Posted tagged ‘நயீம் கான்’

இந்திய வரிப்பணத்தை உண்டு கொழுத்து, இந்தியாவிற்கு எதிராக அப்பாவி மக்களைக் கொன்று வரும், ஹுரியத் போன்ற ஜிஹாதி வெறியாளர்கள் – அன்ஸார் கஜ்வத்-உல்-ஹிந்த், புதிய முகமூடி! (2)

ஜூலை 30, 2017

இந்திய வரிப்பணத்தை உண்டு கொழுத்து, இந்தியாவிற்கு எதிராக அப்பாவி மக்களைக் கொன்று வரும், ஹுரியத் போன்ற ஜிஹாதி வெறியாளர்கள்அன்ஸார் கஜ்வத்-உல்-ஹிந்த், புதிய முகமூடி! (2)

Hurriyat terror fund raid ans arrest

சோதனையில் ஆதாரங்கள் சிக்கின: இந்த அமைப்பு, அல்டாப் அகமது ஷா, கிலானியின் நெருங்கிய கூட்டாளிகளான, அயாஸ் அக்பர், பீர் சைபுல்லா உள்ளிட்ட ஏழு பேரை, கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியது[1]. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத இயக்கங்களிடம் இருந்து பணம் வருவதாகத் தகவல்கள் வெளியாகின[2]. காஷ்மீரில் அமைதியின்மை ஏற்பட்டபோது பிரிவினைவாதிகள் தீவிரவாதிகளிடம் பெற்ற பணத்தை கல்வீச்சாளர்களுக்கு வழங்கியதாகவும், இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டியதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர்களின் வீடுகளில், இந்த மாத துவக்கத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில், அனைத்துலக மற்றும்  பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களிலிட்மிருந்து பணம் பெற்ற விவரங்கள் தெரியவந்துள்லன. அவற்றில் ஆவணங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான விசாரணையைத் தொடங்கிய தேசிய புலனாய்வு அமைப்பு, கடந்த மாதம் பிரிவினைவாத இயக்கத் தலைவர்களின் வீடுகளில் சோதனை செய்தது[3]. இந்தச் சோதனையில், ரூ.2 கோடி பணம், லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களின் கடித நகல்கள் மற்றும் பல முக்கிய தகவல்கள் சிக்கின[4].

  1. கணக்குப் புத்தங்கள் [some account books],
  2. ரூ. 2 கோடி பணம் [Rs 2 crore in cash],
  3. தடை செய்யப் பட்ட இயக்கங்களின் கடித-தாள்கள் [letterheads of banned terror groups, including the LeT and the Hizbul Mujahideen]

NIA arresred 7 in Kashmir terror fund case - 434_1_PressRelease24-07-2017

24-07-2017 (திங்கட்கிழமை) அன்று கைது செய்யப்பட்ட ஏழு பேர்[5]: தெஹ்ரீக் – இ – ஹுரியத் என்ற பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவனாக, அல்டாப் அகமது ஷா கருதப்படுகிறான். தீவிரவாதத்தின் பன்முனை முகங்கள் பெரிதாகிக் கொண்டிருப்பதால், அவர்களை கைது செய்யவும் என்.ஐ.ஏ தீர்மானித்தது. இந்நிலையில், வீட்டுக் காவலில் வைத்து விசாரிக்க இயலாததால்,

  1. அல்டாப் அகமது ஷா ஃபுந்தூஸ் கிலானி [Altaf Ahmed Shah Funtoosh Geelani] – கிலானியின் மருமகன்,
  2. அயாஸ் அக்பர் கன்டே [Tehreek-e-Hurriyat’s Ayaz Akbar Khandey] – தெஹ்ரீக்-இ-ஹரியத் செய்தித் தொடர்பாளர்,
  3. பீர் சபியுல்லா [Peer Saifullah] – ஜம்மு காஷ்மீர் நேஷனல் பிரென்ட்,
  4. ஷாகித் அல் இஸ்லாம் [Aftab Hilali Shah @ Shahid-ul-Islam] – மிர்வாய்ஸ் உமர் பாரூக் தலைமையிலான ஹரியத் மாநாட்டுக் கட்சியின் செய்தி தொடர்பாளர்,
  5. ராஜா மெஹ்ரஜுதின் கல்வாபல் [Raja Mehrajuddin Kalwal],
  6. நயீம் கான் [Nayeem Khan] – ஜம்மு காஷ்மீர் நேஷனல் பிரென்ட்,
  7. பரூக் அஹமது தார் என்கின்ற பிட்டா கரதய் / பிட்டா கராதே [Farooq Ahmed Dar aka Bitta Karatay], தில்லியில் கைது செய்யப்பட்டான்.

ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்[6]. அவர்கள் மீது சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைத் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் [NIA Case No. RC-10/2017/NIA/DLI (J&K Terror Funding Case) under sections 120B, 121, 121A of IPC and sections 13, 16, 17, 18, 20, 38, 39, 40 of Unlawful Activities (Prevention) Act, 1967] கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. நீதிபதி முன்பு ஆஜராக்கப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்[7]. 30-05-2017 அன்று பதிவு செய்யப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாக, இந்நடவடிக்கைகள் உள்ளன. அரசு, இத்தகைய நடவடிக்கைகள் எடுத்து வரும் போது, தீவிரவாதிகளும் தங்களது தாக்குதல் முறைகளை மாற்றி வருகிறார்கள்.

Ansar Ghawat ul Hind statement

ஜம்மு காஷ்மீரில், ‘அன்சர் கஸ்வத் உல் ஹிந்த்‘ [Ansar Ghazwat-ul-Hind] என்ற பெயரில், புதிய பயங்கரவாத அமைப்பை, அல் குவைதா துவக்கி உள்ளது: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்காக, தனி பயங்கரவாத அமைப்பை, அல் குவைதா துவக்கி உள்ளது.  ஜம்மு காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சர்வதேச பயங்கரவாத அமைப்பான, அல் குவைதா, பல நாடுகளில், பல்வேறு பெயர்களில் இயங்கி வருகிறது. ஜம்மு காஷ்மீரில், ‘அன்சர் கஸ்வத் உல் ஹிந்த்’ [Ansar Ghazwat-ul-Hind] என்ற பெயரில், புதிய பயங்கரவாத அமைப்பை, அல் குவைதா துவக்கி உள்ளது[8]. அல் குவைதா பயங்கரவாத அமைப்பின், ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை[9]:  முஸ்லிம் நாடான காஷ்மீரில், இந்திய ஆக்கிரமிப்பாளர்களை விரட்டி அடிக்க, புனித போரான, ஜிகாத்தை துவக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது. இந்திய முஸ்லிம்கள், கோழைகளாக உள்ளனர். இந்திய அரசுக்கு எதிராக அவர்கள், ஜிகாத் துவக்க வேண்டும். இதற்காக, காஷ்மீரில், அன்சர் கஸ்வத் உல் ஹிந்த் என்ற அமைப்பு துவக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பின் கமாண்டராக, ஜாகிர் ரஷீத் பட் நியமிக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Musa, Brhan and friend

பட் என்கின்ற முஸ்லீமாக மாறியவன் தான் தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ளான்: புதிய பயங்கரவாத அமைப்பின், கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ள பட், காஷ்மீரைச் சேர்ந்தவன். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் கல்லுாரியில் படித்து கொண்டிருந்தவன், பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, ஹிஸ்புல் முஜாஹிதின் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தான். பின், ஹிஸ்புல் அமைப்பிலிருந்து பிரிந்து, தனி பயங்கரவாத அமைப்பை துவக்கினான். இப்போது, அல் குவைதா துவக்கியுள்ள அமைப்பில், கமாண்டராக நியமிக்கப்பட்டு உள்ளான். காஷ்மீரில், புதிய பயங்கரவாத அமைப்பை, அல் குவைதா துவக்கி உள்ளது பற்றி, உளவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘காஷ்மீர் உட்பட இந்தியாவின் எந்த பகுதியிலும், அல் குவைதாவால் கால் பதிக்க முடியாது. ‘சர்வதேச பயங்கரவாதத்தில், முஸ்லிம் இளைஞர்களை ஈர்ப்பதற்காக, இன்டர்நெட் மூலம் நடத்தப்படும் முயற்சி இது’ என்றனர்.

