Posted tagged ‘பங்காபந்து’

இன்னொரு ஜமாத்-இ-இஸ்லாமி தலைவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது!

மே 11, 2013

இன்னொரு ஜமாத்-இ-இஸ்லாமி தலைவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது!

 

மொஹம்மது கமருஸ்ஸாமன் (Muhammad Kamaruzzaman[1]) என்ற ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர், ஒன்பது குற்றங்களுக்காக, மரண தண்டனைக்குட் பட்டிருக்கிறார்[2]. நீதிபதி தனது தீர்ப்பை வழங்கியபோது, பாதுகாப்புப் படை மற்றும் கலவரம் ஒடுக்கும் படையினர் தயாராக இருந்தார்கள்[3]. பங்களாதேச விடுதலைப் போர் 1971ல் நடந்தது. அப்பொழுது, பாகிஸ்தான் படைகளுடன் சேர்ந்து கொண்டு, ஜமாத்-இ-இஸ்லாமி என்ற இஸ்லாமிய தீவிரவாத குழு அப்பாவி மக்கள் ஐந்து லட்சம் பேர்களைக் கொன்றுக் குவித்துள்ளது. அதுமட்டுமல்லாது, அக்கூட்டத்தினர் பல பெண்களை கற்பழித்துக் கொன்றுள்ளனர். இந்த போர் குற்றங்களுக்காக இவருக்கு மண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது[4]. உலக நாடுகள் இதை ஆதரிக்கின்றன[5]. இவ்வாறு தண்டனை அளிக்கப்படும் போதெல்லாம், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தெருக்களில் வந்து கலவரங்களை ஏற்படுத்தி[6], இந்துக்களை தாக்கும் போக்கில் இருந்து வருகிறார்கள்.  இதனால், மக்கள், குறிப்பாக இந்துக்கள் இதன் பின்விளைவுகள் பற்றி அஞ்சுகிறார்கள்[7].

 

சென்ற மார்ச் மாதம், டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[8] விதிக்கப்பட்டது[9]. அதனால் ஜிஹாதிகளை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் முஸ்லீம் குழுமங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால், ஜமாத்-இ-இஸ்லாமிகாரர்கள் இரண்டு நாட்களாக கலவரங்களில் ஈடுபட்டு, பதிலுக்கு போலீஸார் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளது. இவ்வாறு கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது.

 

இது சம்பந்தமாக கீழ்கண்ட இடுகைகளையும் பார்க்கவும்:

  • 1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன[10] – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!
  • முஸ்லீம்களின் வெறியாட்டம்  பங்களாதேசத்தில்இந்துக்கள் கொல்லப்பட்டனர், வீடுகள் சூரையாடப்பட்டன, கோவில்கள் எரியூட்டப்பட்டன[11].
  • “இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது” – இந்துக்களுக்கு எதிராக பங்காளதேசத்தில் தொடரும் குரூரக்கொலைகள், குற்றங்கள்[12].

 

© வேதபிரகாஷ்

11-05-2013

 

 


[1] Kamaruzzaman, 61, was convicted in a packed courtroom on five counts of mass killings, rape, torture and kidnapping, Attorney General Mahbubey Alam said.

http://www.independent.co.uk/news/world/asia/backlash-feared-as-bangladesh-sentences-islamic-politician-muhammad-kamaruzzaman-to-death-8608826.html

பங்களாதேசத்தில் லட்சக்கணக்கான அடிப்படைவாத முஸ்லீம்களின் ஊர்வலம், ஆர்பாட்டம் எதனைக் காட்டுகிறது?

ஏப்ரல் 7, 2013

பங்களாதேசத்தில் லட்சக்கணக்கான அடிப்படைவாத முஸ்லீம்களின் ஊர்வலம், ஆர்பாட்டம் எதனைக் காட்டுகிறது?

இஸ்லாமியநாடாக்கஅடிப்படைவாதிகளின்போராட்டம்: பங்களாதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவதூறு சட்டத்தைத் திரித்து அமைத்து, இணைதளங்களில் இடுகையிடுகிறவர்களுக்கு தூக்குத் தண்டனை செல்லுபடியாகின்ற மாதிரி செய்ய வேண்டி ஆர்பாட்டம் நடத்தினர்[1]. இது அவர்கள் பட்டியல் போட்ட 13 கோரிக்கைகளில் ஒன்றாகும். “இஸ்லாமை தூஷிப்பவர்களுக்கும் தூக்கு”, “இஸ்லாமை விமர்சிப்பவனுக்கு தண்டனை” என்று ஆர்பரித்தனர். அவர்களது மற்ற கோரிக்கைகள், பின்வருமாறு[2]:

