Posted tagged ‘பாண்டியர்’

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: துலுக்கர் ஆட்சியும், அதனால் ஏற்பட்ட முடிவுகள் (2)

திசெம்பர் 6, 2017

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: துலுக்கர் ஆட்சியும், அதனால் ஏற்பட்ட முடிவுகள் (2)

Malikafur army attack and killing people-imaginary

தில்லியிலிருந்து துலுக்கர் படை எவ்வாறு ஆரும் அறியாத படி மதுரைக்கு வந்து சேர்ந்தது?: தில்லியிலிருந்து, மதுரைக்கு வர ஆறுமாதங்கள் ஆகும் என்று எழுதி வைத்துள்ளனர். ஆறுமாத இரயாணத்திற்கு, தங்க இடம், உடை, உணவு எல்லாமே தேவையாக இருந்திருக்கும். அதாவது, இடையில், மற்றவர் துணை, உதவி இல்லாமல் சென்றிருக்க முடியாது. அப்படியென்றால், துலுக்கர் எப்படி குதிரைகளில் அவ்வாறு கூட்டமாக வந்திருப்பர், வரும் போது, அவர்களை யாரும் பார்க்காமல் / கண்டு கொள்ளாமல் இருந்திருப்பர் என்று யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது. துலுக்கர் அவ்வாறு கூட்டமாக செல்கின்றனர் என்றால், நிச்சயம் பார்த்தவர்கள் விசயம் அறிந்து சொல்லியிருப்பர். ஆகவே, அவர்கள், ஆயுதங்களை மறைத்துக் கொண்டு, ஏதோ தீர்த்த யாத்திரை செல்வது போல சென்றிருக்க வேண்டும். இல்லை, மற்றவர் போல ஆடை அணிந்து, வியாபார நிமித்தம், பொருட்களை வாங்குவது-விற்பது போன்ற ரீதியில் சென்றிருக்க வேண்டும். ஆக வேடமிட்டு தான் துலுக்கர் சென்றுள்ளனர் என்றாகிறது. இல்லை, தீவிரவாதிகள் போல, பீதியைக் கிளமப்பிக் கொண்டு சென்றிருக்க வேண்டும்.

Madurai sultanate-Amir khusru

முகமதியதுலுக்க படையெடுப்பு, பாண்டியர் பற்றிய சரித்திராசிரியர்களின் விளக்கங்கள்: வஸாப் [Wassaf], அமீர் குர்ஷூ [Amir Khusru] மற்றும் ஜியா-உத்-தீன் பர்ணி [Zia-ud-din Barni] முதலியோரின் வர்ணனைகளை வைத்துக் கொண்டு, தெளிவாக விசயங்களை தீர்மானிக்க முடியவில்லை என்று நீலகண்ட சாஸ்திரி கருத்து தெரிவித்தார்[1]. அமீர் குர்ஷூ மற்றும் ஜியா-உத்-தீன் பர்ணி சுந்தர-வீர பாண்டியர் சண்டைபற்றி குறிப்பிடவில்லை என்கிறார். இருப்பினும், அவர்கள் சண்டையிட்டுக் கொண்டு வீழ்ந்தனர் என்று ஒப்புக் கொள்கிறார். எல்லியட் மற்றும் டாவ்ஸன், வஸாப் வர்ணனை, அமீர் குர்ஷூ மூலம் உறுதி படுத்தினர்[2]. பொதுவாக, ராஜாக்கள், ராஜ்ஜியங்கள், நகரங்கள் முதலியவற்றின் பெயர்களை, இந்திய மொழிப் பெயர்களுடன் ஒப்பிட்டு, அவற்றை கல்வெட்டு விவரங்களுடன் சரிபார்த்து, அடையாளம் காண்பதில் தான், அத்தகைய கஷ்டம் ஏற்படுகின்றன. ஆனால், துலுக்கர் கோவில்களை இடித்தது, கொள்ளையடித்தது, சூரையாடியது, தர்கா-மசூதிகளாக மாற்றியது முதலியவை கண்கூடாகவே தெரிகின்றன. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

