Posted tagged ‘நாகை நாகராஜன்’

“இறைதூதர் கருணாநிதி” என்ற திராவிட மேடை பேச்சும், ஷரீயத் மரண தண்டனைகளும், பகுத்தறிவுகள் மாட்டிக் கொண்ட விதமும்!

ஏப்ரல் 10, 2016

“இறைதூதர் கருணாநிதி” என்ற திராவிட மேடை பேச்சும், ஷரீயத் மரண தண்டனைகளும், பகுத்தறிவுகள் மாட்டிக் கொண்ட விதமும்!

நாகை நாகராஜன் திகவுக்கு டொனேசன் கொடுத்தது 2013

கருணாநிதி நாகராஜனை தெரியாது என்று ஏன் சொல்ல வேண்டும்?: கருணாநிதி, “தலைமை கழகப் பேச்சாளராக நாகை நாகராஜன் என்றொருவர் இருப்பதாக எனக்கு தெரியவில்லை”, என்றது[1] வேடிக்கையாக இருக்கிறது. ராஜ் தொலைக்காட்சி அகடவிகடம் பேச்சரங்க நிகழ்ச்சியின் நடுவர் கலைமாமணி கவிஞர் நாகை நாகராஜன் அவர்கள், ரூ.25 ஆயிரத்தை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார்  அவர்களிடம் வழங்கினார் (நாகை, 18.11.2013) என்று “விடுதலையில்” காணப்படுகிறது[2].  தி.மு.க., தலைமை பேச்சாளர் நாகை நாகராஜன், என்று தினமலரிலும் குறிப்பு காணப்படுகிறது[3]. எனவே கலைஞர், மூதறிஞர், முத்தமிழ் வித்தகர், எல்லாம் தெரிந்தவர் பிரச்சினையில் சிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் இவ்வாறு கழட்டி விட பார்க்கிறார் என்று தெரிகிறது.

கருணாநிதி முஸ்லிம்களுடன். எஸ்.டி.பி.ஐ

சகிப்புத் தன்மை, பேச்சுரிமைபற்றி யாரும் குரல் எழுப்பவில்லையே?: இப்பொழுது சகிப்புத் தன்மை, பேச்சுரிமை… என்றெல்லாம் ஏன் பேச மறுக்கிறார்கள்? இணைதளங்களில் முஸ்லிம்கள் இந்து மதம், இந்துக்கள், இந்துமத நூல்கள், பழக்க-வழக்கங்கள் என்று எல்லாவற்றைப் பற்றியும் கேலி, கிண்டல், ஏன் தூஷித்தும் வருகின்றனர். அவற்றை முஸ்லிம் கட்சிகள் இவ்வாறு எதிர்ப்பதில்லையே, கண்டிக்கவில்லையே, தட்டிக் கேட்கவில்லையே? பிறகு அதே மாதிரி திக-திமுக கட்சிக்காரர் இப்படி கூறிவிட்டார் என்று ஏன் கொதிக்க வேண்டும்? பிறகு அத்தகைக் கட்சிகளுடன் ஏன் கூட்டு வைத்துக் கொள்ள வேண்டும். காபிர்களுடன் எந்தவிதமான நெருக்கமும், நட்பும், கூட்டும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று இஸ்லாம் நூல்கள் தாராளமாகவே கூறுகின்றனவே? ஆனால், அவற்றை எதிர்த்து எப்படி உண்மையான முஸ்லிம்கள் கூட்டு வைத்துக் கொள்ளலாம்?

