Posted tagged ‘பசுவதை’

ஆயிஷா அன்ட்ரப் – பசுமாடு அறுத்த வீராங்கனை, காஷ்மீர பெண் ஜிஹாதி, ஆயுத போராளி, ஐசிஸ் ஏஜென்டா? (1)

திசெம்பர் 31, 2015

ஆயிஷா அன்ட்ரப் பசுமாடு அறுத்த வீராங்கனை, காஷ்மீர பெண் ஜிஹாதி, ஆயுத போராளி, ஐசிஸ் ஏஜென்டா? (1)

ஆயிஸா அன்ட்ரபி கத்திகளுடன்

காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதுதான் ஒரே வழி: துக்தரன்-இ-மில்லத் [(Dukhtaran-e-Millat (DeM), உம்மாவின் மகள்கள்] என்ற தீவிரவாத இயக்கத்தின் தளபதி-தலைவி ஆஷியா அன்ட்ரபி (Asiya Andrabi, வயது 53) 2010களில் “கல்லடி கலாட்டா” என்ற யுக்தியைக் கையாண்டு, பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்களை தெருக்களில் வந்து, பாதுகாப்புப் படை, ராணுவம் மற்றும் போலீஸ் மீது கற்களை எறியும் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தாள். கடந்த ஆகஸ்ட் 14, 2014 அன்று பாகிஸ்தான் கொடியேற்றி, பாகிஸ்தான் விடுதலை தினத்தைக் கொண்டாடினாள். இதே போல மார்ச்.23, 2014 அன்றும் செய்துள்ளாள். செப்டம்பர் 2014ல் கைது செய்யப்பட்டாள்[1]. உடன் பெஹ்மிதா சூபி [Fehmida Soofi] என்ற இன்னொரு பிரிவினைவாதக்குழுத் தலைவியும் இருந்தாள். இதனால், இவள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது[2]. உடனே, தொலைபேசியில், மும்பை குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தேடப்பட்டுவரும், தீவிரவாதியான  ஹாவிஸ் சையதுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளாள். சையது ஜிலானியின் மாணவி, பிரிவினைவாதத்தில் ஈர்க்கப்பட்டு, ஜிலானி வழியில் செயல்பட்டும் அடிப்படைவாத போராளி. மனித உரிமைகள் பெயரில், அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத ஜிஹாதிகளின் குரூரக் கொலைகள், கற்பழிப்புகள் முதலியவற்றை மறைத்து, அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத ஜிஹாதிகளின் உரிமைகள் பற்றி பேசிவரும் திறமைசாலி. இதனால், சிறைக்குள் செல்வது, வெளியே வருவது என்பது வாடிக்கையாகி விட்டது. காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதுதான் ஒரே வழி என்று போதிக்கும் இவள் பிரிவினைவாதப் போர்வையில், ஜிஹாத் தத்துவத்தை பெண்களுக்கு போதித்து வருகிறாள்.

காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும்

ஜிஹாதி குடும்பத்தில் பிறந்து, ஜிஹாதியாக செயல்பட்டுவரும் ஜிஹாதிபெண்: ஆயிஷா அன்ட்ரபி 1962ல் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது[3]. 1990ல் ஆஷிக் ஹுஸைன் என்ற பயங்கரவாதியை நிக்காஹ் செய்து கொண்டாள், அவனும் பயங்கரவாத செயல்களுக்காக கடந்த 23 ஆண்டுகளாக 1992லிருந்து சிறையில் இருக்கிறான். ஹிஜ்புல் முஜாஹித்தீன் என்ற தீவிரவாத இயக்கத்தைத் துவக்கியவர்களுள் ஒருவன். மொஹம்மது பின் காசிம் (23) மற்றும் அஹமது பின் காசிம் (15) என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இவளுடைய மற்ற உறவினர்கள் பாகிஸ்தான், சௌதி அரேபியா, இங்கிலாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று விட்டனர். 1990ல் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகி, பிறகு 2004-2007 காலத்தில் தலைமறைவாக வாழ்ந்தாள். சர்வகட்சி ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் [All Parties Hurriyat Conference] கிளையாக துக்தரன்-இ-மில்லத் செயல்பட்டு வருகிறது. இவளின் மூன்று மைத்துனர்கள், தீவிரவாத தொடர்புகளுக்காக, பாகிஸ்தானில் செப்டம்பர் 2013ல் கைது செய்யப்பட்டனர். 2010ம் வருடம் மஸ்ரத் ஆலத்துடன் “கல்லடி கலாட்டாவில்” இறங்கியவள். இளைஞர்கள் மற்றவர்களைத் தூண்டிவிட்டு நடத்திய இந்த கல்லடி கலாட்டாக்களில் சுமார் நூறு பேர் இறந்ததாக தெரிகிறது. வெளிப்டையாக ஜிஹாதித்துவத்தை போதித்து இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்றி வருகிறாள் என்று காஷ்மீர மிதவாதிகளே குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆயிஸா அன்ட்ரபி பசுவைக் கொன்று எதிர்ப்பைத் தெரிவித்தாள்.1

கல்லெறி கலாட்டா ஜிஹாதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டது (ஆகஸ்ட்.2011)[4]: காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்கியதுடன், பொது சொத்துக்களுக்கு தீ வைத்தும் கொழுத்தினார்கள். கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு அங்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது பாலஸ்தினத்தில் பயன்படுத்தப் படும் முறை என்பதனையும் அறியப்பட்டது. கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதிலும் ஊடகக்காரர்கள் காயப்பட்டனர். ஆனால், இதைப் பற்றி அவர்கள் ஒன்றும் ஆர்பாட்டம் செய்யவில்லை. இந்நிலையில் காஷ்மீர் அரசு இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. கலவரத்தின் போது தீ வைப்பு போன்ற சட்ட விரோத செயலில் சம்பந்தப்படாமல் கல்வீச்சில் மட்டும் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டது[5]. இது தொடர்பாக காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா கூறுகையில், வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது[6]. பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைத்தவர்களை தவிர மற்றவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என கூறினார்[7].

ஆயிஸா அன்ட்ரபி பசுவைக் கொன்று எதிர்ப்பைத் தெரிவித்தாள்.2

பசுமாட்டை அறுத்து எதிர்ப்புத் தெரிவித்த பயங்கரவாதி[8]: ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்ட பசு-மாமிச விற்பனை தடையை எதிர்த்து செப்டம்பர் 2015ல் ஒரு பசுவைக் கொன்று, அந்த கொலைக்காட்சி விடியோவை வெளியிட்ட[9] ஆயிஷா அன்ட்ரபியை என்னென்பது? அவளைக் கொடூரக்காரி எனலாமா அல்லது ஜிஹாதி என்று பாராட்டலாமா? பெண்களுடன் நின்று கொண்டிருக்கிறாள். ஒரு பசுமாட்டை இழுத்து வந்து, அவள் முன்னால் அறுக்கிறார்கள். அந்நேரத்தில் “தாரே தக்பீர், அல்லாவு அக்பர்” என்று கத்துகிறாள். வெறியோடு கத்தும் அவளது குரல் வீடியோவில் தெளிவாகக் கேட்கிறது. இதில் திகிலூட்டுவது என்னவென்றால், குழந்தை ஏந்திய ஒரு பெண் முன்வரிசையில் நின்று கொண்டு அவ்வாறு கத்துகிறாள். இப்படி பயங்கரமான செயல்களை சிறுவயதிலிருந்தே பார்த்து, கடினமாகி, இருகிவிட்ட இம்மனங்களுக்கு ஜீவகாருண்யம் என்பதெல்லாம் எப்படி புரியும்? பெண்கள் மென்மையானவர்கள் என்றெல்லாம் இங்கு செல்லுபடியாகாது. பெண் என்றால், பேயும் இரங்கும் என்றேல்லாம் சொல்லமுடியாது, ஏனெனில், பேயே இவளைக் கண்டால், பயப்படும். மற்ற பெண்களின் துன்பத்தை கண்டுகொள்ளாமல் மரத்துப் போன, வெறிபிடித்த ஜிஹாதி, முஸ்லிம் பெண்களுக்காக பாடுபடுகிறாள் என்று வேறு சொல்லிக் கொள்கிறாள். இந்நிகழ்ச்சி வெளிப்படையாக ஊடகங்களில் வரவில்லை. மறைக்கப்பட்டது எனலாம். “பீப்” விசயத்தில் அத்தனை கலாட்டா, ஆர்பாட்டம் செய்த ஊடகங்களை இதனை ஏன் மறைக்க வேண்டும்? இது சகிப்புத்தன்மையா என்று யாரும் கேட்கவில்லை.

