Posted tagged ‘தௌஹீத்’

செக்யூலரிஸ உடலுறவா, கற்பழிப்பா, எந்த வகையில் ஜைனுல் ஆபிதீன் லீலைகள் இந்திய சட்டங்களில் வரும்-வராது அல்லது, ஷரீயத்தில் தப்பி விடுமா? ஜமாத்தில் சமாதி கட்டப்படும் சட்டமீறல்கள் [2]

மே 29, 2018

செக்யூலரிஸ உடலுறவா, கற்பழிப்பா, எந்த வகையில் ஜைனுல் ஆபிதீன் லீலைகள் இந்திய சட்டங்களில் வரும்-வராது அல்லது, ஷரீயத்தில் தப்பி விடுமா? ஜமாத்தில் சமாதி கட்டப்படும் சட்டமீறல்கள் [2]

p. Jainul Abeedeen involved in sexploitation-The Hindu, Tamil-2

ஜைனுல் ஆபிதீனுக்குப் பிறகு பொறுப்பை ஏற்றுள்ள அப்துல்கரீம்: 20 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமிய சமூகத்தில் பல்வேறு முற்போக்குக் கருத்துகளை எடுத்துவைத்து தனி செல்வாக்குடன் வலம் வந்தவர் பி.ஜெ. ‘‘தவ்ஹித் ஜமாத்துக்கு என்று தனி பள்ளிவாசல், தனி நிர்வாகம் என சகலமும் இருக்கின்றன. தவ்ஹித் ஜமாத்தின் மீடியா நிர்வாகம் முழுவதும் பி.ஜெ கட்டுப்பாட்டிலேயே இருந்துவருகிறது. ஏற்கெனவே பி.ஜெவுடன் முரண்பட்ட பலர் இதேபோல குற்றச்சாட்டை சந்தித்து வெளியேற்றப்பட்டனர்’’ என்கிறார்கள்.  இந்த விவகாரம் குறித்து பி.ஜெ-வின் கருத்துக் கேட்க முயன்றோம். அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை[1]. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம்[2]. “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெவை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம். முதலில் வெளியான ஆடியோ குறித்து எங்களிடம் யாரும் புகார் தரவில்லை. எனவே அதனை நாங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கையை ரமலான் மாதத்துக்குப் பிறகு பொதுக்குழுவில் பேசி முடிவெடுக்க உள்ளோம். பி.ஜெ இல்லையென்றாலும் எங்களது சமூக, மார்க்கப் பணிகள் தொய்வில்லாமல் நடைபெறும். இந்த அமைப்பை நிறுவிய தலைவர்மீதே நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதிலிருந்தே, எங்கள் அமைப்பின் தனித்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்’’ என்றார் சிம்பிளாக.- அ.சையது அபுதாஹிர்.

Jainul Andeen -Vedaprakash-FB-3

பாக்கர்ஆபிதீன் லடாயும், இரண்டாகப் பிரிந்த டி.என்.டிஜேயும்: 2009ல் எஸ்.எம்.பாக்கர் மற்றும் ஜெயினுல் ஆபிதீனுக்கு இடையில் வேறுபாடு உண்டாகி, ‘தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்‘அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன் உடைந்து ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்’ என்ற புது இயக்கம் உருவானது. பிற்றகு,  அதுவும் உடைந்து ‘இந்திய தவ்ஹீத் ஜமாத்‘என்றொரு புது அமைப்பு உதயமாகியிருக்கிறது. ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்‘அமைப்பில் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எம்.பாக்கர் மீது செக்ஸ் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சொல்லி அவரையும் வேறு சிலரையும் அமைப்பின் பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். நீக்கப்பட்ட பாக்கர், ‘இந்திய தவ்ஹீத் ஜமாத்‘தைத் தொடங்கினார். தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நிறுவனத் தலைவர் பி.ஜெயினுல் ஆபிதீனிடம் பேசினோம் [ஜூனியர் விகடன்]. ”பாக்கர் மீது புகார்கள் வரத் தொடங்கியதுமே அவரை ஒதுங்கி யிருக்கச் சொன்னோம். அவரோ,மேலும் பண மோசடிகளில் இறங்கினார். விண் டி.வி. முதலீட்டில் இரண்டே கால் கோடி ரூபாய் உட்பட பல கோடி ரூபாய் அவர் மோசடி செய்திருக்கிறார். நிலங்களை விற்றதிலும் அவர் மீது புகார்கள் வந்திருக்கிறது. ரியல் எஸ்டேட் என்கிற பெயரில் ஒருவரிடம் இரண்டு கோடி ரூபாய் வாங்கியிருக்கிறார். இதையெல்லாம் ஆதாரபூர்வமாகக் கண்டுபிடித்தோம். அவர் நடத்திய ஹஜ் சர்வீஸிலும் ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை. இத்தகைய காரணங்களால்தான் அவரை நீக்கி னோம்.”

Jainul Andeen -Vedaprakash-FB-2

பரஸ்பர குற்றச்சாட்டுகளா, திட்டம் போட்டு, தப்பித்துக் கொள்ள கடைபிடிக்கும் யுக்தியா?:  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஒன்றாக, இரண்டாக பிரிந்தால், இழைத்த குற்றங்கள் போய் விடுமா? கற்பழிக்கப் பட்ட பெண்கள் க்ற்பைத் திரும்பப் பெற்று விடுவார்களா? ஆனால், இங்கும், சட்டப் படி என்னவாயிற்று என்று யாருக்கும் தெரியாது. இருவர் மீதும் ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகள் – பாலியல் புகார், பெண்களுடன் தொடர்பு, பண மோசடி…..பிறகு, முறைப்படி நடவடிக்கை எடுக்காமல், கட்சிகள் போல உடைவதால், குற்றங்கள் மறைக்கப் படுகின்றன என்றாகிறது. இது பரஸ்பர குற்றச்சாட்டுகள் என்பதை விட, ஏதோ, ஒரு திட்டம் போட்டு, தப்பித்துக் கொள்ள கடைபிடிக்கும் யுக்தி என்றே தெரிகிறது. போலீஸைப் பொறுத்த வரையில், புகார் கொடுக்காமல், அவர்கள் வழக்கு பதிவு செய்ய மாட்டார்கள். ஆகவே, இந்தியாவிற்குள் வாழ்ந்து, இந்தி சட்டங்களில் சிக்காமல் வாழும், இந்த இந்திய குடிமகன்களை நினைத்தால் தமாஷாகத் தான் உள்ளது.

