Posted tagged ‘நரேந்திர மோடி’

தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (3)

திசெம்பர் 22, 2013

தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (3)

முஸ்லிம்கள் கருணநிதியை மிரட்டுவது சகஜமான விசயமே

முஸ்லிம்கள் கருணநிதியை மிரட்டுவது சகஜமான விசயமே

முஸ்லிம்களின் மனப்பாங்கு இந்துவிரோதமே என்பது போலத்தான் முஸ்லிம் லீக் தலைவர்கள் இன்றும் பேசி வருவது வியப்பாகத்தான் இருக்கிறது. மக்களவைத்

தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு இடம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வோம் என  ஏதோ கெஞ்சுகின்ற அல்லது சமரசம் செய்து கொள்ளும் முறையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம். காதர் மொய்தீன் ஒரு பக்கம் தெரிவித்தார்[1]. மதவாதத்தை மனங்களில் ஏற்றிவைத்துள்ள முஸ்லிம்கள் இப்படி கருணாநிதியை மிரட்டியே எப்படியாவது எம்.பி, எம்,எல்.ஏ, போன்ற பதவிகளைப் பெற்றுக் கொண்டு, தமிழகத்தில் பிரிவினையை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அதே நேரத்தில், கருணாநிதிக்கு சவால் விடும் தோரணையில், “அதேப்போல் பா.ஜனதாவுடனும் கூட்டணி வைக்கமாட்டார். அப்படி வைத்தால் தி.மு.க.கூட்டணியில் இருந்து விலகுவோம்”. என்று இன்னொரு பக்கத்தில் மிரட்டியுள்ளார். [2]

Jinnah, Periyar, Ambedkar 1940

இந்த கூட்டம் அன்று காங்கிரஸுக்கு எதிராக திட்டம் தீட்டியது, இன்றோ – அதாவது சித்தாந்த ரீதியில் – பிஜேபிக்கு எதிராக செயல்படுகிறது

ஜனநாயகம்,   சமயச்சார்பின்மை,   சமூகநீதி  ஆகியவையே  இந்திய  யூனியன்  முஸ்லீம்  லீக்   கட்சியின்  கொள்கை; இப்படி ஒரு ஜோக்குடன் தூத்துக்குடியில் சனிக்கிழமை கே.எம். காதர் மொய்தீன் அளித்த பேட்டி என்று ஊடகங்கள் வெளியிட்டுள்ளன: ஜனநாயகம், சமயச் சார்பின்மை, சமூக நீதி ஆகியவையே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொள்கை. இதையே அரசியலமைப்புச் சட்டமும் வலியுறுத்துகிறது.

கேரளத்தில் காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் திமுகவுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இப்படி லீக்கின் இரட்டை வேடங்கள் ஜனநாயகத்தைக் காட்டுகிறதா அல்லது பதவி ஆசை, சந்தர்ப்பவாதத்தைக் காட்டுகிறதா என்பதனை மக்கள் அறிவார்கள்
பாஜகவை பொருத்தவரையில் அக்கட்சி எங்களுக்கு விரோதி கிடையாது. ஆனால், மோடி கிராம ராஜ்யம் பற்றி பேசுவதற்குப் பதிலாக, ராம ராஜ்யம் பற்றி பேசி வருகிறார். மதச்சார்பற்ற கொள்கையில் அவர் எங்களிடம் இருந்து முரண்படுகிறார். காந்தி கூடத்தான் ராம ராஜ்யம் வேண்டும் என்றால், “ஹே ராம்” என்று சொல்லிக் கொண்டுதான் இறந்தார். பிறகு காந்தியை ஒன்றும் ஜின்னா விட்டு வைக்கவில்லையே? எனது இணத்தின் மீது தான் நடந்து செல்ல வேண்டும் என்ற போதிலும், பாகிஸ்தானை உருவாக்கத்தானே செய்தார்!

திமுக தலைவர் கருணாநிதியைப் பொருத்தவரையில், அவர் காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவாக அறிவித்துவிட்டார். நட்பு என்றாலும் சரி, பகை என்றாலும் சரி அதில் தெளிவாக இருப்பவர் கருணாநிதி. மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையில் 3-ஆவது அணி அமைய விரும்புகிறோம். நரேந்திர மோடியை கருணாநிதி பாராட்டினார் என்பதற்காக, அவர் பாஜகவுக்கு ஆதரவு தருவார் என்பதாக அர்த்தமில்லை.

