பர்கா / நிகாப் பெல்ஜியத்தில் தடை செய்யப்பட்டது!
பெல்ஜியம் பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் தங்களது அணியும் அடையாளத்தை மறைக்கும் வகையில் உள்ள பர்கா / நிகாப் போன்ற ஆடைக்கு தடை விதித்துள்ளது. இதனை அடுத்து பிரான்ஸ் நாடும் அத்தக்கையச் சட்டத்தை எடுத்துவரும் என்று தெரிகிறது.
இச்சட்டம் அமூலாக்கப் பட்டால், அந்த உடையை அணிந்து பொது இடங்களில் வருபவர்களுக்கு 15 முதல் 25 ஈரோக்கள் (20-34 dollars) அபராதம் அல்லது / மற்றும் ஒருவார சிறைத் தண்டன விதிக்கப் படுமாம்.
முஸ்லீம் பெண்கள் பர்கா, நிகாப், ஹிஜாப் மற்றும் சாதர் என்ற வகையான உடலை மறைக்கும் உடையை, ஏற்கெனெவே உள்ளே அணிந்துள்ள உடைக்கு மேலே போட்டு மறைத்துக் கொள்கிறார்கள்.
பர்கா என்பது முழுமையாக மறைக்கும் ஆடை, அதாவது எதையும் பார்க்க முடியாது. பெண்ணின் அடையாளமே தெரியாது.
நிகாப் என்றதும், அது போலத்தான்.ஆனால் பெண்ணின் கண்கள் தெரியும். பெண்ணின் அடையாளமே தெரியாது.
ஹிஜாப் அணிந்தால், முகம் தெரியும். பெண்ணின் அடையாளம் தெரியும்.
சாதர் அதேபோலத்தான். பெண்ணின் அடையாளம் தெரியும்.
அண்மைய பின்னூட்டங்கள்