ஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை? (2)
ஆகஸ்ட்.5 வேலூர் கோர்ட்டில் ஆஜர்: ஷமீல் அகமதுவை கைது செய்தபோது, பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்த தகவல்களை வைத்தும், விசாரணை என்ற பெயரில் எந்தெந்த இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டார்? அப்போது யார் யார் எல்லாம் உடன் இருந்தார்கள்? ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதா? காணாமல் போன பவித்ராவை கண்டுபிடிக்க எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது? போன்ற கேள்விகளை வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் தெரிவிக்கும், அனைத்து பதில்களையும் போலீசார் எழுத்துபூர்வமாகவும், வீடியோவிலும் பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆகஸ்ட்.7 வரை விசாரணை: விசாரணையின் போது பதிலளித்த இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ், ’’நான் ஷமில் அகமதுவை தனி அறைக்கு அழைத்து சென்று விசாரிக்கவில்லை. ஷமில் அகமதுவை அடிக்கவும் இல்லை. என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது’’ என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், ‘‘அப்படியானால் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் நடந்தது என்ன? என எழுதி தாருங்கள்’’ என்று கூறி ஒரு பேப்பரை கொடுத்தனர். ஆனால் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜோ, ‘‘நான்தான் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் எதுவும் நடக்கவில்லை என்று கூறுகிறேனே. பின்னர் நான் எதை எழுதி தருவது? எழுதி கொடுக்க வேண்டிய தகவல் என்னிடம் ஒன்றும் இல்லை’’ என்று கூறிவிட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் கொடுத்த பேப்பரை திருப்பி கொடுத்துவிட்டார்[1]. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னர் அவர் வருகிற 7–ந் தேதி மாலை 4 மணிக்கு வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகிறார்[2].
போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை?: ஆம்பூர் முஸ்லிம்கள் புகார் கொடுத்ததின் ஆதாரமாக இவ்வாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப் பட்டு வருகிறார், செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றனர். ஆனால், கலவரத்தில் ஈடுபட்டு, போலீஸாரையேத் தாக்கி, பெண் போலீஸாரை மானபங்கப்படுத்தி, பொது மக்களைத் தாக்கி, வாகனங்களைத் தாக்கி, எரித்தது, போக்குவரத்தைக் குலைத்தது, கலவரத்தில் ஈடுப்பட்டது, பொது சொத்தை நாசப்படுத்தியது போன்ற வேலைகளில் ஈடுபட்ட கலவரக்காரர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 100 பேருக்கும் மேல் கைது என்று செய்தி வந்தது, பிறகு ஜாமீனில் விடுதலை என்றும் செய்தி வந்தது, ஆனால், கலவரக்காரர்கள் அவ்வாறு தாராளமாக, எவ்வாறு செயல்பட்டனர் என்ற விசாரணை விவரங்களைப் பற்றி ஏன் செய்திகள் வெளிவருவதில்லை? எல்லாவற்றிற்கும் முன்பாக முஸ்லிம் இணைதளங்களோ மார்டின் தான் கொலையாளி என்று தீர்மானித்துள்ளன[3]. “டெக்கான் குரோனிகள்” என்ற நாளிதழ் அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது[4]. வழக்கம் போல “மனித உரிமைகள் இயக்கம்” போன்றவையும் ஆம்பூரில் உண்மையில் நடந்தது என்ன என்று அங்குள்ளவர்களிடம் பேட்டி கண்டு எழுதி வருகிறார்கள். ஆனால், அவர்களும், நோயின் மூலகாரணத்தை ஆராயாமல் இருக்கிறார்கள்.
ஷமீல் அகமதுவை பவித்ராவுடன் பழகுவதை ஏன் அவரது மனைவி, மாமனார், மாமியார், பெற்றோர் முதலியோர் தடுக்கவில்லை?: தன் மனைவி காணவில்லை என்று பழனி கொடுத்த புகார் மீது தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால், இப்பிரச்சினை உருவாகியிருக்கிறது என்றால், திருமணம் ஆன ஷமீல் அகமது, ஏன் திருமணமான பவித்ராவுடன் தொடர்பு வைத்திருந்தான்? அவனது மனைவி, மாமனார், மாமியார், பெற்றோர் முதலியோர் தடுக்கவில்லையே? டெல்டா ஷூ கம்பெனியிலிருந்து, இருவரும் வேலை நீக்கம் செய்யப்பட்டபோதே, விசயம் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டுமே? மே-ஜூன் விவகாரங்களைப் பார்த்தால், நடு-நடுவே பல விசயங்கள் மர்மமாகவே இருக்கின்றன:
- கடந்த மே மாதம் 17-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய பவித்ரா, ஈரோட்டில் உள்ள ஷமீலிடம் சென்றுவிட்டார். அப்படியென்றால், அவர்கள் திட்டமிட்டபடிதான் செய்திருக்கின்றனர்.
