Posted tagged ‘நிக்காநாமா’
ஏப்ரல் 11, 2017
செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஷரீயத் உதல் வரை பொது சிவில் சட்ட கோரிக்கை வரை(2)

முத்தலாக் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது: தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டுக்கும், இஸ்லாமிய தனி நபர் சட்ட வாரியத்திற்கும் கருத்து மோதல்கள் நிகழ்ந்து வந்த நிலையில் மார்ச் 30, 2017 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது[1]. அப்போது, இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும், வரும் மே மாதம் 11-ம் தேதி 2017 முதல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். முன்னதாக, இவ்வழக்கை கோடை விடுமுறைக்கு பின்னர் விசாரிக்க வேண்டும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வைத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். மூன்று தலாக் சொல்லி திருமண உறவை முறித்துக்கொள்ளும், நடைமுறைக்கு தடை விதிக்க கோரி இஸ்ரத் ஜஹான் என்ற முஸ்லிம் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இஸ்லாமியர்கள் கடைபிடித்து வரும் முத்தலாக் முறையை அரசியல் சட்டத்திற்கு விரோதமானதாக அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு பதிலளித்துள்ளது[2]. இதுவிசயமாக பல வழக்குகள் பதிவாகியுள்ளதால், அவை அனைத்தும், மொத்தமாக விசாரிக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது.

ஷரீயத் பிரிவு பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது: இஷ்ரத் ஜகான் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மூன்று முறை தலாக் என கூறி மனைவியை கணவன் விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு, இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கிறது[3]. முஸ்லிம் தனிநபர் சட்டம்-1937 (ஷரியத்), பிரிவு-2ல் இதற்கு அனுமதியுள்ளது[4]. இந்த அனுமதி பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 14ன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள, உரிமை மீறப்படுகிறது. எனவே தலாக் நடைமுறையை நீக்க வேண்டும் என்று அந்த பெண்மணி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பான வழக்கில் முத்தலாக் முறை சம உரிமைக்கு எதிராக அமைந்திருப்பதால் அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முத்தலாக் முறையால் இஸ்லாமிய பெண்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், முத்தலாக் முறை இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும் இதில் அரசு தலையிடக் கூடாது என்றும் அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. அனைத்திந்திய முஸ்லிம் பெண்கள் சட்ட வாரியம், மூன்று தலாக் நடைமுறையை நீக்க விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பலமுறைகளில் தலாக், தலாக், தலாக் சொல்லி விவாகரத்து செய்வது: முஸ்லிம் கணவர்கள் எப்படி இந்த முத்தலாக்கை செய்து வருகின்றனர் என்று ஏராளமான செய்திகள் வந்துள்ளன. முன்பு, தபால் அட்டைல் தபால், கூரியர் என்றெல்லாம் இருந்து, பிறகு போன், டெலக்ஸ் என்று மாறி, இப்பொழுது, இணைதள அளவில், மெஸேஜ், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் என்ற நிலைக்கு வந்துள்ளது. இதனால், அதிகம் பெண்கள் பதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில், முத்தலாக் முறையானது சம உரிமைக்கு எதிராக இருப்பதாகவும், அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை எனவும் மத்திய அரசு சார்பாக எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. இம்முறையால் இஸ்லாமியப் பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது[6]. ஆனால், அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம், முத்தலாக் முறையானது இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும், இதில் அரசு தலையிடக் கூடாது எனவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 5-ம் தேதி கான்பூரைச் சேர்ந்த அலியா சித்திக் என்பவர், தனது கணவர் விரைவு தபாலில் முத்தலாக் அனுப்பியுள்ளதாக மோடியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்திடமும் அவர் இதுபற்றி புகார் அளித்து இருந்தார். அவர், சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாரும் தனக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தாலிக், குரானில் இல்லை, மௌலானாக்களால் உருவாக்கப் பட்டது – சல்மா அன்சாரி: நாடு முழுவதும் ‘தலாக்’ விவகாரத்து விவகாரம் பெரும் விவாதங்களை உருவாக்கி வருகிறது. இஸ்லாமிய திருமண முறையில் இருந்து விவகாரத்து பெறுவதற்கு மூன்று முறை ‘தலாக்’ என்று கூறினால் மட்டும் போதுமானது. இந்த முறையை பின்பற்றுவதால் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று தொடர்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக போனில் எஸ்.எம்.எஸ்ஸில் ‘தலாக்’ என்று விவகரத்து பெறுவதும் தபாலில் ‘தலாக்’ என்று அனுப்பி விவாகரத்து பெறுவதும் நடைபெற்ற சம்பவங்கள் செய்திகளாக வெளிவந்தன. இந்த நிகழ்வுகள் தலாக் முறை மீது கடுமையான எதிர்ப்புகளை உருவாக்கியது[7]. இந்த நிலையில் ‘தலாக்’ குறித்து கருத்து தெரிவித்த சல்மா அன்சாரி, ‘மூன்று முறை ‘தலாக்‘ என்று சொல்வதாக மட்டும் ‘தலாக்‘ நடைமுறை இருக்க கூடாது. மவுலானாவில் என்ன கூறியிருந்தாலும் அது உண்மையா ?.குரானை அதன் மூல மொழியான அராபியில் படித்து தெரிந்துகொள்ளுங்கள். அதனுடைய மொழி பெயர்பில் படிக்காதீர்கள். குரானில் இருந்து அறிவை வளர்த்து கொள்ளுங்கள். அதுகுறித்து சிந்தனை செய்யுங்கள். யாரையும் குருட்டுத்தனமாக நம்பாதீர்கள்‘ என்று கூறியுள்ளார்[8].

ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: ராஜஸ்தானின் ஈத்காஹ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அந்த வாரியத்தின் பெண்கள் பிரிவின் தலைவரான அஸ்மா ஜோஹ்ரா, முஸ்லிம் சமூகத்தில் விவாகரத்து எண்ணிக்கை அதிகம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்க சிலர் முயற்சி செய்கின்றனர். நாட்டில் ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு ஆதரவாக முஸ்லிம் பெண்களிடம் இருந்து 3.5 கோடி விண்ணப்பங்கள் எங்களுக்கு வந்துள்ளன[9]. இவற்றிற்கு எதிரான பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு என கூறினார். பெண்களின் உரிமைகள் என்ற பெயரில் முஸ்லிம் சமூகம் மீது அவதூறு ஏற்படுத்துவதற்கான சதி மற்றும் முஸ்லிம் சமூக கட்டமைப்பினை தகர்க்கும் முயற்சியிது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்[10]. ஷரியத் மற்றும் இஸ்லாமில் உள்ள தங்களது உரிமைகளை முஸ்லிம் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய நேரமிது. பெண்களுக்கு அதிகளவில் உரிமைகளை இவை வழங்கியுள்ளன என்பதனை மற்றவர்கள் கூட தெரிந்து கொள்ளட்டும் என அவர் கூறியுள்ளார். அந்த வாரியத்தின் உறுப்பினர் யாஸ்மின் பரூக்கி கூறும்பொழுது, முஸ்லிம் பெண்கள் என்றால் படிக்காதவர்கள் மற்றும் எளிதில் முட்டாளாக்கி விடலாம் என சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. முஸ்லிம் பெண்கள் வெளிப்படையாக ஷரியத்திற்கு ஆதரவாக முன்வந்துள்ளனர். குறைந்த அளவிலான பெண்களே அவற்றிற்கு எதிராக உள்ளனர். தற்பொழுது வாரியம், வரதட்சணை கொடுமை, குறைந்த செலவில் திருமணங்களை முடித்தல் மற்றும் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை போன்ற விவகாரங்களை சரி செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது என கூறியுள்ளார்.
© வேதபிரகாஷ்
11-04-2017

