Posted tagged ‘பலூச்சிஸ்தான்’

மறுபடியும் பாகிஸ்தானில் இன்னொரு ஷியா வழிபாட்டு ஸ்தலத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் – 52 பேர் சாவு, 150 படுகாயம், ஐசிஸ் பொறுப்பேற்றுள்ளது!

நவம்பர் 13, 2016

மறுபடியும் பாகிஸ்தானில் இன்னொரு ஷியா வழிபாட்டு ஸ்தலத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் – 52 பேர் சாவு, 150 படுகாயம், ஐசிஸ் பொறுப்பேற்றுள்ளது!

explosion-pakistan-718147பல்லாண்டுகளாக ஷியாக்களின் மீது சுன்னிகள் நடத்தி வரும் தாக்குதல்கள்: பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களின் மீதான தாக்குதல் பல்லாண்டுகளாக நடந்து வருகின்றன. ஷியாக்களின் மக்கட்தொகை 10-25% சதவீதங்களில் உள்ளது என்று பாகிஸ்தான் கூறுக் கொள்கிறது. 2015 மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 40 மில்லியன் / நான்கு கோடி ஷியாக்கள் உள்ளதாக சொல்லிக் கொள்கிறது. ஆனால், அவர்கள் இரண்டாந்தர குடிமக்களைப் போலத்தான் நடத்தப் படுகிறார்கள். சுன்னி முஸ்லிம்கள் அவர்களை காபிர்கள் என்றே பிரகடனப் படுத்தி ஜிஹாத் என்ற “புனித போரை” அவர்கள் மீது தொடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும். ஷியாக்களின் புனித வழிபாட்டு தினங்களில் அவர்களின் வழிபாட்டு ஸ்தலங்களில் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். முதியவர், பெண்கள், குழந்தைகள் என்று கூடியிருந்தாலும், இரக்கமில்லாமல், குண்டுவெடிப்புகள் மூலம் கொன்று வருகின்றனர்.

pakistan-shrine-731590உலகம் முழுவதிலும் ஷியாக்களின் தாக்குதல் அதிகமாகி வருகின்றது: தலிபான்கள், முஜாஹித்தீன்கள், ஐசிஸ் தீவிரவாதிகள் என்று பல குழுக்கள் வளர்ந்து விட்ட நிலையில், அவர்கள் எல்லோருமே சுன்னிகளாக இருக்கும் பட்சத்தில், ஷியாக்களின் மீதான தாக்குதல்கள் மிகவும் கோரமாக, குரூரமாக, மிருகத்தன்மையுடன் நடத்தப் பட்டு வருகின்றன. இஸ்லாத்தில் இந்த சுன்னி-ஷியா பிளவு சண்டைகள் மொஹம்மது காலத்திலேயே ஆரம்பித்து, தொடர்ந்து நடந்து வருகிறது. முந்தைய இரான்–இராக் சண்டையும் அதனால் தான் நடந்தது. இரானுக்கும், சவுதி அரேபியாவுக்கும் மெக்கா-மெதினா நிர்வகிப்பு விவகாரங்களிலும், இப்பிரச்சினை தலைத் தூக்குவதுண்டு. அதனால், சவுதி அரேபியா இரானைக் கட்டுப் படுத்தி வைக்க எல்லா முறைகளையும் கையாண்டு வருகின்றது.

sufi-shrine-bombed-dawn-1

சனிக்கிழமை 12-11-2016 அன்று மாலை நடத்தப் பட்ட குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை என்றாலே மசுதிகளில் அல்லது மற்ற இலக்குகளின் மீது குண்டுவெடிக்கும் தாக்குதல் நடக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. பலோசிஸ்தான் குஜ்தார் மாகாணத்தில் லாஸ்பெல்லாவில் பிரபல தர்கா ஷா நூரனி சூபி வழிபாட்டுத் தலம் உள்ளது[1]. கராச்சியிலிருந்து 150 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு ஷியாக்கள் அதிகமாக வாழ்கின்றனர் என்பது தெரிந்த விசயமே. பிரதி வெள்ளிக்கிழமை தமால் என்ற சூபி சடங்கை பார்ப்பதற்கு இங்கு ஷியாக்கள் அதிகக் கணக்கில் கூடுவதுண்டு[2]. தமால் என்பது சூபி-நடனமாகும். சூபி பக்தர்கள் சுழன்று கொண்டே ஆடிப் பாடுவர். ஏ. ஆர். ரஹ்மான் சூபி மெட்டுகள் பலவற்றை சினிமா பாடல்களில் உபயோகப்படுத்தியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், ஷியாக்கள் தாக்குவதை அவர் கண்டிப்பதாகத் தெரியவில்லை. இங்கு சனிக்கிழமை 12-11-2016 அன்று மாலை சுமார் 500 பேர் தரிசனம் செய்வதற்காக திரண்டிருந்தனர்[3]. அப்போது கோவில் வளாகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது[4]. இதில், ஏராளமான பக்தர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

