Posted tagged ‘பண்பாடு’

காஷ்மீர இஸ்லாத்தின் நிஜ-உருவம் வெளிப்படுகிறது – I

மார்ச் 14, 2010

காஷ்மீர இஸ்லாத்தின் நிஜ-உருவம் வெளிப்படுகிறது – I

வேதபிரகாஷ்

“காஷ்மீர” அடை-மொழிகளில் உலா வரும் இந்திய-விரோத சித்தாந்தங்கள்: “காஷ்மீரியத்” என்ற போர்வையில், முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், ஏதோ ஒரு அமைதியான, ஒட்டுமொத்த காஷ்மீரத்தின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் முதலியவற்றைப் பேணிக் காப்பது போலவும், பாதுகாக்கத் துடிப்பது போலவும் நடித்துக் கொண்டிருக்கும் அந்தக் கொடியவர்களின் உண்மையான முகம் பலமுறை தெரிந்தாலும் மற்ற இந்தியர்கள் அவற்றைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் அல்லது, “இவையெல்லாம் எங்கோ தூரத்தில் நடக்கின்றன, ஆகையால் அவற்றை நாம் அறிந்து கொண்டு என்ன செய்ய”, என்ற நிலையிலும் இருக்கலாம்[1]. ஆனால், எப்படி அந்த முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், முதலியோரது நோக்கம் வெளிப்படுகிறது என்பதனைப் புரிந்துகொள்ள இன்னொமொரு முக்கியமான விஷயம் வெளிப்படுகிறது.

காஷ்மீரப் பெண்களும், சொத்துகளும், சொத்துரிமைகளும்: இப்பொழுதையப் பிரச்சினையே இதுதான். முன்பே எடுத்துக் காட்டியபடி, காஷ்மீர இஸ்லாம் உலக மற்றும் இந்திய வீர-சைவத்தை முழுங்கியது, அழித்தது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்[2]. அந்த குரூரமான செயல்பாடுகளில் இந்து பெண்கள் லட்சக்கணக்கில் பலவந்தமாக தங்களது பெற்றோரிடத்திலிருந்து, சகோதரர்களிடமிருந்து, கணவன்மார்களிடமிருந்து, காதலர்களிடமிருந்து, குழந்தைகளிடமிருந்துப் பிரித்திருக்கின்றது; அவர்கள் முன்பே அப்பெண்களின் கற்பு சூரையாடப்பட்டிருக்கிறது; அதனால் பல இந்து பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்; எதிர்த்தவர்கள்-பணியாதவர்கள், கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்; …………….[3]

அமர்நாத் யாத்திரிகர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலமும், அதை இஸ்லாம் எதிர்த்த நிலையும்: சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பு, அமர்நாத் யாத்திரிகர்களுக்கு அளிக்கப் பட்ட நிலத்தின் விஷயமாக முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், மிகவும் கடுமையாக, கொடுமையாக எதிர்த்தனர், கலவரம் செய்தனர். செக்யூலரிஸ-சமதர்ம-சமத்துவ பேர்வழிகள்-சிதாந்திகள் இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதிலும் பொத்திக் கொண்டிருந்தன. மற்ற நேரங்களில் ஊலையிடும் இந்த நரிக்கூட்டங்கள், நாக்குகளில் நரம்பில்லாமல், மனங்களிலே நமைத்துக் கொண்டிருந்தன. அதாவது, லட்சக் கணக்கான யாத்திரிகர்களின் வசதிக்காக செய்யப்படும் நிரந்தரமற்ற தங்குமிடங்கள், கழிப்பிடங்கள், குளியலறைகள் முதலியவற்றைக் கட்டக் கூடாது என்று அரக்கத்தனமாக தங்களது குரூரத்தைக் காட்டி முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், கருவின. அப்பொழுது கொதிப்படைந்த இந்துக்கள் முதல் முறையாக வீதிகளுக்கு வந்தனர். சாலைகளை மறித்து போராடினர். அரசாங்கம், அந்த போலி-மனித உரிமைக் கூட்டங்கள், சித்தாந்த நரிக்கூட்டங்கள் திகைத்தன. என்ன இது, இந்த காஃபிர் கூட்ட்டத்திற்கு இவ்வளவு தைரியமா என கொக்கரித்தன.

