திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (3)
முஸ்லிம் அமைப்புகள், கம்யூனிஸ்டுகள் அரசியல் செய்தது (2013): ஹைதர் அலி – திப்பு சுல்தான் இந்திய விடுதலை போராட்த்தில் கலந்து கொண்டார்கள் என்பதைவிட, தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள ஆங்கிலேயர்களை எதிர்த்தான் என்பதுதான் சரித்திர உண்மை. முன்பு திப்பு சுல்தான் சீரியல் வந்தபோது, இம்மாதிரியான பிரச்சினை மூலம் அவர்களின் இந்துவிரோத காரியங்கள் பேசப்பட்டபோது, முஸ்லிம்கள் சங்கடத்திற்குள்ளானார்கள். நீதிமன்றத்திற்கு பிரச்சினை சென்றபோது, தயாரிப்பாளர்-நடிகர் சஞ்சய் கானுக்கு சரித்திர உண்மைகள் மறைக்காமல் சொல்லப்பட வேண்டும் என்று ஆணையிட்டது. “தி ஸ்வார்ட் ஆப் திப்பு சுல்தான்” (The Sowrd of Tipu Sultan) எழுதியவர் – பகவான் கித்வாய், “தி ரெடார்ன் ஆப் தி ஆரியன்ஸ்” (The Return of the Aryans) என்று எழுதி தாஜா செய்ய முனைந்தார். கர்நாடகத்தின் சாராய மன்னன் திப்பு சுல்தானின் கத்தியை வாங்கி தனது செக்யூலரிஸத்தைக் காட்டிக் கொண்டார். மதன் எழுதிய “வந்தார்கள்…..வென்றார்கள்!” என்ற புத்தகம் ஜாலிக்கு-பொழுதுபோக்கிற்கு மதன் எழுதினாலும், முஸ்லிம்கள் பயப்படத்தான் செய்தனர்[1]. என்ன இந்த ஆள் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறான், என்று அவர்களால் மதன் தொந்தரவுப்பட்டதும் உண்டு[2]. ஐ. எம். முத்தண்ணா[3] என்பவர் “திப்பு சுல்தான் எக்ஸ்-ரேட்” (Tipu Sultan X-rayed) தனது புத்தகத்தில் திப்புவின் கொடுங்கோல குரூரங்களை ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளார். இப்புத்தகம் இன்று வரை மறுக்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. இப்பொழுது கூட எப்படி ஒரு கொடுமைக்காரனிடமிருந்து, ஒரு புலி உருவாக்கப்பட்டது என்று சரித்திர ஆதாரங்களுடன் திப்புவைப் பற்றி வெளியிடுகிறார்கள்[4]. இவ்வாறு எழுதியுள்ளவர் இந்து-ஆதரவாளர் அல்ல என்ரு குறிப்பிடத்தக்கது.
“சுதந்திய யுத்தமே” இல்லை என்று மார்க்சிஸ்ட் சரித்திராசிரியர்கள் விளக்கம் கொடுக்கும் பொது, திப்பு எப்படி சுதந்திர போராளி ஆவான்?: செக்யூலரிஸ இந்தியா சுதந்திர போராட்டத்தையே கொச்சைப்படுத்தி, அது “சுதந்திய யுத்தமே” இல்லை என்று கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து கொண்டு கருத்தரங்கங்கள் நடத்தி புத்தகங்களை வெளியிட்டது. காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டத்தார் “1857 முதல் சுதந்திர யுத்த”த்தையே கொச்சைப் படுத்திப் பேசினர், பிரச்சாரம் செய்தனர். அதாவது, அது வெறும் ஒரு கிளர்ச்சி, சாதாரணமான அங்கங்கு ஏற்பட்ட மக்கள் எழுச்சி, என்று தான் இன்றும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், அவர்கள் இன்று முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டு “ஹைதர்-திப்பு”களுக்கு மணிமண்டபம் கேட்கிறார்கள் என்றால் அத்தகைய இரட்டைவேடதாரிகளை, தேசவிரோதிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். கர்நாடகத்தில் இப்படித்தான், திப்பு சுல்தான் பல்கலைக்கழகம் வேண்டும் என்று ஆரம்பித்தபோது, அம்மாநிலத்தார், திப்புவின் குரூர முகத்தை கிழித்துக் காட்டினர். அலறிவிட்டனர் மக்கள். ஆகவே, அரசியல், மதம், ஓட்டுவங்கி போன்ற காரியங்களுக்காக இப்படி ஏதாவது வாக்குறுதிகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தால், அரசாங்கப் பணம் தான் விரயம் ஆகும். சமீபத்தைய சரித்திர நிகழ்வுகளை மாற்றியமைக்க முயன்றால், இருக்கும் ஆதாரங்களே வெளிகாட்டிவிடும். அப்பொழுது, நிலைமை இன்னும் அதிகமாக பாதிப்பில் முடியும்[5].