sufi-shrine-bombed-dawn-2

இரவின் இருள், மருத்துவமனை அருகில் இல்லாதது இறப்புகள் அதிகமாக காரணமாகின்றன: சம்பவ இடத்திற்கு போலீசாரும், மீட்புக்குழுவினரும் ஆம்புலன்சுகளுடன் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்[5]. அருகில் மருத்துவமனைகள் இல்லாத காரணத்தால் காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஷியாக்கள் மாகாணம் என்பதால், பாகிஸ்தான் அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறதா என்ற சந்தேகமும் எழுகின்றது. இருள் சூழ்ந்த காரணத்தால் மீட்புப் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது[6]. இந்த குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது[7]. ஐ.எஸ் உலகம் முழுவது உள்ள ஷியாக்களை ஒழிப்பதற்கு தயாராக உள்ளது[8]. சிரியாவில் ஷியாக்களைக் கொன்று குவித்து வருகின்றது[9].

sufi-shrine-bombed-dawn-6

52 பேர் சாவு, 150ற்கும் மேற்பட்டவர் படுகாயம்: 12-11-2016 சனிக்கிழமை அன்று 14 வயது சிறுவன், மசூதியில் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் குழந்தைகள் உட்பட சுமார் 43 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. நூறுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். நேரமாக-நேரமாக இந்த எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது. தாக்குதல் நடந்தபோது சுமார் 600 பக்தர்கள் அங்கே இருந்தார்களாம். பாகிஸ்தான் பலுசிஸ்தான் பகுதியில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது[10]. வழக்கம் போல பாக்., அதிபர் நவாஸ் ஷெரிஃப், இம்ரான் கான் போன்றோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்[11].  ஆனால், இதனால், ஷியாக்கள் மீதான தாக்குதல்கள் குறையப் போவதில்லை.

sufi-shrine-bombed-dawn-8

இந்தியாவின் மீது, தமிழகத்தின் மீதான தாக்கம், விளைவு: இந்தியாவில் ஷியாக்கள், சுன்னிகளால் அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்றே தெரிகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், “ஷிர்க்” என்ற போர்வையில், சுன்னிகள், ஷியாக்களை மிரட்டி வைத்துள்ளனர் எனலாம். ஷியாக்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு, யாரும் தங்களது உரிமைகளைக் கேட்பதில்லை. ஆஜ்மீர், நாகூர் போன்ற தர்காக்களில் மொட்டைப் போட்டுக் கொண்டு சென்றலும், அவர்களும், இத்தீவிரவாத-ஜிஹாதி வகையறாக்களைக் கண்டிப்பதில்லை. ஏ. ஆர். ரஹ்மான் போன்றோரும், சுப்பித்துவம், சூபி இசை என்றெல்லாம் பேசி, தனது வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டாலும், ஷியாக்கள் தாக்கப்படும் போது, கொல்லப்படும் போது, கண்டு கொள்வதில்லை. கிலாபத் இயக்கத்தை [1919-1922] ஆதரித்ததின் மூலம் காந்தி இந்திய முஸ்லிம்களைப் பிரித்தார். இன்றும் கிலாபத்தை மறுபடியும் நிறுவியதாக கூறிக்கொள்ளும் ஐசிஸ் ஷியாக்களை வேட்டையாடி வருகின்றது. கிலாபத்தை காந்தியும், ஐசிஸும் ஆதரித்தது-ஆதரிப்பது வினோதமே, ஆனால், உண்மை.

 

© வேதபிரகாஷ்

13-11-2016

shia-rights-watch_shia-death-in-july-2015

[1] தினத்தந்தி, பாகிஸ்தானில் பயங்கரம்:பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு 30 பேர் பலி, பதிவு செய்த நாள்: சனி, நவம்பர் 12,2016, 7:57 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, நவம்பர் 12,2016, 7:57 PM IST.

