பர்கா போராட்டத்தில் வென்ற பெண்மணி
பர்கா இல்லாமல் பாடம் சொல்லித்தர வரக்கூடாது என்று தடை செய்யப்பட்ட ஷிரின் மிட்யா என்ற 24 வயதான இளம்பெண் கல்லூரி ஆசிரியர் கடைசியில் தனது போராட்டத்தில் வென்று விட்டார்[1]. அக்கல்லூரி யூனியன் பெண் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் பர்கா அணிந்து கொண்டுதான் வரவேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆணையிடப்பட்டது. இதனால் எட்டு பெண்கள் சங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆனால், ஷிரின் வெளிப்படையாக, தான் அவ்வாறு பர்கா அணிய முடியாது, ஏனெனில் அத்தகைய உடைக்கட்டுப்பாடு ஊனிவர்ஸிடி டிராண்ட் கமிஷன் சரத்துகளில் இல்லை என வாதிடினார்.
சையத் சம்ஸுல் ஆலம், அலியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் சொல்லிப்பார்த்தார். ஆனால், அடிப்படைவாதம் கொண்ட யூனியன் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், நிலைமையை மேற்கு வங்காள சொறுபான்மை நல அமைச்சர் அப்துர் சட்டார் என்பவருக்குத் தெரியப்படுத்தினர். உடனே, அவர் ஷிரீனை வகுப்புகளை எடுக்குமாறு பணிக்கப்பட்டார்[2]. இருப்பினும், என்றைக்கு இருந்து என்று இன்னும் சொல்லப்படவில்லை! யூனியனில் காரியதரிசி ஹசனூர் ஜமான் (Hasanur Zaman) என்பவர், தேவையில்லாமல், ஊடகங்களுக்கு இப்பிரட்சினையை எடுத்துச் சென்று ஏதோ ஒரு பிரச்சினை போன்று உருவாக்கிவிட்டார்[3] என்று மறுபடியும் அந்த பெண்ணையே குற்றஞ்சாட்டினார்!
[1] http://timesofindia.indiatimes.com/city/kolkata-/Teacher-Wins-Fight-Against-Burqa-Code/articleshow/6290021.cms
[2] Read more at: http://www.ndtv.com/article/cities/teacher-wins-fight-against-burqa-diktat-43435?cp
[3] http://www.indianexpress.com/news/nazis-in-a-different-garb./658211/
பர்கா இல்லாமல் வந்த கல்லுரி பெண் ஆசிரியருக்குத் தடை: கல்கத்தாவில் அமூல்!
ஷிரின் மிட்யா என்ற 24 வயதான இளம்பெண் கல்லூரி ஆசிரியர். கடந்த மூன்று மாதங்களாக கல்லூரியில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாடம் எடுக்க முடியாமல் இருக்கிறார். காரணம். அலியா பல்கலைக்கழகம் சொல்லாவிட்டாலும், அக்கல்லூரி யூனியன் சொல்வதால், பர்கா இல்லாமல் அவர் வகுப்பிற்குச் செல்லமுடியாது, பாடம் சொல்லித்தரமுடியாது.
அவர் சொல்வதாவது, “யூனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன், உடைபற்றிய கட்டுப்படு பற்றி ஒன்றும் சொல்லவில்லை. மேலும் இது பர்காவைப் பற்றியப் பிரச்சினை இல்லை. என்னுடைய சுய-விருப்பத்தைப் பொறுத்த விஷயமாகிறது”.
அண்மைய பின்னூட்டங்கள்