இஸ்லாம் நகர் மற்றும் முஸ்லிம் நகர்: முஸ்லிம்களுக்கு சிகிச்சை மறுத்தது, வெறிநாய்கள் கடித்தது, குவாரென்டைன் செய்தது, தடை நீக்கியது!
கேரளா சென்று திரும்பிய இஸ்லாம் நகர் மற்றும் முஸ்லிம் நகர்களுக்குத் திரும்பியவர்கள்: 144 தடை உத்தரவை மீறிய கிராமங்களுக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் சீல் வைத்தனர்[1]. திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரகநல்லூர் ஊராட்சி இஸ்லாம் நகர் பகுதியில் 1,100 குடும்பங்கள் வசிக்கின்றன[2]. இதேபோல் சாத்திரம், ஜெயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம் நகரில் மொத்தம் 750 வீடுகள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலானோர் காய்கறி நறுக்கும் கத்தியை கூர்மை தீட்டும் தொழில் செய்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் கேரளா மாநிலத்திற்கு சென்று அந்தப் பகுதியில் தொழில் செய்பவர்கள். இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்தது வருவதாக கூறப்படுகிறது. எனவே இஸ்லாம் நகர் மற்றும் முஸ்லிம் நகர் மக்கள் கேரளா சென்று திரும்பியவர்கள் என்பதால் இவர்களுக்கு கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தின்பேரில் அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் தங்காமல் நகர்புறம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு அடிக்கடி சென்று வந்தனர்[3]. எனவே அரசு ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடிக்காததால் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணஅமுதம் மற்றும் திருத்தணி போலீஸ் டிஎஸ்பி சேகர், ஒன்றிய ஆணையர்கள் இணைந்து மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைப்படி அந்த கிராமங்களை சுற்றி காவலர்களை நியமித்து செக்போஸ்ட் அமைத்து சீல் வைத்தனர்[4]. அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்தனர்.
முஸ்லிம் என்பதால் வேறு மருத்துவமனையைப் பாத்துக்கோங்கன்னு‘ சொன்ன மருத்துவர்: திருத்தணியை அடுத்த இஸ்லாம் நகர் பகுதியில் வசிக்கும் சைதா என்பவர் தன் மனைவி ஆஷாவுக்கு கடந்த சில வாரங்களாக திருத்தணியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை செய்துவந்துள்ளார். திடீரென ஒருநாள், சைதாவைத் தொடர்புகொண்ட மருத்துவமனை நிர்வாகம் `மேற்கொண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாதென்றும், தங்கள் மருத்துவமனையில் முஸ்லிம் மதத்தினருக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம்’ என்று கூறி சைதாவின் மனைவிக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய சைதா, “என் மனைவி ஆஷாவுக்கு போன மாசம் திடீர்னு உடம்பு சரியில்லாமப் போச்சு. உடனடியா, திருத்தணியில இருக்குற பீகாக் மருத்துமனைக்கு கூட்டிட்டுப் போனேன். என் மனைவியைப் பரிசோதிச்சிட்டு அவங்களுக்கு கிட்னில பாதிப்பு இருக்கு, உடனடியாக ஆபரேஷன் பண்ணனும்னு சொன்னாங்க. நான் அரசு மருத்துவமனைக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னதுக்கு, அவங்க உடல் நிலை மோசமா இருக்கறதால உடனடியா ஆபரேஷன் செய்யணும்னு சொன்னாங்க. இல்லனா உயிருக்கு உத்தரவாதம் இல்லைனு சொன்னதால நானும் என் மனைவியை அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை செய்யலாம்னு முடிவெடுத்தேன். அந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.30,000 செலவாகும்னு முதல்ல சொன்னாங்க, ஆனா எங்க கிட்ட ரூ.65,000 வாங்கிட்டாங்க. அறுவை சிகிச்சை முடிஞ்சு அங்கேயே 4 நாள் வெச்சிருந்தாங்க பிறகு வீட்டுக்கு அனுப்பிட்டு, தொடர்ந்து வாரத்துல செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் வந்து டயாலிசிஸ் செஞ்சுட்டு போகணும்னு சொன்னாங்க. நானும் கடந்த செவ்வாய்க்கிழமை கூட என் மனைவிய கூட்டிட்டுப் போய் டயாலிசிஸ் செஞ்சுட்டு வந்தேன். ஆனா இந்த நிலையில ஏப்ரல் 2-ம் தேதி காலையில மருத்துவமனைல இருந்து போன் வந்துச்சு. என்கிட்ட பேசினவரு `நாளைக்கு நீங்க டயாலிசிஸ் சிகிச்சைக்கு வர வேண்டாம், எங்க மருத்துவமனைல முஸ்லிம் யாருக்கும் சிகிச்சை அளிக்கக் கூடாதுனு எங்க எம்.டி சொல்லிட்டாரு, அதனால நீங்க மேற்படி சிகிச்சைக்கு வேற மருத்துவமனையைப் பாத்துக்கோங்கன்னு” சொன்னாங்க.