Ansar Ghawat ul Hind statement-confession

பிரிவினைவாதிகள், அடிப்படைவாதிகள், ஜிஹாதிகள், முஜாஹித்தீன்கள், என்று பல பெயர்களில், பயங்கரவாதிகள்-தீவிரவாதிகள், பொது மக்களைக் கொன்று வருகிறார்கள்: அல்கொய்தாவின் உலகளாவிய இஸ்லாமிய ஊடக முன்னணி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது[10]: ஹீரோ முஜஹித் புர்கான்  வானி வீரமரணத்திற்கு பிறகு  காஷ்மீரில் ஜிஹாத் விழிப்புணர்வு அடைந்துள்ளது. காஷ்மீர் முஸ்லீம்களின் மீது இந்திய படையெடுப்பாளர்களின் கொடூரமான  ஆக்கிரமிப்பைத் தடுக்க ஜிகாத் கொடியைக் கொண்டுவர கடமைப்பட்டுள்ளதால், ஜிஹாத் மூலம், மற்றும் அல்லா உதவியுடன் நாங்கள் எங்கள் தாயகம் காஷ்மீரை விடுவிப்போம். ” இந்த இலக்கை அடைவதற்கு,ஜிகாத் ஒரு புதிய இயக்கம் தியாகி புர்கான் வானி தோழர்களால் முஜஹித் ஜாகீர் மூஸாவின் தலைமையில் நிறுவப்படுகிறது என கூறப்பட்டு உள்ளது[11]. ஆனால் சையது சலாவுத்தீன், ஹிஜ்புல் முஜாஹித்தீன் பிரதம தளபதி [HM supreme commander Syed Salahuddin], “இது காஷ்மீர முஜாஹித்தீன்களைப் பிரிக்க இந்தியா செய்துள்ள சதியாகும். ஆப்கானிஸ்தான், இராக், துருக்கி முதலிய நாடுகளில் எப்படி அல்குவைதா மற்றும் அரசு படைகள் சண்டையிட்டுக் கொண்டு, ரத்தம் சிந்தப் படுகிறதோ, அதுபோல தங்களுக்குள் சண்டியிட்டு அழிய போட்ட திட்டம்,” என்று குறிகூறினான்[12]. லஸ்கர்-இ-டொய்பா, “ஹுரியத் தலைவர்கள் ஒன்றாக வந்த போதே, இந்திய அரசின் சதி முறியடிக்கப்பட்டுவிட்டது. அவர்களுடைய விடுதலை போராட்டத்தை தீவிரவாதம் என்று கூறுகிறது,” என்கிறது[13]. இப்படி இவர்கள் கூறுவது, முரண்பாடான அறிக்கைகள் அல்ல, தெரிந்துதான், விசமத்தனமாக பேசி வருகிறார்கள்[14]. பாகிஸ்தானிலிருந்து, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதிகள், இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் என்று வைத்துக் கொண்டு, பிரிவினைவாதிகள், அடிப்படைவாதிகள், ஜிஹாதிகள், முஜாஹித்தீன்கள், என்று பல பெயர்களில், பயங்கரவாதிகள்-தீவிரவாதிகள், பொது மக்களைக் கொன்று வருகிறார்கள்[15]. ஆனால், முஸ்லிம்கள் உண்மை அறிந்தும், அவர்களுக்கு துணை போவதால், அவர்களும் கொல்லப்படுகிறார்கள். இதை அவர்கள் திரித்துக் கூறி, பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

© வேதபிரகாஷ்

30-07-2017

Syed ul Islam arrested on 24-07-2017

[1] தமிழ்.ஒன்.இந்தியா, காஷ்மீரில் ஹுரியத் பிரிவினைவாதிகள் 7 பேர் அதிரடி கைது, Posted By: Lakshmi Priya, Published: Monday, July 24, 2017, 18:36 [IST]

http://tamil.oneindia.com/news/india/7-hurriyat-leaders-arrested-money-laundering-nia-290670.html

[2] http://tamil.oneindia.com/news/india/7-hurriyat-leaders-arrested-money-laundering-nia-290670.html

[3] The Hindustan Times, Terror funding probe: NIA arrests 7 separatists, including Geelani’s son-in-law, Azaan Javaid , Hindustan Times, New Delhi,  Updated: Jul 24, 2017 23:47 IST

[4] http://www.hindustantimes.com/india-news/nia-arrests-7-kashmiri-separatists-on-charges-of-funding-terrorism-unrest-in-valley/story-LC3Y23VBV2TNW68xNLJWxI.html

[5] The National Investigation Agency (NIA) has today, i.e. on 24.07.2017, arrested 07 persons in connection with the NIA Case No. RC-10/2017/NIA/DLI (J&K Terror Funding Case) under sections 120B, 121, 121A of IPC and sections 13, 16, 17, 18, 20, 38, 39, 40 of Unlawful Activities (Prevention) Act, 1967. http://www.nia.gov.in/writereaddata/Portal/PressReleaseNew/434_1_PressRelease24072017.pdf

[6] TIMESOFINDIA.COM,  Terror funding: NIA arrests seven separatist leaders, Updated: Jul 24, 2017, 04:01 PM IST.

[7] http://timesofindia.indiatimes.com/india/terror-funding-nia-arrests-seven-separatist-leaders/articleshow/59736878.cms

[8] தினமலர், காஷ்மீருக்கு தனி அமைப்பு துவங்கியது அல் குவைதா, பதிவு செய்த நாள். ஜூலை.29, 2017. 07:12.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1822223

[10] தினத்தந்தி, ஹிஜிபுல் முகஜாகிதீன் முன்னாள் தளபதி தலைமையில் அல் கொய்தா புதிய அமைப்பு காஷ்மீரில் தொடக்கம், ஜூலை 28, 2017, 04:55 PM

[11] http://www.dailythanthi.com/News/India/2017/07/28165538/AlQaeda-Announces-New-Unit-In-Kashmir-Zakir-Musa-As.vpf

[12] Times of India,  Hizbul Mujahideen leader Zakir Musa starts outfit for Islamic rule in Kashmir, Bharti Jain & Raj Shekhar | TNN | Jul 28, 2017, 02:26 AM IST

[13] http://timesofindia.indiatimes.com/india/hizbul-mujahideen-leader-zakir-musa-starts-outfit-for-islamic-rule-in-kashmir/articleshow/59799817.cms

[14] The Hindu, Zakir Musa heading Al-Qaeda in Kashmir?, Peerzada Ashiq JULY 27, 2017 22:20 IST.

[15] http://www.thehindu.com/news/national/zakir-musa-heading-al-qaeda-in-kashmir/article19372503.ece