அமைதி அரக்கன் அப்துல்லா முதல் அந்தக் கொடியக் கூனி பூதனை மெஹ்பூபா முஃப்டி வரை, வேடமிட்டு நடித்தனர். அந்த குரூர முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், முதலியோரோ வேறு விதமாக பேசினர்! எதுவும் எடுபடாமல் போகவே, தங்களுக்கு மருந்துகள் கூடக் கிடைக்கவில்லை என அலற ஆரம்பித்தனர்! உடனே எழும்பிவிட்டது அந்த அருந்ததி ராய் என்ற பலத்தாரப் புரட்சி[4] வீராங்கனை!! ஆனால், வெட்கமற்ற அவள் வேசித்தன பேச்சு என்னவென்றால், அந்த முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், முதலியோருக்கு ஆதரவாகப் பேசியதுதான். அவளுக்கு அதே காஷ்மீரத்தின் இந்துக்களின் உரிமைகளைப் பற்றிக் கவலையிலை! அப்பொழுதுகூட – அதாவது லட்சக் கணக்கான யாத்திரிகர்களின் வசதிக்காக செய்யப்படும் நிரந்தரமற்ற தங்குமிடங்கள், கழிப்பிடங்கள், குளியலறைகள் முதலியவற்றைக் கட்டக் கூடாது என்று அரக்கத்தனமாக தங்களது குரூரத்தைக் காட்டி முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், கருவியது கூட அவளுக்குப் புரியவில்லை!

காஷ்மீரப் போர்வையில் இந்து பெண்களின் உரிமைகளைப் பரிக்க எடுத்து வரப்படும் மசோதா: காஷ்மீரப் பெண் ஒருத்தி அம்மாநிலத்திற்கு வெளியே யாரையாவது மணந்து கொண்டால், அவளுக்கு அம்மாநிலத்தில் சொத்துரிமை மற்றும் வேலையுரிமை பரிக்கப் படவேண்டும் என்று ஒரு தனிப்பட்ட நபர் எடுத்து வந்த சட்டமசோதாவை எதிர்த்து பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்[5]. அந்த தனி நபர் வேறு யாரும் இல்லை – அந்த கொடியக் கூனி பூதனை மெஹ்பூபா முஃப்டியின் கட்சியைச் சேர்ந்த முர்தாஜா கான் (PDP legislator Murtaza Khan, People’s Democratic Party) என்பவன் தான்! எதிர்பார்த்தபடி, அறிமுகநிலையிலேயே அந்த மசோதா எதிர்ப்பு இல்லாமல் “அறிமுகப்படுத்தப் பட்டது”! அந்தக் கட்சி, அம்மசோதா காஷ்மீர மாநிலத்தின் பெண்களின் அடையாளத்தைக் காப்பாதாக”, வினோதமாக வாதிடனர்! அதாவது, இப்பொழுதும் இந்துக்கள், இந்துப் பெண்கள் கொல்லப்படுவது, கற்பழிக்கப் படுவது, அவர்களது அடையாளங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப் படுவது, முதலியன அந்தக் குருடர்களுக்குத் தெரியவில்லை போலும்!  அக்கட்சி தொடர்ந்து வாதிட்டது என்னவென்றால், “காஷ்மீரப் பெண்கள் அவ்வாறு செய்ய ஆரம்பித்தால் அம்மாநிலத்திற்கென்று அளிக்கப் பட்டுள்ள 370 சரத்தின் மகத்துவம் குறைவது மட்டுமல்லாது, அவ்வாறு அம்மாநிலமற்ற குடிமகன்களை மணந்து கொண்டு, அம்மாநிலத்தின் குடியுரிமையை பெற்றிருந்தால், அது அச்சரத்தையே நீர்த்து விடும். ஆகையால் காஷ்மீரப் பெண்கள் காஷ்மீர ஆண்களைத் தான் மணந்து கொள்ளவேண்டும்”, என்பதுதான்! அதாவது இந்து பெண்மணிகள் கூட தமக்கு தம் சொத்துரிமை, வேலையுரிமை வேண்டுமென்றால், காஷ்மீர ஆணைத் தான் மணந்து கொள்ளவேண்டும், அதாவது இந்து கிடைக்காவிட்டால் முஸ்லீமை மணந்துகொள்ளவேண்டும். இல்லையென்றால்…………………………………….

