பின்னூட்டங்கள்