[2] The Dawn, Tragic scenes at Shah Noorani shrine after bombing, 13th November 2016 | DAWN.COM

http://www.dawn.com/news/1295998/tragic-scenes-at-shah-noorani-shrine-after-bombing

[3] http://www.dailythanthi.com/News/World/2016/11/12195714/Several-feared-dead-in-a-blast-near-Shah-Nooranis.vpf

[4] மாலைமலர், பாகிஸ்தான் வழிபாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி, பதிவு: நவம்பர் 12, 2016 19:58.

[5] http://www.maalaimalar.com/News/World/2016/11/12195838/1050492/At-least-30-killed-in-huge-blast-in-Lasbellas-Shah.vpf

[6] தினமலர், பலுசிஸ்தானில் குண்டுவெடிப்பு: 43 பேர் பலி; பலர் படுகாயம், பதிவு செய்த நாள்: நவம்பர்.12, 2016. 20.00; மாற்றம் செய்த நாள். நவம்பர்.12, 2016.00.34.

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1647324

[8] Express (UK), ISIS bomb at Muslim shrine kills at least 25 people in huge explosion in Pakistan, By KATIE MANSFIELD, 14:17, Sat, Nov 12, 2016 | UPDATED: 20:12, Sat, Nov 12, 2016

[9] http://www.express.co.uk/news/world/731590/explosion-pakistan-shah-noorani-shrine-death-toll-injured

[10] விகடன், பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு – 43 பேர் பலி, Posted Date : 23:16 (12/11/2016); Last updated : 23:15 (12/11/2016).

[11] http://www.vikatan.com/news/world/72258-huge-bomb-blast-in-dargah-shah-noorani-shrine-at-pakistan—43-feared-dead.art

மோடியை விமர்சித்த முஸ்லிம் நடிகை கொலை செய்யப்பட்டாள் – மிஸ்டர் மோடி காஷ்மீரை எங்களுக்கு கொடுத்து விடுங்கள் என்று கேட்டவள்!

ஜூலை 19, 2016

மோடியை விமர்சித்த முஸ்லிம் நடிகை கொலை செய்யப்பட்டாள் – மிஸ்டர் மோடி காஷ்மீரை எங்களுக்கு கொடுத்து விடுங்கள் என்று கேட்டவள்!

How-qandeel-was killed by his brother-shot dead in Multan

15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று கொலை செய்யப்பட்டது: இந்நிலையில்தான் 15-07-2016 வெள்ளிக்கிழமை இரவு அவர் தனது வீட்டில் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளார்[1]. சனிக்கிழமை என்று சில பாகிஸ்தான் நாளிதழ்கள் கூறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குடும்ப வீட்டில் வைத்து அவருடைய குரல்வளையை நெரித்துக் கொன்றதை சகோதரர் வாசீம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஒத்துக்கொண்டார் என்கிறது தமிழ்.பிபிசி[2]. பாகிஸ்தானிலேயே, முதலில் அவள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டாள் என்று செய்திகள் வெளியாகின[3]. அவரது சகோதரர் வசீம் அவரை கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது[4]. அவர் வீட்டிலிருந்து தப்பி ஓடி விட்டார். அவரை தேடி வந்த போலீசார், 16-07-2016 சனிக்கிழமை இரவு பஞ்சாப்  மாகாணத்தில் உள்ள  தேரா  காசி கான் பகுதியில் கைது செய்தனர். பிபிசியின் படி “ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குடும்ப வீட்டில் வைத்து அவருடைய குரல்வளையை நெரித்துக் கொன்றதை சகோதரர் வாசீம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஒத்துக்கொண்டார்”, என்றால், 16-07-2016 சனிக்கிழமை இரவு பஞ்சாப்  மாகாணத்தில் உள்ள  தேரா  காசி கான் பகுதியில் கைது செய்தனர் என்பது சரியாக இருக்க முடியும். இது வெள்ளிக்கிழமையில் நடந்த ஜிஹாதி கொலை என்பதனை மறைக்க முயல்வது போல தெரிகிறது.