Madurai sultanate

1323 முதல் 1378 வரை சுமார் 55 ஆண்டுகள்  மதுரைப்  பகுதியில் சுல்தான்களின் ஆட்சி: 1293 முதல்1422 வரை பாண்டியர்களே ஆளவில்லை என்பது போல இடைவெளி காட்டுவதும் வினோதமாக உள்ளது. 1329-1330ல் “சுல்தானிய ஆட்சி” தொடங்குவதாக, நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகின்றார்[3]. 1323-ல் பராக்கிரம தேவபாண்டியன் காலத்தில் உலூகான் படையெடுத்து பாண்டிய நாட்டை கைப்பற்றினான். முகமது பின் துக்ளக் ஆட்சியில் மாபார் என்றழைக்கப் பட்ட தமிழகம் தில்லி சுல்தானியத்தின் 23 மாநிலங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. சுல்தான் ஜமாலுத்தீன் ஹஸன்ஷா என்பவன் மதுரையில் ஆளுநராக நியமிக்கப்பட்டான். பின்பு இவன் தில்லி சுல்தானாகத்தில் இருந்து பிரிந்து தன்னிச்சையாக மதுரையை சுதந்திர பிரதேசமாக அறிவித்தான். இவனின் வழிவந்தவர்களே மதுரை சுல்தான்கள் என்று கூறிக்கொள்கின்றனர். சுல்தான் ஜமாலுத்தீன் ஹஸன்ஷா 1335ல் தனித்து ஆட்சி புரிய துவங்கினான்.  1323 முதல் 1378 வரை சுமார் 55 ஆண்டுகள் மதுரைப் பகுதியில் சுல்தான்களின் ஆட்சி நடைபெற்றது. ஏழு சுல்தான்கள் ஆட்சி செய்தனர் என்கின்றனர்.  ஆனால், இவற்றை சரி பார்க்க, தமிழக ஆவணங்கள் என்ன என்று தெரியவில்லை. கம்பண்ணாவின் கல்வெட்டுகளில், அவனது தளபதி கோபண்ணா 1377-78ல் துருஷ்கர்களை வென்றதாகக் குறிப்பிட்டுள்ளதால், அத்துடன், துலுக்கரது ஆட்சி முடிவுற்றது என்றாகிறது[4].

Dargah interior- tomb-withh bell-door

தர்காமசூதி வைத்து, இடத்தை ஆக்கிரமித்து, குடியிருப்பை உண்டாக்கி பெரிதாக்குவது துலுக்கரின் திட்டம்: துலுக்கர் தமது சரித்திரத்தை இவ்வாறு தொடர்கின்றனர், “மதுரை மாநகரில் வைகையாற்றின் வடகரைப் பகுதியில் அமைந்துள்ளது கோரிப்பாளையத்தில் பள்ளிவாசல்தர்கா உள்ளன. இதனைச் சூழ்ந்த முஸ்லிம் குடியிருப்புக்கள் உள்ளன. இங்குள்ள தர்கா, 14ம் நூற்றாண்டைச் சார்ந்தது. இத்தர்காவில் அடக்கமாயிருப்பவன் 14ம் நூற்றாண்டில்  மதுரைப்பகுதியை ஆண்ட (கி.பி.1338ல்) சுல்தான் அலாவுதீன் உதௌஜி என்று சொல்லப்படுகிறதுஇவனே தற்போது காஜா சையத் சுல்தான் அலாவுதீன் என்று அழைக்கப்பட்டான் என்றும் சொல்கின்றனர். இவனது மருமகனான குத்புத்தீன் பிரோம் ஷாக்குசும் இதில் அடக்கமாயுள்ளான்,” என்கின்றனர். இப்படி சமாதிகளை உருவாக்கினர் என்று சொல்வதைத் தவிர, இவர்களால் மதுரைக்கு, மதுரை மக்களுக்கு என்ன நல்லது செய்தார்கள், இவர்களது ஆட்சியால் என்ன பலன் என்பதனை யாரும் சொல்வதாக இல்லை. இந்துக்களைக் கொன்று, கோவில்களை கொள்ளையெடித்து, இடித்தொழித்தவற்றை இவர்கள் சொல்லலாம், ஆனால், அதனால், மதுரைக்கோ, தமிழகத்திற்கோ, பாரதத்திற்கு எந்த பெஉமையும் இல்லை.

