“இறைதூதர் கருணாநிதி” என்ற திராவிட மேடை பேச்சும், ஷரீயத் மரண தண்டனைகளும், பகுத்தறிவுகள் மாட்டிக் கொண்ட விதமும்!
கருணாநிதி நாகராஜனை தெரியாது என்று ஏன் சொல்ல வேண்டும்?: கருணாநிதி, “தலைமை கழகப் பேச்சாளராக நாகை நாகராஜன் என்றொருவர் இருப்பதாக எனக்கு தெரியவில்லை”, என்றது[1] வேடிக்கையாக இருக்கிறது. ராஜ் தொலைக்காட்சி அகடவிகடம் பேச்சரங்க நிகழ்ச்சியின் நடுவர் கலைமாமணி கவிஞர் நாகை நாகராஜன் அவர்கள், ரூ.25 ஆயிரத்தை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கினார் (நாகை, 18.11.2013) என்று “விடுதலையில்” காணப்படுகிறது[2]. தி.மு.க., தலைமை பேச்சாளர் நாகை நாகராஜன், என்று தினமலரிலும் குறிப்பு காணப்படுகிறது[3]. எனவே கலைஞர், மூதறிஞர், முத்தமிழ் வித்தகர், எல்லாம் தெரிந்தவர் பிரச்சினையில் சிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் இவ்வாறு கழட்டி விட பார்க்கிறார் என்று தெரிகிறது.
சகிப்புத் தன்மை, பேச்சுரிமை… பற்றி யாரும் குரல் எழுப்பவில்லையே?: இப்பொழுது சகிப்புத் தன்மை, பேச்சுரிமை… என்றெல்லாம் ஏன் பேச மறுக்கிறார்கள்? இணைதளங்களில் முஸ்லிம்கள் இந்து மதம், இந்துக்கள், இந்துமத நூல்கள், பழக்க-வழக்கங்கள் என்று எல்லாவற்றைப் பற்றியும் கேலி, கிண்டல், ஏன் தூஷித்தும் வருகின்றனர். அவற்றை முஸ்லிம் கட்சிகள் இவ்வாறு எதிர்ப்பதில்லையே, கண்டிக்கவில்லையே, தட்டிக் கேட்கவில்லையே? பிறகு அதே மாதிரி திக-திமுக கட்சிக்காரர் இப்படி கூறிவிட்டார் என்று ஏன் கொதிக்க வேண்டும்? பிறகு அத்தகைக் கட்சிகளுடன் ஏன் கூட்டு வைத்துக் கொள்ள வேண்டும். காபிர்களுடன் எந்தவிதமான நெருக்கமும், நட்பும், கூட்டும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று இஸ்லாம் நூல்கள் தாராளமாகவே கூறுகின்றனவே? ஆனால், அவற்றை எதிர்த்து எப்படி உண்மையான முஸ்லிம்கள் கூட்டு வைத்துக் கொள்ளலாம்?
திமுக கூட்டணியிலிருந்து எஸ்.டி.பி.ஐ.கட்சி விலகியது ஏன்? (08-04-2016): சென்னை (08-04-16): திமுக கூட்டணியிலிருந்து எஸ்.டி.பி.ஐ.கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தெஹல்கான் பாகவி செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, திமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடத்தவில்லை. 12 தொகுதிகளுக்கான பட்டியலை திமுகவிடம் அளித்திருந்தோம், எங்களுக்கான முக்கியத்துவத்தை திமுக தரப்பில் தராததால் திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறோம்.” என்றார். மேலும் “இன்று (08-04-2016, வெள்ளிக்கிழமை) செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அக் கூட்டத்தில் யாருடன் கூட்டணி என்று கலந்து ஆலோசிக்கப்படும். அதற்குப் பிறகு எங்களின் நிலைப்பட்டை அறிவிப்போம்” என்றார்[4] . இக்கட்சி இருக்கும் முஸ்லிம் கட்சிகளில் தீவிரவாதமான கட்சி என்றுள்ள நிலையில், உண்மையில் எதற்காக விலகியது என்று தெரியவில்லை. தமிழக மக்கட்தொகை சுமார் 7.3 கோடி அல்லது 730 லட்சங்கள், அதில் முஸ்லிம்கள் சுமார் 43 லட்சங்கள் இருக்கிறாற்கள். அப்படிப் பார்த்தால், அவர்களுக்கு 6% என்ற கணக்கில் ஒன்ரூ அல்லது இரண்டு இடங்கள் தான் கொடுக்கப்பட வேண்டும் ஆனால் 12 முதல் 15% சீட்டுகள் கொடுக்கப்படுகிறன. இது தவிர மற்ற கட்சிகளில் உள்ள முஸ்லிம் வேட்பாளர்கள் முஸ்லிம்களாகத்தான் செயல்பட்டு வருகிறார்களே தவிர இந்துக்களைப் போல நாத்திகர்கள், செக்யூலரிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் என்றெல்லாம் செயல்படுவதில்லை. ஆகவே, சீட்டு எண்ணிக்கையினால் எஸ்.டி.பி.ஐ.கட்சி விலகியது என்று சொல்வதில் அர்த்தமில்லை. “இறைதூதர் கருணாநிதி” உருத்தியிருக்குமோ என்னமோ, அல்லாவுக்குத்தான் தெரியும்.