Qanteel Bloch - brother killerகொலைசெய்த சகோதரன் கூறியது: கைது செய்யப்பட்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் வசீம் பேசும்பொழுது தெரிவித்ததாவது, “எனது தங்கைக்கு மயக்க மருந்து குடுத்து அவர் உறங்கும் பொழுது கழுத்தை நெரித்துக் கொன்றேன. சமூக வலைதளங்களில்   அவளது நடவடிக்கைகள் மூலம் எங்கள் குடும்பத்திற்கு தீராத அவப்பெயரை உண்டாக்கி விட்டாள். பலூச் இனத்திற்கே எனது தங்கையால் அவப்பெயர் வந்து விட்டது. ஆபாசப் படங்களைப் போட்டு எங்களது சமூகத்தை அவர் கேவலப்படுத்தி வந்தார்[5]. மேலும் மதகுரு முஃதி காவியுடன் அவள் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் முக்கியமான ஒன்றாகும். நான் அவளைக் கொன்றதே அவளுக்கு தெரியாது. அவளுக்கு மயக்க மருந்தை மாத்திரை வடிவில்   கொடுத்து விட்டு அவள் உறங்கும் பொழுது கழுத்தை நெறித்துக் கொன்றேன்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்[6]. இந்தக் கொலை குறித்து கருத்து தெரிவித்த வசீமின் தந்தை முஹம்மத் அஷீம், இந்த கொலையை வசீம் அவனது சகோதரன் முக்கமது அஸ்லம் சஹீனின் தூண்டுதலின் பேரில் செய்தான் என்று தெரிவித்தார். இந்நிலையில் குவாந்தீல் பலூச்சின் உடலை அவரது சொந்த ஊரான சாசாதார்தின் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து விசாரித்த காவல்துறையினர். குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாக அவரது அண்ணனே பலோச்சை ஆணவக் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்[7]. பாகிஸ்தானில், சமீபத்தில் ஆணவக்கொலைகள் அதிகரித்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பிரபல மாடல் அழகி கொலை செய்யப்பட்டிருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது[8]. ஆண்டொன்றுக்கு 100க்கும் மேலான கொலைகள் நடக்கின்றன.

qandeel marriage certificateகௌரவ கொலையா, மதக்கொலையா, ஜிஹாதி கொலையா – பின்னணி என்ன?: பாகிஸ்தானிய ஊடகங்களே இக்கொலையை பலவிதமாகச் சித்தரித்துள்ளன. மனித உரிமை குழுக்கள் இதனை கௌரவக் கொலையாக கருதுகின்றன. இதனை எதிர்த்து ஆர்பாட்டமும் நடத்தியுள்ளனர். ஆனால், குவான்தீன் ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்து மாடல், நடிகை என்றெல்லாம் உலா வந்ததாலும், பேஸ்புக்கில் பலரை விமர்சித்ததாலும், அவள் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக இருந்தாள் என்று மதவாதிகள் தீர்மானித்திருந்தனர். அந்நிலையில் அவள் கொலை செய்யப் பட்டிருந்தால், அதனை மதக்கொலை எனலாம். ஆசார இஸ்லாத்தை நீர்த்தாள், பர்தாவிலிருந்து வெளிவந்தாள், ஹிஜாபை துறந்தாள், இஸ்லாமாக வாழவில்லை என்று அவளை அடுக்கடுக்காக குறைகூறி குற்றஞ்சாட்டியுள்ளனர். அவளது சகோதரன் கொடுத்த விளக்கம், மற்றும், அவளை கொலை செய்தலால், சுவர்க்கத்தின் கதவு தனக்காக திறந்திருக்கிறது என்றேல்லாம் பேசியதைப் பார்த்தால், இது ஒரு ஜிஹாதி கொலை என்று தோன்றுகிறது[9]. “அவளைக் கொன்றதற்காக நான் வருத்தப்படவில்லை. மாறாக பெருமைப்படுகிறேன். என்னுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களின் மனவருத்தத்தை நீக்கியதற்காக, சுவர்க்கத்தில் ஒரு இடத்தைப் பெற்றுள்ளேன். நான் என்னுடைய குடும்ப மானத்தைக் காத்துள்ளேன், நான் எந்த டண்டனைக்கும் தயாராக உள்ளேன்”, என்றான்[10]. ஆக ஒரு ஜிஹாதி பேசுவதைப் போல பேசியுள்ளான்[11].