Jainul Andeen -Vedaprakash-FB-1

கற்பழிப்பு சாமியார்களுக்கு எல்லாம் சட்டத்தின் படி நட்டவடிக்கை எடுக்க வேண்டும்: ஜைனுல் ஆபிதீன் ராம் ரஹீமை விட எப்படி வேறுபட்ட சாமியாராக இருக்க முடியும்? இல்லை நித்தியானத்தாவை விட மாறுபட்ட வழக்காக, இவரது நிலை உள்ளதா? சட்டத்திற்கு முன்பாக எல்லோரும் சமம் என்றால், இவர் மீதும், அதே முறையில் போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. ஒரு வருடமாக அவர்களே, தங்களுக்குள் விவாதித்துக் கொண்டு, முதலில் மறுத்து, பிறகு ஒப்புக் கொண்டு, மே 2018 வரை இழுத்துள்ளனர். இதில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. போலீஸுக்கு செல்ல்லாமல், ஜமாத்தில் முடிவெடுப்போம் என்றால், அது இந்திய சட்டங்களையே அவமதிப்பதாகும். இத்தகைய முறை எவ்வாறு செயல்படுகிறது, அரசாங்கத்திற்கு தெரியுமா-தெரியாதா, தெரிந்தால் ஏன் அமைதியாக இருக்கிறது போன்ற கேள்விகளும் எழுகின்றன. தீவிரவாதிகள் விசயங்களிலும், இவர்கள் இவ்வாறு இருப்பதினால், பலர் தீவிரவாதத்தில் இருப்பதே தெரியாமல் போகிறது. பிறகு மாட்டிக் கொள்ளும் போது தெரிகிறது. பிஜே விசயமும், இப்பொழுது அப்படியாகி விட்டது. “சுயோ மோடோ” முறையில், “தேசிய மகளிர் ஆனையம்”  சட்டமீறல்களை எடுத்துக் கொண்டு, விசாரிக்க ஆணையிடுகிறதே, இவ்விசயத்தில் மௌனமாக இருப்பது ஏன்?

PJ Baker fight-1

நிச்சயமாக செக்யூலரிஸவாதிகளின் போலித்தனம் வெளிப்படுகிறது:  இந்தியாவில் “செக்யூலரிஸம்” என்றால், துலுக்கர், கிருத்துவர் இந்திய சட்டங்களில் வரமாட்டார் என்ற நிலையை உருவாக்கியுள்ளனர். சட்டம், நீதிமன்றம், போலீஸார் என்று எல்லோருமே, அவர்களைக் கண்டு கொள்வதில்லை. பெர்ரிதாக பிரச்சினை வரும் போது தான், நடவடிக்கை எடுக்கின்றனர். ஊடகங்களும் அவ்வாறே இருக்கின்றன. சட்டமீறல்களை, ஒரே மாதிரியாக அவை அணுகுவதில்லை.

  1. பிஜே, ஜைனுல்ஆபிதீன்பாலியல்விவகாரம், மற்றஅதிரடிசெய்திகளால்மறைக்கப்பட்டுவிட்டன, டிவிசெனல்களும்கண்டுகொள்ளவில்லைபோலும்.
  2. இந்தியாவில்பாலியல்-செக்ஸ்விவகாரங்கள்கூடசாமியார்கள்விசயங்களில் “செக்யூலரிஸ” மயமாக்கப்பட்டுள்ளதுபோலும்!
  3. துலுக்கர்-கிருத்துவர்களுக்குஎல்லாம்நீதிமன்றம்முதலியவைதேவையில்லை, அவர்களேபேசித்தீர்த்துக்கொள்வர், அல்லதுநீக்கிவைப்பர்போலும்.
  4. ஆபாச ஆடியோ குறித்து பி.ஜெ-விடம் அமைப்பின் உயர்நிலைக் குழு விசாரணை நடத்தியபோது, ‘பேசியது நான்தான்’ என ஒப்புக்கொண்டுள்ளார்.
  5. இதேபோல் 13 பெண்களிடம்பி.ஜெஆபாசமாகப்பேசியுள்ளதோடு, அவர்களுடன்தொடர்பில்இருந்ததற்கானஆதாரங்களும்எங்களிடம்உள்ளன – இப்ராஹிம்.
  6. சன்-டிவிஏன்இந்தஆடியோ-வீடியோக்களைவெளியிடவில்லை? நித்தியானந்தாபுகழ் – லெனின்குருப்புக்குதெரியவில்லையா?
  7. 13 பெண்களின்கதி, அவர்களின்குடும்பங்கள்கதிஎன்ன?, பெண்ணியவீராங்கனைகள்ஏன், எப்படி, எவ்வாறுபொத்திக்கொண்டுஇருக்கிறார்கள்?
  8. கற்பழிப்பாளிகளுக்கு, இவ்வாறுவெவ்வேறுமுறைகளில்தண்டனைகொடுக்கலாம், கூடாதுஎன்றெல்லாம், செக்யூலரிஸஇந்தியாவில்இருக்கமுடியுமா?
  9. இனி “யூனிபார்ம்கிரிமினல்கோட்” [Uniform Criminal Code] எடுத்துவரவேண்டும்என்றுஇந்துத்துவவாதிகள்கேட்பார்களா?
  10. ஹரியோ, வர்த்தினியோ, பாண்டேயோ, புதியதலைமுறைஇத்யாதிகள், இதைப்பற்றிஒன்றும்கண்டுகொள்ளவில்லையோ?

 

© வேதபிரகாஷ்

29-05-2018

PJ Baker fight-2

[1] தி.இந்து, ஜெய்னுல் ஆபிதீன் மீது நடவடிக்கை ஏன்?: தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் விளக்கம்உயர் நீதிமன்றத்தில் வழக்கு; டிஜிபியிடம் புகார், Published : 16 May 2018 09:02 IST; Updated : 16 May 2018 09:04 IST.