பெண்கள் தினத்தன்று பெண்களின் உரிமைஅளைப் பரிக்கக் கள்ளத்தனமாக நுழைக்கப்பட்ட மசோதா: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராமன் பல்லா என்ற நிதியமைச்சர் கூறியதாவத்கு, “பெண்கள் மசோதாவைப் பற்றி நாங்கள் எங்களது நிலையை ஏற்கெனவவ தெரியப்படுத்திவிட்டோம். ராஜ்ய சபாவில் அது நிறைவேறியது அறிந்ததே”, என்று பொதுவாகப் பேசி தப்பித்துக் கொள்ள பார்த்தது நன்றகவே தெரிந்தது. மேலவையில் அம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதால், கீழவையில் அதைப் பற்றி விவாதிக்கமுடியவில்லை என்று நிஜாமுத்தீன் பட்[6] என்ற PDP ஆள் எடுத்துக் காட்டியது வேடிக்கைதான்! ஆகவே ஹர்ஷ தேவ் சிங் என்ற உறுப்பினர், அந்த கள்ளத்தனத்தை எடுத்துக் காடியதும்[7], எல்லொரும் மௌனிகளாகி விட்டனர்!

NOT IN TUNE: Bill will end permanent resident status of  women who marry outside the state.

தோற்றுப்போன மசோதாவையே மறுபடியும் எடுத்து வரும் மர்மம், கள்ளத்தனம், நரித்தனம்: இதே மசோதா 2004ல் “எதிரிகள் என்று நடித்து வரும்” அந்த இரண்டு நரிக்கூட்டங்களும் (arch rivals National Conference and the PDP)  சேர்ந்து கொண்டு அறிமுகப்படுத்தியது[8]. ஆனால் பிறகு, அம்மசோதாவின் உள்-நோக்கத்தை எடுத்துக் காட்டியதும் சட்ட சபையில் தோல்வியடந்தது.    மறுபடியும் அத்தகைய தோல்வியடைந்த மசோதாவை அப்துல்லா கோஷ்டியினர் ஆதரிப்பார்கள் என்ற நோக்கில் நுழைத்துள்ளனர். ஜம்மு வழக்கறிஞர் சங்கம் / Jammu Bar Association எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்ல, எப்படி ஒரு 2002 நீதிமன்ற தீர்ப்பு அத்தகைய பாரபட்சத்தன்மைய எடுத்துக் காட்டி, பெண்ணின் குடியுரிமையை காக்க அளித்துள்ளது என்பதனையும் எடுத்துக் காட்டப்பட்டது. ஆகவே, இம்மசோதா அந்த நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானதும், முரண்பாடானதும் ஆகும். ஒரு பெண் தன் குடியுரிமை இழக்கிறாள் என்றால் அவள் ஓட்டுரிமை மற்ற எல்ல உரிமைகளையும் இழக்கிறாள் என்பதாகிறது! அதாவது, ஜம்மு-காஷ்மீர் “தனிநாடு” போல ஆகிறது! இங்கும்தான் வெளிப்படுகிறது, அவர்களின் நரித்தனம்!

சரீயத்தை மறைமுகமாக எடுத்து வரச் செய்யும் சதிதான் இது: சமன்லால் குப்தா என்ற பிஜேபி உறுப்பினர், “இது பெண்களுக்கு எதிரானது. காஷ்மீரப் பெண் ஒருத்தி அம்மாநிலத்திற்கு வெளியே யாரையாவது மணந்து கொண்டால், அவளுக்கு அம்மாநிலத்தில் சொத்துரிமை மற்றும் வேலையுரிமை பரிக்கப் படவேண்டும் என்பது ஒவ்வொரு காஷ்மீரப் பெண்ணின் பெண்மகளின் மூதாதையரது நிலம்,சொத்து, வேலை முதலிவற்றின் மீதான அவர்களது பாரம்பர உரிமைகளை மறுக்கும் விதமாக உள்ளது”, என்று எடுத்துக் காட்டினார். அரசியல்வாதிகள் என்னபேசினாலும், முஸ்லீம்கள் “இந்தியர்கள்” என்ற நிலையில் பேசுவதில்லை என்பது எல்லொருக்கும் தெரியும், அதுவும் இந்துக்கள் என்று சொல்லிவிட்டால் தேவையே இல்லை, உடனே உலகமே அவர்களுக்கு எதிராகத் திரண்டு விடும். ஆகவே இந்நிலையில் நிச்சயமாக அந்த குரூர முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், சரீயத்தை மறைமுகமாக எடுத்து வரச் செய்யும் சதிதான் இது என வெளிப்படையாகவே தெரிகின்றது!