திருவள்ளூர் ஜாயின்ட் டைரக்டர் அலுவலகத்துல இருந்து சுற்றறிக்கை: நான் பதிலுக்கு என் மனைவிக்கு ஆரம்பத்துல இருந்தே உங்க மருத்துவமனையிலதானே பார்த்துட்டு வர்றேன். இப்போ திடீர்னு இப்படி சொன்னீங்கன்னா நாங்க இந்த 144 தடை நேரத்துல எங்க போறதுன்னு கேட்டதுக்கு, இல்ல சார் எங்களுக்கு திருவள்ளூர் ஜாயின்ட் டைரக்டர் அலுவலகத்துல இருந்து சுற்றறிக்கை வந்துருக்கு. அதுல, முஸ்லிம் மதத்தினர் யாரு சிகிச்சைக்கு வந்தாலும் அனுமதிக்க வேண்டாம்னு உத்தரவு போட்ருக்காங்க. உங்களுக்கு மேற்படி சிகிச்சை வேணும்னா நீங்க உங்க மனைவிய அரசு மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லிப் போன வெச்சுட்டாங்க. இப்ப என் மனைவிக்கு டயாலிசிஸ் பண்ணனும். மருத்துவமனை நிர்வாகம் திடீர்னு இப்படி சொல்லிட்டதால அடுத்து என்ன பண்றதுனு தெரியாம தவிச்சிட்டு இருக்கோம். ஒரு நாள் சிகிச்சை அளிக்கத் தவறினா கூட அவ உயிருக்கே ஆபத்தாயிடும். திருத்தணி பகுதில வேற எங்கயும் இந்த சிகிச்சை கிடையாது. எங்க பகுதில இஸ்லாமிய சமூக மக்கள்தான் அதிகமா இருக்கோம். ஆரம்பத்துல இருந்து சிகிச்சை அளிச்சிட்டு வந்துட்டு இப்ப அவங்க இப்படி எங்களுக்கு மருத்துவம் பார்க்காமல் புறக்கணிக்கிறதுதான் எதுக்குன்னு தெரியல, குறிப்பாக எங்க மதத்தினருக்கு மட்டும் சிகிச்சை இல்லைன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்னும் தெரியல.
டெல்லில நடந்த ஜமா-அத் மாநாட்டுக்குப் போய்ட்டு வந்துருப்போம்னுதான் எங்களுக்கு சிகிச்சை அளிக்காம புறக்கணிக்குறாங்க. ஆனா எங்க இஸ்லாம் நகர் பகுதியில இருந்து ஒருத்தர் கூட அந்த மாநாட்டுக்குப் போகல. அப்படி இருக்கும்போது உயிர் காக்கும் மருத்துவமனையில இது மாதிரி மத பாகுபாடு பார்ப்பதுதான் மிகுந்த வேதனை அளிக்குது. நான் என் மனைவிய வேற மருத்துவமனையில சிகிச்சைக்கு அனுமதிப்பேன். ஆனா எங்களுக்கு நடந்த மாதிரி இனி யாருக்கும் நடக்கக் கூடாது. இன்னைக்கு இப்படி செய்றவங்க நாளைக்கு ஒரு அவசரம்னு போனாலும் இப்படித்தான் எங்களைப் புறக்கணிப்பாங்க. திருவள்ளூர் இணை இயக்குநர்தான் சுற்றறிக்கை அனுப்புனதா சொன்னதால நாங்க இப்ப இணை இயக்குநர்கிட்டயே தகுந்த ஆதாரங்களோடு புகார் மனு அளிச்சிருக்கோம். நடவடிக்கை எடுக்ககுறதா உறுதி அளித்துள்ளார். மேற்கொண்டு அரசு பீகாக் மருத்துவமனை மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து என் மனைவிக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்க உதவணும்” என்றார்.