[2] http://tamil.thehindu.com/tamilnadu/article23899778.ece

 

செக்யூலரிஸ உடலுறவா, கற்பழிப்பா, எந்த வகையில் ஜைனுல் ஆபிதீன் லீலைகள் இந்திய சட்டங்களில் வரும்-வராது, அல்லது ஷரீயத்தில் தப்பி விடுமா? [1]

மே 29, 2018

செக்யூலரிஸ உடலுறவா, கற்பழிப்பா, எந்த வகையில் ஜைனுல் ஆபிதீன் லீலைகள் இந்திய சட்டங்களில் வரும்-வராது, அல்லது ஷரீயத்தில் தப்பி விடுமா? [1]

p. Jainul Abeedeen involved in sexploitation-The Hindu, Tamil

ஒரு துலுக்க சாமியார், பெண்ணுடன் உடலுறவு கொண்டு, அதனை வர்ணித்துப் பேசலாமா?: சென்ற வருடம், 2017ல், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவராக இருந்தவர் பி.ஜெய்னுல் ஆபிதீன், ஒரு பெண்ணுடன், இருவரும் எவ்வாறு இன்பம் துய்த்தனர் என்பதான உரையாடல் கொண்ட ஆடியோ புழக்கத்தில் இருந்தது. “துலுக்கர் விவகாரம், நமக்கேன்” என்று யாருக் கண்டுகொள்ளவில்லை. நித்தியானந்தா விசயத்தில் சன்-டிவியும், லெனின் குருப்பும், ஹன்ஸ்ராஜும், நக்கீரனும் குதித்தது போல, குதிக்கவில்லை. ஏதோ இணைதள தமாஷாக்களில் அதுவும் ஒன்று என்பது போல கேட்டு, மகிழ்ந்து மறந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால், மே 12ம் தேதி 2018, அன்று இவ்வியக்கத்தினர், கூடினர், பிஜே தான் அந்த ஆடியோவில் பேசியது, இது தவிர, “இதேபோல் 13 பெண்களிடம் பி.ஜெ ஆபாசமாகப் பேசியுள்ளதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன,” என்று இப்ராஹிம் சொன்னதாக, இப்பொழுது செய்திகள் வெளிவந்துள்ளது, திகைப்பாக இருக்கிறது. ஒரு மதகுரு, சாமியார், ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டார், அதனை வர்ணித்து மகிழ்கிறார் என்றால், ஏதோ சாதாரண விவகாரமாகக் கொள்வது மேலும் வியப்பாக இருக்கிறது. ஆசிபா விசயத்தில் எகிறி குதித்த “செக்யூலரிஸ்டுகளில்” ஒருவன் அல்லது ஒருத்தி கூட வாயைத் திறக்கவில்லை. ஒருவேளை, இதெல்லாம் “ஒப்புக் கொள்ளப்பட்ட உடலுறவு” என்ரு உச்சநீதி மண்ர தீர்ப்பு என்ரு சொல்லி, கோக்கோகக் கதையாக முடித்து விடுவார்களா?

p. Jainul Abeedeen involved in sexploitation

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் எடுத்த முடிவு[1]:. இவர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. ஜேபி பாலியல் புகார் தொடர்பாக அவர் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் 2017ல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் கடந்த மே 12-ம் தேதி நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்ப தாவது: “பி.ஜெய்னுல் ஆபிதீன் மீது கூறப்பட்ட புகார் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உயர்நிலைக் குழு கூட்டத்தில் விசாரிக்கப்பட்டது. இதில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆனது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுகிறார். இனிவரும் காலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் எந்த பொறுப்புக்கும் வர முடியாதபடி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதத்துக்கு பிறகு நடக்கவுள்ள மாநில பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து முழு விளக்கம் அளிக்கப்படும்”, இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது[2]. இதுகுறித்து தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சிலர் கூறும்போது[3], “ஜமாஅத் என்பது கட்டுப்பாடுமிக்க ஒரு அமைப்பு. எந்த ஒரு தவறுக்கும் இதில் இடம் இல்லை. அதனால்தான் ஜெய்னுல் ஆபிதீன் மீதான புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் 21 பேர் கடந்த 12-ம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, ஜெய்னுல் ஆபிதீன் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தோம். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட அறிக்கையில் 21 பேரும் கையெழுத்திட்டு இருக்கிறோம். இந்த முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றனர்[4].

TNTK letter dated 12-05-2018
விகடன்என்ன நடந்தது என விசாரித்தோம்:  ‘தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் தலைவராக இருந்த பி.ஜெய்னுல் ஆபிதீன் என்கிற பி.ஜெ கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கப்பட்டுவிட்டார்[5]. அவர்மீது எழுந்த புகார் நிரூபணமானதால், கட்சியின் உயர்மட்டக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது’ என்று அந்த அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது[6]. இந்த அமைப்பின் ஆணிவேராக இருந்த பி.ஜெய்னுல் ஆபிதீன்மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டு, ஒட்டுமொத்த அமைப்பையே அசைத்துள்ளது.  “கடந்த ஆண்டு பி.ஜெ ஒரு பெண்ணுடன் ஆபாசமாகப் பேசும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அமைப்பு அதுகுறித்து விசாரித்தது. ஆனால், அந்த ஆடியோவில் பி.ஜெ-தான் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லாததால், அவர் தலை தப்பியது. ஆனால், இதே பெண் விவகாரத்தில் அப்போலோ ஹனிபா என்பவர் பி.ஜெ-வுடன் செட்டில்மென்ட் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக அடுத்த ஆடியோ ஒன்று வெளியாக… மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டது. ஆனால், ‘ஆடியோவில் இருப்பது பி.ஜெ குரலே இல்லை. அது மிமிக்ரி செய்யப்பட்டது’ என்று விளக்கம் சொன்னார்கள். கூடவே, மிமிக்ரி செய்யப்பட்ட சாம்பிள் ஆடியோ ஒன்றையும் அந்த அமைப்பு வெளியிட்டது.

p. Jainul Abeedeen involved in sexploitation.Vikatan 19-05-2018
அல்தாஃபிக்கு அடுத்து, ஜைனுல் ஆபிதீனின் மீது பாலியல் புகார்: தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பை கட்டமைத்ததே பி.ஜெ-தான். இஸ்லாமிய மக்களிடையே அவருக்கென்று தனி செல்வாக்கு உண்டு. கடந்த ஆண்டு இந்த அமைப்பின் தலைவராக இருந்த அல்தாஃபிமீது ஒரு பாலியல் குற்றச்சாட்டு கிளம்பவே, அவரை அமைப்பிலிருந்து நீக்கிவிட்டு மீண்டும் பி.ஜெ-வை தலைவராக நியமித்தார்கள். இந்நிலையில், சில நாள்களுக்குமுன் பி.ஜே மற்றொரு பெண்ணுடன் ஆபாசமாகப் பேசியதாக ஆடியோ டீஸர் ஒன்றைச் சிலர் வெளியிட்டு கிலி ஏற்படுத்தினார்கள். அடுத்த சில தினங்களில் டீஸரின் தொடர்ச்சியாக… 10 நிமிடங்கள் ஓடக்கூடிய முழு ஆடியோ ஒன்று வெளியானது. இதனால் பிரச்னை பூதாகரமானது. ஆபாச ஆடியோ குறித்து பி.ஜெ-விடம் அமைப்பின் உயர்நிலைக் குழு விசாரணை நடத்தியபோது, ‘பேசியது நான்தான்’ என ஒப்புக்கொண்டுள்ளார் அவர். அதன்பிறகே அவரை அமைப்பிலிருந்து நீக்கியுள்ளார்கள்” என்கிறார்கள்.