[1] மாலைமலர், முத்தலாக் வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு, பதிவு: மார்ச் 30, 2017 15:12.
[2] http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/30151231/1077027/SC-bench-refers-TripleTalaq-matter-to-constitution.vpf
[3] தமிழ்.ஒன்.இந்தியா, “முத்தலாக் “அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில், By: Karthikeyan; Published: Tuesday, April 11, 2017, 3:31 [IST]
[4] http://tamil.oneindia.com/news/india/triple-talaq-makes-muslim-women-socially-financially-vulner-279416.html
[5] விகடன், முத்தலாக் முறைக்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு!, Posted Date : 02:59 (11/04/2017); Last updated : 02:59 (11/04/2017)
[6] http://www.vikatan.com/news/india/86044-triple-talaq-violate-right-to-equality—centre-tells-sc.html
[7] விகடன், ‘முத்தலாக்‘ முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் சல்மா அன்சாரி, Posted Date : 21:37 (08/04/2017); Last updated : 21:37 (08/04/2017).
[8] http://www.vikatan.com/news/india/85845-vice-president-ansaris-wife-critized-triple-talaq.html
[9] தினத்தந்தி, ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: முஸ்லிம் சட்ட வாரியம் தகவல், ஏப்ரல் 09, 10:11 PM
[10] http://www.dailythanthi.com/News/India/2017/04/09221142/350-cr-women-support-Shariyat-Triple-Talaq–AIMPLB.vpf
பிரிவுகள்: அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம், அப்பீல், அஹ்மதியா, குரான், தலாக், நிக்கா, முதல் பெண்டாட்டி, முதல் மனைவி, முஸ்லிம் சாமியார், முஸ்லிம் பெண்கள், முஸ்லீம் சட்டம், மூத்தா, மொஹம்மது, வக்ப், வழக்கு, விவாக ரத்து, விவாகம், ஷரீயத், ஷாபானு, ஷியா, ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா வாரியம், ஷிர்க், ஹதீஸ், ஹராம், Uncategorized
Tags: இஸ்லாம், உடலுறவு, குரான், தலாக், தலாக்-தலாக்-தலாக், தாம்பத்தியம், திருமணம், நிக்கா, நிக்காநாமா, நிக்காஹ், விவாக ரத்து, விவாகம், ஷரீயத், ஷரீயத் கவுன்சில், ஹதீஸ்
Comments: Be the first to comment
ஏப்ரல் 11, 2017
செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஷாபானு வழக்கிலிருந்து சர்ளா முதுகல் வரை (1)

ஷாபானு வழக்கின் விளைவு, தனி சட்டம் உருவானது (1986): இஸ்லாம் மதத்தில் மூன்று முறை ‘தலாக்’ எனக் கூறி விவாகரத்து செய்யும் வழக்கமுள்ளதால், முறையால் பெண்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சட்டரீதியில் சென்றால் கூட, பாரபட்சமான நீதி வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 1986ல் ராஜிவ் காந்தி காலத்தில் “ஷாபானு வழக்கு” மூலம் பிரச்சியானது, பலரால் விவாதிக்கப் பட்டது. இருப்பினும், இஸ்லாமிய அடிப்படைவாத அழுத்தத்திற்கு, மிரட்டல்-உருட்டல்களுக்கு ராஜிவ் காந்தி பயந்து, உச்சநீதி மன்ற தீர்ப்பிலிருந்து முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்கும் விதமாக, தனி சட்டத்தை உருவாக்கினார். உண்மையில், சிவில் சட்டம் [Code of Criminal Procedure] 125வது பிரிவின் படி, விவாக ரத்து செய்யப்படும் பெண்ணிற்கு, கணவன் உரிய ஜீவனாம்சம் கொடுக்கப்பட வேண்டும் என்றுள்ளது. இதனால், ஷாபானு, தனக்கு அளிக்கப் படும் ஜீவனாம்சம் போதவில்லை என்று, மேற்குறிப்பிட்ட சரத்தின் படி வழக்கு தொடர்ந்தாள். ஆனால், கணவன் மொஹம்மது கான், இஸ்லாமிய சட்டமுறையில், தான் விவாகரத்து செய்திருப்பதால், அச்சட்டத்தின் படியே மஹர் / ஜீவனாம்சம் கொடுக்க தீர்மானித்ததால், அச்சட்டம் [S.125 CrPC] தனக்கு பொறுந்தாது என்று வாதாடி, உயர்நீதி மன்றத்தில் வெற்றிபெற்றான். ஆனால், உச்சநீத் மன்றத்தில், அதை தள்ளுபடி செய்து, ஷாபானுக்கு உரிய ஜீவனாம்சம் அளிக்கும்படி ஆணையிட்டது[1].

ஷாபானு வழக்கிற்கு எதிர்ப்பு, மத–அரசியலின் ஆரம்பம்: இதனால், முஸ்லிம்கள் தங்களது மதச்சட்டத்தில் அரசு அல்லது நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி ஆர்பாட்டம் செய்தனர்[2]. 125ற்கு விலக்கு அளித்தது. தனியாக, முஸ்லிம் பெண்கள் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் விவாக ரத்து சட்டம், 1986 [The Muslim Women (Protection of Rights on Divorce) Act, 1986] என்று உருவாக்கப்பட்டது. இங்கு ஷாபானு என்பது 70 வயதிற்கும் மேலான மூதாட்டி என்று குறிப்பிடத் தக்கது. அத்தகைய நிலையில், பெண்கள், என்ன பாடு படுகிறாள் என்பது உலகிற்கு தெரிய வந்தது. இருப்பினும், செக்யூலரிஸ மற்ற சித்தாந்திகள் அதனை பெண்கள் பிரச்சினை என்று எடுத்துக் கொள்ளாமல், மதப்பிரச்சினை, முஸ்லிம்களின் உள்விவகாரம் அதில் மற்றவர்கள் நுழையக் கூடாது என்ற ரீதியில் பிரச்சாரம் செய்யப் பட்டது. அந்நிலையிலும், பொது சிவில் சட்டம் தேவை என்ற கருத்தும் உருவாகி, விவாதத்திற்கு வந்தது. அப்பொழுது, பிஜேபி ஆட்சியில் இல்லை, மேலும், அது அக்கட்சியினையும் தொடர்பு படுத்தவில்லை. ஆனால், தேர்தல் வாக்குருதிகளில் பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சி செய்வோம் என்று குறிப்பிட்டது.

1995ல் சர்ளா முதுகல் – பொது சிவில் சட்ட ஞாபகவூட்டல் தீர்ப்பு: 1995ல் சர்ளா முதுகல் உச்சநீதி மன்ற தீர்ப்பில், “1949லிருந்து, 41 வருடங்களாக இந்த 44 பிரிவு குளிர்பெட்டியிலேயே வைத்திருக்கிறார்கள். அரசுகள் வந்தன, சென்றன, ஆனால், இருப்பினும், இந்திய மக்கள் அனைவரையும் இணைக்கும் முறையில் ஒரு பொது சிவில் சட்டம் கொண்டு எந்த முயற்சியும் எடுக்காமல் தோல்வி அடைந்துள்ளனர்”, என்று நீதிபதி பதிவு செய்தார்[3]. இது எப்படி ஆண்கள் இரண்டாவது திருமணத்தை முகமதிய மதம் மாறி சட்டப்படி செய்து கொள்கிறார்கள், அதனால், முதல் மனைவி, இந்துவாக இருப்பதனால் பாதிக்கப்படுகிறாள் என்றும் எடுத்துக் காட்டப்பட்டது[4]. செக்யூலரிஸம், பெண்ணுரிமைகள் சமநீதி, சமூகநீதி என்றெல்லாம் பேசும், பேசிய வி.பி.சிங், சந்திரசேகர், ஐ.கே.குஜரால், தேவ கௌடா முதலியோர் கண்டுகொள்ளவில்லை. ”என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் பிஜேபி எப்பொழும் “பொது சிவில் சட்டத்திற்கு” ஆதரவாக குரல் கொடுத்து வருவது தெரிந்த விசயமே. ஆனால், அது “கம்யூனலிஸம்” என்று முத்திரைக் குத்தப்பட்டு, ஒதுக்கப்படுவது, மனித உரிமைகள் பேசும் கூட்டங்களின் போக்காகவே இருந்து வருகின்றது. இந்துக்கள் அதிகமாக இருப்பதால், அவர்களுக்கு சாதகமாக இருக்கும் போன்ற வாதங்களும் வைக்கப்பட்டன. ஆனால், மதரீதியில், எந்த இந்து பெண்ணும் / ஆணும், இந்திய அரசியல் நிர்ணய சட்டம் அல்லது வேறெந்த சட்டமும் தனக்கு பொறுந்தாது, தனது மத நம்பிக்கைகளில் தலையிடக்கூடாது என்று யாரும் வழக்குத் தொடரவில்லை. இருக்கும், சிவில்-கிரிமினல் சட்டங்களை ஏற்றுக்கொண்டு மதித்து நடந்து வருகிறார்கள். ஆனால், சிறுபான்மையினர் என்று முஸ்லிம்கள் தான் எதிர்த்து வருகின்றனர். கிருத்துவர்கள் பொதுவாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