ஆயிஸா அன்ட்ரபி பசுவைக் கொன்று எதிர்ப்பைத் தெரிவித்தாள்.3

ஆயிஷா அன்ட்ரபி ஐசிஸ்க்கு ஆள்பிடிக்கும் போராளியா?: இப்பொழுது டிசம்பர் 2015ல் ஹைதரபாதிலிருந்து மூன்று இளைஞர்கள் அன்ட்ரபியை சந்தித்து ஐசிஸ்ஸில் சேர செல்வதாக மத்தியாரசு புலனாய்வுத் துறைக்குத் தெரிய வந்தது[10].

  1. மொஹம்மது அப்துல்லா பசித் [Mohd Abdulla Basith],
  2. சையது ஒமர் பரூக் ஹுஸைனி [Syed Omer Farooq Hussaini]
  3. மாஜ் ஹஸன் பரூக் [ Maaz Hasan Farooq]

இவர்கள் எல்லோருமே 20-22 வயதினர், உறவினர்கள் ஆவர். இவர்கள் எல்லோருமே, அன்ட்ரபியை சந்தித்து, பாகிஸ்தான் வழியாக ஐசிஸ் சேர செல்வதாக இருந்தது. கடந்த வாரம் மஹாராஷ்ட்ரா ஏ.டி.ஸ்.பிரிவு போலீஸாரால், நாக்பூர் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது அவ்விவரம் தெரியவந்தது. அவர்கள் அன்ட்ரபியை சந்திக்க விரும்பியதாகத் தெரிவித்தனர்[11]. இவர்களது மாமா சையது சலாவுத்தீன், தடை செய்யப்பட்ட சிமியின் தலைவர் ஆவார். இவர்கள் ஐசிஸ், தாலிபான், அல்-குவைதா அல்லது ஹிஜ்புல் முஜாஹித்தீன் போன்ற தீவிரவாத இயக்கத்துடன் சேருவதாக திட்டமிட்டிருந்தனர்[12]. ஆனால், அன்ட்ரபி அவர்கள் தன்னை சந்திக்கவில்லை என்றும், அவர்கள் யார் என்பதும் தனக்குத் தெரியாது என்றும், அவர்கள் வேண்டுமென்றே தன் பெயரை இழுத்து விட்டனர் என்றும் கூறியுள்ளாள்[13]. சட்டத்தை வளைப்பதற்கு இவ்வாறு பேசுவது, பலமுறை சிறைச் சென்று விடுவிக்கப்பட்ட இவளுக்கு கைவந்த கலை என்பதால், ஒன்றும் வியப்பில்லை. விடுவிக்கப்பட்ட பிரிவினைவாதியான மஸரத் ஆலமும் [Masarat Alam] மறுபடியும் கைது செய்யப்பட்டான்.

