Posted tagged ‘பக்ருதீன்’
பிப்ரவரி 16, 2018
ஐசிஸ் தொடர்பு – அன்சார் மீரான் கைது செய்யப்பட்டது, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தது என்று சுருக்கி விடமுடியுமா?

அன்சார் மீரான் கைது செய்யப்பட்டது, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தது: கன்னியாகுமரியை சேர்ந்த அன்சார் மீரான் என்பவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, என சில ஊடகங்களும். ஐ.எஸ்.ஐ.எஸ்.- அமைப்புக்கு ஆதரவான கூட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தியதாக, என்று மற்ற சில ஊடகங்களும், தேசிய புலனாய்வு பிரிவு போலீசாரால் சென்னையில் 12-08-2018 திங்கட்கிழமை அன்று கைது செய்யப்பட்டான்[1], என்று செய்திகள் வெளியிட்டன. 13-02-2018 அன்று கைது செய்யப்பட்ட அன்சார் மீரான், முறைப்படி, தேசிய புலனாய்வு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்[2]. இதையடுத்து அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்[3]. இந்நிலையில் அவனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு போலீசார் மனு தாக்கல் செய்தனர்[4]. மனு தாக்கல் செய்தனர் என்ற செய்தியையே, ஏதோ, பெரிய விசயமாக வெளியிட்டுள்ளன[5]. என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள விசயங்களைக் கூட வெளியிடவில்லை. மேலும், “கைது செய்யப்பட்டார்,” என்று மரியாதையோடு குறிப்பிட்டன[6]. மனுவை விசாரித்த நீதிபதி செந்தூர்பாண்டியன், மனுவின் மீதான உத்தரவை 14—02-2018 புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்[7]. இதையே எல்லா நாளிதழ்களும் / ஊடகங்களும் வெளியிட்டுள்ளன[8]. சென்னையில் நடக்கும் விசயங்களே இவர்களுக்கு தெரியாதா என்ன?

14-02-2018 அன்று நீதிமன்றம் மூன்று நாள் விசாரணைக்கு அனுமதி[9]: தேசியப் புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) மூன்று நாள்கள் அனுமதி அளித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. வழக்கு விசாரணையின்போது புழல் சிறையில் இருந்த அன்சார் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் விசாரணைக்காக, என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, என்ஐஏ அதிகாரிகள் அன்சாரிடம் உடனடியாக விசாரணையை ரகசியமாக தொடங்கினர். இவ்வளவு வெளிப்படையான விசாரணை, முதலியவை இருந்தும், தமிழகத்தில் ஏன் தீவிரவாதத்தை வளர்க்கின்றனர் என்பது பற்றி யோசிப்பதில் தயக்கம், மறைத்தல் மற்றும் பயமும் இருக்கிறது போலும். தவிர குற்றவாளிகள் மற்றும் குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்கு ஆதரவாக பெற்றோர், உற்றோர், மற்றோர் பேசுவது, செயல்படுவது முதலியனவும், தீவிரவாதத்திற்கு உடன் போவதை காட்டுகிறது.

தினமலர் கூடுதலாக கொடுக்கும் விசயம்: – அரசு வழக்கறிஞர், பிள்ளை கூறியதாவது[10]: “ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்புடைய அன்சார் மீரானை, தேசிய புலனாய்வு பிரிவு போலீசார், கைது செய்து உள்ளனர். இந்த வழக்கில், ஒன்பது பேர் சம்பந்தப்பட்டு உள்ளனர். அன்சார் மீரானுடன், இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். முதல் குற்றவாளியாக கருதப்படும், ஹாஜா பக்ருதீன், சிரியாவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புக்கு நிதி திரட்டுதல், ஆட்களை சேர்ப்பது போன்ற சதி வேலைகளில், அன்சார் மீரான் ஈடுபட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களும் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. மனு மீது, இன்று உத்தரவு வரும்”, இவ்வாறு அவர் கூறினார்[11]. ஓரளவிற்கு, அதிலும், அரசு வழக்கறிஞர், பிள்ளை கூறினார் என்று இவ்வாறு வெளியிட்டுள்ளது. இதெல்லாம் மற்ற ஊடகத்தினருக்கு தெரியாதா என்ன?

முழு விவரங்களைக் கொடுக்கும் தினத்தந்தி[12]: தினத்தந்தி கூறுவதாவது, “ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு தமிழ்நாட்டில் ஆட்களை திரட்டுவதில் கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டையைச் சேர்ந்த காஜா பக்ருதீன் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்தது. இவர் சிரியாவுக்கு சென்று தீவிரவாதிகளிடம் ஆயுத பயிற்சி பெற்றவர் என்பதும் தெரிய வந்தது. சிங்கப்பூர் குடியுரிமை பெற்று இருந்த இவரை தேசிய புலனாய்வு பிரிவினர் கண்காணித்தப்படி இருந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் டெல்லி வந்தபோது தேசிய புலனாய்வு பிரிவினரிடம் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது தமிழ்நாட்டில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக தனியாக ஒரு தீவிரவாத குழு உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 இளைஞர்கள் முக்கிய அங்கம் வகிப்பதும் தெரிய வந்தது. அந்த 9 இளைஞர்கள் மீதும் 9 பிரிவுகளில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்களை போலீசார் தேடி வந்தனர். அதன் பயனாக கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அப்துல்லா முத்தலீப் பிடிபட்டார். அவரை தொடர்ந்து 18-ந்தேதி சாகுல் அமீது என்பவர் சென்னை ஓட்டேரியில் கைது செய்யப்பட்டார். இவர்கள் 3 பேரிடமும் தேசிய புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினார்கள். தலைமறைவாக உள்ள 6 பேரை பிடிக்க அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். அந்த 6 பேரும் தலை மறைவாக இருந்தபடி ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்டி வருவது தெரியவந்தது”[13].

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவி செய்வது மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் அவர்கள் நாசவேலை செய்து கை வரிசை காட்டக்கூடும்[14]: தினத்தந்தி தொடர்கிறது, “ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவி செய்வது மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் அவர்கள் நாசவேலை செய்து கை வரிசை காட்டக்கூடும் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த ஐ.எஸ். தீவிரவாதிகளை கூண்டோடு பிடிக்க வேண்டும் என்பதில் தேசிய புலனாய்வு பிரிவு தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில் தமிழ் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளில் 4-வது இடத்தில் இருப்பதாக கருதப்படும் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கேடு உத்தமன் பகுதியைச் சேர்ந்த அன்சார் மீரான் சென்னையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அவனை கைது செய்ய டெல்லியில் இருந்து தேசிய புலனாய்வு பிரிவின் சிறப்பு படை சென்னை வந்தது. சென்னையில் நேற்று அவனை தேசிய புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். அன்சார் மீரான் சென்னையில் ரகசியமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதில் இருந்தபடியே ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டி கொடுத்துள்ளான். மேலும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக சிரியா செல்பவர்களுக்கு விமான டிக்கெட்டும் எடுத்து கொடுத்துள்ளான். குறிப்பாக காஜா பக்ருதீன் சிரியா செல்ல டிக்கெட் எடுத்து கொடுத்தது இவன்தான் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று கைதான அன்சார் மீரானிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். தமிழ்நாட்டில் இருந்து சிரியாவுக்கு எத்தனை பேரை அனுப்பி வைத்துள்ளனர் என்று ஆய்வு செய்தனர். தமிழ்நாட்டில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்களா? என்று விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது”[15]. சாகுல் அமீது மற்றும் காஜா மொஹித்தீன் பற்றிய விவரங்களை இங்கு படித்து அறியலாம்[16].

இஸ்லாமிய, ஜிஹாதி தீவிரவாதிகளின் செய்திகளை இருட்டடிப்பு செய்வது ஏன்?: ஆக தினத்தந்தி மற்றும் தினமலர் தவிர, பின்னணி தெரிந்தும், மற்ற ஊடகங்கள் இவ்வாறு செய்திகள் வெளிட்டுள்ளது, அவற்றின் பாரபட்சம் மற்றும் உண்மைகளை மறைக்கும் போக்கு வெளிப்படுகிறது. NIA தனது இணைதளத்தில் உடனுக்குடன் கைது செய்யப் பட்டவர்களின் விவரங்கள், பின்னணி, வழக்கு எண் என்ற எல்லா விவரங்களையும் “ஊடகங்களுக்காக” [Press release] என்று வெளியிட்டு வருகின்றது. அதனை தமிழில் மொழிபெயர்த்துப் போட்டாலே போதும், எல்லா விவரங்களும் பொது மக்களுக்குத் தெரிய வரும். அதனால், ஒருவேளை அவர்கள் விழிப்புடன் இருக்கலாம். ஆனால், அதையே கண்டுகொள்ளாமல், மறைத்து இவ்வாறு செய்தி வெளியிட்டிருப்பது அவர்களுக்கு சாதகாமாக இருப்பது அல்லது அவர்கள், ஊடகக்காரர்களுக்கு ஏதோ “சென்ஸார்” போன்ற ஆணையிட்டது அல்லது மிரட்டியுள்ளது போன்றது உள்ளதா எனவும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
© வேதபிரகாஷ்
16-02-2018

