Posted tagged ‘நிதி’

திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை!

ஓகஸ்ட் 8, 2021

திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை!

பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் முதல் ஷேக் முகைதீன் வரை (2010-2021)[1]: மதுரை சின்னசொக்கிகுளத்தில் பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி செய்ததாக, அதன் உரிமையாளர் ஷேக் முகைதீனை (62), மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்[2]. முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவுப்படி, ஷேக் முகைதீனை இரண்டு நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவரை நேற்று போலீசார் மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் முன் ஆஜர்படுத்தினர். அவரை மீண்டும் ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம்: “போலீஸ் துறையில் விரல் ரேகை பிரிவு நிபுணராக 1970ல் சேர்ந்தார். 2005ல் விருப்ப ஓய்வு பெற்றேன். சென்னையில் பசிபிக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சுவர் கடிகாரம் வழங்கியது. அதைப்பார்த்து, தனியாக தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. மதுரையில் பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் நிறுவனத்தை துவங்கினேன். இதன் நிர்வாக இயக்குனர்களாக நானும் (ஷேக்முகைதீன்), எனது மனைவி மனைவி ஜானு, மகன்கள் சர்தார் உசேன், யாகூப் உசேன் மற்றும் சிவக்குமார், முபாரக்அலி ஆகியோர் இருந்தோம்”.

ஷேக் முகைதீன் வாக்குமூலத்தில் சொன்னது[3]: “திருக்குறள் புத்தகங்களை விற்பதில் கிடைக்கும் லாபத்தை வாடிக்கையாளர்களுக்கு பிரித்து கொடுப்பதாக அறிவித்தேன். குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. திட்டங்களுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கு லாபம் கிடைக்கும். இதில் ஒரு கோடியே 20 லட்சம் பேர் வாடிக்கையாளர்களாக சேர்ந்தனர். அவர்களிடம் இருந்து 210 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடந்தது. அதில் 200 கோடி ரூபாய்க்கு வாடிக்கையாளர்களிடம் பணம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. பத்து கோடி ரூபாய் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டியுள்ளது. குட்ஷெட்தெருவில் உள்ள ஆக்சிஸ், கோட்டக், .சி..சி.., தல்லாகுளம் கரூர் வைஸ்யா வங்கிகளில் கணக்கு துவங்கினேன். வங்கிகளில் 80 லட்சம் ரூபாய் உள்ளது. குவாலிஷ், இன்னோவா, டெம்போ ஆகிய வாகனங்கள் உள்ளன. அழகர்கோயிலில் இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. மத்திய ரிசர்வ் வங்கியின் திடீர் உத்தரவால் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நாளில் பணத்தை திருப்பி வழங்க இயலவில்லை”, இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருக்குறளும், திருக்குர்ஆனும்”- “திட்டப்பணிசெய்ய, ரூ, 2, 50, 000/- “செம்மொழிசெய்தி மடல்-1 (2010): இந்நிலையில், முனைவர் முகம்மது அலி ஜின்னா என்பவர் “திருக்குறளும், திருக்குர்ஆனும்” என்ற தலைப்பில் “திட்டப்பணி” செய்ய, “ஆய்வறிஞர்” என்ற ரீதியில் ரூ, 2, 50, 000/- (இரண்டரை லட்சம் ரூபாய்) கொடுக்கப்பட்டுள்ளதாக “செம்மொழி” செய்தி மடல்- 1 கூறுவது[4] வேடிக்கையாக உள்ளது! இஸ்லாத்தைப் பொறுத்தவரையிலும் அவர்களுடையதை எவர்களுடையதும் கூட இப்போதும், எங்கும், எவ்வாறும் ஒப்பீடு செய்யக்கூடாது, சமன் செய்யக் கூடாது, ………………………என்றெல்லாம் இருக்கும்போது, இந்த ஜின்னா எப்படி பணம் வாங்கினார்? எப்படி ஆராய்ச்சி செய்யப் போகிறார்? அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலுடன், எவ்வாறு குரானை பொறுத்திப் பார்க்கப் போகிறார்,………………….. முதலியவற்றைப் பற்றியெல்லாம் பொறுத்துதான் பார்க்கவேண்டும்[5] போல இருக்கிறது! இருப்பினும், தன்னது ஆராய்ச்சி விண்ணப்பப் படிவத்தில், அதைப் பற்றி சொல்லியிருப்பார். அதை பார்க்கவேண்டும். ஆக பொய் சொல்லி அரசு பணத்தை ஆராய்ச்சி என்ற பெயரில் அபகரிப்பது என்பது இப்படிகூட இருக்கும் போல இருக்கிறது. மேலும் யார் இந்த முகம்மது அலி ஜின்னா என்பதும் தெரியவில்லை! இது எழுதி மூன்று மாதங்கள் ஆகின்றன. முகம்மது அலி ஜின்னா வந்தாரோ இல்லையோ, ஷேக் மைதீன் என்ற இன்னொரு முஸ்லீம் கிளம்பி 220 கோடிகளை ஏமாற்றிவிட்டாராம்!

