Posted tagged ‘நாயக்’

குற்றச்சாட்டை மறுக்கும் ஜாகிர் நாயக் – செக்யூலரிஸமும் ஜிஹாதித்துவத்தை ஆதரிக்கும் போக்கும் – உரையாடல்களை மீறுகின்ற அடிப்படைவாதம்!

ஜூலை 9, 2016

குற்றச்சாட்டை மறுக்கும் ஜாகிர் நாயக் செக்யூலரிஸமும் ஜிஹாதித்துவத்தை ஆதரிக்கும் போக்கும் உரையாடல்களை மீறுகின்ற அடிப்படைவாதம்!

Ravishankar - Zakir Naik - 21-06-2006, Bangalore

ஶ்ரீ ரவிசங்கர்ஜாகிர் நாயக் உரையாடல் தான்: ஜாகிர் நாயக்குக்கும் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கருக்கும் இடையே இஸ்லாமியம் மற்றும் இந்து மதம் கடவுள் கருத்து பற்றி விவாதம் பெங்களூரில் 21 ஜனவரி 2006 அன்று நடைபெற்றது. இவரைப் போல, கட்டிப் பிடித்துக் கொண்டு பாராட்டவில்லை. இரு மதங்கள் பற்றி, இருவரும் அலசினர், ஆனால், எந்த முடிவுக்கும் வரவில்லை. மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர் உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று தேசிய புலனாய்வு முகமை சமீபத்தில் விசாரணை கோர்ட்டில் தெரிவித்தது. இதன் காரணமாக சாத்வி பிரக்யா தாக்குர் விடுவிக்கப்படுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.  உண்மையில், காங்கிரஸ் அரசு, “காவி பயங்கரவாதம்” என்று சொல்லி அதனை மெய்பிக்க இவ்வாறான, பொய்யான வழக்குகளை போட்டன என்று தெரியவரும் நிலையில், இத்தகைய பேச்சுகள் வெளிவருகின்றான என்பதனை கவனிக்க வேண்டும்.

Hindus complained againt Zakir in 2012பீஸ்டிவி” / அமைதி தொலைக்காட்சி வளர்ந்த விதம்: மும்பையில் ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான “பீஸ் டிவி” என்ற செனலை, கேபிள் நெட்வொர்க்கில் பரப்பாபட்டு வருகிறது. அதில் தான், நாயக் சர்ச்சைக்குரிய போதனைகளை செய்து வருகிறார். இதற்கு பல நாடுகளிலிருந்து பணம் நன்கொடையாக வந்து கொண்டிருக்கிறது. அதற்கு அரசு அனுமதி அளித்து வருகிறது. அதாவது, இது காங்கிரஸ்-பாஜக அரசுகளுக்கு தெரிந்தே நடந்து வருகிறது. அப்பொழுது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊடகங்களும் அப்பொழுதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு, இப்பொழுது, ஏதோ தாங்கள் புதியதாக கண்டுபிடித்து விட்டதைப் போன்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டன. இதனால், மஹாராஷ்ட்ர அரசு நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது[1]. இப்பொழுது, இப்பிரச்சினை வெளிவந்தவுடன், “ஜாகிர் நாயக் பேச்சு குறித்த அனைத்து சிடிக்களையும் பெற்று, ஆய்வு செய்து அறிக்கைத் தாக்கல் செய்யும்படி மும்பை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளேன்[2]. அவரது முகநூல் உட்பட சமூக வலைத்தள பக்கங்கள் போலீஸ் உதவியுடன் காண்காணிக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது” என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்தார்[3].

Zakir Naik denies his inspiration to Bangladesh terrorகுற்றச்சாட்டை மறுக்கும் ஜாகிர் நாயக்[4]: தன் மீது குற்றஞ்சாட்டப் பட்டு வருகிறது என்பதனை உணர்ந்த ஜாகிர், தன்னைக் காத்துக் கொள்ள முயன்றார். இஸ்லாமிய நாடான பங்களாதேசம் தீவிரவாதிகள் தன்னால் ஊக்குவிக்கப்பட்டார் என்றதும் உசாரானார். இதனால், தன் மீதான குற்றச் சாட்டுகளை மறுத்துள்ள ஜாகீர் நாயக், “தீவிரவாதத்தை நான் அடியோடு வெறுக்கிறேன். முஸ்லீம் அல்லது முஸ்லீம் அல்லாத மக்களை கொலை செய்யும்படி நான் யாரிடமும் கூறவில்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது,” என்றார்[5]. நிலைமை மோசமாகி, தன்னுடைய அடிப்படைவாத-தீவிரவாத ஆதரவு வெளிப்பட்டு விட்டதால், மேலும், “எனக்கும் வங்க தேச தாக்குதலுக்கும் எவ்வித தொர்பும் இல்லை. மீடியாக்கள் தவறாக சித்தரிக்கின்றன.  டாக்கா தாக்குதலுக்கு நான் பொறுப்பல்ல”, என மும்பையை சேர்ந்த ஜாகீர் நாயக் கூற ஆரம்பித்துவிட்டார்[6]. மெக்காவிலிருந்து, காணொலியில் பேசி, அவ்வாறு சொன்னதாக செய்திகள் வெளிவந்துள்ளன[7].