[1] நியூஸ்7, கைதான ஐ.எஸ் ஆதரவாளரை 7 நாட்கள் விசாரிக்க அனுமதி கோரிய புலனாய்வு அமைப்பு!, February 14, 2018
[2] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/14/2/2018/person-arrested-chennai-national-intelligence-agency
[3] பாலிமர் செய்தி, ISIS ஆதரவாளர் அன்சார் மீரானை போலீஸ் காவலில் விசாரிக்கக் கோரி மனு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணை, 13-பிப்-2018 18:30
[4] https://www.polimernews.com/isis-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88/
[5] தி.இந்து, சென்னையில் பிடிபட்ட ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ மனு, Published : 14 Feb 2018 07:51 IST; Updated : 14 Feb 2018 11:00 IS
[6] http://tamil.thehindu.com/tamilnadu/article22748394.ece
தினமணி, [7] தமிழ்.ஒன்.இந்தியா, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சென்னையில் இளைஞர் அதிரடி கைது!, Posted By: Mathi, Published: Tuesday, February 13, 2018, 11:47 [IST].
[8] https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-police-arrests-pakistan-spy-311239.html
[9] தினமணி, ஐ.எஸ். ஆதரவாளரிடம் என்ஐஏ விசாரணை தொடக்கம், Published on : 15th February 2018 02:28 AM.
http://www.dinamani.com/tamilnadu/2018/feb/15/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2863616.html
[10] தினமலர், ஐ.எஸ்.ஐ.எஸ்., ஆதரவாளரை போலீஸ் காவலில் விசாரிக்க மனு, Added : பிப் 14, 2018 02:18.
[11] http://www.dinamalar.com/news_detail.asp?id=1958705
[12] தினத்தந்தி, ஐ.எஸ். தீவிரவாதி சென்னையில் கைது – தமிழகத்தில் நாசவேலைக்கு சதி, பிப்ரவரி 13, 2018, 01:07 PM.
[13] https://www.dailythanthi.com/News/State/2018/02/13130746/ISIS-terroristArrested-in-Chennai-In-TamilNadu-The.vpf
[14] தினத்தந்தி, ஐ.எஸ். தீவிரவாதி சென்னையில் கைது – தமிழகத்தில் நாசவேலைக்கு சதி, பிப்ரவரி 13, 2018, 01:07 PM.
[15] https://www.dailythanthi.com/News/State/2018/02/13130746/ISIS-terroristArrested-in-Chennai-In-TamilNadu-The.vpf
[16] வேதபிரகாஷ், மறுபடியும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய, தொடர்புடைய, இன்னொரு ஆதரவாளன் சென்னையில் கைது!, செப்டம்பர் 23, 2017.
https://islamindia.wordpress.com/2017/09/23/isis-funder-from-chennai-arrested-by-nia-more-jihadis-in-south/
பிரிவுகள்: அன்சார், அன்சார் மீரான், அம்பத்தூர், அல் - உம்மா, கடலூர், காஜா, காஜா மொஹிதீன், ஹாஜா பக்ருதீன்
Tags: அன்சார் மீரான், அம்பத்தூர், இஸ்லாம், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசிஸ், காஜா, காஜா மொஹிதீன், சாகுல் ஹமீது, பக்ருதீன், ஷாகுல் ஹமீத், ஹாஜா, ஹாஜா பக்ருதீன், ஹாஜா மொய்தீன்
Comments: Be the first to comment
செப்ரெம்பர் 28, 2015
தங்களது மகன்களது உயிர்களைப் பற்றிக் கவலைப்படும் தாய்மார்கள், மற்ற உயிர்களைப் பற்றியும் கவலைப்பட்டிருக்க வேண்டும் – மகன்களை ஜிஹாதிகளாக வளர்த்திருக்கக் கூடாது, தடுத்திருக்க வேண்டும், அப்பொழுதே மாற்றியிருக்கவேண்டும்!

Panna Ismail, Bilal Malik, Police Fakruddhin – இவர்கள் ஏன் மாறவில்லை?
ஊடகங்களில் இந்நால்வர்களின் புராணங்கள் அதிகமாகவே உள்ளன.தொகுத்து சுருக்கமாகக் கொடுக்கப்படுகிறது.

போலீஸ் பக்ருதீன், – அல்-உம்மா,
- போலீஸ் பக்ருதீன் [Fakruddin alias ‘Police’ Fakruddin] –மதுரை நெல்பேட்டையை சேர்ந்தவன் பக்ருதீன். இவனது தந்தை சிக்கந்தர் அலி போலீஸ் ஏட்டாக பணியாற்றினார். இதனால் போலீஸ்காரர் மகன் பக்ருதீன் என அழைக்கப்பட்ட பக்ருதீனுக்கு நாளடைவில் ‘போலீஸ்‘ பக்ருதீன் ஆனான். சகோதரர் தர்வீஸ் மைதீன் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அத்வானியை குண்டுவைத்து கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டான் பக்ருதீன். அல் உம்மா இயக்கத்தின் முக்கிய நிர்வாகி இமாம் அலிக்கு நெருக்கமானவன் பக்ருதீன். 1995ல் விளக்குத்தூண் ஸ்டேஷனில் அடிதடியில் ஈடுபட்டதாகவும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே ஆண்டில் திடீர்நகரில் கொலை முயற்சி வழக்கு, 1996ல் அனுப்பானடியில் அழகர் என்பரை கொலை செய்ததாகவும், மீனாட்சி கோயிலில் வெடிகுண்டு வைத்ததாகவும், மதிச்சியத்தில் கொலை வழக்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவன் ஜாலியாக சுற்றிவந்துள்ளான், தொடர்ந்து குரூரக் குற்றங்களை செய்து வந்துள்ளான். டாக்டர் வி. அரவிந்த ரெட்டி கொலை [அக்டோபர் 23, 2012]; எஸ். வெள்ளையப்பன் [ஜூலை 1 2013]; ஆடிட்டர் ரமேஷ் [ஜூலை 19, 2013]; தமிழகத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதிகள் ஆவர்[1].

பன்னா இஸ்மாயில் – அல்-உம்மா, கோவை குண்டு வழக்கு
- பன்னா இஸ்மாயில் [Mohammed Ismail alias Panna Ismail], – இவரது வீடு மேலப்பாளையம் ஆமீம்புரத்தில் உள்ளது. கோவை குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பன்னா இஸ்மாயில் மீது உள்ளது. தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்திலும் இவர் செயல்பட்டு வந்துள்ளார். டாக்டர் வி. அரவிந்த ரெட்டி கொலை [அக்டோபர் 23, 2012]; எஸ். வெள்ளையப்பன் [ஜூலை 1 2013]; ஆடிட்டர் ரமேஷ் [ஜூலை 19, 2013]; தமிழகத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதிகள் ஆவர்.

பிலால் மாலிக், – அல்-உம்மா,
- பிலால் மாலிக் [Bilal Malik] – டாக்டர் வி. அரவிந்த ரெட்டி கொலை [அக்டோபர் 23, 2012].; எஸ். வெள்ளையப்பன் [ஜூலை 1 2013]; ஆடிட்டர் ரமேஷ் [ஜூலை 19, 2013]; தமிழகத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதிகள் ஆவர்.

அபுபக்கர் சித்திக் – கொலைகள் பல, சென்ட்ரல் குண்டு வெடிப்பு
- அபுபக்கர் சித்திக் – அபுபக்கர் சித்திக் என்ற காக்கா (46). நாகூரைச் சேர்ந்தவன். டாக்டர். வி. அரவிந்த ரெட்டி கொலை [அக்டோபர் 23, 2012] கடந்த 1995–ம் ஆண்டு நாகூரில் இந்து முன்னணி பிரமுகர் தங்கமுத்து கிருஷ்ணனை கொலை செய்வதற்காக இவன் புத்தக பார்சலில் குண்டு வைத்து அனுப்பினான். இதனை வாங்கி பிரித்து பார்த்த அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். இதே போல, மயிலாடு துறையில் இந்து அமைப்பை சேர்ந்த ஜெகவீர பாண்டியன் என்பவரை கொலை செய்வதற்கும், அபுபக்கர் சித்திக் புத்தக குண்டுகளை அனுப்பினான். ஆனால், தபால் நிலையத்தில் வைத்தே கண்டுபிடித்து புத்தக குண்டு செயல் இழக்க வைக்கப் பட்டது. இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வீசிய வழக்கும் அபுபக்கர் சித்திக் மீது உள்ளது. இப்படி கடந்த 18 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் தலைமறைவாகவே இருந்து வரும் சித்திக், பா.ஜக. மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன் ஆகியோர் கொலை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான்[2]. சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாய் மற்றும் மலேசியாவில் அபுபக்கர் சித்திக் தலைமறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது[3]. தமிழகத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதிகள் ஆவர்.

அபுபக்கர் சித்திக் – கொலைகள் பல – சென்ட்ரல் குண்டுவெடிப்பு
ஜிஹாதிகள் உருவாக்கப்படிவது எவ்வாறு?: இந்நால்வர்களைத் தவிர மற்ற குற்றாவாளிகள், தீவிரவாதிகள் முதலியோரைப் பற்றி பார்க்கும் போது, அவர்கள் எப்படி மனிதத்தன்மை கொஞ்சமும் இல்லாமல், மனித உயிர்களைப் பறிக்கும் அரக்கர்களை விட, மிகக்கொடியக் குரூர ஜிஹாதிகளாக மாறியுள்ளனர் என்று தெரிகிறது. இவர்கள் இவ்வாறு மாறுவதற்கு, மற்ற ஜிஹாதிகள் மட்டும் காரணமாக இருக்க முடியாது. குழந்தையாகப் பிறந்து, வளரும் போது பெற்றோர்களிடம் தான் அக்குழந்தைகள் முதலில் பாடங்களைக் கற்றுக் கொள்கிறார்கள், அப்பொழுதே அடிப்படைவாதம் கற்பிக்கப் பட்டால், அக்குழந்தைகள் அத்தகைய மனப்பாங்குடன் தான் வளரும். பிறகு பள்ளிக்குச் செல்ல வேண்டும்[4]. அங்கும் அத்தகைய மதபோதனைகள், மக்களை “மோமின்-காபிர்” என்று பிரித்துப் பார்ப்பது, “தாருல்-இஸ்லாம் மற்றும் தாருல்-ஹராப்” என்ற போரிடும் இடங்களை உருவாக்குவது, “ஜிஹாத் என்ற புனிதப்போரின்” தத்துவத்தை மனங்களில் ஏற்றி, உலகத்தில் உள்ள காபிர்களை எப்படியாவது ஒழ்த்துக் கட்டுவது என்றெல்லாம் கற்றுக் கொடுத்தால், அவர்கள் அப்படித்தான் வளர்வார்கள், பெரியவர்கள் ஆவார்கள். கல்லூரிகளில் படிக்கும் போது கூட அத்தகைய எண்ணங்களை வைத்துக் கொண்டிருந்தால், தமது படித்த-திறமைகளை எவ்வாறு உபயோகப்படுத்தலாம் என்ற யோசனை தான் வரும். பட்கல் சகோதர்களின் செயல்களே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். படித்தப் படிப்பு, எப்படி குண்டுகளைத் தயாரிக்கலாம் என்றுதான் புத்தி போயிற்று. பெற்றோர், மற்றோர் இவர்களை ஜிஹாதிகள், ஷஹீதுகள் என்றெல்லாம் பாராட்டிப் பேசி, வாழ்த்திக் கொண்டிருந்தால், அவர்கள் மனம் மாறமாட்டார்கள். இஸ்லாமிய இறையியலில் அத்தகைய பேச்சுக்கே இடமில்லை.

