Posted tagged ‘பள்ளிகள்’

காங்கிரசில் முஸ்லிம்கள் சேர கார்த்தி சிதம்பரம் அழைப்பு – குல்லா போட்டு கஞ்சி குடிக்கும் திராவிட வீரர்கள் புறப்பட்டுவிட்டனர்! (2)

செப்ரெம்பர் 2, 2010

காங்கிரசில் முஸ்லிம்கள் சேர கார்த்தி சிதம்பரம் அழைப்பு – குல்லா போட்டு கஞ்சி குடிக்கும் திராவிட வீரர்கள் புறப்பட்டுவிட்டனர்! (2)

கார்த்திக்-சிதம்பரம்-குல்லா-கஞ்சி-2010

கார்த்திக்-சிதம்பரம்-குல்லா-கஞ்சி-2010

காங்கிரசில் முஸ்லிம்கள் சேர கார்த்தி சிதம்பரம் அழைப்பு[1]: சிதம்பரம், ஜிஹாதினால் பேதி போன நிலையில், பிள்ளை கார்த்திக்கு, வேறுவிதமான யோசனை வந்து விட்டது போலும். “முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும்,” என அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசினார். தேசிய நண்பர்கள் குழு சார்பில் புனித ரமலான் (இப்தார்) நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. முன்னாள் எம்.பி. அப்துல்காதர் தலைமை வகித்தார். தாராஷபி தொகுத்து வழங்கினார்.

Anbalagan-without-cap

Anbalagan-without-cap

ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இப்தார் நோன்பை சடங்காக நடத்தி வருகின்றன: செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., பேசும் போது, “தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் மலரும் போது மதுக்கடைகள் மூடப்படும்,” என்றார். அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது: “ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இப்தார் நோன்பை சடங்காக நடத்தி வருகின்றன. ஆனால், முஸ்லிம்களுக்கான முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை பதிவு செய்யவில்லை. முஸ்லிம் சமுதாயத்தினருக்கு காங்கிரஸ் பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது[2].

Anbazhagan-with-kulla

Anbazhagan-with-kulla

கார்த்திக்கின் புதிய கண்டு பிடிப்பு: “மதச்சார்பின்மையை காங்கிரஸ் கடைபிடித்து வருகிறது”: “எல்லாரும் ஏதாவது ஒரு வகையில் சிறுபான்மையினராகத் தான் உள்ளனர்[3]. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையாக தான் இருக்கிறது. முஸ்லிம்கள் தங்களது கருத்தை ஆழமாக சொல்ல வேண்டும். அவர்களின் கருத்துக்கள் ஓங்கி ஒலிக்க தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும். காங்கிரஸ் கட்சியும் மற்ற பிரதான கட்சிகளும் முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும். மதச்சார்பின்மையை காங்கிரஸ் கடைபிடித்து வருகிறது”.

chiru-real life - not reel

chiru-real life - not reel (நடிகராக இருக்கலாம், அதற்காக இப்படியா மாறுவேட போட்டிப் போன்று சேக் உடையெல்லாம் அணிந்து கொண்டு கஞ்சி குடிக்க வரவேண்டும்?)

திராவிடக் கட்சிகள் பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொண்டால் மதசார்பின்மை போய்விடும்: கார்த்தியின் அடுத்த கண்டு பிடிப்பு: மதச்சார்பின்மை கட்சிகள் என சொல்லிக் கொள்ளும் திராவிடக் கட்சிகள் தங்களுக்கு வசதி என்றால் பா.ஜ., கட்சியுடன் கூட்டணி வைக்கின்றன. பா.ஜ.,வின் எதிர்ப்பு இயக்கமாக காங்கிரஸ் கட்சி விளங்குகிறது[4]. மற்ற சமுதாயத்தினரை விட முஸ்லிம்களுக்கு கல்வி பயில வாய்ப்பு மறுக்கப்படுகிறது[5]. இந்த நிலை மாற வேண்டும். முஸ்லிம் பெண்கள் கல்வி பயில வேண்டும். கல்வி அறிவு கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் முன்னேற முடியும். வறுமையை ஒழிக்க முடியம். விடுதலை கிடைக்கும்[6]. இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பேசினார்.விழாவில் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை, ராஜ்குமார், சுந்தரம், சிரஞ்சீவி, கராத்தே தியாகராஜன், , ஹசீனா சையத், ரஞ்சன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

BJP-Iftar-2005

BJP-Iftar-2005 - பாவம் பிஜேபி காரர்கள் கூட இப்படி குல்லா போட்டு கஞ்சி குடிக்க வேண்டியிருக்கிறது!

கஞ்சி-குல்லா லிஸ்ட் நீளுகின்றது: எது எப்படியாகிலும், இந்த தடவை குல்லா போட்டு கஞ்சி குடிக்கும் கூட்டம் ஜாஸ்தியாகவே உள்ளது. அப்பன்-பிள்ளை என்று போட்டிப் போட்டுக் கொண்டு குல்லா போட்டுக் கஞ்சி குடிக்க வந்து விட்டார்கள் போலும். அடுத்த வருடத்தில், பேரப்பிளைகள் வந்து விடுவார்களோ என்னமோ?

Rajiv Gandhi-with-Muslim-cap-1990

Rajiv Gandhi-with-Muslim-cap-1990

அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை இதுதான் போலும்! ஃபிரோஸ் கான் என்கின்ற ஃபிரோஸ் கந்தி என்கின்ற, ஃபிரோஸ் காந்தியாக மாறிய, இந்திராவின் கணவருக்குப் பிறந்த ராபர்டோ ராஜிவ் காந்தி!

Karunanidhi-with-kulla

Karunanidhi-with-kulla

அப்பா, அப்பப்பா, ஐயோ அப்பா, இந்த படத்தை பிடிப்பதற்குள் போதும், போதும் என்றாகி விட்டது! ஒரு நன்பர் அனுப்பி வைத்தார்! படத்தைப் பெரிது படுத்தினால், ஏதோ டச்-அப் செய்திருப்பது போல இருக்கிறது. இருப்பினும், இவர்கள் எல்லோரும் குல்லா போட்டது உண்மை, கஞ்சி குடித்தது உண்மை…………………


[1] தினமலர், காங்கிரசில் முஸ்லிம்கள் சேர கார்த்தி சிதம்பரம் அழைப்பு, செப்டம்பர் 02, 2010

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=75927

[2] ஏதோ, ஸ்டாலின் பேசியதற்கெல்லாம் பதிலாக ஏதாவது பேச வேண்டும் என்ற தீர்மானத்தில் தயார் செய்து கொண்டு பேசியது பொல உள்ளது.

[3] அடிக்கடி ஜெயா டிவியைப் பார்க்கும் வழக்கம், கார்த்திக்கு அதிகமாகவே உள்ளது போல உள்ளது.

[4] பாவம் பிஜேபி இனி அதோகதிதான். பிஜேபி இன்னுமொரு காங்கிரஸ் ஆனால் காங்கிரஸ் காலி, இல்லை காங்கிரஸ் இன்னுமொரு பிஜேபி ஆனால், பிஜேபி காலி.

[5] பாவம் ஸ்டாலின், பட்டியல் இட்டுக் காட்டியதை பொய் என்கிறார் போலும்!

[6] ஆஹா, பாவம் முஸ்லீம்கள், அவர்கள் விடுதலையில்லாமல், இவர்தான் விடுதலை கொட்க்கப் போகிறார்போல இருக்கிறது. இணை வைக்கிறாரோ என்னவோ?