Jainul Andeen removed-VP
தவ்ஹித் ஜமாத்திலிருந்து வெளியேற்றப்பட்ட வேலூர் இப்ராஹிம் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வந்தது: “சிறையில் இருந்து வெளிவந்துள்ள பாசித் என்பவர்தான் இந்த ஆடியோவை முதலில் வெளியிட்டுள்ளார்,” என்று செய்தி குறிப்பிட்டாலும், ஏன் சிறைக்கு சென்றார், செய்த குற்றம் என்ன, எப்படி வெளிவந்தார், போன்ற விவரங்கள் கொடுக்கப்படவில்லை. அதன்பிறகு இலங்கையில் உள்ள அமீர் சயீத் என்பவர் மூலம் இந்த ஆடியோ வெளியாகிவருகிறது. அதாவது, இந்திய சைபர் சட்டத்ட்தில் அகப்படாமல் இருக்க அவ்வாறு செய்தனர் போலும். ‘‘பி.ஜெ-வுக்கு நெருக்கமான ஒருவர் மூலமே இந்த ஆடியோக்கள் மொத்தமாகக் கைப்பற்றப்பட்டுள்ளன’’ என்று ‘ஷாக்’ கொடுக்கிறார்கள் சிலர். இவ்விஷயத்தில், முதல் ஆடியோ வெளியானது முதல் தொடர்ந்து பி.ஜெ-மீது கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறி வருபவர் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர் வேலூர் இப்ராஹிம். இவர் ஏற்கெனவே தவ்ஹித் ஜமாத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்.

இதேபோல் 13 பெண்களிடம் பி.ஜெ ஆபாசமாகப் பேசியுள்ளதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. அவற்றைப் போகப்போக வெளியிடுவோம்: இப்ராஹிம் நம்மிடம் “பி.ஜெ தனது நா வன்மையால் இத்தனை ஆண்டுகள் அந்த அமைப்பில் இருந்தவர்களை முட்டாளாக்கி வந்துள்ளார். இப்போது வெளியான ஆடியோ மட்டுமல்லஇதேபோல் 13 பெண்களிடம் பி.ஜெ ஆபாசமாகப் பேசியுள்ளதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. அவற்றைப் போகப்போக வெளியிடுவோம். இதற்குமுன் வெளியான ஆடியோவில் பேசியதும் இவர்தான் என்று நான் தொடர்ந்து சொல்லிவந்தேன். ஆனால், அந்த அமைப்பின் நிர்வாகத்தில் இருப்பவர்கள் இதை அமுக்கிவிட்டார்கள். அதன்பிறகுதான் இந்தப் புதிய ஆடியோ வெளியாகியுள்ளது. குடும்பப் பிரச்னை என்று வரும் பெண்கள், மார்க்கக் கூட்டத்துக்கு வரும் பெண்கள் என பலரிடமும் பி.ஜெ தனது கைவரிசையைக் காட்டியுள்ளார். அது அங்கிருக்கும் பலருக்கும் தெரியும். இப்போது பி.ஜெ நீக்கப்பட்டதும்கூட ஒரு கண்துடைப்புதான். அவருடைய ஆளுமை இன்னும் அந்த அமைப்பில் உள்ளது. பல கோடி ரூபாய்ப் பணத்தை வெளிநாட்டிலிருந்து பெற்று அதை சில தவறான காரியங்களுக்கு பி.ஜெ பயன்படுத்தி வருகிறார். அந்த உண்மையை தக்க ஆதாரங்களோடு நாங்கள் நிரூபிக்க உள்ளோம். அல்தாஃபி மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது, அதைத் தனக்குச் சாதகமாக்கி தலைவர் பதவியை மீண்டும் கைப்பற்றியவர், அதே பாலியல் குற்றச்சாட்டால் இப்போது அசிங்கப்பட்டு நிற்கிறார். அவரைக் காவல்துறை கைதுசெய்து முறையாக விசாரிக்க வேண்டும்,’’ என்றார்.

© வேதபிரகாஷ்

29-05-2018

JP playing dual role - Maulvi and politician

[1] தி.இந்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் நீக்கம்: உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு, Published : 15 May 2018 09:57 IST; Updated : 15 May 2018 09:57 IST.

[2] http://tamil.thehindu.com/tamilnadu/article23889521.ece

[3] மின்முரசு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் நீக்கம்: உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு, May 15, 2018.

[4]http://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/279179/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D/

[5] விகடன், ஆபாச ஆடியோசிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்! , அ.சையது அபுதாஹிர், Posted Date : 06:00 (19/05/2018).

[6] https://www.vikatan.com/juniorvikatan/2018-may-23/exposure/141064-jainulabdeen-sex-audio-issue.html

 

எங்களுக்கும், கள்ளநோட்டு விநியோகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று எந்த முஸ்லிம் அமைப்பு சொன்னாலும், முஸ்லிம்கள் அதில் ஈடுபட்டுள்ளதை கவனிக்க வேண்டும்!

ஜனவரி 31, 2016

எங்களுக்கும், கள்ளநோட்டு விநியோகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று எந்த முஸ்லிம் அமைப்பு சொன்னாலும், முஸ்லிம்கள் அதில் ஈடுபட்டுள்ளதை கவனிக்க வேண்டும்!

தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல் கள்ள நோட்டுகளுடன்.முரசு

அதிரையில் அதிகரிக்கும் கள்ள நோட்டுக்கள்! பரிதவிக்கும் மக்கள்! கண்டறிவது எப்படி!: இதே போல இன்னொரு முஸ்லிம் இணைதளம், “அதிரை தற்போது சில வருடங்களாக கள்ள நோட்டுக்களில் புழக்கம் அதிகரித்துள்ளது என்று மார்ச்.2015ல் கூட விவரங்களை வெளியிட்டுள்ளது[1]. சமுக விரோதிகள் தங்களின் ஆதாயத்திற்க்காக கள்ள நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுகின்றனர். இவ்வாறு வரும் கள்ள ரூபாய் நோட்டுக்கள் வைரல் போல் ஊரெங்கும் பரவுயுள்ளது. அதிகளவில் பணம் பரிவர்த்தனை நடக்கும் இடங்களில் தான் இவ்வாறான நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன. இவ்வாறு கள்ள நோட்டுக்கள் அதிகம் 500, 1000 ரூபாய்களில் தான் அச்சடிக்கப்படுகின்றன. இதனால் அதிகளவில் துயரப்படுவது அப்பாவி மக்களே! கள்ள நோட்டை கண்டுபிடிக்கத் தெரியாத அப்பாவி மக்கள் அந்த பணத்தை வங்கியில் செமிக்க முனையும் போது பரிதாபமாக சிக்கிக் கொள்கின்றனர். இன்று அதிரையில் உள்ள ஒரு பிரதான வங்கியில் இதுபோல் தான் ஒருவர் தன் கணக்கில் பணம் செலுத்துவதற்க்காக வந்தார். அப்போது அவர் வைத்திருந்த ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என கண்டுபிடிக்கப்பட்டது கண்டு அதிர்ந்தார். உடனே வங்கி மேலாளர் அந்த பணத்தை கிழித்து அந்த நபரை எச்சரித்து அனுப்பினார். இது குறித்து அந்த அப்பாவி நபர் கூறுகையில் யாரிடம் பணம் வாங்கினேன் என்று எனக்கு தெரியவில்லை. உழைத்து சம்பாதித்த பணம் போய்விட்டது என மனக்குமுறலுடன் சொன்னார். எனவே இது போல் நாமும் ஏமாற்றப்படாமல் இருக்க ஒவ்வொருவரும் கள்ள நோடுக்களை அறிவது எப்படி என அறிந்து வைத்துக்கொள்வது அவசியம்”, என்று அறிவித்தது. பணம் என்ற விசயம் வரும்போது உஷாராகத்தான் இருக்கிறார்கள்.

Fake INR circulation in TN. how distributedதமிழகத்தில் மால்டா கள்ளநோட்டு கும்பல்: கள்ளநோட்டு வைத்திருந்த வழக்கில், குற்றவாளிக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை வழங்கி, திருப்பூர் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. திருப்பூர் தெற்கு போலீசாருக்கு, கருவம்பாளையம் பகுதியில் கள்ளநோட்டு புழக்கம் இருப்பதாக, தகவல் கிடைத்தது. 2010, அக்., 31ல், அப்பகுதியில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில், போலீசார் சோதனை நடத்தினர். அங்குள்ள வீட்டில் கள்ளநோட்டு வைத்திருந்த, மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தை சேர்ந்த முகமது அஸ்ரபு ஷேக் 34, முகமது சதாவுல், அப்துல் ரகீப் ஆகியோர் பிடிபட்டனர்[2]. அவர்களிடம் இருந்த, 2.46 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள், 53 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.இவ்வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு (கள்ளநோட்டு தடுப்பு பிரிவு) மாற்றப்பட்டது. திருப்பூர் சப்-கோர்ட்டில், வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை நீதிபதி நவமூர்த்தி விசாரித்து, முகமது அஸ்ரபு ஷேக்குக்கு நான்கு ஆண்டு, எட்டு மாதம் சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, ஜூலை 2015ல் தீர்ப்பளித்தார்[3]. மற்ற குற்றவாளிகளான முகமது சதாவுல், அப்துல் ரகீப் இருவரும், ஜாமினில் வெளிவந்த போது தலைமறைவாகினர். அவர்களை போலீசார் இன்னும் தேடி வருகின்றனர். அதாவது பாகிஸ்ஸ்தானில் அச்சடிக்கப்படும் கள்ளநோட்டுகள் மால்டா மூலம் தமிழகத்தில் விநியோகிப்பது வியப்பாக இருக்கிறது[4]. இந்தியாவில் ஆண்டொன்றிற்கு ரூ.1500 கோடி கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுகின்றன. இது மால்டாவில் சிலரை கைது செய்து விசாரித்ததில் தெரிய வந்தது[5]. இதுதவிர, குண்டுகள், துப்பாக்கிகள், ரசாயனப் பொருட்கள் சம்பந்தப்பட்ட கைதுகள் ஏராளம். 2015ம் ஆண்டு கண்டுபிடித்த சில உதாரணங்கள், கைதுகள்.

Fake INR circulation in Tamilnaduபாகிஸ்தான், பங்களதேசம், தமிழகம் தொடர்பு எப்படி?: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கள்ளநோட்டு புழக்கம் மற்றும் வழக்குகளும் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக கள்ளநோட்டு வழக்குகள் குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பாகிஸ்தானில் அச்சடிப்பு இந்தியாவிற்கு பாகிஸ்தான் மறைமுகமாகவும், நேரடியாகவும் பல்வேறு தொல்லை கொடுத்து வருகிறது[6]. ஒரு பக்கம் தீவிரவாதிகளை ஏவிவிட்டு குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி நாசவேலைகள் அரங்கேற்றப்படுகின்றன. இன்னொரு பக்கம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு, இந்தியாவின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்யும் சதித்திட்டங்களையும் பாகிஸ்தான் நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் அண்டை நாடான வங்காளதேசத்திற்கு கொண்டு போகப்பட்டு, அங்கிருந்து இந்தியாவிற்குள் கள்ள நோட்டுகள் கடத்தி வரப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் புழக்கத்திற்கு விடப்படுகிறது. மேற்கு வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அனுப்புவது போல அனுப்பி, அவர்கள் மூலம் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகிறது[7].