திருக்குறளை விற்று வியாபாரம்: திருக்குறள் புத்தகம் விற்பனை வாயிலாக, மதுரை தனியார் நிறுவனம், 65.46 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், அதன் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்து, முதலீட்டாளர்களுக்கு வழங்க, அரசுக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது[6]. மதுரை, சின்ன சொக்கிகுளம் அஜ்மல்கான் ரோட்டில், ‘பாரமவுண்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன்’ நிறுவனம் செயல்பட்டது[7]. ’10 ஆயிரம் ரூபாய் செலுத்தி, 100 திருக்குறள் புத்தகங்கள் வாங்க வேண்டும்; 37வது மாதத்தில், 46 ஆயிரத்து 900 ரூபாய் முதிர்வு தொகை வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது[8]. இதை நம்பி, 45 ஆயிரத்து 501 பேர், 65.46 கோடி ரூபாய் முதலீடு செய்தனர்[9]. இதை முதலீட்டாளர்களுக்கு தராமல், நிறுவனத்தைச் சேர்ந்த ஷேக் முகைதீன், கவுஸ் சர்தார் ஹூசைன், ஷானு ஷேக், கவுஸ் யாகூப் ஹூசைன், பானு ஆகியோர் தங்கள் சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றி, அசையும், அசையா சொத்துக்கள் வாங்கினர். பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் 2010ல் மோசடி வழக்குப் பதிந்தனர். ஷேக் முகைதீன் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர். அவர், 2005ல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.மோசடி வழக்கை விசாரித்த மதுரை முதலீட்டாளர் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்ற – டான்பிட் -நீதிபதி ஹேமானந்தகுமார் உத்தரவு: “முதலீட்டாளர்களை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. வழக்கு விசாரணையை தாமதப்படுத்த முயற்சிக்கும் நோக்கில், எதிர்மனுதாரர்கள் மனுக்கள் மேல் மனு தாக்கல் செய்துள்ளனர். முதலீட்டாளர்களின் பணத்தில் எதிர்மனுதாரர்கள் சொத்துக்கள் வாங்கியுள்ளதை அரசு தரப்பு நிரூபித்துள்ளது.சொத்துக்களை ஜப்தி செய்ய, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. நிறுவனத்தின் வாகனங்கள், அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் விற்று, பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு, அவர் கூறினார்.

குரளை, திருக்குறளைப் பழித்த முஸ்லீம்கள்: முன்பு, இதே முஸ்லீம்கள், “குரானா, குறளா?” என்ற விவாதம் வந்துபோது, குறள் சிறுநீர் கழித்த பிறகு துடைத்துப் போடக்கூட லாயக்கற்றது……………….என்றெல்லாம் பேசி, எழுதி, பதிப்பது திராவிட தமிழர்கள் மறந்து விட்டார்கள் போலும். மேலும் இதில் நோக்கத்தக்கது திருக்குறளையே “குறள்” என்று கூறுவதுதான். தமிழ் மீது, திருக்குறள் மீது தமிழர்களுக்கு, மதிப்பு, காதல், அன்பு, மரியாதை…………இருந்திருந்தால், இவ்வாறு, திருக்குறளைக் கேவலப்படுத்திய முஸ்லீம்களை எப்படி நம்புகிறார்கள்? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? ஒருவேளை குரானை அச்சடித்து, புத்தகங்கள் போட்டு, விற்று, அதில் கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறியிருந்தாலும் நம்பியிருப்பார்களா?[10] இல்லை நம்பமாட்டார்கள், வியாபாரத்திற்கு குரான் எடுபடாது, திருக்குறள்தான் கவர்ச்சிகரமாக இருக்கும், செம்மொழி மாநாடு வேறு நடக்கிறது, வியாபாரத்தை கருணாநிதியே வந்து துவங்கி வைப்பார், அல்லது, செம்மொழி மாநாட்டில் விநியோகம் நடத்தப் படும் என்றெல்லாம் கூட பிரச்சாரம் நடந்திருக்குமோ என்று தெரியவில்லை[11].

