பன்றிக்காக வைத்த டிடோனேடரை வெடிக்க வைத்த அப்பாவி சிறுவன் அப்துல் முஜீத்!
பள்ளிக்குச் செல்லாத அப்துல் மஜீத் குப்பைத்தொட்டியிலிருந்து டிடோனேரை எடுத்தல்: திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பண்பொழி கிராமத்தில் மு.ந.அ.தெருவைச் சேர்ந்தவர் முகமது அன்சாரி மகன் அப்துல் முஜீத். முகமது அன்சாரி. அவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்[1]. அப்துல் முஜீத் (14) அவ்வூர் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று அவன் பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்துள்ளான். மாலையில் அவன் வீட்டில் இருந்த நேரத்தில் குண்டு வெடிக்கும் சத்தம் போல் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், அருகில் இருந்த பள்ளிவாசலில் இருந்தவர்கள் முஜீபின் வீட்டுக்கு ஓடிவந்து பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் பேட்டரி கட்டைகள், வயர் துண்டுகள், டெட்டனேட்டர் உள்ளிட்ட பொருட்கள் சிதறியும், அப்துல் முஜீப் ரத்த காயங்களுடனும் இருந்துள்ளான். உடனடியாக அவனை தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மற்றொரு செய்தி: இன்று மாலை, வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருக்கையில், அங்கு கிடந்த பொருளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். அதில் 2 வயர்கள் இணைக்கப்பட்டிருந்ததால், அதற்கு அவன் மின் இணைப்பு கொடுத்துள்ளான். அப்போது, அது திடீரென்று வெடித்தது[2]. இந்த சம்பவத்தில், முஜீத்தின் கை, கால் என உடலின் பல பாகங்களில் பயங்கர அடிபட்டது. இதனையடுத்து, அவன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பவம் குறித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போலீஸார் விசாரணை: மாணவன் கையில் டெட்டனேட்டர் எப்படி வந்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்தென்காசி டிஎஸ்பி பாண்டியராஜன் சம்பவ இடத்தை பார்வையிட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு, கைரேகை பிரிவு சிறப்பு படையினர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி, டிஐஜி வரதராஜு உள்ளிட்டோர் பண்பொழி வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்[3]. பள்ளி மாணவன் கையில் டெட்டனேட்டர் குச்சி கிடைத்தது எப்படி, சிறுவர்கள் கைக்கு கிடைக்கும் வண்ணம் இதனை யாரும் ரோட்டில் போட்டு சென்றார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பன்றி வெடிக்கும் அத்வானிக்கும் என்ன தொடர்பு[4]? என்ற தலைப்பில் இப்படி ஒரு இணைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது பன்றியைக் கொல்ல வாங்கும் வெடிகூட எப்படி குப்பையில் கிடைக்கிறது, அதை எப்படி சிறுவன் எடுக்கிறான், எடுத்தவன், வயர்களை இணைக்கிறான் என்றெல்லாம் தெரியவில்லை. அவ்வாறு சிறுவர்கள் அறிவில்லாமல் இருக்கும் போது, மற்றவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குப்பைத்தொட்டியில் எளிதாக கிடைக்கும் வகையில் வைத்திருக்கக் கூடாது அல்லது போட்டிருக்கக் கூடாது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை சரக டிஐஜி வரதராஜு, ரூரல் எஸ்பி விஜயேந்திர பிதாரி உட்பட காவல்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு லோக்கல் முதல் நேஷனல் வரை உள்ள அனைத்து பத்திரிக்கையாளர்களும் குவிய ஆரம்பித்தனர். அத்தனை பத்திரிக்கையாளர்களுக்கும் பேட்டி அளித்த டிஐஜி வரதராஜூ கூறும்போது, “முதற்கட்ட விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. இன்னும் சிறிது நேரத்தில் இங்கு எப்படி டெட்டனேட்டர் வந்தது தகவல் தெரிந்து விடும். இச்சம்பவத்திற்கும் மதுரையில் அத்வானி ரத யாத்திரையில் கைப்பற்றப்பட்ட பைப் வெடி குண்டு சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” என்று உறுதியாக கூறினார். சமீபத்தில் டில்லி குண்டுவெடிப்பில் சம்பந்தமாக இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்[5].
