நள்ளிரவில் நோயாளி சிகிச்சைக்குச் சென்றபோது, ஹிஜாப் பற்றிய விவாதம் ஏன், நோயாளி இறந்தது எப்படி? (1)
24-05-2023 இரவுமருத்துவமனையில்நடந்தது: நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருபவர் ஜன்னத் (29). இவர், மே 24-ம் தேதி அன்று இரவு பணியில் இருந்தார்[1]. அப்போது, இரவு 11.30 மணியளவில் திருப்பூண்டியைச் சேர்ந்த பாஜக மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் புவனேஸ்வர் ராம், தன் உறவினர் சுப்பிரமணியன் என்பவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்தார்[2]பாக, முதலில் சுப்பிரமணியனுக்கு என்ன பிரச்சினை, நடு இரவில் வந்த நோயாளிக்கு என்ன முதல் உதவி செய்ய வேண்டும், சிகிச்சை என்ன அளிக்கப் பட்டது பற்றி ஊடகங்கள் ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. அப்போது, அங்கு மருத்துவர் ஜன்னத் ஹிஜாப் அணிந்திருந்ததைப் பார்த்த புவனேஸ்வர் ராம், அரசுப் பணியில் இருக்கும்போது எப்படி ஹிஜாப் அணியலாம்,” அரசுப்பணியின்போதுமருத்துவர்ஏன்ஹிஜாப்அணியவேண்டும்… மருத்துவருக்குஎன்றுசீருடைகிடையாதா… உண்மையிலேயேநீங்கள்மருத்துவர்தானா… எனக்குச்சந்தேகமாகஇருக்கிறது?” ”, எனக் கேள்வி எழுப்பியதுடன், மருத்துவர் ஜன்னத்தை செல்போனில் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. அப்படியென்றால், உறவினரின் உடல்நிலையை விட, இது தான் பெரிய பிரச்சினையாக தெரிகிறதா? அவர் வீடியோ எடுப்பதை மருத்துவர் ஜன்னத்தும் தன் செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தார்[3]. அந்தப் பெண் மருத்துவர், “பெண்கள்பணியில்இருக்கும்போதுஅசிங்கமாகப்பேசிக்கொண்டிருக்கிறார். ஒருபெண்மருத்துவரைஅவரின்அனுமதியில்லாமல்வீடியோஎடுத்துக் கொண்டிருக்கிறார்,” எனச் சொல்லி அவரும் வீடியோ எடுத்திருக்கிறார்[4]. இந்த 2 காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அப்படியென்றால், ஜன்னத்திற்கும், அதுாான் முக்கியமாகப் பட்டது போலும்..
ஹிஜாபை கழட்டச் சொன்ன பிஜேபி நிர்வாகி[5]: முதலில் சுப்ரமணியனின் உடல்நிலையை மறந்து, இவர் இப்படி, இவ்விசயத்தில் ஈடுபட்டாரா என்பது நோக்கத் தக்கது. மருத்துவமனைக்கு வருபவர், தங்களது உடல்நிலை, சிகிச்சை, எந்த டாக்டரைப் பார்ப்பது, எங்கு செல்வது என்று தான் கவனமாக இருப்பார்களே தவிர மற்றவர்களைக் கவனித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அது மாதிரி பிரச்சினை செய்யத்தான் ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள் என்றால், எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். நோயாளியுடன் தான் வரவேண்டும் என்பதில்லை. நக்கீரன், “பெண்மருத்துவரிடம்ஹிஜாப்பைகழட்டச்சொல்லிவாக்குவாதம்; பாஜகபிரமுகர்கைது” என்றும், தினமணி, “ஹிஜாபைகழற்றச்சொல்லிபெண்மருத்துவரைமிரட்டியபாஜகநிர்வாகி” என்றும் தலைப்பிட்டு செய்திகள் போட்டுள்ளன. இரண்டையும் இடதுசாரி-வலதுசாரி, பார்ப்பன எதிர்ப்பு-ஆதரவு, திமுக-அதிமுக, இந்துவிரோதம்-ஆதரவு என்று எப்படியெல்லாம் வகைப் படுத்தினாலும், ஊடகக்காரர்கள் தாங்கள் இதைத்தான் சொல்லவேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறார்கள். அதாவது, பிஜேபி மத-அரசியல் மூலம் தமிழகத்தில் காலூன்ற முயல்கிறது, அதற்கான வேலைகளை செய்து வருகின்றது என்பதை எடுத்துக் காட்டப் படுகிறது. பிஜேபிகாரர்களுக்கு அந்த அளவுக்கு நெளிவு-சுளிவு எல்லாம் தெரியாது, வெளிப்படையாக இந்துத்துவம், “பாரத் மாதா கி ஜே” என்று கிளம்பி விடுவார்கள். ஒரு சமய வேகும், இன்னொரு சமயத்தில் வேகாது.
25-05-2023 புவனேஸ்வர் ராம் கைது, ஆர்பாட்டம்முதலியன: மருத்துவர் நோயாளி பற்றியோ, சிகிச்சை பற்றியோ கவலைப் படாமல், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு சுவாகவாசமாக செல்போன் பார்த்துக் கொண்டிருப்பதும் தெரிகிறது. ஒரு மருத்துவர் போலவே அவர் நடந்து கொள்ளவில்லை. ஸ்டெதாஸ்கோப் கூட காணப்படவில்லை. அவருக்கு தான் ஒரு முஸ்லிம், ஹிஜாப் அணிந்து கொள்வேன் என்ற தோரணையில் பேசி, கத்தி, ஒருமையில் “போ” என்று கத்துவதும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, புவனேஸ்வர் ராமை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான மாரிமுத்து தலைமையில் 25-05-2023 அன்று முன்தினம் சாலை மறியல் நடந்தது. இந்நிலையில், மருத்துவர் ஜன்னத் அளித்த புகாரின்பேரில், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மதம் தொடர்பான குற்றம் மற்றும் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் புவனேஸ்வர் ராம் மீது கீழையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்[6]. கம்யூனிஸ்டுகள் அவரை கைது செய்ய வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்தனர்[7]. இந்நிலையில், புவனேஸ்வர் ராம் மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் 26-05-2023 அன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அதிகாரிக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்[8]. இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று தெரியவில்லை. புவனேஸ்வர் ராம் கைது செய்யப் பட்டார், படவில்லை என்று முரண்பட்ட செய்திகளும் வந்துள்ளன[9]. இந்நிலையில் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புவனேஸ்வர்ராம் உறவினரான சுப்ரமணியன் நேற்று காலை உயிரிழந்தார்[10].
25-05-2023 அன்று மருத்துவமனையில் நோயாளி இறப்பு: நோயாளி சுப்ரமணியன் எப்படி, எவ்வாறு, ஏன் உயிரிழந்தார் என்பது பற்றி யாரும் கவலப் பட்டதாகத் தெரியவில்லை. நடு ராத்திரியில் வந்த போது, உரிய சிகிச்சை அளிக்கப் பட்டதா, இல்லையா, யார் சிகிச்சை அளித்தனர் என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், இருவரும் வீடியோ எடுத்தனர், இணைதளத்தில் போட்டனர், பரவியது எனூதான் செய்திகள் போட்டுள்ளனர். இதனிடையே போலீஸாரால் புவனேஸ்வராம் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதை தொடர்ந்து, ஊர்வலத்தில் பங்கேற்ற பாஜகவினர் சடலத்தை சாலையில் வைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்[11]. மேலும் அரசு மருத்துவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட புவனேஸ்வர்ராமை உடனடியாக விடுவிக்க கோரியும் வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்[12]. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்[13].