கௌரவகொலை, திலகவதி ஐ.பி.எஸ் விமர்சனம், முஸ்லிம்களின் ஆர்பாட்டம் (ஜூன். 2009)[5]: சென்னை புளியந்தோப்பில் சலீம் என்ற ஆட்டோ டிரைவர் தனது மகள் காதலனோடு ஓடிப்போனதால் ஆத்திரமடைந்து மகளையோ கொலை செய்தபோது, நக்கீரன் வார இதழுக்கு பேட்டியளித்த திலகவதி ஐ.பி.எஸ் அவர்கள் கௌரவக் கொலைகள் அதிகமாக அரபு நாடுகளில் அரங்கேறிக் கொண்டிருப்பதாகவும் சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த மத்திற்கு இந்தச் சம்பவம் புதிதல்ல என்று பேட்டியளித்தார். அரபு நாடுகளில் கௌரவக் கொலைகள் அளவுக்கதிகமாக நடைபெற்று வருவதாகவும் சலீம் ஒரு இஸ்லாமியன் என்பதால் அந்த மதத்திற்கு இந்தச் செய்தி புதிதானதல்ல என்று கூறினார். திலகவதியின் இந்தப் பேட்டி, அரபு நாடுகளில் கவுரவக் கொலைகள் அங்கீகரிக்க ப்பட்டுள்ளதாகவும், அது இஸ்லாமிய மதத்திற்கு ஏற்புடையது போலவும் சலீம் இஸ்லாமியர் என்பதால் இந்தச் சம்பவம் அதாவது இஸ்லாமிய மதம் இத்தகைய காட்டுமிராண்டித்தனச் செயலை அங்கீகரிப்பது போலவும், இஸ்லாமிய மக்கள் இந்த செயல்களை ஏற்றுக் கொள்வதாகவும், மேலும் இஸ்லாமியர்கள் இவைகளை பின்பற்றுகிறார்கள் என்ற கருத்தை உண்டாக்கியுள்ளது. திலகவதியின் இந்த பேட்டி பிறசமய மக்கள் மத்தியில் இஸ்லாமிய மார்க்கத்தை பற்றி தவறான கருத்தை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த கருத்து ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போன்ற முஸ்லிம் அமைப்புகள் திலவதியின் இந்த பேட்டியை கண்டித்தும் இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வழியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தை 2009ல் நடத்தின.
நித்தியானந்தா விசயத்தில் கூட நக்கீரன் கோபால் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது (மார்ச்.2010)[6]: 2010ல் முஸ்லிம்கள் நக்கீரன் கோபாலை மிகக்கேவலமாக, மோசமாக வசைப்பாடின மூஸ்லிம் அமைப்புகள்[7]. இஸ்லாமிய சகோதரர்களுக்கு…..போலிச்சாமியார் நித்யானந்தாவின் உண்மை முகத்தை உலகறியச்செய்வதற்காக தொடர்ந்து புலனாய்வு செய்திகளை வெளியிட்டு வருகிறது நக்கீரன். அந்த வகையில், நபிகள் நாயகம் உள்ளிட்ட பெருந்தகைகளின் பெயரை களங்கப் படுத்திய நித்யானந்தாவின் போலித் தனத்தை வெளிப்படுத்தவே… நித்யானந்தா தன் ஆசிரமவாசிகளிடம் கூறிய சில கருத்துக்களை வெளியிட்டிருந்தோம். மற்றபடி, இஸ்லாமிய சகோதரர்களின் மனதை புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. குறிப்பிட்ட செய்தியின் மூலம் யாரேனும் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். –ஆசிரியர்[8].