கலைஞருக்கு சவால் ரிசானா விவகாரம்திமுக கூட்டணியிலிருந்து எஸ்.டி.பி..கட்சி விலகியது ஏன்? (08-04-2016): சென்னை (08-04-16): திமுக கூட்டணியிலிருந்து எஸ்.டி.பி.ஐ.கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தெஹல்கான் பாகவி செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, திமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடத்தவில்லை. 12 தொகுதிகளுக்கான பட்டியலை திமுகவிடம் அளித்திருந்தோம், எங்களுக்கான முக்கியத்துவத்தை திமுக தரப்பில் தராததால் திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறோம்.” என்றார். மேலும் “இன்று (08-04-2016, வெள்ளிக்கிழமை) செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அக் கூட்டத்தில் யாருடன் கூட்டணி என்று கலந்து ஆலோசிக்கப்படும். அதற்குப் பிறகு எங்களின் நிலைப்பட்டை அறிவிப்போம்” என்றார்[4] . இக்கட்சி இருக்கும் முஸ்லிம் கட்சிகளில் தீவிரவாதமான கட்சி என்றுள்ள நிலையில், உண்மையில் எதற்காக விலகியது என்று தெரியவில்லை. தமிழக மக்கட்தொகை சுமார் 7.3 கோடி அல்லது 730 லட்சங்கள், அதில் முஸ்லிம்கள் சுமார் 43 லட்சங்கள் இருக்கிறாற்கள். அப்படிப் பார்த்தால், அவர்களுக்கு 6% என்ற கணக்கில் ஒன்ரூ அல்லது இரண்டு இடங்கள் தான் கொடுக்கப்பட வேண்டும் ஆனால் 12 முதல் 15% சீட்டுகள் கொடுக்கப்படுகிறன. இது தவிர மற்ற கட்சிகளில் உள்ள முஸ்லிம் வேட்பாளர்கள் முஸ்லிம்களாகத்தான் செயல்பட்டு வருகிறார்களே தவிர இந்துக்களைப் போல நாத்திகர்கள், செக்யூலரிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் என்றெல்லாம் செயல்படுவதில்லை. ஆகவே, சீட்டு எண்ணிக்கையினால் எஸ்.டி.பி.ஐ.கட்சி விலகியது என்று சொல்வதில் அர்த்தமில்லை. “இறைதூதர் கருணாநிதி” உருத்தியிருக்குமோ என்னமோ, அல்லாவுக்குத்தான் தெரியும்.

திலகவதியை வசைபாடிய முஸ்லிம் இயக்கங்கள்கௌரவகொலை, திலகவதி ஐ.பி.எஸ் விமர்சனம், முஸ்லிம்களின் ஆர்பாட்டம் (ஜூன். 2009)[5]: சென்னை புளியந்தோப்பில் சலீம் என்ற ஆட்டோ டிரைவர் தனது மகள் காதலனோடு ஓடிப்போனதால் ஆத்திரமடைந்து மகளையோ கொலை செய்தபோது, நக்கீரன் வார இதழுக்கு பேட்டியளித்த திலகவதி ஐ.பி.எஸ் அவர்கள் கௌரவக் கொலைகள் அதிகமாக அரபு நாடுகளில் அரங்கேறிக் கொண்டிருப்பதாகவும் சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த மத்திற்கு இந்தச் சம்பவம் புதிதல்ல என்று பேட்டியளித்தார். அரபு நாடுகளில் கௌரவக் கொலைகள் அளவுக்கதிகமாக நடைபெற்று வருவதாகவும் சலீம் ஒரு இஸ்லாமியன் என்பதால் அந்த மதத்திற்கு இந்தச் செய்தி புதிதானதல்ல என்று கூறினார். திலகவதியின் இந்தப் பேட்டி, அரபு நாடுகளில் கவுரவக் கொலைகள் அங்கீகரிக்க ப்பட்டுள்ளதாகவும், அது இஸ்லாமிய மதத்திற்கு ஏற்புடையது போலவும் சலீம் இஸ்லாமியர் என்பதால் இந்தச் சம்பவம் அதாவது இஸ்லாமிய மதம் இத்தகைய காட்டுமிராண்டித்தனச் செயலை அங்கீகரிப்பது போலவும், இஸ்லாமிய மக்கள் இந்த செயல்களை ஏற்றுக் கொள்வதாகவும், மேலும் இஸ்லாமியர்கள் இவைகளை பின்பற்றுகிறார்கள் என்ற கருத்தை உண்டாக்கியுள்ளது. திலகவதியின் இந்த பேட்டி பிறசமய மக்கள் மத்தியில் இஸ்லாமிய மார்க்கத்தை பற்றி தவறான கருத்தை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த கருத்து ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போன்ற முஸ்லிம் அமைப்புகள் திலவதியின் இந்த பேட்டியை கண்டித்தும் இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வழியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தை 2009ல் நடத்தின.