[12] சமயம்.காம், நாகப்பட்டினம்திருப்பூண்டிஅரசுஆரம்பசுகாதாரநிலையம்; ஹிஜாப்விவகாரத்தில்பாஜகநிர்வாகிகைது!, Madhumitha M | Samayam Tamil | Updated: 27 May 2023, 11:30 am
பெண், உலேமா முன்பு வரக்கூடாதா – கேரள இஸ்லாமிய முசலியார் மாணவி மேடைக்கு வந்ததற்கு திட்டிக் கண்டிந்து கொண்ட விவகாரம்!
கடவுளின் தேசமான கேரளாவில் மாணவி மேடைக்கு வந்தது சர்ச்சையானது: “கடவுளின் தேசம்” என்று பறைச்சாற்றிக் கொள்ளும் கேரளாவில், சிறுமியை இஸ்லாமிய உலேமா உதாசீனப் படுத்தியுள்ளது திகைப்பாக உள்ளது. அதிக படிப்பறிவு உள்ள மாநிலமும் கேரளா தான். பிறகு, ஏன், எதற்கு இந்த முரண்பாடு? கேரளாவில் 10 வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்து விருது வழங்கியதற்காக விழா அமைப்பாளர்களை முஸ்லிம் மத குரு ஒருவர் கண்டித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், மத குருவின் செயலுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது[1]. சமஸ்தா கேரளா ஜெம் இய்யதுல் உலமா (அனைத்து கேரள உலமா அமைப்பு) என்பது கேரள சன்னி மத குரு சங்கமாகும். இந்த அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவர் 10 வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்து சான்றிதழை பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பு மற்றும் சர்ச்சையை கிளப்பியுள்ளது[2]. கேரள மாநிலம் மல்லாபுரத்தில் மதரஸா கட்டிடத்தின் திறப்பு விழாவின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது[3]. இந்த விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பனக்காடு செய்யது அப்பாஸ் அலி ஷிஹாப் தங்கல், பத்தாம் வகுப்பு மாணவிக்கு விருது வழங்கினார்[4].
முசலியார்மேடையில்இருக்கும்போதுபெண்கள்வரக்கூடாதாம் – கோபித்துக்கொண்டுதிட்டியஉலேமா: வழக்கம் போல முதலமைசர் மற்றும் ஆளும் கட்சியினர் அமைதியோடு இருந்தனர். “குர்ஆன்கட்டளைகளைமீறிமுஸ்லிம்பெண்கள்தனிமையில்தள்ளப்படுவதற்குஇச்சம்பவம்இன்னொருஉதாரணம்,” என கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது தன் ட்விட்டர் பக்கத்தில் வேதனையோடு தெரிவித்துள்ளார்[5]. கேரள சமூகவலைதளங்களில் வைரலான ஒரு காணொளியே ஆளுநரையும் சங்கடப்படுத்தியுள்ளது[6]. கேரளத்தின் மளப்புரத்தில் சமஸ்தா கேரளா ஜெம் இய்யத்துல் உலமா அமைப்பின் சார்பில் சாதனை மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் மதரஸா பள்ளியில் (அரபு பாடம்) பயிலும் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் விருது வழங்கப்பட்டது. மதரஸா நிர்வாகி அந்த மாணவியின் பெயரைச் சொல்லி விருது வாங்க வர மேடைக்கு அழைத்தார். மாணவியும் மேடைக்கு வந்தார். இதைப் பார்த்ததும் சமஸ்தா ஜெம் இய்யத்துல் உலமா அமைப்பின் செயற்பாட்டாளர் எம்.டி.அப்துல்லா முசலியார், பத்தாம் வகுப்புப் படிக்கும் பெண்ணை எப்படி பொதுமேடைக்கு அழைக்கலாம். என்னைப் போன்ற மதக்குருக்களை மேடையில் வைத்துக்கொண்டே நீங்கள் இப்படிச் செய்யலாமா? என சிறுமியை மேடைக்கு அழைத்தவரை கடுமையாகத் திட்டினார்.
உங்களுக்குமதவிதிகள்தெரியாதாஎனவும்எச்சரித்தார்: இந்த சிறுமியை அழைத்ததற்குப் பதில் அவரது பெற்றோரை அல்லவா அழைத்திருக்க வேண்டும் எனவும் அப்துல்லா முசலியார் திட்டும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து சிறுமி கீழே அனுப்பப்பட்டு, அவரது பெற்றோர் மேடைக்கு வந்தனர். இது சிறுமியை அவமதிக்கும் விதத்தில் உள்ளதாக சமூக ஆர்வலர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் கேரள மகளிர் ஆணையத் தலைவர் சதிதேவி, “படித்தவர்கள்அதிகம்நிறைந்த, பெண்கள்அதிகம்வாழும்கேரளத்தில்இந்தசம்பவம்நடந்திருக்கிறது. சமூகத்தைபலதலைமுறைகளுக்குகீழ்நோக்கிஇழுப்பவர்களிடம்இருந்துமக்கள்விழிப்படையவேண்டும்,” என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனிடையே காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் பலரும் இதற்கு எதிராகவும், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும் இவ்விவகாரத்தை அமுக்கி வாசித்தனர்.
பெண்கள்தனிமைப்படுத்தப்படவேண்டும்என்பதுவிதியல்ல: கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் தன் ட்விட்டர் பக்கத்தில்[7], “திருக்குரானின்கட்டளைகளையும்மீறி, முஸ்லிம்பெண்கள்தனிமையில்தள்ளப்படுவதற்குஇந்தசம்பவமும்ஒருஉதாரணம். முஸ்லிம்குடும்பத்தில்பிறந்ததால்தகுதியானவிருதைப்பெறும்போதுமேடையில்அவமானப்படுத்தப்பட்டதைப்பார்க்கும்போதுவருத்தமாகஉள்ளது. மதகுருமார்கள்குரானின்கட்டளையைமீறியும், அரசியலமைப்புசட்டத்தைமீறியும்முஸ்லிம்பெண்களைதனிமைப்படுத்துவது, அவர்களின்ஆளுமையைநசுக்குவதுஆகியவற்றுக்குஇதுவும்ஒருஉதாரணம்,” என வேதனையோடு கூறியுள்ளார்[8]. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்[9]. இதனிடையே இந்தச் சம்பவத்தைக் கடுமையாகச் சாடியுள்ள கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், ஆளும் தரப்பையும் இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்[10]. இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்[11], “இந்தவிவகாரத்தில்கேரளாஆளும்தரப்பினர்மௌனம்குறித்துவருத்தம்அளிக்கிறது. அரசியல்வாதிகள்மட்டுமின்றிஅனைவருமேஇந்தவிவகாரத்தில்மௌனம்காக்கின்றனர். நமதுவீட்டுப்பெண்களின்மரியாதைமற்றும்கண்ணியம்பாதுகாக்கஅனைத்துக்கட்சிகளும்இதுகுறித்துப்பேசவேண்டும். இந்தவிவகாரத்தில்அவர்களைவிட (கேரளஅரசு) நான்அதிகம்பேசிஉள்ளேன்,” என்றார்[12].
