முகமது நபியின் பிறந்த நாள், மிலாது நபி, கார்த்திகை மாத தீப ஒளி கொண்டாட்டங்கள்!
முகமதுக்கு முந்தைய மற்றும் பிந்தைய அரேபியா: “முகமதுக்கு முந்தைய அரேபியா” என்று வந்துள்ள ஆயிரக் கணக்கான புத்தகங்களில், அரேபியாவில், இஸ்லாத்திற்கு முன்னர் கிருத்துவம், யூதம், பாரச்சீகம்[1], பௌத்தம், இந்து போன்ற மதங்கள் மக்களிடையே இருந்ததாக எடுத்துக் காட்டுகிறார்கள். முகமது காலத்தில், காபாவில் இருந்த 360 விக்கிரங்கள், சுவர்களில் இருந்த சித்திரங்கள் முதலியவை, அவரால் அழிக்கப் பட்டன என்று அவர்கள் எழுதி வைத்துள்ள சரித்திர புத்தகங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். கடந்த நூற்றாண்டுகளில் ஓரளவிற்கு அத்தகைய எச்சங்கள் இருதற்கான ஆதாரங்கள், மேனாட்டர்கள் எடுத்த புகைப்படங்கள், ஓவியங்கள் மூலமாகவும் அறியலாம். ஆனால், அடிப்படைவாத மேலோங்க, பழைய ஆதாரங்கள் மற்றும் எச்சங்கள் கூட அழிக்கப் பட ஆரம்பித்து, இப்பொழுது, முழுவதும் துடைக்கும் பணி நடக்கிறது எனலாம். ஐசிஸ் தீவிரவாதிகள், சிரியா மற்றும் அதனை சுற்றியுள்ள பழங்கால சின்னங்களை அழித்து வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தால், பழங்கால சரித்திரம் முழுமையாக இழக்க நேரிடும்.
யோக்கியகர்த்தா, இந்தோனேசியாவில், கோவில் போன்ற உருவத்தை பல்லக்கில் தூக்கிக் கொண்டு, ஊர்வலமாக கொண்டு சென்று மீலாது நபி கொண்டாடுகின்றனர்.
யோக்கியகர்த்தா, இந்தோனேசியாவில், கோவில் போன்ற உருவத்தை பல்லக்கில் தூக்கிக் கொண்டு, ஊர்வலமாக கொண்டு சென்று மீலாது நபி கொண்டாடுகின்றனர். பழைய புகைப்படம்.


மீலாது நபி எப்படி, எப்பொழுது, ஏன் கொண்டாடப் படுகிறது?: இருப்பினும் இஸ்லாம் உலகம் முழுவதும் பரவிய நிலையில், அதன் நம்பிக்கை, உள்ளூர் மாறுதல்களுடன் வெளிப்படுகின்றது. காலம், இடம், முதலியவற்றால் உண்டாகும் மாற்றங்களுடன் அவை நடந்து வருகின்றன. பூமத்திய ரேகைக்கு மேல்-கீழ், கடக-மகர ரேகைகளில், துருவங்களுக்கு அருகில் இருக்கும் மக்களின் வழிபாட்டு முறைகளில், நடைமுறையில், அதனால், மாறுதல்களைக் காணலாம். மேலும், இஸ்லாம் சந்திரன், அதன் மீதான காலக்கணக்கீட்டின் மீது ஆதாரமாக இயங்கிவருவதால், அமாவாசை-பௌர்ணமி மற்றும் அதற்கு முன் மற்றும் பின்வரும் நாட்கள் புண்ணியமாகக் கருதப்பட்டு, அந்நாட்களில் தான், பண்டிகைகள் கொண்டாடப் பட்டு வருகிறது. ஆப்பிரிக்க-ஆசிய நாடுகளில், அவரவர் கலாச்சார, பாரம்பரிய, பண்பாட்டு விழா கொண்டாட்டங்களுடன், இஸ்லாமிய பண்டிகை கொண்டாட்டங்களும் இணைந்தே நடந்து வருகின்றனர். இதனால், ஆப்பிரிக்காவில் கிருத்துவம்-யூதம் மற்றும் ஆசியாவில் பௌத்தம்-இந்து மத தாக்கஙளைக் காணலாம். இந்நிலையில் மீலாது நபி பற்றி அலசு போது, கிடைத்த விவரங்கள் ஆராய்ச்சியாளர்களைத் தூண்டுவதாக அமைந்துள்ளன.
பனுவங்கி நகரில், இந்தோனேசியா மீலாது நபி இவ்வாறு கொண்டாடப் படுகிறது.