2010ல் நக்கீரனை வசை பாடியது முஸ்லிம்கள்நித்தியானந்தா விசயத்தில் கூட நக்கீரன் கோபால் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது (மார்ச்.2010)[6]: 2010ல் முஸ்லிம்கள் நக்கீரன் கோபாலை மிகக்கேவலமாக, மோசமாக வசைப்பாடின மூஸ்லிம் அமைப்புகள்[7]. இஸ்லாமிய சகோதரர்களுக்கு…..போலிச்சாமியார் நித்யானந்தாவின் உண்மை முகத்தை உலகறியச்செய்வதற்காக தொடர்ந்து புலனாய்வு செய்திகளை வெளியிட்டு வருகிறது நக்கீரன். அந்த வகையில், நபிகள் நாயகம் உள்ளிட்ட பெருந்தகைகளின் பெயரை களங்கப் படுத்திய நித்யானந்தாவின் போலித் தனத்தை வெளிப்படுத்தவே…  நித்யானந்தா தன் ஆசிரமவாசிகளிடம் கூறிய சில கருத்துக்களை வெளியிட்டிருந்தோம். மற்றபடி, இஸ்லாமிய சகோதரர்களின் மனதை புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல.   குறிப்பிட்ட செய்தியின் மூலம் யாரேனும் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். ஆசிரியர்[8].

மரண தண்டனையை எதிர்த்த முஸ்லிம்கள் 2013

ரிசானா மரண தண்டனை சர்ச்சையும், கருணநிதியும் (2013): ரிசானா நபீக் என்ற இளம்பெண் ஶ்ரீலங்காவிலிருந்து சவுதிக்கு வேலை செய்ய 2005ல் சென்றாள். ஆனால், வேலை செய்யும் இடத்தில் ஒரு குழந்தையைக் கொன்றாள் என்று 2007ல் மரண தண்டனை ஷரீயத் சட்டத்தின் படி விதிக்கப்பட்டது, 09-01-2013 அன்று தண்டனை நிறைவேறியது. அப்பொழுது கருணாநிதி முரசொலியில் மரண தண்டனை கூடாது என்று எழுதினார். “மரண தண்டனை என்ற ஒரு கொடுமை ஒழிக்கப்பட்டிருந்தால் ரிசானா குரூரமாகக் கொல்லப்பட்டிருக்க மாட்டாள் அல்லவா? இதற்கு எப்போது விடியல்? உலக நாடுகள் எல்லாம் ஒன்று கூடி இதுபோன்ற கொடுமைகள் இனியும் நேராமல் இருக்க, மானுடம் காத்திடும் மனித நேய உணர்வோடு, மனித நாகரிக மாண்பினை வெளிப்படுத்தும் வகையில், முடிவெடுத்து அதனை நடைமுறைக்குக் கொண்டு வர மாட்டார்களா?,” என்று தனது கருத்தைத் தெரிவித்தார். அப்பொழுதும், கருணாநிதி இஸ்லாமிய சட்டத்தை எதிர்க்கிறார், அதற்கு அவருக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று எச்சரித்து கண்டம் தெரிவித்தன. பிறகு, கருணநிதி மழுப்பலாக பதில் அளித்ததால் விசயம் மறக்கப்பட்டது. சரீயத்தின் படி “மரண தண்டனை” புண்ணியமானது, ஆனால், இந்திய சட்டதிட்டங்களின் படி அது கொடுமையானது, மனிதத்தன்மையற்றது என்றெல்லாம் வாதிப்பது முரண்பாடாக அவர்கள் கருதுவதில்லை. ராஜிவ் காந்தி கொலைவழக்கில் எப்படி கொலையாளிகள் விடுவிக்கப்பட்டனரோ அதேபோல, இஸ்லாம்ய தீவிரவாதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வெளிப்படையாகக் கேட்டு வருவதும் விசித்திரமானதே[9].