அரசு ஆஷாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க ஒப்புதல்: இது குறித்து, திருவள்ளூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் இளங்கோவிடம் பேசினோம், “பாதிக்கப்பட்டுள்ள ஆஷாவின் தரப்பிலிருந்து மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிரான புகார் மனுவைப் பெற்றிருக்கிறேன். மனுவின் மீதான நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளேன். அரசுத் தரப்பிலிருந்து அப்படி ஏதும் சுற்றறிக்கைகள் அனுப்பவில்லை. மருத்துவமனை நிர்வாகம் பொய்யான ஒரு கருத்தை பரப்பியிருப்பது முறையல்ல. மனுவின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை வலியுறுத்தி இருக்கிறேன். உடனடியாக விசாரிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, “ஆஷா எங்கள் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு நாங்கள்தான் சிகிச்சை அளித்து வருகிறோம். ஆனால், தற்போது நோய்த் தொற்று பரவலின் காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு நோய் பாதிப்பு இருக்கலாம். எனவே, அவர்கள் குறித்து அரசுக்குத் தகவல் தெரிவித்து அரசு சிகிச்சையளிக்க ஒப்புதல் அளித்தால் மட்டுமே மேற்கொண்டு சிகிச்சை அளிக்கிறோம். அதன் அடிப்படையில்தான் அவர்களுக்கும் கூறினோம்[5]. ஆனால், இப்போது அரசு ஆஷாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளதால், நாங்கள் ஆஷாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கத் தயாராகவே இருக்கிறோம்” என்று கூறி சமாளித்தனர்[6].
முஸ்லிம் நகரில் வெறி பிடித்த நாய்கள் கடித்தது: திருத்தணி அருகே ஒரே நாளில் 20 சிறுவர்களை வெறி நாய்கள் துரத்திக் கடித்தன. திருத்தணி ஒன்றியம், வீரகநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்டது இஸ்லாம் நகர். இங்கு, 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், இங்கு அரசினர் தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில், இஸ்லாம் நகர் பகுதியில் வெறி நாய்கள் கடந்த இரு நாள்களாக சுற்றி திரிந்தன. புதன்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற மாணவ-மாணவியர் மற்றும் தெருவில் விளையாடிய சிறுவர்களை வெறி நாய்கள் துரத்திக் கடித்துள்ளன. இதில், ஆதீரா(7), சலீம்(6), மஸ்தான்(11), பாய்ஸ் (11), சலீம்முல்லா(12), முகமது அலி (3), ஆயிஷா (7), பாத்திமா (10) உள்பட 18 மாணவ-மாணவிகள், பாஷா பாய் (32) காதர்பாஷா(56) ஆகிய இருவர் என மொத்தம், 20 பேரை வெறி நாய்கள் கடித்து குதறியுள்ளன[7]. இதில் காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வெறி நாய்கள் தொடர்ந்து இஸ்லாம் நகரில் சுற்றித்திரிவதால், புதன்கிழமை பள்ளிக்குச் சென்ற மாணவ-மாணவிகள் தங்களது கைகளில் கம்புடன் சென்றனர். அதே போல் மாலையும் கம்புகளுடன் வீட்டுக்குத் திரும்பினர். வெறி நாய்களைப் பிடிக்க வேண்டும் என ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இஸ்லாம் நகர் மக்கள் கூறுகின்றனர்[8]. எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து, இஸ்லாம் நகரில் சுற்றித்திரியும் வெறி நாய்களைப் பிடித்து காட்டில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணி : வீரகநல்லுார் ஊராட்சியில், 28 நாட்களாக போடப்பட்டிருந்த சோதனைச்சாவடி அகற்றப்பட்டது: திருத்தணி ஒன்றியம், வீரகநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட இஸ்லாம் நகரில் வசிக்கும், 59 இஸ்லாமியர்கள் சாணை பிடிக்கும் தொழிலுக்காக, மார்ச் மாதம், கேரளாவுக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வந்தனர்.இதையடுத்து, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக, இஸ்லாம் நகர் பகுதியில் வசித்த, 59 குடும்பத்தினரை தனிமைப்படுத்தினர்.மேலும், வெளியாட்கள் யாரும் செல்லாதவாறு வருவாய் துறை மற்றும் சுகாதார துறையின் சார்பில், நுழைவு வாயிலில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், தனிமைப்பட்டவர்களுக்கு, 28 நாட்கள் முடிந்ததைத் தொடர்ந்து, மருத்துவக் குழுவினர், இஸ்லாம் நகர் முழுதும் வீடு வீடாகச் சென்று, வைரஸ் பரிசோதனை மேற்கொண்டனர். அதில், யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என, உறுதி செய்யப்பட்டது [9]. அதை தொடர்ந்து, திருத்தணி கோட்டாட்சியர் சொர்ணம் அமுதா உத்தரவின்படி, இஸ்லாம் நகர் சுற்றிலும் மூடப்பட்ட எல்லைகள் மற்றும் சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டன[10].