அடிப்படைவாதஇஸ்லாமில்பெண்கள்தனிமைப்படுத்தப்படுகின்றனர்: முஸ்லிம் பெண்கள் வெளியே வரக்கூடாது, ஆண்களுக்கு சமமாக எல்லா காரியங்களிலும் ஈடுபடக் கூடாது, காஜி, மௌலானா, உலேமா முன்பாக முகத்தைக் காட்டிக் கொண்டு வரக் கூடாது, பர்தா / ஹிஜாப் அணிந்து கொள்ள வேண்டும், முகத்தையும் மூடிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம், தலிபன் போன்ற அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் ஆணையிடுவதை செய்திகளாகப் படிக்கலாம். விமான பயணங்களில் பெண்கள் தனியாக பயணிக்க கூடாது. வேலைக்கு செல்லக்கூடாது. டிரைவிங் லைசென்ஸ் எடுக்க தடை. தனியே வெளியே நடமாடக்கூடாது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மறைக்கும் புர்கா அணிய வேண்டும் என பெண்களை வீட்டில் முடக்கும் வகையிலான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பூங்காக்களில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. அதாவது ஆண்கள், பெண்கள் தனித்தனியே தான் பூங்காக்களுக்கு செல்ல முடியும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மட்டும் பெண்கள் பூங்காக்களுக்கு செல்ல முடியும். மற்ற நான்கு நாட்கள் ஆண்கள் செல்ல வேண்டும். இந்நிலையில் தான் தற்போது ஓட்டல், ரெஸ்டாரண்ட்களில் ஆண்கள், பெண்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது[13]. ஆப்கனில் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் மாகாணத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கணவன்-மனைவி உள்பட எத்தகைய உறவாக இருந்தாலும் கூட ஆண்கள், பெண்கள் தனித்தனியே தான் அமர்ந்து சாப்பிட வேண்டும்[14]. இதுபற்றி ஆப்கனின் நல்லொழுக்கத்துறை அமைச்சகம் கூறுகையில், ‛‛உணவகங்களில்ஆண்கள், பெண்களைபிரித்துஉணவுசாப்பிடஅறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்
[3] விகடன், `பெண்களைபரிசுபெறமேடைக்குஅழைக்கக்கூடாது!’ – கேரளஇஸ்லாமியதலைவரின்செயலால்கொதித்தகவர்னர், சிந்து ஆர், Published:12 May 2022 6 PMUpdated:12 May 2022 6 PM.
[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பெண்கள்மேடைக்குவரக்கூடாது..!! இந்தகாலத்தில்இப்படிஒருஇசுலாமியஅமைப்பா.? கொந்தளிக்கும்ஆளுநர், Ezhilarasan Babu, Chennai, First Published May 13, 2022, 1:44 PM IST; Last Updated May 13, 2022, 1:44 PM IST
[9] தினமணி, மலப்புரத்தில்சிறுமிஅவமதிப்புவிவகாரம்: அரசியல்தலைவா்களின்மெளனம்ஏமாற்றமளிக்கிறது, By DIN | Published On : 13th May 2022 03:01 AM | Last Updated : 13th May 2022
பாகிஸ்தானிய நடிகை நிர்வாணமாக போஸ் கொடுத்தது எப்படி?
வீணா மாலிக் பாகிஸ்தானிய கவர்ச்சி நடிகை மற்றும் பல பிரச்சினைகளில் சிக்கியுள்ளவர்: பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு. அங்கு பெண்கள் பர்தாவில் இருக்க வேண்டும். இருப்பினும், மேனாட்டு நாகரிகம் பரவியுள்ளதால், படித்த பெண்கள் நாகரிகமாகவே இருக்கிறார்கள், உடையணிகிறார்கள். இருப்பினும், இஸ்லாமிய மதகுருமார்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறர்கள். வீணா மாலிக் ஒரு நாகரிகமான பாகிஸ்தானிய நடிகை. ராவல்பிண்டியில் 1978ல் ஒரு பாலிஸ்தானிய ராணுவ வீரருக்குப் பிறந்தவர். பள்ளியில் கூடைபந்து விளையாடி, பிறகு பி.ஏ வரைப் படித்துள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தான் சினிமாக்களில் நடித்துள்ள இவர், பிக்-பாஸ்-4 நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனார்[1]. அடிக்கடி நிர்வாண போஸ் கொடுப்பது, கிரிக்கெட் வீரர்களுடன் உல்லாசமாக இருப்பது முதலியவ அவருக்கு பொழுது போக்கு எனலாம்.
நிர்வாணத்திலும் போட்டா-போட்டி போடும் நடிகை: இந்தியாவில் ராக்கி சாவந்த் எனும் சர்ச்சைக்கு பெயர் பெற்ற நடிகைக்கு தானும் சளைத்தவர் இல்லை என்பது போல், அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வீணா மாலிக்குக்கு வழக்கம்தான்[2]. இந்தியாவில் கலர்ஸ் டிவி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு கலந்து கொண்டு அதன் மூலம் பெரும் பிரபலமானவர் வீணா மாலிக். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல ஆண் போட்டியாளர்களுடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்தி சலசலப்பையும் ஏற்படுத்தியவர் வீணா மாலிக்[3]. ஏற்கெனவே அதே எப்.எச்.எம் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் அதே மாதிரி நிர்வாணப்படம், தோளில் ஐ.எஸ்.ஐ முத்திரையுடன் வெளி வந்துள்ளது. இப்பொழுது இரண்டாவது முறை. வித்தியாசம், இது முழு நிர்வாணம், அவ்வளவு தான்! முன்பு முகமது ஆசிப்புடன் சுற்றி வந்தார்[4]. அட்டைபடத்தில் கிடைப்பது, இணைத்தளத்தில் கிடைப்பது அனைவருக்கும் சொந்தம் தான். ஆகவே,
நிர்வாணமாக போஸ் கொடுக்கிறார்கள் என்றால், பெண்கள் ஆகட்டும், நடிகைகள் ஆகட்டும், துணிந்து விட்டார்கள் என்பதுதான் உண்மை. அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. மனத்துணிவு மற்றும் ஏதாவது ஒரு விதத்தில் பணம், புகழ் கிடைக்கும் என்றால் அவ்வாறு வெய்கிறார்கள், வற்புறுத்தினாலும் செய்வதுண்டு.
இந்த போட்டோ டூவிட்டர் மற்றும் பேஷ்புக் இணைய தளங்களில் வெளியாகியுள்ளது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இதெல்லாம் பிரச்சார யுக்தியேயன்றி வேறெந்த சகசியமோ, வேடிக்கையோ விளையாட்டோ இல்லை. அவர் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை முத்திரையுடன் நிர்வாண போஸ் கொடுத்து இருப்பதால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[5]. இதற்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ஆனால், வழக்கம் போல நமது “தி ஹிந்து” இதற்கும் வக்காலத்து வாங்கிக் கொண்டு விளக்கம் அளித்துள்ளது.