Sikandar Dragah - Tirupparangundram.interior with pillars, lamps

துலுக்கரின் படையெடுப்பினால் உண்டான தீய விளைவுகள்: மாலிகாபூர் தங்கம், வெள்ளி, வைரம் முதலியவற்றை யனைகளின் மீது வைத்து கொண்டு சென்றான் போன்ற செய்திகளைத் தான் நாம் படிக்கிறோம். ஆனால், அவ்வாறு யானைகள் மீது மெதுவாக தில்லி வரை சென்றதைப் பார்த்த, அக்காலத்தைய சைவர்களுக்கு, எந்த ரோஷமும் வரவில்லையா? பாண்டிய மன்னர்கள் துண்டைக் காணோம், துணொஇயைக் காணோம் என்று தங்கள் பிள்ளை-பெண்டுகள் விட்டு ஓடியபோது கூட, இந்துக்களுக்கு எந்த கோபமும் வரவில்லையா? இங்கிருந்து தில்லிக்கு செல்ல சுமார் ஆறுமாத காலம் ஆகும் என்று அவர்களே எழுதி வைத்துள்ளனர். அப்படியென்றால், ஆறுமாத காலத்தில் சென்றபோது, பாரதத்தில், எங்குமே எந்த எதிர்ப்பும் இல்லாமல் சென்று விட்டனவா? இதைப் பற்றி எந்த ஆசிரியனும் யோசிப்பதில்லை போலும். துலுக்கர், அக்காலத்திலும், தீவிரவாதிகளாக இருந்திருக்கின்றனர். எதிர்ப்பவர்களை கண்ட-துண்டமாக கத்திகளால் வெட்டிக் கொன்றிருக்கின்றனர். அவற்றை நாற்சந்திகளில் எல்லோரும் பார்க்கும் படி, போட்டு, பீதியை, திகிலை, பேரச்சத்தை உண்டாக்கி வைத்தனர். எதிர்த்தால் “காபிர்களின்” கதி இதுதான் என்று மிரட்டிவைத்துள்ளனர். துலுக்கரை படவீரன், துபாஷி, தரகன், போன்ற வேலைகளில் வைத்துக் கொண்டதால், விவரங்களை அவர்கள் மற்ற துலுக்கர்களுக்கு தாராளமாக தெரிவித்துள்ளனர். அதனால் தான், மாலிக்காபூர் போன்றவர்கள், தில்லியிலிருந்து, சரியான பாதையில் ராமேஸ்வரம் வரை வந்து, கொள்ளையெடித்து, திரும்பச் சென்றிருக்கிறான். இது தவிர காடு, மலைப்பகுதிகள் வழியாக ரகசியமாகச் செல்லவும் பாதைகள் இருந்திருக்கின்றன. அவற்றுன் மூலம் சென்றதால், மறைக்கப்பட்டிருக்கலாம். கோவில்கள் இடித்தது, கொள்ளையெடித்தது, தர்கா-மசூதிகளாக மாற்றப் பட்டது உண்மையாகிறது.