தேடப்பட்டு வரும் தீவிரவாதிகள் – கொலை-குண்டுவெடிப்பு முதலியன
- காஜா மொய்தீன் [Khaja Moideen], ஜூன்.2014ல் அம்பத்தூரில் கே.பி.எஸ். சுரேஷ் குமார் கொலைக்காக கைது செய்யப்பட்டான். இப்பொழுதைய ஜெயில் கலவரத்திற்கு வித்திட்டவன் இவன் தான் என்று கருதப்படுகிறது[5].
- முன்னா [Munna alias Mohammed Rafiq] – கிச்சன் புகாரிக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்தான்.
- கர்நாடகா மாநிலம், மாண்டியாவைச் சேர்ந்த அப்துல்லாவை [Abdulla alias Abdulla Muthalip],
- அஷ்ரப் அலி (34). கோவையை சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் கொலை வழக்கில் தேடப்படுபவர்.
- அயூப் என்ற அஷ்ரப் அலி (33). இஸ்லாம் டிபென்ஸ் ஃபோர்ஸ் (ஐடிஎப்) என்ற அமைப்பை சேர்ந்தவர். பாண்டியன் எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு குண்டு வைக்க திட்டம் தீட்டியது தொடர்பாக வழக்கு. இவரை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது[6].
- இப்ராகிம் (31). என்டிஎப் இயக்கத்தில் இருந்த இவர் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் கொலை வழக்கு தொடர்பாக கோவையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- முகமது அலி என்ற யூனுஸ் என்ற மன்சூர் (32). மேலபாளையத்தை சேர்ந்தவர். சென்னை விக்டோரியா அரங்கில் குண்டு வைத்தது தொடர்பாக தேடப்பட்டு வருபவர்.
- முஜிபுர் ரகுமான் என்ற முஜி (38). கோவையை சேர்ந்தவர். 1998ம் ஆண்டு நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய புள்ளியாக செயல்பட்டார். இவரை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
- முஸ்டாக் அகமது (53). வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர். அல்-உம்மா அமைப்போடு தொடர்புடையவர். இந்து அமைப்பை சேர்ந்தவர் கொலை வழக்கில் தொடர்புடையவர். தீவிரவாதிகளுக்காக டெட்டனேட்டர் வாங்கி வந்தவர். இவரை பிடித்து கொடுத்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
- ஜாகுபர் சாதிக் என்ற சாதிக் என்ற டெய்லர் ராஜா (28). கோவையை சேர்ந்தவர். அல்-உம்மா தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடையவர். கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய புள்ளியாக செயல்பட்டுள்ளார். இவரை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்ற தமிழக அரசு அறிவித்திருந்தது[7].
- நூகு என்.பி என்ற ரஷீத் (21). கேரளா கல்குட்டையை சேர்ந்தவர். கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்.
- குஞ்சு முகமது என்ற கனி (42). கேரளா மலப்புரத்தை சேர்ந்தவர். கோவை தொடர் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர்.
© வேதபிரகாஷ்
28-09-2015
[1] http://www.maalaimalar.com/2013/07/25113951/hindu-munnani-leaders-murder-p.html
[2] http://www.maalaimalar.com/2013/10/06141843/18-year-wanted-militants-abupa.html
[3] http://www.puthiyathalaimurai.tv/chennai-bomb-blast-incident-enquiry-with-criminals-141123.html
[4] இங்கும் மதரஸாக்களில் படித்தால், அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று விளக்கவேண்டிய அவசியல் இல்லை. இன்றைக்கு தலிபான்கள், ஐசிஸ், ஐ.எஸ் போன்றவையே உலகத்திற்கு வெட்டவெளிச்சமாக்கிக் கொண்டிருக்கின்றன.
[5] Prison officials said Khaja Moideen, arrested in connection with Hindu Munnani leader K P S Suresh Kumar murder in Ambattur in June 2014, was the brain behind the clash.
http://www.nyoooz.com/chennai/210598/back-door-diplomacy-by-2-unarmed-officers-helped-avert-crisis-at-puzhal
[6] http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=16943
[7] http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=16943
பிரிவுகள்: அடிப்படைவாதம், அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொல்லப்படுதல், சிறை, சிறை காவலர், சிறைச்சாலை, செல்போன், ஜெயிலர், புழல், புழல் சிறை, புழல் ஜெயில்
Tags: அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹித்தீன், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கலவரம், காபிர், சிறை, சிறை காவலர், சிறைச்சாலை, ஜிஹாத், ஜெயிலர், ஜெயில், பக்ருதீன், புழல், புழல் ஜெயில், போலீஸார், வார்டன்
Comments: Be the first to comment
ஒக்ரோபர் 5, 2013
தமிழக ஜிஹாதிகள்-போலீசார் சித்தூரில் பயங்கர மோதல் – துப்பாக்கி சூடு – ஒரு போலீசார் உயிரிழப்பு!
திருப்பதி அருகே முஜாஹித்தீன் தீவிரவாதிகள்: ஆந்திர மாநிலம் எல்லையில் சென்னை அருகே பதுங்கி இருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பிடிக்க போலீசார் கடும் துப்பாக்கிச்சண்டை நடத்தி வருகின்றனர். இதில் தமிழக போலீசார் 2 பேர் காயமுற்றனர். முன்னதாக போலீசார் உயிரிழந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து 10 மணி நேரமாக துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. தமிழகத்தில் பிஜேபி பிரமுகர்கள் பலர் குறிவைத்து கொல்லப்பட்டனர். இவர்களில், வேலூரில் வெள்ளையன், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த கொலைகளில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என டில்லியில் உள்ள அனைத்து பிஜேபி நிர்வாகிகளும் வலியுறுத்தினர். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
பிரம்மோஸ்தவம் நடக்கும் வேலையில் புத்தூரில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் மறைவிடம்: இதையடுத்து, குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் நேற்று வெள்ளிக்கிழமை பதுங்கியிருந்த போலீஸ் பக்ரூதின் என்பவனை கைது செய்தனர். இவன் கொடுத்த தகவலின்படி இன்று காலையில் சென்னை அருகே ஆந்திர எல்லையான புத்தூரில் (சித்தூர் மாவட்டம்) பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்ட சிலர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது[1]. இதனையடுத்து போலீசார் துப்பாக்கிகளுடன் மேதரா வீதியில் உள்ள ஒரு வீட்டை முற்றுகையிட்டனர். இங்கு போலீசார் வருவதை அறிந்த பயங்கரவாதிகள் போலீசார் நோக்கி சுட்டனர். கதவை தட்டியபோது இரண்டு போலீசாரை அரிவாளால் வெட்டினர், இதில் இருவரும் படுகாயமுற்றனர். இதனையடுத்து போலீசாருக்கும், பயங்கரவாதிகள் இடையேயும் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
தில்லியிலிருந்து எஸ்-ஐ.டி படை வந்தது: இன்று காலையில் தில்லியிலிருந்து எஸ்.ஐ.டி படை வந்தது. மத்திய அரசின் ஆக்டோபஸ் என்ற படையும், தமிழக, ஆந்திர போலீஸ் படையும் இணைந்து இந்த ஆப்ரேஷனை நடத்தின[2]. இந்த துப்பாக்கிச்சண்டையில் தமிழக போலீஸ்காரர் 2 பேர் காயமுற்றனர். முன்னதாக போலீசார் இறந்ததாக கூறப்பட்டது[3]. போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து போனில் பேசிவந்தது தெரிந்தது. ஜிஹாதிகள் இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்துள்ளனர். ஒடரு வீட்டில் பதுங்கியுள்ளனர். உள்ளே ஒருவேளை குண்டுக்லள் வைத்திருக்கக் கூடும் என்பதால், போலீசாரார் அதிரடியாக உள்ளே நுழைய பயப்படுகின்றன்சர் என்று தெலுங்கு ஊடகங்கள் எடுத்துக் காட்டின.
தமிழகத்தின் “அல்முஜாகிதீன் படை”[4]: மதுரை, நெல்பேட்டையைச் சேர்ந்த பிலால் மாலிக்கும், “போலீஸ்’ பக்ருதீனும், “அல்முஜாகிதீன் படை” இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என, போலீசார் தெரிவிக்கின்றனர். அதாவது அல்-உம்மா, அல்-முஜீஹித்தீனாக மாறியது போலும். இதன் உறுப்பினர்கள், “தியாகப்படை” என்றும் அழைக்கப்படுகின்றனர். அதாவது ஜிஹாத் தமிழகத்தில் “தியாகத்தோடு” செயல்படுவது மெய்ப்பிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இந்த இயக்கம், மதுரையில் செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்திற்கு இவ்விதமாகத்தான் இஸ்லாமிய தீவிரவாதம் இறக்குமதி செய்யப்பட வேண்டும் போலிருக்கிறது. கடந்த, 2005ல், மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி, காளிதாஸ் கொலையில், 17 வயதாக இருந்த, பிலால் மாலிக் சேர்க்கப்பட்டான். அதன் பின், பூசாரி கங்காதரன் கொலை, அத்வானி யாத்திரையில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்குகளில் தேடப்பட்டு வருகிறான். பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருபவன் மாலிக். இவனை கண்டு பிடித்து தருபவருக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று போலீசார் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.
பீடிசுற்றும் தொழிலாளிகள் போர்வையில் ஜிஹாதி குடும்பங்கள்: போலீஸ் விசாரணை அல்-உம்மா பயங்கரவாதி பிலால்மாலிக், இரண்டு மாதத்திற்கு முன்னர் தான் தற்போது குடியிருக்கும் வீட்டை, அங்குள்ள நண்பர் உதவியுடன் பீடிசுற்றும் தொழிலாளிகள் என்ற போர்வையில் அவ்வீட்டை வாடகைக்கு பிடித்துள்ளான்[5]. பீடி உற்பத்தி செய்யும் முஸ்லிம் தொழிற்சாலை அதிபர்கள் இந்துவிரோத பிரசுரங்களுக்கு உதவுகிறார்கள் என்பதை முந்த்யைய ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளேன். இந்த இடம் “முஸ்லிம் காலனி” என்றே அழைக்கப்படுகிறது. குடியேறியபோது அவனுடன் நான்கு குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் மற்றவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதாவது “தியாகம்” செய்யவேண்டிய நிலை வரும் போது, “குடும்பங்கள்” சென்று விடும் போலிருக்கிறது. பிலால்மாலிக்கின் குடும்பத்துனருடன் மேலும் சிலர் மட்டும் தற்போது அங்கு தங்கி உள்ளனர். இந்த தகவலை தொடர்ந்து, பிலால்மாலிக்குடன் தங்கியிருந்தவர்கள் குறித்த விசாரணையை போலீசார் துவக்கி உள்ளனர். ஜிஹாதிகளுக்கு இப்படித்தான் “லாஜிஸ்டிக்ஸ்” கிடைக்கிறது போலும்!
தமிழக ஜிஹாதிகள்-போலீசார் துப்பாக்கி சண்டை: தமிழக-ஆந்திர எல்லை கிராமத்தில் வெள்ளிக்கிழமையன்று துப்பாக்கி முனையில் பக்ருதீன் பிடிபட்டான். இதற்குள் மற்ற தீவிரவாதிகள் சித்தூரில், ஒரு வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்ததும், தமிழக போலீசார், அவ்வீட்டை வளைத்தனர். விசயம் தெரிந்த தமிழக ஜிஹாதிகள், போலீசார் மீது தாக்க ஆரம்பித்தனர். துப்பாக்கிகளால் சுட்டதாகவும் தெரிகிறது[6]. ஒரு போலீஸ்காரரை – சர்க்கிள் இன்ஸ்பெக்டர் லட்சுமண மூர்த்தி – தமிழக ஜிஹாதி குத்தித் தப்பிச் சென்றுவிட்டதாக ஆங்கில செனல்களில் செய்தி வந்துக் கொண்டிருக்கின்றது. போலீஸ் உடனே இறந்துவிட்டதாகத் தெரிகிறது, இன்னொரு போலீசார் காயமடைந்துள்ளார். சுமார் 30 போலீசார், இந்த வேட்டையில் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் தமிழக-ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். என்.டி.டிவி இதனை என்கவுன்டர் என்று வர்ணித்துள்ளது[7]. அதாவது, சட்டரீதில் ஜிஹாதிகளுக்கு உதவ ஆலோசனையை சூசகமாகத் தெரிவிக்கிறது. உடனே, ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுவிடுவார் என்பது தெரிய வரும்.
பிலால்மாலிக்குடன் போலீசார் பேச்சு-வார்த்தை[8]: ஆந்திர எல்லை கிராமமான புத்தூரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருக்கும் பைப் வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்ட அல் உம்மா பயங்கரவாதியுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையா, பேரமா, உடன் படிக்கையா என்பது பிறகு தான் தெரிய வரும். அவனை உயிருடன் பிடிக்க வேண்டும் என முடிவெடுத்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் போது, பிலால்மாலிக்கை சரண் அடையும்படி போலீசார் வலியுறுத்தியதாகவும், அதற்கு அவன் மறுப்பு தெரிவித்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன. பிறகு,வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பிலால்மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகிய இருவரும் போலீசாரிடம் சரண் அடைந்தனர்[9]. இதன்மூலம், 12 மணி நேர அதிரடி நடவடிக்கை நிறைவடைந்தது. முன்னதாக, வீட்டில் பதுங்கியிருந்த ஒரு பெண், மூன்று குழந்தைகளை வெளியில் அனுப்பிய பிலால்மாலிக், பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பன்னா இஸ்மாயிலுடன் சரண் அடைந்தான். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் எங்கு உள்ளனர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. எப்படியிருந்தாலும், மருத்துவமனையில் சேர்க்கப் படுவர். உபசரிக்கப் படுவர். அதற்குள் நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்படும்!
® வேதபிரகாஷ்
05-10-2013
[7] Firing between suspected militants and police in Andhra Pradesh; one cop killed: report
Hyderabad: A policeman has been killed and another injured in an on-going encounter with suspected militants in the Chittoor district of Andhra Pradesh, according to reports. A team of 30 policemen have reportedly surrounded the men, who are believed to be heavily armed. Police sources say the men are suspected to be behind the killing of Bharatiya Janata Party’s Tamil Nadu unit general secretary V Ramesh, who was attacked fatally with sharp-edged weapons near his house in July.
http://www.ndtv.com/article/south/firing-between-suspected-militants-and-police-in-andhra-pradesh-one-cop-killed-report-428105
பிரிவுகள்: ஃபிதாயீன், அடிப்படைவாதம், அடையாளம், அத்தாட்சி, அத்வானி, அமோனியம், அல் - உம்மா, அல்-முஜாஹித்தீன், ஆந்திரா, ஆர்.எஸ்.எஸ், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்துக்கள், உருவ வழிபாடு, கலவரம், கவுனி, காஃபிர், கிச்சான், குடும்பம், குடை, குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, சித்தூர், ஜிஹாதி, திருப்பதி, பக்ருதீன், பன்னா, பயம், பிலால், பீடி, பீதி, புகையிலை, போலீஸ்
Tags: அச்சம், அல் - உம்மா, ஆந்திரா, ஆல்ப்-முஜாஹித்தீன், குடும்பம், கைது, கொலை, சித்தூர், ஜிஹாதி, தியாகம், திருப்பதி, துப்பாக்கி, பக்ருதீன், பன்னா, பயம், பிலால், பீதி, பேச்சுவார்த்தை, முஸ்லிம், லீக்
Comments: 2 பின்னூட்டங்கள்
ஒக்ரோபர் 5, 2013
சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு: முக்கிய எதிரி “போலீஸ்‘ பக்ருதீன் துப்பாக்கி முனையில் கைது!