ஆயிஸா அன்ட்ரபி பசுவைக் கொன்று எதிர்ப்பைத் தெரிவித்தாள்.4 - கைக்குழந்தயுடன்

© வேதபிரகாஷ்

31-12-2015

[1] The youngest child of prominent Srinagar doctor Sayeed Shahabuddin Andrabi, 1962-born Ms. Andrabi had completed a degree in biochemistry, and hoped to study further in Dalhousie. http://www.geo.tv/article-197860-Asiya-Andrabi-arrested-four-Kashmiris-killed-in-Indian-army-firing-

[2] The DeM chief celebrated Pakistan’s Independence Day on August 14 at her residence by singing that country’s national anthem and unfurling the flag of the neighbouring country on the outskirts of the city. Hours after that, Andrabi had stoked another controversy by addressing via phone a rally in Pakistan which was organized by Mumbai attack mastermind Hafiz Saeed-led Jamat-ud Dawa (JuD).

Saeed was sitting on the stage during Andrabi’s address. Andrabi had earlier also celebrated Pakistan’s National Day on March 23 this year and hoisted the flag of the country and sung its national anthem, following which the police registered a case against her under the Unlawful Activities Prevention Act.

http://articles.economictimes.indiatimes.com/2015-09-18/news/66677405_1_dem-chief-pakistani-flag-saeed

[3] http://www.thehindu.com/news/national/inside-kashmirs-new-islamist-movement/article580687.ece?ref=relatedNews

[4] மாலைமலர், கல் எறிந்தவர்களுக்கு பொது மன்னிப்பு: காஷ்மீர் அரசு அறிவிப்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 28, 3:04 PM IST.

[5] http://www.maalaimalar.com/2011/08/28150458/Amnesty-for-throwing-stones-Ka.html

[6] தினமலர், கல் எறிந்தவர்களுக்கு மன்னிப்பு வழங்க காஷ்மீர் மாநில அரசு முடிவு, ஆகஸ்ட்.28, 2011, 17:14.

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=302950

[8] https://www.youtube.com/watch?v=UVwF71dJWMQ

[9] Ms. Andrabi, who slaughtered a cow after a court ordered banning the same, faces a number of FIRs in the Valley. She released a 1:15-minute video on September 10 wherein she slaughtered a cow to defy the beef ban.

http://www.thehindu.com/news/national/separatist-andrabi-arrested-for-antinational-activities/article7664426.ece

[10] The central government has ordered an investigation by a high-level body after three boys, Mohd Abdulla Basith, Syed Omer Farooq Hussaini and Maaz Hasan Farooq (all aged around 20-22) from Hyderabad claimed they were on their way to Srinagar to meet Andrabi.

http://www.hindustantimes.com/punjab/dukhtaran-e-millat-chief-asiya-andrabi-denies-isis-links/story-uSQaI3tGwRuMcn9g6Q00tL.html

[11] Whether Kashmiri separatist leader Asiya Andrabi visited Telangana has yet to be determined, said the local police today amid reports that three young men arrested for wanting to join jihadi groups in Pakistan have confessed that they wanted to meet the 53-year-old.

http://www.ndtv.com/top-stories/isis-controversy-links-3-hyderabadi-cousins-to-separatist-asiya-andrabi-1260743

[12] During the interrogation, the arrested men reportedly confessed that they were trying to join any of the jihadist groups — ISIS, Al Qaeda or Hizbul Mujahideen. The police say their uncle was Sayed Salahuddin, the former chief of the banned Students Islamic Movement of India or SIMI.

http://www.ndtv.com/top-stories/isis-controversy-links-3-hyderabadi-cousins-to-separatist-asiya-andrabi-1260743

[13] “I came to know about the story through the media. Even the ATS (Anti-Terrorism Squad) Hyderabad was quoted saying that they [the boys] wanted to meet me. I think the arrested boys know better why they named me. It seems my name has been deliberately dragged in,” said Ms. Andrabi.

http://www.thehindu.com/news/national/other-states/never-met-hyderabad-youths-andrabi/article8046023.ece

தலைக்கு பத்வா போட்ட மதவெறி பிடித்த தௌகீர் ரஸா கான் “இந்து-முஸ்லிம்” ஒற்றுமை, பசுவதை முதலியவற்றை ஆதரித்து போராடப் போகிறாராம்!