Veera Vallala, Tiruvannamalai

வீரவல்லாளன் கொலையுண்டது, உடல் தொங்கவிடப்பட்டது[5]: கி.பி.1340இல் மதுரையை ஆட்சி செய்து வந்த ஜலாலுதீன் அசன்ஷா கொல்லப்பட்டான். அலாவுதீன் உதாஜிக்குப் பின்னர் அவனது மருமகன் குத்புதீன் மதுரையில் சுல்தான் பதவியேற்றான். இவனது ஆட்சி வெறும் நாற்பது நாட்கள் மட்டுமே நடந்தது. இச்சுல்தானும் இந்துக்களின் வீர உணர்வுக்குப் பலியானான். அதன் பின்னர் கியாஸ் உதீன் தம்கானி [1342-1344] மதுரையில் சுல்தான் பொறுப்பில் அமர்ந்தான். இச்சமயத்தில் போசள அரசன் மூன்றாம் வீரவல்லாளன் தமிழகப் படையெடுப்பைத் தொடங்கினான். கண்ணனூர்க் கொப்பத்தைக் கைப்பற்றும் நோக்குடன் முன்னேறி வந்தான். இசுலாமியருக்கும் இந்து சமயத்தைச் சார்ந்த போசளப் படையினர்க்கும் இடையே கடுமையான போர் மூண்டது. இதில் போசள அரசன் வீரவல்லாளன் தோல்வியுற்று, கைது செய்யப்பட்டு மதுரைக்கு அனுப்பப்பட்டான். பின்பு வீரவல்லாளனைத் தம்கானி கொன்று அவனுடைய தோலை உரித்து, உடலுக்குள் வைக்கோலை அடைத்து, அதை மதுரையின் மதில் சுவரின் மேல் தொங்கவிட்டான். வீரவல்லாளனின் உடலைக் கி.பி. 1342இல் மதுரையில் பார்த்ததாக இபன்பதூதா என்பவன் தனது குறிப்பில் கூறியுள்ளான்.

© வேதபிரகாஷ்

06-12-2017

Madurai sultanate-wraper

[1] K. A. Nilakanta Sastri, The Pandyan Kingdom – from the Earliest times to the sixteenth century, Luzac & Co., London, 1929, p.204

[2] Elliot and Dowson, History of India as told by Indian Historians, Vol.III, p.88.

[3] K. A. Nilakanta Sastri, The Pandyan Kingdom – from the Earliest times to the sixteenth century, Luzac & Co., London, 1929, p.259.

[4]  K. V. Raman, Some aspects of Pandyan History in the light of Recent Discoveries, University of Madras, Madras, 1971, p.37

[5] http://www.tamilvu.org/courses/degree/a031/a0313/html/a0313333.htm

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: மாலிகாபூர் படையெடுப்பு 1310-11 CE (1)

திசெம்பர் 6, 2017

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: மாலிகாபூர் படையெடுப்பு 1310-11 CE (1)

Malikafur attack

பாண்டியர் துலுக்கர் தென்னிந்தியாவின் மீது படையெடுக்க இடம் கொடுத்தமுறையில் செயல்பட்டது: மாற வர்மன் குலசேகர பாண்டியன் – I [1268] கேரளம், கொங்குநாடு, சோழமண்டலம், சிங்களம் ஆகிய நாடுகளை வெற்றிகொண்டான் என்று கல்வெட்டுகள் கூறுவதும், துலுக்கரின் அவைப்புலவர்கள் மற்றும் சுற்றிப்பார்க்க வந்தவர்ககளின் தென்னிந்திய படையெடுப்புக் கொள்ளை விவரங்களும் எதிரும்-புதிருமாக இருக்கின்றன. மூன்றாம் இராசேந்திரன் மற்றும் போசப் ஹொய்சள இராமநாதனை கி.பி 1279 இல் வென்றான். சிங்களத்தில் உண்டான அரசியல் கலவரத்தை வாய்ப்பாக கொண்டு கி.பி 1284 இல் தனது படைத்தலைவன் ஆரியச் சக்கரவர்த்தி மூலம் சிங்களத்தின் மீது போர் தொடுத்தான். புத்தரின் பல் சின்னமொன்றை கைப்பற்றி வந்தான். ஆனால், கி.பி 1302-1310 காலத்தில் சிங்கள வேந்தன் மதுரைக்கு வந்து பாண்டியனுக்கு அடிபணிந்து அப்புனித சின்னத்தை மீட்டு சென்றான். இதனால், சோழர்காலத்து பாதுகாப்பு கொண்ட கட்டுபாடு, கடற்படை, மற்ற அரசர்களின் நட்புறவு முதலியை பாதிக்கப் பட்டது என்று தெரிகிறது. பௌத்தர்களும் விரோதியானார்கள் எனும் போது, பாண்டியர் பெருமளவில் தென்னிந்தியாவின் கூட்டமைப்பை, கட்டுக்கோப்பை பாதித்தனர் என்றாகிறது. மேலும், துலுக்கரை தென்னிந்தியாவில் வர முடியாமல், ஹோய்சளர் யுக்திகளுடன் செயல்பட்டு வந்த நிலையில், அவர்களையும் வென்றது, அவர்களைச் செயலிழக்கச்செய்தது. அதாவது, துலுக்கர் தென்னிந்தியாவின் மீது படையெடுத்து வர எளிதாகியது.