கலைஞருக்கு சவால் ரிசானா விவகாரம்- பீஜே கடிதம்முஸ்லிம்கள் விசயங்களை ஏன் மதவாதமாக்கி வருகிறார்கள்?: திக-திமுகவில் சிலர் சில நேரங்களில் செக்யூலரிஸத்துடன் செயல்பட நினைக்கும் போது, செயல்படும் போது இவ்வாறு தடுக்கப்படுகின்றனர் என்றும் தெரிகிறது. அதாவது கருணாநிதி போன்றோரே முஸ்லிம்களைக் கண்டு பயப்படுகின்றனர் அல்லது அவ்வாறு பயமுருத்தி வைத்துள்ளன என்று தெரிகிறது. இதனால், ஆனானப்பட்ட கருணாநிதியின் பகுத்தறிவே அடிப்படைவாத முஸ்லிம்களிடம் மண்டியிட வேண்டியதாகிறது. ஆனால், தமிழக மக்கள் கவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிறுவர்களுக்கு என்று ஒரு கார்ட்டூன் போட்ட போது, “தி ஹிந்து” மாட்டிக் கொண்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. நக்கீரன், திலகவதி ஐ.பி.எஸ், கருணாநிதி போன்றோர் தங்களது கருத்துகளை வெளியிட்டதற்கு மிரட்டப்பட்டனர், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்தனர், மிரட்டினர். “விஸ்வரூபம்” பிரச்சினைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, தமிழகத்து முஸ்லிம் அமைப்புகள் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலியவற்றை ஆதரிப்பதாகவே தங்ளைக் காட்டிக் கொண்டு வருகின்றன.

© வேதபிரகாஷ்

10-04-2016

 

[1] பிபிசி.தமிழ்.நியூஸ், தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய நாகை நாகராஜன் யார் என்று எனக்கு தெரியாது-கருணாநிதி, பதிவு செய்த நாள்: 07 Apr 2016 11:05 am

By : Sam Kumar.

[2]  http://www.viduthalai.in/page1/70908.html

[3] http://www.dinamalar.com/twitter_detail.asp?id=1478105&Print=1

[4] http://www.inneram.com/news/tamilnadu/8499-sdpi-party-dmk.html

[5] http://www.tntj.net/2760.html

[6] நக்கீரன், இஸ்லாமிய சகோதரர்களுக்கு….., பதிவு செய்த நாள் : 24, மார்ச் 2010 (21:48 IST); மாற்றம் செய்த நாள் :24, மார்ச் 2010 (21:48 IST)

[7] http://thaquatntjtvr.blogspot.in/2010/10/blog-post_03.html

[8] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=29297

[9] காபிர்கள் மோமின்களுக்கு தண்டனைக் கொடுக்க முடியாது, இஸ்லாம்-அற்ற சட்டங்கள் எங்களுக்குப் பொருந்தாது என்று வெளிப்படையாக இவ்வாறு கூறிவருவதை மற்றவர்கள் கவனிக்க வேண்டும்.

“இறைதூதர் கருணாநிதி” என்ற திராவிட மேடை பேச்சும், அடிப்படைவாதப் பிரச்சினையும், தீவிரவாத பின்னணியும்!

ஏப்ரல் 10, 2016

“இறைதூதர் கருணாநிதி” என்ற திராவிட மேடை பேச்சும், அடிப்படைவாதப் பிரச்சினையும், தீவிரவாத பின்னணியும்!

இறைதூதர் கருணநிதி

எங்கள் இனத்தைக் காப்பாற்ற வந்த தூதர் என்று எஸ்.டி.பி.., மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் சேர்ந்து வந்திருருக்கிறார்கள்: மார்ச் 28ம் தேதி 2016 சேலம் கோட்டை மைதாணத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் தீப்பொரி ஆறுமுகம், நாகை நாகராஜன் முதலியோர் பேசினர். தீப்பொரி ஆறுமுகம் 1960களில் பேசும் அலாதியே தனிதான். மெட்ராஸ் பாஷை, கெட்ட வார்த்தை முதலியவை சரளமாக வரும். நாகை நாகராஜன் பேசும் போது, முஸ்லிம் கட்சிகள் எல்லாமே ஒட்டு மொத்தமாக கலைஞரிடம் கூட்டு சேர்ந்துள்ளன, என்று விவரிக்க ஆரம்பித்தார். ராஜ் தொலைக்காட்சி அகடவிகடம் பேச்சரங்க நிகழ்ச்சியின் நடுவர் கலைமாமணி கவிஞர் நாகை நாகராஜன், “இந்தத் தேர்தலில் தான் சிறுபான்மை இனத்திலே மிகப்பெரிய இனமான இஸ்லாமிய இனத்தின் அத்தனை அமைப்புகளும் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியைப் பார்த்துநீங்கள் தான் நபிகள் நாயகத்திற்குப் பிறகு எங்கள் இனத்தைக் காப்பாற்ற வந்த தூதர் என்று எஸ்.டி.பி.., மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் சேர்ந்து வந்திருருக்கிறார்கள்,” என்று பேசியுள்ளார்[1]. இந்த வீடியோவிலும் அப்பேச்சைக் கேட்கலாம்[2]. திமுகவிடம் கூட்டு வைத்துக் கொண்டு, கெஞ்சி-கூத்தாடி அதிகமான சீட்டுகளை வாங்கிக் கொண்டுள்ளன முஸ்லிம்களின் பிளவுபட்ட கட்சிகள். ஒருவேளை வெளியில் சண்டைப் போட்டுக் கொள்வது போன்று நாடகம் ஆடி, இவ்வாறு அரசியல் செய்கின்றனரா என்று “செக்யூலரிஸ்டுகளுக்கு” தோன்றுகிறது.