உண்மைகளை மறைக்க, மக்களின் மனங்களைத் திசைத் திருப்ப பிரச்சார யுக்தி: “அவரது தோள்பட்டையில் கருப்பு நிறத்தில் ஐ.எஸ்.ஐ. என்று எழுத வைத்தது என்னுடைய ஐடியா தான். இது வெறும் ஜோக்குக்காக செய்யப்பட்டது. இந்தியாவில் நாங்கள் இவ்வாறு ஜோக் அடிப்பதுண்டு. ஏதாவது தவறாக ஆகிவிட்டால், அதற்கு காரணம் ஐ.எஸ்.ஐ. தான் பின்னணி என்போம்”, என்று FHM பத்திரிக்கை ஆசிரியர்
யுத்தத்தில் அல்லது இக்கால நிலவரப்படி சொல்வதானால், தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள நாடுகள் தங்களது அக்கிரமமான கொடூரங்களை மறைக்க பலவிதமான பிரச்சார யுக்திகளை கையாளுவதுண்டு. அதாவது, பரப்பரப்பான செய்தியை வெளியிட்டு பரப்பி, மக்களின் மனங்களை திசைத் திருப்பி விடுவர். வாயில் வெடிகுண்டு, தோள்பட்டையில் ஐ.எஸ்.ஐ என்பதெல்லாம் அதைத்தான் காட்டுகிறது.
கபீர் சர்மா விளக்கம் அளித்தார்[6]. இதற்கிடையே, அந்த பத்திரிகைக்கு நான் நிர்வாண போஸ் கொடுக்க வில்லை என நடிகை வீணாமாலிக் மறுப்பு தெரிவித்துள்ளார். நான் ஆடையுடன்தான் கவர்ச்சி போஸ் கொடுத்தேன். ஆனால் அது நிர்வாணமாக மார்பிங் செய்து மாற்றி அமைத்து வெளியிடப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் டி.வி.க்கு பேட்டி அளித்துள்ளார்[7]. மேலும், தனது கையில் ஐ.எஸ்.ஐ. என்ற, பாகிஸ்தான் உளவுத்துறையின் முத்திரையை ஒரு நகைச்சுவை கலந்த வேடிக்கைக்காகதான் பச்சை குத்தியிருந்தேன். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் வீணாமாலிக் கூறியிருப்பதை பத்திரிகை நிர்வாகம் மறுத்துள்ளது.
26/11 துயரத்தை, பயங்கரத்தை, குரூரத்தை பிளேஷ் டான்ஸினால் மறைக்க முடியுமா? 26/11 அன்று கொல்லப்பட்டவர்களின் ஆத்மா எப்படி சாந்தி அடையும்? அவர்களது உற்றார்-உறவினர்களது துயரத்தை எப்படி தீர்க்க முடியும்? அந்த பயங்கரத்தை, குரூரத்தை எப்படி தவிக்க அல்லது நீக்க முடியும்? இதெற்கெல்லாம் பதில் சொல்லாமல், தீர்வு காணாமல், வெட்கங்கெட்ட பெண்கள் / ஆண்கள் அதே சி.எஸ்.டி. ஸ்டேஷனில் நடனம் ஆடுகின்றனர். கேட்டால், “பிளேஷ் டான்ஸ்” என்ரு டிவி-ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. பிளேஸ் டான்ஸினால் தீவிரவாதத்தை மறைக்க முடியுமா? பிறகு காஷ்மீரத்தில் சென்ரு ஆடவேண்டியது தானே? ஆகவே, இது இந்தியர்களை ஏமாற்ற செய்யப்படும் ஒரு பிரச்சாரமே ஆகும்.
எப்படி நிர்வாண போட்டோ எடுக்கப்பட்டது: “நவம்பர் 23ம் தேதி வெர்சொவா அரம்நகரிலுள்ள ஸ்டூடியோவில் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. விஸால் சாக்ஸேனா என்ற புகைப்படக்காரர், மேக்கப்காரார், ஸ்டைல்-ஆலோசகர் மற்றும்
இப்படி பல ஆண்களுக்கு முன்னால் தைரியமாக நின்று போஸ் கொடுக்கிறார்கள் என்பதிலிருந்து, எல்லாவற்றையும் துறந்து விட்டனர் என்றே தெரிகிறது. பிறகு வெட்கப்படுவதிலேயோ, மறுப்பதிலேயே என்ன இருக்கிறது? அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு என்றெல்லாம் விவாதிக்கப் போகிறார்களா என்ன?
துணையாளிகள் என்று எட்டு பேர் அப்பொழுது இருந்தனர். அதைத்தவிர வெளியில் இருந்த பத்து பேர்களுக்கும், நாங்கள் அத்தகைய படத்தை எடுக்கப் போகிறோம் என்று நன்றாகத்தெரியும். மதியம் அந்த சூட்டிங் ஆரம்பித்தது, 6.30க்கு முடிந்தது, வீணா சென்று விட்டார். உண்மையில் நாங்கள் இரண்டு விதமான புகைப்படங்கள் எடுத்தோம். ஒன்று பத்திரிக்கையின் அட்டையில் பிரசுரிக்கப்பட்டது, மற்றொன்று ஒரு கையெரி குண்டை தனது பற்களில் கடித்துக் கொண்டு நிற்பது போன்ற போஸ். அது மிகவும் பிரச்சினைக்குள்ளாகும் என்று அதனை தவிர்த்து விட்டோம். இதற்காக வீணாவை நாங்கள் நேரிடையாகவே தொடர்பு கொண்டோம். அவரது ஆட்கள் மூலம் செல்லவில்லை. ஈ-மெயில் தொடர்பிலேயே ஒப்பந்தத்தை செய்து கொண்டோம்.
படத்தை பார்க்க ஆவலாக உள்ள நடிகை: நவம்பர் 29ம் தேதி அவர் அனுப்பியுள்ள ஈ-மெயிலில், “நவம்பர் 23ம் தேதி எடுத்த படங்களுக்காக நான் சந்தோஷமடைந்தேன். பத்திரிக்கையின் அட்டைப்படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன்”, என்று சொல்லியுள்ளார். கபீர் சர்மா அன்று நடந்த புகைப்படம் எடுக்கும் நிகழ்வை வீடியோவும் எடுத்துள்ளதாகவும், அது அத்தாட்சியாகவும் விளங்குகிறது என்கிறார்[8]. இதனால் விளம்பரம் அதிகம் கிடைக்கும் என்று இவ்வாறு வீணா மறுப்பதாக கூறப்படுகிறது. வீணா மாலிக்குடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி தான் அவரது நிர்வாணபடம் எடுத்து பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ. முத்திரை தெரியாத வகையில் மிகவும் மெல்லியதாக தான் வரைந்தோம். ஆனால் வீணாமாலிக்தான் அதை மிகவும் பெரிதாக வரையும்படி கேட்டுக் கொண்டார் என கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் எதிர்ப்பு, நடவடிக்கை: நடிகை வீணாமாலிக் நிர்வாண படம் குறித்து பாகிஸ்தானின் பழமைவாத மதகுரு மவுலானா அப்துல் குவாய் கூறும்போது,
இஸ்லாமில் இவையெல்லாம் அனுமதிப்பதில்லை என்றால், எதற்காக முஸ்லீம்கள் அதிகமாக “புரொனோகிராபி’ இணைதளங்களை அதிகமாகப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. எப்பொழுது சர்வே எடுத்தாலும், அதிகமாக கிளிக் செய்பவர்கள் அவர்கள் தாம் என்று தெரிகிறது.