பொது சிவில் சட்டம் எதிர்ப்பு, முத்தலாக் ஆதரிப்பு: பொது சிவில் சட்டம் இவ்வாறு, செக்யூலரிஸ்டுகள், முஸ்லிம்கள் மற்ற சித்தாந்திகள் எதிர்த்து தங்களது வாதங்களை வைத்டுள்ளனர்:
- இந்தியா ஒரு செக்யூலரிஸ நாடு, பல மதங்கள் இருப்பதனால், அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப அவர்கள் நடந்து கொள்ளலாம். அதற்கான உரிமைகள் அரசியல் நிர்ணய சட்டம் கொடுத்துள்ளது.
- மதரீதியில் மக்களை செக்யூலரிஸப்படுத்தலாம், ஆனால், சட்டரீதியில் அவர்களை செக்யூலரிஸப்படுத்த முடியாது.
- மக்களை ஒரே விதமாக மாற்ற முயலும் இந்தப் பொது சிவில் சட்டம், நாட்டின் பன்முகத்துவம் மற்றும் கலாச்சார தனித்துவங்களுக்கு அச்சுறுத்த உள்ளது.
- பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் அது அனைவரைக்கும் எதிரான ஒரு செயலாக மாறும்.
- எல்லோரையும் ஒரே மாதிரியானவர்களாக காட்ட எடுக்கப்படும் முயற்சி தோல்வியையே தழுவும்.
- இது நாட்டு நலனுக்கு நல்லதல்ல. மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் தோல்வி அடைந்து வருகிறது. அதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இதுபோன்ற முயற்சிகளை செய்து வருகிறது.
- அதனால், அரசு இந்த முயற்சியைக் கைவிட வேண்டும். மூன்று முறை தலாக் கூறும் நடைமுறையை நீக்க நாங்கள் விரும்பவில்லை.
- பிற சமூகத்தினரிடையே அதிகமாக விவாகரத்துகள் நடைபெறுகின்றன. முஸ்லிம்களை விட இந்துக்களிடையே இருமடங்கு விவாகரத்துகள் அதிகமாக உள்ளன.
- முஸ்லிம்கள், தாமாகவே முன் வந்து, அத்தகைய சட்டத்தை ஏற்றுகொள்ள முன்வரும் வரை வற்புருத்தக் கூடாது.
- அதுவரை, அவர்களுக்கு ஷரீயத் சட்டம் தொடர்ந்து அமூல் படுத்த வேண்டும்.
செக்யூலரிஸ ஊடகங்கள், 1995லிருந்து, இத்தகைய பிரச்சாரத்தை செய்து வருகின்றன. ஆனால், இணைதள விவரங்கள், செய்திகள் முதலியவை பரவி வருவதால், பொது மக்களுக்கு பற்பல உண்மைகள் தெரிய வர ஆரம்பித்தன.

முஸ்லிம்கள் தாமாகவே முத்தலாக் முறையற்றது, பெண்களின் உரிமைகளைப் பறிப்பது என்று வாதிட வந்தது, வழக்குத் தொடுத்தது: முத்தலாக் முறை பெண்களின் விருப்பத்துக்கு எதிராக இருப்பதாகவும், இஸ்லாமிய பெண்களின் உரிமையைப் பறிப்பதாகவும் பா.ஜ.க அரசின் சார்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், பிரதமர் மோடி உத்தரப்பிரதேச தேர்தல் சமயத்தில், பா.ஜ.க முத்தலாக் முறையை எதிர்ப்பதாகவும், முத்தலாக் முறையை ஒழிக்க முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் வாக்குறுதியளித்தார். இம்முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது குறித்து பதிலளிக்கும்படி, அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்டோருக்கு, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, ‘நோட்டீஸ்’ அனுப்பியது. முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை “தலாக்” என கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை அரசியல் சாசன விதிகளின்படி ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. மூன்று முறை தலாக் செய்யும் முறையை நியாயப்படுத்தும் விதமாக இந்தியாவின் உயர்மட்ட இஸ்லாமிய சட்ட வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2016 சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வாக்குமூலத்தை பதிவு செய்தது. சுப்ரீம் கோர்ட்டு மத சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்றும் சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் தனிப்பட்ட சட்டங்களை மீண்டும் மாற்றி எழுதக்கூடாது என்றும் அந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
© வேதபிரகாஷ்
11-04-2017

[1] Supreme Court of India, Mohd. Ahmed Khan vs Shah Bano Begum And Ors on 23 April, 1985; Equivalent citations: 1985 AIR 945, 1985 SCR (3) 844; Author: Y Chandrachud; Bench: Chandrachud, Y.V. ((Cj), Desai, D.A., Reddy, O. Chinnappa (J), Venkataramiah, E.S. (J), Misra Rangnath; PETITIONER: MOHD. AHMED KHAN Vs. RESPONDENT:SHAH BANO BEGUM AND ORS.; DATE OF JUDGMENT23/04/1985.
[2] https://indiankanoon.org/doc/823221/
[3] “I do not think that at the present moment the time is ripe in India for me to try to push it through”. It appears that even 41 years thereafter, the Rulers of the day are not in a mood to retrieve Article 44 from the cold storage where it is lying since 1949. The Governments – which have come and gone – have so far failed to make any effort towards “unified personal law for all Indians”.
[4] Supreme Court of India, Smt. Sarla Mudgal, President, … vs Union Of India & Ors on 10 May, 1995, Equivalent citations: 1995 AIR 1531, 1995 SCC (3) 635; Author: K Singh; Bench: Kuldip Singh (J); PETITIONER: SMT. SARLA MUDGAL, PRESIDENT, KALYANI & ORS. vs. RESPONDENT: UNION OF INDIA & ORS. DATE OF JUDGMENT10/05/1995
https://indiankanoon.org/doc/733037/
பிரிவுகள்: ஃபத்வா, அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம், அத்தாட்சி, அமைதி, அழுகை, இத்தத், தலாக், நிக்கா, நிக்கா ஹலால, நிக்காஹ், பெண்ணியம், பெண்ணுரிமை, விவாக ரத்து, விவாகம், ஷரியத், ஷரீயத், ஷா பானு, ஷியா, ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா-சுன்னி, ஷிர்க்
Tags: இத்தத், இஸ்லாம், குரான், தலாக், தலாக்-தலாக்-தலாக், நிக்கா, நிக்காநாமா, நிக்காஹ், முத்தலாக், விவாக ரத்து, ஷரீயத், ஷாபானு, ஷியா, ஹதீத், ஹதீஸ், ஹராம்
Comments: Be the first to comment
ஜனவரி 18, 2017
தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு – முஸ்லிம் லீக்கின் வெளிப்பாடு!

காஜி வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது[1]: மார்க்க சட்டத்தின்படி உள்ள கருத்தை தலைமை காஜி தெரிவிக்கும் போது அதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. தனது கருத்தை ஏன் ஏற்கவில்லை என்று தலைமை காஜியோ, துணை காஜியோ இதுவரை யாரிடமும் கேள்வி எழுப்பியதில்லை. இதுதான் தமிழகத்தில் உள்ள நடைமுறை. சென்னை உயர்நீதிமன்றம் கருத்துப்படி தலைமை காஜி கருத்தை அரசாங்க அதிகாரிகளோ, நீதிமன்றமோ ஏற்பதும், ஏற்காததும் அவரவர்களது விருப்பத்தை பொறுத்தது. இதனால் தலைமை காஜி அவர்களுக்கு அவருடைய பத்வா வழங்கும் உரிமைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. அவர் வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பானது, தலைமை காஜியின் இந்த உரிமையை பறிக்கவும் இல்லை. இந்த தெளிவை தலைமை காஜியும் மற்றுமுள்ள துணை காஜிகளும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.