  1. அரசியல் நிர்ணய சட்டத்தில் அல்லாவின் மீதான முழுநம்பிக்கையை உறுதி செய்யப்படவேண்டும்[3].
  2. அஹ்மதியா போன்றவர்களை முஸ்லீம்கள் அல்ல என்று பிரகடனபடுத்த வேண்டும்.
  3. அந்நிய கலாச்சாரத்தை அறவே தடை செய்ய வேண்டும்[4].
  4. ஆண்கள்-பெண்கள் பொது இடங்கள், மற்ற இடங்களில் சேர்ந்து பேசுவதை, கூடுவதைத் தடுக்க வேண்டும்.
  5. எல்லா நிலைகளிலும் இஸ்லாமிய படிப்பைக் கட்டாயமாக்க வேண்டும்.
  6. பொது இடங்களில் சிற்பங்கள், சிலைகள் முதலியவை வைக்கக் கூடாது.
  7. ஊடகங்களில் இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள் இருக்கக் கூடாது.

இவர்களை “இஸ்லாமிஸ்டுகள்” என்று சொல்லப்படுகின்றனர். பற்பல இஸ்லாமிய மதப்பள்ளிகள், கல்லூரிகள், மதஸாக்கள் முதலியவற்றிலிருந்து சேர்ந்து ஹஃபேஜாத்-இ-இஸ்லாம் [Hefazat-e-Islam] என்ற அமைப்பின் கீழ் சனிக்கிழமை அன்று ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்தினர்[5]. அவர்கள் டாக்காவை நோக்கி வர ஆரம்பித்தனர். இரண்டு லட்சம் மக்கள் கூடியதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்[6].

அடிப்படைவாதிகளை எதிர்க்கும் மிதவாதிகள்: இதை எதிர்த்து தலைநகர் டாக்காவில் 22-மணி நேர முழு அடைப்பு கோரி அழைப்பு விடுத்திருந்த மாணவர்கள் மற்ற மதசார்பற்றவர்கள், இந்த கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்[7].  “அடிப்படைவாதம் ஒழிக”, என்று அவர்கள் முழக்கம் இட்டனர். மதவாதம் ஒழிக” அடிப்படைவாத முஸ்லீம்களுக்கும் மற்ற முஸ்லீம்களுக்கும் இடையே கைகலப்பு, அடி-தடி ஏற்பட்டது. இதற்குள் போலீஸார், இஸ்லாமிஸ்டுகளை துரத்தியடித்தனர். அதற்குள் கடந்த 24-மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரங்களில் ஆளும் அவாமி லீக் கட்சியினர் ஜமாத்-இ-இஸ்லாமி ஆர்பாட்டக் காரர்களுடன் மோதியபோது இருவர் கொல்லப்பட்டனர்.  இதனால், இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆகிறது[8].

அரசு எடுக்கும் நடவடிக்கைகள்: பங்களாதேச அரசு, நிச்சயமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்குண்டுத் தவிக்கிறது என்று தெரிகிறது. 1971 போர் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை அளித்ததிலிருந்து, மதவாதிகள் இந்துக்களைக் கொல்வது என்பதலிருந்து, மற்ற மிதவாத முஸ்லீம்களை மிரட்டுவது, முதலிய வேலைகளில் இறங்கியுள்ளனர். வெளிநாட்டு உதவிகளால் வாழும் அரசு, தான் “செக்யூலார்ரென்றும் காட்டிக் கொள்ள முயல்கிறது. அரசு ஏற்கெனவே தடை உத்தரவை அமூல் படுத்தி, யாரும் உள்ளே நுழைய முடியாத அளவில் டாக்காவை தனிமைப் படுத்தினர். சபாங் சதுக்கத்தில், போர் குற்றவாளிகளுக்கு தண்டனை என்று ஆதரிப்பவர்கள் கூடி, இஸ்லாமிஸ்டுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போலீஸார் அவர்களையும் அப்புறப்படுத்தினர்.

இஸ்லாமிஸ்டுகள்மற்றும்செக்யூலரிஸ்டுகள்: இஸ்லாமிய, அரபு ஊடகங்கள் ஆர்பாட்டக் காரர்களை “இஸ்லாமிஸ்டுகள்” என்றும், ஐரோப்பிய ஊடகங்கள் எதிர்-ஆர்பாட்டக்காரர்களை “செக்யூலரிஸ்டுகள்” என்றும் குறிப்பிட்டனர். ஆனால், பங்களாதேசத்தில் “செக்யூலரிஸ்டுகள்” என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், முன்பு, இந்துக்கள் குரூரமாக, கோரமாக, கொடுமையாகக் கொல்லப்பட்டதற்கு, தாக்கப்பட்டதகு, எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவில்லை. இந்திய ஊடகங்களுக்குக் கவலையே இல்லை. இப்பொழுதும் ஐ.பி.எல் மோகத்தில் மூழ்கியுள்ளது.