Fake INR circulation in TNதமிழகத்தில் ஊடுருவல்: தமிழகத்திற்குள்ளும் கட்டிட வேலை செய்பவர்கள் போலவும், ஓட்டலில் வேலை பார்ப்பவர்கள் போலவும், பிளாட்பாரங்களில் கடைபோட்டு துணி விற்பவர்கள் போலவும் கள்ளநோட்டு கும்பல் ஊடுருவி வந்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு விடுகின்றனர். ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய் கள்ள நோட்டுகளை பெரும்பாலும் புழக்கத்தில் விடுகிறார்கள். தமிழகத்தில் கள்ள நோட்டு கும்பல் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது வேட்டை நடத்துகிறார்கள். சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை நகர போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஆதரவு உளவாளிகள் ஜாகீர் உசேன் உள்பட 6 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமும் கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலோனோர் முச்லிம்கள் என்பதில் தான் சந்தேகம் எழுகின்றது.

Fake INR circulation in Tamilnadu- tirupur two arrested2011ல் 1400 வழக்குகள் என்றிருந்து 2015ல் 1313 என்று குறைந்தது: போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடுவது குறைந்துள்ளது. வழக்குகள் எண்ணிக்கையும் கடந்த 5 ஆண்டுகளில் குறைந்துள்ளதாக போலீசார் வெளியிட்ட புள்ளி விவரக் கணக்கில் தெரியவந்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தமிழகம் முழுவதும் 1400 கள்ளநோட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. ஆனால் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை 1313 கள்ளநோட்டு வழக்குகள் தான் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுபவர்கள் மீது தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ள நோட்டு வழக்குகளில் கைதானவர்களில் பெரும்பாலானோர் மேற்கு வங்காளம் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான், என்பது குறிப்பிடத்தக்கது, மற்றும் இவர்கள் எல்லோருமே முஸ்லிம்கள்.

Fake-Currency- two arrested in tirupurகள்ள நோட்டுகள் விழிப்புணர்வுநோட்டீஸ்[8]: இந்நிலையில், கனரா வங்கி உட்பட பல்வேறு தேசிய வங்கிகளின் சார்பில், அதன் கிளைகளில், வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், ரிசர்வ் வங்கி தகவலின்படி, இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள, 2 ஏ.க்யூ., பி.ஏ.சி., வரிசையிலான, 1,000 ரூபாய் நோட்டுகள், கள்ள நோட்டுகள் என கண்டறியப்பட்டுள்ளதால், அந்த நோட்டுகளை பயன்படுத்த வேண்டாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 500 ரூபாய் நோட்டுகளில், 2 ஏ.க்யூ., பி.ஏ.சி., 100 ரூபாய் நோட்டுகளில், 4 ஏ.க்யூ., ஏ.ஏ.சி., ஆகியன கள்ள நோட்டுகளாக வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது[9]. என்னத்தான் எச்சரிக்கைகள், முதலியன இருந்தாலும், கள்ளநோட்டுகளை தடுக்க முடியவில்லை என்பது நிதர்சனமாக உள்ளது.

தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல் கள்ள நோட்டுகளுடன்முஸ்லிம்களின் தொடர்பு ஏன்?: பாகிஸ்தானில் அச்சிடப்பட்ட கள்ளநோட்டுகள், பங்களாதேசத்திற்கு வருகின்றன எனும் போது, அத்தனை தூரம் தாண்டி எப்படி வருகிறது என்பது வியப்பாக இருக்கிறது. பிறகு, அவை பங்களாதேச ஊடுருவல்காரர்கள் மூலம், விநியோகிக்கப் படுகிறது, தமிழகத்திலும் வருகிறது எனும் போது, இவையல்லாம் திட்டமிட்டு, ஒரு ஒருங்கினைப்போடு செயல்படுகிறது என்றாகிறது. பிறகு சம்பந்தப்பட்டுள்ளவர்கள் முஸ்லிம்கள் எனும் போது, அவர்கள் எப்படி, ஏன், எவ்வாறு அத்தகைய தேசவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது, அதைவிட வியப்பாக இருக்கிறது. அதிரை எக்ஸ்பிரஸ் கவலைப்படுவது போல, எல்லா முஸ்லிம் அமைப்புகளும் கவலைப்படலாமே. சகோதரர்களுக்குச் சொல்லி தடுக்கலாமே? பீஹார், மேற்கு வங்காளம் முதலிய மாநிலங்களில் நடப்பவை, ஏன் தமிழகத்தில் நடக்க வேண்டும்?

 

© வேதபிரகாஷ்

31-01-2016

[1] http://adiraipirai.in/?p=920

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1293570&Print=1

[3] தினமலர், கள்ளநோட்டு வைத்திருந்தவருக்கு 4 ஆண்டு சிறை,ஜூலை.11, 2015, 01.14.

[4] http://www.oneindia.com/india/why-does-fake-currency-come-from-west-bengal-1788096.html

[5] http://www.oneindia.com/india/fake-currency-rs-1500-crore-pumped-into-india-in-one-year-1756998.html

[6] தினத்தந்தி, பாகிஸ்தானில் அச்சடித்து புழக்கத்தில் விடுகிறார்கள் தமிழகத்தில் கள்ளநோட்டு வழக்குகள் வெகுவாக குறைந்தன, மாற்றம் செய்த நாள்: திங்கள், ஜனவரி 25,2016, 1:20 AM IST; பதிவு செய்த நாள்: திங்கள், ஜனவரி 25,2016, 1:20 AM IST.

[7] http://www.dailythanthi.com/News/State/2016/01/25012002/Fake-notes-being-pushed-into-tamilnadu-via-pakistan.vpf

[8] தினமலர், தமிழகத்தில் ரூ.200 கோடி கள்ளநோட்டு புழக்கம், ரிசர்வ் வங்கி அறிவிப்பால் வியாபாரிகள் பீதி , பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2016,23:16 IST

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1439396

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (2)

நவம்பர் 11, 2015

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின்ஷிர்க்விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (2)

