Posted tagged ‘பஹாய்க்கள்’

28 ஷியாக்கள் பலி, 200 மேற்பட்டவர்கள் காயம் – ஹஜரத் இமாம் அலி – கர்பலா தினத்தன்று தற்கொலைக் குண்டு ஜிஹாதிகளின் அட்டூழியம்! அஹ்மதியாக்கள், பஹாய்க்கள் அடுத்து ஷியாக்களைக் கொல்லும் பாகிஸ்தான்!

செப்ரெம்பர் 1, 2010

28 ஷியாக்கள் பலி, 200 மேற்பட்டவர்கள் காயம் – ஹஜரத் இமாம் அலி – கர்பலா தினத்தன்று தற்கொலைக் குண்டு ஜிஹாதிகளின் அட்டூழியம்! அஹ்மதியாக்கள், பஹாய்க்கள் அடுத்து ஷியாக்களைக் கொல்லும் பாகிஸ்தான்!

Shia-procession-attacked-2010

Shia-procession-attacked-2010

சுன்னி-ஷியா ஜிஹாதிகள் குண்டுவெடிப்புகள்: சமீபத்தில் பாகிஸ்தானின் குண்டு வெடிப்புகளில், ஷியாக்களைக் குறிவைத்து நடைபெறுவதாக உள்ளது. இஸ்லாத்தில் பல பிரிவுகள் உள்ளன, அவை இறையியல், வழிபாடு, குலம், என்ற ரீதியில் உள்ளன. இதில் ஆரம்பத்திலிருந்தே சுன்னி மற்றும் ஷியா பிரிவுகளுக்கு வேறுபாடு இருந்து வருகிறது. இதனால், இவர்களது சண்டை-சச்சரவுகள் (ஜிஹாத்), இன்றுவரை தொடர்ந்து வருகிறது. அமைதி என்று சொல்லிக் கொள்ளும்-கொல்லும் இஸ்லாம், இப்படி சண்டையிட்டுக் கொன்றுக் கொண்டுதான் வருகிறது.

ஹஜரத் இம்மாம் அலி தொழுகையில் குண்டு வெடிப்பு: செப்டம்பர் 1, 2010 அன்று, லாஹூரில் ஒரு ஷியா மசூதியில் – கர்பலா கமய் ஷா (Karbala Gamay Shah) ஆயிரக்கணக்கானவர்கள் ஹஜரத் இமாம் அலியின் இறப்பு – உயிர்த்தியாகம் மற்றும் தொழுகைக்காகக் கூடியிருக்கும் போது (Yaum-e-Ali), குண்டுகள் வெடித்ததில் 17 / 28[1] பேர் கொல்லப்பட்டனர். முகமது நபியின் மைத்துனரான ஹஜரத் அலியின் இறந்த நாளை – யௌம்-இ-அலி நினைவு கொள்ளும் வழக்கம் ஷியா முஸ்லீம்களுக்கு உள்ளது[2]. அவர்கள் ஊர்வலமாகச் செல்லும் போது, தற்கொலைப் படையினர், மூன்று[3] தற்கொலை ஜிஹாதிகள் குண்டுகளாகச் செயல் பட்டனர் என்று சொல்லப்படுகிறது[4]. 150ற்கும் மேலானவர்கள் காயமடைந்தனர்[5]. தடை செய்யடப்பட்ட லஸ்கர்-இ-ஜாங்வி அல்-ஆல்மி (Lashkar-e-Jhangvi al-Almi) பொறுபேற்றதாக செய்திகள் கூறுகின்றன.

பாதுகாப்பு படையினர், உளவுத்துறைக்குத் தெரியுமாம்[6]: இப்படி ஷியாக்களின் ஊர்வலம் தாக்கப்படும் என்பது பாகிஸ்தானின் உளவுத்துறக்கு முன்பே தெரியுமாம். அவர்கள் சொல்வதாவது, அந்த மூன்று தற்கொலை ஜிஹாதி குண்டுகள் வெளியிளிருந்து வரவில்லை, ஆனால், அந்த பாதுகாப்பு வலையத்தினுள்ளேதான் இருந்து செயல்பட்டுள்ளனர்.

சுன்னிகள் ஏன் மற்ற முஸ்லீம்களை இப்படி கொல்கின்றனர்? சுன்னிகள் இப்படி தாங்கள் தான் இஸ்லாத்தில் உண்மையான முஸ்லீம்கள், மற்றவர்கல் எல்லோரும் முஸ்லீம்கள் இல்லை என்ற தோரணையில் செயல்பட்டு வருவதால், இஸ்லாத்தில் என்றுமே அமைதி இருப்பதில்லை. சண்டைதான், சச்சரவுதான், கொலைகள்தான், இன்றுதற்கொலை மனித குண்டுகள் ஜிஹாத் மூலம் வெளிப்படுகின்றன. ஷியாக்கள் மற்றுமன்றி மர்ர அஹ்மதியாக்கள், காதியான்கள், பஹாய்க்கள் முதலியோரை முஸ்லீம்கள் இல்லை என்று சொல்லி, அவர்களது மசூதிகளை இடித்து, அழித்து, அவர்களை நாடு விட்டே துரத்தியடிக்கப் பட்டனர்.


[1] http://edition.cnn.com/2010/WORLD/asiapcf/09/01/pakistan.lahore.bomb/?hpt=T2#fbid=WpVysMRtvEp&wom=false

[2] http://www.google.com/hostednews/afp/article/ALeqM5gAZWGvebP5yD4-ADntMscQ7kV_RQ

[3] http://www.dawn.com/wps/wcm/connect/dawn-content-library/dawn/the-newspaper/front-page/06-religious-procession-attacked-in-lahore-triple-terror-blasts-leave-27-dead-290-rs-02

[4] http://www.bbc.co.uk/news/world-south-asia-11152128

[5] http://www.hindustantimes.com/Blasts-rock-Lahore-Shia-march-17-killed-150-injured/H1-Article1-594837.aspx

[6]Daily times, Police had intelligence about attack threat, dated 02-09-2010 http://www.dailytimes.com.pk/default.asp?page=201092\story_2-9-2010_pg1_2