இது சம்பந்தமாக கீழ்கண்ட இடுகைகளையும் பார்க்கவும்:

  • 1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன[9] – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!
  • ·         முஸ்லீம்களின் வெறியாட்டம்பங்களாதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டனர், வீடுகள் சூரையாடப்பட்டன, கோவில்கள் எரியூட்டப்பட்டன[10].
  • “இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது” – இந்துக்களுக்கு எதிராக பங்காளதேசத்தில் தொடரும் குரூரக்கொலைகள், குற்றங்கள்[11].

வேதபிரகாஷ்

07-04-2013


[1] Hefajat-e-Islam, an Islamic group which draws support from tens of thousands of seminaries, organised the rally in support of its 13-point demand including enactment of a blasphemy law to prosecute and hang atheist bloggers.

[2] The demands included declaration of the Ahmadiyya Muslim sect as non-Muslim, a ban on free mixing of men and women, making Islamic education mandatory at all levels and no installation of any sculpture in any public place.

http://edition.cnn.com/2013/04/06/world/asia/bangladesh-blasphemy-protest/

[3] The group listed 13 demands, including reinstating “absolute trust and faith in the Almighty Allah” in the nation’s constitution, which is largely secular, and passing a law providing for capital punishment for maligning Allah, Islam and its Prophet Muhammad.

http://abcnews.go.com/International/wireStory/hardline-muslims-rally-bangladesh-amid-shutdown-18895209#.UWEgOqJTCz4

[4] The group’s other demands include declaring the minority Ahmadiya sect living in the country non-Muslims and banning “all foreign culture, including free mixing of men and women.”

இஸ்லாமியக் கட்சியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது!

மார்ச் 1, 2013

இஸ்லாமியக் கட்சியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது!

Bangladesh - India

பங்களாதேசத்தில்இஸ்லாமியத்தலைவருக்குத்தூக்குத்தண்டனை: பங்களாதேசத்தில் 1971ல் யுத்தம் நடந்தபோது, இந்தியப் படை, முக்தி வாஹினி என்ற பாகிஸ்தானிற்கு எதிராகப் போராடிய படைக்கு ஆதரவாக இருந்து, சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தது. இருப்பினும், பாகிஸ்தானை ஆதரித்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அப்பொழுது, போர்நிலையை பயன்படுத்திக் கொண்டு, பற்பல அட்டூழியங்களைச் செய்துள்ளனர். பங்களாதேசம், இஸ்லாமிய நாடாக இருந்தாலும், இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக சிலர் குரல் கொடுத்து வருகின்றானர். குறிப்பாக பாகிஸ்தான் ஆதரவாளர்களை தேசவிரோதிகளாகவே கருதுகின்றனர். இதனால், அத்தகைய போர்க் குற்றங்களை விசாரிக்க, ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப் பட்டது. அதன்படி, டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[1] விதிக்கப்பட்டுள்ளது!

Bangladesh protesters against Capital punishment

ஜமாத்இஸ்லாமிதலைவர்செய்தகுற்றங்கள்: இவர் கீழ்கண்ட குற்றங்களுக்காக விசாரணைச் செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டுள்ளது[2].

  • மனிதகுலத்திற்கு எதிராக பல குற்றங்களைப் புரிந்தது
  • பல கிராமங்களை கொள்ளையடித்தது
  • பலகிராமங்களை தீயிட்டுக் கொளுத்தியது
  • அப்பவி மக்களைக் கொன்றது
  • பெண்களைக் கற்பழித்தது
  • இந்துக்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்தது
  • அவர்களின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டது.

போர் மற்றும் போர்க்குற்றங்களில் 30,00,000 மக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்[3]. அதாவது,ளாப்பொழுது கிழக்கு வங்காளம் அல்லது கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சுதந்திரம் நாடி போராடியபோது, பாகிஸ்தான் படையினர் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் விடுதலைப் படைக்கு எதிராக போராடினர், மக்களைக் கொன்றனர்.

The peoples verdict -Giant hoardings demand the hanging of war criminals

கடந்த அநீதிக்குத் தீர்வு வேண்டும் என்றால், நீதி காக்கப்படவேண்டும்: நீதிபதி ஏ.டி.எம். பஸலே கபீர் தமது எழுத்து மூலம் அளித்தத் திப்பில் அறிவித்ததாவது[4], “நீதிபதிகளாகிய நாங்கள் இந்த தண்டனை அளிக்காவிட்டால், கடந்தகால அநீதி நேர்ததற்கான பிராயச்சித்ததை நீதியாக அடையமுடியாது என்ற தத்துவத்தில் மிகவும் ஆழமான நம்பிக்கைக் கொள்கிறோம் மற்றும் கொண்டிருக்கிறோம்”. நீதி எனும்போது, நீதிபதிகள் நீதியில் நம்பிக்கைக் கொண்டுள்ளது தெரிகிறது. இருப்பினும், குற்றாவாளியின் வழக்கறிஞர் மேல் முறையீடு செய்வோம் என்று அறிவித்துள்ளார்.