வீணாமாலிக்கின் செயல் அனைத்து முஸ்லிம்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார். ஆனால் அதற்கு அந்நாட்டு டிவி-ஸோவிலேயே, “இதைவிட/தன்னைவிட நிறைய பிரச்சினைகள் நாட்டில் உள்ளன”, என்று கிண்டலாக பதிலளித்தாராம்! உள்துறை மந்திரி ரகுமான் மாலிக் கருத்து தெரிவிக்கையில், “முதலில் அந்த படம் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிய வேண்டும். நான் அந்த புகைப்படத்தைப் பார்க்கவில்லை. உண்மையானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று தெரிவித்துள்ளார்[9].
பர்கா இல்லாமல் பாடம் சொல்லித்தர வரக்கூடாது என்று தடை செய்யப்பட்ட ஷிரின் மிட்யா என்ற 24 வயதான இளம்பெண் கல்லூரி ஆசிரியர் கடைசியில் தனது போராட்டத்தில் வென்று விட்டார்[1]. அக்கல்லூரி யூனியன் பெண் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் பர்கா அணிந்து கொண்டுதான் வரவேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆணையிடப்பட்டது. இதனால் எட்டு பெண்கள் சங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆனால், ஷிரின் வெளிப்படையாக, தான் அவ்வாறு பர்கா அணிய முடியாது, ஏனெனில் அத்தகைய உடைக்கட்டுப்பாடு ஊனிவர்ஸிடி டிராண்ட் கமிஷன் சரத்துகளில் இல்லை என வாதிடினார்.
Burqa-teacher-wins-her-stand
சையத் சம்ஸுல் ஆலம், அலியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் சொல்லிப்பார்த்தார். ஆனால், அடிப்படைவாதம் கொண்ட யூனியன் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், நிலைமையை மேற்கு வங்காள சொறுபான்மை நல அமைச்சர் அப்துர் சட்டார் என்பவருக்குத் தெரியப்படுத்தினர். உடனே, அவர் ஷிரீனை வகுப்புகளை எடுக்குமாறு பணிக்கப்பட்டார்[2]. இருப்பினும், என்றைக்கு இருந்து என்று இன்னும் சொல்லப்படவில்லை! யூனியனில் காரியதரிசி ஹசனூர் ஜமான் (Hasanur Zaman) என்பவர், தேவையில்லாமல், ஊடகங்களுக்கு இப்பிரட்சினையை எடுத்துச் சென்று ஏதோ ஒரு பிரச்சினை போன்று உருவாக்கிவிட்டார்[3] என்று மறுபடியும் அந்த பெண்ணையே குற்றஞ்சாட்டினார்!
பர்கா இல்லாமல் வந்த கல்லுரி பெண் ஆசிரியருக்குத் தடை: கல்கத்தாவில் அமூல்!
ஷிரின் மிட்யா என்ற 24 வயதான இளம்பெண் கல்லூரி ஆசிரியர். கடந்த மூன்று மாதங்களாக கல்லூரியில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாடம் எடுக்க முடியாமல் இருக்கிறார். காரணம். அலியா பல்கலைக்கழகம் சொல்லாவிட்டாலும், அக்கல்லூரி யூனியன் சொல்வதால், பர்கா இல்லாமல் அவர் வகுப்பிற்குச் செல்லமுடியாது, பாடம் சொல்லித்தரமுடியாது.
அவர் சொல்வதாவது, “யூனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன், உடைபற்றிய கட்டுப்படு பற்றி ஒன்றும் சொல்லவில்லை. மேலும் இது பர்காவைப் பற்றியப் பிரச்சினை இல்லை. என்னுடைய சுய-விருப்பத்தைப் பொறுத்த விஷயமாகிறது”.
இத்தாலியில் பர்கா அணிந்து தெருவில் வந்ததால் அபராதம் விதிக்கப் பட்டது.
02-05-2010 (வெள்ளி): டுனிஸியாவைச் சேர்ந்த அமெல் சலஹ் (Amel Salah) தன்னுடைய கணவன் பென் சலஹ் ( Ben Salah)வோடு நடநு சென்றாபோது, போலீஸார், அவளது அடையாளத்தை / முகத்தைப் பார்க்க வேண்டும் என்றானர். மறுத்ததால், அபராதம் விதிக்கப் பட்டது. ஏனெனில், இத்தாலியில் அப்பகுதியில் முகத்தை மறைத்துக் கொண்டு அடையாளம் தெரியாமல் ஆடை அணியக்கூடாது என்ற விதியுள்ளது.
பர்கா அணிந்து காரை ஓட்டியதால் ஃபிரான்ஸில் ஒரு பெண்மீது அபராதம் விதிக்கப் பட்டது: நான்டிஸ் ( Nantes, France), என்ற இடத்தில் சென்ற மாதம் (24-04-2010) 31 வயது பெண்மணி, பர்கா அணிந்து கொண்டு காரை ஓட்டியதால், வொபத்து ஏற்படலாம் என்றதாலும், மற்றும் அத்தகைய முறை அங்கு அனுமதிக்கப் படாதலாலும், £18 அபராதம் விதிக்கப்பட்டது.
கடத்தல் மிரட்டல் ? கோல்கட்டா ஏர்போர்ட்டில் பரபரப்பு
கோல்கட்டா : டில்லியில் இருந்து வங்கதேச தலைநகர் தாக்காவுக்கு கோல்கட்டா வழியாக சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தை கடத்த சதி நடப்பதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து விமானம் அவசரமாக கோல்கட்டாவில் தரையிறக்கப்பட்டது. இன்று காலையில் டில்லியில் இருந்து புறப்பட்ட விமானம் சரியாக 11.50 மணியளவில் கோல்கட்டா என்.எஸ்.சி., போஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஹைஜேக் வார்த்தையால் பீதி : விமானத்தில் தாக்காவுக்கு பயணம் செய்து கொண்டிருந்த 2 பேரின் நடமாட்டம் சந்தேகப்படும் படி இருந்துள்ளது. அவர்களை கூர்ந்து கவனித்த விமான சிப்பந்தி அவர்களில் ஒரு பெண் ஹைஜேக் என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகப்படுத்தியதை கவனித்தார். இதனால் சந்தேகம் வலுக்கவே, இது குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் கோல்கட்டா ஏர் டிராபிக் கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்து அனுமதி பெற்று விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பயணிகள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் சந்தேகத்தின் பேரில் ஹைஜேக் என பேசிய 2 பேரையும் விமான நிலைய பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் தனியிடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்களிடம் விமான பயணத்துக்கான ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டது. விசாரணை முடிந்ததும் அவர்கள் விடுவிக்கப் படுவார்கள் என ஏர்போர்ட் வட்டாரம் தெரிவிக்கிறது.