பார்ப்போம், என்ன நடக்கும் என்று!

வேதபிரகாஷ்

14-03-2010


[1] ஆனால் கருணாநிதியே அவ்வாறு இல்லை, தனது பாராட்டுவிழாவில், பிரிவினையைப் பற்றி பேசும்போது, அவரது கள்ளத்தனமும் வெளிப்படுகிறது என்பதை இங்கு நினைவு கூர வேண்டும்,. அதாவது, இந்தியாவை எதிர்த்து க் செயல்படும்போது, நாங்கள் எப்படி அந்நியோன்னமாக கூடி வேலை செய்கிறோம் என்று அவரே சொல்லிய்ருப்பதையும் நினை கூரவேண்டும்!

[2] காஷ்மீர சைவம் மட்டுமல்ல, அங்கிருந்த கோவில்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக அழித்தது தான் இஸ்லாம் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இவர்கள்தாம் எதோ கலைக்காவலர்கள் என்றெல்லாம் வேடமிட்டுக் கொண்டு அலைகிறர்கள், திரிகிறார்கள். அவர்களுக்கு உலகளவில் பட்டங்கள் கொடுக்கப் பட்டு அவர்களது குரூர முகங்களை அழகு படுத்துகிறார்கள்!

[3] இதைப் பற்றி படித்தவன், பண்பாளன், நீதிமான், நியாயவான், தர்மவான், கனவான்…………..என்றெல்லாம் கூறித்திரியும் கூட்டங்களும் எழுதில்லை, பேசுவதில்லை, மூச்சுக் கூட விடுவதில்லை!

[4] இது ஏதோ அவளைப் பற்றிய தனிமனித விமர்சனம் அல்ல, இன்றளவில் அவள் இந்திய நாட்டிற்கு எதிராக மாவோயிஸ்டுக்களுக்குப் பேச உரிமையளிக்கப் பட்டுள்ள “இந்திய-பிரஜ உரிமைக் கொண்ட பெண்” தான் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுவும், முகத்தில் பொட்டுக் கூட வைத்துக் கொண்டு, இல்லை சமயத்தில் சேலைக் கட்டிக்கொண்டு “இந்து வேடம்” போடும் பெண்-ஏமாற்று-வர்க்கத்தில் ஒரு ஜீவன்!

[5] டைம்ஸ் ஆஃப் இந்தியா, Row over bill denying rights to women marrying outside J&K, TIMES NEWS NETWORK & AGENCIES, Mar 14, 2010, 03.56am IST, மேலும் விவரங்களுக்கு,

http://timesofindia.indiatimes.com/india/Row-over-bill-denying-rights-to-women-marrying-outside-JK/articleshow/5681323.cms

[6] வெட்கங்கெட்ட இந்த மதமாறிகளுக்கு இன்னும் இந்த அடையாளங்கள் – பட், சௌத்ரி, படேல், நாயக்………………..தேவைப் படுகின்றன. ஆனால் மற்ற நேரங்களில் ஏதோ இஸ்லாத்தையே பேத்து-எடுத்து வந்தவர்கள் மாதிரி பேசுவார்கள், நடிப்பார்கள்! அந்த “ஜஹிர் நாயக்” கூட இதைச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்கிறான்!

[7] http://beta.thehindu.com/news/states/other-states/article244309.ece

http://beta.thehindu.com/news/states/article244131.ece

http://www.ndtv.com/news/india/protest-in-jk-over-anti-women-bill-17646.php

http://ibnlive.in.com/news/jk-bill-discriminates-against-women/111426-37.html

[8] Pawan Bali / CNN-IBN, J-K bill discriminates against women, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:

http://ibnlive.in.com/news/jk-bill-discriminates-against-women/111426-37.html