ரிசானா மரண தண்டனை சர்ச்சையும், கருணநிதியும் (2013): ரிசானா நபீக் என்ற இளம்பெண் ஶ்ரீலங்காவிலிருந்து சவுதிக்கு வேலை செய்ய 2005ல் சென்றாள். ஆனால், வேலை செய்யும் இடத்தில் ஒரு குழந்தையைக் கொன்றாள் என்று 2007ல் மரண தண்டனை ஷரீயத் சட்டத்தின் படி விதிக்கப்பட்டது, 09-01-2013 அன்று தண்டனை நிறைவேறியது. அப்பொழுது கருணாநிதி முரசொலியில் மரண தண்டனை கூடாது என்று எழுதினார். “மரண தண்டனை என்ற ஒரு கொடுமை ஒழிக்கப்பட்டிருந்தால் ரிசானா குரூரமாகக் கொல்லப்பட்டிருக்க மாட்டாள் அல்லவா? இதற்கு எப்போது விடியல்? உலக நாடுகள் எல்லாம் ஒன்று கூடி இதுபோன்ற கொடுமைகள் இனியும் நேராமல் இருக்க, மானுடம் காத்திடும் மனித நேய உணர்வோடு, மனித நாகரிக மாண்பினை வெளிப்படுத்தும் வகையில், முடிவெடுத்து அதனை நடைமுறைக்குக் கொண்டு வர மாட்டார்களா?,” என்று தனது கருத்தைத் தெரிவித்தார். அப்பொழுதும், கருணாநிதி இஸ்லாமிய சட்டத்தை எதிர்க்கிறார், அதற்கு அவருக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று எச்சரித்து கண்டம் தெரிவித்தன. பிறகு, கருணநிதி மழுப்பலாக பதில் அளித்ததால் விசயம் மறக்கப்பட்டது. சரீயத்தின் படி “மரண தண்டனை” புண்ணியமானது, ஆனால், இந்திய சட்டதிட்டங்களின் படி அது கொடுமையானது, மனிதத்தன்மையற்றது என்றெல்லாம் வாதிப்பது முரண்பாடாக அவர்கள் கருதுவதில்லை. ராஜிவ் காந்தி கொலைவழக்கில் எப்படி கொலையாளிகள் விடுவிக்கப்பட்டனரோ அதேபோல, இஸ்லாம்ய தீவிரவாதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வெளிப்படையாகக் கேட்டு வருவதும் விசித்திரமானதே[9].
முஸ்லிம்கள் விசயங்களை ஏன் மதவாதமாக்கி வருகிறார்கள்?: திக-திமுகவில் சிலர் சில நேரங்களில் செக்யூலரிஸத்துடன் செயல்பட நினைக்கும் போது, செயல்படும் போது இவ்வாறு தடுக்கப்படுகின்றனர் என்றும் தெரிகிறது. அதாவது கருணாநிதி போன்றோரே முஸ்லிம்களைக் கண்டு பயப்படுகின்றனர் அல்லது அவ்வாறு பயமுருத்தி வைத்துள்ளன என்று தெரிகிறது. இதனால், ஆனானப்பட்ட கருணாநிதியின் பகுத்தறிவே அடிப்படைவாத முஸ்லிம்களிடம் மண்டியிட வேண்டியதாகிறது. ஆனால், தமிழக மக்கள் கவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிறுவர்களுக்கு என்று ஒரு கார்ட்டூன் போட்ட போது, “தி ஹிந்து” மாட்டிக் கொண்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. நக்கீரன், திலகவதி ஐ.பி.எஸ், கருணாநிதி போன்றோர் தங்களது கருத்துகளை வெளியிட்டதற்கு மிரட்டப்பட்டனர், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்தனர், மிரட்டினர். “விஸ்வரூபம்” பிரச்சினைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, தமிழகத்து முஸ்லிம் அமைப்புகள் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலியவற்றை ஆதரிப்பதாகவே தங்ளைக் காட்டிக் கொண்டு வருகின்றன.
© வேதபிரகாஷ்
10-04-2016
[1] பிபிசி.தமிழ்.நியூஸ், தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய நாகை நாகராஜன் யார் என்று எனக்கு தெரியாது-கருணாநிதி, பதிவு செய்த நாள்: 07 Apr 2016 11:05 am
By : Sam Kumar.
[2] http://www.viduthalai.in/page1/70908.html
[3] http://www.dinamalar.com/twitter_detail.asp?id=1478105&Print=1
[4] http://www.inneram.com/news/tamilnadu/8499-sdpi-party-dmk.html
[5] http://www.tntj.net/2760.html
[6] நக்கீரன், இஸ்லாமிய சகோதரர்களுக்கு….., பதிவு செய்த நாள் : 24, மார்ச் 2010 (21:48 IST); மாற்றம் செய்த நாள் :24, மார்ச் 2010 (21:48 IST)
[7] http://thaquatntjtvr.blogspot.in/2010/10/blog-post_03.html
[8] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=29297
[9] காபிர்கள் மோமின்களுக்கு தண்டனைக் கொடுக்க முடியாது, இஸ்லாம்-அற்ற சட்டங்கள் எங்களுக்குப் பொருந்தாது என்று வெளிப்படையாக இவ்வாறு கூறிவருவதை மற்றவர்கள் கவனிக்க வேண்டும்.

அண்மைய பின்னூட்டங்கள்