பர்கா பயணியால் பீதி: கொல்கத்தா விமானம் அவசரமாக தரையிறக்கம்
கொல்கத்தா வந்துகொண்டிருந்த “ஸ்பைஸ் ஜெட்” விமானத்தில் பயணம் செய்த இரண்டு பயணிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால், அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. புனேவிலிருந்து இன்று டெல்லி வழியாக கொல்கத்தா சென்று கொண்டிருந்த “ஸ்பைஸ் ஜெட்” விமானத்தில் இருந்த இரண்டு ரஷ்ய பயணிகளின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக இருந்தது. அதில் ஒரு பெண் பர்கா அணிந்திருந்தார்.இதனால் சந்தேகம் மேலும் வலுவடைந்தது. அந்த பெண்ணை முகத்தை மூடியிருக்கும் பர்காவை அகற்ற சொன்னபோது அவர் மறுத்துவிட்டார்.
இதனால் சந்தேகம் மேலும் வலுத்ததால், விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்க கொல்கத்தா விமான நிலையத்தில் அனுமதி கோரினார். இதையடுத்து உடனடியாக அனுமதி வழங்கப்பட்டு அந்த விமானம் கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. அதற்கு முன்னதாகவே அங்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட அதிகாரிகள், விமானத்தில் ஏறி பயணிகளை கீழே இறக்கி, விமானம் முழுவதும் சோதனை நடத்தினர். அத்துடன் சந்தேகத்துக்கு இடமான 2 பேரையும் தனியாக அழைத்துச் சென்று சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதில் சந்தேகப்படும்படியான பொருள் எதுவும் அவர்களிடம் இல்லை என்பது தெரிய வந்தது. அத்துடன் பர்கா அணிந்திருந்த பெண் ஓங்குதாங்காக நல்ல உயரமான உடல்வாகுடன் இருந்ததால், அது ஆணாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழ வாய்ப்பாக அமைந்து விட்டதாகவும் அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர்.
பெல்ஜியம் பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் தங்களது அணியும் அடையாளத்தை மறைக்கும் வகையில் உள்ள பர்கா / நிகாப் போன்ற ஆடைக்கு தடை விதித்துள்ளது. இதனை அடுத்து பிரான்ஸ் நாடும் அத்தக்கையச் சட்டத்தை எடுத்துவரும் என்று தெரிகிறது.
Burqa-Niqab-Hijab-chador
இச்சட்டம் அமூலாக்கப் பட்டால், அந்த உடையை அணிந்து பொது இடங்களில் வருபவர்களுக்கு 15 முதல் 25 ஈரோக்கள் (20-34 dollars) அபராதம் அல்லது / மற்றும் ஒருவார சிறைத் தண்டன விதிக்கப் படுமாம்.
முஸ்லீம் பெண்கள் பர்கா, நிகாப், ஹிஜாப் மற்றும் சாதர் என்ற வகையான உடலை மறைக்கும் உடையை, ஏற்கெனெவே உள்ளே அணிந்துள்ள உடைக்கு மேலே போட்டு மறைத்துக் கொள்கிறார்கள்.
பர்கா என்பது முழுமையாக மறைக்கும் ஆடை, அதாவது எதையும் பார்க்க முடியாது. பெண்ணின் அடையாளமே தெரியாது.
நிகாப் என்றதும், அது போலத்தான்.ஆனால் பெண்ணின் கண்கள் தெரியும். பெண்ணின் அடையாளமே தெரியாது.
ஹிஜாப் அணிந்தால், முகம் தெரியும். பெண்ணின் அடையாளம் தெரியும்.
திருமணத்திற்காக மணமகள் அலங்கரிக்கப் பட்டு அழைத்துச் செல்லப் படுகிறாள்.
மாப்பிள்ளை சடங்கு
மாமனார் ஒப்புதல் அளிக்கிறார்.
மணமகன் மணமகளுக்கு மோதிரம் அணிவித்தல்!
சோயப் சானியாவிற்கு மோதிரம் அணிவித்தார். ஆமாம், அந்த கருமணி மாலையும் அவர்தான் அணிவித்தாரா?
பெண்ணை வாழ்த்துதல்
மணமகள் ஆசிர்வதிக்கப் படுகிறாள்.
மணமகன் வாழ்த்தப்படுதல்
மணமகனும் வாழ்த்தப்படுகிறான்.
மகிழ்ச்சியான நேரம்
தோழி கிண்டல் செய்கிறாரா?
ஜோடியாக நிற்கிறார்கள்
மணமகன், மணமகள் ஜோடியாக நிற்கிறார்கள்
குடும்பதுடன் ஃபோட்டோ
குடும்பத்துடன் புகைப்படம்!
ஒருவழியாக முடிந்து விட்டது - இனி ஜாலிதான்
சானியா திருமணம் ஒருவழியாக நடந்து முடிந்து விட்டது!
பாவம் இந்தியர்கள்
பாவம் இந்தியர்கள் – எட்டித்தான் பார்க்கமுடியும் போல இருக்கிறது! பார்த்தாலும் என்னத் தெரியும்?
சானியா இந்தியாவிற்குக் கொடுப்பது?
அதாவது, இங்கு சானியா என்ற தனிப்பட்ட நபரைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஆனால், அப்பெண்ணை வைதுக் கொண்டு பலவிதமாக ஊடகங்கள், மற்றவர்கள், ஏன் அந்நிய சக்திகளும் விளையோடும் போதுதான் இந்தியர்களுக்கும் கவையாக இருக்கிறது.
இதற்கு, பால் தாக்கரேயும், பிரமோத் முத்தாலிக்கும்…………………..யாரும் தேவையில்லை.
ஆமாம் நம் சன் – டிவிக்காரகள் ஏன் அமைதியாக இருந்துவிட்டார்கள்?
அவர்களது “நிஜம்”, “பூதக் கண்ணாடி” கூட்டங்கள் எல்லாம் தூங்கி விட்டனனா அல்லது சுருட்டிக் கொண்டு படுத்துவிட்டனவா? இல்லை, அவர்களுக்கும் ஃபத்வா கொடுத்துவிட்டார்களா?
நிக்காஹ் 15ம் தேதி வைத்திருந்தாலும், ஏதோ காரணங்களுக்காக முன் கூட்டியே நடத்தி விடுவது என்று ஞாயிற்றுக்கிழமை திர்மானிக்கப் பட்டது. அன்றுதான் சுன்னி உலேமா வாரியமும் ஃபத்வா கொடுத்தது. ஆகவே முன்னதாக நடத்தி விட்டால் எல்லா விமர்சனங்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்துவிடலாம் என்று தீர்மானித்ததாகத் தெரிகிறது.
ஆகவே மெஹந்தி 14ம் தேதி, வரவேற்பு 15ம் தேதி என்று குறிப்பிட்டபடி நடக்கும். ஆகவே மற்ற சடங்குகளிக்கு முன்பாகவே நிக்காஹ் நடந்ததே பாரம்பரியத்திலிருந்து மிகவும் விலகியே நடந்ததுள்ளது கண்டு பெரியவர்கள் குறை சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாது மெஹந்தி செய்வது இஸ்லாமிய வழக்கம் இல்லையென்றலும், முஸ்லிம்கள் செய்கிறார்கள் என்றும் கூறப்பட்டது. அப்படியே மெஹந்தி வைத்துக் கொண்டாலும், திருமணத்திற்கு முந்தைய நாளில் தான் வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் சொல்லப் பட்டது.
கர்நாடகத்தில் பிஜேபி ஆட்சியிலுள்ளது என்ற காரணத்திற்காகவே அவ்வப்போது ஏதாவது பிரச்சினையைக் கிளப்பவேண்டும் என்றமுறையில் காரியங்கள் நடக்கின்றன. செய்திகள் வருகின்றன.