Qandeel-Baloch-admits-her-marriageகுவான்தீல் பலூச்சின் வீடியோ பேச்சுகள்: பாகிஸ்தான் ட்ரிப்யூன் கீழ்கண்ட ஐந்து வீடியோக்களை தொகுத்து வெளியிட்டுள்ளது[12]. பொறுமையாக அவற்றை கேட்கும் போது, ஒரு முஸ்லிம் என்ற நிலையில் அவர் பேசியுள்ளது தெரிகிறது. அவளது சகோதரன், இவற்றைக் கேட்டிருந்தால், நிச்சயமாக அவன் கொன்றிருக்க மாட்டான். ஆனால், அதே நேரத்தில் அடிப்படைவாத முஸ்லிம், ஒரு பெண் இவ்வளவு தைரியசாலியாக, அறிவாளியாக இருப்பதையும் விரும்பியிருக்க மாட்டான்.கஊழலைத் தட்டிக் கேட்டதால், அரசியல்வாதிகளும் அதிருப்தி அடைந்திருப்பார்கள்.

எண் வீடியோ விவரம் நேரம் – நிமிடம்-நொடி விடியோ லிங்
1 பேஸ்புக்கில் தன்னை வெறுத்தவர்களை, தைரியமாக நேர்கொண்டு பதில் அளித்தாள். 1.46 https://www.facebook.com/OfficialQandeelBaloch/videos/714341198710635/
2 பாகிஸ்தான் தோற்றதற்கு ஷஹீத் அப்ரிதை திட்டியது. 1.34 https://www.facebook.com/OfficialQandeelBaloch/videos/788099754668112/
3 முஸரப், இம்ரான் கான் முதலியோரது அரசியல் ஊழலைப் பற்றி விமர்சித்தது. 2.04 https://www.facebook.com/OfficialQandeelBaloch/videos/749377201873701/
4 இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கேள்வி கேட்டது. 5.16 https://www.facebook.com/OfficialQandeelBaloch/videos/785186261626128/
5 தனக்குத்தானே, ஒரு நிலையை ஏற்படுத்திக் கொண்டது. 0.49 https://www.facebook.com/OfficialQandeelBaloch/videos/707321109412644/

அவள் பேசும் விதம், அவள் பாகிஸ்தான் மற்றும் இந்தியா அரசியல் நிகழ்வுகளை நன்றாக அறிந்திருக்கிறாள் என்று தெரிகிறது. இந்தியாவில் கூட எந்த நடிகையும் இந்த அளவுக்கு தைரியமாக பதில் சொல்லியிருக்க முடியாது.

© வேதபிரகாஷ்

19-07-2016

With mufti - Qanteel Bloch

[1]http://www.dinamani.com/world/2016/07/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81/article3533905.ece

[2] பிபிசி.தமிழ், பாகிஸ்தான் மாடல் அழகியை கொலை செய்த அவரது சகோதரர் கைது, 17 ஜூலை 2016.

[3] https://jang.com.pk/latest/138693-qandeel-baloch-shot-dead-in-multan; http://atv.com.pk/qandeel-baloch-shot-dead/

[4] http://www.bbc.com/tamil/global/2016/07/160717_pak_model_brother

[5] தமிழ்.ஒன்.இந்தியா, பலூச் இனத்தின் அவமானச் சின்னம் என் தங்கை.. பாக். அழகியின் அண்ணன் வாக்குமூலம், By: Sutha, Updated: Monday, July 18, 2016, 11:38 [IST]

[6] http://tamil.oneindia.com/news/international/qandeel-balooch-killing-she-was-drugged-before-murder-258248.html

[7] நியூஸ்.7.டிவி, நிர்வாண சவால் விடுத்த பாகிஸ்தான் மாடல் அழகி ஆணவக்கொலை!, July 17, 2016.

[8]  http://ns7.tv/ta/qandeel-baloch-case-brother-held-pakistan-celebritys-murder.html

[9] http://edition.cnn.com/2016/07/18/asia/pakistan-qandeel-baloch-brother-confession/

[10]  “I have no regrets. Instead I am proud of what I did,” he added. “I have earned a place in heaven by relieving the agony of my parents and family.” Waseem, who said he has decided not to hire a lawyer, recorded his confessional statement in court on Sunday. “I saved my family’s honour and I’m ready for any punishment,” he said.

http://www.samaa.tv/pakistan/2016/07/qandeels-brother-says-he-earned-a-place-in-heaven-by-killing-her/

[11] samaa.tv/pakistan, Qandeel’s brother says he earned “a place in heaven” by killing her, July 18, 2016, By: Samaa Web Desk

[12] http://tribune.com.pk/story/1143002/5-times-qandeel-baloch-brutally-honest/

 

மறுபடியும் 70 ஷியா முஸ்லீம்கள் கொலை, 150 படுகாயம், பாகிஸ்தானில் தொடரும் தற்கொலை ஜிஹாதி குண்டுவெடிப்புகள்!