நாகை நாகராஜன், கருணாநிதி, முஸ்லிம் கட்சிகள் கூட்டுமனித நேயக்கட்சி அறிவித்த கண்டனம்: கடந்த மார்ச் 28ம் தேதி 2016 சேலம் கோட்டை மைதாணத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் திமுக நூல் வெளியீட்டுக் குழு உறுப்பினர் நாகை நாகராஜன் பேசும் போது நபிகள் நாயகத்திற்கு பிறகு முஸ்லிம் இனத்தை பாதுகாக்க வந்த இறைதூதர் தலைவர் கருணாநிதி என்று கூறியதாக பத்திரிக்கையில் செய்தி வந்தது[3]. சமூக வலைதளங்களிலும் இச்செய்தி வேகமாக பரவியது. நபிகள் நாயகத்திற்கு பிறகு இறைதூதர் வரமுடியாது என்பதில் உறுதியான கொள்கை உடையவர்கள் முஸ்லிம்கள் . எனவே நாகை நாகராஜனின் பேச்சை பற்றி செவியுற்ற அனைத்து முஸ்லிம்களுமே வேதனை அடைந்துள்ளனர். எனவே இது தவிர்க்க பட வேண்டும், கண்டிக்க பட வேண்டும். தனது கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று உடனடியாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேர, ஜவாஹிருல்லாஹ் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் மூலமாக திமுக தலைமைக்கு செய்தியை புகராக கொண்டு சென்றார். மேலும் வாழும் மனிதர்களை புகழ வேண்டும் என்பதற்காக மத உணர்வுகளை புண்படுத்தும் வார்த்தைகளை யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் அரசியல் ரீதியான அணுகுமுறைகளுக்காக எந்த நிலையிலும் அடிப்படை கொள்கைகளை விட்டுத் தர மாட்டோம் என்பதையும் தெளிவு படுத்தியுள்ளோம். திமுக தலைமையையும் நேரில் சந்தித்து இது பற்றி புகார் அளிக்க உள்ளோம். எனவே யாரும் பதட்டம் அடையவேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். என்று மனித நேயக்கட்சி தலைமையகம் அறிவித்தது[4].

கருணாநிதி இறைதூதர் - தமிழ்நாடு இமாம் கவுன்சில் எதிர்ப்பு - -7-04-2016எவரையும் எங்கள் மாநபியோடு ஒப்பிட்டு பேசுவதை ஒருபொழுதும் அனுமதிக்க முடியாது. – ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு.![5]: ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ ஹலரத்அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை “சேலத்தில் நடந்த கூட்டத்தில் திமுக பேச்சாளர் நாகை நாகராஜன் அவர்கள் பேசும் போது முஸ்லிம்களின் கொள்கையோடு மோதக்கூடிய பேச்சை வரம்புமீறி பேசியுள்ளார் இந்த பேச்சு வன்மையாக கண்டிக்க தகுந்தது மிகவும் கண்டனத்திற்குரியது.  இத்தகைய வாரத்தை எங்களது கொள்கைக்கு எதிரானது எலும்பில்லாத நாவுதானே எதுவேண்டுமானாலும் சொல்லலாம் மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் அமைதியாக இருந்துவிடுவார்கள் என்று எண்ணினால் அது மாபெரும் தவறு. எவரையும் எங்கள் மாநபியோடு ஒப்பிட்டு பேசுவதை ஒருபொழுதும் அனுமதிக்க முடியாது.  திமுக நாகை நாகராஜன் அவர்களை கட்சியின் பொறுப்புகள், மற்றும் அடிமட்ட உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் அவரை நீக்கிவிட வேண்டும். தமிழக அரசு திமுக பேச்சாளர் நாகை நாகராஜன் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்,” இப்படிக்கு மௌலவி செய்யது முஹம்மது உஸ்மானி, மாநில செய்தி தொடர்பாளர், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு[6].