கருணாநிதியோ எடியூரப்பாவைப் புகழ்ந்து தள்ளுகிறார், விழாக்களுக்கெல்லாம் “பன்னி, பன்னி” (கன்னடத்தில் பன்னி / பன்றி என்றால் வாருங்கள் என்று பொருள்) என்று ஆள் விட்டு இல்லை, மந்திரியையே அனுப்பி அழைக்கிறார்! ஆனால் அவர் மாநிலத்தைச் சேர்ந்த தேவ கவுடாவோ கெட்ட வார்த்தயில் (அதை தமிழில் எழுதுவதைவிட அந்த கமல் ஹஸன் ஒரு திரைப்படத்தில் சொன்னதைக் குறிப்பிடலாம்) திட்டுகிறார்! ஆனால் இந்த பாராட்டும், திட்டும் நபர்கள் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தாம்!
மூன்று நாட்களுக்கு முன்பு, பல-அடுக்கு மாடி கட்டிடத்தின் மேலே டீஸல் டேங் இருந்தது, என்று பிரம்மாண்டமாக ஆங்கில டிவி செனல்கள் செய்திகள் வெளியிட்டு அடங்கிவிட்டன.
கர்நாடகா மற்றும் குஜராத்தில் நல்லது நடந்தால் எதுவும் பேச மாட்டார்கள், ஆனால், ஒரு சிறிய அல்லது சம்பந்தமே இல்லாத விஷயம் இருந்தால் அதை தேசிஅ மற்றும் உலகப் பிரச்சினையாக்கிவிடுவார்கள்.
சப்தஹிகா என்ற கன்னட பிரபாவின் வார இணைப்பிலே தஸ்லிமா நஸ்-ரீன் எழுதியதாக “பர்தா ஹை பர்தா” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெலிவந்திருந்தது. நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தைச் சேர்ந்த அந்த பத்திரிக்கையில், அது மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது அல்லது ஆங்கிலத்தில் “சிந்து” என்ற தலைப்பில் எழுதப்பட்டதின் தழுவல், முன்பு விளியான விவரம், தேதி,…… என்றெல்லாம் மூலத்தை…………விவரங்களைக் குறிப்பிடவில்லை.
கேட்கவேண்டுமா, உடனே “சியாசத்”: என்ற உருது பத்திரிக்கைத் திரித்து அதைப் பற்றி மார்ச் 1, 2010 அன்று விமர்சனம் செய்து வெளியிட்டது. அதன் பிரதியும் யாருக்கும் கிடைக்கவில்லையாம்!
உடனே பி. எஸ். எடியூரப்பா சொந்த ஊரான சிமோகாவில் எதிர்ப்புப்போராட்டங்கள், கலவரங்கள் ஆரம்பித்துவிட்டன.
முஸ்லீம்கள் ஹஸனில் “அந்த கட்டுரைக்கு” எதிராக நடத்திய பேரணி!
முஸ்லிம்கள் பச்சைக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு கிளம்பிவிட்டனர். “தாரே தக்பீர், அல்லாவு அக்பர்”……………கடையடைப்பு, …………….கலாட்டா, ………………கல்வீச்சு………………………., அரசிற்கு எதிராக வசவுகள், …..மிரட்டல்கள், …………போலீஸார் நிலைமைக் காட்டுக்கடங்காமல் போன நிலையில் சுட்டதில் இரண்டுபேர் இறந்துள்ளனர்– அதாவது சுட்டதில் ஒருவர், கல் எறிதாக்குதலில் ஒருவர் என இறந்துள்ளனர். அலர் காயமடைந்துள்ளனர்.
THE HINDU A shop in Kattanakere market gutted in fire during protests in Hassan on Monday 01-02-2010
படம்- தி இந்து – நன்றி.
unday.
படம்-டெக்கான் ஹெரால்ட் – நன்றி
செய்திதாள்கள் மன்னிப்புத் தெரிவித்தன. எஃப்.ஐ.ஆர் போட்டு இந்திய குற்றவியல் சட்டத்தின் 153A, 153B and 295A of the IPC (Indian Penal Code) பிரிவுகளில் கக்களைத் தூண்டிவிட்டதற்கும், இரண்டு பிரிவினரிடையில் தப்பெண்ணம் உண்டாக்கியதற்கும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஸ்லிமா நஸ்-ரீனே தான் அந்த செய்திதாளுக்கு எந்த கட்டுரையும் எழுதவில்லை என்று தமது அதிரச்சியை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது தான், “முஹமது நபி பர்காவிற்கு எதிராக இருந்தார் என்று எப்பொழுதும் குறிப்பிடவில்லை”, என்ரு தெளிவு படுத்தினார். ஆகாவே, இது ஒரு, “திரித்து எழுதப்பட்ட கட்டுரையே’, என்று முடிவாக எடுத்துக் காட்டினார்.
தேடிப்பார்த்ததில் ஏற்கெனவே “அவுட் லுக்” என்ற பத்திரிக்கை 2007ல் தஸ்லிமா நஸ்-ரீனின் கட்டுரையை அவருடைய சம்மதம் இல்லாமலேயே வெளியிட்டுள்ளதாகத் தெரிகின்றது. அக்கட்டுரையை இங்கே படிக்கலாம்: http://www.outlookindia.com/article.aspx?233670
அந்த Outlook என்ற பத்திரிக்கை பெரும்பலும், முஸ்லீம்களுக்கு சாதகமாக அல்லது அவர்களைத் தூண்டிவிடும் வகையில் எழுதுவது, செய்திகள், கட்டுரைகள் வெலியிடுவது வழக்கம். அந்த ஆங்கில மொழிபெயர்ப்பு ஓரளவிற்கு மூலத்தைப் போல உள்ளதென்றாலும், ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில்தான் இருந்தது. ஏனெனில் சில வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் தூண்டிவிடும் வகையில் இருந்தன என்று படித்தவர்கள் எடுத்துக் காட்டினர். மேலும் இந்த கட்டுரை வெளியிடப்படும் நேரத்தில்தான் தஸ்லிமா நஸ்-ரீன் இந்தியாவில் நிரந்தர குடியிருப்பாக கோரியது ( permanent residency ) மற்றும் மீலாடி நபியும் வந்தது!
ஆகவே ஹசன் மற்றும் சிமோகாவில் முஸ்லீம்கள் வேண்டுமென்றே பிரச்சினை எழுப்பவே அவ்வாறு செய்ததாகத் தெரிகின்றது. அதாவது இது “திரும்ப-திரும்ப செய்வது” என்ற முறையில் வருகிறது. முன்புகூட ஏற்கெனவே வெளிவந்த ஒரு சிறுகதையை “டெக்கான் ஹெரால்ட்” மொழிபெயர்த்து வெளியிட்டபோது, அந்த செய்திதாளின் அலுவலகத்தைதாக்கி, நொறுக்கியடித்து, தீவைத்ததாக செய்திகள் வந்தன. இப்பொழுதும் அதே முறைக் காணப்படுவதாக கையாளப்படுவதாக எடுத்துக் காட்டுகின்றனர். அத்தகைய பத்திரிக்கை அலுவலகங்கள் தாக்கப்படுவதும் திட்டமிட்டதாகவே தெரிகிறது.