IRF - Islamic research Centre, Mumbai - The Hinduயார் இந்த காஜிர் நாயக்?: அப்துல் கரீம் நாயக் Zakir Naik (1965 அக்டோபர் 18 இல் பிறந்தவர்) பிரபல இஸ்லாமிய மதபோதகர், அறிஞர், சர்வதேச சொற்பொழிவாளர், சிறந்த எழுத்தாளர் இஸ்லாமிக் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் ஆவார்  என்று புகழ்ந்து தள்ளுகிறது தமிழ்-விகிமீடியா[8]. அவர் தற்போது இந்தியாவில் பீஸ் டிவி எனும் தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார்[9]. இஸ்லாமிய பொது பேச்சாளர் ஆவதற்கு முன்பு அவர் ஒரு மருத்துவரும் ஆவார். மும்பை, மகாராஷ்டிரா, இந்தியாவில் 18 அக்டோபர் 1965 பிறந்த சாகிர் நாயக் மும்பை புனித பீட்டர் உயர்நிலை கல்லூரியிலும் பின்னர் மும்பை பல்கலைக்கழகதில் மருத்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1991 ஆம் ஆண்டில் அவர் ஐ அர் எப் எனும் நிறுவனத்தை துவங்கி அதன் மூலம் இசுலாமிய அழைப்பு பணியை ஆரம்பித்தார்[10]. சாகிர் நாயக் 1991ம் ஆண்டின் பின்னர் தனது இசுலாமிய ஆராய்ச்சி மூலம் திரிபுவாதங்களைக் கொடுக்க ஆரம்பித்தார். இவர் குரான், இந்துமத வேதங்கள், கிறித்துவ, பைபிள்கள் மற்றும் பல புத்தகங்களையும் படித்து மனப்பாடம் செய்து, அத்தகைய விளக்கங்களைக் கொடுத்து வந்தார்.  செப்டம்பர் 2001 முதல்   ஜூலை 2002 வரை கடும் எதிர்ப்பில் அமெரிக்கவில் இசுலாமிய மதப் பிரச்சாரம் செய்து 34,000 அமெரிக்கர்களை இஸ்லாமிய மதத்தினுள் கொண்டு வந்தார்[11] என்று தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், முஸ்லிம்கள் ஏன் அமெரிக்காவில் 11/9 தீவிரவாதத்தை செய்தனர் என்று விளக்கவில்லை.  மாறாக, ஒசாமா பின் லேடனை புகழ்ந்து பேசுவது தான், பழக்கமாகக் கொண்டிருந்தார். இந்தியாவின் இசுலாமிய இதழான இஸ்லாமிய குரல்பத்திரிகையில் அவரது கட்டுரை சில வெளி வந்துள்ளன[12].

 Zakir opposing building of churches and temples

ஜாகிர் நாயக்கின் பொன்மொழிகள் தீவிரவாதியின் குரூர மனப்பாங்கைக் காட்டுகிறது[13]: ஜாகிர் நாயக்கின் “பொன் மொழிகள்” என்று வீடியோக்கள், இணைதளங்களில் குறிப்பட்டப்பட்டுள்ளது. அவற்றைப் படித்துப் பார்த்தால், தலிபான், அல்-குவைதா போன்ற தீவிரவாதிகள் சொன்னதற்கும், இந்த ஆள் சொல்வதற்கும், எந்த வித்தியாசமும் இல்லை என்று தெரிகிறது. அவற்றில் சில, பின்வருமாறு[14]:

  1. அவர்களது மதம் தவறானது மற்றும் அவர்கள் வழிபடுவதும் தப்பானது எனும்போது, அவர்களது நாம் எப்படி இஸ்லாமிய நாடுகளில் சர்ச்சுகள், கோவில்கள் கட்டப்படுவதற்கு அனுமதிக்கலாம்?
  1. முன்றாம் பாலினர் முதலியோர் பாவமான மனநோயாயால் பீடிக்கப்பட்டுள்ளனர், அது ஹராம் ஆகும். ஏனெனில், அவர்கள் டிவி-செனல்களில் போர்னோகிராபி படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதனால், அத்தொலைக்காட்சிகளை தடை செய்ய வேண்டும்.
  1. குரானில் பல அயத்துகள் சொல்வதாவது, “நீ உன் மனைவியுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், பிறகு, வலது கையில் எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம்”! அதாவது, நான்கு மனைவிகளைத் தவிர, பெண்ணடிமைகளையும் செக்ஸுக்கு வைத்துக் கொள்ளலாம்.
  1. “சார்லஸ் டார்வினின் “பரிணாம வளர்ச்சி சித்தாந்தம்”, சித்தாந்தம் தான், “பரிணாம வளர்ச்சி உண்மை” என்று டெந்த புத்தகமும் இல்லை” – இப்படி அதையும் மறுக்கிறார்.
  1. ஒசாமா பின் லேடன், இஸ்லாத்தின் எதிரிகளோடு போராடுகிறார் என்றால், நான் அவரோடு இருக்கிறேன். அமெரிக்கா என்ற மிகப் பெரிய தீவிரவாதியை பயமுறுத்துகிறார் என்றால், நான் அவரை ஆதரிக்கிறேன். அதனால், எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளாக இருக்க வேண்டும். அதாவது ஒருவர் இஸ்லாத்தை பின்பற்றிக் கொண்டு, தீவிரவாதியையே கதிகலங்கும் படி பயமுறுத்துகிறான் என்றால், தீவிரவாதியாக இருக்கலாம்.
  1. சிறுமிகள், பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பக் கூடாது, ஏனெனில், அவர்கள் தேறி வெளியில் வருவதற்குள், அவர்களது கற்ப்பு, பறிபோயிருக்கும். அதனால் பள்ளிகள் மூடப்பட வேண்டும். அவர்கள் எந்த அணிகலன்களையும் அணியக்கூடாது.

© வேதபிரகாஷ்

09-07-2016

Saba Nazvi article on Zakir Naik-cutting

[1] தினகரன், ஜாகிர் நாயக் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து விசாரிக்க மராட்டிய போலீசுக்கு உத்தரவு, பதிவு செய்த நாள். ஜூலை, 2016. Date: 2016-07-07 18:33:56.

[2] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=229567

[3] ஜன்னல்.மீடியா.காம், உள்துறை கண்காணிப்பில் ஜாகிர் நாயக், Fri, 08 Jul 2016 02:00 PM

[4] ஜாகிர் நாயக்கின் பேச்சை இங்கே கேட்கலாம்: https://www.youtube.com/watch?v=iNLhvuqQilI

[5] http://www.jannalmedia.com/article?nId=8622; Published on Jul 8, 2016.

[6] தினமலர், தாக்குதலுக்கு நான் பொறுப்பல்ல: ஜாகீர், பதிவுசெய்த நாள். ஜூலை.7, 2016.18.02

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1559936

[8]https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D

[9] 24-Hour Islamic Spiritual Edutainment International Satellite TV Channel
  1. Telecasting ‘Free to Air’ state-of-the-art TV Programmes in English, Urdu, Bangla and Chinese.
  2. Telecasting ‘Free to Air’ state-of-the-art TV Programmes in English, Urdu, Bangla and Chinese.
    2.  Backed by the Best available Media Technology, Creativity, Research, Programmes Softwares and
    Operational Management.
    3.  Quest for Promoting truth, Justice, Morality, Harmony and Wisdom for the whole of Humankind.
    4.  Now can be received in more than 125 countries… in Asia, Middle East, Europe, Africa and Australia.
    Shortly it would be telecast to the rest of the world too.
    5. The TV programmes will feature internationally famous scholars and orators on religion and
    humanity like: Dr Zakir Naik,  India, Ahmed Deedat ,   South Africa, Salem Al Aamry,  UAE,   Assim Al Hakeem,   Saudi Arabia, A. Rahim Green,  UK, Hussain Yee,   Malaysia, etc. http://www.irf.net/peacetv.html

[10] The Islamic Research Foundation (IRF), Mumbai, India, is a registered non-profit public charitable trust. It was established in February 1991. It promotes Islamic Da’wah – the proper presentation, understanding and appreciation of Islam, as well as removing misconceptions about Islam – amongst less aware Muslims and non-Muslims. IRF uses modern technology for its activities, where ever feasible. Its presentation of Islam reach millions of people worldwide through international satellite T.V. channels, cable T.V. networks, internet and the print media. IRF’s activities and facilities provide the much needed understanding about the truth and excellence of Islamic teachings – based on the glorious Qur’an and authentic Hadith, as well as adhering to reasons, logic and scientific facts. http://www.irf.net/

[11] Ghafour, P.K. Abdul. “New Muslims on the rise in US after Sept. 11”. Arab News. 3 November 2002.

[12] “Questions Commonly Asked by Non-Muslims – VI : Prohibition of Alcohol”“Was Islam Spread by the Sword?”“Are Ram And Krishna Prophets Of God?”.

[13] Thefirstpost.com, ‘Every Muslim should be a terrorist’: Zakir Naik and six of his most provocative statements, FP Staff,  Jul 7, 2016 19:55 IST

[14] http://www.firstpost.com/india/every-muslim-should-be-a-terrorist-zakir-naik-and-six-of-his-most-provocative-statements-2879876.html