முஸ்லீம் லீக் வலியுறுத்துவது[2]: இத்தகைய குழப்பங்கள் அவ்வப்போது எழும் என்பதால்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கீழ்க்கண்டவற்றை தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்.
- முதலாவதாக, 1880-ம் ஆண்டின் காஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜி)கள் திருமண நிகழ்வுகளை பதிவு செய்யும் பதிவாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு, அந்த பதிவுகளையே அரசாங்கப் பதிவுகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
- 2008-ம் ஆண்டு நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் தலைமையில் இந்திய சட்ட ஆணையம் செய்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் காஜிகள், இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வதுடன், திருமண முறிவுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
- இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று காஜிகள் திருமணப் பதிவாளர்களாகவும், திருமண முறிவுகளை பதிவு செய்பவர்களாகவும் அரசாங்கம் அங்கீகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
இப்படிப்பட்ட தீர்மானங்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநாடுகள் மற்றும் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் அனைத்திலும் நிறைவேற்றப்பட்டு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. காஜிகளுடைய அந்தஸ்தையும், கண்ணியத்தையும் நிலைபெறச் செய்வதற்கு இத்தகைய அதிகாரங்களை அவர்களுக்கு வழங்கப்படுவதற்கு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துவது சமுதாயத்தின் இன்றைய கட்டாயக் கடமையாகும். இதனை விடுத்து வேறு விதமான சிந்தனைகளில் ஈடுபட்டு, சமுதாயத்தில் ஷரீஅத் சட்டப் பிரச்சனையிலும், குளறுபடிகளை செய்து கொண்டிருக்கிற குழப்பவாதிகள் தங்களை திருத்திக் கொண்டு காஜிகளுடைய அதிகார வரம்பை கூட்டுவதற்கும், அதன் மூலம் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தை நிலை நாட்டுவதற்கு எல்லோரும் ஒன்றுபட்டு முன்வர வேண்டும்.

ஷபானு பிரச்சினை போன்று இதைத் திருப்ப முயற்சிக்கும் முஸ்லிம் இயக்கங்கள்: முஸ்லீம் லீக்கின் கருத்துகளை அலசவேண்டியுள்ளது:
- ‘1880-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள காஜிகள் சட்டத்தில், முஸ்லிம்கள் தங்களின் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகளில் காஜிகள் கலந்து கொண்டு தங்களது அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது.
- அதே காஜிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள். அதாவது, அரசால் நியமிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கலாம்.
- மார்க்க சட்டத்தின்படி உள்ள கருத்தை தலைமை காஜி தெரிவிக்கும் போது அதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
- தனது கருத்தை ஏன் ஏற்கவில்லை என்று தலைமை காஜியோ, துணை காஜியோ இதுவரை யாரிடமும் கேள்வி எழுப்பியதில்லை. இதுதான் தமிழகத்தில் உள்ள நடைமுறை.
- அதாவது தீர்ப்புகளை முஸ்லிம்கள் ஏற்கலாம், ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். இங்குதான், அடிப்படைவாத-தீவிரவாதிகளின் கட்டுப்பாடு வருகிறது. அவர்களது கருத்து, காஜிக்களின் கருத்துகளை மிஞ்சும் போது, அவர்களது பத்வா எடுபடுகின்றது.

- சென்னை உயர்நீதிமன்றம் கருத்துப்படி தலைமை காஜி கருத்தை அரசாங்க அதிகாரிகளோ, நீதிமன்றமோ ஏற்பதும், ஏற்காததும் அவரவர்களது விருப்பத்தை பொறுத்தது. இதனால் தலைமை காஜி அவர்களுக்கு அவருடைய பத்வா வழங்கும் உரிமைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.
- அவர் வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது.
- சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பானது, தலைமை காஜியின் இந்த உரிமையை பறிக்கவும் இல்லை. இந்த தெளிவை தலைமை காஜியும் மற்றுமுள்ள துணை காஜிகளும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.
- 1880-ம் ஆண்டின் காஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜி)கள் திருமண நிகழ்வுகளை பதிவு செய்யும் பதிவாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு, அந்த பதிவுகளையே அரசாங்கப் பதிவுகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
- 2008-ம் ஆண்டு நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் தலைமையில் இந்திய சட்ட ஆணையம் செய்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் காஜிகள், இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வதுடன், திருமண முறிவுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று காஜிகள் திருமணப் பதிவாளர்களாகவும், திருமண முறிவுகளை பதிவு செய்பவர்களாகவும் அரசாங்கம் அங்கீகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
ஏற்கெனவே, இவ்வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், முஸ்லிம் பெண்ணிய இயக்கங்கள் வழக்குத் தொடுத்துள்ளதாலும், இப்பிரச்சினையை பெரிதாக்க, முஸ்லிம்கள் விரும்பவில்லை, விளம்பரம் கிடைப்பதையும் விரும்பவில்லை.
© வேதபிரகாஷ்
18-01-2017

[1] http://www.muslimleaguetn.com/news.asp?id=3429
[2] கே.எம்.கே, , காஜிகளும் – தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்!, மணிச்சுடர் Friday, January 12, 2007.
பிரிவுகள்: ஃபத்வா, அடிப்படைவாதம், அடையாளம், அதிமுக, காஜி, காஜி சட்டம், தலாக், தலாக்-தலாக்-தலாக், நிக்கா, நிக்காஹ், நிக்காஹ் நாமா, நீதிமன்றம், விசாரணை, விவாக ரத்து, விவாகம், ஷாபானு
Tags: இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இஸ்லாமிய சட்டம், இஸ்லாம், காஜி, காஜி சட்டம், சான்றிதழ், சென்னை, தமிழ்நாடு, தலாக், தலாக்-தலாக்-தலாக், தலைமை காஜி, நிக்கா, நிக்காநாமா, நிக்காஹ், மசூதி, முல்லா, விவாக ரத்து, ஷா பானு, ஷாபானு
Comments: Be the first to comment
ஓகஸ்ட் 31, 2016
இஸ்லாத்தில் கல்யாணத்திற்கு முன்பான காதல் ஹராம் – Love before Wedding என்பது LBW!

