சென்னை முஸ்லீம்களே ஜாகிர் கானை எதிர்க்கும்போது, இங்கிலாந்து தடை செய்வதில் என்ன ஆச்சரியம்?
பீஸ் அமைப்பைச் சேர்ந்த ஜாகிர் நாயக் என்பவர், வன்முறையை தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருவதாகக் கூறி ஐஸ் அவுஸ் காவல் நிலையம் எதிரே சுன்னத் ஜமாத் பேரவையினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இணைதளத்தில் தேடியபோது, கீழ்கண்ட விவரம் கண்ணில் பட்டது:
http://markaspost.wordpress.com/2009/01/10/சென்னையில்-டாக்டர்-ஜாகிர/
சென்னையில் டாக்டர் ஜாகிர் நாயக்
ஜனவரி10, 2009, 3:37 பிற்பகல்
கோப்பு வகை: டாக்டர் ஜாகிர் நாயக் இஸ்லாம் அல்லாத மக்களுக்காக உலகம் முழுதும் சென்று,இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைத்து வரும் சகோதரர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள்,இன்ஷா அல்லாஹ்,வரும் ஜனவரி பதினேழாம் தேதி,சனிக்கிழமை,பதினெட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் (JANUARY 17TH AND 18TH 2009 ) சென்னையில் உரையாற்ற இருக்கிறார்கள். சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில்,ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகத்தில்,மாலை ஆறு மணி அளவில் நடைபெற உள்ளது.(ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வீ ஜி பி கோல்டன் பீச் அமைந்துள்ளது. எல்லா மத மக்களும் வரவேற்கப்படுகிறார்கள், அனுமதி இலவசம்.பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விவரம் வேண்டுவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொள்ளவும். சகோதரர்களே, |
ஜாகிர்நாயக்கின் பெயர் சொல்லி முஸ்லிம்கள் ஒருபக்கம் அதிரடி பிரசாரம் செய்கின்றனர்!
மறுபுறம் “சுன்னத் ஜாமாத்” என்று இவ்வாறு எதிர்க்கின்றனர்!
ஒன்றும் புரியவில்லையே?
ஸாகிர் நாயக் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை(ஜூன் 19, 2010): இந்திய பிரபல மதபிரச்சாரகர் ஸாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்துள்ளதாக பி.பி.சி. இணைய சேவை செய்தி வெளியிட்டுள்ளது. எமது நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் நாட்டுக்குள் நுழைய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும், ஏற்க முடியாத நடத்தை என்று தாம் கருதும் நடத்தை உடையவர் ஸாகிர் நாயக். அதன் காரணமாகவே இவருக்கான விசா நிராகரித்துள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஸாகிர் நாயக் லண்டனிலும், வடக்கு இங்கிலாந்திலும் பல உரைகளை நிகழ்த்தவிருந்தார். இதேவேளை, ஸாகிர் நாயக் அண்மையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவரது உரையை கேட்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் கூடியமை குறிப்பிடத்தக்கது. ஸாகிர் நாயக் இஸ்லாம் குறித்து ஆளுமை கொண்டவர் என அங்கீகரிக்கப்பட்டவர். எனினும், ஏனைய மதங்களை நிந்திக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுபவர் என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக வேண்டும் என்று பேசிவரும் ஜாகிர் நாயக்: இப்படியும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஒஸோமா பின் லேடனைப் புகழும், தீரவாதக் கொள்கையையுடைய ஜாகிர் நாயக்கை தடைசெய்யப்பட்டார், என்றும் கூறுகிறது. அந்நாட்டு உள்துறை செயலர், “டிவி மதப்பிரச்சாரகர் தூண்டிவிடும் வகையில் பேசுவதாலும் அவருடைய ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தையினாலும் தடைசெய்யப்படுவதாகக் குறிப்பிடுகிறார் “.
அண்மைய பின்னூட்டங்கள்