நவம்பர் 11, 2013

தலைக்கு பத்வா போட்ட மதவெறி பிடித்த ட்தௌகீர் ரஸா கான் “இந்து-முஸ்லிம்” ஒற்றுமை, பசுவதை முதலியவற்றை ஆதரித்து போராடப் போகிறாராம்!

Acharya Pramod Krishan with Baba Ram dev

பத்வா மௌலானாவின் விவரங்கள்: தௌகீர் ராஸா கான், இதிஹாத்-இ-மில்லத் கவுன்சில் [ Ittehad-e- Millat Council] என்ற தீவிரகருத்துக்களைப் பரப்பி வரும் இயக்கத்தின் தலைவர். என்ற அடிப்படை முஸ்லிம் ஏற்கெனவே கலவரங்களைத் தூண்டி விட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டவர். புஸ்ஸின் தலைக்கு ரூ ஒரு கோடி என்று அறிவித்து பத்வா போட்டவர். அதாவது, தஸ்லிமா நஸ் ரீன் இஸ்லாமுக்கு எதிராக எழுதினார் என்ற காரணத்திற்காக, அயத்துல்லா கோமேனி மாதிரி, தண்டனை விதித்து, யாராவது அவரைக் கொன்று தலை வெட்டிக் கொண்டு வந்தால் பணம் கொடுக்கப்படும் என்று அர்த்தமாம். அதே மாதிரி, பிறகு தஸ்லிமா நஸ் ரீன் என்ற பங்களாதேச தலைக்கு ரூ 5 லட்சம் என்று அறிவித்தவர். இப்படி பத்வா போட்டு பிரபலமாகியதால், இவரை “பத்வா மௌலானா” என்றே அழைக்கப் படுகிறார்.

after-kejriwal-digvijaya-singh-praises-tauquir-raza-khan

அரவிந்த் கேசரிவால் தௌகீர்ராஸாகானை சந்தித்தது:  ஒன்பது நாட்களுக்கு முன்னர் 01-11-2013 அன்று அரவிந்த் கேசரிவால் என்கின்ற “ஆம் ஆத்மி கட்சி”த் தலைவர், இந்த கம்யூனல், அடிப்படைவாத, தீவிரவாத கொள்கைளைக் கடைப்பிடிக்கும் மௌலானாவை பிரெய்லியில் சந்தித்து தங்கள் கட்சிற்காக பிரச்சாரம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அப்பொழுது “கம்யுனிலிஸத்துடன் ஜோடி சேர்கிறார், ஓட்டுவங்கி அரசியல் நடத்த்ய்கிறார்ரென்றெல்லாம் காங்கிரஸ்காரர்கள் இவரைக் கடுமையாக சாடினார்கள்[1]. மீம் அப்சல் என்ற காங்கிரஸ் கட்சி ஊடக பேச்சாளர், அரவிந்த் கேசரிவாலின் அரசியல் ஆர்.எஸ்.எஸ்ஸை ஆதரிப்பதில் உள்ளது, அதனால் முஸ்லிம்களை கால்பந்து போல நினைக்கிறார்”, என்று எதிர்ப்புத் தெரிவித்தார்[2]. அரவிந்த் கேசரிவாலோ அதெல்லாம் எனக்குத் தெரியாது, என்று சப்பைக்கட்டியதோடு, ஏதோ பெரிய இஸ்லாமிய பண்டிதர் போல, முப்தியால் தான் பத்வா போட முடியும், மௌலானாவால் பத்வா போட முடியாது என்று விளக்கம் கொடுத்தார். வேடிக்கையென்னவென்றால், இதனை எந்த முப்தியோ, மௌலானாவோ தவறு அல்லது சரி என்று சொல்லவில்லை, இல்லை என்ன காபிராகிய நீர், எங்கள் மதவவிசயங்களைப் பற்றி வியாக்யானம் செய்கிறாயே, என்று கண்டிக்கவில்லை.