இஸ்லாத்தில் காதல் ஹராமா அல்லது வேறு காரணிகள் தடுக்குமா?: ஊடகங்கள் அமுக்கி வாசிப்பதனால், இது வெறும் காதல் பிரச்சினையா, மதப்பிரச்சினையா என்னெவென்றே புரியாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது:
- இஸ்லாத்தில் காதல் கூடாதா, ஹரமா?
- “லைலா-மஜ்னு” போல சமூக-பொருளாதார அந்தஸ்து பார்ப்பார்களா?
- சுன்னி-ஷியா போன்ற இறையியல் சித்தாந்தங்கள் – பிரிவுகள் தலையிடுமா?
- சையது போன்ற உயர் ஜாதி முஸ்லிம்களை, லெப்பை போன்ற கீழ் ஜாதி முஸ்லிம்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது போன்றவை உண்மையா?
- போரா முஸ்லிம்கள் உள்-திருமண முறையைத் தான் [Endogamy] ஆதரிக்கின்றது, வெளியேயிருந்து பெண் எடுக்கும் முறையினை [exogamy] ஆதரிப்பதில்லை. அத்தகைய முறை சுன்னிகளிடம், ஷியாக்களிடம் உள்ளதா?
- அல்லது இவைத் தவிர வேறு பிரச்சினைகள் உள்ளனவா?
- அதாவது, இருவரில் ஒருவர் “இந்து” போன்ற பிரச்சினை உண்டா என்று தெரியவில்லை.
இக்கேள்விகளுக்கு விடை காணமுடியுமா, முடியாதா என்று தெரியவில்லை. சமீப காலத்தில், திருச்சி-ஶ்ரீரங்கம் பகுதிகளில் நடந்து வரும் இத்தகைய காதல், காதல்-திருமணங்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன. உதாரணத்திற்கு சென்ற மாத விவகாரத்தை எடுத்துக் கொள்வோம்.
காதல் திருமணம் செய்த பெண் கணவர் வீடு முன்பு தர்ணா கோர்ட் உத்தரவுப்படி சேர்த்து வைக்க கோரிக்கை[1]: திருச்சி காஜாமலை டிவிஎஸ் நகரைச் சேர்ந்தவர் / ஸ்டேடபாங்க் காலனியை பர்ஜானா பேகம் (31). இவர் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணம் சாந்திநகரைச் சேர்ந்த வள்ளிநாயகம் மகன் சத்தியகுமார் (31) என்பவரது வீட்டின் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பர்ஜானாபேகம் கூறுகையில், ‘‘நானும் சத்தியகுமாரும் கடந்த 2009ம் ஆண்டு திருச்சியில் காதல் திருமணம் செய்து கொண்டோம். முஸ்லிம் மதத்திற்கு மாறி அவர் என்னை திருமணம் செய்தார். எனது குடும்பத்தார் முன்னிலையில் எங்களது 2009 நவ., 21 ல் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு சத்தியகுமாரின் குடும்பத்தினர் வரவில்லை. தொடர்ந்து நாங்கள் தூத்துக்குடி அருகில் உள்ள வாகைக்குளத்தில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தோம். இந்நிலையில் எனது கணவர், தான் வெளிநாடு செல்ல விரும்புவதாகவும், இதனால் நீ இங்கு தனியாக இருக்க வேண்டாம் என்றும் கூறினார். வெளிநாட்டிலிருந்து அவர் வரும் வரை சென்னையில் சட்டக்கல்லுரியில் படிக்குமாறு கூறி 27.8.2011ல் என்னை திருச்சிக்கு அனுப்பினார். இந்த சமயத்தில் எனது கணவர் வீட்டார் அவரின் மனதை மாற்றி வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்து வைத்துள்ளனர். மேலகூட்டுடன்காடு பகுதியை சேர்ந்த பிரேமா என்பவரை சத்தியக்குமார் 2011 செப்., 1 ல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்[2]. இதுகுறித்து தகவல் தெரிந்து நான் வந்தபோது என்னை சமாதானம் செய்து என்னுடன் இருப்பதாக கூறி என்னை மீண்டும் ஏமாற்றி விட்டார். பிரேமா தூத்துக்குடியில் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார்[3]. இதனால் நான் புதுக்கோட்டை போலீசாரிடம் புகார் கொடுத்து அதன்படி வழக்கு நடந்து வருகிறது. மேலும் கணவருடன் சேர்ந்து வாழ உரிமை கோரி திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நான் 2015ல் வழக்கு தொடர்ந்தேன். இதை விசாரித்த நீதிமன்றம், பாதுகாப்பை கருத்தில் கொண்டு வீரபாண்டியன்பட்டணத்தில் உள்ள எனது கணவரின் வீட்டில் நான் வசிக்க அனுமதி அளித்து 2016 ஜூன் 28 ல் உத்தரவிட்டது. அதன்படி தான் இங்கு வந்தபோது எனது கணவர் வீட்டார் என்னை அனுமதிக்க மறுத்து கதவை பூட்டி விட்டனர். எனவே என்னை வீட்டில் சேர்க்கும் வரை இந்த இடத்தை விட்டு நகரபோவில்லை’’ என்றார்[4].
தீர்ப்பில் தெளிவில்லையா, ஊடகங்கள் செய்தியை ஒழுங்காக வெளியிடவில்லையா?: இங்கு சத்தியகுமார் 2009ல் முஸ்லிம் மதம் மாறி பர்ஜானா பேகத்தைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். பிரேமா என்பவரை சத்தியக்குமார் 2011 செப்., 1 ல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்[5] என்றால், முஸ்லிமாக இருந்து இந்துவை திருமணம் செய்து கொண்டது பிரச்சினையாகிறது. சரளா முதுகல் உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி செல்லுபடியாகாது. ஒன்று பிரேமா மதம் மாறியிருக்க வேண்டும், இல்லை, சத்திரயகுமார் தான் இந்து என்றே திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும். 2011லிருந்து இன்று வரை பிரேமாவுடன் வாழ்ந்து வருகிறார், அதாவது, பர்ஜானா பேகத்துடன் வாழவில்லை. 2016 ஜூன் 28 ல் தான், பர்ஜானா பேகத்துடன் சேர்ந்து வாழ உத்தரவிட்டுள்ளது. அதாவது, ஒரு முஸ்லிமாக சத்திரயகுமார், இரண்டு பெண்டாட்டிகளுடன் வாழ்வது சட்டப்படி செல்லும் என்று தீர்ப்பளித்தது போலும். அதனால் தான், சரளா முதுகல் உச்சநீதி மன்ற தீர்ப்பில் இந்தியர்களுக்கு பொது சிவில் சட்டம் அவசியம் என்று பரிந்துரைத்தது[6]. ஆனால், அவ்விசயம் தேவையில்லாமல் அரசியலாக்கப்பட்டுவிட்டது. இதனால், காலதாமதம் ஏற்பட்டு வருகிறது[7].
இஸ்லாத்தில் கல்யாணத்திற்கு முன்பான காதல் ஹராம்: இஸ்லாத்தைப் பொறுத்த வரையில், காதல் பற்றி மாறுபட்ட கருத்துகள் தான் உள்ளன. குரானை வைத்து விளக்கப்படும் போது, காதல் ஹராமா – ஹலாலா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. காதலைப் பற்றி அல்லாவுக்குத் தான் எல்லாம் தெரியும், அதனால், ஒரு ஆணோ, பெண்ணோ அதை தீர்மானிக்க முடியாது, அல்லாவுக்குத் தான் தெரியும் என்றெல்லாம் கூட பதில் சொல்கிறார்கள். ஹராம் காதல் மற்றும் ஹலால் காதல் என்றும் பிரிக்கிறார்கள். ஜாகிர் நாயக் போன்றோர், கல்யாணத்திற்கு முன்பான காதல் ஹராம் என்று வெளிப்படையாக சொல்கிறார்கள்[8]. கல்யாணத்திற்கு முன்பான காதல் [Love before Wedding] என்பது LBW என்றே கிண்டல் அடிக்கிறார். பொதுவாக, யாரும் இதற்கு நேரிடையான பதிலைக் கொடுப்பதில்லை. ஆனால், முஸ்லிம் பையன்கள் மற்றும் பெண்கள் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சமீபகாலங்களில் காதலர் தினத்தை கடுமையாக, ஆசார இஸ்லாமியர் எதிர்த்து வருகின்றனர். அந்நிலையில் காதலை விபச்சாரம் என்றும் விமர்சிக்கின்றனர். அல்லாவைத் தவிர யாரையும் காதலிக்க முடியாது என்ற தீவிர வாதமும் வைக்கப் படுகிறது.
© வேதபிரகாஷ்
31-08-2016