Fakruddin alias Police Fakruddin – The Hindu photo
போலீசாரால் மும்முரமாகத் தேடப்பட்டவர்களில் ஒருவன் பிடிபட்டான்: சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய எதிரியான “போலீஸ்’ பக்ருதீன் என்று அழைக்கப்படும் பக்ருதீன் வெள்ளிக்கிழமை (04-10-2013) பிடிபட்டார்[1]. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ரமேஷ், சேலத்தில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி இரவு அவரது அலுவலகத்தின் முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை குறித்து சேலம் மாநகர போலீஸார் விசாரணை செய்தனர். வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணை சி.பி.சி.ஐ.டி. சிறப்புப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் தனிப்படை போலீஸார் வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகவும், பெங்களுரில் பாஜக அலுவலகம் அருகே வெடிகுண்டு வைத்த வழக்கு, மதுரையில் அத்வானி செல்லவிருந்த பாதையில் வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவம் ஆகியவை தொடர்பாகவும் –
- மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன் (35),
- பிலால் மாலிக் (25),
- திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில் (38),
- நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் (45)
ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர்[2]. மேலும் தேடப்படும் 4 பேரையும் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ. 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் டி.ஜி.பி. அலுவலகம் அறிவித்தது. போலீஸார் இவ்விசயத்தில் அதிக அளவில் தேடுதல் முயற்சிகள், யுக்திகளைக் கையாண்டுள்ளது. ஒரு லட்சம் போஸ்டர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அச்சடித்து “பிடித்துக் கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு” என்று அறிவித்தது. தொலைக்காட்சிகளிலும் அறிவிக்கப்பட்டது[3].

போலீஸ் பக்ருதீன், – அல்-உம்மா,
ஏற்கெனவே கைதானவர்கள்: பலவித வன்முறை, தீவிரவாத குரூரக் காரியங்களுக்காகவும், குற்றங்களுக்காகவும் ஏற்கெனவே கைதானவர்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- கே. பீர் மொஹித்தீன் [K Peer Mohideen (39)],
- ஜே. பஷீர் அஹமது [ J Basheer Ahmed (30)]
- சையது மொஹம்மது புஹாரி என்கின்ற கிச்சான் புஹாரி [Syed Mohammed Buhari alias Kitchan Buhari (38) ]
முதலியோர் ஏற்கெனவே பெங்களூரு பொலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்[4]. அத்வானி கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வரும் நாகூர் அனீபா என்கின்ற மொஹம்மது அனீபாவை ஜூலை 9, 2013 அன்று திண்டுகல்லில், வத்தலகுண்டு என்ற இடத்தில் மறைந்திருந்தபோது, போலீஸார் கைது செய்துள்ளனர்[5].

போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், அபுபக்கர் சித்திக் – அல்-உம்மா,
தமிழ்நாடு-ஆந்திரா எல்லைப் பகுதியில் துப்பாக்கி முனையில் பிடிப்பட்டார்: இந்நிலையில் சென்னை பெரியமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருப்பதி திருக்குடை ஊர்வலத்துக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதில் இந்து அமைப்புகளின் தலைவர்கள் பங்கு கொள்வதால், அவர்களை இலக்காக வைத்து தாக்குதல் நடக்கக் கூடும் என்றதால், முக்கியமான பகுதிகளில் மாநில உளவுப்பிரிவு போலீஸார், மதவாத தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், க்யூ பிரிவு போலீஸார், ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸார் ஆகியோர் தமிழ்நாடு-ஆந்திரா எல்லைப்பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சூளையில் ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வுப்பிரிவு போலீஸார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நிற்பதை பார்த்தனராம். உடனே அந்த நபரை அப்பிரிவின் இன்ஸ்பெக்டர் பிடிக்க முயன்றதாகத் தெரிகிறது. ஆனால் அந்த நபர், இன்ஸ்பெக்டரை தள்ளிவிட்டு ஓட முயன்றாராம். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த இன்னொரு இன்ஸ்பெக்டர் துப்பாக்கி முனையில், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தார். அவனிடத்தில் மூன்று மொபைல் போன்கள், சில சிம் கார்டுகள், தமிழ்நாட்டின் வரைப்படங்கள், ஆவணங்கள் முதலியவை கண்டெடுக்கப்பட்டன[6]. அவரிடம் விசாரணை செய்ததில், அவர் போலீஸாரால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தேடப்படும் போலீஸ் பக்ருதீன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவரை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பக்ருதீனின் கூட்டாளிகள் யாரேனும் சென்னையில் இருக்கின்றனரா என போலீஸார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
தீவிரவாதியின் புராணம் – போலீஸ் பக்ருதீன் வளர்ந்தது எப்படி?[7]: மதுரை நெல்பேட்டையை சேர்ந்தவன் பக்ருதீன். இவனது தந்தை சிக்கந்தர் அலி போலீஸ் ஏட்டாக பணியாற்றினார். இதனால் போலீஸ்காரர் மகன் பக்ருதீன் என அழைக்கப்பட்ட பக்ருதீனுக்கு நாளடைவில் ‘போலீஸ்‘ பக்ருதீன் ஆனான். தமிழகத்தில் எப்படி அவனவன் தனக்காகப் பட்டத்தை வைத்துக் கொள்கிறானோ, அதுபோல, தீவிரவாதிகளும் வைத்துக் கொள்வதில் ஒன்றும் வியப்பில்லைதான். தாயார் சையது மீரா. சகோதரர்கள் 2 பேர். முகம்மது மைதீன் பீடி,சிகரெட் வியாபாரம் செய்துவருகிறார். மற்றொரு சகோதரர் தர்வீஸ் மைதீன் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அத்வானியை குண்டுவைத்து கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டான் பக்ருதீன். நெல்பேட்டையை சேர்ந்த பெண்ணை பக்ருதீன் திருமணம் செய்த நிலையில், சில மாதங்களிலேயே மனைவியைவிட்டு பிரிந்துவிட்டான். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அல் உம்மா இயக்கத்தின் முக்கிய நிர்வாகி இமாம் அலிக்கு நெருக்கமானவன் பக்ருதீன். 1995ல் விளக்குத்தூண் ஸ்டேஷனில் அடிதடியில் ஈடுபட்டதாகவும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே ஆண்டில் திடீர்நகரில் கொலை முயற்சி வழக்கு, 1996ல் அனுப்பானடியில் அழகர் என்பரை கொலை செய்ததாகவும், மீனாட்சி கோயிலில் வெடிகுண்டு வைத்ததாகவும், மதிச்சியத்தில் கொலை வழக்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவன் ஜாலியாக சுற்றிவந்துள்ளான், தொடர்ந்து குரூரக் குற்றங்களை செய்து வந்துள்ளான்.
7.3.2002ல் துப்பாக்கியால் சுட்டு இமாம் அலியை தப்பவைத்ததாக திருமங்கலம் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2010ல் விளக்குத்தூணில் கொலை முயற்சி மற்றும் உதவி கமிஷனர் வெள்ளத்துரையை மிரட்டியது உள்ளிட்ட 2 வழக்குகள், 2011ல் பாஜ மூத்த தலைவர் அத்வானியை குண்டு வைத்து கொல்ல முயன்றதாக திருமங்கலம் தாலுகா போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 30 வழக்குகளுக் கும் மேல் பக்ருதீன் மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டு தயாரிப்பதில் கில்லாடி: இமாம் அலி தப்பிய வழக்கில் 37 பேருக்கு தண்டனை வழங்கப்பட் டது. 7 பேருக்கு 7 ஆண்டும், 32 பேருக்கு 5 ஆண்டுகளும் தண்டனை விதிக் கப்பட்டது. இவர்களில் இமாம் அலி, சீனியப்பா, மாங்காய் பஷீ, முகம்மது இப்ராகீம் ஆகியோர் பெங்களூரில் 2002 செப்.29ல் சுட்டுக்கொல்லப்பட்டனர். 7 ஆண்டு தண்டனை பெற்ற போலீஸ் பக்ருதீன் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தான். அங்கும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தான். இதன் பேரில் 2010ல் ஜாமீனில் வெளியே வந்தவன் பின்னர் போலீசில் சிக்கவில்லை, அதாவது தப்பிச்சென்றான் என்று சொல்லாமல் ஊடகங்கள் எடுத்துக் காட்டுகின்றன. பக்ருதீன் தனது கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு மிகப்பெரிய ரிமோட் குண்டை தயாரித்து 2011 அக்.28ல் பாஜ மூத்த தலைவர் அத்வானி வரும் பாதையில் வைத்தான். அதிர்ஷ்டவசமாக இதை முன்கூட்டியே போலீ சார் பார்த்து அகற்றியதால் அத்வானி தப்பினார். அப்போது கைப்பற்றப்பட்ட குண்டு, தயாரித்த தொழில்நுட்பத்தை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதன் பின்னரே போலீஸ் பக்ருதீன் எவ்வளவு ஆபத்தானவன் என்பதை போலீ சார் உணர்ந்து தீவிரமாக தேட துவங்கினர். பாவம், இத்தனை கொலைகள் செய்தும் அவனது, குரூர மனப்பாங்கை போலீசாரால் கண்டுப் பிடிக்க முடிவில்லை என்றல், அதனை என்றென்பது?
குரூரக் கொலைகள் செய்யும் மது அருந்தாத ஒழுக்கமான ஜிஹாதி: இந்த வழக்கில் 8 பேர் சிக்கியும் பக்ருதீன் சிக்கவில்லை. அடுத்தடுத்து கொலைகள்: ஊர் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் பக்ருதீன் ஆர்வம் கொண்டவன். அதாவது சுற்றிக் கொண்டே தீவிரவாத கொலைகளை செய்வான் போலும்! அவனுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. ஏதோ ஒழுக்கமான ஜிஹாதி போன்ற சித்தரிப்பு, திகரன் செய்துள்ளது. 2013 ஏப்.3ல் பெங்களூரில் பாஜ அலுவலகம் அருகே வெடிகுண்டு வெடித் தது, ஜூலை முதல் தேதி வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன், 19ம் தேதி சேலத்தில் தமிழக பாஜ பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தேடப்பட்டு வரும் பக்ருதீன் மீது இந்த கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை கிச்சான் புகாரியுடன் சேர்ந்து பெங்களூர் குண்டு வெடிப்பில் ஈடுபட்டான் பக்ருதீன் என தகவல் வெளியானது. இதற்கிடையே மதுரை மேலமாசி வீதியில் பால்கடைக்காரர் சுரேஷ் கொலையிலும் போலீஸ் பக்ருதீன் தலைமையிலான கும்பல் செய்தது தெரிந்தது. அப்போது போலீசார் விசாரித்தபோதுதான் அவன் மதுரைக்கு அடிக்கடி வந்து சென்றதும், நண்பர்கள் பலரது வீடுகளில் தங்கியிருந்ததும் தெரிந்தது. பக்ருதீனுடன் கூட்டாளிகள் பிலால்மாலிக், பன்னா இஸ்மாயில், அபுபக்கர் சித்திக் ஆகியோர் மிக நெருக்கமாக செயல்பட்டுள்ளனர். பிலால் மாலிக் இந்து மக்கள் கட்சி தலைவர் காளிதாஸ் 2005 ஜூன் 22ல் மதுரையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவன். அப்போது அவருக்கு 17 வயது என்பதால், மைனர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தான்[8]. பின்னர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அங்கு மோதலில் ஈடுபட்டதாக வழக்கு உள்ளது.
நெல்லை சைவத்தின் இருப்பிடமா, ஜிஹாதிகளிம் குகையா என்ற நிலையில் நெல்லை கும்பலுடன் நெருக்கம்: முகம்மது அனிபா நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்தவன். தென்காசி நகர் இந்து முன்னணி தலைவர் குமாரபாண்டியன் 2006ல் கொலை செய்யப்பட்டார். இதன் எதிரொலியாக நெல்லை நகர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் மைதீன் ஷேக்கான் கொல்லப்பட்டார். குமார பாண்டியன் கொலை வழக்கில் முகம்மது அனிபா குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த 2 கொலை வழக்கு குற்றவாளிகளும் 2007 ஆகஸ்ட்டில் மோதிக்கொண்டதில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கிலும் முகம்மது அனிபா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளான். இவ்வழக்கில் தலைமறைவாக இருக்கவும், விசாரணை, ஜாமீன் பெற்றபோதும் மதுரையில் பதுங்கியிருக்க பக்ருதீன் உதவினான். இந்த பழக்கம் நெல்லையை சேர்ந்த பலருடன் நெருக்கமாக பழக பக்ருதீனுக்கு முகம்மது அனிபா மூலம் வாய்ப்பு கிடைத்தது. இப்படித்தான் கிச்சான் புகாரியுடன் பக்ருதீனுக்கு பழக்கம் ஏற்பட்டது.
தமிழக ஜிஹாதிகளுக்கு உதவுவது யார்?: ஊடகங்கள் இப்படி ஜிஹாதிகளின் புராணம் பாடினாலும், தமிழகத்தில் உள்ளவர்களின் ஆதரவு இல்லாமல், அவர்கள் இவ்வாறு தொடர்ந்து குரூரக் குற்றங்களை செய்து கொண்டிருக்க முடியாது. அதிகார, அரசியல் மற்றும் மதவாத சக்திகளின் உதவியில்லாமல் நிச்சயமாக, இத்தகைய கூட்டுக் குற்றங்கள், சதி திட்டங்கள், திட்டமிட்ட கொலைகள் முதலியன நடத்தப்பட முடியாது[9]. எல்லா காரியங்களுக்கும் பணம் தேவைப் படுகிறது. பணம் இல்லாமல், தீவிரவாதச் செயல்களைச் செய்யமுடியாது. அதற்கும் மேலாக, இன்று “லாஜிஸ்டிக்ஸ்” என்று பேசப்படுகின்ற உதவிகள் அவர்களுக்குக் கிடைக்காமல், அத்தகைய காரியங்களை செய்யவே முடியாது. அதற்கு லட்சக் கணக்கில், ஏன் கோடிக்கணக்கில் செலவாகிறது. ஆகவே, யார், எப்படி அத்தகைய பெரிய பண பரிவர்த்தனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கவனித்தாலே, இந்த ஜிஹாதிகளை, முஜாஹித்தின்களை, மதவெறியர்களைக் கண்டு பிடித்து விடலாம்.
எவ்விதத்திலும் உதவும் சித்தாந்திகள் தங்களது போக்கை மாற்ரிக் கொள்ள வேண்டும்: இந்திய செக்யூலரிஸவாதிகள் சாவிலும் அந்த பாரபட்சத்தைக் கடைப் பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள். இது திராவிட, நாத்திக, கம்யூனிஸ சித்தாந்திவாதிகளின் செயல்முறைகளுடன் ஒத்துப் போவதைப் பார்க்கமுடிகிறது[10]. மேலப்பாளையத்தில், போலீசார் சோதனை செய்யச் சென்றபோது, முஸ்லீம்கள் அதனால் தான், தாங்கள் ஏதோ சட்டங்களுக்கு உட்படாத மனிதர்கள் போலக் காட்டிக் கொண்டார்கள், போலீசாரை மிரட்டினார்கள்[11]. சென்னையில் ஆர்பாட்டம், ஊர்வலம் என்று கூட்டங்களைக் கூட்டினார்கள்[12]. இதற்கெல்லாம், லட்சக் கணக்கில் பணத்தைக் கொடுத்து உதவுவது யார் என்று ஆராய்ந்தாலே உண்மையை அறிந்து கொள்ளலாம். பெங்களூரு குண்டுவெடிப்பு இவர்களின் கூட்டுசதிமுறைகளை அம்பலமாக்கியுள்ளது[13]. நிகழ்சிகளை கோர்வையாக படிக்கும் சாதாரண மனிதனுக்குக் கூட, தமிழக ஜிஹாதிகளின் மனப்பாங்குப் புரிந்து விடும்[14], இருப்பினும் தமிழக அறிவுஜீவிகள் அதனை கண்டுகொள்ள மறுக்கிறது.
® வேதபிரகாஷ்
05-10-2013
[2] Mr. Nicholson said three persons – Fakruddin alias ‘Police’ Fakruddin, Bilal Malik and Hanifa – were the main conspirators in the plan to blow up the convoy of Mr. Advani. They were present at the scene of crime and escaped on seeing the police.
[3] This is perhaps for the first time in the crime history of Tamil Nadu that as many as one lakh posters have been printed by police announcing a cash prize of Rs five lakh (totalling Rs 20 lakh) on heads of each of the four suspects — ‘Police’ Fakruddin (35), Bilal Malik (25), Panna Ismail (38), and Abu Backer Siddique (45). The posters in Tamil and English are being displayed at vantage points across Tamil Nadu to get inputs from the public on the accused.
13.060416
80.249634
பிரிவுகள்: அடிப்படைவாதம், அடையாளம், அமைதி, அல் - உம்மா, ஆந்திரா, ஆர்.எஸ்.எஸ், ஆர்பாட்டம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்துக்கள், இமாம் அலி, இஸ்லாம், உக்கடம், உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஏர்வாடி, ஏர்வாடி காசிம், ஓட்டுவங்கி, கவுனி, காபிர், குடை, குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கொடை, சங்கம், சித்தூர், சிமி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, திருப்பதி, முஸ்லிம்
Tags: அத்வானி, அல் - உம்மா, ஆந்திரா, சித்தூர், ஜிஹாதி, திருநெல்வேலி, பக்ருதீன், பெங்களூரு, பைப் குண்டு, போலீஸ்
Comments: Be the first to comment
ஜூலை 29, 2013
Indian Secularism
தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதற்கும், கந்நாடகத்திற்கும் தொடர்பு ஏன்?
கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மாறி-மாறி அரசாளும் நிலையில், எதையாவது திசைதிருப்ப வேண்டும், கவனத்தை மாற்ற வேண்டும் என்றால், கோயில்களைத் தாகுவது, சிலைகளை உடைப்பது, உண்டியல்களை உடைத்து பணம் திருடுவது, இந்துக்களை இழிவாகப் பேசுவது, இந்துக்களைத் தாக்குவது என்று சிலர் ஆரம்பித்து விடுகின்றனர். அதாவது, நாத்திகப் போர்வையில், பகுத்தறிவு வேடத்தில், இந்துவிரோதிகள் அத்தகைய முகமூடிகளை அணிந்து கொண்டு செய்து வந்தார்கள், வருகிறார்கள். ஆனால், இப்பொழுது தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதில் ஒரு முறை, அமைப்பு, திட்டம் காணப்படுகிறது எனலாம்.
கோயம்புத்தூர் ஜிஹாதி தலமாக மாறி வருவது: கோவைக் குண்டுவெடிப்புக்குப் பின்னர், கோயம்புத்தூரில் சில பகுதிகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் ஜிஹாதிகளின் புகலிடமாக மாறி விட்டுள்ளன. கேரள தொடர்புகளும் இதில் தென்படுகின்றன. இந்து பெண்கள் முஸ்லீம் பையன்களைக் காதலித்து சென்று விடுவது, குடும்பங்களை பாதிட்துள்ளன. இதைத்தான், முஸ்லீம்களின் திட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், பாரம்பரிய ரீதியில் இந்துக்களின் சமய அமைப்புகளும் அங்கு இயங்கி வருகின்றன. இவை, இந்த மாற்றத்திற்கு முன்பிலிருந்தே இருந்து வந்துள்ளவை. ஆனால், கோவை குண்டுவெடிப்பிற்குப் பிறகு, அல்-உம்மா, சிமி மற்றும் அவற்றின் மாற்று உருவங்கள், அமைப்புகள் முதலியவை, வெளிப்படையாக இந்து எதிர்ப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளன.
இந்து இயக்கங்களில் ஒற்றுமை இல்லாமை: திராவிடக் கட்சிகளின் ஆளுமை, அதிகாரம், தாக்கம் முதலிய காரணங்களினால், இந்து இயக்கங்களும்…
View original post 300 more words
பிரிவுகள்: அன்சார், அப்துல் நாஸர் மதானி, அரசியல் விபச்சாரம், அல் - உம்மா, இமாம் அலி, உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், எஸ்டிபிஐ, கலவரங்கள், கலவரம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், சஹாபுத்தீன், சாகுல் அமீத், சித்திக் அலி, ஜமாஅத், ஜமாத், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, டெட்டனேட்டர், டெட்டனேட்டர்கள், தமிழகத்து ஜிஹாதி, தமிழகத்து தீவிரவாதி, தமிழ் ஜிஹாதி, தமிழ் முஸ்லீம், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், தமீமுன் அன்சாரி, தமுமுக, தேச விரோதம், தேசவிரோதம்
Tags: கிச்சான், கிச்சான் புகாரி, ஜிஹாதி, ஜிஹாத், தீவிரவாதம், பக்ருதீன், பஷீர், பீர் முகமது, புகாரி, பெஙளூரு, மேலப்பாளையம்
Comments: 4 பின்னூட்டங்கள்
ஜூலை 11, 2013
அத்வானி வெடிகுண்டு கொலை முயற்சி – ஒருபக்கம் கைது, மறுபக்கம் ஜாமின், டிஎஸ்பி தாக்கப்படுதல் முதலின….