பனுவங்கி நகரில், இந்தோனேசியா மீலாது நபி இவ்வாறு கொண்டாடப் படுகிறது. மக்கள் ஆடி-பாடிக் கொண்டு செல்வர்.
அமாவாசை–பௌர்ணமி, பிறை வைத்து கொண்டாடும் இஸ்லாமிய பண்டிகைகள்: ரபி அல்-அவ்வல், பாரா ரபியுல் அவ்வல் அதாவது மீலாது நபி, எப்படி உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது என்பதைக் காண்போம். ரபி அல்-அவ்வல் [(Arabic: ربيع الأوّل, rabī‘u ’l-awwal) ] என்பது முகமதிய காலண்டரில் மூன்றாவது மாதத்தை / பனிகாலம் ஆரம்பத்தைக் குறிக்கும். இஸ்லாம் தோன்றியதற்கு முன்னர், இக்காலத்தில், பௌர்ணமிக்கு இரண்டு நாள் – முதல் இரவில் விளக்குகளை ஏற்றி வைப்பது வழக்கம். மேலே, இஸ்லாம் சந்திரன், அதன் மீதான காலக்கணக்கீட்டின் மீது ஆதாரமாக இயங்கிவருவதால், அமாவாசை-பௌர்ணமி மற்றும் அதற்கு முன் மற்றும் பின்வரும் நாட்கள் புண்ணியமாகக் கருதப்பட்டு, அந்நாட்களில் தான், பண்டிகைகள் கொண்டாடப் பட்டு வருகிறது, என குறிப்பிடப் பட்டது, ஆனால், சந்திரனை பகலில், மேகமூட்டமாக இருக்குபோது, மழைகாலத்தில், துருவப் பகுதிகளில் தெளிவாகப் பார்க்க முடியாது. இதனால். இரண்டாம் பிறை, மூன்றாம் பிறை என்றெல்லாம் உறுதியாக சொல்ல முடியாது. அதனால், தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு, பஞ்சாங்கம் கணிக்கப் பட்டு, அதன் படி, விழாக்கள் கொண்டாடப் பட்டன.
பிறந்த நாள் தெரியாத முகமதுவின் பிறந்த நாள் கொண்டாடுவது: ரபி அல்-அவ்வல் [(Arabic: ربيع الأوّل, rabī‘u ’l-awwal) ] என்பது முகமதிய காலண்டரில் மூன்றாவது மாதத்தை / பனிகாலம் ஆரம்பத்தைக் குறிக்கும். இம்மாதத்தில் மொஹம்மது நபியின் பிறந்த நாளை முகமதியர் கொண்டாடுவர். ஆனல், அவரது பிறந்த தேதி சரியாக தெரியாது. அதாவது, உருவ வழிபாடு சுத்தமாக இருக்கக் கூடாது, என்பதால், புத்தகங்கள், சின்னங்கள் என்று எல்லாவற்றையும் ஆசாரகோட்பாடு மிக்கக் கொண்டவர்கள் அழித்து விட்டனர். மாவ்லித் [Arabic: مَولِد النَّبِي mawlidu n-nabiyyi, Birth of the Prophet] எனப்படுவது, மௌலித், மேவ்லீத், மூவ்லீத், மீலாத் என்றாகி, மீலாது நபி ஆயிற்று. மௌலித் என்றச் சொல் பெற்றெடுத்தல், கருத்தருத்தல், வம்சாவளி, பிறப்பு, குழந்தையின் பிறப்பு, முகமது நபி பிறந்தநாள் என்றாகியது. ஷியாக்கள் தங்கள் ஆறாவது இமாம் ஜாஃபர் அல்-சாதிக்கின் பிறந்தநாளும் நபிகளின் பிறந்தநாளும் ஒன்றாக வருவதாக மாதத்தின் 17வது நாளில் கொண்டாடுகின்றனர். சுன்னிகள் ரபி அல்-அவ்வல்லை 12ம் நாளும், ஷியாக்கள் 17ம் நாளும் கொண்டாடுகின்றனர். ஸலபி மற்றும் தேவ்பந்திகள் நிராகரிக்கின்றனர். இத்தகைய கொண்டாட்டங்களினால், இஸ்லாம் முந்தைய பழக்க-வழக்கங்கள் மறுபடியும் தோன்றுகின்றன என்று ஆசார இஸ்லாம் எதிர்க்கிறது!
இப்படி விளக்கேற்றியும் மீலாது நபி இவ்வாறு கொண்டாடப் படுகிறது.