Tamilnadu ports

கடற்கரை பகுதிகளில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டது இந்து விரோதமானது: மாற வர்மன் குலசேகர பாண்டியன் – I ற்கு இரண்டு மகன்கள் சுந்தர பாண்டியன் [வேறொரு பெண்ணிற்கு / காமக்கிழத்திற்குப் பிறந்தவன்] மற்றும் வீர பாண்டியன் [அரசியின் மூலம் பிறந்தவன்] கி.பி 1268 முதல் கி.பி 1311 வரை ஆட்சி புரிந்தான். குலசேகரன் அரசவையில் தகியுத்தீன் அப்துர் ரகுமான் என்பவன் முதன்மை மந்திரியாக இருந்து ஆட்சிக்கு துணை புரிந்தமைக்காக காயல் பட்டினம், பிடான், மாலி பிடான் என்ற கடலோர நகரங்கள் அளிக்கப்பட்டதாக அப்துல்லா வசாப் எனும் அரேபியன் குறிப்பிட்டுள்ளதாக, ஜே.பி. ப்ரஷாந்த் மோரே குறிப்பிடுகிறார்[1].  வியாபாரம் நிமித்தமாக ஏஜென்ட் போல தந்ததை, அவ்விடங்களே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு விட்டன போல எழுதி வைத்திருப்பது தெரிகிறது. எப்படியாகிலும், சோழர்கள் காலத்தில் முக்கியமாக இருந்த கடற்கரை பகுதிகளில் துலுக்கர் ஆதிக்கம் செல்லுதினார்கள், அதனால், அங்குள்ள கோவில்கள் இடிக்கப்பட்டன என்று தெரிகிறது. இப்பொழுதுள்ள மசூதி-தர்காக்களின் உட்புற சிற்பத் தூண்கள், கருவற்றை, மண்டபங்கள், குளங்கள் முதலியவை அவற்றை எடுத்துக் காட்டுகின்றன. வியாபாரத்திற்கு, முக்கியமாக குதிரை இறக்குமதி போன்றவற்றிற்கு ஏஜென்டுகள், தரகர்கள், துபாஷியாக இருந்தவர்கள், அவ்வாறு நெருக்கமாகினர் என்று தெரிகிறது. மேலும் படைகளிலும், துலுக்கர் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