[1] தினகரன், காதல் திருமணம் செய்த பெண் கணவர் வீடு முன்பு தர்ணா கோர்ட் உத்தரவுப்படி சேர்த்து வைக்க கோரிக்கை, Date: 2016-07-01 11:44:37
http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=591795&cat=504
[2] தினமலர், தன்னுடன் சேர்ந்து வாழ வலியுறுத்தி கணவர் வீட்டு முன் 2 வது நாளாக திருச்சி பெண் வக்கீல் தர்ணா போராட்டம் * கட்சிகள் ஆதரவு, பதிவு செய்த நாள். ஜூலை.2, 2016. 03.58.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1555310&Print=1
[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1555310&Print=1
[4] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=591795&cat=504
[5] தினமலர், தன்னுடன் சேர்ந்து வாழ வலியுறுத்தி கணவர் வீட்டு முன் 2 வது நாளாக திருச்சி பெண் வக்கீல் தர்ணா போராட்டம் * கட்சிகள் ஆதரவு, பதிவு செய்த நாள். ஜூலை.2, 2016. 03.58.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1555310&Print=1
[6] Supreme Court of India – Smt. Sarla Mudgal, President, … vs Union Of India & Ors on 10 May, 1995, Equivalent citations: 1995 AIR 1531, 1995 SCC (3) 635, Author: K Singh – Bench: Kuldip Singh (J).
[7] https://indiankanoon.org/doc/733037/
[8] https://www.youtube.com/watch?v=dnQ-Lh-0Auk
பிரிவுகள்: கற்பு, காஃபிர், காதலன், காதலி, காதல், காதல் ஜிஹாத், காதல் புனித போர்!, காபிர், Uncategorized
Tags: இஸ்லாம், காதலன், காதலி, காதல், குரான், ஜிஹாத், தர்ணா, திருச்சி, திருமணம், நிக்காநாமா, நிக்காஹ், பர்ஜனா பேகம், லவ் ஜிஹாத், லெப்பை, விவாகம், ஹராம், ஹலால்
Comments: Be the first to comment
ஜூலை 13, 2010
நான்கு பெண்களுடன் திருமணம் : “ஜாலி’ கல்யாண மன்னன் கைது!
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=51030
தினமலர், ஜூலை 30,2010, கோவை : நான்கு பெண்களை திருமணம் செய்து, வரதட்சணை பணத்தில் ஜாலியாக உல்லாச வாழ்க்கை அனுபவித்த நபர் கைது செய்யப்பட்டார்.
கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ்(36); டிரைவர்.
- சாம்லா: இவர் சில ஆண்டுகளுக்கு முன், கேரளாவைச் சேர்ந்த சாம்லா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
- ரம்லத் நிஷா: இந்த தகவலை மறைத்து இரண்டாவதாக செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ரம்லத் நிஷா(27) என்பவரை 2005ல் திருமணம் செய்து கொண்டார்.
- சோபியா: தெரிந்து ஒருவருடனும், தெரியாமல் மற்றொருவருடனும் குடும்பம் நடத்தி வந்த இலியாஸ், மூன்றாவதாக சோபியா என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார்.
- மற்றொரு ரம்லத் நிஷா: நான்காவதாக கேரளாவைச் சேர்ந்த மற்றொரு ரம்லத் நிஷாவையும் திருமணம் செய்துள்ளார்.
சமீபத்தில் இவரது நிஜ முகம் பற்றி அறிந்த இரண்டாவது மனைவி ரம்லத் நிஷா, முகமது இலியாசிடம் கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து, வரதட்சணை கேட்டு முகமது இலியாஸ் துன்புறுத்தினார். செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ரம்லத் நிஷா புகார் அளித்ததையடுத்து, முகமது இலியாஸ் கைது செய்யப்பட்டார்.
அப்துல் ரஹீம் மூன்று பெண்களை திருமணம் செய்ததால் கைது!
முதல் மனைவி – ரஹமத் (13-07-2010): கோவை, ஜூலை 12: கோவையில் 3 பெண்களை திருமணம் செய்த பப்ஸ் வியாபாரி கைது செய்யப்பட்டார்[1]. விருதுநகர், வீரசீலம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (32). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன், கோவை வந்த இவர், பப்ஸ் வியாபாரம் செய்து வந்தார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரகமத் (22) என்பவரை முதலில் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சம்சுன் நபியாவை இரண்டாவதாக நிக்காஹ் செய்து கொண்டார்: இந் நிலையில், முதல் மனைவிக்கு தெரியாமல், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், சம்சுன் நபியா (27) என்பவரை திருமணம் செய்தார்.
மூன்றவதாக பசீலா: மகப்பேறுக்காக அவர் தாயார் வீட்டு சென்றபோது, ரத்தினபுரியை சேர்ந்த பசீலா (24) என்பவருடன் அப்துல் ரஹீம் குடும்பம் நடத்தினாராம்.
முதல் மனைவி புகார்: நீண்ட நாள்களாக அவர் வீட்டுக்கு திரும்பாததால், சம்சுன் நபியாவிற்கு சந்தேகம் ஏற்பட்டது. இந் நிலையில், தனது கணவர் இரு திருமணங்களைச் செய்து ஏமாற்றியது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நபியா புகார் தெரிவித்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸார், அப்துல் ரஹீமை கைது செய்தனர்[2].
இது மாதிரி ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன: இஸ்லாத்தில், சட்டரீதியாக (அதாவது அவர்களது ஹதீஸ் / ஷரீயத்படி) ஒரு ஆண்மகன் ஒரே நேரத்தில் நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ளலாம் என்றுள்ளபோது, இங்கு என்ன பிரச்சினை வருகிறது என்று தெரியவில்லை. இதுமாதிரி, ஏற்கெனவே பல வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், அவை என்னவாயின என்று ஊடகங்கள் வெளியிடுவதில்லை.
[1]தினமணி, மூன்று திருமணம் செய்த பப்ஸ் வியாபாரி கைது, First Published : 13 Jul 2010 08:35:35 AM IST; http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Coimbatore&artid=271233&SectionID=136&MainSectionID=136&SEO=&Title=3………….81
[2] http://www.dailythanthi.com/article.asp?NewsID=579784&disdate=7/13/2010&advt=2
பிரிவுகள்: ஃபத்வா, இரண்டாம் பெண்டாட்டி, இரண்டாம்மனைவி, இஸ்லாம், சரீயத், சரீயத் சட்டம், ஜீவானாம்சம், தலாக், தலாக்-தலாக்-தலாக், நான்காம் பெண்டாட்டி, நான்காம் மனைவி, நான்கு பெண்டாட்டிகள், நிக்கா, பல திருமணம் ஏன்?, பலமணம், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், மனைவி, முதல் பெண்டாட்டி, முதல் மனைவி, முலை, முலைப்பால், முலைப்பால் ஊட்டுவது, முலைப்பால் பந்தம், முஸ்லிம் பெண்கள், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், மூன்றாம் பெண்டாட்டி, மூன்றாம் மனைவி, லவ் ஜிஹாத், விவாக ரத்து
Tags: ஃபத்வா, இரண்டாம் பெண்டாட்டி, இரண்டாம்மனைவி, நான்காம் பெண்டாட்டி, நான்காம் மனைவி, நான்கு பெண்டாட்டிகள், நிக்கா, நிக்காநாமா, பலதார மணங்கள், மனைவி, முதல் பெண்டாட்டி, முதல் மனைவி, மூன்றாம் பெண்டாட்டி, மூன்றாம் மனைவி, லவ் ஜிஹாத்
Comments: 5 பின்னூட்டங்கள்
மே 2, 2010
மொஹம்மது மௌதூத் கான்: நான் தான் கடவுள், என்னுடைய ஆறு மனைவிகள் தேவதைகள்!
மொஹம்மது மௌதூத் கான் (Mohammed Maodood Ahmed Khan) தன்னை கடவுள் என்று சொல்லிக் கொண்டான், “நான் கிருத்துவர்களுக்கு ஏசு கிருஸ்து; இந்துக்களுக்கு சிவா; முஸ்லீம்களுக்கு மஸிஹா. நான் உலகத்தைக் காப்பாற்றி இருப்பேன்“, என்றெல்லாம் சொன்னனாம், அவன் மார்ச் 8ம் தேதி 2010 கைது செய்யப் பட்டபோது!
முஹம்மது கான் / அஹமது கான் தனது மனைகள் – தேவதைகள் – காயத்ரி, சதி, பார்வதி, கங்கா, துர்கா மற்றும் மஹாகாளி என்றானாம். அனால், உண்மையில்
1. இவனது முதல் மனைவி நஜ்மா ஃபாதிமா ஆவாள், அவளுடன் ரியாதில் வாழ்ந்து வந்தானாம்.
2, இரண்டாவது மனைவி காயத்ரி தேவி, பத்தே நாட்களில் ஓடிவிட்டாளாம்.
3. சஜிதா என்ற மூன்றாவது மனைவி பதினான்கு நாட்கள் இருந்தாளாம். அந்த குருகிய காலத்திலேயே முகல் ரெஸிடன்ஸி என்ற இடத்தில் இருந்த அடுக்கு மாடி வீட்டை தனது பெயரில் எழுதி வாங்கிக் கொண்டானாம்.
4. நான்காவது மனைவி சும்ரனா. அவள் இவன் கொடுமை தாங்காமலேயே இறந்து விட்டாளாம்.
5. ஐந்தாவது மனைவு தஸீன் மட்டும் இவனுடனே இருக்கிறாளாம்.
6. ஆறாவது மனைவி ஸபானா, இவன் அவளை கொலை செய்ய முயற்சித்தபோது தப்பித்து ஓடிவிட்டாளாம்.
இவ்வாறு, இவன் பணக்காரப் பெண்களாகத் தேர்ந்தெடுத்து, பல லட்சங்களை சுருட்டிக் கொண்டு மறைந்து விடுவானாம்.
போலீஸ் சொல்வது என்னவென்றால், “ஏமாற்றுவேலைகளுக்காக இந்த கான் பல தடவை கைது செய்யப் ப்ட்டிருக்கிறான். பஞ்சாபில் கடியனா போலீஸாரால், மத ஒற்றுமை குளைக்கும் விதத்தில் பேசியதற்காக கைது செய்யப் பட்டிருக்கிறான். அவன் ஆறு பெண்களை மணந்து கொண்டு ஒன்பது கொழந்தைகளைப் பெற்றெடுத்து இருக்கிறான். ஆனால், எல்லா மனைவிகளும் இவனை விட்டு ஓடிபோய் விட்டனராம்“. அவனுடைய டார்ச்சர் / கொடுமை தாங்க முடியவில்லை என்று ஓடினராம்.
வெஸ்லி என்பவரின் கூற்றுப்படி, “ஜெயிலிலிருந்துவெளியே வந்த பிறகும் அதே மாதிரியான வேலைகளை மறுபடியும் செய்து வந்தானாம்“.
சில மாதங்களுக்கு முன்பாக, எம். ஜே. மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த யாஸ்மீன் என்ற டாக்டரிடமிருந்து, ஒரு கிலோ எடையுள்ள தங்கநகைகளைத் திருட்டுத்தனமாக கவர்ந்துள்ளானாம். அது தவிர தனக்காக ஒரு மனையை ரரூ.25 லட்சங்களுக்குப் பதிவு செய்துத் தரச் சொல்லியுள்ளான்.
இதே மாதிரி பஸீர்பாக்கைச் சேர்ந்த லதா என்ற பெண்மணியிடமிருந்து ரூ. ஆறு லட்சம் அபகரித்துள்ளான். பிறகு புகார் பேரில் அவன் மார்ச் 8ம் தேதி சிறப்புப் போலீஸ் பிரிவால் பிடிபட்டான்.
ஆகமொத்தம், இவன் நிச்சயமாக செக்ஸ் மற்றும் பணத்திற்காகத் தான் இவ்வாறு சாமியார் வேடம் போட்டு திரிந்துள்ளான் எனத் தெரிகின்றது. ஆனால், ஊடகங்கள் ஏன் மௌனமாக இருந்தன, இப்பொழுது லேசாக வெளிவிடுகின்றன என்று புரியவில்லை.
பிரிவுகள்: அழகிய இளம் பெண்கள், ஆறு மனைகள், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், கட்டை அவிழ்த்தல், கற்பழிப்பு, கற்பு, காஃபிர், காதல் ஜிஹாத், காதல் மந்திரக் கட்டை அவிழ்த்தல், சரீயத், சுன்னத், தலாக், திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்வது, திருமணம், தீய சக்திகளை விரட்டுவது, நிக்கா, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை, முஸ்லீம் பெண்கள் தனியாக இருப்பது, முஹம்மது கான், முஹம்மது மௌதூத் கான், மொஹம்மது மௌதூத் கான், ஸ்ரீ ராமநவமி, ஹனுமந்த ஜெயந்தி
Tags: ஃபத்வா, அழகிய இளம் பெண்கள், அவமதிக்கும் இஸ்லாம், அஹமது கான், இமாம், ஊடகத் தீவிரவாதிகள், ஐதராபாத், கங்கா, கற்பழிப்பு, காயத்ரி, சஜிதா, சதி, சானியா, சானியா மிர்சா, சாயாலி, துர்கா, நஜ்மா ஃபாதிமா, நான் கடவுள், நிக்கா, நிக்காநாமா, பார்வதி, மஹாகாளி, முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஹம்மது கான், மொஹம்மது மௌதூத் கான், ஸபானா, ஹிஜாப்
Comments: 12 பின்னூட்டங்கள்
ஏப்ரல் 22, 2010
முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஆந்திரா கோர்ட்டு, சானியா, சோயிப் மாலிக் உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு!
முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஆந்திரா கோர்ட்டு, சானியா, சோயிப் மாலிக் உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்ய நேற்று உத்தரவு இட்டது. மஸ்லுமின்-உம்மதை முகமதியா என்ற முஸ்லிம் அமைப்பின் தலைவர் மௌலிம் மோஸின் பின் உஸைன், சோயப் மாலிக்கின் தந்தையின் பெயர்கள் இரண்டு நபர்கள் இருப்பது மாதிரி குறிப்பிடப் படுகின்றன. சானியா, சானியா தந்தை- இம்ரான் மிர்ஜா, அஜாருத்தீன், இரு காஜிக்கள் உட்பட 14 பேர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தினமலரில் 23-04-2010 அன்றைய செய்தி:
சோயப் – சானியா மீது புது வழக்கு: அறிக்கை தர போலீசுக்கு உத்தரவு
ஏப்ரல் 23,2010,00:00 IST

