Posted tagged ‘தௌஹீத் ஜமாஅத்’

கள்ளநோட்டு கடத்தி வர பயன்பட்ட தவ்ஹித் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல்: 4 பேர் கைது – பின்னணி என்ன?

ஜனவரி 31, 2016

கள்ளநோட்டு கடத்தி வர பயன்பட்ட தவ்ஹித் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல்: 4 பேர் கைது பின்னணி என்ன?

 தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல் கள்ள நோட்டுகளுடன்

காரில் சென்று கொண்டே கள்ளநோட்டைக் கொடுத்து தின்பண்டங்கள் வாங்கிய கூட்டம்: தமிழக ஊடகங்கள் வழக்கம் போல, சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் மதுரை ரோட்டில் உள்ள ஒரு கடைக்கு 29-01-2016 அன்று நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் வந்தது, கடையில் இருந்த சிறுவனிடம் ஆயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்து ரூ.60க்கு பிஸ்கட் வாங்கிக் கொண்டு மீதி பணத்தை வாங்கி சென்றது, தொடர்ந்து அடுத்துள்ள உள்ள மாடசாமி என்பவரது  மிக்சர் கடையிலும் ஆயிரம் ரூபாயை கொடுத்து  ரூ.80-க்குப் திண்பண்டம் வாங்கி மாற்றி சென்றது[1], இதேபோல் அண்ணாசிலை அருகில் உள்ள பழக்கடை ஓன்றிலும் இவ்வாறு செய்தது, இதனால் சந்தேகமடைந்த பிஸ்ட் கடை உரிமையாளர் கண்ணனுக்கு ரூபாய் நோட்டு மீது சந்தேகம் ஏற்பட்டது, அருகிலுள்ள தனியார் வங்கிக்கு / எதிரே உள்ள ஐ.சி.ஐ.சி. வங்கியில் சென்றது, அந்த ஆயிரம்  ரூபாய் நோட்டை காட்டியது, சோதனையில் அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது, என்று செய்திகளை வெளியிட்டுள்ளனர். பிறகு, இதுபற்றி கண்ணன் போலீசில் புகார் செய்தார்[2] என்று தொடர்ந்தன.

தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல் கள்ள நோட்டு. பறிமுதல், 4 பேர் கைது

போலீஸார் சோதனையில் கார் பிடிபட்டது: திருப்புத்தூர் டவுன் போலீசார் அனைத்து ஸ்டேஷன்களுக்கும் கள்ளநோட்டு கும்பல் குறித்து மைக்கில் தெரிவித்து உஷார்படுத்தினர். எஸ்.எஸ்.கோட்டை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனால், இந்த குறிப்பிட்ட காரும் அவ்வழியாகச் சென்றது. அப்பொழுது, அந்த வழியாக காரில் வந்த கள்ளநோட்டு  கும்பலை மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து கள்ளரூபாய் நோட்டுக்கள் மட்டுமின்றி 30 ஆயிரம் ரூபாய், மற்றும் அவர்கள் வந்த கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன[3]. காரில் இருந்த 4 பேரையும் கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்து  எஸ்.எஸ்.கோட்டை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர்.

தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல் கள்ள நோட்டு. பறிமுதல்

விசாரணையின் போது வெளிவந்த விவரங்கள்: போலீஸ் விசாரணையில், அவர்களைப் பற்றிய விவரங்கள் தெரிய வந்தன.

  1. தஞ்சாவூரைச் சேர்ந்த அன்சாரி மகன் முகமது ஸாகிப் (27) என்று தினமணியும்/ தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ராஜாநகர் முகமதுஹனீப் (34) என்று தினகரனும் கூறுகின்றன[4],
  2. புதுத்தெரு அகமது மகன்அப்துல்லா (35),
  3. ராஜா முகமது மகன்அஜ்மல் (20),
  4. பகுர்தீன் மகன்மீரான்முகைதீன் (32)

என தெரியவந்தது[5].  அவர்களிடமிருந்து கள்ளரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கார் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவரணி அமைப்பாளரான அமீர் அப்பாஸ் என்பவரது கார் என்பதும், மருத்துவமனைக்கு செல்வதாக கூறி அவரிடம் காரை வாங்கி, கள்ள நோட்டுகளை கடத்தி வந்து அபிராமபட்டினத்திலிருந்து புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது[6]. அவர்களிடம் திருப்பத்தூர் ஆய்வாளர் செங்குட்டுவன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்[7].

தவ்ஹீத் ஜமா-அத் சின்னம்

தவ்ஹித் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல்: 4 பேர் கைது: இவ்வாறு தலைப்பிட்டு, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்கள் வந்த கார் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பின் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ அணிச் செயலருக்கு சொந்தமானது என்பதும், அவரிடம் இரவல் வாங்கிக் கொண்டு வந்ததும் தெரிய வந்துள்ளது[8]. இவர்களுக்கு கள்ளநோட்டைக் கொடுத்த முக்கிய நபர் மன்னார்குடியில் வசிப்பது தெரியவந்துள்ளது. எஸ்.பி., ஜியாவுல் ஹக் உத்தரவின்படி, அவரைத் தேடி போலீசார் மன்னார்குடிக்கு சென்றுள்ளனர்[9]. காரை எந்த காரணத்திற்கு, யாரிடமிருந்து வாங்கி வந்தாலும், கள்ளநோட்டு விநியோகத்திற்கு உபயோகப்படுத்தப் பட்டதும், அதே காரில் கள்ளநோட்டுகள் பிடிபட்டதும் மறுக்கமுடியாது. இது முஸ்லிம்கள் பிரச்சினையல்ல, பொது பிரச்சினை என்று சொல்லமுடியாத அளவிற்கு, முஸ்லிம்கள் தான் ஈடுபட்டுள்ளனர்.

தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல் கள்ள நோட்டு

முஸ்லிம்களின் எச்சரிக்கை: அதிரை எக்ஸ்பிரஸ் என்ற முஸ்லிம் இணைதளம், “அதிரையில் கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில் கள்ள நோட்டு கும்பல் வியாபாரிகளிடம் கள்ள நோட்டுகளை கொடுத்து அவர்களிடம் பொருள்களை வாங்கி செல்லும் அவலம் தொடர்ந்து அதிரையில் ஒரு வாரங்களுக்கு மேலாக நடைபெற்று கொண்டு இருப்பதாக கூறபடுகிறது[10]. 500ரூ மற்றும் 1000 ரூபாய்கள் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளது. குறிப்பாக பெண்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற்றுவதாக கூறப்படுகிறது.  இதில் அதிரை பொதுமக்கள் கவனமாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்,” என்று அதே நாளில் வெளியிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது[11].  அதிராமபட்டினம் என்பதனை முஸ்லிம்கள் அதிரை என்று சொல்லிவருகின்றனர். இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ராஜாநகர் முகமதுஹனீப் (34). இங்கு, “குறிப்பாக பெண்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற்றுவதாக கூறப்படுகிறது” என்றுள்ளது. இங்கு சிறுவனிடம் கள்ளநோட்டு கொடுத்து ஏமாற்றுகிறார்கள் என்றுள்ளது.

காலைமலர், தவ்ஹித் கார் கள்ளநோட்டு

தவ்ஹீத் ஜமாஅத் கார் பறிமுதலாநடந்தது என்ன?[12]: காலைமலர் என்ர இணைதளத்தில், இத்தகைய மறுப்பு காணப்படுகிறது, “புதுக்கோட்டை மாவட்ட TNTJ நிர்வாகியின் காரை மதுரையிலுள்ள மருத்துவமனைக்கு நோயாளியை கொண்டு செல்வதாக கூறி காரை இரவலாக வாங்கியுள்ளனர். ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் பரபரப்பான சூழலிலும் மனிதநேய அடிப்படையில் காரை நோயாளிக்காக கொடுத்தார் TNTJ மாவட்ட நிர்வாகி, இதுதான் நடந்த சம்பவம், இந்த சம்பவத்திற்கும் TNTJ வுக்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை[13]. சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள் கும்பகோணத்தில் TNTJ நடத்திய முதல் மாநில மாநாட்டின் போதும் அன்றைய தினம் ரயில் நிலையத்தை தகர்க்க TNTJ சதி என்று அன்றைய மாநில துணைப்பொதுச்செயலாளர் A.S. அலாவுதீன் கடிதம் எழுதியதாக சன் டீவி பொய் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கிறதா ? அந்த சம்பவத்தை வைத்து அவதூறு பரப்பினார்கள் நினைவிருக்கிறதா? அதேப்போன்று இந்த சம்பவத்தையும் வைத்து மாநாட்டை சீர்குலைக்க அயோக்கியர்கள் முகநூலில் அவதூறு பரப்புகிறார்கள்.அயோக்கியர்களின் அவதூறை அடுத்த சில மணிநேரத்தில் அது பொய் என நிரூபனம் ஆனது”. அதாவது, “இந்த சம்பவத்திற்கும் TNTJ வுக்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை”, என்கிறதே தவிர, முஸ்லிம்களுக்கும் கள்ளநோட்டு பட்டுவாடா, விநியோகம் முதலியவற்றிற்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அப்படியென்றால், இது அவர்களுக்குள் உள்ள பிரச்சினை போன்று காட்டிக் கொள்ளப்பார்க்கிறார்களா?

 

© வேதபிரகாஷ்

31-01-2016


 

[1] தினமணி, திருப்பத்தூரில் கள்ள நோட்டு கும்பல் கைது, By திருப்பத்தூர், First Published : 29 January 2016 01:38 AM IST.

[2] தமிழ் முரசு, கள்ளநோட்டு கடத்தி வர பயன்பட்ட தவ்ஹித் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல்: 4 பேர் கைது, 1/29/2016 4:42:49 PM

[3] தினகரன், கள்ளநோட்டு கும்பல் கைது, பதிவு செய்த நேரம்:2016-01-29 10:06:08

[4] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=531507&cat=504

[5] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=87309

[6] – See more at: http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=87309#sthash.AlvR6D0J.dpuf

[7]http://www.dinamani.com/edition_madurai/sivagangai/2016/01/29/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/article3249987.ece

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1444690

[9] தினமலர், கள்ளநோட்டு கும்பலை பிடிக்க மன்னார்குடிக்கு போலீஸ் விரைந்தது, ஜனவரி.29.2016:23.51.

[10] அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை மக்களே உஷார், Posted by அதிரை எக்ஸ்பிரஸ் on 1/29/2016 07:54:00 PM.

[11] http://www.adiraixpress.in/2016/01/blog-post_470.html

[12]  காலைமலர், தவ்ஹீத் ஜமாஅத் கார் பறிமுதலாநடந்தது என்ன?, By Mathiyalagau, Jan 30, 2016.

[13] http://kaalaimalar.net/tntj-car-cheesed/