© வேதபிரகாஷ்

08-08-2021


[1] தினமலர், மோசடி நிதி நிறுவன உரிமையாளர் வீடுகளுக்குசீல், மே 10,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18450

[2] தினமலர், மதுரையில் ரூ.பல லட்சம் மோசடி: நிதிநிறுவன உரிமையாளர் கைது, மே 07,2010,00:00  IST; http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18377

[3] லைவ்.மதுரை, பாராமவுன்ட்மொத்த வர்த்தகம் ரூ. 210 கோடி : மோசடி நிதி நிறுவன உரிமையாளர் வாக்குமூலம், Saturday 08, May 2010

http://livemadurai.yavum.com/index.php?index=MaduraiNews&news=398

[4] வேதபிரகாஷ், முகம்மது அலி ஜின்னாவும், திருக்குறளும், திருக்குர்ஆனும்!, 14-02-2010.

[5]https://rationalisterrorism.wordpress.com/2010/02/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

[6] தினமலர், திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம்,  Added : ஆக 08, 2021  02:32

[7] https://www.dinamalar.com/news_detail.asp?id=2818906

[8] தினமலர், திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், Added : ஆக 07, 2021  23:28.

[9] https://www.dinamalar.com/news_detail.asp?id=2818691

[10] வேதபிரகாஷ், கோவைக்கு அடுத்தது மதுரை: நிதிமோசடி கும்பல்கள், நடத்தும் நாடகங்கள், நம்பும் விசுவாசிகள்!, 15-05-2010.

[11]https://liberalizationprivatizationglobalization.wordpress.com/2010/05/15/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: மைலாப்பூர் மொஹம்மது இக்பால் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (3)!

பிப்ரவரி 26, 2017

.எஸ்.சில் ஆள்சேர்ப்பதற்கான சதிதிட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: மைலாப்பூர் மொஹம்மது இக்பால் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (3)!

ISIL Chennai terror nexus - The Hindu - a tale of two friends

சென்னையில் ஐஎஸ்.தீவிரவாதிகளின் திட்டங்கள்: சிரியா மற்றும் ஈரானை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், உலக நாடுகள் பல வற்றில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், உலக நாடுகளில் உள்ள இளைஞர்களை தங்கள் இயக்கத்தில் சேர்ப்பதற்கான வேலைகளையும் செய்து வருகிறது. இந்தியாவின் சில மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய உளவுத் துறை, மாநில போலீசாருடன் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2016 ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரபல தங்கம் கடத்தல் மன்னன், ஜமீல் முகமது என்பவரிடம் நடத்திய விசாரணையில், தமிழகத்தைச் சேர்ந்த வாலிபர்களை குறிவைத்து ஐ.எஸ் தீவிர வாத இயக்கும் காய் நகர்த்தி வருவது தெரிய வந்துள்ளது[1]. அதாவது, ஐஎஸ் தீவிரவாதிகள் சென்னையிலேயே இருக்கிறார்கள். ஜெயலலிதா இறப்பு, ஜல்லிக்க்கட்டு, சசிகலா விவகாரங்களில் இவை மறைக்கப்படுகின்றன.

after_iqbal_failed_twice_to_reach_syria_he_was_advised_to_raise_-money

மைலாப்பூரில் வாழ்ந்த ஐஎஸ் தீவிரவாதி: இக்பால் என்ற வாலிபருடன் ஜமீல் கான் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்தது[2]. இக்பால் ஐ.எஸ்.இயக்கத்துக்கு தமிழகத்தில் இருந்து நிதி திரட்டி கொடுக்கும் பணியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[3]. அந்தவகையில் இக்பால், ஜமீல் முகமதுவிடம் ரூ.65 ஆயிரம் பணம் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது[4]. இதையடுத்து ராஜஸ்தான் போலீசார், தமிழக போலீசாரின் உதவியுடன் இக்பாலை தேடி வந்தனர். இந்தநிலையில் இக்பால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் 06-02-2017 அன்று தங்க கடத்தலில் சிக்கினார். மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் சென்னையில் இக்பாலை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும், ராஜஸ்தான் போலீசார் சென்னைக்கு விரைந்து வந்தனர். பின்னர் புழல் சிறையில் இருந்த இக்பாலை ராஜஸ்தான் மாநில நீதிமன்றத்தில் கைது உத்தரவு பெற்று முறைப்படி 13-02-2017 அன்று கைது செய்தனர்.