பன்றி வெடியால் அப்பாவி சிறுவன் காயம்: அப்பாவி சிறுவன் தெரியாமல் செய்திருக்கும் பட்சத்தில் முதலில் இப்படி சொல்லியிருக்க வேண்டிய அவசியமேயில்லை. “ஆனால் பரப்பரப்பு செய்திகளைக் கொடுத்து மட்டுமே பழக்கப்பட்ட நமது பத்திரிக்கையாளர்கள் இச்சம்பவத்தையும் மதுரை சம்பவத்தையும் தொடர்பு படுத்தி கதை எழுத ஆரம்பித்தனர்”, என்கிறது அந்த இனைத்தளம்[6]. மேலும், “ஆனால் அங்கு கைப்பற்றப்பட்ட டெட்டனேட்டர் குச்சி பன்றியைக் கொல்ல ஒருவர் பயன்படுத்தியது என்பது தற்போதைய விசாரணையில் தெரிய வந்து உள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது”, என்றும் கூறுகிறது[7]. பன்றியைக் கொன்றுவிட்டு அல்லது அவ்வாறு உபயோகப் படுத்திய பிறகு, ஏன் அப்படி டிடோனேடரை அஜாக்கிரதையாக விட்டுவிட்டுச் சென்றனர் என்றும் தெரியவில்லை.
எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்கள், வன்முறை, மனப்பாங்கு வளரும் விதம்: பன்றியைக் கொல்ல, கிணறு தோண்ட, பாறைகளை உடைக்க, ரோடு போட, குவாரிகளில் உபயோகப்படுத்த என பல காரியங்களுங்கு வெடிப்பொருட்கள் எளிதாகக் கிடைக்கிறது என்று தெரிகிறது. ஆகவே, அவ்வாறு வெடிப்பொருட்களை வாங்குபவர்கள் எதற்கு உபயோகிப்பார்கள் என்று தெரியவில்லை. மற்ற வகை வெடிப்பொருட்கள், ரசாயனப் பொருட்கள் எப்படி கிடைக்கின்றன என்று ஏற்கெனவே விளக்கியுள்ளேன்[8]. தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவியுள்ளதால் தான் சிறுவர்களுக்கு அத்தகைய எண்ணம் வருகிறது. கத்தியைப் பார்த்தவுடன் கழுத்தை வெட்ட வேண்டும் என்று யாருக்கும் எண்ணம் வராது. அப்படி வந்தால், அத்தகைய காட்சிகளைப் பார்த்து, மனத்தில் பதிய வைத்துக் கொண்டதாலும், மனம் அதற்கேற்றப்படி பழகிப்போனதாலும் பயமின்றி அத்தகைய மனம் உருவாகி விடுகிறது. இன்றைய திரைப்படங்களிலேயே, வெடிகுண்டுகளை வீசித் தாக்குவது போல, குண்டுகள் வெடிப்பது போன்ற வன்முறைக் காட்சிகளைக் காட்டுகிறார்கள். சிறுவர்கள் விளையாடும் கணினி விளையாட்டுகளில் பெரும்பாலாக துப்பாக்கியை வைத்து சுடுவது, வெடிகுண்டுகளை வீசித் தாக்குவது, குண்டுகள் வெடிப்பது, மனிதர்களை கண்டபடி சுட்டுக் கொல்வது………….என்றுதான் உள்ளன. அவ்வளவு ஏன் சிறுவர்களுக்கு துப்பாக்கி பொம்மைகள் அல்லது பொம்மைத் துப்பாக்கி வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு பெற்றோர்களே தயாராக உள்ளார்கள். அஹிம்சை பேசும் நாட்டில் தூக்க்குத் தண்டனைத் தேவையா என்று கேட்கும் தமிழ்நாட்டில்[9], முதலில் இத்தகைய எண்ணம் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
வேதபிரகாஷ்
05-11-2011
[2] தினமலர், நெல்லையில்குண்டுவெடிப்பு : மாணவன்காயம், நவம்பர் 03, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=342812
[6] The Hindu, Boy injured in mysterious blast, Tirunelveli, November 5, 2011
A mysterious explosion near Tenkasi on Thursday evening in which a school boy sustained injuries has triggered suspicion among the police that the explosive material might have been meant for use against senior Bharatiya Janata Party leader L.K. Advani during his Jan Chetna Yatra at Tenkasi, but discarded later.
http://www.thehindu.com/news/cities/Madurai/article2600388.ece
[8] வேதபிரகாஷ், தமிழகத்தில்வெடிகுண்டுதயரிப்பு, வெடிப்பொருட்கள்உபயோகம், வெடிகுண்டுகலாச்சாரம் (2), http://dravidianatheism2.wordpress.com/2011/10/29/bomb-blasts-in-tamilnadu-manufacture-logistics/
[9] இன்று டிவியில் “வீரவாண்டி” படம் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
அண்மைய பின்னூட்டங்கள்