நீதிமன்றத்தில் சட்டமீறல்கள்: அத்வானியைக் கொலை செய்ய திட்டமிட்ட ஜிஹாதிகளுள் ஒருவன் ஜாஹிர் ஹுஸைன் என்ற குற்றவாளி நீதிமன்றத்தில் செய்த கலாட்டாவால் பரப்பரப்பு ஏற்பட்டது. மாஜிஸ்ட்ரேட் முன்பு கொண்டுவரப்பட்ட அவன் பிளேடினால் தனது கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றான். உடனே, போலீஸார் தடுத்து அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறிய காயத்துடன் அவன் தப்பினான். கடந்த ஏப்ரல் மாதம் கூட இதே மாதிரி தற்கொலை முயற்சியில் அவன் ஈடுபட்டான்[1]. அப்பொழுது தன்னை விடுவிக்குமாறு முறையீடு செய்திருந்தான். ஆனால் நீதிபதி அவனது மனுவை தள்ளுபடி செய்தார்[2].

முகமது அனிபா டிஎஸ்பியைத் தாக்குதல் (08-07-2013): திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டி எடமலையான் கோவில் அடிவாரத்தில் பதுங்கியிருந்த அத்வானி செல்லும் பாதையில் குண்டு வைத்த வழக்கில் முகமது அனீபாவை, டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை 08-07-2013 அன்று மடக்கி பிடித்தனர்[3]. அப்பொழுது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த முகமது அனீபா, டி.எஸ்.பி. கார்த்திகேயன் மீது வீசினார். இதில் டி.எஸ்.பி. கார்த்திகேயன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்[4]. இதனால் அந்த இடத்தில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவனை மடக்கி பிடித்த போலீசார், அவனிடம் வெடிமருந்து, ஜெலட்டின் குச்சிகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். வத்தலகுண்டு காவல்நிலையத்தில், தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், வெடிமருந்து மற்றும் ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்தாகவும், இந்து முன்னணி தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டு தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சி செய்தது உட்பட 5 வழக்குகள் முகமது அனீபா மீது டி.எஸ்.பி. கார்த்திகேயன் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளது[5].

ஒரு பக்கம் கைது, மறுபக்கம் 3 பேருக்கு ஜாமின்: மதுரை அலும்பட்டி பாலத்தில் 2011ஆம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி அத்வானி யாத்திரை மேற்கொண்ட போது அவரை கொல்லும் திட்டத்துடன் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குண்டு வைக்க உதவியதாக, 2011 நவம்வர் 1ல், மதுரை நெல்பேட்டை அப்துல்லா, சிம்மக்கல் தைக்கால் தெரு ஆட்டோ டிரைவர் இஸ்மத் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவல்படி, இமாம்அலி கூட்டாளிகள் “போலீஸ்’ பக்ருதீன், பிலால்மாலிக் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது[6]. இவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், கடந்தாண்டு மார்ச்சில், கூட்டாளி ஹக்கீம் கைது செய்யப்பட்டார். இந்தாண்டு மார்ச் 27ல், “போலீஸ்’ பக்ருதீன் சகோதரர் நெல்பேட்டை தர்வீஸ் மைதீன், மதுரை வில்லாபுரம் சையது, குப்புப்பிள்ளை தோப்பு முஸ்தபா கைது செய்யப்பட்டனர். மார்ச் 29ல், குண்டு வைக்க, பைப் வாங்கிக் கொடுத்ததாக, திருநகர் ஜாகீர் உசேன்கைது செய்யப்பட்டார்[7]. தென்காசியில் வடக்கு மவுண்ட் ரோட்டில் வசித்து வந்த முகமது அனீபா மீது இந்து முன்னணி நகர தலைவர் குமார்பாண்டியன் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட மோதலில் அவரது சகோதரர்கள் 3 பேரும் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்குகளிலும் முகமது அனிபா முக்கிய குற்றவாளியாவார்[8].

குற்றவாளிகள் விஷயத்தில் அரசியல் விளையாட்டு கூடாது: அத்வானியைக் கொண்டு வைத்து கொலைச்செய்ய முயன்றான் என்று காங்கிரஸார் அல்லது நாத்திகக் கட்சியினர் திமுக முதலியன சந்தோஷமாக இருந்து விடமுடியாது. குண்டுவெடிப்பில் தன் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டிருக்கிறார். அது திராவிட, தமிழ்சித்தாந்தங்களிடம் ஊறியிருந்ததால் இன்றளவும் காங்கிரஸாரால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. திராவிட சித்தாந்திகளுக்கும், காங்கிரஸ்காரர்கள்ளுக்கும் மோதல்கள் இருந்து கொண்டுதான் உள்ளது. அதேபோல இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட போது, சீக்கிய தீவிரவாதம் தலைத்தூக்கியது. சீக்கிய படுகொலைகளுக்குப் பின்னர் சீக்கியர் காங்கிரஸின் நிரந்தர எதிரிக்கள் ஆனார்கள். இப்பொழுது, ராகுல் காந்தி சரப்ஜித் சிங்கின் அந்திமக் கிரியைகளில் பங்கு கொண்டதால் மட்டும் ஒட்டு மொத்த சீக்கிய சமூகம் அவர்களுக்கு இழைத்த அநீதிகளை மறந்துவிடப் போவதில்லை. இதற்காக பிஜேபிகாரர்களுகும் சந்தோஷப்பட்ட முடியாது.