முகமதியரின் விளக்கு கொண்டாட்டம்: சந்திரனை ஆதாரமாக வைத்து, மாதம், ஆண்டு கணக்கிடப் படுவதால், முகமதியர் கொண்டாட்டங்கள், ஒரு நாள் வித்தியாசப் படுகிறது[2]. பாகிஸ்தான் 10-11-2019 அன்று மீலாது நபி கொண்டாடியது. வளைகுடா நாடுகளில் 09-11-2019 அன்று கொண்டாடப் பட்டது[3]. விடுமுறை அறிவிக்கப் படுவது, இந்தியாவில் அரசியலாக்கப் பட்டது. முதலில் வி.பி.சிங் பிரதமராக இருக்கும் போது, தேசிய விடுமுறையாக அறிவிக்கப் பட்டது. பிறகு, அது தொடர்ந்தது. மாநிலங்களிலும் அத்தகைய போக்கு, பிறகு உண்டானது. ஆனால், சில இஸ்லாமிய நாடுகளில் ஒரு நாள் மட்டுமல்ல, ஒரு வாரம் கொண்டாடப் படுகிறது. அத்தகைய நிலையை, இந்தோனேசியாவில் காணலாம். யோக்யகர்தா என்ற இதத்தில் அவ்வாறு சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது[4]. கோபுரம் போன்ற அமைப்பை ஊர்வலத்தில் தூக்கிச் சென்று கொண்டாடுவர். இது காவடி தூக்கும் விழாவை ஒத்துள்ளது. திருவிழா போன்று ராட்டினம், கடைகள் எல்லாமே இருக்கும். மொரோகோ, கானா போன்ற நாடுகளிலும் அவ்வாறே, கொண்டாடப் படுகின்றன[5]. மொரோகோவில், கோபுர போன்ற உருவங்களை, தலைமீதுவைத்துக் கொண்டு ஊர்வலமாக செல்கின்றனர்.
பொலோக் அவென்யூ, கெய்ரோவில், 1904ல் மீலாது நபி இவ்வாறு கொண்டாடப் பட்டது.
மலேசியாவில் மீலாது நபி இவ்வாறு கொண்டாடப் படுகிறது.
முகமதியரின் விளக்கு கொண்டாட்டமும், கார்த்திகை தீபம் கொண்டாட்டமும்: கார்த்திகை மாதத்தில், பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் அகல் விளக்குகளில் தீபமேற்றி வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர். கார்த்திகை நட்சத்திர கூட்டத்தில், அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) எனப்படுகிறது. கார்த்திகை மைந்த முருகன் பிறந்த தினமாகக் கருதப் படுகிறது. இவையெல்லாமும், மேற்குறிப்பிடப் பட்ட கொண்டாட்டங்களுடன் ஒத்துப்போவதை காணலாம். உலகில், ஒரு காலத்தில், குறிப்பிட்ட மதம் அல்லது நம்பிக்கையாளர்கள் பரவியிருந்ததை இது காட்டுகிறது. அல்லது, பல்வேறு இடங்களில் வாழ்ந்த மக்கள், இயற்கையை ஆதாரமாக வைத்து, நாட்கள், மாதங்கள், வருடங்கள் முதலியவற்றைக் கணக்கிட்ட போது, துல்லியமாக்க, நட்சத்திரங்கள், சந்திரன், பிறைகள் முதலியவற்றை உபயோகப் படுத்தியதையும் கவனிக்கலாம்.
© வேதபிரகாஷ்
11-11-2019
[1] ஜொராஸ்ட்ரிய மதம் [Zorastrianism, fire worshippers], தீயை வணங்கும் மதம் என்று சொல்லப் படுகிறது. இது இரானில், பாரசீக பேரரசு காலத்தில் இருந்தது.
[2] Schedule, T., Calendar, Muslims Celebrate Mawlid, the Prophet’s birth Muslims Celebrate Mawlid, the Prophet’s birth. C., Show, H. Y. O. L., & is Hiring, C. C. T. V.
[3] All parts of the Arabian Gulf, including the West Asian region of Syria, Iraq and Lebanon, have begun the observance of Rabi ul Awwal. Eid-e-Milad or Mawlid would be celebrated in these nations from the evening of November 8 to the sunset of November 9.
[4] Mulyana, Ahmad. “Sekaten tradition: The ritual ceremony in Yogyakarta as acculturation reality of Javanese culture in Indonesia.” International Journal of Humanities and Social Science Studies, IV 2 (2017): 50-61.
[5] Abdul-Hamid, M. U. S. T. A. P. H. A., CAPE COAST, and GHANA WEST AFRICA. “The Influence of Islam on an African People: The Case of the Dagomba of Northern Ghana.” International Conference on Universalism, Relativism & Intercultural Philosophy. University of Cape Coast, Cape Coast. 2010.
அண்மைய பின்னூட்டங்கள்