Digvijay and Tauqeer together 2013

காங்கிரஸ் ஊக்குவிக்கும் சாமியார்கள்: காங்கிரஸுக்கு நெருங்கிய சாமியாரான, ஆச்சார்யா பிரமோத் கிருஷண் என்பவர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்[3]. அது மட்டுமல்லாது மோடிக்கு எதிராக பேசும் சாமி என்றும் குறிப்பிடத் தக்கது[4]. பல போலி சாமியார்கள் மோடிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றும் பேசி வருகிறார். பாபா ராம் தேவ் விசயத்தில், அவர்க்கு எதிராக செயல்பட்டு வருகிறார். பாலகிருஷ்ணனின் போலி பாஸ்போர்ட் வழக்கில் பங்கு கொண்டுள்ளார்[5]. இவர் பேசும் விதம், நடந்து கொள்ளும் போக்கு முதலியவற்றைப் பார்க்கும் போது, காங்கிரஸுக்கு சார்பாக, இந்து நலன்களுக்கு எதிராக செயல்படுவது நன்றாகத் தெரிகிறது. இதனால், இந்து சந்நியாசிகளின் ஒற்றுமை குலைகிறது. அதாவது, சந்நியாசிகள், மடாதிபதிகள் ஒற்றுமையாக இருக்கக் கூடாது, பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், காங்கிரஸும், காங்கிரஸ் ஆதரவு சந்நியாசிகளும் வேலை செய்கின்றனர் என்ரும் தெரிகிறது.

some-swami, Tahil Ali, Dig, Tauqir Raza, Acharya Pramod Krishan

மதவெறிக் கொண்டவர் “இந்து-முஸ்லிம்” பாடுபடப் போகிறாராம்: “கல்கி மஹோத்சவம்” என்ற நிகழ்சியில் கலந்து கொண்டபோது, 10-11-2013 அன்று தனக்கு வலது பக்கத்தில் தாரிக் அன்வர் [Union Minister of State for Agriculture Tariq Anwar] மற்றும் இடது பக்கத்தில் தௌகீர் ராஸா கான் உட்கார்ந்து கொண்டிருந்தனர். இவர்கள் எல்லோருமே ஒரே மேடையில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். நடுவில் திக்விஜய் நன்றக குனிந்து, தௌகீர் ராஸா கானின் பின்பக்கத்தில் ஸ்வாமியுடன் ஏதோ பேசியதும் வீடியோவில் தெர்கிறது[6]. அதாவது அந்த அளவிற்கு நெருக்கமாக இருக்கின்றனர் என்ரு காட்டிக் கொள்கின்றனர். திக்விஜய் சிங்கோ, தௌகீர் ராஸா கானைப் புகழ்ந்து, அவர் ஸ்வாமியுடன் சேர்ந்து கொண்டு “இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபடுகிறார். பசுக்களை பாதுகாக்க வேண்டும் என்று பேசியுள்ளார்[7], என்று பாராட்டி பேசினார்[8]. மக்கள் இதையெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும். அவரை மதவாதி போல பார்க்கக் கூடாது என்றெல்லாம் விளக்கினார்.

Beware of anti-Hindu hindus

கோசாலையைத் திறந்து வைத்து பசுவதையைப் பற்றி பேசினாராம்: தௌகீர் ராஸா கான் ஆயிரக்கணக்கில் பசுக்கள் கொலைசெய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படும் முறையை எதிர்க்கிறேன். இப்படியே பசுக்கள் கொல்லப்பட்டால், நாளைக்கு குழந்தைகள் குடிக்க பாலே இருக்காது, என்று ஒரு பசு காப்பகத்தைத் திறந்து வைக்கும் போது பேசினார்[9]. பிறகு தௌகீர் ராஸா கான், ஊடகக்காரர்களுடன் பேசும் போது, தான் மதவாதம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடுவதாக தெரிவித்தார். பத்வா விசயத்தில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் மறுத்தார்[10].