1990ல் பகவான் எஸ். கித்வானி என்பவரின் நாவலை ஆதாரமாகக் கொண்டு, “திப்பு சுல்தானின் கத்தி” என்ற டிவி-தொடர் தூர்தர்ஷணில் ஒலி-ஒளிபரப்ப ஆரம்பிக்கப்பட்டது. அதில் திப்பு சுல்தானின் கூரூரங்களை, கொடுமைகளை, கொலைகளை மறைத்து, ஏதோ மிகவும் நல்லவன் மாதிரி காட்டப்பட்டது. இதனால், இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குப் போடப்பட்டது. சரித்திர ஆதாரம் இல்லாதலால், கீழ் கண்ட வாசங்களை ஒவ்வொரு காட்சியின் முதலும் காண்பிக்கப்படவேண்டும் என்று உத்தரவிட்டது[6].
“No claim is made for the accuracy or authenticity of any episode being depicted in the serial. This serial is a fiction and has nothing to do either with the life or rule of Tipu Sultan. The serial is a dramatised presentation of Bhagwan Gidwani’s novel.” | இந்த டிவி தொடரில் காண்பிக்கப்படும் நிகழ்ச்சிக்கு எந்த உண்மையோ, ஆதாரமோ இருக்கிறது என்று கோரவில்லை. இது ஒரு கற்பனைக் கதையே அன்று, இது உண்மையான திப்புவின் வாழ்க்கை அல்லது ஆட்சியுடன் சம்பந்தமில்லாதது. இந்த தொடர் பகவான் கித்வானியின் நாவலை ஆதாரமாகக் கொண்டு நாடகம் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. |
பிப்ரவரி 8 1990 அன்று இந்த டிவி-சீரியல் எடுக்கப்பட்ட ஸ்டுடியோவில் பெருத்த தீவிபத்து ஏற்பட்டதில் 62 பேர் கருகி இறந்தனர். இந்த சீரியலின் நடிகர்-தயாரிப்பாளர் சஞ்சய் கானுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டு 13 மாதங்கள் ஆஸ்பத்திரியில் இருந்து, 72 ஆபரேஷன்களை செய்து கொண்டு வெளிவந்தார். உயிரிழந்தவர்கள், விளம்பர நிறுவங்கள் நஷ்டம் கேட்டு வழக்குத் தொடர்ந்தார்கள்[7]. திப்பு சுல்தானைப் பற்றிய வழக்குகள், பழமொழிகள் போன்றவையெல்லாம், அவனைக் கடுமையாக விமர்சிப்பதாகத்தான் இருந்துள்ளது. அவன் முகத்தைப் பார்க்கக் கூடாது, பார்த்தால் விளங்காது; எல்லாம் அழிந்து விடும் – நாசமாகி விடும்; குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு போகிறவன் – கொல்கிறவன்; “திப்பு வருகிறான், என்று சொன்னால் அழுகின்ற குழந்தை அழுகையை நிறுத்தி விடும்” என்றெல்லாம் வழங்கி வர்கின்றன. அத்தீ விபத்து நடந்த போதும், இது எடுத்துக் காட்டப்பட்டது.
கர்நாடகாவைப் பொறுத்த வரையில், ஜனதா கட்சிகள் திப்புவை அரசியலாக்கி ஆதாயம் தேடியுள்ளன. சாராய மன்னன் மல்லையா 2004ல் தனது ஜனதா கட்சியின் சார்பாக பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். ராஜ்ய சபா எம்.பியான அவர், அரசியல் செல்வாக்கை உயர்த்தி கொள்ள, ரூ.1.5 கோடிகள் கொடுத்து, “திப்பு சுல்தானின் கத்தி” என்று லண்டனிலிருந்து ஏலத்தில் வாங்கி வந்தார். இதுவும், கர்நாடக தேர்தலை ஒட்டிதான் நடத்தப் பட்ட நாடகம் ஆகும்[8].