தொடர்ந்து குற்றவாளிகள் குற்றங்களை செய்வது ஏன்?: குற்றத்தைப் பழக்கமாகக் கொண்டுள்ளவர்களின் (habitual offenders / regular charge-sheeters / involved in multiple offences) இத்தகைய செயல்களை சட்டங்களை நிறைவேற்றுபவர்கள் மட்டுமல்லாது மற்றவர்களும் கூர்ந்து கவனிக்க வேண்டும். தொடர்ந்து கொலைகள் செய்து வருபவன் சாவதற்கு தயாராக இருக்கிறான் என்பது தெரிகிறது. அதிலும் முஸ்லிம் என்பதால் ஜிஹாதித்துவத்தில் ஊறியப்பிறகு, தியாகி விட்டதால் இனி அதே மனநிலையில் அழிவுகளில் தான் அவன் ஈடுபடுவான். அத்தகைய போக்கு இவர்களில் காணப்படுகிறது. இதனால், மேன்மேலும் போலீஸார் வழக்குகள் போட்டுக் கொண்டிருந்தால் என்ன பயனும் இல்லை. மேலும் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டுள்னர் என்றறிந்தும் மற்ற முஸ்லிம்கள் கண்டிக்காமல் இருப்பது நோக்கத்தக்கது. அதாவது மற்றவர்களுக்குக் குற்றவாளிகளாக, கிரிமினல்களாக இருந்தாலும் அவர்களைப் பொறுத்த வரைக்கும் “ஜியாதி” மற்றும் “ஷஹீத்” என்ற நிலையில் வைத்து விட்டதால் அமைதியாக இருக்கிறார்கள். இது இந்திராகாந்தி-ராஜிவ்காந்தி கொலையாளிகளை வீரர்களாகக் கருதி வழிபடுவதைப் போன்றதே ஆகும். மாறாக, நீதிமன்ற மறுப்பு, போலீஸ் தடைகளை மீறி அத்தகைய கிரிமினல் குற்றவாளிகளை பத்தாண்டு சிறைவாசம் முடிந்தால் விடுவிக்கவேண்டும் என்று வெளிப்படையான கோரிக்கை வைத்து ஆர்பாட்டம் நடத்துவதையும் காணலாம். இவையெல்லாம் பத்து-பதினைந்து நாட்களில் நடக்கின்றன.
நடக்கும் நிகழ்சிகள் காட்டுவது என்ன?: பொதுமக்கள், தொடர்ந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற செய்திகளைப் படித்து மரத்து போயிருக்கிறார்கள். குண்டுவெடிப்புகள், குரூரக் கொலைகளைக் கூட அடிக்கடிக்காட்டி, பிரபலப்படுத்தி, உணர்ச்சியற்றத் தன்மையினை உருவாக்கி விட்டனர்.
01-07-2013 (திங்கட்கிழமை): வெள்ளையன், இந்து முன்னணி கொலை[9]
04-07-2013 (வியாழக்கிழமை): அத்வானி கொலை முயற்சி வழக்கில் சையது சகாபுதீன், தர்வீஸ் முகைதீன், முஸ்தபா ஆகியோருக்கு ஜாமின் வழங்கப்பட்டது[10].
07-07-2013 (ஞாயிற்றுக்கிழமை): தமுமுக நீதிமன்ற மறுப்பு, தடைகளை மீறி ஊர்வலம், ஆர்பாட்டம்.
08-07-2013 (திங்கட்கிழமை): சிறப்பு புலனாய்வுபிரிவு போலீசார் தென்காசி முகமது அனீபாவை திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவரை வருகிற 22–ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி பன்னீர் செல்வம் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து முகமது அனீபா சிறையில் அடைக்கப்பட்டார்[11].
கேரளாவில் கம்யூனிஸ்டுகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்திகளுக்கும் அடிதடி, மோதல்கள், கொலைகள் கூட இருந்து வந்தன. அதே போன்ற நிலை இன்று இந்து முன்னணி, பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் முஸ்லிம்கள் இடையே கொலைகள் ஏற்பட்டு வருகின்றன. அதாவது, நேரிடையான மோதல்கள் இல்லாமல், திட்டமிட்ட கொலைகளாக நடந்து வருகின்றன.
குற்றவாளிகளின் மனோதத்துவ அலசல்: சுருக்கமாக, கீழ்கண்ட நிலைகளை இக்குற்றவாளிகளின் போக்கில் காணலாம்:
- குற்றம் செய்ய மனநிலையை ஏற்படுத்திக் கொள்வது – தூண்டுதல்
- தொடர்ந்து அதே குற்றத்தை செய்வது – குற்றஞ்செய்ய மனநிலை ஸ்திரமான நிலை
- சட்டங்களை செயல்படுத்துவர்களைத் தாக்குதல்
- நீதிமன்றத்திலேயே, நீதிபதிக்கு முன்பாக சட்டமீறல் காரியங்களை செய்வது.
- தற்கொலை செய்துகொள்ள முயல்வது அல்லது அம்மாதிரி நடிப்பது.
- “காவலில் இறப்பு” என்ற நிலை உருவாக அழுத்தத்தை ஏற்படுத்துவது.
- இந்த குற்றவாளிகளுக்கு தொடர்ந்து சட்டரீதியில் ஆதரவு, பாதுகாப்புக் கொடுப்பது.
- பொய்யான வழக்குகள் போட்டு திசைத் திருப்புவது[12].
- இக்குற்றவாளிகளின் குடும்பங்களை கவனித்துக் கொள்வது, ஆதரிப்பது, உதவுவது.
ஆகவே, இவையெல்லாம் ஒரே நாளில், ஒரே மாதத்தில், ஒரே ஆண்டில் தீர்மானித்து செயல்படுத்தும் காரியமல்ல. அவ்வாறு இவ்வுலகத்தில் எந்த மனிதனையும் தயார் படுத்து விடமுடியாது. ஏனெனில், எந்த மனிதனும் இறப்பதற்கு தயாராக இல்லை என்பதுதான் உண்மை. அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் தாம் எவனுக்கும் இருக்கும் ஆனால், மாறாக இறக்கத் தயாராகிரான், தயாராகி விட்டான் என்றால் அது இப்பொழுது காணப்படுகின்ற ஜிஹாதித்துவத்தைத் தான் எடுத்துக் காட்டுகிறது.
வேதபிரகாஷ்
© 11-07-2013
[9] வேலூரில் இந்து முன்னணி செயலாளர் படுகொலை: 5 வெடிகுண்டுகள் பறிமுதல், பதிவு செய்த நாள் –
ஜூலை 02, 2013 at 10:28:57 AM; http://puthiyathalaimurai.tv/five-bombs-seized-in-vellore
வேலூரில் ஹிந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் வெள்ளையன் கொலை செய்யப்பட்ட இடத்தில் 5 வெடிகுண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அவை அனைத்தும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு பின்புறம், நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஹிந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் வெள்ளையன் படுகொலை செய்யப்பட்டார். தகவலறிந்த காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.வெள்ளையன் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, வேலூரில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனிடையே, வேலூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலை அறநிலையத்துறை கையகப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்த ஹிந்து முன்னணி அழைப்பு அழைப்பு விடுத்திருந்தது. திட்டமிட்டபடி அந்தப் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிவுகள்: அத்தாட்சி, அத்வானி, அறுப்பு, ஆதாரம், கழுத்தறுப்பு, குற்ற மனப்பாங்கு, குற்றப் பழக்கம், குற்றம், கொலை, சட்டம், சாட்சி, ஜிஹாத், தற்கொலை, நீதி, நீதி மன்றம், பாலம், பிளேட், பைப், பைப் குண்டு, முகமது
Tags: அத்தாட்சி, அத்வானி, அப்துல்லாஹ்!, குற்ற மனது, குற்ற மனப்பாங்கு, குற்றப் பழக்கம், கொலை முயற்சி, சட்டம், சாட்சி, தாயீப், நீதி, நீதிமன்றம், பக்ருதீன், முகமது, மொஹம்மது
Comments: 6 பின்னூட்டங்கள்
ஏப்ரல் 7, 2013
நிலப்பிரச்சினை என்றால், கொலை செய்யப்பட்டது பிஜேபி மற்றும் கொலை செய்தவர்கள் பின்னணி வேறுவிதமாக இருப்பது எப்படி?

பரமக்குடியில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை, பதற்றம், சாலைமறியல்: ராமநாதபுரம், பரமக்குடியில் பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் முருகன், கொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். முருகன் பெரிய கடை அஜாரில் தேங்காய் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்[1]. பரமக்குடியில் மார்ச் 19, 2013ல், ஈஸ்வரன் கோயில் முன், பா.ஜ., முன்னாள், நகராட்சி கவுன்சிலர் முருகன், 46, மெயின் பஜாரில் தனது வீட்டில் மதிய உணவை சாப்பிட்டு விரட்டு கடைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது, இரண்டு மோட்டார் கைக்கிள்களில் வந்த நால்வர் வழிமறித்தனர். திடீரென்று “பைப்” குண்டுகளை வீசினர், ஆனால், அவை வெடிக்கவில்லை. தப்பித்து ஓட முயன்ற முருகனை நால்வரும் துரத்திச் சென்று, பயங்கர ஆயுதங்களால் கண்ட-துண்டமாக வெட்டிக் கொன்று ஓடிவிட்டனர்[2]. முருகனின் வெட்டப்பட்ட உடல் தெருவில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. இவ்வளவும் பட்டப்பகலில் நடந்தது[3].

இதனால் பரமக்குடியில் பதற்றம் ஏற்பட்டது. கடைகள், குறிப்பாக, பஜார் தெருவில் மூடப்பட்டன. இதை கண்டித்து, வணிகர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்து முன்னணி அமைப்பினர், மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்[4]. குற்றவாளிகளை உடனே கைது செய்யவும், கொலைக்கான காரணத்தை கண்டறியவும் வலியுறுத்தி பொதுமக்கள் மாலை 4 மணியளவில் பரமக்குடி, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது[5]. பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்ததால், பலர் பார்த்துக் கொண்டிருந்தனர். போலீஸார் அவர்கள் சொன்ன அடையாளங்களை வைத்து, கம்ப்யூட்டரில் படங்களை வரைந்து உருவாக்கி, அவற்றை மக்களிடம் காணித்து விசாரணையை நடத்தினர்[6].

ரபீக்ராஜா –இமாம் அலி கூட்டாளி, போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த் எப்படி இதில் சம்பந்தப் பட்டான்: ஊடகங்களில் வந்துள்ள செய்திகளைத் தொகுத்துப் பார்த்ததில் கிடைத்துள்ள விவரங்கள் அவர்களது பின்னணியை வேறுவிதமாக எடுத்துக் காட்டுகிறது. கைது செய்யப்பட்ட நால்வர்[7] –
- என். ராஜா முஹம்மது [N. Raja Mohamed (58)] – தற்போது சென்னை டி.நகரில் குடியிருந்து வரும் பரமக்குடி நாகூர் கனி மகன்[8],
- எம். மனோஹரன் ராஜா முஹம்மதுவின் மைத்துனர் [his nephew M. Manoharan (41) of Paramakudi] – திருவள்ளுவர் நகர் முத்துச் சாமி மகன்[9],
- எஸ். ரபீக் ராஜா அல்லது “வாழக்காய்” [‘Vazhakai’ alias S. Rafeeq Raja one of (35) two Madurai based mercenaries] – மதுரை காயிதேமில்லத் நகர் சுல்தான் அலாவுதீன் மகன்[10].
- ஏ. சாஹுல் ஹமீது [A. Sahul Hameed (37) another mercenary] -மதுரை தாசில் தார் பள்ளிவாசல் தெரு அகமது மகன்[11].
இதில் ரபீக்ராஜா, பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் போலீஸாரால் தேடப்படும் தீவிரவாதியும், இமாம் அலி கூட்டாளியுமான போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த் என்பது குறிப்பிடத்தக்கது[12].