TAUQEER REZA KHAN

காங்கிரசஸின் வஞ்சக திட்டம்: முன்னர் ராமஜன்ம பூமி விசயத்தில், காங்கிரஸே முந்தி கொண்டது. முலாயம் சிங் யாதவோ, கரசேகர்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தி, இந்துக்களைக் கொன்று, முல்லாயம் சிங் யாதவ் ஆனார். இப்பொழுது, சோனியா இந்து சாமியார்களைப் பிரிக்க சட்ய்ஹி செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. பதவி, பணம், அதிகாரம் இருப்பதனால், சோனியா இவர்களை சுலபமாக வளைத்து விடுகிறார் என்று தெரிகிறது. ஒவ்வொரு இந்து எழுச்சியையும் அடக்க இவ்வாறான எதிர்மறையான செயல்களை செய்து வருவது தெரிகிறது. முன்னர் அஜாரே ஆர்.எஸ்.எஸ் தூண்டுதல் பேரில் தான், ஊழல் எதிர்ப்பி போராட்டம் நடத்துகிறார் என்பது போல செய்தி வந்தது. அவர் ஒதுங்கிக் கொண்டார். அரசியல்வாதிகளை எதிர்ப்பதானால், கட்சி தொடங்கி தேர்தலில் நில்லுங்கள் என்ரு கபில் சிபல் சவால் விட்டார். இவ்விதமாக காங்கிரஸ் ஊழல் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தை அடக்கியது. அரவிந்த கேசரிவால் கட்சி தொடங்கி அரசியலில் இறங்கி விட்டார். இதனால், காங்கிரசூக்குத் தான் ஆதாயம்.

© வேதபிரகாஷ்

11-11-2013


. [1] Earlier on November 1, Arvind Kejriwal met Maulana Tauqeer Raza Khan in Bareilly, which sparked a political conspiracy as Congress claimed that the AAP leader is playing a communal card ahead of the Assembly election in Delhi. http://www.niticentral.com/?p=155911

[2] Congress spokesman Meem Afzal had alleged that Kejriwal “whose politics originated with the backing of the RSS was trying to make Muslims a football” for electoral mileage.

http://ibnlive.in.com/news/after-kejriwal-digvijaya-singh-praises-tauquir-raza-khan/433353-3-242.html

[3] The function was organised by Swami Pramod Krishnan, who is said to have good relations with the Congress. Krishnan also praised the cleric and said people like him were needed to promote communal harmony in the country

[5] Pramod Krishnan, who is a litigant in the fake passport case filed against Balkrishan, even feared that Shankar Dev may have been killed by them as their guru knew of the fake documents that were submitted by him at Bareilly passport office to procure the passport.

http://www.tribuneindia.com/2012/20120806/dun.htm#7

[7] Speaking at the inauguration of Kalki Mahotsava here last night, Digvijay praised Raza, who enjoys minister of state rank in SP government in Uttar Pradesh, and said that he along with Acharya Pramod Krishnan have started a mission of Hindu-Muslim unity in the country.

http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/after-arvind-kejriwal-digvijay-singh-praises-controversial-muslim-clerictauqeer-raza-khan/articleshow/25562343.cms

[8] Dig vijay Singh on Sunday shared the stage with controversial Muslim cleric Tauqeer Raza Khan praised him for working for ‘Hindu-Muslim unity’. his party attacked AAP leader Arvind Kejriwal following his meeting with the religious leader.

http://zeenews.india.com/news/nation/digvijay-praises-tauqeer-raza-says-he-started-mission-of-hindu-muslim-unity_889072.html

[9] Inaugurating a cow shelter, Raza said the manner in which thousands of cattles were being slaughtered and exported to foreign countries was a matter of great concern and if it was not stopped a day would come when the children in the country would not get milk to drink.He said that a joint campaign was needed to save cattle.

http://ibnlive.in.com/news/after-kejriwal-digvijaya-singh-praises-tauquir-raza-khan/433353-3-242.html

[10] Tauqeer Razadenied having any hand in the violence. He has also denied that he had issued any “fatwa” against Taslima Nasreen.

http://www.deccanherald.com/content/368211/digvijay-shares-stage-039controversial039-cleric.html