முஸ்லிம் கட்சிகள் தமிழகத்தில் கூட்டு

இப்படி சண்டைப் போட்டுக் கொள்வது போல நடித்தாலும், தங்களது விசயங்களை சாதித்துக் கொள்வார்கள்

பா.ஜனதாவுடன்கூட்டணிவைத்தால்தி.மு..வில்இருந்துவிலகுவோம்[3]: தமிழகத்தில் 55 லட்சம் முஸ்லிம்கள் உள்ளதால் முஸ்லிம்களுக்கு மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்க வேண்டும். திமுக கூட்டணியில் எங்களுக்கு ஒரு தொகுதி அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம். தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்கு காரணம் கலைஞர் ஒரு சிறந்த தலைவர். அவர் நட்பாக இருந்தாலும், பகையாக இருந்தாலும் தெளிவான சிந்தனையோடு இருப்பார். கலைஞர் தலைமையில் 3–வது அணி அமைந்தால் சிறப்பாக இருக்கும். ஆனால் அவர் பிரதமராக ஆசைப்படாதவர். மற்றவர்களை பிரதமராக ஆக்குபவர்.  காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என்று தெளிவாக சொல்லிவிட்டார். அதேப்போல் பா.ஜனதாவுடனும் கூட்டணி வைக்கமாட்டார். அப்படி வைத்தால் தி.மு.க.கூட்டணியில் இருந்து விலகுவோம்[4].

திருச்சியில் டிசம்பர் 28-ஆம் தேதி மஹல்லா ஜமா அத் மாநில மாநாடு நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் ஜமா அத் நிர்வாகிகள் மற்றும் அறிஞர்கள், முஸ்லிம் கல்வி நிறுவன நிர்வாகிகள் அதில் கலந்துகொள்ள உள்ளனர் என்றார் காதர் மொய்தீன்[5]. அதாவது என்னத்தான், ஜனநாயகம், கூட்டணி முதலியவை பேசினாலும், மதரீதியில் கூடுவோம் அங்கு முடிவெடுப்போம் என்ற ரீதியில் தான் முஸ்லிம் போகு உள்ளது. ஜமா அத் முடிவுதான் இறுதியானது போலும்!
முஸ்லிம் கட்சி - பிஜேபி கூட்டு

பாவம், பிஜேபி – முஸ்லிம் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டு என்றார்கள், ஆனால், அக்கட்சியையே காணோம்!

தி.மு.., கூட்டணியா? பா.., அலறல்[6]: ”தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., முயற்சிக்காத நிலையில், கூட்டணி பற்றி, அக்கட்சி கூறும் கருத்துகளுக்கு, பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை,” என, பா.ஜ., மாநிலத் தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். இதுகுறித்து, அவர் நேற்று அளித்த பேட்டி: “தி.மு..,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து, தமிழக பா..,வோ, கட்சியின் அகில இந்திய தலைமையோ, இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், ‘பா..,வுடன் கூட்டணி இல்லைஎன, தி.மு.., கூறுவதற்கு, நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.மோடியை பிரதமராக ஏற்கும், கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்என, ஏற்கனவே அறிவித்துள்ளோம். எனவே, அதன் அடிப்படையில், தமிழகத்தில் கூட்டணி அமைப்பது குறித்து, உரிய நேரத்தில் முடிவெடுக்கப் படும்”, இவ்வாறு, பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்[7].

Photographing faceless

முஸ்லிம்களின் முடிவு ரகசியமானது அதனை பார்க்க முடியாது

முஸ்லிம்களுக்குப் பின்னர் கிருத்துவர்களுடன் பிஜேபி கூட்டு: தமிழக பா.ஜனதா கட்சியில், பிற கட்சிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் இணையும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 21-12-2013 அன்று நடைபெற்றது[8].