திப்பு ஜெயந்தி எப்படி கொண்டாடப்பட்டது?: அரசு சார்பில் இவ்விழா கொண்டாடப்படுவதால், அரசின் பணம் உபயோகப்படுத்தப் படுகிறது. அதாவது, பெருபான்மையினரான இந்துக்கள் கொடுக்கும் வரிப்பணத்தை வைத்துக் கொண்டே, இவ்விழா எடுத்து, இந்துக்களை கொன்ற, கொடுமைப்படுத்திய திப்புவுக்கு ஜெயந்தி கொண்டாடுவதால் தான் அங்குள்ள மக்கள் எதிர்க்கிறார்கள். மேலும், முஸ்லிம் கோணத்தில் பார்த்தாலும், காபிர்களிடமிருந்து வரும் பணத்தை வைத்துக் கொண்டு, இத்தகைய விழாக்கள் கொண்டாடப்படலாமா என்ற கேள்வியையும் எழுப்பலாம். இவ்விழாவில் திப்புவின் படம் வைக்கப்பட்டு, பூமாலை போடப்பட்டிருந்தது. பிறகு அனைவரும், அப்படத்திற்கு பூதூவி மரியாதை செய்தனர். முஸ்லிம்களும் அவ்வாறே செய்தனர். கைக்கூப்பி வணங்கவும் செய்தனர். இப்பொழுதெல்லாம், முஸ்லிம்கள் படங்களை வைத்துக் கொள்ள மாட்டார்கள், உருவங்களுக்கு மரியாதை செய்ய மாட்டார்கள், பூதூவி பூஜைப் போன்றெல்லாம் செய்ய மாட்டார்கள், வணங்க மாட்டார்கள், என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்கள். பிறகு எப்படி, இந்த திப்பு ஜெயந்தி இவ்விதமாக நடந்தது? எப்படி ஆசாரமுள்ள முஸ்லிம்கள் ஒப்புக்கொண்டார்கள்? இவற்றையெல்லாம் “ஷிர்க்” என்றோ “ஹராம்” என்றோ கூறி தடுக்கவில்லையே? தொலைக் காட்சிகளில் காட்டப்பட்ட போது கூடல் கொதிக்கவில்லையே? அப்படியென்றால், சாமர்த்தியமாக ஏதோ ஒரு காரணத்திற்காக அல்லாவின் எச்சரிக்கைகளையும் மீறி அத்தகைய தகாத காரியங்களை அனுமதிக்கிறார்கள். சித்தராமையாவும், சந்தோஷமாகக் கொண்டாட தீர்மானித்து, முடித்து வைத்து விட்டார். இந்துக்களுக்கு வேண்டிய தீபாவளி நாளில் கொண்டாடி, ஒரு இந்துவயும் சாகடிக்க வைத்து விட்டார்.
© வேதபிரகாஷ்
11-11-2015
[1] மதன், வந்தார்கள்………..வென்றார்கள்!, ஆனந்த விகடன் வெளியீடு, சென்னை,, 1994. “50,000 பிரதிகளைத் தாண்டி விற்பனையில் ஒரு சாதனை!” என்று அட்டையில் பெருமையாக அறிவித்துக் கொண்டது!
[2] அணிந்துரை அளித்த சுஜாதா, எப்படி மிரட்டல் கடிதங்கள் வந்தன என்று எடுத்துக் காட்டியுள்ளார். 21-12-1993 தேதியிட்ட கடிதம்.
[3] I. M. Muthanna, Tipu Sultan X-rayed, Usha Press, Mysore,1980.
[4] http://www.ibnlive.com/blogs/india/d-p-satish/tipu-sultan-making-a-tiger-out-of-a-tyrant-11027-1162986.html
[5] https://secularsim.wordpress.com/2013/06/24/why-conflicting-views-come-about-hyder-ali-and-tipu-sultan/
[6] A. G. Noorani. “Menace to free speech”. Online edition of The Frontline, volume 22, issue 26, December 17–30, 2005. Retrieved 2007-08-17.
[7] http://indiatoday.intoday.in/story/the-sword-of-tipu-sultan-fire-sanjay-khan-faces-legal-action-for-negligence/1/323237.html
[8] The timing of Mr. Mallya’s announcement of his acquisition made some six months ago has not gone unnoticed, coming as it does a fortnight before the first phase of polling in Karnataka. However, the working president of the Janata Party said: “This is not political. It’s personal.” Mr. Mallya’s party has fielded candidates in more than a hundred Assembly constituencies and half-a-dozen Lok Sabha constituencies in the coming elections in Karnataka. He described the sword as a unique piece of history and said that he bought it as a `proud Kannadiga’ in order to restore the `rightful legacy’ to Karnataka.
http://www.thehindu.com/2004/04/08/stories/2004040805881200.htm
அண்மைய பின்னூட்டங்கள்