ரஜினி, திப்பு, சுல்தான்

ரஜினி, திப்பு, சுல்தான்

திப்புவை வைத்துக் கொண்டு அரசியல் செய்வது ஏன்?:  தி்ப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாற்றை தான் திரைப்படமாக தயாரிக்க உள்ளதாக கன்னட திரையுலக தயாரிப்பாளர் அசோக் கெனி எம்எல்ஏ கூறினார்[1]. இந்த படத்தில் திப்பு சுல்தானாக, ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், இந்த படத்தில் ரஜினி நடிக்கக்கூடாது என்று பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன[2]. இந்த படத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொள்ள மாட்டார் என்று நம்புவதாக, பா.ஜ. தேசிய பொதுச்செயலாளர் ஹெச்.ராஜா, தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது[3]. “ரஜினி திப்பு சுல்தான் படத்தில் நடிக்கப் போவதில்லை என்பது சின்ன குழந்தைக்கும் தெரியும். அப்படியிருந்தும், ரஜினியை முன்னிறுத்தி மதவெறியை கக்கியிருக்கிறது, இந்து முன்னணி”, என்று தனக்கேயுரிய பாணியில் தமிழ்.வெப்.துனியா கமென்ட் அடித்திருந்தது, அதனுடைய சிந்தாந்த வெளிப்பாடாக இருந்தது[4]. இது குறித்து இந்து அடிப்படைவாதியும், இந்து முன்னணி தலைவருமான ராமகோபாலன் மதவெறி கருத்துக்களை வெளியிட்டுள்ளார், என்றும் தொடர்ந்தது[5].  பொதுவாகவே, முஸ்லிம் ஆதரவான “வினவு” என்ற இணைதளமும், தன்னுடைய சித்தாந்தத்தை வெளிப்படுத்தியது[6]. ஆனால், முஸ்லிம்கள் என்ன பேசினர், அவர்களது கருத்து என்ன என்பது பற்றி இவை குறிப்பிடவில்லை. அவர்களது கருத்தும் உச்சங்களைத் தொட்டுள்ளது. தௌஹீத் அமைப்பின் வீடியோ ஒன்று உதாரணமாகக் காட்டப்படுகிறது[7]. அதாவது ரஜினி விவரம் அவர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாகத் தெரிந்துள்ளது. சிபிஎம்.மும் விடவில்லை, உடனே இராமகோபாலனுக்கு கண்டனத்தைத் தெரிவித்தது[8]. ஆகவே, இப்பிரச்சினை தமிழகத்திலும் அரசியலாக்கப் பட்டுவிட்டது.

ரஜினி, சந்திரமௌளி, திப்பு சுல்தான்

ரஜினி, சந்திரமௌளி, திப்பு சுல்தான்

திப்பு சுல்தான் பற்றி இராம கோபாலன் எடுத்துக் காட்டியது (செப்டம்பர்.2015): சரி, என்ன அப்படி இராம கோபாலன் சொல்லிவிட்டார் என்று பார்ப்போம், “திப்பு சுல்தான் வேடத்தில் தமிழ் நடிகர்கள் நடிப்பது தமிழர்களை அவமானப்படுத்துவதற்கு சமம். திப்பு சுல்தான் தமிழர்களுக்கும் குறிப்பாக இந்துக்களுக்கு எதிராக நடத்திய தாக்குதல்கள் பற்றி பல வரலாற்று புத்தகங்களில் இருந்து அடையாளம் காட்ட முடியும். தமிழர்களை துரத்தியடித்த திப்பு சுல்தானை சிறந்த சுதந்திர போராட்ட தியாகியாக சித்தரிப்பதற்கான முயற்சிதான் இந்த பட தயாரிப்பு. முன்னாள் முதல்அமைச்சர் எம்.ஜி.ஆரின் மூதாதையர்கள் கொங்கு நாட்டில் உள்ள பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள். அந்த பகுதி மைசூர் சமஸ்தானத்தில் ஐதர் அலி ஆளுகையில் இருந்த போது இந்துக்களை மதம் மாறும்படி கட்டாயப்படுத்தினார்கள். மதம் மாற விருப்பம் இல்லாதவர்கள் அங்கிருந்து பாலக்காட்டுக்கு குடி பெயர்ந்தனர். அவ்வாறு குடி பெயர்ந்தவர்களில் எம்.ஜி.ஆரின் மூதாதையர்களும் அடங்குவர். எனவே எனது வேண்டுகோள் தமிழையும், தமிழரையும் நேசிப்பவர்கள் யாரும் திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க கூடாது. அந்த படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம்.” – இவ்வாறு ராமகோபாலன் கூறினார். இதில் என்ன கருத்துக்களை வெளியிடப்பட்டுள்ளன என்று தெரியவில்லை. சரித்திர உண்மைகளை சொன்னால், அது மதவேறி என்றால், இவர்களது ஞானசூன்யத்தை என்னென்பது? இதேபோல தௌஹீத் வீடியோ பேச்சையும் கேட்கலாம். அவர் ஏதோ திப்புதான் ஆங்கிலேயரை எடுத்து பாராடினான், ராக்கெட் விட்டான் என்ற ரீதியில் பேச்சு இருக்கிறது. இதனால், 2013ல் நடந்தவற்றை ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.

செயின்ட் தாமஸ் சினிமா, கரு, ரஜினி, குஷ்பு, பிஷப்புகள் 2008

செயின்ட் தாமஸ் சினிமா, கரு, ரஜினி, குஷ்பு, பிஷப்புகள் 2008

தாமஸ்படத்தில் ரஜினி நடிப்பார் என்று கிறிஸ்தவ பாதிரிகள் அறிவித்தது: ரஜினிகாந்த்தின் பெயரை அந்த அளவுக்கு சுலபமாக இழுத்து விட முடியுமா என்று கவனிக்க வேண்டும். முன்னர் கூட, ரஜினிகாந்த், “தாமஸ்” படத்தில் நடிப்பார் என்றெல்லாம் கிறிஸ்தவ பாதிரிகள் அறிவித்தனர். அதற்கும் இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்கத்தான் செய்தனர். ஆனால், “தாமஸ்” பிரச்சினையில் பல்வேறு விவகாரங்கள் அடங்கியிருந்ததால், எங்கே விசயங்கள் வெளிப்பட்டுவிடுமோ என்று விளைவுகளை அறிந்த கிறிஸ்தவர்களே அடங்கி விட்டனர்[9]. அதாவது, இந்து-எதிர்ப்பு என்பதனால் நின்றுவிடவில்லை. அதேபோல, இப்பொழுது ரஜினி “திப்பு”வாக நடிப்பார் என்று ஒரு கன்னட தயாரிப்பாளர் சொல்வதை ஒதுக்கிவிட முடியாது. ரஜினியே கர்நாடகாவில் இருந்து வந்தவர் தாம், இன்றும் அவரது உறவினர்கள் அங்குள்ளனர். மற்றும் பலவிசயங்களில் அவர் சம்பந்தப்பட்டிருக்கிறார். ஆகவே, மற்ற கட்சியினர் கருத்துத் தெர்விக்கும் போது, இந்து சார்புடைய கட்சிகள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவதில் ஒன்றும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. ஜெயலலிதா 2013லேயே, இதனை அரசியலாக்கிவிட்டார்.