செப்ரெம்பர் 4, 2010

மறுபடியும் 70 ஷியா முஸ்லீம்கள் கொலை, 150 படுகாயம், பாகிஸ்தானில் தொடரும் தற்கொலை ஜிஹாதி குண்டுவெடிப்புகள்!

தடை செய்யப் பட்ட தெரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (Tehrik-e-Taliban Pakistan) கடந்த லாஹூர் மற்றும் குவெட்டா குண்டுவெடிப்புக் கொலைகளுக்கு தனது பங்ஐ ஒப்புக்கொண்டுள்ளது.

ஷியாக்கள் கொல்லப்படுதல்: பலூச்சிஸ்தானின் தலைநகரான குவெட்டா என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை அன்று 03-08-2010 தற்கொலை குண்டு வெடிப்பில், மறுபடியும் 60ற்கும் மேற்பட்ட ஷியாக்கள் கொல்லப்பட்டனர், 100ற்கும் மேலானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்[1]. இப்படி தொடர்ச்சியாக ஷியாக்கள் தாக்கப்படுவது, இஸ்லாத்தில் கூறப்படும் ஒருத்துவம், சகோதரத்துவம் முதலியவையெல்லாம் கேள்விக்குறிகளாகின்றன!

ஷியாக்களின் பாலஸ்தீன ஆதரவு: ஷியாக்கள் ரமதான் மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையன்று, அல்-குத்ஸ் எனப்படுகின்ற நாள் அன்று கூடி, பாலஸ்தீன விடுதலைக்காக, அம்மக்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவிப்பது வழக்கம். அதுபொலவே சுமார் 2000 ஷியாக்கள் மீஜான் சௌக் என்ற இடத்தில் ஷியா இமாமியா மாணவர்கள் இயக்கம் சார்பில் கூடியபோது 3.30 அளவில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த வாரத்தில் நடக்கும் மூன்றாவது வெடிகுண்டு தாக்குதல் ஆகும்[2].

ஷியாக்களின் மீதான தொடரும் தாக்குதல்கள்: பாகிஸ்தான், இந்தியாவிலிருந்து பிரிந்தபோதே, லட்சக்கணக்கான இந்துக்களைக் கொன்று குவித்துதான் சுதந்திரத்தை முஸ்லீம்கள் அடைந்தனர். அந்த ரத்தம் தோய்ந்த சுதந்திரம், ரத்ததத்தினாலேயே தொடர்வது போல உள்ளது. ஏனெனில், சுன்னி முஸ்லீம்கள், ஷியா முஸ்லீம்கள் மற்றும் இதர முஸ்லீம்களைக் கொல்லும் வழக்கம் அப்பொழுதே ஆரம்பித்து விட்டது.

முந்தைய ஆட்சியாளர்களின் ஆதரவு: பாகிஸ்தானிய அதிகாரிகள் சுன்னி கொரில்லாக்கள் இயக்கமான ஷிபாஹ்-இ-சஹபா (Sipah-e-Sahaba) என்பதை குறைகூறுகிறார்கள்[3]. ஷிபாஹ்-இ-சஹபா என்றால் முகமது நபியின் நண்பர்களின் ராணுவம் என்று பொருளாம். அப்படியென்றால், முகபது நபியின் மைத்துனரான இமாம் ஹஜரத் அலியை பின்பற்றும் ஷியா முஸ்லீம்களை, இந்த நண்பர்கள் எப்படி, இப்படி கொடூரமாகக் கொல்கிறார்கள் என்பது தெரியவில்லை. முந்தைய ராணுவ ஆட்சியாளர் முஹமது ஜியா உல் ஹக் இந்த பயங்கரவாத இயக்கம் வளர்வதற்கு உறுதுணையாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது[4].

Major attacks at mosques, religious events, and Islamic institutions in Pakistan since December 2007[5]:

Sept. 3, 2010: A suicide bomber attempted to storm a mosque in Mardan, but was stopped by security guards. One person was killed after he detonated his vest.