அதனைத் தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், ”பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளாரே?” என்று கேட்டதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் கூட்டணிக்கு வாருங்கள் என்று தி.மு.க.வை பா.ஜனதா அழைக்கவில்லை’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். முஸ்லிம்களை அடுத்து கிருத்துவர்களுடன் கூட்டு வைத்துக் கொள்ளும் முயற்சியில் பிஜேபி ஈடுபட்டுள்ளது தெரிகிறது. மோடியுடன் பால் தினகரன் சந்தித்துள்ளதும் நினைவு கூரத்தக்கது. ஆனால், சோனியாவை விடுத்து பிஜேபிக்கு விசுவாசமாக ஓட்டளிப்பார்களா என்றுதான் பார்க்க வேண்டியதுள்ளது.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி நாராயணன், ஐக்கிய ஜனதா தளம் பொது செயலர், தர்மன் யாதவ், 28 பாதிரியார், 50 வழக்கறிஞர் மற்றும், 75 கல்லுாரி மாணவர்கள் ஆகியோர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தனர்.

சோனியாவின் மந்திர, தந்திய, யந்திய வசியங்கள் இந்த நான்கு-ஐந்து மாதங்களில் தெரிந்து விடும்

சோனியாவின் மந்திர, தந்திய, யந்திய வசியங்கள் இந்த நான்கு-ஐந்து மாதங்களில் தெரிந்து விடும்

செக்யூலரிஸம், சிறுபான்மையினர் மற்றும் இந்திய அரசியல்: செக்யூலரிஸம் என்றால் பிஜேபியை வசைப்பாடினால் சான்றிதழ் கிடைத்து விடும் என்ற ரீதியில் மற்ற அரசியல் கட்சிகள் இருந்து வருகின்றன. முஸ்லிம் லீக், எம்.ஐ.எம், கேரளா காங்கிரஸ் போன்ற மிகவும் அடிப்படைவாதம், மதவாதம் கொண்ட கட்சிகள் இதனால் தான், தாங்கள் செக்யூலார் என்று மார்தட்டிக் கொண்டு போலி வேடம் போட்டுக் கொண்டு நாடகம் ஆடி ஜனநாயகத்தைக் கேவலப்படுத்தி வருகின்றன. சோனியா காங்கிர்ஸைப் பொறுத்த வரையிலும், அரசியல் விபச்சாரம் செய்து கொண்டு, பிஜேபியை ஆட்சிக்கு வராமல் தடுத்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது மக்கள் பிஜேபிக்கு அதிக அளவில் ஓட்டளிப்பார்கள் என்று தெரிந்து கொண்ட பிறகு, இந்துக்களின் ஓட்டுகளை எப்படி பிரிப்பது என்று சதி செய்து கொண்டிருக்கிறார். இதன் விளைவுதான்  ஆம் ஆத்மி பார்ட்டி, லாலு பிரசாத் யாதவ் ஜாமீனில் வெளிவருதல், ராம் விலாஸ் பாஸ்வான் ஆதரவு, ஜெயலலிதா பிரதமர் ஆசை, கம்யூனிஸ்டுகளிம் மௌனம் முதலியன. மூன்றாவது அணி என்பது, பிஜேபியின் ஓட்டுகளைப் பிரிப்பதற்காகவே அன்றி, இந்திய ஜனநாயகத்தைக் காப்பதற்கு அல்ல. இப்பொழுதைய நிலையில் மக்கள் பிஜேபிகு ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதால், 2004 மற்றும் 2009களில் செய்தது போன்ற அதிரடி நடவடிக்கைகளை சோனியா இந்த நான்கு-ஐந்து மாதங்களில் செய்து காட்டுவார். பிஜேபி அவற்றை எதிர்கொள்ளுமா, தாங்கி நிற்குமா அல்லது படுத்து விடுமா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

வேதபிரகாஷ்

© 22-12-2013


[1] தினமணி, திமுககூட்டணியில்ஒருஇடம்கொடுத்தாலும்ஏற்போம், By dn, தூத்துக்குடி, First Published : 22 December 2013 01:23 AM IST.

[2] மாலைமலர், பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தால் தி.மு.க.வில் இருந்து விலகுவோம்: காதர்மொய்தீன் பேட்டி, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, டிசம்பர் 21, 12:22 PM IST

[4] மாலைமலர், பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தால் தி.மு.க.வில் இருந்து விலகுவோம்: காதர்மொய்தீன் பேட்டி, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, டிசம்பர் 21, 12:22 PM IST

[7] தினமலர், தி.மு.., கூட்டணியா? பா.., அலறல், பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2013,02:10 IST