Posted tagged ‘பிரம்படி தண்டனை’

திருமணத்திற்கு முன் பாலியல் உறவு மலேசியாவில் 3 பெண்களுக்கு பிரம்படி தண்டனை!

பிப்ரவரி 20, 2010

திருமணத்திற்கு முன் பாலியல் உறவு மலேசியாவில் 3 பெண்களுக்கு பிரம்படி தண்டனை!

கோலாலம்பூர், பிப். 20-02-2010:  மலேசியாவில் முதல் முறையாக மூன்று பெண்களுக்கு, திருமணத்திற்கு முன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதற்காக, அந்நாட்டு இஸ்லாமிய சட்டப்படி பிரம்படி கொடுக்கப்பட்டது.  புதன்கிழமை 17-02-2010 அன்று “கல்வத்” என்ற குற்றத்திர்காக (“khalwat” or illicit contact with the opposite sex) சிறைக்குவெளியே அவர்களுக்கு தந்தனைக் கொடுக்கப்பட்டது . பிரம்படி தண்டனை பெற்ற பெண்கள் தங்களுக்கு நடந்தது நன்மையான செயல் தான் என்று நியாயப்படுத்தி உள்ளனர். ஆனால், இந்த தண்டனை சட்டவிரோதமானது என, மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மலேசிய-பெண்கள்-இஸ்லாமயமாக்கல்

மலேசிய-பெண்கள்-இஸ்லாமயமாக்கல்

இதில் சம்பந்தப்பட்ட மூன்று பெண்களின் உண்மையான பெயர் மற்றும் படங்கள் இன்றி, பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்ட செய்தி: தான் பள்ளி செல்லும் பருவத்தில் கர்ப்பமடைந்ததகவும், தன் செயலுக்கு வருந்துவதாக, 17 வயது பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். அதே போன்று மற்றொரு பெண், தன் தந்தை குடும்பத்தை விட்டு சென்ற பின், குடும்ப பொறுப்புகளை ஏற்ற நிலையில், திருமணமாகாமலே, தனக்கு மூன்று வயது பெண் குழந்தை உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

பிரம்படி-தண்டனை-விளக்கப்படுகிறது

பிரம்படி-தண்டனை-விளக்கப்படுகிறது

இந்த இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேருக்கு பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்டதாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் உசேன் அறிவித்தார். இந்த பெண்கள் முழுமையாக உடை அணிந்த நிலையில், முகத்திற்கு பர்தா போன்றதை அணிந்து உட்கார்ந்திருக்கும் போது, அவர்களுக்கு தலா ஆறு பிரம்படி தரப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மலேசிய-பெண்கள்-பிரம்படிபடுதல்

மலேசிய-பெண்கள்-பிரம்படிபடுதல்

“இஸ்லாம் மயமாக்கல்”  என்ற முறை வேகமாக அமூல் படுத்தப்படுவதால், அச்சட்டமானது, அனைவருக்கும் பொறுந்தும் என்ற நிலை வரும். ஆகவே, பள்ளிகளில் பிரம்படி தண்டனை எப்படி கொடுக்கப்படும் என்று விவரிப்பார்களாம். என்னெனில், ஒருவேளை பெண்கள் அடிபடவேந்தும் என்றால் அதற்கு தயாராக இருக்கவேண்டுமாம்!

பக்கத்து-நாடான-இந்தோனேசியாவில்-பிரம்படி-தண்டனை-அமூல்

பக்கத்து-நாடான-இந்தோனேசியாவில்-பிரம்படி-தண்டனை-அமூல்

வளைகுடா நாடுகளில் பரவலாக உள்ள அத்தகைய சட்டம், பலதர மக்கள் வசிக்கும் மலேசியாவில் அமூல் படுத்துவது, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது மட்டுமன்றி, அதனை எப்படி எதிர்ப்பது என்றும் புரியாமல் மனித-உரிமைகள் பேசும் கூட்டத்தினர் திகைத்து மௌனம் சாதிக்கின்றனராம்!