Sept. 1, 2010: Suicide bombers detonated during Shia religious processions in Lahore, killing 28 people.

Aug. 23, 2010: A suicide bomber detonated at a mosque in Wana, South Waziristan, killing 18 people.

July 1, 2010: Suicide bombers detonated at the Data Ganj Bakhsh shrine in Lahore, killing 41 people and wounding more than 170.

May 28, 2010: The Punjabi Taliban assaulted two Ahamadi mosques in Lahore, killing more than 70 people.

Dec. 18, 2009: A suicide bomber detonated inside a mosque frequented by policemen in Lower Dir, killing 12.

Dec. 4, 2009: A suicide assault team stormed a mosque in Rawalpindi that is frequented by Army officers, killing 40.

Oct. 20, 2009: A pair of suicide bombers detonated their vests at Islamabad’s International Islamic University, killing five.

June 12, 2009: A suicide bomber killed five Pakistanis, including anti-Taliban cleric Dr. Sarfraz Naeemi, in an attack on a mosque in Lahore during Friday prayers.

June 12, 2009: A suicide bomber killed six worshipers and wounded more than 90 in an attack inside a mosque in Nowshera. The attack collapsed the dome of the mosque.

June 5, 2009: A suicide bomber killed 49 worshipers in an attack on a mosque in a remote village in Dir.

April 5, 2009: A suicide bomber killed 24 worshipers and wounded more than 100 in an attack outside a Shia religious center in the Chakwal district in Punjab province.

March 27, 2009: A Taliban suicide bomber killed more than 70 worshipers and wounded more than 125 in an attack at a mosque in the Khyber tribal agency.

March 5, 2009: An attacker threw a hand grenade into the middle of a mosque in Dera Ismail Khan, wounding 25 worshipers.

March 2, 2009: A suicide bomber killed six people during an attack at a gathering in a mosque in the Pishin district in Baluchistan.

Feb. 20, 2008: A suicide bomber killed 32 Pakistanis and wounded more than 85 in an attack on a funeral procession for a Shia elder who was murdered in Dera Ismail Khan.

Feb. 5, 2009: A suicide attack outside a mosque killed more than 30 Shia worshipers and wounded more than 50.

Nov. 22, 2008: A bombing at a mosque in Hangu killed five civilians and wounded seven.

Nov. 21, 2008: A suicide attack on a funeral procession in Dera Ismail Khan killed 10 mourners and wounded more than 25.

Sept. 10, 2008: The Taliban attacked a mosque filled with Ramadan worshipers in the district of Dir in northwestern Pakistan. More than 25 worshipers were killed and more than 50 were wounded.

Aug. 19, 2008: A suicide bomber killed 29 Shia mourners and wounded 35 after detonating in the emergency ward of a hospital.

June 17, 2008: Four Pakistanis were killed and three wounded in a bombing at a Shia mosque in Dera Ismail Khan.

May 19, 2008: Four Pakistanis were killed in a bombing outside a mosque in Bajaur.

Jan. 17, 2008: A suicide bomber killed 10 and wounded 25 in an attack on a Shia mosque in Peshawar.

Dec. 28, 2007: A suicide bomber detonated in the middle of a mosque in Charsadda in an attempt to kill former Interior Minister Aftab Sherpao as he conducted Eid prayers. More than 50 were killed and more than 200 were wounded

Read more: http://www.longwarjournal.org/archives/2010/09/taliban_kill_48_in_a.php#ixzz0yWYNTMw4


[1] http://www.indianexpress.com/news/Shia-march-bombed-again–60-dead/677032

[2] http://www.businessweek.com/news/2010-09-03/third-pakistan-sectarian-attack-in-week-kills-35-injures-100.html

[3]Pakistani officials have blamed Sunni guerrillas of the Sipah-e-Sahaba movement and allied militant groups for an increase in sectarian killings this year.

http://www.businessweek.com/news/2010-09-03/third-pakistan-sectarian-attack-in-week-kills-35-injures-100.html

[4] Sunni militant attacks on other groups have risen steadily since the 1980s.In that decade, the military government of General Muhammad Zia ul-Haq secretly promoted the growth of Sipah-e-Sahaba, or Army of the Friends of the Prophet, and similar groups, according to Hassan Abbas, a Pakistani scholar at the New York- based Asia Society and author on Pakistani religious extremism.

[5] http://www.longwarjournal.org/archives/2010/09/taliban_kill_48_in_a.php