Vira-Sundara Pandyan - imaginary

சுந்தர பாண்டியன் அலாவுத்தீன் கில்ஜியிடம் உதவி கேட்டானா?: சகோதர போட்டி துவேசத்தில், துலுக்கரைப் போன்றே சதியில், துரோகத்தில், கொலைகளில் ஈடுபட்டது, அம்மண்ணில் இருந்த பாரம்பரியம், கலாச்சாரம், நாகரிகம் முதலியவற்றிற்கே ஒவ்வாததாகும். இருப்பினும் சுந்தர பாண்டியன் தனது தந்தையை – மாற வர்மன் குலசேகர பாண்டியன் – 1310 / 1311ல் கொலை செய்தது திகைப்படையச் செய்தது. இக்கொலைக்குப் பின்னரும், தகியுத்தீன் தனது பதவியைத் தொடர்ந்தான் என்பதும் ஆச்சரியமாக உள்ளது. 1311ல் மாலிகாபூர் மதுரையை நோக்கி படையெடுத்து வந்து, துலுக்கப்படைகள் தாக்கியபோது, இந்த இரு பாண்டியர்களும் புறமுதுக்கிட்டு ஓடி ஒளிந்தனர். சுந்தர பாண்டியன், அலாவுத்தின் கில்ஜியிடம் தில்லிக்கே சென்று சரணடைந்தான், என்று சரித்திராசிரியர்கள் எழுதுகின்றனர். அப்படியென்றால், சகோதரனைக் காட்டிக் கொடுத்தவனே அவன் தான் என்றாகிறது. ஆனால், வீர பாண்டியன் உள்ளூர் ஆதரவினால் தப்பித்தான். மாலிக்காபூர் கோவிலை கொள்ளையெடித்து, இடித்து, எரித்தான். அதாவது அந்த காலகட்டத்தில் தான், துலுக்கர்களின் அழிப்பிற்குண்டான கோவில்களை அசுத்தமாக, மிலேச்சர்களினால் தாக்கப்பட்டது என்ற முறையில் பூஜை-புனஸ்காரம் விடுத்து, ஒதுக்கி வைத்தனர் என்று தெரிகிறது. பிறகு, பரிகாரம் போன்ற முறைகளினால், அவை மீட்டெடுக்கப் பட்டன. விஜய நகர காலத்தில் ஆயிரக்கணக்கான கோவில்கள் புதிப்பிக்கப் பட்டன.

Malikafur attack -tent

பாண்டியனின் துரோகத்தால், துலுக்கர் ஆதிக்கம் பெற்றது: சுந்தர பாண்டியனுக்கு ஆதரவாக துலுக்கப்படை ஒன்று ஆதரவாக நிறுத்தப் பட்டது. ஏனெனில், 1313ல் கேரளத்து ராஜா ரவி வர்மன், தென் பெண்ணாரைத் தாண்டி, பூந்தமல்லி மற்றும் நெல்லூரை பிடித்துக் கொண்டான் என்றுள்ளது. அதாவது பாண்டியரை வென்றான் என்றாகிறது. அதனால், குர்ஷூ கானை [இவனும் இந்துவாக இருந்து துலுக்கனாக மதமாற்றப்பட்டவன்] 1318ல் மலபாருக்கு அனுப்பியது, மறுபடியும், அதனை, துலுக்கர்களின் கட்டுக்குள் கொண்டு வர அனுப்பியிருக்க வேண்டும். அமீர் குர்ஷூ எழுதியவற்றை வைத்து தான், சரித்திராசிரியர்கள் இத்தகைய விளக்கங்களைக் கொடுக்கிறார்கள். வெறும் கலிமா சொல்ல வைத்தே, துலுக்கராக்கினர், அவர்கள் “பாதி துலுக்கர்” அதாவது “பாதி இந்துக்கள்” என்று அமீர் குர்ஷூ எழுதி வைத்தான். 1335ல் முகமது துக்ளக்கின் ஆதிக்கத்தின் கீழ் ஒரு துலுக்க ஆட்சி மதுரையில் ஏற்படுத்தப் பட்டது. துலுக்க ஆவணங்கள் பிரகடனப்படுத்திக் கொள்வது போல, அவர்களின் ஆதிக்கம் முழுமையாக இருந்ததா என்பது சந்தேகமே.