முகத்தை பார்த்து விடக்கூடாது என்ற மதநம்பிக்கையிருந்தால் வாக்களிக்கவே தேவையில்லை!
பர்தா அணிந்து ஒளிப்படம் வாக்காளர் அட்டை வழங்கக் கூடாது: உச்ச நீதிமன்றம் வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படம் இருப்பது மத சம்பிரதாயத்துக்கு எதிரானதாக கருதும் முஸ்லிம் பெண்கள், ஓட்டு போடாமலே கூட விட்டுவிடலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த அஜ்மல்கான் என்பவர், தமிழக தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘முஸ்லிம் சமுதாயத்தில் பெண்கள் பர்தா அணிவதும், முகத்தை மறைக்க ஹிஜாப் அணிவதும் மத சம்பிரதாயம். பர்தா, ஹிஜாப் அணியாத பெண்களை அவர்களின் கணவன் மற்றும் உறவினர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்பது ஐதீகம். ஆனால், ஹிஜாப் அணியாமல் முஸ்லிம் பெண்கள் வாக்காளர் அடையாள அட்டைக்காக எடுத்த புகைப்படங்களை தேர்தல் ஆணையம் பட்டியலிட்டு ஊர் முழுவதும் காட்டுகிறது. இந்திய பிரஜைகளுக்கு விருப்பமான மத வழிபாட்டு முறைகளை சுதந்திரமாக பின்பற்ற வழி செய்யும், அரசியல் சட்டப்பிரிவு 25ன் படி தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தவறானது. எனவே முஸ்லிம் பெண்களுக்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும். முஸ்லிம் பெண் வாக்காளர்களை முகத்தை மூடியபடி புகைப்படம் எடுக்கவேண்டும் அல்லது ஹிஜாப் இல்லாமல் எடுக்கும் படத்தை பொது பார்வைக்கு வைக்கக் கூடாது’ என குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி தீபக்வர்மா ஆகியார் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள், ‘வாக்காளர் அட்டைக்கே இவ்வாறு வருத்தப்படுகிறீர்களே, தேர்தலில் போட்டியிட்டால் என்னவாகும் என புரியவில்லை? தேர்தலில் தொகுதி முழுக்க வேட்பாளர்களின் புகைப்படத்தை வீதி வீதியாக ஒட்டுவார்கள். அப்போது என்ன செய்வீர்கள்? வாக்காளர் பட்டியலிலோ, அடையாள அட்டையிலோ தங்கள் புகைப்படம் இருப்பது மத சம்பிரதாயத்தை மீறயது என அந்த பெண்கள் கருதினால், ஓட்டு போடலாமா வேண்டாமா என்பது குறித்து அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். அந்தளவுக்கு அவர்கள் மத உணர்வோடு இருக்கிற பட்சத்தில், ஓட்டு போட வேண்டாம்’ என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
முன்னதாக மனுதாரருக்கு எதிராக தமிழக தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான பாலாஜி ஸ்ரீநிவாசன், ‘மனுதாரர் அடிப்படையையே குழப்பப் பார்க்கிறார். புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா என எல்லா மாநிலத்திலும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அனைத்து மாநிலத்திலும் இதேபோலத் தான் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஆனால் எங்கேயும் இதுபோன்ற ஒரு பிரச்னையை யாரும் எழுப்பவில்லை. முஸ்லிம் பெண்கள் பாஸ்போர்ட் எடுக்கும் போது புகைப்படம் எடுப்பது மத உணர்வை புண்படுத்துவதாக இல்லையா’ என வாதிட்டார். ஏற்கனவே 2006ம் ஆண்டில் அஜ்மல்கான் இதே விவகாரத்துடன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி, ஜன. 23_2010- பர்தா அணிந்து புகை/ஒளிப்படம் எடுக்கும் பெண்களுக்கு வாக்காளர் அட்டை வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இசுலாமிய மதத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட பெண்கள் தங்கள் முகத்தை வெளியில் காட்டக் கூடாது என்பதற்காக பர்தா அணிகின்றனர். இதேபோல் வாக்காளர் அட்டைக்கு ஒளிப்படம் எடுக்கும் போதும் தங்கள் பர்தாவினை அகற்ற முடியாது என்றும், இது மத உணர்வு சம்பந்தப்பட்ட ஒன்று என்பதால் இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் அஜாம் கான் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி தீபக் வர்மா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:-
தங்கள் முகத்தை வெளி நபர்கள் யாரும் பார்த்து விடக் கூடாது என்ற மத நம்பிக்கையில் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தால் அவர்கள் வாக்-களிக்கவே தேவை இல்லை. வாக்களிக்கச் செல்லும் போது பர்தா அணிந்து செல்லக் கூடாது. அவ்வாறு பெண்கள் பர்தா அணிந்து சென்றால் அவர்களை அடையாளம் காண்பது வாக்குச் சாவடியில் உள்ள அதிகாரிளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். வாக்காளர்களை அடை-யாளம் காண்பதற்காகத்தான் ஒளிப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இப்படி பர்தா அணிந்து வந்தால் அவர்களை எப்படி அடையாளம் காணமுடியும்? தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது வாக்களிக்கும் உரிமையின் ஒரு நீட்டிப்பே. தன்னு-டைய முகத்தை ஒளிப்படத்தில் காட்டாம-லேயே தேர்தலில் போட்டியிட முடியும் என்று யாரும் கூறமுடியுமா? பர்தா அணிந்து எடுக்கப்பட்ட ஒளிப்படத்துடன் ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியுமா? என்று நீதிபதிகள் விசாரணையின் போது தெரிவித்தனர். இம்மனு மீதான இறுதித் தீர்ப்பு மற்-றொரு நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
File photo of Muslim women flashing their their voter ID cards before casting votes for the 14th Lok Sabha Election in Kolkata. Photo: Sushanta Patronobish {Photo courtesy: The Hindu}
பல முஸ்லிம் அமைப்புகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. “சுப்ரீம் கோர்டுடைய திர்ப்பிற்கு நான் முழுவதுமாக திருப்தியடைந்துள்ளேன். ஹஜ் செல்லும்போது பாஸ்போர்ட்டுகளில் ப்டம் இருப்பதை எதிர்க்காமல் இருக்கும்போது, இதை ஏன் எதிர்க்கவேண்டும். இதை ஒரு உணர்ச்சிப்பூர்வமன பிரச்சினையாக்கக்கூடாது“, அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட ஆணையத்தின் அங்கத்தினர் மற்றும் தில்லியின் சிறுபான்மையினர் கமிஷனின் தலைவருமான கமல் ஃப்ரூக்கி கூறியுள்ளார்.
வாக்காளர் அட்டைக்கு ஒளிப்படம் எடுக்-கும்போது பெண்கள் பர்தா அணியக் கூடாது என்று தேர்தல் ஆணை-யம் வலியுறுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் 2006ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. ஆனால் மத சம்பிரதாயங்களை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் இதுதொடர்பாக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பிரான்சு நாட்டில் பர்தா அணிவது தடை செய்யப்பட்டு உள்ளது. பொது இடத்தில் பர்தா அணிந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. இதற்கு உலக அளவில் இசுலாமிய மதத் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்-நிலையில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்மைய பின்னூட்டங்கள்