ஐதராபாத்: முஸ்லிம் மதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் – டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மீது தொடரப்பட்ட புதிய வழக்கு தொடர்பாக அறிக்கை அளிக்கும் படி ஐதராபாத் போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், சானியா மிர்சா திருமணம் கடந்த 12ம் தேதி ஐதராபாத்தில் நடந்தது. ஆனால், சோயப் தன்னை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு விட்டதாகவும், அவரால் பலமுறை கருச்சிதைவு செய்து கொண்டதாகவும், ஐதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா சித்திக் என்ற பெண், போலீசில் புகார் செய்தார். இதனால், சோயப் பின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு அவரை கைது செய்யும் சூழல் உருவானது. ஆந்திர அமைச்சர், மாநில காங்கிரஸ் தலைவர், முஸ்லிம் பெரியவர்கள் தலையிட்டு பிரச்னைக்கு முடிவு கட்டினர். இதையடுத்து சோயப், ஆயிஷாவை, ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்தார். உடனடியாக சானியாவை திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தானின் லாகூர் நகரில் சோயப் வீட்டு சார்பில் இந்த வாரம் திருமண வரவேற்பு நடக்க உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் சோயப்பிடம் ஐதராபாத் போலீசார் பாஸ்போர்ட்டை ஒப்படைத்தனர்.
‘சட்டப்படி ஆயிஷாவை, சோயப் விவாகரத்து செய்யவில்லை. இது முஸ்லிம் மதத்தை அவமதிப்பதாக உள்ளது’ எனக் கூறி, ஐதராபாத்தைச் சேர்ந்த மஸ்லுமின் -இ-உமாதோ முகமதியா என்ற அமைப்பு உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதில் சோயப், சானியா, சானியாவின் தந்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன், ஐதராபாத்தைச் சேர்ந்த இரண்டு காஜிகள் உள்ளிட்ட 14 பேர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஐதராபாத் கூடுதல் மெட்ரோபாலிடன் தலைமை மாஜிஸ்திரேட் விசாரித்தார். மனுவில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து விசாரித்து, அடுத்த மாதம் 26ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்கும் படி பஞ்சாரா ஹில்ஸ் போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளார். ‘கோர்ட் உத்தரவை தொடர்ந்து புகார் கூறப்பட்டுள்ள 14 பேரிடமும் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்’ என, துணை கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திரா தெரிவித்துள்ளார்.
பிரிவுகள்: ஃபத்வா, ஆர்த்தி சாப்ரா, இமாம், இஸ்லாமிய இறையியல், சரீயத், சரீயத் சட்டம், சோயப் மாலிக், தலாக், பல திருமணம் ஏன்?, பலமணம், மதமா மணமா?, மதமா மனமா மணமா?, முகமது ஆசிப், முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை
Tags: அஜாருத்தீன், ஆயிஷா, காஜி, சானியா, சானியா மிர்சா, சாயாலி, நிக்கா, நிக்காநாமா, நிக்காஹ், மஸ்லுமின் -இ-உமாதோ முகமதியா, மஸ்லுமின்-உம்மதை முகமதியா, மௌலிம் மோஸின் பின் உஸைன், லவ் ஜிஹாத்
Comments: 2 பின்னூட்டங்கள்
ஏப்ரல் 13, 2010
சானியா திருமணம் – படங்கள்!

மணமகள் அழைத்துச் செல்லப் படுகிறாள்
திருமணத்திற்காக மணமகள் அலங்கரிக்கப் பட்டு அழைத்துச் செல்லப் படுகிறாள்.

மாப்பிள்ளை சடங்கு
மாமனார் ஒப்புதல் அளிக்கிறார்.

மணமகன் மணமகளுக்கு மோதிரம் அணிவித்தல்!
சோயப் சானியாவிற்கு மோதிரம் அணிவித்தார். ஆமாம், அந்த கருமணி மாலையும் அவர்தான் அணிவித்தாரா?

பெண்ணை வாழ்த்துதல்
மணமகள் ஆசிர்வதிக்கப் படுகிறாள்.

மணமகன் வாழ்த்தப்படுதல்
மணமகனும் வாழ்த்தப்படுகிறான்.

மகிழ்ச்சியான நேரம்
தோழி கிண்டல் செய்கிறாரா?

ஜோடியாக நிற்கிறார்கள்
மணமகன், மணமகள் ஜோடியாக நிற்கிறார்கள்

குடும்பதுடன் ஃபோட்டோ
குடும்பத்துடன் புகைப்படம்!