- முஸ்லிம்கள் இவ்வாறு தனிடயாக சேர்ந்து, இஸ்லாம் நகர் மற்றும் முஸ்லிம் நகர் என்றெல்லாம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
- எல்லோரையும் போல, சேர்ந்து இல்லாமல், இவ்வாறு தனித்திருக்க வேண்டிய, தம்மைத் தனித்துக் காட்டிக் கொள்ளக் கூடிய போக்கு தான் தெரிகிறது.
- இவ்வாறு செய்வதால் தான் மற்றவர்களுக்கு, நிச்சயமாக மனங்களில் சந்தேகம், அச்சம், பீதி, கலவரம் முதலியவை வருகின்றன.
- இந்த கொரோனா காலத்தில், யாரிடத்தில் தொற்று உள்ளது, இல்லை குடும்பத்தில் உள்ளது என்றெல்லாம் யாருக்கும் தெரியாது.
- முஸ்லிம்கள் இல்லாதவர்களே தனிமைப் படுத்திக் கொண்டு வாழும் தனிமனிதர்கள், குடும்பங்கள் இருக்கின்றன.
- ஆகவே, இங்கு “முஸ்லிம்” என்ற பிரச்சினையை கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை.
- சிகிச்சைப் பொறுத்த வரையில், இருதரப்பிலுமுள்ள விவகாரங்கள் வேறுவிதமாக இருக்கின்றன.
- செக்யூலரிஸம் என்றபோது, எல்லா வழிகளிலும் அது கடைபிடிக்கப் படவேண்டும்.
© வேதபிரகாஷ்
01-05-2020
[1] தினத்தந்தி, 144 தடை உத்தரவை மீறிய கிராமங்களுக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் சீல் வைப்பு !!, 29 மார்ச். 2020
[2] https://m.dailyhunt.in/news/india/tamil/dina+seithigal-epaper-dinasei/144+tadai+utharavai+meeriya+kiramangalukku+boleesar+marrum+athikarikal+seel+vaippu-newsid-174710006
[3] தினகரன், ஊரடங்கு உத்தரவை மீறிய கிராமங்களுக்கு சீல் வைப்பு: அதிகாரிகள் அதிரடி, 2020-03-29@ 10:50:46
[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=575209
[5] விகடன், நோயாளியைப் புறக்கணித்த திருத்தணி தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை உறுதி!,சே. பாலாஜி, Published:05 Apr 2020 6 PM Updated:05 Apr 2020 6 PM
[6] https://www.vikatan.com/government-and-politics/healthy/private-hospital-deny-treating-patients-in-thiruttani?artfrm=v4
[7] தினமணி, ஒரே நாளில் 20 பேரைக் கடித்த வெறி நாய்கள், By DIN | Published on : 25th January 2018 04:08 AM
[8] https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2018/jan/25/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2850692.html
[9] தினமலர், ஊராட்சியில் சோதனைச்சாவடி அகற்றம், Added : ஏப் 27, 2020 22:49
[10]https://www.dinamalar.com/news_detail.asp?id=2529164&fbclid=IwAR2n0nyehih1wCuYMFTyEXh20IVD-zM5k4ZwlQ1hFVuj7fsBDy1tb6DBnaU
அண்மைய பின்னூட்டங்கள்