- நடுவில் பழனி பவித்ராவை தேடி அலைகிறார். ஷமீல், சரவணன், புகழேந்தி முதலியோருடன் தொடர்பு கொண்டு விசாரிக்கிறார். அதாவது, பவித்ராவின் நண்பர்கள் என்று பழனிக்குத் தெரிந்திருக்கிறது என்றாகிறது.
- மே.24-ம் தேதி பவித்ராவை காணவில்லை என்று பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பழனி புகார் கொடுத்தார்.
- ஒரு வாரம் (?) ஈரோட்டில் தங்கியிருந்த பவித்ராவும், ஷமீல் அகமதுவும் என்ன செய்து கொண்டிருந்தனர்?
- ஜூன் மாதம் 2-வது வாரத்தில் பழனியின் செல்போனில் தொடர்புகொண்ட ஷமீல், “பவித்ராவை பேருந்தில் ஊருக்கு அனுப்பிவைக்கிறேன். அவரிடம் எதுவும் கேட்க வேண்டாம்”. என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார். ஆனால், ஆம்பூருக்கு வரவேண்டிய பவித்ரா சென்னைக்கு ஏன் சென்றாள்? ஷமீல் மட்டும் எப்படி தனியாக ஆம்பூருக்கு வரவேண்டும்? ஷமீல் என்றைக்கு ஆம்பூருக்கு வந்தார் என்று தெரியவில்லை.
- பழனி ஷமீல் வீட்டிற்குச் சென்று சண்டை போடுகிறார். அவர்கள் தங்களுக்குத் தெரியாது என்று விரட்டி விடுகின்றனர். இதனால், ஷமீலின் மீது சந்தேகம் இருப்பதாக போலீஸிடம் பழனி சென்று சொல்லியிருக்கலாம்.
- 15-06-2015 அன்று போலீஸார் விசாரணைக்கு ஷமீலைக் கூட்டிச் செல்கின்றனர்.
- ஜூல.4 அன்று சென்னையில் பவித்ரா, சரவணன்-புகழேந்தி முதலியோருடன் போலீஸில் சிக்குகிறார்.
- 02-06-2015 முதல் 04-07-2015 வரை சென்னையில் பவித்ரா எப்படி இருந்தாள்?
- ஆக, பவித்ரா-ஷமீல் இருவரையும் எல்லாவற்றையும் மீறி ஊக்குவித்தது யார்?
- சந்தேகிக்கப்படுவது போல, இதில் “லவ்-ஜிஹாத்” போன்ற விவகாரம் உள்ளதா அல்லது வேறு விவகாரங்கள் உள்ளனவா? அவ்வுண்மைகளை மறைக்க இப்பிரச்சினை திசைத்திருப்பப்படுகிறதா?
- பெண்ணிய வீராங்கனைகள் ஒரு பெண்ணின் பிரச்சினை மற்றும் பெண் போலீஸாரே பாலியல் தொல்லைகளில் உட்படுத்தப்பட்டார்கள் எனும் போது, ஏன் மௌனமாக இருந்தார்கள், இருக்கிறார்கள்?
- தேசிய ஊடகங்களும் இவற்றை கண்டுகொள்ளாதது வேடிக்கையாக இருக்கிறது.
- இதற்கு மதசாயம் பூசப்படுவதாக “ராஜ் டிவி” கூறுகிறது[5].
© வேதபிரகாஷ்
08-08-2015
[1] http://www.maalaimalar.com/2015/08/06110912/ambur-violence-case-shameel-ah.html
[2] மாலைமலர், ஆம்பூர் கலவர வழக்கு: ஷமில் அகமதுவை தனி அறையில் விசாரிக்கவில்லை – இன்ஸ்பெக்டர் மார்ட்டின் தகவல், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, ஆகஸ்ட் 06, 11:09 AM IST.
[3] http://www.vkalathur.in/2015/06/7_28.html
[4] http://www.deccanchronicle.com/150704/nation-crime/article/cb-cid-yet-question-custody-killer-inspector
அண்மைய பின்னூட்டங்கள்