ஒருவழியாக முடிந்து விட்டது - இனி ஜாலிதான்
சானியா திருமணம் ஒருவழியாக நடந்து முடிந்து விட்டது!

பாவம் இந்தியர்கள்
பாவம் இந்தியர்கள் – எட்டித்தான் பார்க்கமுடியும் போல இருக்கிறது! பார்த்தாலும் என்னத் தெரியும்?

சானியா இந்தியாவிற்குக் கொடுப்பது?
அதாவது, இங்கு சானியா என்ற தனிப்பட்ட நபரைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஆனால், அப்பெண்ணை வைதுக் கொண்டு பலவிதமாக ஊடகங்கள், மற்றவர்கள், ஏன் அந்நிய சக்திகளும் விளையோடும் போதுதான் இந்தியர்களுக்கும் கவையாக இருக்கிறது.
இதற்கு, பால் தாக்கரேயும், பிரமோத் முத்தாலிக்கும்…………………..யாரும் தேவையில்லை.
ஆமாம் நம் சன் – டிவிக்காரகள் ஏன் அமைதியாக இருந்துவிட்டார்கள்?
அவர்களது “நிஜம்”, “பூதக் கண்ணாடி” கூட்டங்கள் எல்லாம் தூங்கி விட்டனனா அல்லது சுருட்டிக் கொண்டு படுத்துவிட்டனவா? இல்லை, அவர்களுக்கும் ஃபத்வா கொடுத்துவிட்டார்களா?
நிக்காஹ் 15ம் தேதி வைத்திருந்தாலும், ஏதோ காரணங்களுக்காக முன் கூட்டியே நடத்தி விடுவது என்று ஞாயிற்றுக்கிழமை திர்மானிக்கப் பட்டது. அன்றுதான் சுன்னி உலேமா வாரியமும் ஃபத்வா கொடுத்தது. ஆகவே முன்னதாக நடத்தி விட்டால் எல்லா விமர்சனங்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்துவிடலாம் என்று தீர்மானித்ததாகத் தெரிகிறது.
ஆகவே மெஹந்தி 14ம் தேதி, வரவேற்பு 15ம் தேதி என்று குறிப்பிட்டபடி நடக்கும். ஆகவே மற்ற சடங்குகளிக்கு முன்பாகவே நிக்காஹ் நடந்ததே பாரம்பரியத்திலிருந்து மிகவும் விலகியே நடந்ததுள்ளது கண்டு பெரியவர்கள் குறை சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாது மெஹந்தி செய்வது இஸ்லாமிய வழக்கம் இல்லையென்றலும், முஸ்லிம்கள் செய்கிறார்கள் என்றும் கூறப்பட்டது. அப்படியே மெஹந்தி வைத்துக் கொண்டாலும், திருமணத்திற்கு முந்தைய நாளில் தான் வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் சொல்லப் பட்டது.
பிரிவுகள்: ஃபத்வா, அழகிய இளம் பெண்கள், ஆயிஷா சித்திக், இந்தியா, இமாம், இருக்கின்றது என்ற நிலை, உலமா வாரியம், உலமாக்கள், ஏ. கே. கான், கற்பு, கலவரங்கள், காஃபிர், காதல் ஜிஹாத், குரான், சட்டத்தை வளைப்பது!, சரீயத், சானியா மிர்சா, ஜிஹாத், ஜீவானாம்சம், தலாக், திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்வது, திருமணம், தெரிந்தோ அல்லது தெரியாமலோ, நிக்கா, பர்கா, பர்தா, பல திருமணம் ஏன்?, பலமணம், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், பார்த்தோ அல்லது பார்க்காமலோ, பாவத் தடுப்பு, புனிதப் போர், மதமா மணமா?, மதமா மனமா மணமா?, முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை, விமர்சனம், ஹிஜாப்
Tags: ஃபத்வா, அழகிய இளம் பெண்கள், ஆயிஷா, ஐதராபாத், சானியா, சானியா மிர்சா, சாயாலி, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், சோயப் மாலிக், நிக்கா, நிக்காநாமா, நிக்காஹ், பர்கா, பாகிஸ்தான், மெஹந்தி, லவ் ஜிஹாத்
Comments: 1 பின்னூட்டம்
ஏப்ரல் 8, 2010
ரூ.15,000/- கொடுக்கும் மாலிக்கும், 5000 கொடுக்கும் குஞ்சும்!
விவேக் ஜோக்கில் அடிக்கடி சன் – டிவி மற்ற எல்லா டிவிக்களும் ஓலிபரப்பி பரவசத்தில் ஆழ்த்தி, பிள்ளைகள் வேறு அதை ஒப்பிவித்து, மிகவும் பிரபலமான, “மனைர் குஞ்சு” ஒன்று உள்ளது.
அதில் ஏதோ ரூ.5000/- கொடுத்துவிட்டு கற்பழிப்பு செய்து, அதாவது கற்பழித்து விட்டு ரூ.5000 அபராதம் கொடுத்துத் தப்பித்துக் கொள்வது மாதிரியும், விவேக் குஞ்சை சுட்டு தண்டிப்பது மாதிரியும் இருக்கும்.
இப்பொழுது, பத்து நாட்களாக பொய்-மேல்-பொய் சொல்லி, இந்தியர்களுக்கு ஏதோ இதுதான் முக்கியமானப் பிரச்சினை போல, இந்த அசிங்கமான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு, ஒளிபரப்பி அவந் அவளுடன் இருந்தான், இவள்-இவனுடன் படுத்தான், கர்ப்பம் ஏற்பட்டது, கரு-கலைந்தது……………………………என்றெல்லாம் விவரமாக போட்டுவிட்டு, இப்பொழுது, தலாக் செய்து விட்டார், ரூ. 15,000/- கொடுப்பார் என்று கதையை முடித்துரிப்பது, நடந்த நிகழ்ச்சிகளை விட மிகவ்ய்ம் கேவலமாக இருக்கிறது.
இதெல்லாம், தனிப்பட்ட மனிதர்களின் பிரச்சினை என்றால், ஊடகங்களில் வரச் செய்திருக்கக் கூடாது.
அவ்வாறு விளக்கம் எல்லாம் கொடுத்திருக்கக் கூடாது.
மேல்தட்டு, பணக்கார, நவீன-நாகரிக மாந்தர்களின் உலகம், அவர்கலது எண்ணப்படி ஆண்-பெண்கள் கூடுவார்கள், உறவு வைத்துக் கொல்வார்கள், பிரிந்து விடுவார்கள்……………………..என்றெல்லாம் இருந்தால், ஏன் அத்தகைய “படுக்கையரை” அசிங்கங்களை ஊடகங்களில் எடுத்து வந்து, இம்மாதிரி தேவையற்ற முறையில் ஆபாச-விளம்பரம் பெறுகிறார்கள்.
அதுமட்டுமல்ல , மத கலவரம் என்று ஊரே அடங்கிக் கிடக்கும் போது, எதற்கிந்த அடங்காத காம-கல்யாண-கிரக்க-குறுகிய-கலாட்டா செய்திகல், படங்கள்……எல்லாம்…………….எந்த உண்மையை மறைக்க?
பிரிவுகள்: அழகிய இளம் பெண்கள், ஆயிஷா சித்திக், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஏ. கே. கான், கராச்சி திட்டம், கற்பழிப்பு, கற்பு, கலவரங்கள், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காதல் ஜிஹாத், சரீயத், சரீயத் சட்டம், சானியா மிர்சா, சோயப் மாலிக், ஜீவானாம்சம், தலாக், திருமணம், நிக்கா, பர்கா, பர்தா, பர்தா அணிவது, பல திருமணம் ஏன்?, பலமணம், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், மத-அடிப்படைவாதம், மதமா மணமா?, மதமா மனமா மணமா?, மறுமணம், முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை, ஸ்ரீ ராம நவமி, ஸ்ரீ ராமநவமி, ஹனுமந்த ஜெயந்தி, ஹிஜாப்
Tags: அசாருதீன், அழகிய இளம் பெண்கள், அவமதிக்கும் இஸ்லாம், ஆயிஷா, இந்துக்கள், இமாம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஐதராபாத், கற்பழிப்பு, சானியா, சானியா மிர்சா, சாயாலி, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜீவனாம்சம், தலாக், நிக்கா, நிக்காநாமா, லவ் ஜிஹாத்
Comments: 4 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்