தீவிரவாதிகள் தயாரிக்கும் வெடிகுண்டுகள் கூலிப்படைக்குக் கிடைக்குமா?: ரபீக் ராஜா, சாஹுல் ஹமீது மற்றவர்கள் உபயோகப்படுத்திய குண்டுகள் ஆச்சரியமாக உள்ளது. அவை மேம்படுத்தப் பட்ட உள்ளுக்குள் வெடித்து சிதறும் குண்டு [Improvised Explosive Devices (IED-Pipe bombs) were stuffed with Gel 90 explosives] வகையைச் சேர்ந்தது என்பதுதாகும். அவர்கள் அவற்றை கோயம்புத்தூரில் வாங்கியதாகச் சொல்கிறார்கள்[13]. சம்பவம் நடந்த இடத்தில் கிடந்த இரண்டு பைப் வெடி குண்டுகளை செயலிழக்கச் செய்து, போலீஸார் புலனாய்விற்கு எடுத்துச் சென்றனர்.
பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தேடப்படும் ரபீக் ராஜா இங்கு எப்படி வந்தான்?: கோயம்புத்தூர், திருப்பத்தூர், மதுரை என்ற இடங்கள், அவற்றின் தொடர்புகள் விஷயத்தை வேறுவிதமாக மாற்றிக் காட்டுகிறது. கிடைத்துள்ள வெடிகுண்டுகள், வெறும் குண்டுகள் அல்ல. அப்படியென்றால், –
- கோயம்புத்தூரில் அத்தகைய குண்டுகளைத் தயாரிப்பவர்கள் யார்?
- எங்கு தயாரிக்கிறார்கள்?
- அத்தகைய தொழிற்நுட்பம் எப்படி கிடைத்தது?
- அதற்கான பொருட்கள் – குறிப்பாக ஜெல், எப்படி கிடக்கின்றன?
- யார் அவற்றை வாங்கி, விநியோகிக்கின்றனர்?
- கோயம்புத்தூரில் அப்படி அவை விற்க்கப்படுகின்றனவா?
இதில் ரபீக்ராஜா, பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் போலீஸாரால் தேடப்படும் தீவிரவாதியும், இமாம் அலி கூட்டாளியுமான போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த். உதவி எஸ்.பி., விக்ரமன் தலைமையில், தனிப்படையினர் விசாரித்தனர்[14]. இதில் சிக்கிய பரமக்குடி மனோகரன், ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அதில், அவர் கூறியிருப்பது:பரமக்குடி வைகை நகர் சிவஞானம் என்பவர், 50 ஆண்டுகளுக்கு முன், 6.5 ஏக்கர் நிலம் வாங்கினார். அவர் இறந்த பின், நிலத்தை, அவரது மகன் கதிரேசன் பராமரித்தார். இதற்கிடையே, வேந்தோணியை சேர்ந்த எனது மாமா ராஜபாண்டி என்ற ராஜா முகம்மது, 58, அந்த நிலத்திற்கு, 2003ல், எனது பெயரில் போலியாக பத்திரம் தயாரித்தார். இது தொடர்பாக, பரமக்குடி கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு, கதிரேசன் மகன்கள் முருகன் (கொலை செய்யப்பட்டவர்), சிவக்குமாருக்கு சாதகமாக தீர்ப்பானது. நிலத்தை விற்க இருவரும் முயற்சித்தனர். அதை வாங்க வருபவர்களிடம் பிரச்னை செய்தோம். அதில் 3 ஏக்கரை, மதுரை மேலூர் ராஜாரபீக், 8 கோடி ரூபாய்க்கு வாங்கினார். அவரிடம் பிரச்னை செய்து, 85 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டோம். பின், முருகன் குடும்பத்தினரிடம், ஒரு கோடி 50 லட்ச ரூபாய் கேட்டதற்கு, தரமறுத்துவிட்டனர். முருகன், “பணம் தரமாட்டோம்’ என்றதால், அவரை கொலை செய்ய, மதுரை கூலிப்படையினரை வரவழைத்து, 2 லட்ச ரூபாய் வழங்கினோம். கூலிப்படையை சேர்ந்த வாழக்காய் ரபீக்ராஜா, 35, (போலீஸ் பக்ரூதீனின் கூட்டாளி), சாகுல்ஹமீது, 37, மற்றும் ஒருவர் மூலம், முருகனை கொலை செய்துவிட்டு, நானும், மாமா ராஜா முகம்மதுவும் தப்பிவிட்டோம்.இவ்வாறு தெரிவித்து உள்ளார். மனோகரன், ராஜா முகம்மது, வாழக்காய் ரபீக்ராஜா, சாகுல்ஹமீதுவை, போலீசார் கைது செய்தனர்; கூலிப்படையை சேர்ந்த ஒருவரை தேடி வருகின்றனர்[15].
பரமக்குடி – இந்து-முஸ்லீம் பிரச்சினை, ஜாதி-கலவரம் என்றுள்ளது: பரமக்குடியில் 2011ல் ஜாதிக்கலவரம் ஏற்பட்டுள்ளது. அதில் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அங்கு அடிக்கடி கொலை நடப்பதும் சகஜமாகி உள்ளது. முஸ்லீம்களின் ஜனத்தொகை இங்கு கனிசமாகப் பெருகி வருவதால், புதிய பிரச்சினையாக இந்து-முஸ்லீம் பிரச்சினை எழுந்துள்ளது. இங்கு மாமா-மைத்துனன் முஸ்லீம்-இந்து என்று இருப்பது, வினோதமா, வேடிக்கையா, விபரீதமா என்று தெரியவில்லை. ஆனால், கொலை என்று முடிந்துள்ள போதில், சம்பந்தப் பட்டவர்களின் பின்னணி, சாதாரண நிலத்தகராறு என்பதனையும் கடந்து, செயல் பட்டுள்ள நிலையை நோக்கும் போது, வேறு ஆழ்ந்த சதிதிட்டம் இருக்குமோ சந்தேகிக்க வேண்டியுள்ளது.
யார் இந்த போலீஸ் பக்ருதீன்? – விவரங்கள்[16]: ரபீக்ராஜா, பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் போலீஸாரால் தேடப்படும் தீவிரவாதியும், இமாம் அலி கூட்டாளியுமான போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த் என்பது, இதர விஷயங்களை இணைக்கிறது. அத்வானியைக் கொல்ல திட்டமிடும் தீவிரவாதிகளின் பின்னணியைக் காட்டுகிறது. இதற்கிடையே, இந்த சதித் திட்டத்தின் பின்னணி குறித்து போலீஸ் தரப்பில் தகவல் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: அத்வானியின் பாதையில் வெடிகுண்டு வைக்கும் திட்டத்தை உருவாக்கியவர் பக்ருதீன்தான். இவருக்கு போலீஸ் பக்ருதீன் என்ற பெயரும் உண்டு. இந்த போலீஸ் என்ற அடைமொழி பக்ருதீனுக்கு வந்ததற்கு ஒரு காரணம் உள்ளது. பக்ருதீனுக்கு 32 வயதாகிறது. மதுரையைச் சேர்ந்தவர். எட்டாவது வகுப்பு வரை படித்துள்ளார். இவரது தந்தை பெயர் சிக்கந்தர். இவர் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். தந்தை போலீஸ் பணியில் இருந்ததால் பக்ருதீனின் பெயருடன் போலீஸ் என்ற பெயரும் ஒட்டிக் கொண்டதாம். தனது தந்தை போலீஸாக இருந்தபோது பக்ருதீன் முரட்டுத்தனமாக நடந்து கொள்வாராம். போலீஸாரிடம் கூட அவர் மோதலில் ஈடுபட்டுள்ளார். சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை முன்பு தாக்கியுள்ளார். இதேபோல பல போலீஸாரிடம் தகராறு செய்து அதுதொடர்பாக வழக்குகளும் உள்ளன.
இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் முன்பு மதுரையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இவருக்கும் தொடர்பு இருப்பதாக அப்போது சந்தேகிக்கப்பட்டது. அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த இமாம் அலி மற்றும் ஹைதர் அலி ஆகியோர் மதுரை மேலூரில் நடந்த வெடிகுண்டு சம்பவ வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த 2002ம் ஆண்டு மதுரையிலிருந்து பாளையங்கோட்டை சிறைக்குச் செல்லும் வழியில் திருமங்கலத்தில் போலீஸ் வேன் நின்றபோது, அதிரடியாக அங்கு வந்த இமாம் அலி, ஹைதர் அலியின் ஆதரவாளர்கள் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு இருவரையும் மீட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தில் முதல் முறையாக ஈடுபட்டார் பக்ருதீன். பின்னர் இமாம் அலி பெங்களூரில் தமிழக போலீஸ் படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது இப்ராகிம் என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது மைத்துனர்தான் பக்ருதீன். இமாம் அலி மீட்கப்பட்ட வழக்கில் கைதான பக்ருதீன் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்புதான் விடுதலையாகி வெளியே வந்தார். வந்தவர் முழு அளவில் மீண்டும் பழைய பாதைக்குத் திரும்பியுள்ளார். பக்ருதீன் மீது 22 வழக்குகள் உள்ளனவாம்.
பக்ருதீன் வெடிகுண்டுகள் தயாரிப்பில் நிபுணத்துவம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. இமாம் அலியிடமிருந்தே இவர் வெடிகுண்டுகள் தயாரிக்க கற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது. கோவை தொடர் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை தயாரித்துக் கொடுத்தவர் இமாம் அலி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய ஆலம்பட்டி சம்பவத்திலும் கூட பக்ருதீன்தான் வெடிகுண்டுகளைத் தயாரித்துக் கொடுத்துள்ளார். அத்வானி பாதையில் வெடிகுண்டு வைக்க தீர்மானித்த அவர் தனது செயலுக்கு அப்துல்லா மற்றும் பிலால் மாலிக்கை நாடி உதவி கோரியுள்ளார். அவர்களும் சம்மதிக்கவே திட்டத்தை விரைவுபடுத்தினர்.அவ்வழக்கு நடந்து வருகிறது.
மேம்படுத்தப்பட்ட உள்ளுக்குள் வெடித்து சிதறும் குண்டு : பைப் குண்டு, தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி வருவதைப் பற்றி, முன்னர் சில இடுகைகளை இட்டுள்ளேன்[17]. திருப்பத்தூர் தொடர்பு அம்மோனியம் நைட்ரேட், குண்டு வெடிப்பு மற்றும் ஜோஸப் பாஸ்கர் – இவை நினைவிற்கு வருகின்றன[18]. கட்டுப்பாட்டில் இருக்கும் ரசாயனங்கள், அவற்றை வாங்குபவர்கள், குறிப்பிட்ட உபயோகம் தவிர, குன்டுகள் தயாரிக்கத் திருப்பி அனுப்பி வியாபாரம் செய்வது[19], உபயோகம், ஜெல், முதலியவை, பெரிய சதிதிட்டத்தைக் காட்டுகிறது[20].
வேதபிரகாஷ்
07-04-2013
[13] The team found that the mercenary gang had travelled up to Tirupur before committing the murder and could have purchased the pipe bombs from Coimbatore, sources said. Examination of two of the live bombs recovered from the scene showed that the Improvised Explosive Devices (IED-Pipe bombs) were stuffed with Gel 90 explosives. The special team is investigating into this aspect, the SP said.
பிரிவுகள்: அமோனியம், அம்மோனியம், அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்- பதர், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியா, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இமாம் அலி, இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாமியத் தமிழன், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உறவினர், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கடை, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், குண்டி, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, சரீயத், சிறுபான்மையினர், செல், செல்போன், ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, டெட்டனேட்டர், டெட்டனேட்டர்கள், டைமர், தமிழகத்து ஜிஹாதி, தமிழகத்து தீவிரவாதி, தமிழ் முஸ்லீம், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், தமுமுக, தர்கா, திரி, துலுக்கன், தூண்டு, தேங்காய், தேச விரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், நேரம், நைட்ரேட், பஜார், பட்கல், பட்டகல், பட்டக்கல், பரமக்குடி, பாப்புலர் பரென்ட் ஆப் இந்தியா, புனிதப் போர், மதரஸா, மதவாதம், மதவிமர்சனம், மதவெறி, முஜாஹித்தீன்
Tags: ஃபத்வா, அம்மோனிய நைட்ரேட், அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அவமதிக்கும் இஸ்லாம், ஆணி, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கலக்கல், கலப்பு, குண்டு வெடிப்பு, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், தற்கொலை குண்டு வெடிப்பு, பக்ருதீன், பால் பேரிங், பிஜேபி, பைப், பைப் குண்டு, பைப் வெடிகுண்டு, போலீஸ், முஸ்லீம்கள், ரசாயனம், வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிப் பொருள்
Comments: 10 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்