Supporters at Shabag square Bangladesh 2013

தீவிவாத அமைப்புகளுடன் தொடர்பு: இந்த இஸ்லாமிய இயக்கம், பாகிஸ்தானிய மற்றும் இதர தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு வேலை செடய்து வந்துள்ளது. இந்த இச்ளம்ய ஜமாத் கட்சி, முந்தைய பிரதம மந்திரியின் கட்சியான தேசியக் கட்சியுடன் சேர்ந்து அரசாட்சியிலும் பங்குக் கொண்டுள்ளது. இருப்பினும், தீவிரவாத இயக்கத் தொடர்புகளினால், பொது மக்கள் அதனை வெறுத்தொதிக்கினர்[5]. அதுமட்டுமல்லாது, அக்கட்சியின் எல்லா தலைவர்களுமே, பற்பல குற்றங்களுக்காக சிறையில் உள்ளார்கள்[6].

Bangladeshi- absconding Terrorists

தொடர்ந்து நடந்த கலவரங்களில் 35 பேர் சாவு: இத்தீர்ப்பை ஆதரித்து, எதிர்த்தும் பங்களாதேசத்தில் வெளிப்படையாக பேசப்பட்டது. பலர் ஆதரித்து பொதுநிகழ்ச்சியில் பேசவும் செய்தனர். தலைநகர் டாக்காவில், சபாக் சதுக்கத்தில் மருத்துவர்கள், பொறியாளர்கள், கலைஞர்கள் என்று பலர் கூடி தீர்ப்பை ஆதரித்து முழக்கமிட்டனர். “தேசவிரோத பாகிஸ்தானிய ஆதரவாளர்கள், பாகிஸ்தானிற்கு போங்கள்ளென்று ஆர்பரித்தனர்[7]. இதனால், எதிர்க்கும் ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டத்தனர் ஆர்பாட்டத்தில், ரகளையில் ஈடுபட்டனர்[8]. இதனால் அரசு பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையில் 35 பேர் இறந்துள்ளனர்[9]. இறந்தவர்களில் 4 போலீஸாரும் அடங்குவர், அதில் இருவர் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளனர்[10]. 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

My jihad is bomb your country

இந்திய முஸ்லீம்கள் இதன் மூலம் பாடம் கற்றுக் கொள்வார்களா?: இங்கு, இந்தியாவில் அப்சல் குருவைத் தூக்கிலிட்டதற்கு, சென்னையிலேயே எதிர்ப்புத் தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். காஷ்மீர முஸ்லீம்களைப் பற்றிக் கேட்கவேவேண்டாம், அவனது உடலைப் பெறுவது, அடக்கம் செய்வது என்ற விஷயங்களில் இரு கட்சிகளும் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படியென்றால், ஆளும் கட்சியினர், ஏன் இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சாதகமாக செயல் பட்டுக் கொண்டிருக்க வேண்டும்? நாடு எனும்போது, தமது நாட்டை ஆதரிக்க முஸ்லீம்கள் ஏன் மாறுபட்டு நடக்க வேண்டும்?

© வேதபிரகாஷ்

28-02-2013


[2] Prosecutors accused him of involvement in looting and burning villages, raping women and forcing members of religious minorities to convert to Islam during the war.

http://www.nytimes.com/2013/03/01/world/asia/islamic-leader-sentenced-to-death-in-bangladesh.html?_r=0

[4] “As judges of this tribunal, we firmly hold and believe in the doctrine that ‘justice in the future cannot be achieved unless injustice of the past is addressed,’ ” Justice A. T. M. Fazle Kabir commented in a written summary of the judgment.

http://www.nytimes.com/2013/03/01/world/asia/islamic-leader-sentenced-to-death-in-bangladesh.html?_r=0

[5] One of the largest Islamist parties in South Asia, Jamaat was the leading coalition partner of former Premier Khaleda Zia’s Bangaldesh Nationalist Party. It bred many terror groups but is now becoming an outcast in Bangladesh, with almost its entire top leadership behind bars on war crimes charges.

[7] Just adjacent to the Bangbandhu medical college, and not far away from the Prime Minister’s residence, it has become home to thousands of students, doctors, artists, government officials and landless workers who have made it their abode amid chants of “phaansi” to traitors and “traitors go to Pakistan”.
http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2286185/Shahbag-Square-cheers-change-Dhakas-young-protesters-demand-ban-extremism-death-war-criminals.html?ito=feeds-newsxml

[9] Violent clashes between protesters and security forces erupted across Bangladesh on Thursday, leaving at least 35 people dead.