இறைதூதர் கருணாநிதி - நாகை நாகராஜன்- முஸ்லிம்கள் எதிர்ப்பு 07-04-2016போலீஸ் புகார் கொடுக்காமல் மிரட்டும் முஸ்லிம் கட்சிகள்: கட்சியின் பொறுப்புகள், மற்றும் அடிமட்ட உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் அவரை நீக்கிவிட வேண்டும், உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருப்பது நல்ல தமாஷாகத் தெரிகிறது. ஏனெனில், இப்படியெல்லாம் மிரட்டும் இவர்கள் போலீஸாரிடம் உரிய புகார் கொடுத்ததாகத் தெரியவில்லை. உண்மையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், அவ்வாறு புகார் கொடுத்திருக்கலாம். வழக்குப் பதிவு செய்திருக்கலாம். நீதிமன்றத்தில் இப்பிரச்சினை வரும் போது, விவரங்கள் அலசப்படும் போது, பேசியது உண்மையிலேயே இந்தி சட்டங்களின் பிரிவுகளை மீறியவையா, குற்றமாகுமா, எந்த தண்டனை கொடுக்கலாம் என்று வாத-விவாதங்கள் உண்டாகும். ஆனால், அவற்றைத் தடுக்கவே முஸ்லிம் கட்சிகள் இவ்வாறி மிரட்டி அமுக்கி வாசிக்கின்றன என்று தெரிகிறது. மேலும், இதை பிரச்சினையாக்கினால், முஸ்லிம் கட்சிகளின் ஒதுக்கீடு காலியாகி விடும், ஒரு சீட்டுக் கூட ஜெயிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டு விடும்.

கரு முஸ்லிம் லீக், குழுக்களுடன்இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹீம் அறிவிப்பு: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சென்னை கோபாலபுரம் வீட்டை முற்றுகை இடப்போவதாக இந்திய தேசிய லீக் கட்சி அறிவித்துள்ளது[7]. இது குறித்து இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹீமை தொடர்பு கொண்டு கேட்டபோது,   “சமீபத்தில் தி.மு.க. பேச்சாளர் நாகராஜ் என்பவர், கருணாநிதியை இறைதூதர் என்று குறிப்பிட்டு பேசினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மட்டுமே இசுலாமியர்கள் இறைதூ தராக நினைக்கிறார்கள்.  ஆகவே நாகராஜை கண்டிக்க வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கருணாநிதிக்கு கோரிக்கை வைத்தோம். அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆகவே கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி, இன்று (08-04-2016) மாலை நான்கு மணி அளவில் அவரது கோபாலபுர இல்லத்தை முற்றுகையிடப்போகிறோம்” என்றார்[8].

Fight among the mohammedan parties in Tamilnadu

முஸ்லிம் மக்கள் ஜவாஹிருல்லா மீது கொதிப்பு[9]: காலைமலர் என்ற இணைதளம், “முஹம்மது நபி அவர்களை திமுக பேச்சாளர் நாகை நாகராஜன் என்பவர் கலைஞருடன், இணைத்து இழிவு படுத்திய போது பொங்காத பேராசிரியர்! தன்னுடை மமக கட்சியை தீவிரவாத இயக்கம் என்று சொன்ன ஹைச்.ராஜாவை நோக்கி பொங்காத பேராசிரியர்! கலைஞரை ஜாதியை சொல்லி இழிவு படுத்திய விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட வைகோவை நோக்கி மட்டும் டிவி சேனலில் பொங்க காரணம் என்ன? நாயவான்களே! நீங்களே சொல்லுங்கே! சீட்டு, பதவிக்காக தன்னையே மறந்து செயல்படும் ஜவாஹிருல்லாஹ்வின் செயல்பாடுகள் அவரின் மோசமான அரசியலை பிரதிபலிக்கின்றது. அரசியலுக்காக கலைஞரை இவர் மட்டும் இறை தூதராக ஏற்றுக் கொண்டாரோ? என்று முஸ்லிம் மக்கள் ஜவாஹிருல்லா மீது கொதிப்படைந்து உள்ளனர்”, என்று சாடியுள்ளது[10]. இது ஜவாஹிருல்லாஹுக்கு எதிராக செயல்படும் முஸ்லிம் கூட்டம் போலிருக்கிறது.