mohammed-iqbal-taken-to-rajastan-for-interrogation-25_02_2017_013_010

mohammed-iqbal-taken-to-rajastan-for-interrogation-25_02_2017_013_010

ஐ.எஸ்.தீவிரவாதியான ஜமீல் முகமதுவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து நிதி உதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் இக்பால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை ராஜஸ்தானுக்கு அழைத்து சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், இக்பால் நீண்ட நாட்களாகவே ஐ.எஸ்.இயக்கத்துடன் தொடர்பில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  ஆக சென்னை மக்கள், ஐஎஸ் எரிமலை மீது உட்கார்ந் திருக்கின்றனர், இந்த வெறியர்கள், என்றைக்கு குண்டு வைப்பர்களோ, என்ன நடக்குமோ என்று தெரியவில்லை.

chennai-mannady-isis-sponsor-arrested-mohammed-iqbal

சிரியாவுக்கு செல்ல முடியாது மொஹம்மது இக்பால்: முகமது இக்பாலிடம் 22-02-2017 அன்று விடிய விடிய நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது[5]: “முகமது இக்பால் கடந்த 2015ம் ஆண்டு ஈரான் நாட்டிற்கு செல்ல ஐதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகத்தில் விசாவுக்கு பதிவு செய்திருந்தார். பின்னர் முகமது இக்பால் தந்தைக்கு காய்ச்சல் இருந்ததால் அவர் தூதரகத்தில் விசா பெறுவதற்கான விசாரணையில் கலந்து கொள்ளவில்லை. இதற்காக ஒரு பன்னாட்டு ஏஜென்சியை அணுகினார். அதன்படி iqb1984@yahoo.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பை ஏற்படுத்தி அதில் கிடைக்கப்பற்ற தகவல்கள் மூலமாக ஒரு குறிப்பிட்ட பன்னாட்டு சுற்றுலா சேவை நிறுவனத்திற்கு மின் அஞ்சல் பணம் பரிமாற்றம் மூலமாக 90 யூரோ அதாவது இந்திய மதிப்பில் 8,098 ரூபாயை  செலுத்தியுள்ளார்[6]. இவ்வளவவுதான், தமிழ் ஊடகங்கள் கூறுகின்றன. ஜல்லிக் கட்டு விவகாரத்தில், முஸ்லிம்கள் கலாட்டா செய்தது, இத்தகைய விவகாரங்களை மறைக்கத்தானா என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஓருவருடைய தனிப்பட்ட விவரங்களைக் கொடுப்பதை விட, அவனது கூட்டாளிகள் யார், எப்பொழுது கைது செய்யப் பட்டார்கள் போன்ற விவகாரங்களைக் கொடுக்கலாம். என்.ஐ.ஏ கைது செய்யப்பட்டவர்களின் விவகாரங்கள், அவர்கள் செய்த குற்றம் முதலியவற்றை தனது இணைதளத்தில், தினமும் வெளியிட்டு வருகிறது.

© வேதபிரகாஷ்

26-02-2017

chennai-mannady-isis-sponsor-arrested-mohammed-iqbal-dainik-bhaskar-photo

[1] The Hindu, Mylapore resident has IS links, Chennai, February 22, 2017 01:18 IST;  Updated: February 22, 2017 01:18 IST.

[2] A resident of Mylapore, who was arrested by intelligence agencies in Rajasthan last month January 2017, has revealed during interrogation that he had links with the Islamic State. A senior officer of the city police said Mohammed Iqbal (32), a resident of Bazaar Street, was arrested based on a tip-off obtained from the Rajasthan Anti-Terrorist Squad.

http://www.thehindu.com/news/cities/chennai/mylapore-resident-has-is-links/article17343462.ece

[3] சென்னை.ஆன்.லைன், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய சென்னை வாலிபர் கைது, February 21, 2017, Chennai.

[4] http://www.chennaionline.com/article/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81

[5] தினகரன், ஐஎஸ் அமைப்புக்கு நிதி திரட்டிய விவகாரம், சிரியா தலைவரிடம் பேசியது என்ன? சென்னை வாலிபரிடம் விசாரணை, 2017-02-23@ 00:04:40

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=282040