Malikafur attack and kill people

கொடியகுரூரதுலுக்க அரக்கர்களின் முடிவு அவ்வாறே அமைந்தது: 312 யானைகள், 20 ஆயிரம் குதிரைகள், தங்கம், வைரம், முத்து, மரகதம், மாணிக்கம் என்று கொள்ளையடித்த பொருட்களுடன் தில்லிக்குச் சென்ற மாலிக் கபூருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அலாவுதீன் கில்ஜி பரிசாகக் கொண்டுவந்த பொருட்களை அனைவரும் காணும்படியாக பொது தர்பார் நடத்தி, ‘மாலிக் நைப்’ என்ற பட்டத்தை அனனுக்குக் கொடுத்தான். 1316-ல் அலாவுதீன் கில்ஜியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு படுக்கையில் வீழ்ந்தான், அந்நிலையில், விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டான். மாலிக் கபூர், ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டான். கில்ஜி வாரிசுகளின் கண்களைக் குருடாக்கிவிட்டு மீதம் இருந்த சிறுவனை கைப்பொம்மை போல அரியணையில் அமர்த்தி, தானே டெல்லியை ஆளத் தொடங்கினான். ஆனால், கில்ஜியின் குடும்பத்தினர், மாலிக் கபூர் பாதுகாவலர்களைக் வைத்தே, அவனை நள்ளிரவில் சுற்றி வளைத்து, கை வேறு கால் வேறாக வெட்டிக் கொன்றனர். இவ்வாறு கில்ஜி மற்றும் மாலிகாபூர் கொடிய-குரூர-துலுக்க அரக்கர்களின் முடிவு அமைந்தது. இங்கு கருவரையில் உள்ள சிவலிங்கம், தானாய்த் தோன்றியவர். மாலிகபூர் படையெடுப்பின் போது கருவறையை மூடி, முன்னே வேறு ஒரு லிங்கத்தை வைத்து ஏமாற்றி, உண்மையான லிங்கத்தை பாதுகாத்துள்ளனர். இன்றும் சுவாமி சன்னதி பிரகாரத்தில் துர்கைக்கு எதிரே மாலிகபூரால் உடைக்கப்பட்ட லிங்கம் காட்சிக்கு உள்ளது.

Kampanna saw the broken linga by Malikafur

மாலிக்காபூருக்குப் பிறகு தங்கி விட்ட துலுக்கரின் நிலை, திட்டம் முதலியன: மாலிகாபூர் 1311லேயே தில்லிக்குத் திரும்பி சென்று விட்டான். இருப்பினும், அவனுடன் வந்தவர்களில் சிலர் தங்கி விட்டனர்.  அவர்கள் தான் பகீர், சாமியார் போல திரிந்து தகவல்களை அறிந்து தில்லிக்கு அனுப்பி வைத்தவர்கள் எனலாம். ஜெசுவைட் என்கின்ற கத்தோலிக்க கிருத்துவ சாமியார்களும் இதே முறையைக் கையாண்டனர்[2]. முகமது துக்ளக் கி.பி.1324ல், அதே ஆசையுடன் மதுரைக்கு படைகளை அனுப்பி வைத்தான். பாண்டியர்களை தெற்காகத் துரத்திவிட்டதால், 1334 முதல் 1378 வரை மதுரையை சுல்தான்கள் பெயரால் பட்டாணியர்கள் எட்டுப்பேர்கள் மதுரையை ஆண்டு வந்து இருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் உடெளசி சலாதீன், குப்தீன், கியாஸ் உத்தீன், நாசீர் உத்தின், அடிலபெருதீன், முபராக்சா, அல்லாவுதீன், சிக்கந்தர். இவர்களடைய கொடுங்கோல் ஆட்சி என்றும் வரலாற்று ஆசிரியர் – 60,000 பட்டாணியர்கள் மதுரை நகர்க்குள் ஆயுதம் கையில் வைத்துக் கொண்டு தங்கி இருந்து தமிழ்நாட்டில் கொள்கையடிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தனர். இக்காலகட்டத்தில் மதுரை மற்றும் சுற்றியுள்ள நகரங்கள், பகுதிகளில், அதிகமான அளவில், சேதங்கள் விளைந்தன.

© வேதபிரகாஷ்

06-12-2017

Malikafur attack -atrocities- imaginary

[1] J. B. Prashant More, Muslim Identity, Print Culture, and the Dravidian Factor in Tamil Nadu, Orient Longman, New Delhi, 2004, pp.9-12.

[2] ஜெசுவைட் பாதிரிகள் தங்களது கடிதங்கள், குறிப்புகள் முதலியவற்றில் இதைப் பற்றி எழுதியுள்ளனர். மதம் தவிர, பொருளாதாரம், பொருட்கள் உற்பத்தி செய்யும் முறை முதலியவற்றைப் பற்றி விவரமாக எழுதி அனுப்ப்பியுள்ளனர்.