Karus warning to Nagai Nagarajan for comparing Mohammed and himself 08-04-2016

தி.மு.. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: “சேலத்தில் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய நாகை நாகராஜன் என்பவர், இஸ்லாமிய மதம் குறித்து தவறான கருத்துக்களை பேசியதாக வார இதழ் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமை கழகப் பேச்சாளராக நாகை நாகராஜன் என்றொருவர் இருப்பதாக எனக்கு தெரியவில்லை[11]. இருந்தாலும், கழக மேடைகளில் உரையாற்றுவோர் நமது இயக்கத்திற்குரிய கண்ணியத்தோடும், நாகரீகத்தோடும் பேச வேண்டும். ஆர்வம் மிகுதியால் மத சம்பந்தமாக ஏதாவது தவறாக பேசினால், அதை மிகைப்படுத்திட, மாற்று கட்சியினர் இருக்கிறார்களோ இல்லையோ, ஒரு சிலர் அதற்காகவே இருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்[12]. ஒன்றை பத்தாக்கி, பத்தை நூறாக்கி கழகத்தின் மீது அவதூறு வீசிட அவர்கள் எப்போது நேரம் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டே இருப்பார்கள். எனவே கழக கூட்டங்களில் பேசுவோர் “யாகாவாராயினும் நா காக்க” என்று அய்யன் திருவள்ளுவர் வழங்கியிருக்கும் அறிவுரையை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு பேச வேண்டும். நாகை நாகராஜன் தவறாக எதுவும் பேசியிருந்தால், அது கழகத்தின் கருத்தல்ல என்று மறுப்புத் தெரிவிப்பதோடு, அந்த குறிப்பிட்ட பேச்சாளரும் இதனையை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு இனி கழக மேடைகளில் மிகுந்த கவனத்துடன் பேச வேண்டும்”, இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

10-04-2016

 

[1] http://www.seythigal.com/?p=9486; https://youtu.be/Rdj8_gblPD8

[2] https://www.facebook.com/1416474845231879/videos/1695088387370522/

[3] முக்கண்ணாமலைப்பட்டி அறிவிப்பு, இறைதூதர் தலைவர் கருணாநிதி, Muckanamalaipatti, 00:38, ஏப்ரல்.2016.

[4] http://muckanamalaipatti.blogspot.in/2016/04/blog-post_88.html

[5] http://vkalathurone.blogspot.in/2016/04/blog-post_81.html

[6] http://vkalathurone.blogspot.in/2016/04/blog-post_81.html

[7] பத்திரிக்கை.காம், இன்று மாலை கருணாநிதி வீடு முற்றுகை: இந்திய தேசிய லீக் அறிவிப்பு, Posted by : டி.வி.எஸ். சோமு, on Friday, April 8, 2016 @ 11:03 am.

[8] https://www.patrikai.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F/

[9] காலைமலர்.நெட், கலைஞரை இறைதூதர் என்று சொன்னதை ஜவாஹிருல்லா ஏற்றுக்கொண்டாரா? By Mathiyalagau, Apr 7, 2016.

[10] http://kaalaimalar.net/kalingar-javahi-is-no-comment/

[11] பிபிசி.தமிழ்.நியூஸ், தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய நாகை நாகராஜன் யார் என்று எனக்கு தெரியாது-கருணாநிதி, பதிவு செய்த நாள்: 07 Apr 2016 11:05 am

By : Sam Kumar.

[12] http://www.tamilnewsbbc.com/2016/04/07/532916.html