ஹைதர் அலி - திப்பு - ஜெயலலிதா

ஹைதர் அலி – திப்பு – ஜெயலலிதா

மேமாதத்தில் 2013 ஜெயலலிதா எடுத்த முடிவு[10]: திப்புப் பிரச்சினையை தமிழகத்தில் ஆரம்பித்து வைத்தது ஜெயலலிதா தான். தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா படித்த அறிக்கையில் மே 2013ல் கூறியிருப்பதாவது: “…………………………. இதே போன்றுஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும்அடிமைத் தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன்னுயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நினைவாக திண்டுக்கல் மாவட்டத்தில்அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்”.[11], என்று அறிவித்ததால், திப்பு ஆதரவு-எதிர்ப்பு தமிழகத்திலும் ஏற்பட்டது. அம்மா செக்யூலரிஸ ரீதியில் எல்லோருக்கும் மணிமண்டபம், இவர்களுக்கும் அப்படியே என்ற ரீதியில் சொல்லிவிட்டார்! ஹைதர் அலி. அவரது புதல்வர் திப்பு சுல்தான். இவர்கள் நினைவாக, திண்டுக்கல்லில் நூலகம் அமைக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ,க்கள் சவுந்திரராஜன், பாலபாரதி, அஸ்லம் பாஷா, தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (ஆம்பூர்) ஆகியோர், கோரிக்கை விடுத்தனர்[12]. இதுவே அரசியல்தான் என்று தெரிகிறது. மேலும் கம்யூனிஸ்ட்டுகள் எப்படி வெட்கம் இல்லாமல் சுதந்திரம், சுதந்திர வீரர் என்றெல்லாம் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. எங்கு ஒரு முஸ்லிம் கேட்டால் முஸ்லிம் கேட்கிறான் என்று ஆகிவிடுமோ என்று கம்யூனிஸ்ட்டுகளைவிட்டு கேட்க வைத்து காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர். ஆனால், சில முஸ்லிம்களே – நாகை மன்சூர்[13] போன்றோர் இதனை எதிர்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது[14]. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவோ திப்பு சுல்தானின் 214 நினைவு ஆண்டு என்று சொல்லி விழா நடத்தி பரிசுகள் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

lash-over-tipu-sultan-jayanti-celebrations

lash-over-tipu-sultan-jayanti-celebrations

திப்பு ஜெயந்தி - முஸ்லிம்கள் இப்படி கொண்டாடலாமாதிப்புவின் நினைவு நாளா, பிறந்த நாளா, ஜெயந்தியா?: பொதுவாக, இஸ்லாம், முஸ்லிம்கள் மற்றும் அவர்களது இறையியலை அறியாத மக்கள், எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். இல்லையென்றால், “நமக்கு எதுக்கு வம்பு, இதெல்லாம் துலுக்கன் பிரச்சினை”, பிரச்சினைதான் வரும் என்று ஒதுங்கி விடுவர். ஆனால், நாகை மன்சூர்[15] போன்றோர் அதனை எதிர்த்ததும்[16], பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவோ திப்பு சுல்தானின் 214 நினைவு ஆண்டு என்று சொல்லி விழா நடத்தியதும் கவனிக்கத்தக்கது. முஸ்லிம்களுக்கு பிறப்பை விட, இறந்த நாள் தான் முக்கியத்துவமானது. அதனால் தான் அவர்கள்  214 நினைவு ஆண்டு என்று இறந்ததை-இறப்பைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், சித்தராமையா போன்ற செக்யூலரிஸ அரைகுறைகள் ஜெயந்தி, அதாவது பிறந்த நாள் என்று கொண்டாடுகின்றனர். இருப்பினும், முஸ்லிம்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது நோக்கத்தக்கது. அதாவது, இதை வைத்து ஓட்டு வங்கி, கலவரம், இந்து-விரோதம், அரசியல் நிலையில் வலதுசாரிகளுக்கு பாதிப்பு போன்றவற்றை உருவாக்கலாம், இருப்பதை அதிகமாக்கலாம், பிறகு அவற்றை உலகரீதியில் செய்திகளாக பரப்பி, பிரச்சாரம் செய்யலாம் என்று அவர்கள் தீர்மானத்துடன் அவ்வாறிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், முட்டாள் இந்து அமைப்புகள் எதிப்பு தெரிவித்து அவர்கள் விரித்த வலையில் விழுந்துள்ளன.

© வேதபிரகாஷ்

11-11-2015

[1] http://tamil.cinecoffee.com/news/rajini-and-rajamouli-join-for-tipu-sultan-movie/

[2]  தினமலர், திப்பு சுல்தானாக ரஜினி : பா.. எதிர்ப்பு, செப்டம்பர்.15, 2015.09.39.

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1342499

[4] தமிழ்.வெப்.துனியா, திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினியா? மதவெறியை தூண்டும் இந்து முன்னணி, Last Modified: சனி, 12 செப்டம்பர் 2015 (14:45 IST).

[5] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/tipu-sultan-rajini-religious-fanaticism-hindu-munnani-ramagopalan-115091200017_1.html

[6] http://www.vinavu.com/2015/09/15/ramagopalan-diktat-to-rajinikanth-inside-story/

[7] http://thowheedvideo.com/5411.html

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/after-hindu-group-warns-rajini-cpm-says-tipu-protected-communal-235624.html

[9] மேலும் விவரங்களுக்கு என்னுடைய www.thomasmyth.wordpress.com என்ற தளத்தைப் பார்க்கவும்.

[10]  http://news.vikatan.com/article.php?module=news&aid=14904

[11]  http://www.dinamalar.com/news_detail.asp?id=714454&Print=1

[12] http://newindianexpress.com/states/tamil_nadu/Memorials-for-Sahajananda-Tipu-Hyder/2013/05/16/article1591819.ece?pageNumber=1&parentId=70530&operation=complaint

[13] https://www.facebook.com/NagaiMansoor

[14] https://www.facebook.com/pages/Islamic-Youngsters-EMAIL/228120720548662

[15] https://www.facebook.com/NagaiMansoor

[16] https://www.facebook.com/pages/Islamic-Youngsters-EMAIL/228120720548662